Showing posts with label மொக்கை சினிமா. Show all posts
Showing posts with label மொக்கை சினிமா. Show all posts

Monday, February 24, 2014

பிரம்மன் (2014) - போதும் சசி, இத்தோட நிறுத்திருங்க !!

சினிமாவின்  மீது தீராத காதலில் வாழும் ஒருவன், தன் சிறு வயது லட்சியத்தின் விளைவாக பழைய தியேட்டர் ஒன்றை லீஸுக்கு எடுத்து படங்களை ஒட்டி வருகிறான். தன் தியேட்டர் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து எப்படி அதனை எப்படி மீட்கிறான் என்பது தான் பிரம்மன் கதை சுருக்கம். 

90 களில் பி.வாசு தாலி செண்டிமெண்டை மையமாக வைத்து படங்களை எடுத்து தள்ளினார். அதில் முதன்மையானது "சின்ன தம்பி". தாலியின் அனாடமியை தமிழ் மக்களுக்கு புரிய வைத்த புரட்சி படம். சின்ன தம்பியில் ஆரம்பித்து பத்தினி வரை தாலி மையபடுத்தி காவியங்களை படைத்தார் வாசு. திராவிட கழக போர் வாளாக, அடுத்து தி.மு.க தலைவியாக குஷ்பு தற்போது வளர்ந்து இருபதருக்கு முக்கிய காரணம் வாசுவின் தாலி செண்டிமெண்ட் படங்கள் தான் என்றால் அது மிகையாகாது.

தாலியின் காப்பிரைட்ஸ் எப்படி வாசு குத்தகைக்கு எடுத்து வைத்து இருந்தாரோ, அதே போல் நட்பு செண்டிமெண்டை சசி குமார் மொத்தமாக வாங்கி வைத்து இருக்கிறார். அவர் நினைப்பும் சரி தான். 90 களில் தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் பெருன்பான்மையானவர்கள் தாய்குலங்கள். தற்போது காசு செலவு செய்து தியேட்டருக்கு வருபவர்கள் அனைவருக்கு இளைஞர்களே. அவர்களை கவர நட்பு செண்டிமெண்டடை செலக்ட் செய்தது  ஓகே தான். ஆனால்  எதை பரிமாறினாலும் அளவோடும் சுவையோடும் பரிமாற  வேண்டும், ஆனால்  அதுவே ஓவர் டோஸ் ஆகி விட்டால், கண்டிப்பாய் நம் மக்கள் துப்பி விடுவார்கள். அப்படி பட்ட ஓவர் டோஸ் படம் தான் பிரம்மன்.


படத்தின் முதல் காட்சியில் இயக்குனருக்கு சினிமாவின் மீது இருக்கும் பிரியம் நமக்கு புரிந்து விடுகிறது. இரண்டு சிறுவர்கள் தங்கள் ஊரில் இருக்கும் தியேட்டரில் இருந்து ரீல் பெட்டியைக் திருடி கொண்டு போய் நண்பர்களுக்குப் படம் காட்டும் காட்சி நம்மை நிமிர்ந்து உட்கார செய்து விடும். அந்த இரண்டு சிறுவர்களின் ஒருவன் சிவா (சசிகுமார்) வளர்ந்து மற்றொரு நண்பனுடன் (சந்தானம்) சேர்ந்து அதே ஊரில் உள்ள மாடர்ன் தியேட்டரை லீஸுக்கு எடுத்து நடத்துகிறான். தியேட்டர் பிஸினெஸ் சரியாக போகாத காரனத்தினால உதாவாக்கரை, தண்டசோறு என்று வீட்டில் உள்ளவர்களால் அன்போடு அழைக்க படுகிறார். இன்ட்ரோ முடிஞ்சு பேரு வாங்கியாச்சு, அடுத்து என்ன லவ் போர்ஷன் தானே. வழக்கம் போல் ஹீரோயின் வருகிறார், பார்க்கிறார் காதலில் விழுகிறார். படு திராபையான காதல் போர்ஷன். 

லவ் போர்ஷன் முடிஞ்சு போச்சு, அடுத்து என்ன பிரச்னை தானே.. சீக்கிரம் என்ன பிரச்சனையின்னு சொல்லுங்கபான்னு நீங்க கேட்கிறது புரியுது. ஒரு பிரச்சினை மட்டும் வந்தா அதை ஈசியா சமாளிச்சு ஜெய்ச்சி காட்டிடுவார் நம்ம ஹீரோ. அதனால் ரெண்டு பெரிய பிரச்னை. தியேட்டர் தொடர்ந்து நடத்த 5 லட்சம் பணம் தேவை படுகிறது. காதலிலும் இரு வீட்டார் எதிர்ப்பின் முலம் பிரச்னை வர. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு தேடி சென்னை புறப்படுகிறார். வந்தோரை வாழ வைக்கும் சென்னை, சசியை வாழ வைத்ததா இல்லையா என்பது தான் மீதி கதை.


ஒரு வெற்றிகரமான இயக்குநர், நடிகர் என்கிற அந்தஸ்தை சசி சும்மா அடைந்து விடவில்லை. சசியின் இந்த வெற்றிக்கு பின்பு அவரின் உழைப்பு, மற்றும் அர்ப்பணிப்பு ஒளிந்து இருக்கிறது. யாருடைய பின் புலமும் இல்லாமல் வளர்ந்து சசி, இனி மேல் கதை தேர்விலும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. 

அவரின் இந்த கதாபாத்திரம் ஏனோ மனதில் ஒட்டாமல் சசி முகம் போலவே இறுக்கமாக இருக்கிறது. முதல் பாதில் ஒரு திரையரங்கை நடத்தவே கஷ்டப்படும் சசி இரண்டாம் பாதியில் சென்னை சென்று ஒரு திரைபடத்தை இயக்கும் அளவுக்கு போய் மெர்சல் ஆகுகிறார். சசி இயக்குனர் ஆகும் காட்சிகள் இவர்கள் முதல் காட்சியில் ஓட்டும் சன் டிவி சீரியல்களை ஞாபக படுத்துகிறது. 

படத்தை வழக்கம் போல் காப்பாற்றுவது நம்ம சந்தானம் தான். மனிதர் ஒன்-லைனர் காமெடி முலம் கைதட்டல் அள்ளுகிறார். முதல் பாதியில் சந்தானம் காப்ற்றினால், இரண்டாம் பாதியில் சூரி காமெடி என்கிற பெயரில் ஏதோ ஏதோ பேசுகிறார். சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது. கதாநாயகி லாவண்யா பார்க்க அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் நன்றாக ஆடவும் செய்கிறார். நடிப்பில் இன்னும் தேறவேண்டும்.


இசை தேவிஸ்ரீ. பாடல்கள் எதுவுமே மனதில் தங்கவில்லை. பின்னணி இசை அதோ கதி தான். இயக்குனர் சாக்ரடீஸ் கமலிடம் திரை பாடம் கற்றவர். கமலின் பள்ளியில் இருந்து வந்த யாரும் இது வரை ஜெயித்தது இல்லை, அந்த ராசி இதிலும் தொடர்கிரறது. சாக்ரடீஸ் வித்தியாசமான பொழுதுபோக்கு படத்தை தர முயற்சித்திருக்கிறார். இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சசி இந்த படத்துடன் நட்பு சென்டிமென்ட்டுக்கு முழுக்கு போட்டால் நலம்.

பிரம்மன் - போதும் சசி, இத்தோட நிறுத்திருங்க !!
My Rating: 6.5/10.


Friday, November 22, 2013

இரண்டாம் உலகம் (2013) - சொதப்பல் செல்வா !!

இரண்டு உலகத்தில் பாரல்லாக நடக்கும் பேண்டஸி கதை தான் "இரண்டாம் உலகம்" என்று படத்தின் ட்ரைலர் பார்த்தவுடனே புரிந்து விட்டது. ட்ரைலர் உடன் நிறுத்தி இருக்க வேண்டும். செல்வா என்கிற சினிமா வெறியன் மீது நம்பிக்கை வைத்து, படம் பார்க்க சென்ற எங்களை இந்த அளவு வதைத்து இருக்க வேண்டாம். சாண்டியாகோவில் ரீலீஸ் ஆகும் அணைத்து தமிழ் படங்களையும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்கிற கொள்கை படி, வீக் டே என்று கூட பாராமல் இன்று படத்துக்கு சென்ற எங்களுக்கு இது மாதிரியான தண்டனை  கிடைத்து இருக்க கூடாது. 

செல்வாவிடம் “நீங்கள் இதுவரை எடுத்த படங்களில் ஒன்றை மொத்தமாக அழிக்க வேண்டுமென்று என்று சொன்னால் எந்தப் படத்தை அழிப்பீர்கள்” என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல் “ஆயிரத்தில் ஒருவன்” என்று சொன்னார். ஆனால் இனி மேல் அதே கேள்வியை இப்பொழுது கேட்டால், அவரது பதில் "இரண்டாம் உலகம்" என்று தான் வரும். செல்வாவின் கேரியரில் அவருக்கு அழிக்க முடியாத கெட்ட பேரை இந்த ஒரு படம் சம்பாரித்து குடுத்து விடும் என்று நான் நம்புகிறேன். மிஷ்கினுக்கு முகமுடி போல, செல்வாவுக்கு "இரண்டாம் உலகம்".


இரண்டு உலகம். இரண்டிலும் ஆர்யா - அனுஷ்கா ஜோடி. நிஜ உலகத்தில் வாழும் ரம்யா (அனுஷ்கா) டாக்டர். மதுவை (ஆர்யா) பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆர்யா முதலில் மது வேண்டாம் என்று சொல்கிறார், பிறகு ஓகே சொல்கிறார். பிறகு ரம்யா தனக்கு மது வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு ஓகே சொல்கிறார். படிக்கும் போதே தலை சுற்றுகிறதா ? படத்தில் இன்னும் பயங்கர குழப்பமாக இருக்கும். செல்வாவின் இத்தனை வருட படங்களிலே இது போன்ற மொக்கை காதல் எபிசோட்டை பார்த்து இருக்க முடியாது. 

பேண்டஸி உலகத்தில் யாருக்கும் தான் அடிமை இல்லை என்று சொல்லிகொள்ளும் வீர (!) பெண் வர்ணா (அனுஷ்கா). இவர் மீது மோகம் கொள்கிறார் அதே உலகத்தில் வாழும் ஆர்யா. கவனிக்க மோகம் தான், காதல் அல்ல. இந்த உலகத்தில் காதல், வெக்கம் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. இந்த உலகத்தில் ராஜா வேறு இருக்கிறார். கடவுளும் வாழ்கிறார். சந்தர்ப்ப வசத்தால், ஆர்யா-அனுஷ்கா திருமணம் நடக்கிறது. ஆர்யா பிடிக்காமல் அனுஷ்கா விபரித முடிவு ஒன்றை எடுக்கிறார். அதே நேரத்தில் நிஜ உலகிலும் விபரிதம் ஒன்று நடக்கிறது. அது என்ன விபரிதம் என்று அறிந்துகொள்ள உங்களிடம் அசாத்திய பொறுமை இருந்தால், தியேட்டரில் போய் பாருங்கள். அப்படி பொறுமை இல்லையென்றால் படத்தை பார்க்காமல் இருப்பதே நன்று.


இன்று இரண்டாம் உலகம் படத்திருக்கு போகும் முன்பு, செல்வாவின் ஆனந்த விகடன் பேட்டியை பார்த்துவிட்டு தான் சென்றேன். அவரின் பேச்சில் தான் சினிமாவை காக்க வந்த கடவுள் போலவும், தமிழ் ரசிகர்களுக்கு ரசனையே இல்லை என்பது போல் தோன்றும். ஆனால் உண்மையில் தமிழ் ரசிகர்களுக்கு ரசனை இருக்கிறதோ இல்லையோ, சகிப்புத்தன்மை ரொம்பவே ஜாஸ்தி. இது மாதிரி மெண்டல் தனமான படங்களை எல்லாம் சகித்து கொள்கிறார்களே. இந்த காவியத்தை முழுசாய் பார்த்த அனைவருக்கும் செல்வா வீடு வீடாய் சென்று, கையை பிடித்து நன்றி சொல்ல வேண்டும்.

ஆர்யா, செல்வா சொன்னதை அப்படியே கேட்டு நடித்து இருக்கிறார். அனுஷ்காவும் அதையே செய்து இருக்கிறார். இருவரும் இயக்குனர் மீது அதித நம்பிக்கை வைத்து, அவர் சொன்னதை அப்படியே செய்து இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற பலவீனமான கதையில், நடிகர்கள் என்ன தான் குட்டிகரணம் அடித்தாலும் எடுபட்டு இருக்காது. இது போன்ற செயற்கை தனமாக காட்சிகள் கொண்டு எந்த படமும் வந்தது இல்லை, இனி மேலும் வருமா என்று எனக்கு சந்தேகமே. 


ஆர்யா, அனுஷ்கா தவிர்த்து மற்ற நடிகர்களின் தேர்வில் பெரிய கோட்டை விட்டு உள்ளார் செல்வா. பேண்டஸி உலகில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே ஹிந்தி டப்பிங் நாடகங்களில் வருவது போல் வந்து செல்கிறார்கள். காட்சியமைப்பை பற்றி சொல்லவே வேண்டாம். படுமோசமாய் அமைக்க பட்டு இருக்கிறது. வசனங்கள், ஸ்கூல் டிராமாவில் கூட இதை விட சிறப்பாய் எழுதி இருப்பார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு நிறைய உழைத்து இருக்கிறார்கள். சரியாக சொன்னால் ஆயிரத்தில் ஒருவனை விட நன்றாக இருந்தது.

படத்தின் ஒரே ஆறுதல் பின்னணி இசை மட்டுமே. ட்ரைலரில் வரும் பின்னணி இசையை தான் படம் முழுக்க தவழ விட்டு இருக்கிறார் அனிருத். பாடல்கள், மெல்ல மெல்ல செத்து கொண்டிருக்கும் போது, கழுத்தில் ஏறி மிதிப்பது போல் இருக்கிறது. ஹாரிஸ் சார், அந்த 12B டியூன்னை எப்ப தான் விடுவீங்களோ ? பேண்டஸி உலகத்தை நம் கண் முன்னே கொண்டு வர மிகவும் மெனக்கட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. விஷுவல்ஸ் அனைத்துமே நன்றாக உள்ளது. வலுவில்லாத திரைக்கதை, மொக்கை காட்சிகளை கொண்டதால், இது செல்வாவின் வொர்ஸ்ட் மூவி என்று உறுதியாக சொல்லலாம்.

இரண்டாம் உலகம் - சொதப்பல் செல்வா !!
My Rating: 4.0/10.

சமிபத்தில் எழுதியது : வில்லா (2013)


Sunday, November 03, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா (2013) - ஜென் தத்துவம் !!

ஹிந்தியில் "மிதுன் சக்கரவர்த்தி" என்ற ஒரு நடிகர் இருக்கிறார். அவரிடம் ஒரு சாதனை இருக்கிறது. இந்தியாவிலே அதிக ப்ளாப் படங்கள் குடுத்தது அவர் தான். A மற்றும் B சென்டரில் தான் அவர் படங்கள் ப்ளாப் ஆகும், ஆனால் C சென்டரில் சக்கை போடு போடும். கார்த்தி "அழகுராஜா" போன்ற படங்களில் நடித்து கொண்டே போனால் மிதுன் சாதனையை அசால்டாக முறியடித்து விடுவார். ஒரே வித்தியாசம் கார்த்தி படங்கள் அணைத்து சென்டரிலும் அட்டர் ப்ளாப் ஆகும், மிதுன் படங்கள் C சென்டரில் ப்ளாக்பஸ்டர் கொண்டாடும். "அலெக்ஸ்பாண்டியன்" என்கிற உலக சினிமாவை படம் பார்த்த பிறகு இனி மேல் கார்த்தி படங்களை பார்க்கவே கூடாது என்று உறுதியாய் இருந்தேன். ஆனால் ராஜேஷ் - சந்தானம் கூட்டணி மேல் இருக்கும் அசாத்திய நம்பிக்கை காரணமாக ஜென் தத்துவத்தை உரக்க சொல்லும்  "அழகுராஜா" என்கிற காவியத்தை பார்க்க சென்றோம். பார்த்து நொந்து நூடுல்சாய் திரும்பி வந்தோம்.


நான் சமிபத்தில் இது போன்ற மரண மொக்கை படத்தை பார்த்ததே இல்லை. இனி மேலும் பார்ப்பேனா என்பதும் சந்தேகமே. அழகுராஜா (கார்த்தி) AAA என்கிற லோக்கல் சேனல் ஓனர் மற்றும் MD, இவரிடம் வேலை பார்க்கும் ஆபிசர் கல்யாணம் (சந்தானம்). AAA சேனலை நம்பர் 1 சேனலாக மாத்தாமல் திருமணம் செய்து கொள்ள போவது இல்லை என்கிற லட்சியம் வேறு. பாய் பிரியாணி சாப்பிட ஒரு கல்யானதிருக்கு செல்லும் கார்த்தி அங்கு தேவி பிரியாவை (காஜல் அகர்வால்) பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ரெகுலர் ராஜேஷ் படங்களில் வரும் நாயகன் போல் லூசு தனமாய் ஏதோ ஏதோ செய்து காஜலின் மனதில் இடம் பிடிக்கிறார். 

காஜலின் குடும்ப பின்னணி தெரிந்தவுடன் அழகுராஜாவின் அப்பா பிரபு திருமணத்துக்கு தடை போடுகிறார். அதற்க்கு மகா திரபையான பிளாஷ்பேக் வேறு. இறுதியில் அழகுராஜாவும் தேவி பிரியாவும் இணைந்தார்களா இல்லையா என்கிற சஸ்பென்ஸ் முடிச்சை, யாரும் படம் பார்த்து அவிழ்க்கும் முயற்சியில் இறங்க வேண்டாம். நீங்கள் யாரும் கஷ்டப்பட்டு படம் பார்க்கவேண்டாம் என்று அந்த  சஸ்பென்ஸசை நானே சொல்லி விடுகிறேன். இறுதியில் அழகுராஜாவும் தேவி பிரியாவும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். டிவியில் கூட பார்க்க லாய்க்கு அற்ற திரைக்காவியம் இது. 


கார்த்தியை நினைத்து பரிதாப பட தான் முடியும். பருத்திவீரன் படத்துடன் நடிகர் "கார்த்தி" இறந்தே விட்டார் என்று நினைக்கிறன். படத்தில் வரும் காட்சியமைப்புகள் மொக்கை தான். அந்த மொக்கை காட்சியமைப்பை மரண மொக்கையாய் மாற்றுவதில் கார்த்தியின் பங்கு மிக பெரியது. கடந்த முன்று படங்களிலும் தனது "ஈ" வாயை மாற்றாமல் நம்மை படுத்தி எடுக்கிறார். 

கார்த்தி காஜலிடம், "நீ நன்றாக பாடுவதாய் உன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வேலையாட்கள் மட்டும் தான் இது வரை சொல்லி இருக்கிறார்கள், வீதில் இறங்கி பாடினால் கல்லை கொண்டு எறிவார்கள்" என்கிற ஜென் தத்துவத்தை  உதிர்ப்பார். ஆனால் அந்த ஜென் தத்துவம் அவருக்கு தான் மிக சரியாய் பொருந்தி இருக்கிறது. இதே போன்று படங்களில் நடித்து மக்களை வதைத்து கொண்டு இருந்தால் கல்லால் தான் அடி வாங்க வேண்டியது வரும்.


காஜல் அக்மார்க் லூசு பெண். வழக்கம் போல் வருகிறார், ஆடுகிறார் அவ்வளவு தான். தமிழ் சினிமாவில் என்று தான் "கதா"நாயகிகளை பார்க்க முடியுமோ தெரியவில்லை. பிரபு, சரண்யாவை குறை கூற முடியாது, தங்களுக்கு வழங்க பட்ட ரோல்லை சரியாய் செய்து இருக்கிறார்கள். கார்த்தியிடம் இருந்து நல்ல படம் வந்தால் தான் ஆச்சிரியம். ஆனால் சந்தானத்திடம் இருந்து மொக்கை படம் வந்தால் பெரிய ஆச்சிரியம். அது இந்த படத்தில் நடந்து இருக்கிறது. 

படத்தின் மிக பெரிய லெட் டவுன் சந்தானம் தான். கடைசியாக சந்தானம் காமெடி எடுபடாமல் போன ரெண்டு படமும் கார்த்தியின் திரைக்காவியங்கள் தான். இதற்கு முன்னால் அலெக்ஸ்பாண்டியன். ப்ளீஸ், சந்தானம் இனி மேல் கார்த்தி படங்களில் தயவு செய்து நடிக்காதீர்கள். 

இயக்குனர் ராஜேஷ்க்கு வேக் அப் கால். படத்தை எடுத்துடன் ஒரு முறை போட்டு பார்த்து இருக்கலாம். பார்த்து இருந்தால் கண்டிப்பாய் ரீலீஸ் செய்து இருக்க மாட்டார். முன்று படங்களில் சம்பாதித்து பேரை ஒரே படத்தில் கோட்டை விட்டு விட்டார். இசை மாற்றும் பாடல்கள் ஓகே ரகம். "உன்னை பார்த்த நேரம்" பாடல் மட்டும் எனக்கு பிடித்து இருந்தது. படம் நமக்கு கற்று தரும் ஜென் தத்துவம் பொறுமை. ஆர்ட் ஆப் லிவிங் போய் வராதா பொறுமையும், சகிப்புத்தன்மையும் இந்த படத்தை முழுசாய் பார்த்ததின் முலம் எனக்கு கிட்டியது. நன்றி ராஜேஷ் M.

ஆல் இன் ஆல் அழகுராஜா  - ஜென் தத்துவம்
My Rating: 3.5/10.


Sunday, October 13, 2013

வணக்கம் சென்னை - (2013) மொன்னை காமெடி

சாண்டியாகோவில் இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் ரீலீஸ் செய்ய பட்டது. மொத்தம் முன்று காட்சிகள், வெள்ளி மற்றும் சனி இரவு காட்சியாக "நய்யாண்டி" படமும் ஞாயிறு பகல் காட்சி "வணக்கம் சென்னை" போடுவதாய் "SD Talkies" ஸில் விளம்பரம் செய்ய பட்டது. வெள்ளி இரவு ஒரே காட்சியில் "நய்யாண்டி" படுமோசமாய் ஊத்தி கொள்ள, சனி மற்றும் ஞாயிறு காட்சிகள் "வணக்கம் சென்னை" திரையிடப்பட்டது. தமிழ் சினிமாவை வாழ வைக்கும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாக திரையரங்கு சென்று இந்த மகா காவியத்தை கண்டு ரசித்தோம். ககலைஞர் குடும்பத்தில் எனக்கு பிடித்த நபரான உதயநிதியின் துணைவி கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் முதல் படம். உலக சினிமாவை எதிர்பார்க்காமல் டைம் பாஸாக மட்டும் இருந்தால் போதும் என்கிற எண்ணத்திலே தியேட்டரில் நுழைந்தோம். இறுதியில் எங்கள் எண்ணம் நிறைவேறியது என்றே சொல்லலாம்.


அஜய் (மிர்ச்சி சிவா) ஐடி வேலை கிடைத்து சென்னைக்கு வருகிறார். அஞ்சலி (ப்ரியா ஆனந்து) தென்னிந்திய கலாச்சாரத்தை படமெடுக்க புகைப்பட கலைஞராக லண்டனில் இருந்து சென்னைக்கு வருகிறார். சந்தர்ப்ப வசத்தால் இருவரும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை எற்படுகிறார். அஞ்சலி ஏற்கனவே லண்டன் மாப்பிள்ளை ஒருவருக்கு நிச்சயம் செய்ய பட்டவர். ஆரம்பம் முதலே இருவருக்கு ஒத்து போக மாட்டேன் என்கிறது. எலியும் பூனையும்போல போல் இருந்த இருவரும் எப்படி வாழ்கையில் (!!)  இணைகிறார்கள் என்பதை ஜிவ்வ்வ்வ்வு போன்று இழுத்து சொல்லி இருக்கிறார்கள்.

மிர்ச்சி சிவா வழக்கம் போல் நடித்து இருக்கிறார். "தமிழ் படத்தில்" அவரின் நோ எக்ஸ்பிரஷன் முகம் ஒத்து போனது என்பதற்காக எல்லா படத்திலும் அதே போன்று நோ எக்ஸ்பிரஷன் தான் காட்டுவேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது. சில இடங்களில் "குமுதம்" புக்கில் வரும் ஜோக்ஸ் போன்று மொக்கை போடுகிறார். சில காட்சிகள் "ஆனந்த விகடன்" புக் ஜோக்ஸ் போன்று ஸ்மைல் பண்ண கூடிய டயலாக்ஸ் சொல்கிறார். ரொமாண்டிக் காட்சிக்கும் இவருக்கும் வெகு தூரம் என்று மறுபடியும் நிருபித்து உள்ளார். டான்ஸா, அப்படினா என்னவென்று பாடல் காட்சிகள் நாம் தேட வேண்டியுள்ளது. வேறு நல்ல இளம் நடிகரை போட்டு இருந்தால் படம் கொஞ்சம் நல்லா வந்து இருக்கும். சிவாவை இந்த படத்திருக்கு செலக்ட் செய்த காரணத்தை எப்படி யோசித்தும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.


ப்ரியா ஆனந்து லண்டன் வாழ் பெண்ணாய் வந்து செல்கிறார். தேங்காய் எண்ணை  மாடல் போல் முகம் முழுக்க எண்ணையை தடவி கொண்டு திரிகிறார். சோகக் காட்சிகளில் கோபமாய் முகத்தை வைத்து, கோபமான காட்சிகளில் சோகமாய் முகத்தை வைத்து நடிப்பில் புதிய பாணியை கண்டுபிடிக்க முயற்சி செய்து இருக்கிறார். எத்தனையோ மொக்கை பீஸ்களை பார்த்த தமிழ் சமுகம் இவருக்கு இன்னும் இரண்டு வாய்ப்பு குடுக்காமலா போய் விடும். கண்டிப்பாய் குடுக்கும். இன்னும் இரண்டு படங்களில் இவர் நடித்தால் தமிழ் சினிமா எங்கோ சென்றுவிடும்.

சந்தானம் வீடு புரோக்கராக வருகிறார். இடைவேளைக்கு சிறிது முன்பு தான் இவரின் என்ட்ரி. படத்தின் இரண்டாம் பாதியில் சந்தானம் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பு தான். வழக்கம் போல் நாயகன் நாயகியை சேர்த்து வைத்து "ப்ரோ" வேலையை செய்கிறார். ஏழு காட்சிகள் இவருக்கு என்றால், அதில் ஆறு காட்சிகளில் சரக்கு அடித்து கொண்டே தான் இருக்கிறார். இவரின் டாஸ்மாக் காமெடிகள் ரொம்பவே புளித்து போய் விட்டது. சீக்கிரம் வேற ஜெனருக்கு மாறுங்க பாஸ். 


தமிழ் சினிமா அக்மார்க் லண்டன் மாப்பிள்ளையாக "ராகுல் ரவீந்திரன்". வந்து பல்ப் வாங்கி செல்கிறார். நிழல்கள் ரவி, ஊர்வசி, ரேணுகா ஆகியோர்கள் வந்து செல்கிறார்கள். அறிமுக இயக்குனர் கிருத்திகா உதயநிதி கணவருக்கு அதிகம் செலவு வைக்காமல் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் படத்தை முடித்து உள்ளார். சந்தானம், சிவா இருந்தும் டபுள் மீனிங் ஆபாச வசனங்கள் இல்லாதது இயக்குனரின் காரணத்தில் தான் என்பது நன்றாகவே தெரிகிறது. காஸ்டியூம் மற்றும் லைட்டிங்கில் இவரின் ரசனை நமக்கு தெரிந்து விடுகிறது. 

 ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். எங்கள் மாவட்டத்தை மிக அழகாய் படம் பிடித்து இருந்தார். வெஸ்டர்ன் ஆல்பத்தில் இருந்து இசையை சுட்டு நமக்கு வழங்கி உள்ளார் அனிருத். பிரபல பாடல்களை சுடாமல் அதிக பிரபலம் இல்லாத பாடல்களில் இருந்து சுட்டு தன் திறமையை நிருபித்து உள்ளார். இத்தனை குறைகள் இருந்தும் படம் தேறி விடும் என்றே தான் எனக்கு படுகிறது. காரணம் "நய்யாண்டி" மட்டுமே. 

வணக்கம் சென்னை - மொன்னை காமெடி 
My Rating: 6.0/10.


Monday, October 07, 2013

இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா - (2013) ரொம்ப சுமாரான படம் தான் !!!

போன வாரம் சொன்னது போலவே இந்த வாரம் சான்டியாகோ தமிழ் திரைஅரங்கில் விஜய் சேதுபதியின் "இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா" ரீலீஸ் ஆனது. படம் வியாழன் அன்றே ராஜ்தமிழ் இணையத்தில் கிடைத்தாலும், தமிழ் சினிமாவை வாழ வைத்தே தீர வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் சென்று "சுமார் மூஞ்சி குமாரை" கண்டு கழித்தோம். படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் சென்றேன். ஆனாலும் படம் எனக்கு முழு திருப்தியை தர வில்லை. ஷார்ட் பிலிம் ஆக எடுக்க வேண்டிய கதையை முழு நீள திரைப்படமாக எடுத்த காரணத்தால் நிறைய காட்சிகளில் நெளிய வேண்டிய நிலைமைக்கு தள்ள பட்டேன். 


ஒரே நாளில் நடைபெறு கதை தான் இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா. இரண்டு மையின் டிராக் கதை. இரண்டு சைடு டிராக்  கதை. இந்த நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் இணைவது தான் மீதி கதை. நான்கு கதைகளில் மிக அதிகம் ஸ்கோர் செய்வது "சுமார் முஞ்சி குமார்" மற்றும் "ரொம்ப சுமார் முஞ்சி குமார்" மட்டுமே. சுமார் முஞ்சி குமரேசனாக விஜய் சேதுபதி. வாழ்ந்து இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பு தான். சரியாக சொன்னால் இவர் வரும் காட்சிகள் மட்டுமே கலகலப்பு. மற்ற முன்று டிராக்கும் என் பொறுமையை ரொம்பவே சோதித்தது. கடைசி இருபது நிமிடம் மற்றும் கிளைமாக்ஸ் மருத்துவமனை காட்சியில் இவர் அடிக்கும் லூட்டி வயிற்றை பதம் பார்க்கிறது.

விஜய் சேதுபதி அலட்டல் இல்லாத நடிப்பு வழங்கி உள்ளார்.. சூழ்நிலைக்கு ஏற்ப அற்புதமாய் டயலாக் டெலிவரி செய்கிறார். சென்னை பாஷை அனாயாசமாக வருகிறது. "பிரண்டு லவ் மேட்டர்,  பீல் ஆகிட்டாப்ல, ஆப் அடிச்சா கூல் ஆகிடுவாப்ல" என்கிற எபிக் டயலாக்கை "என்னாச்சு, கிரிக்கெட் விளையாண்டோம்" போல் திரும்ப திரும்ப சொன்னாலும் கொஞ்சம் கூட அலுக்கவே இல்ல. தியேட்டரில் இருந்த இருபது பேரும் வி.பு.சி. அதே போல் "குமுதா ஹாப்பி" என்கிற டயலாக்கும் அட்டகாசம். இவர் விழுந்து விழுந்து காதலிக்கும் குமுதா பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கிறார். மேக் ஆப் தான் ரொம்ப ஓவர். 


நடுநாசி நாய்கள், மங்காத்தா படத்தில் துக்கடா கேரக்டரில் நடித்த அஸ்வின்க்கு இந்த படத்தில் கொஞ்சம் பெரிய ரோல். சுமாராய் நடித்து உள்ளார். "குமுதம்" ஒரு பக்க கதை போல் இருக்கிறது இவர் போர்ஷன். எப்பொழுதும் திட்டி கொண்டே இருக்கும் இவர் மேனேஜர், ஒரு கட்டத்தில் உன்னோட நல்லதுக்கு தான் அப்படி செய்தேன் என்று சொல்வது, அட போங்க பாஸ், பஞ்ச தந்திர நீதி கதை போல் இருந்தது. இவர்  விழுந்து பொரண்டு காதலிக்கும் "ரொம்பவே சுமார் முஞ்சி பிகர்" சுவாதி. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சுகர் சுகர் பேஷண்ட் தாதாவாக பசுபதி, முதல் பாதியில் சுமார் முஞ்சி குமார் - குமுதா காதலுக்கு பஞ்சாயத்து செய்கிறார். இவர் வரும் காட்சிகள் காமெடி கலாட்டா.

இது போக இரண்டு கிளை கதைகள். ஒரு கள்ளக்காதல் கதை. இது தான் படத்தின் டெம்போவை அடியோடு குறைப்பது. இடைவேளை வரை இவர்கள் எபிசோடை த்ரில்லர் போல் கொண்டு போய் விட்டு, இரண்டாம் பாதியில் காமெடி கள்ளக்காதல் என்று ஏதோ ஏதோ செய்கிறார்கள். தொழில்முறை கொலைகாரன் போல் இவர்கள் திருட்டு போன்னில் பேசுவது, கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. ஆனால் போன் தொலைவது திரைகதையின் தேவை. அதை வேறு மாதிரி குடுத்து இருக்கலாம். கள்ளக்காதல் கதையில் சூரி வேறு வருகிறார். மரண மொக்கை. காலாவதியான சின்ன கலைவாணர் விவேக் போல் சத்தம் போட்டு பேசுகிறார். சத்தம் போட்டு பேசுவது எல்லாம் காமெடி இல்ல என்று இவருக்கு யாரவது சொன்னால் தேவலை. குடி குடியை கெடுக்கும் என்கிற மெசேஜில் கொஞ்சம் செண்டிமெண்ட் வேண்டும் என்று 
கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவன் கதாபாத்திரத்தை சேர்த்து இருக்கிறார் இயக்குனர்.


சும்மாவே தமிழ் படங்களில் டாஸ்மாக் காட்சிகள் கொடி கட்டி பறக்கும். இதில் குடி குடியை கெடுக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி மெசேஜ் சொல்கிறார்கள். படத்தின் எல்லோரும் எதாவாது சரக்கு அடித்து கொண்டே இருக்கிறார்கள். டாஸ்மாக் அல்லது சரக்கு இல்லாத காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இயக்குனர் "கோகுல்", ரௌத்திரம் என்கிற அக்ஷன் படத்தை எடுத்தவர். வலுவான திரைக்கதை இல்லாதனால் படம் தோற்றது. இதிலும் வலுவான திரைக்கதை அமைக்க முடியாமல் தடுமாறுகிறார். இசை ஓகே ரகம் தான். விஜய் சேதுபதி வரும் இரண்டு பாடல்கள் மட்டுமே எனக்கு பிடித்து இருந்தது. 

இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா - ரொம்ப சுமாரான படம் தான்
My Rating: 6.5/10.
சமிபத்தில் எழுதியது : ராஜா ராணி (2013)


Monday, August 26, 2013

மெட்ராஸ் கஃபே (2013) - அரவேக்காடு அக்ஷன் த்ரில்லர்

சர்ச்சைக்குரிய மெட்ராஸ் கஃபே திரைபடத்தை பார்க்கும் வாய்ப்பு நேற்று கிட்டியது. படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அரசாங்க தடை இல்லாதா போதும், படம் தமிழ்நாட்டில் வெளியாக வில்லை. நம் ஊரில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வெளியிட முடியாது என்று சொல்லி விட்டதால் தமிழ்நாட்டில் எங்குமே படம் ரீலீஸ் ஆகவில்லை. எந்த ஒரு கலைப்படைப்பையும் முடக்குவது என்னை பொறுத்தவரை தவறான செயல். நம் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை திரைப்படமாக சொல்லலாம், படம் வெளிவந்தவுடன் மக்கள் படத்தை பார்த்துவிட்டு அது நல்லதா கெட்டதா என்று முடிவு செய்யட்டும். வெறும் நான்கு ஐந்து பேர் மட்டும் ஒரு திரைபடத்தை பார்த்து விட்டு, இது எங்கள் உணர்வுகளை பாதிக்கிறது, கண்டிப்பாய் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் அதனால் படத்தை தடை செய் என்று கோருவது மிக பெரிய அயோக்கியதனம். நான்கு அல்லது ஐந்து பேரை எப்படி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரநிதிகள் என்று கூற முடியும். மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட பிரநிதிகள் சொன்னாலும் பரவாயில்லை. சீமான், வைகோ, ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் எப்படி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்? இந்த படத்தை யாரும் பார்க்ககூடாது, அது உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் என்று சொல்ல இவர்களுக்கு யார் அதிகாரம் குடுத்தார்கள்? நான் தான் எனக்கு எஜமானன், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிப்பேன், மற்றவர்களுக்கு அதை பற்றி தீர்மானிக்க உரிமை இல்லை. அந்த காரனத்திருக்கு மட்டுமே இந்த திரைபடத்தை நான் பார்த்தேன். 


ஒரு சராசரி சினிமா ரசிகனாய் மெட்ராஸ் கஃபே படம் என்னை பெரிய அளவில் கவரவில்லை, ஆனால் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை. இல்லை என்பதை விட எனக்கு அப்படி தோன்றவில்லை. கடைசியாய் இது நேர்மையான் படைப்பா, என்றால் சத்தியமாய் நேர்மை என்பது மருந்திருக்கு கூட இல்லை. படத்தின் பெரிய காமெடியே ராஜீவ்காந்தியை நல்லவர் என்று சொல்வது தான். இந்த ஒரு விஷயத்திருக்கு மட்டுமே இந்த படம் எனக்கு பிடிக்காமல் போனது. எப்படி "நேரு" என்கிற ப்ளே பாய்யை, காம கொடூரனை இந்திய குழந்தைகளின் மாமா என்று சொல்லி, அவர் பேரில் "குழந்தைகள் தினத்தை" கொண்டாடுவது போல் ஒரு மோசமான சூழ்நிலையை வரலாறு உருவாக்கியதோ, அதே போன்ற ஒரு தவறை இப்பொழுது இந்த படத்தின் முலம் செய்ய முயற்சி மேற்கொள்ள பட்டுள்ளது. 

ராஜீவ்காந்தி என்கிற அயோக்கியனை, ஊழல் பெருச்சாளியை இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவன், இலங்கையில் அமைதி திரும்ப ஆசை பட்டான் என்று காட்டுவது தான் என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை. வரலாற்றை உண்மையா எடுக்க தைரியம் இல்லாதவன் எல்லாம் எதுக்கு படம் எடுக்கிறாங்களோ தெரியவில்லை. வரலாற்றை கொஞ்சம் படித்தவன் கூட சொல்லி விடுவான், இலங்கையில் அமைதி படை என்கிற பெயரில் ராஜீவ் அனுப்பிய படைகள் செய்த அட்டுழியங்களை பற்றி, முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் அமைதி படை செய்த அக்கிரமங்களை எல்லாம் மறைத்து மனசாட்சி இல்லாமல் படம் எடுக்க எப்படி தான் ஜான்க்கு மனம் வந்ததோ, தெரியவில்லை.


இலங்கை உள்நாட்டுப்போர் உச்ச கட்டத்தில் இருந்த "80's பிற்பகுதியில் கதை ஆரம்பிகிறது. ரா உளவு ஏஜென்ட்டாக விக்ரம் சிங் (ஜான் ஆப்ரஹாம்), யாழ்ப்பாணத்தில் பணி அமர்த்த படுகிறார். LTF தலைவர் அண்ணா பாஸ்கரனை (அஜய் ரத்னம்) பிடிக்கும் பொறுப்பை ஏற்றுகொள்கிறார். ஆனால் அவரை நெருங்க கூட முடியவில்லை. பிறகு LTF இரண்டாம் கட்ட தலைவர் மல்லையாவை சந்தித்து பதவி ஆசை காட்டி பாஸ்கரனை காட்டி குடுக்க சொல்கிறார்கள். மல்லையா பதவி ஆசையில் தன் தலைவரை காட்டி குடுத்து விடுகிறான். இந்திய படை பாஸ்கரனை சுத்தி வளைத்து தாக்க, அதில் அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி பரவுகிறது. ஆனால் அந்த தாக்குதலில் இருந்து தப்பித்து மீண்டு வந்து தன்னை காட்டி குடுத்து அனைவரையும் கொல்கிறார். இந்திய அமைதி படையும் (!) திரும்ப பெற படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தான் ஜெயித்தால் "இலங்கையில் அமைதியை" திரும்ப கொண்டு வருவேன் என்று சபதம் போடுகிறார் Ex-பி.எம். இதை கேட்ட பாஸ்கரன் சீனம் கொண்டு அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டம் தீட்டப்படும் இடம் சிங்கப்பூரில் இருக்கும் "மெட்ராஸ் கஃபே". ஆக படத்திருக்கு பெயர் கிடைத்து விட்டது. LTF தலைவர்கள் பேசிய பேச்சுகளை ரா அமைப்பு டேப் செய்து டிகோடு செய்து, அந்த திட்டத்தை கண்டு பிடிகிறார்கள். பேச்சை முழுவதும் புரிந்து எந்த நேரத்தில், எந்த இடத்தில் படுகொலை நடைபெறுகிறது என்று கண்டு பிடிக்கும் அதே வேளையில் படுகொலை நடந்து விடுகிறது.

ஜான் ஆப்ரஹாம் நன்றாக நடித்து உள்ளார் என்று சொன்னால் எனக்கு போஜனம் கிடைக்காது. உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது, முகத்தில் கொஞ்சமாவது வேரியேஷன் காட்ட வேண்டாமா. மலச்சிக்கல் வந்து ஆள் போல் முஞ்சியை வைத்து உள்ளார். இன்வெஸ்டிகேஷன் செய்யும் காட்சிகளில் கொஞ்சம் கூட பரபரப்பே இல்லை, ஏனோ தானோ என்று தான் பல காட்சிகள் செல்கிறது. புலிகள் எத்தனை தைரியசாலி என்பதை உலகம் அறியும். அப்படி பட்ட புலி ஆதரவாளர்களிடம் இவர் உண்மையை வெளி கொண்டு வரும் காட்சிகள் தான் படத்தில் காமெடி இல்லாத குறையை தீர்த்து வைக்கிறது. ஒருவனை பார்த்தவுடன், "ஏய், உண்மையை சொல்லு", என்று இவர் கேட்ப்பார், அவரும் உண்மையை புட்டு புட்டு வைத்து விடுவார். 60 களில் வந்த எம்.ஜி.யார் படங்களில் கூட விசாரணை காட்சிகள் நன்றாக இருந்து இருக்கும். 


இயக்குனர் சூஜித் சிர்கார், தனக்கு மண்டையில் ஒன்றுமே இல்லை என்பதை காட்சிகள் முலம் தெளிவு படுத்தி உள்ளார். இது வரை யாரும் தொடாத கதைக்களம், நல்ல இயக்குனர் கையில் கிடைத்து இருந்தால் பின்னி இருப்பார்கள். அரவேக்காடு தனமாய் வரலாற்றை படித்து விட்டு மூளையை கழற்றி வைத்து விட்டு படத்தை இயக்கினால் இது போன்ற படங்கள் தான் கிடைக்கும். படத்தில் என்னை கவர்ந்த ஒரே எபிசோடு, தாணு என்கிற பெண் புலி ராஜீவை கொலை செய்ய தயார் ஆகும் காட்சிகள் தான். சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் அட்டகாசமான் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அந்த பெண். மற்ற படி குரங்கு கையில் கிடைத்த கொள்ளிக்கட்டை போல், இயக்குனர் தன்னையும் சுட்டு கொண்டு படம் பார்க்கும் நம்மளையும் சூடு போடுகிறார். 'நம் பிரதமர் (ராஜீவ் காந்தி) என்ன தப்பு செய்தார்? நாம் ஏன் அவரை இழந்தோம்?’- என்கிற கேள்விகளுடன் படத்தை முடித்து இருப்பார்கள், அதை பார்க்கும் போது, ராஜீவ் முதேவியை அன்றே படுகொலை செய்யாமல் விட்டு இருந்தால், 2007 இனப்படுகொலையை ராஜீவ் 1992 வருடமே நிகழ்த்தி இருப்பான்டா !@#!#$ பசங்களா என்று உரக்க கத்த தோன்றியது. 

மெட்ராஸ் கஃபே - அரவேக்காடு அக்ஷன் த்ரில்லர்
My Rating: 5.2/10.
சமிபத்தில் எழுதியது :ஆதலால் காதல் செய்வீர் (2013)



Friday, August 16, 2013

555 (2013) - உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது !!!

கண்ணாமுச்சி ஆட்டம் காட்டும் முகம் தெரியாத வில்லனிடம் இருந்து தனது காதலை கதாநாயகன் காப்பாற்றும் கதை தான் 555.

மோசமான கார் விபத்தில் மாட்டும் அரவிந்த் (பரத்) மன ரீதியாக பாதிப்பு அடைகிறார். விபத்திருக்கு முன்பு தனக்கு லியானா என்கிற காதலி இருந்ததாகவும், விபத்தில் அந்த காதலி இறந்து விட்டதாகவும் நம்பி வாழ்கிறார். அவரை சுற்றி இருக்கும் சைக்கியாட்டிரிஸ்ட் டாக்டரும், அவரது அண்ணன் சந்தானமும் லியானா என்கிற பெண் இல்லவே இல்ல, பரத்  இல்லாத ஒன்றை இருப்பாதாய் கற்பனை செய்து கொண்டு வாழ்கிறார் என்று அடித்து சொல்கிறார்கள். அவர்களது கருத்திருக்கு வலு சேர்ப்பது போல நிறைய சம்பவங்கள் நடைபெறுகிறது. 

சிறிது சிறிதாக பரத் தனக்கு ஏதோ பிரச்னை என்பதை உணர்கிறார். தன் பிரச்சனையை உணர்ந்து இயல்பு வாழ்கைக்கு திரும்பும் போது தன்னை சுற்றி நடப்பது எல்லாமே நாடகம் என்பதை அறிந்து கொள்கிறார். யார் அந்த நாடகத்தை நடத்துகிறார்கள் என்பதை தேடி செல்லும் போது அவருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. தன்னை சுற்றி பின்ன பட்ட முடிச்சுகளை பரத் அவிழ்க்கும் போது முகம் தெரியாத வில்லன் கும்பல் அவருக்கு இடைஞ்சல் குடுக்கிறது. யார் அந்த வில்லன், அவன் ஏன் பரத் வாழ்கையில் விளையாட வேண்டும் என்பதை பர பரப்பாய் சொல்ல ஆசை பட்டு ஏனோ தானோ என்று சொல்லும்  படம் தான் 555.


படத்தில் வரும் சில தீடீர் திருப்பங்கள் நம்மை அட போட வைக்கின்றன. ஆனால் படத்தின் மிக பெரிய லெட் டவுன் வில்லன் மற்றும் அவனது படு மொக்கையான பிளாஷ்பேக் தான். நிறைய ஹைப் ஏற்றி விட்டு கடைசியில் படத்தை சப் என்று முடிந்து விடுவது தான் இயக்குனர் செய்த மாபெரும் தவறு. இதே குறை தான் "சமர்" படத்திலும் இருந்தது. இதிலும் அதே தவறு இருப்பதால் நல்ல படமாக வந்திருக்க வேண்டிய படம் சுமாருக்கும் கீழ் லிஸ்டில் சேர்ந்து விட்டது. 

இயக்குனர் சசி, சொல்லாமலே,ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ போன்ற மென்மையான படங்களை குடுத்தவர். முதல் முறையாக அக்ஷன் த்ரில்லர் முயற்சி செய்து உள்ளார். கதையை சரியாக தான் தெரிவு செய்து உள்ளார், ஆனால் கதைக்கான கதாபாத்திர தேர்வில் ஆரம்பிகிறது இவரது முதல் சறுக்கல். முதல் மற்றும் இரண்டாம் கதாநாயகி, வில்லன் மற்றும் அவனது அடியாட்கள் கூட்டம் என்று படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மிகவும் மோசமான தேர்வு.

 ஹீரோ மற்றும் செகண்ட் ஹீரோயின் காபி டேயில் சந்திக்கும் அந்த காட்சி டென்ஷனை ஏற்றி பர பரப்பாய் முடிந்து இருக்க வேண்டியது, ஆனால் இயக்குனர் அந்த காட்சியை படு மொக்கையாய் ஆரம்பித்து சப்பென்று முடித்து இருப்பார்.அதே போல் கிளைமாக்ஸ் சண்டை காட்சி, எப்படா சண்டை முடியும் என்று ஏங்க வைத்து இருப்பார் இயக்குனர். இவருக்கும் அக்ஷன் படங்களுக்கும் வெகு தூரம் என்பதை இந்த படம் நிருபித்து உள்ளது.


பரத் - 8 பேக்ஸ் வைத்து உள்ளார், படத்தின் ப்ரோமோஷனுக்கு மட்டுமே பயன்படுத்த பட்டு இருக்கிறது. படத்தின் கதைக்கு அந்த உடம்பு தேவையே இல்ல. முதல் பாதியில் காலேஜ் ஸ்டுடென்ட் போல் வருகிறார். ஒரு காட்சியில் மொட்டை வேறு அடித்து நடித்து உள்ளார்.  உடம்பை வளர்க ஜிம்யில் செலவு செய்த நேரத்தில் எங்காவது கூத்து பட்டறையில் சேர்ந்து நன்றாக நடிக்கவும் பயற்சி எடுத்து இருக்கலாம். "சின்ன தளபதி" என்று டைட்டிலில், இயக்குனர் பேரரசு படங்கள் முலம் டெரர் அப்நார்மல் படங்கள் 
குடுத்து கொண்டு இருந்தவர், இந்த படத்திருக்கு பிறகு நார்மல் படங்கள் குடுப்பார் என்று நம்புவோமாக. அடுத்த படத்தில் சன்னி லியோனியோட ஜோடி சேர மட்டுமே அவரது 8 பேக்ஸ் உதவி செய்து உள்ளது. 

கதாநாயகி மிருத்திகா. இவரை பற்றி நாம் சொல்லும் முன்பு சந்தானமே சொல்லி விடுகிறார். வழக்கமான் தமிழ் லூசு பெண் கதாபாத்திரம். நடிப்பு எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்பார் போல். வாய் அசைப்பும் படு மோசம். சீவிங் கம் மென்று கொண்டு இருந்திருப்பார் போல. இந்த சுமார் முஞ்சி பிகர்க்கு தான் படத்தில் இவ்வளவு அலப்பறை என்று என்னும் போது அட போங்கபா என்கிற எண்ணம் தான் வருகிறது. 


இவர் மீது பரத்திருக்கு காதல் வருவதற்கான் காரணம் ஒன்றுமேயில்லை. அதே போல் பரத்திடம் அதிசிய சக்தி இருப்பதாய் நம்புவதலாம் டூ மச். இப்படிப்பட்ட அறிவாளியை விழுந்து விழுந்து காதலிப்பார் ஹீரோ.

அடுத்து சந்தானம், பல படங்களை காத்தது போல் இந்த படத்தையும் காப்பற்றி உள்ளார். முதல் முறையாக குணசித்திர நடிப்பை முயற்சி செய்து உள்ளார் என்று எண்ணுகிறேன். தன்னுடைய ட்ரேட்மார்க் டயலாக் டெலிவரி முலம் நிறைய இடங்களில் ஸ்கோர் செய்கிறார். 

கடைசியாக வில்லன், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் மிகவும் தவறான தேர்வு. பாடல்கள் படம் எப்போது எல்லாம் நொண்டி அடிக்கிறதோ அப்பொழுது எல்லாம் கரெக்டாக வந்து நமது பொறுமையை சோதிக்கும். அதுவும் அந்த இழவு பாடல், கொடுமை ரகம். பரத் உடம்பை ஏற்ற எடுத்து கொண்ட நேர்த்தில் சசி திரைக்கதை இன்னும் நன்றாக செதுக்கி இருந்தால்,நமக்கு மற்றும்மொரு கஜினி கிடைத்து இருக்கும், திரைகதையில் சறுக்கி சமர் லிஸ்டில் சேருகிறது "555"

555 (2013) - உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது !!!

My Rating: 6.4/10.


Friday, August 09, 2013

தலைவா (2013) - சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!!

தலைவா பல தடைகளை (!!) தாண்டி தமிழ்நாட்டுல ரீலீஸ் ஆகாம வெளிநாட்டில் ரீலீஸ் ஆகி இருக்கிறது. ஒரு படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்ப இப்ப படக்குழுவினர் எத்தனையோ புது புது ஐடியாவுல ஸ்டன்ட் அடிச்சு பார்த்து இருக்கேன், சமிபத்தில் தங்க மீன்கள் ராம் கூட புது விதமா "படம் ரீலீஸ் பண்ண காசு இல்லைங்கிற" மாதிரி டீசர் வெளியீட்டு இருந்தார், ஏதோ இப்ப தான் அவருக்கு படம் எடுக்க காசு தேவை என்கிற ரகசியம் தெரிஞ்ச மாதிரி. ஆனா அது கூட நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பற்றிய ஆர்வத்தை உண்டு பண்ணியது. ஆனா தலைவா பட குழுவினர் அடிச்ச ஸ்டன்ட் பழைய எம்.ஜி.யார் காலத்து "தியேட்டர்ல பாம் வைப்போம்" டெக்னிக், அதை பார்த்தவாது நாங்க கொஞ்சம் உஷார் ஆகி இருக்கனும், ஆனா விதி யாரை விட்டுச்சு. பப்ளிசிட்டி ஸ்டன்ட் மட்டும் பழைய எம்.ஜி.யார் காலத்து டெக்னிக் இல்ல, படமும் அரத பழசான கதையை கொண்டு வெளி வந்து இருக்கு. நாங்களா வான்டட்டா போய் வண்டியில ஏறுனது எங்க தப்பு தான். 


நான் பெரிய விஜய் பேன்னாக இல்லாட்டியும், விஜய்யோட எல்லா படத்தையும் முத நாள் பாத்திருவேன், கடந்த அஞ்சு வருஷமா ரீலீஸ் ஆனா எல்லா விஜய் படத்தையும் முத நாள் பார்க்கிற பாக்கியம் கிடைச்சு இருக்கு. துப்பாக்கி மட்டும் மிஸ் ஆகிருச்சு, அதுக்கு காரணம் அப்ப நான் சொந்த கிராமத்துல இருந்தேன், படத்துக்கு தாறுமாறான கூட்டம். எங்க ஊருல ஹவுஸ் புல் போர்டு மாட்டுன வெகு சில படங்களில் துப்பாக்கியும் ஒன்னும். வில்லு, வேட்டைக்காரன், சுறான்னு விஜய் மொக்கை மொக்கையா படம் குடுத்துகிட்டு இருந்தப்பவும் நான் விடாம விஜய் மேல நம்பிக்கை வச்சு படத்துக்கு போய்கிட்டே இருந்தேன். கடைசியா காவலன், நண்பன், துப்பாக்கின்னு நல்ல படங்கள் குடுக்க ஆரம்பிச்ச விஜய் மறுபடியும் பேக் டூ ஸ்குயர் ஒன் மாதிரி, அவர் அப்பாவோட அரசியல் பேராசையில மோசமான மொக்கை படத்தை "தலைவா" மூலமா குடுத்து இருக்கார். நான் இது வரை பார்த்த விஜய் படங்களிலே "தமிழன்" என்கிற காவியத்தை தான் டாப் வொர்ஸ்ட் லிஸ்ட்ல வச்சு இருந்தேன், இப்ப அந்த இடத்தை அன்ன போஸ்ட்ல "தலைவா" பிடிச்சு இருக்கு. வாழ்த்துக்கள் விஜய்.

 இன்னைக்கு கூட சாண்டியாகோவுல "தலைவா" ரீலீஸ் ஆகுமா இல்லையா என்கிற சந்தேகம் இருந்தது, கடைசி நேரத்துல தான் படம் ரீலீஸ் என்கிற அறிவிப்பு தியேட்டர்ல இருந்து வந்தது. எங்க கம்பெனி தமிழ் மக்கள் மொத்த கூட்டமும் தியேட்டர்ல தான் இருந்தது, இத்தனைக்கும் நாளைக்கு ஆபீஸ் வேற. விஜய்க்கு இங்க இருக்கிற ரசிகர் கூட்டம் உண்மையிலே பெரிய ஆச்சிரியமா விஷயம் தான். அவங்களை மனசுல வச்சுகிட்டாவது விஜய் இது மாதிரியான படங்களை தவிர்ப்பது நல்லது. 


படத்தோட கதையை கொஞ்சம் சினிமா ஞானம் உள்ளவங்க ட்ரைலர் வச்சே சொல்லிருவாங்க. விஜய் அப்பா அண்ணா (சத்யராஜ்) மும்பையில வாழுற ஏழைகளின் காப்பாளன், விடிவெள்ளி, கலியுக கர்ணன், ரொம்ப குழம்பாதீங்க சினிமா பாஷையில பெரிய டான். அவரோட பையன் தான் விஷ்வா (விஜய்). அப்பாவோட பிஸினெஸ் பத்தி தெரியாம ஆஸ்திரேலியாவுல வாழுறார். அங்க டான்ஸ் குரூப் வச்சு நடத்திகிட்டு ஜாலியா ப்ரிண்ட்ஸ் கூட சந்தோஷமா இருக்கிறார். தமிழ் பெண்னான் அமலாபாலை லவ்வி, தன்னோட கல்யாணத்தை பத்தி பேச இந்தியா வரார். வந்த எடத்துல அவர் கண்ணு முன்னாலே "அண்ணாவை" வழக்கம் போல் சமூக விரோதிகள் கொன்று விடுகிறார்கள். வழக்கம் போல் விஜய் விரோதிகளை அழித்து மும்பை தமிழர்களை காப்ற்றி, விஷ்வாவில் இருந்து எப்படி விஷ்வா "பாய்" ஆகிறார் என்பதை இழு இழு என்று ஜவ்வு போல் இழுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் "விஜய்".

இளைய தளபதி விஜய் அட்டகாசமாய் எல்லாம் நடிக்கல, தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செஞ்சு இருக்கார். அவருக்கு நல்லா வரது டான்ஸ் மட்டும் தான். செமையா டான்ஸ் ஆடி இருக்கார். உணர்ச்சி பூர்வமான் இடத்துல இவர் பேசுற நிறைய வசனம் சிரிப்பை தான் வரவழைக்குது, டிவி சீரியல கூட வர லாயக்கு இல்லாத வசனங்கள். "தம்பி நல்லா படிச்சா பரீட்சையில் நல்ல மார்க் எடுக்கலாம்" டைப் வசனங்கள். இந்த மாதிரி மொக்கை வசங்களை விஜய் என்ன தான் எமோஷனலா பேசினாலும் அது நம்ம பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. வசனம் எழுதுன ஆளுக்கு கையிலே ரெண்டு போடு போடணும்.


இளைய தளபதி விஜய் ஏன் எல்லா படத்திலும் ஒரே மாதிரியான கெட் அப்ல வராரு, கெட் அப் சேன்ஜ் பண்ணுறதே இல்லைன்னு கேட்கிற ஆளுகளுக்கு கிளைமாக்ஸ் காட்சியில ஒரு கெட் அப் போட்டுக்கிட்டு வராரு பாருங்க. சுறா சிங் கெட் அப் தோத்தது. தியேட்டரே விழுந்து விழுந்து சிரிச்சது. படத்தோட பெஸ்ட் காமெடி சீன் அது தான். சுறாவுக்கு முன் வந்த விஜய் படங்க மாதிரி பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி நம்மளை வதைக்கிறது இந்த படத்துல இல்லாதது பெரிய ஆறுதல்.படத்தோட கதையை ஓகே பண்ணுனது எஸ்.ஏன்னு படிச்சேன். தளபதி ஒரு அஞ்சு வருஷம் அவங்க அப்பாவை ஊரை விட்டு தள்ளி வச்சுறது நல்லது. சனியை கூடவே வச்சுகிறது ரொம்ப ரொம்ப ஆபத்து. 

படத்தோட கதாநாயகி அமலா பால். நடிப்பை வெளிபடுத்த பெரிய வாய்ப்பெல்லாம் இல்லை. வழக்கமான் தமிழ் பட ஹீரோயின் வேலையை சரியா செஞ்சு இருக்காங்க. நிறைய காட்சியில மேக் அப் இல்லாம வந்து மரண பயத்தை உண்டு பண்ணுறாங்க. இடைவேளைக்கு முன்னாடி வர ட்விஸ்டுக்கு பயன்படுத்த பட்டு இருக்காங்க. மற்ற படி  பெருசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல. சத்யராஜ் போன்ற நல்ல நடிகரை வேஸ்ட் செஞ்சு இருக்காங்க. இவர் பேசுற வசனங்கள் கொட்டாவியை தான் வர வைக்குது. ஏதோ ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மாதிரி வந்துட்டு போறார். 

படத்தை முதல் பாதியில் அப்புறம் இரண்டாம் பாதியில பாதிக்கு மேல வந்து படத்தையும் நம்மளையும் காப்பாதிறது சந்தானம் மட்டும் தான். இயக்குனர் விஜய்க்கு இந்த படத்திலும் சந்தானம் தான் கை குடுத்து இருக்கார். ஒரு டபிள் மீனிங் வசனம் தவிர சந்தானம் ரொம்பவே அடைக்கி வாசித்து இருக்கார். ஒரு காட்சியில் "சாம்  ஆண்டர்சன்" வேற வராரு, சாம் வர காட்சியை கொஞ்சம் சுவாரிசியமா குடுத்து இருக்கலாம்.


படத்துல பின்னணி இசை ரொம்பவே கொடூரமாய் இருந்தது. விஜய் பாடும் "வாங்கன்னா" பாட்டு தவிர எந்த பாட்டுமே மனதில் பதியவில்லை. "தலைவா தலைவா" பாட்டு ஒரு மாஸ் பாட்டை எப்படியெல்லாம் படம் ஆக்க கூடாது என்பத்ருக்கு நல்ல எடுத்துகாட்டு.

 "பாட்ஷா+நாயகன் = தலைவா", இது தான் நம்ம படத்துக்கு பார்முலான்னு சொல்லி தான் இயக்குனர் விஜய் தளபதியை ஏமாத்தி இருப்பார்ன்னு நினைக்கிறன். டைரக்டரோட சுடுற திறமை ஊர் அறிஞ்சது தான், தனக்கு என்ன வருமோ அதை சரியா செஞ்சா வெற்றி நிச்சியம், ஊர் சொல்லுறதுகாக நம்மளை மாத்திக்கிட்டு நமக்கு தெரியாதை வராததை செஞ்சா பல்பு தான் கிடைக்கும். இயக்குனர் விஜய் பேசமா சர்க்கார் இல்லாட்டி காட் பாதர் படத்தை சுட்டு எடுத்து இருக்கலாம், சொந்தமா சீன் யோசிச்சு எடுத்தா இப்படி தான் மண்ணை கவ்வ வேண்டியது வரும். அடுத்த படத்தையாவது உருபடியா சுட்டு எடுங்க விஜய் சார்.

இளைய தளபதி விஜய்க்கு ஒரு வேண்டுகோள், உங்க அப்பா பேச்சை கேட்டு நடிக்காம நல்ல இயக்குனர் மற்றும் நல்ல கதைகளில் நடிங்க, இல்லாட்டி சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!! நாங்க பாவம்.

My Rating: 5.5/10.


Saturday, July 20, 2013

மரியான் (2013)- மரிச்சு போயி !!!

நான் வசிக்கும் சாண்டியாகோவில் ககிட்டத்தட்ட எல்லா வாரமும் தமிழ் அல்லது தெலுங்கு படம் ஒன்று ரீலீஸ் ஆகி விடும். இந்த வாரமும் மரியான் ரீலீஸ் ஆகி இருந்தது. படத்தை வாங்கி ரீலீஸ் செய்வது எங்களை போன்ற பொறியாளர்கள் தான். எங்கள் கம்பெனியில் பணிபுரியும் சிலர் பார்ட் டைம் பிசினஸ் மாதிரி நன்றாக இருக்கும் என்று நம்பி சில தமிழ் படங்களை விலை குடுத்து வாங்கி தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஏரியாவில் தியேட்டரை வாடகைக்கு எடுத்து ஓட்டுவார்கள். தமிழ் படம் என்றால் சில நூறு டாலர் லாபம் பார்ப்பார்கள். இதே ஆட்கள் தான் தெலுங்கு படத்தையும் ரீலீஸ் செய்வார்கள் தெலுங்கு படம் எவ்வளவு மொக்கையாய் இருந்தாலும் பலா பழத்தில் ஈ மொய்ப்பது  போல் கூட்டம் அம்மும். முன்று ஷோகளும் கிட்ட தட்ட புல் ஹவுஸில் தான் ஓடும். தெலுங்கு மக்களின் சினிமா வெறி உலக அறிந்ததே. ஆனால் தமிழ் படங்களுக்கு கால் வாசி அரங்கு கூட நிரம்பாதது. பரதேசி படத்தை வெறும் 10 பேர் அமர்ந்து பார்த்தோம். விஸ்வரூபம் மட்டும் முக்கால் அரங்கு நிறைந்தது. 

மற்ற முக்கிய படங்கள் ரீலீஸ் ஆனாலும் தமிழ் மக்கள் விரும்புவது "ராஜ் தமிழ்" மற்றும் "einthusan" மட்டுமே. ஆனால் நாங்கள் எந்த தமிழ் படம் வந்தாலும் போய் விடுவோம். காரணம் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு தராவிடில் யார் தருவார்கள் என்கிற எண்ணம் தான். அதே காரனத்திருக்கு தான் "மரியான்" படத்திற்க்கும் போனோம். தனுஷின் ராஞ்ஜனா படத்தினால் நாங்கள் ரொம்பவே நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்தோம். இருந்தாலும் தனுஷ் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் கூட்டனியில் படம் பார்க்கும் படியாவது இருக்கும் என்று நம்ம்ம்பி போன எங்களை படம் ரொம்ம்ம்ம்ம்பவே சோதித்து விட்டது. சாரு தன்னுடைய வலைபதிவில் (அவர் புக் எல்லாம் படிக்கிற அளவுக்கு நான் கேஞ்சு பிடிச்சு அலையவில்லை) அடிக்கடி வதை வதை என்ற ஒரு வார்த்தையை சொல்லுவார் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை நேற்று தான் புரிந்து கொண்டேன். மரியானின் அர்த்தம் மரணம் இல்லாதவன் என்று இயக்குனர் "பரத் பாலா" சொன்னார், அது தனுஷ் கதாபாத்திரத்துக்கு வேண்டும் என்றால் பொருந்தும், ஆனால் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு பொருந்தாது.


மரியான் (தனுஷ்) மீனவ கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் காதலி பனிமலர் (பூ பார்வதி). பனிமலர் மீது காதல் வராமல் இருப்பதருகு தனுஷ் ஒரு மொக்கை காரணம் சொல்கிறார். பிறகு திடிரென்று பனிமலர் மீது காதல் கொள்கிறார். குப்பத்து வில்லன் புல்லெட் ராஜாவிற்கும் பனிமலர் மீது காதல். தமிழ் வில்லனின் அகராதியை மீறாமல் இவர் பனிமலரை ஒரு தலையாய் காதலிக்கிறார். பனிமலரின் அப்பா (!!) வில்லனிடம் வாங்கிய கடனிருக்கு அவன் பனிமலரை கேட்கிறான். பனிமலர் மீது காதலில் விழுந்த தனுஷ் அந்த கடனை அடைக்க இரண்டு வருட காண்ட்ராக்டில் சூடான் நாட்டிருக்கு வேலைக்கு செல்கிறார். செல்லும் இடத்தில் அவரை சூடான் தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். அங்கிருந்து தப்பித்து மீண்டும் இந்தியா வந்து பனிமலரை கரம்பிடித்தாரா இல்லையா என்பதை விருப்பம் இருந்தால் தியேட்டரில் போய் பாருங்கள், இல்லை என்றால் இரண்டு மாதங்களில் "இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக" போடுவார்கள் அப்பொழுது பார்த்து கொள்ளுங்கள்.

இந்த கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்று சொல்கிறார்கள். தனுஷும் கதையை கேட்டவுடன் நடிக்க ஒத்துக்கொண்டு இருப்பார் என்று நினைக்கிறேன் தனுஷிருக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள படம். அவர் மட்டுமே படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நிறைய காட்சிகளில் வெறும் உடல்மொழியில் தான் சொல்ல நினைப்பதை சொல்லி விடுகிறார். ஆனால் நல்ல உழைப்பு இப்படி வீணாய் போய் விட்டதே என்கிற கவலை வருவதை தவிர்க்க முடியவில்லை.

 3, மயக்கம் என்ன, ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களில் தனுஷ் தான் ஒரு கிளாஸ் பெர்பார்மர் என்பதை நிருபித்து இருக்கிறார். அவரின் நடிப்பு 3, மயக்கம் என்ன போன்ற படங்களில் வீணாய் போய் உள்ளது. இந்த படமும் அந்த லிஸ்டில் கண்டிப்பாய் சேரும், சேர்ந்துவிட்டது. தனுஷ் இனியாவது நார்மல் ஆடியன்ஸுக்கு பிடிக்கும் படியான படங்களில் நடிக்க வேண்டுகிறேன். 


சூடான் காட்சிகளில் இவர் காட்டும் மேனரிசத்தை பார்க்கும் போது புதுபேட்டை படம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. அடுத்த படத்திலாவது நார்மல் தனுஷை எதிர்பார்கிறேன். எத்தனை நாட்கள் தான் தனுஷை மெண்டல் மற்றும் சைக்கோ கதாபாத்திரங்களில் காதலியின் கழுத்து பிடித்து பல்லை கடித்து வசனம் பேசுவதை மட்டுமே பார்ப்பது. போர் அடித்து விட்டது. முடியல பாஸ்..!! தீவிரவாதிகள் ஒரு காட்சியில் தனுஷை சித்திரவதை செய்வார்கள், அந்த காட்சியில் முதுகு காட்டி ஒட்கார்ந்து இருப்பது தனுஷ் இல்ல என்று சின்ன குழந்தை கூட சொல்லி விடும். அதே போல் கிளைமாக்ஸ் காட்சியில் கடல்கரையில் தனுஷின் டூப் நடப்பது போன்ற காட்சியும் அது தனுஷ் இல்ல என்று அப்பட்டமாய் காட்டி குடுக்கும். 

ஹீரோயின் பூ பார்வதி நன்றாக நடிக்க முயற்சி செய்கிறார், தனுஷ் அளவிருக்கு இவர் என்னை ஈர்க்கவில்லை. நிறைய காட்சிகளில் இவர் பேசும் தமிழ் புரியவில்லை. புயல் அடிக்கும் போது தனுஷ் கடலுக்கு சென்று திரும்பி வரும் காட்சிகளில் இவர் பேசும் தமிழ் வசனங்களை "இங்கிலீஷ்" சப்டைட்டில் உதவியுடன் தான் புரிந்து கொள்ள முடிந்தது. தேவையில்லாத காட்சிகளில் கிளீவேஜ் காட்டியுள்ளார். இரண்டாம் பாதியில் தனுஷ் சூடானில் மாட்டி கொண்ட பிறகு கனவு காட்சிகளில் மட்டும் வந்து மொக்கை பாட்டுக்கு ஆடி விட்டு செல்கிறார். 

சூடான் தீவிரவாதிகள் தான் காமெடி இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார்கள். என்ன மொழி பேசுகிறார்கள் என்று கடைசி வரை புரியவேயில்லை. தமிழ்நாட்டில் இந்த வாத்து மடையர்கள் பேசுவதையாவது சப்டைட்டில் போட்டார்களா என்று யாராவது சொல்லுங்க..ப்ளீஸ். ஒன்று சுட்டு கொண்டே இருக்கிறார்கள், இல்ல பேசியே மொக்கை போடுகிறார்கள். இயக்குனர் -பரத் பாலா, இவர் தான் "வந்தே மாதரம்" விளம்பரம் எடுத்தவராம். இவருக்கு ஆடியன்சை இரண்டரை மணி நேரம் காட்டி போட வைக்கும் கலை சுத்தமாய் தெரியவில்லை. உண்மை கதையை யதார்த்தமாய் எடுப்பதா இல்ல கமெர்ஷியலாய் எடுப்தாய் என்ற குழப்பத்தில் ரொம்பவே தடுமாறி உள்ளார்.


காஸ்டிங் படு மட்டமாய் செலக்ட் செய்து உள்ளார். தனுஷின் அம்மாவாக வரும் உமா ரியாஸ், பேசும் வசனங்கள் ஒட்டவே இல்லை. நல்ல நடிகையை வீண் அடித்து இருக்கிறார். அதே போல் பார்வதியின் அப்பா (!!) வாக வரும் "சலீம் குமார்" பேசும் தமிழ்...யப்பா காதில் ஈயத்தை காச்சி ஊற்றுவது போல் இருந்தது. இவர்கள் பேசும் தமிழ் ஹிந்தி டப்பிங் சீரியல் பார்த்த எபெக்ட்டை குடுத்தது.

இசை ரஹ்மான். முதல் பாடல் மற்றும் தனுஷ் மீன் பிடிக்க கடலில் இறங்கும் போது வரும் பின்னணி இசை மட்டுமே கேட்கும் படி இருந்தது. மற்றவை எல்லாம் ரஹ்மான் இசை அமைத்த மாதிரியே தெரியவில்லை. எடிட்டிங் ரொம்பவே மட்டமாக இருந்தது. காட்சி முடியும் முன்பே, அடுத்த காட்சியின் வசனம் ஆரம்பித்து விடுகிறது. 3 படத்தில் தனுஷ் கழுத்தை அறுத்து சாகும் காட்சியில் தியேட்டரே ஆரவாரமாய் கை தட்டியது. அதே போன்ற ரெஸ்பான்ஸ் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் காண முடிந்தது. படம் முடிந்து விட்டதே என்று.

மரியான் (2013)- மரிச்சு போயி !!! 

My Rating: 5.9/10.


Sunday, June 23, 2013

ராஞ்ஜனா (2013) - தலைவலி இலவசம் !!

தமிழ்நாட்டில் இருந்து தனுஷிருக்கு முன்பு வரை பல தமிழ் நடிகர்கள், தமிழ் டைரக்டர்ஸ் பாலிவுட் சென்று தங்கள் முத்திரையை பதிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள், அனைவருக்கும் கிடைத்தது என்னவோ தோல்வி தான். கமல், ரஜினி, சூர்யா என்று இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். தமிழில் அழியா காவியங்களை குடுத்து வந்த மணிரத்தினம் தனது "ரத்தினதன்மையை" இழந்தது அவரது ஹிந்தி என்ட்ரிக்கு பிறகு தான் என்று நம்மால் நிச்சியமாக கூற முடியும். ஹிந்தி ஆடியன்சையும் கவர வேண்டும் தமிழ் ஆடியன்சையும் கவர வேண்டும் என்று அவர் எடுத்த சமீபத்திய கொத்து பரோட்டா திரைப்படங்களே அதருக்கு சாட்சி. பாலிவுட் தன் இரு கரங்களையும் கூப்பி வரவேற்று ஏற்று கொண்ட ஒரே தமிழர் ஏ.ஆர் ரஹ்மான் மட்டும் தான். 

தற்போதிய டிரென்ட் படி ஹிந்தி ஆடியன்சை பொறுத்த வரை ஹீரோ என்பவருக்கு வெள்ளை தோலு, கிளீன் ஷேவ் மூஞ்சி, சிக்ஸ் பேக்ஸ் போன்றவை நிச்சியமாக இருக்க வேண்டும், பேசிக் குவாலிட்டிஸ் என்று சொல்லலாம். யார் வேண்டுமென்றாலும் ஹீரோ ஆகலாம் என்பது ஹிந்தி சினிமா உலகில் நடக்காத காரியம். ஆனால் இதில் எந்த குவாலிட்டிசும் இல்லாத ஒரு தமிழ் நடிகரால் ஹிந்தி படத்தில் என்ட்ரி குடுக்க முடியும் என்றால் அது "கொலைவெறி" புகழ் தனுஷால் மட்டுமே முடியும். கொலைவெறி புகழ் மற்றும் அவருக்கு நன்றாக வரும் சைக்கோ நடிப்பை மட்டுமே வைத்து பாலிவுட்டில் சாதித்து விடலாம் என்ற தனுஷின் ஆசைக்கு பதில் சொல்லும் படம் தான் "ராஞ்ஜனா".


ராஞ்ஜனா படம் யுஸ்ஸில், அதுவும் நான் வசிக்கும் சாண்டியாகோ நகரில் ரீலீஸ் ஆகி உள்ளது என்றால் அதருக்கு காரணம் படத்தின் இசைஅமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மட்டுமே. இங்கு ரஹ்மானின் அணைத்து படங்களுக்கு ரீலீஸ் ஆகும் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டை சேர்ந்த தனுஷ் நடித்த படம், மற்றும் ரஹ்மான் இசை எங்களை தியேட்டருக்கு அழைத்து சென்றன. 

படத்தின் மீது எனக்கு பெரிய அளவு எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. சும்மா ரெண்டு மணி நேரம் கடத்தினால் போது என்கிற மனநிலையில் தான் சென்றேன். ஆனால் ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இரண்டு மணி நேரம் எனக்கு இருண்ட அறையில் இருபது மணி நேரம் கட்டி வைத்தது போல் கொடூரமாய் நகர்ந்து போனது. கடைசிக்கு கடுமையான தலைவலியுடன் தான் திரும்பி வந்தோம்.

படத்தின் கதை அரத பழசான காதல் கதை தான். அதில் புதுமையை புகுத்துகிறேன் என்று நம்மை வாட்டி வதைக்கிறார்கள். தனுஷ் வாரனாசியில் செட்டில் ஆனா தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஐயர் பையன். ஆறு வயதிலே முஸ்லிம் செல்வந்தரின் ஐந்து வயது மகளான் சோனம் கபூரை லவ்ஸ் செய்கிறார்.அதுவும் பார்த்தவுடனே. அவரது தெய்வீக காதல் வளர்ந்து விருச்சம் ஆகிறது. பத்தாவது படிக்கும் போது தனது மணி கட்டை அறுத்து (!!) சோனம் கபூரின் இதையத்தில் இடம் பிடிக்கிறார். 


சோனம் வீட்டில் விஷயம் தெரியவர அவரை ஊர் விட்டு ஊர் கடத்துகிறார்கள். எட்டு வருடம் கழித்து சோனம் திரும்பி வந்தால், தனுஷை பார்த்து "நீ யார், உன்னையை எங்கோ பார்த்த மாதிரியே இருக்கே" என்று கேட்கிறார். சின்ன வயசுல வந்தது பப்பி லவ், அதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்க கூடாது என்று கிளாஸ் எடுக்கிறார். தனுஷுடன் சேர்ந்து பாம்பே படத்தை போல் அருமையான ஹிந்து முஸ்லிம் காதல் கதையை சொல்லுவார்கள் என்கிற ஆர்வமாய் இருந்த நம் மீதும் சேர்ந்தே இடி விழுகிறது. நொந்து போன தனுஷ் மீண்டும் மணி கட்டை அறுத்து கொள்கிறார். படத்தில் எத்தனை பேர் எத்தனை முறை மணி கட்டை அறுக்கிறார்கள் என்கிற போட்டியே வைக்கலாம். எண்ணுவது கஷ்டம்.

சோனம் டெல்லியில் படிக்கும் போது புரட்சி புயல் அகரம் (அபய் தியோல்) விரும்பிய கதையை நமக்கும் தனுஷுக்கும் சேர்த்து சொல்கிறார். ஷாஜகான் விஜய் போல் எங்கள் காதலை நீ தான் சேர்த்து வைக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார். அதருக்கு தனுஷ் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை திரணி இருந்தால் (!!) தியேட்டரில் இந்த படம் அம்பிகாவதி என்கிற பெயரில் தமிழில் வரும் போது போய் பார்த்து கொள்ளுங்கள். படத்தின் முதல் பாதி தனுஷிருக்கு மிகவும் பரிச்சியமான ரோல், அதாங்க ஸ்டுடென்ட் ரோல். தாடி மீசையை எடுத்து எண்ணை வைத்து படிய சீவி, லூஸ் ஷர்ட் போட்டு பல்லு தெரியாமல் சிரித்தால் ஸ்டுடென்ட் கேரக்டர் ரெடி. 

3 படத்தில் நாம் பார்த்த அந்த ஸ்டுடென்டுக்கும் இதருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டாம் பாதியில் காலேஜ் புரட்சி படையை வழி நடத்தி புரட்சி செய்யும் வேலை. "வேட்டையாடு விளையாடு" படத்தின் லொள்ளு சபா வெர்ஷனில் பேசியே கழுத்து அறுத்து கொல்லுவார்கள் இளாவும், அமுதனும். அதே போல் இதில் தனுஷ் பேசியே புரட்சீசீ செய்கிறார். யப்பா முடியல சாமி. தனுஷ் கதாபாத்திரம் தான் படத்திலே மிகவும் குழப்பமானது, எந்த காட்சியில் எப்படி ரீயாக்ட் செய்வார், என்ன முடிவு எடுப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. 


சோனம் கபூர் அழகாக வருகிறார், அளவாக நடிக்கிறார். தில்லி யுனிவெர்சிட்டியில் அபய் தியோல் மீது இவருக்கு காதல் அரும்பும் காட்சிகளில் மிகவும் க்யூட் எக்ஸ்ப்ரஷன்ஸ் வெளிப்படுத்தி இருப்பார். அபய் தியோல் வினவு ஸ்டைலில் பத்து பேரை வைத்து கொண்டு கருப்பு சட்டை மாட்டி கொண்டு மாணவர் புரட்சி செய்கிறார். நெம்ப கஷ்டம்..!! படத்தில் அவர் செய்த ஒரே நல்ல காரியம் சோனம் கபூருக்கு காலேஜ் சீட் வாங்கி தருவது தான். மற்ற படி ஒன்றுமே செய்யாமல் எலெக்ஷனில் நின்று ஆல்மோஸ்ட் டெல்லி சி.எம் ஆகி விட்டது போல் பில்ட் ஆப் மட்டும் குடுக்கிறார். மாணவர் புரட்சி எபிசோடுகள் பாதாளத்தில் இருந்த படத்தை அதள பாதாளத்தில் தள்ளி விடுகின்றன. 

படத்தில் உருபடியான பார்ட் என்று சொன்னால் அது இசை மற்றும் ஒளிப்பதிவு. நட்டி என்கிற நடராஜன் தான் ஒளிப்பதிவு, வாரணாசி ஹோலி பண்டிகை காட்சிகளில் இவரின் கேமரா விளையாடி உள்ளது. தனுஷ் சோனம் சிறு வயது காதல் எபிசோடில் ரஹ்மான் பின்னணி இசையில் அட்டகாச படுத்தி இருப்பார். குடுத்த காசுக்கு பாட்டு மட்டும் தான் கேட்க்கும் படி உள்ளது. படத்தின் ஒரே ஆறுதல் பாரின் பாட்டு இல்லை, தனுஷ் சட்டையை கழட்டி இடுப்பில் கட்டி சண்டை போடவில்லை என்பது தான். தனுஷின் ஹிந்தி என்ட்ரி தமிழு சினிமாவுக்கு நல்லது தான், இவரை பார்த்து சிம்புவும் சில காலம் மும்பையில் குடி ஏறுவார். தனுஷ் இதே போன்ற படங்களில் நடிங்க, தமிழ் பக்கமே வந்துராதீங்க.

ராஞ்ஜனா (2013) - தலைவலி இலவசம் !!
My Rating: 5.6/10......


Wednesday, June 19, 2013

தில்லு முல்லு (2013) - சிரிப்பே வராத காமெடி படம் !

தில்லு முல்லு (2013) படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எவர் கிரீன் முழு நீள காமெடி படமான தில்லு முல்லு (1981) படத்தின் ரீமேக் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இன்றும் கே டிவியில் ரஜினி நடித்த தில்லு முல்லு படத்தை போட்டால் இருக்கும் வேலையை அப்படியே போட்டு விட்டு படம் பார்க்க உட்கார்ந்து விடுவேன். ரஜினிக்கும் முழு நீள காமெடியும் வரும் என்பதை நிருபித்த படம். சீரியஸ் இரண்டு பொண்டாட்டி கதைகள், குழப்பமான இடியாப்ப குடும்ப சிக்கல் கதைகள்  மட்டுமே எடுக்க தெரிந்தவர் என்று பெயர் பெற்ற கே. பாலச்சந்தர் தன்னாலையும் காமெடி படம் இயக்க முடியும் என்று நிருபித்த படம். "கோதாவரி கோட்டை கிழிடி" புகழ் விசு தான் பழைய தில்லு முல்லு படத்திருக்கு திரைக்கதை எழுதினார் என்பதை அவர் இந்த படத்தின் மீது கேஸ் போட்டவுடன் தான் நாம் அனைவரும் அறிந்த கொண்டிருப்போம். 

படம் வெளிவந்த காலத்தில் ரஜினி மிக பெரிய அக்ஷன் ஹீரோவாக வளம் வந்துகொண்டு இருந்தார், அவரின் அக்ஷன் ஹீரோ இமேஜ் உடைத்து காமெடி ஹீரோ இமேஜ் ஏற்படுத்தி குடுத்ததும் இந்த படம் தான். அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரன் என்கிற ரஜினி என்ட்ரி ஆகும் ஒரு காட்சி போதும் ரஜினி கிளாஸ் நடிகர் என்பதை நிருபிக்க. இந்திரன்/சந்திரன் என்று மீசை வைத்து/மீசை இல்லாமல் இரு கதாபாத்திரங்களில் ரஜினி பிரமாத படுத்தி இருப்பார். மீசையை எடுக்கும் காட்சியில் ரஜினி நவரச முக பாவங்களை அருமையாக வெளி படுத்தி இருப்பார். இப்படி பட்ட கிளாசிக் காமெடி படத்தை ரீ-மேக் செய்யும் போது ஒரிஜினல் படத்தின் பக்கத்திலாவது வர வேண்டாம்மா, வெகு தூதூதூதூதூதூதூதூரம் தள்ளி இருக்கிறது தில்லு முல்லு (2013).


உலக நாயகன் + சூப்பர் ஸ்டார் பட்டங்களை இணைத்து அகில உலக சூப்பர் ஸ்டார் "சிவா" என்கிற டைட்டில் கார்டுடன் படம் ஆரம்பிக்கும் போதே மைல்ட் டவுட். சரி பழைய படத்தில் கமல் வக்கீலாக ஒரு கேரக்டர் செய்து இருப்பார், கமல் + ரஜினியின் கதாபத்திரங்களை தூக்கி சாப்பிடுவது போல் மிர்ச்சி சிவா கலக்கி இருப்பார் என்று பார்த்தால், பார்க்கும் நமக்கு தான் வயறு கலங்கி விடுகிறது. படம் முழுக்க ஒரே எக்ஸ்பிரஷன் தான். 

கொஞ்சமாவாது மாற்றம் வேண்டாமா ? பார்க்கும் நமக்கு சலிப்பு தான் ஏற்படுகிறது. ஸ்பூப் படமான் "தமிழ்படத்தில்" இவரின் ஒரே மாதிரியான முகபாவம் ஓகே, அதன் பிறகு வந்த எல்லா படங்களிலும் அதையே செய்து கொண்டு இருந்தால், பார்க்கும் தமிழ் மக்களுக்கு தான் கஷ்டம். பவர் ஸ்டார் இவரை விட நன்றாக நடிப்பார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.  


முதல் காட்சியில் அப்பு கமல் போல் சிவா நடிக்க "லம்பா லேகியத்தை" சாப்பிட்டு அவர் வளர்ந்து விடுவது போல் ஒரு மொக்கை காமெடி, அந்த ஒரு காட்சி போது படத்தின் காமெடி வறட்சியை சொல்ல. சிவாவின் பூர்விக வீடு கோர்ட் கேஸில் பறிபோகிறது, அதனால் அவரின் மாமா இளவரசின் யோசனை படி பிரகாஷ்ராஜ் நடத்தும் மினரல் வாட்டர் கம்பெனிக்கு இன்டர்வியூ வருகிறார். தேங்காய் சீனிவாசன் பின்னி பெடல்யெடுத்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ். வழக்கம் போல் மனிதர் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து உள்ளார், சரியாக சொன்னால் இவர் மட்டும் தான் படத்தில் நடித்து உள்ளார். 

பசுபதி என்கிற தந்து பெயருக்கு ப- பழனி மலை, சு- சுவாமி மலை, ப- பழமுதிர்சோலை தி- திருத்தணி என்று புது விளக்கம் குடுத்து ஏமாற்றி அந்த கம்பெனியில் வேலைக்கு சேருகிறார் சிவா. ஐபில் மேட்ச்சுக்கு அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று போகும் சிவாவை மொபைல் வீடியோ ஆதாரத்தை வைத்து கையும் களவுமாக பிடிக்கிறார் பிரகாஷ்ராஜ். ஆனால் அது தான் இல்ல, தனது தம்பி கங்குலீ என்று பொய் சொல்லி மீசைக்கு பதில் தந்து தம்பிக்கு பூனை கண் என்று ரீல் விடுகிறார். தம்பி கதாபாத்திரத்திலும் கொஞ்சம் கூட மொடுலேஷன் மாற்றாமல் வந்து நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார். அதன் பிறகு பிரகாஷ்ராஜ் பொண்ணை லவ்லி சில பல மொக்கை காமெடிக்கு பிறகு எப்படி கரம்பிடிக்கிறார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


பழைய கிளாச்சிக் படத்தில் இருந்து சில காட்சிகள் மாற்றி எடுத்து உள்ளார் இயக்குனர் பத்ரி. ஆனால் எந்த காட்சியிலும் புதுமை இல்ல. சிவாவின் நண்பராக பரோட்ட சூரி வருகிறார். அவர் கதாபாத்திரம் காமெடியா இல்ல சீரியஸ் என்று கடைசி வரைக்கும் புரியவில்லை. சௌகார் ஜானகி கலக்கிய அம்மா பாத்திரத்தில் கோவை சரளா. கொஞ்சமும் பொருந்தவில்லை. பிரகாஷ் ராஜ் சந்தேகத்துடன் இவரைப் பார்க்க வரும் நேரங்களிலெல்லாம் நாக்கில் வேலைக் குத்தி அவரை உட்கார வைத்து விடுகிறார்கள். மற்ற நேரங்களில் சென்னை தமிழ் பேசுகிறேன் என்று சும்மா கத்தி கொண்டே இருக்கிறார். படத்தின் இன்னொரு பெரிய மைனஸ் கதாநாயகி இஷா தல்வார். மும்பை இறக்குமதி போல் தெரிகிறார். முகத்தில் ஒரு களை இல்லை. நடிப்பு....? எந்த கடையில் கிடைக்கும் !!!

 படத்தின் ஒரே அறுதல் சிவாவின் சின்னச் சின்ன டைமிங் வசனங்கள் தான். நீங்க பேஸ் புக்ல இருக்கீங்களா, என்று பிரகாஷ்ராஜ் கேட்க இல்லீங்க நான் மைலாபூர்ல இருக்கேன் போன்ற சில பல வசனங்கள் ஸ்மைல் வரவைக்கிறது, மற்ற படி கிளாச்சிக் தில்லு முல்லு போல் குபீர் சிரிப்பை வரவைக்கும் காட்சிகள் படத்தில் ஒன்றுமே இல்ல. கிளைமாக்ஸ் காட்சியில் "ஆங்கிரி பேட் மூக்கா" என்று சந்தானம் என்ட்ரி குடுத்து படத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார். கிளைமாக்ஸ் காட்சி சுந்தர்.சி பாணி ஆள் மாறாட்ட காமெடி முயற்சி, பரவாயில்லை ராகமே. 

முதல் முறையாக எம்எஸ்வி - யுவன் இசைக் கூட்டணி, தில்லு முல்லு டைட்டில் ரீமிக்ஸ் அசத்தலாக உள்ளது. ராகங்கள் பதினாறு... பாடல் மட்டும் கேட்க்கும் படி உள்ளது. தமிழ் நாட்டில் வசூல் ரீதியில் படம் வெற்றி என்று நியூஸ் படித்தேன். நமது மக்களின் காமெடி சென்ஸ் மீது கொஞ்சம் சந்தேகம் வந்து விட்டது. இப்பொழுது எல்லாம் கலைஞர் அரசியல் அறிக்கைகள் விடுவது இல்ல போல, அதனால் தான் இந்த மாதிரி மொக்கை காமெடி படங்கள் ஹிட் அடிக்கிறது. !!!!

தில்லு முல்லு (2013) - சிரிப்பே வராத காமெடி படம் !

My Rating: 6.0/10......


Saturday, January 12, 2013

அலெக்ஸ் பாண்டியன் (2013) - மரண மொக்கை ..!!!!

த்ரிஷா இல்லாட்டி திவ்யா, என்கிற தமிழர்களின் கொள்கையை சரியாக புரிந்து கொண்டு சரியான நேரத்தில் வெளி வந்து கல்லா கட்ட போகும் திரைப்படம் தான் அலெக்ஸ் பாண்டியன். விஸ்வரூபத்தை எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு விஸ்வரூபம் வெளிவராமல் ஏமாற்றி விட, சரி கார்த்தியின் "அலெக்ஸ் பாண்டியன்" படத்திருக்கு போய் பண்டிகை சீசனை நல்ல முறையில் தொடங்குவோம் என்று நினைத்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைத்து இருக்க கூடாது . ஐயா, ஒரு புது படத்தை நம்ம பதிவர்களில் விமர்சனம் எதுவும் படிக்காம பார்க்க நினைச்சது தப்பா ...?? அப்படி பார்க்க போன என்னைய இப்படியா கொத்து கொத்துன்னு கொத்தி அனுப்பனும் ???


தமிழ்ல சில நல்ல டைரக்டர், நல்ல நடிகரின் படத்தை காசு குடுத்து தியேட்டரில் பார்க்கும் வழக்கம் கொண்டவன் நான். அந்த லிஸ்டில் கார்த்தியின் பெயரும் "பருத்தி வீரன்", "ஆயரத்தில் ஒருவன்" காரணமாய் இருந்தது. இனி மேல் அந்த லிஸ்டில் கண்டிப்பாய் கார்த்தி இருக்க மாட்டார். இனி கார்த்தியின் அணைத்து படமும் டவுன்லோட் தான். சகுனியில் இருந்தாவது அவர் பாடம் கற்று இருக்க வேண்டும் . ஆனால் தான் எப்படி மொக்கையாய் நடித்தாலும் தமிழ் மக்கள் பார்ப்பார்கள் என்கிற எண்ணத்தில் மற்றுமோர் மரண மொக்கை படத்தை வழங்கி உள்ளார் கார்த்தி.

படத்தின் டைரக்டர் சூராஜ்யை நினைத்தால் எனக்கு பொறமையாக இருக்கிறது. எப்படி இந்த படத்தின் கதையை கார்த்தியிடம் சொல்லி ஓகே வாங்கினார் என்று. பெரிய திறமைசாலி தான். இப்படி தான் கதை சொல்லி இருப்பார் என்று நினைக்கிறன் . கார்த்தி சார், " ஓபன் பண்ணுனா நீங்களும் அனுஷ்கா மேடமும் ஓடுறீங்க, தண்டவாளத்துல ஓடுறீங்க, ட்ரைன் மேல ஓடுறீங்க , ஓடிகிட்டே இருக்கீங்க . வில்லன் உங்க ரெண்டு போரையும் ரிச்சா ஹெலிஹப்ட்டர்ல சேஸ் பண்ணுறான். அப்படியே உங்களை நோக்கி துப்பாகியால சுடுறான். நீங்க ரெண்டு பேரும் கடல்ல குதிக்கறீங்க. கட் பண்ணுனா நீங்க சந்தானம் சார் வீட்டுல ஹாய்யா படுத்துட்டு இருக்கீங்க. 


அடுத்த அரை மணி நேரம் நீங்களும் சந்தானம் சாரும் சேர்ந்து அவரோட முனு தங்கச்சிகளை வச்சு காமெடி பண்ணுறீங்க. எல்லாம் டபுள் மீனிங் காமெடி, அப்ப தான் யூத் ஆடியன்ஸ் கவர் ஆவாங்க. நீங்க கடல்ல விழுந்த இடத்தை வச்சு, வில்லன் குரூப் ஊர் ஊரா உங்களை தேடுறாங்க. ஹீரோயின் அனுஷ்கா மயக்கமா சித்த வைத்திய சாலையில இருக்காங்க. பிரஸ்ட் ஆப் குத்து பாட்டுக்கு சந்தானம் முனு தங்கச்சிகளை யூஸ் பண்ணுறோம். இடைவேளைக்கு பத்து நிமிஷம் முன்னாடி வில்லன் குரூப் நீங்க இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சு உங்களை சுமோ, இன்னோவா கார்ல சேஸ் பண்ணுறாங்க. நீங்க சந்தானம், அப்புறம் அனுஷ்கா மேடம் முனு பேரும் மாருதி -800 கார்ல 40 km ஸ்பீட்ல தப்பிச்சு போறீங்க. வில்லன் குரூப் 90 km ஸ்பீட்ல வந்தும் உங்களை பிடிக்க முடியல. அப்ப தான் சார் செம ட்விஸ்ட் ஒன்னு வருது கதையில, சந்தானம் சார், அனுஷ்கா மேடம் யாருன்னு கேட்க, நீங்க அவங்க "தமிழ்நாடு CM பொண்ணு" என்கிற பயங்கரமான நெஞ்சை உறைய வைக்கும் உண்மையை கூல்லா சொல்லுறீங்க. நீங்க தான் CM பொண்ணை கடத்துனீங்க என்கிற வரலாற்று உண்மையையும் சொல்லுறீங்க. அத்தோட இன்டர்வெல் விடுறோம்.

இன்டர்வெல்ல தப்பிச்சு போன ஆடியன்ஸ் போக மிச்ச மீதி இருக்கிற ஆடியன்ஸ்க்கு "நீங்க ஏன் CM பொண்னான அனுஷ்கா மேடமை கடத்துனீங்க" என்கிற காரணத்தை போட்டு உடைக்கிறோம். அப்படியே உங்களுக்கும் சீப் மினிஸ்டருக்கும்  என்ன வாய்கா தகராறு ..??? அனுஷ்கா மேடமை நீங்க எப்படி புத்திசாலிதனமா பிளான் பண்ணி கடத்துனீங்க ..?? மேடம்க்கும் உங்களுக்கும் எப்படி கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆச்சு ..?? என்பது போன்ற பஸ்ட் ஆப் முடிச்சுகளை அவிழ்கிறோம். செகண்ட் ஆப்ல் விட்டதை பிடிக்கிற மாதிரி உங்களுக்கும் மேடம்கும் ரெண்டு செம குத்து பாட்டு போட்டு தாக்குறோம். மானே தேனே மாதிரி போர் அடிச்சா, நீங்க வில்லன்களை போட்டு கும்முறீங்க. கொஞ்ச நேரம் சந்தானம் கூட சேர்ந்து காமடி பண்ணுறீங்க. கடைசியில எல்லா வில்லன்களையும் கொன்னுட்டு மேடம் கையை பிடிக்கிறீங்க, அத்தோட"BAD BOYS" பாட்டை போட்டு குத்துயிர், கொலைஉயிர்ருமாய் இருக்கிற ஆடியன்ஸை மொத்தமா முடிக்கிறோம்.


இப்படி பட்ட மொக்கை கதைக்கு எப்படி தான் சிவக்குமார் குடும்பம் ஓகே சொல்லுச்சோ, சத்தியம்மா இன்னும் எனக்கு புரியல. இந்த படத்தை தெலுங்கு படத்தோட கம்பார் பண்ணுனா, அது தெலுங்கு சினிமாவை அவமான படுத்துற மாதிரி ஆகிரும். தெலுங்கு மக்கள் இதை விட மிக சிறப்பாய் மசாலா படம் எடுப்பார்கள்.

கார்த்தி, "பருத்தி வீரன்" படத்துல நடிச்ச ஆள். எப்படி எல்லாம் நடிச்ச நடிகர், இப்ப இப்படி மொக்கையா நடிக்கிறாரே. சோ சேடு ..!! கூடிய விரைவில் பரத், விஷால்,பாக்கு தல  சுந்தர்.C , சிம்பு , தனுஷ்  லிஸ்டில் சேர்ந்து விடுவார். அனைத்துக்கும் ஒரே எக்ஸ்ப்ரெஷன் காட்டி நடிக்கிறார். கோப பட சொன்னால் மொறைக்கிறார். மாறுங்க கார்த்தி, இல்லாட்டி சிரமம் தான்.

அனுஷ்கா - முதல் பாதியில் ஒரு டயலாக் கூட இல்லை. இரண்டாம் பாதியில் இரண்டு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். இவருக்கு இது மற்றுமொறு படம். ஒன்றும் சொல்வதருக்கு இல்லை. படத்தில் இருக்கும் ஒரே எண்டர்டைன்மெண்ட் சந்தானம் தான். இவர் இருந்த காரனத்தால் தான் படத்தில் சிறிது நேரம் ஒட்கார முடிந்தது. அனால் நிறைய டபுள் மீனிங் ஜோக்ஸ். டபுள் மீனிங் பேசியே ஒழிந்து போன விவேக் மாதிரி இவர் ஆகிவிட கூடாது.

பாடல்கள் ஒன்றுமே மனதில் தங்க வில்லை. "BAD BOYS" பாட்டு மட்டும் டிவி விளம்பரம் காரணமாக நான் எதிர்பார்த்து சென்றேன். ஆனால் கடைசியில் சுபம் போட்டவுடன் பாட்டை போட்டார்கள். எனக்கு "ராஜா பாட்டை" ஞாபகம் தான் வந்தது. பாட்டை ரசிக்கும் மனநிலையில் சத்தியமாக அப்பொழுது நான் இல்லை. எப்படா தியேட்டரை விட்டு வெளியே ஓடுவோம் என்கிற மனநிலை தான் எனக்கு இருந்தது. தம் இருந்தா போய் தியேட்டர்ல பாருங்க.


அலெக்ஸ் பாண்டியன் - மரண மொக்கை ..!!!!

My Rating: 3.2/10......


Sunday, January 01, 2012

2012 –(2009)- உலகம் அழிய வேண்டுமா..???

பதிவுக்கு போறதுக்கு முண்ணாடி எல்லோருக்கும் ஒன்னு சொல்லியே ஆகனும், அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2011 முடிஞ்சு 2012 ஆரம்பிச்சாச்சு...சில பேருக்கு “ஜஸ்ட அனதர் டே” (Just another Day), அப்பிடின்கிற மனப்பான்மை இருக்கும். பல பேருக்கு “போனது எல்லாம் போகட்டும், இனி மேல புதுசா ஒரு இன்னிங்க்ஸ் தொடங்குவோம்” அப்பிடின்கிற மனப்பான்மை இருக்கும். எண்ணங்கள் எப்படியோ, எல்லோருக்கும் இந்த ஆண்டு வெற்றிகரமாய் அமைய என்னுடைய வாழ்த்துக்கள். அப்புறம் வர போற 2012 ஹாலிவுட்காரன்க்கு ரொம்ப ஸ்பெஷலான மற்றும் பிடிச்ச ஆண்டு. ஏன்னா இந்த நம்பரை வச்சு ஏற்கனவே அவனுக நல்லா காசு பார்துட்டானுக.2009 ஆண்டு Roland Emmerich எடுத்த திரைகாவியம் தான் 2012. இங்க எப்படி பேரரசும், விஜய டி.ஆர் -ம் தமிழில் யார் என்ன மாதிரி உலக சினிமா எடுத்தாலும், தங்களோட ஸ்டைலில் கொஞ்சம் கூட காம்பிரமிஸ் பண்ணிக்காம அவங்களுக்கு பிடிச்ச !!! ஸ்டைல்ல படம் எடுத்து தள்ளுறாங்கலோ, அதே போல ஒரு ஹாலிவுட் டைரக்டர் தான் Roland Emmerich. இவரு எடுக்குற படம் எல்லாம் “அழிவு, பேரழிவு, ரொம்ப ரொம்ப பேரழிவு “அப்படிங்கிற முனு பிரிவுல போட்டுறலாம். இந்த படத்தை நான் மூனாவது பிரிவுல “ரொம்ப ரொம்ப பேரழிவு” சேர்கிறேன்.
Roland Emmerich: இவரோட படங்கள் முக்காவாசி உலகுத்துக்கு ஆபத்து, அமெரிக்காவுக்கு ஆபத்து, அப்படிங்கிற கொடுரமான சிந்தனையை கொண்டு இருக்கும்.வெள்ளைக்காரனக்கு (அமெரிக்கன்) எப்போவுமே ஒரு பயம் இருக்கும், எங்க தான் வாழ்ந்துகிட்டு இருக்குற சுகமான !!! வாழ்கைக்கு ஏதாவது பங்கம் வந்திருமோ அப்படிங்கிற பயம் தான் அது. அதனாலயே தனக்கு ஆபத்துன்னு தெரிஞ்ச “பின்லேடன்”-ஐ 10 வருஷம் விடாம தேடி கொன்னான். இப்படி பட்ட உயிர் பயம் உள்ளவங்களை இன்னும் நிறைய பயமுறுத்த Roland அழிவு படமா எடுத்து தள்ளினார். அவரோட சில படங்கள் தவிர எல்லாமே மொக்கை படங்கள் தான். இதுல பெரிய காமெடி அவரோட எல்லா படத்தோட கிளைமாக்ஸ். நோ லாஜிக், நோ மேஜிக். ரொம்ப மொக்கையா இருக்கும். அவரு எடுத்த முக்கியமான !! உலக சினிமாக்கள் : 
Independence Day - (1996) , Godzilla -(1998) , The Day After Tomorrow – (2004) ,1000 BC - (2008) ,2012 - (2009)
எரிமலை-சேஸிங்
இந்த படத்துல (2012) அவரு எடுத்த கான்செப்ட் வழக்கம் போல உலக அழிவு தான், அதுவும் கரெக்டா 2012 ஆம் ஆண்டு உலகம் அழிய போறதா 2009 ஆம் வருஷம் இந்த படத்தை எடுத்தார். கான்செப்ட் என்னனா “மாயன் நாகரிகம்” கணக்கு படி அவங்க காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் முடியுது. அதுவும் கரெக்டா 2012 டிசம்பர்-21 ஆம் தேதி முடியுது. சரி அவங்க காலண்டர் முடிஞ்சா புது காலண்டர் வாங்கி குடுக்க வேண்டியதுதானே, அத விட்டுட்டு “மாயன் காலண்டர்” முடிஞ்சா உலகமே அழிய போகுது அப்பிடின்னு கொலைவெறி பதியை கிளப்பி விட்டாங்க சில அறிவு ஜீவிகள். அதையே Roland கெட்டியா பிடிச்சுகிட்டு எடுத்த படம் தான் 2012. 

ஏற்கனவே இதே மாதிரி “1999” ஆம் ஆண்டு முடிஞ்சு 2000 வருஷம் ஆரம்பத்தில் உலகம் அழிய போறதா நாஸ்ட்ரடாமஸ் கணிச்சசாருன்னு ஒரு புரளி வந்திச்சு. நாஸ்ட்ரடாமஸ் பெரிய அப்பாடக்கர், அவரு கனிச்சா கரெக்டா இருக்கும், அப்பிடின்னு பெரிய பில்ட் அப் எல்லாம் குடுத்தாங்க. ஆனா 1999 முடிஞ்சு 13 வருஷம் ஆச்சு. அதுக்கு ஏத்த மாதிரி “Y2K” பிரச்சனை வேற சொன்னாங்க. ஆரம்பம் (உலகம்) அப்படின்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா முடிவுன்னு ஒன்னு இருக்கும். ஆனா ஆரம்பமே (உலகம்) எப்படி உருவானது அப்படின்னு நமக்கு சரியா தெரியாதப்ப முடிவை பத்தி யோசிக்கிறது முட்டாள்தனமானது. சரி உலக அழிவ விடுங்க, ரொம்ப சீரியஸ்ஸ போயிட்டோம். நம்ப அடுத்து க்வென்டின் 2014 –ல எடுக்க போற “Kill Bill –Vol-3” படத்துல யாரு யார பழி வாங்குவாங்க அப்படின்னு கவலை படுவோம். இல்லாட்டி நோலன் “The Dark Knight Rises”- க்கு அப்புறம் என்ன படம் எடுப்பாருன்னு யோசிப்போம். ஐயோ.. எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்......இப்போ 2012 படத்தை பத்தி பார்போம்.. 
கதை 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமெரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது. இப்படி உலக அழியிர கதையில ஒரே ஒரு அமெரிக்க குடும்பம் மட்டும் தப்பிக்க நடத்தும் போராட்டம் தான் படமே. அந்த குடும்பம் அக்மார்க் அமெரிக்க குடும்பத்துக்கு உண்டான எல்லா தகுதிகளும் நிறைந்த ஒரு பல்கலைக்கழகம். எப்படினா அந்த குடும்ப தலைவி வேற ஒருத்தன் கூட வாழ்ந்து கொண்டிருப்பாள். அந்த குடும்பத்துல்ல ரெண்டு குழந்தைகள், ஒரு பையன், பொண்ணு. அந்த பையனுக்கும் அவனோட அப்பாவான ஹீரோவுக்கும் நல்ல ரீலேசன்ஷிப் இருக்காது. கடைசியில அந்த குடும்பம் உலக அழிவுல எப்படி தப்பிச்சு அப்பிடிங்கிரத Roland தன்னோட பணியில பதில் சொல்லி இருப்பார்.
படத்தோட கதை படு மொக்கையா இருந்தாலும், கிராபிக்ஸ் கலக்கலா இருக்கும். சுனாமி, பூகம்பம், எரிமலை எல்லாத்தையும் ஸ்க்ரீன்ல ஒரே நேரத்துல பார்க்க விஷுவல் ட்ரீட்.

அமெரிக்கன் ப்ரெசிடெண்ட் மக்களுக்காக !!! தன் உயிரை தியாகம் செய்யும் காட்சி நல்லா இருக்கும்.

டிஸ்கி:
நீங்க படத்தை பார்திருந்தா ஓகே. பாக்காட்டி சின்ன அட்வைஸ். ரொம்ப கடுப்பா இருந்தா இந்த படத்தை பார்க்காதீங்க, இன்னும் ரொம்ப கடுப்பு ஆகிருவேங்க. சும்மா ரிலாக்ஸ்ஸா இருக்கும் போது பாருங்க.. நல்ல BR Rip ப்ரின்ட்ல பாருங்க...
இந்த படத்துக்கு அப்புறம் Roland இனிமேல் அழிவு படமே எடுக்க மாட்டேன் அப்படின்னு சத்தியம் பண்ணி இருக்கிறார்.


My Rating: 6.9/10......