Wednesday, June 27, 2012

BABYஆனந்தன் (பிரதீப்) அவர்களின் "என் தமிழ் சினிமா அன்று!" !!!!


நண்பர் பிரதீப் பாண்டியன் பற்றி நிறைய பேருக்கு தெரியும் என்று நினைக்கிறன்.. தெரியாதவர்களுக்கு சிறு அறிமுகம்.. கிட்ட தட்ட நான்கு வருடங்களாய் தமிழில் வலைப்பூ எழுதி வருகிறார்..முக்கியமாக உலக\உள்ளூர் சினிமாவை பற்றி 146 பதிவுகள் எழுதி உள்ளார். அவரின் வலைப்பூ முகவரி "BABYஆனந்தன்"


நண்பர் BABYஆனந்தன் (பிரதீப் பாண்டியன்) அவர்கள் தமிழ் சினிமா வரலாற்றை பற்றி அருமையான தொடர் ஒன்றை எழுதி வருகிறார்...மிக மிக அருமையான தொடர்...அந்த தொடரின் ஒரு பகுதியாக உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா வரலாற்றை பற்றி நமக்கு தெரியாத நிறைய தகவல்களை அள்ளி தந்து உள்ளார்.. இவர் நான் படித்ததில் மிக சிறந்த கட்டுரை என்று அவர் எழுதிய கீழ் காணும் பதிவை சொல்வேன்.
அனைவரும் அவர் பதிவை ஒரு முறையாவது படிக்க வேண்டுகிறேன்..


அவர் பதிவை படிக்க "இங்கு கிளிக் செய்யவும்"


பதிவு பலரை சென்று அடைய உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் வலைபூவில் பகிரவும்..Sunday, June 24, 2012

சகுனி யூரோ கப், ஒரு ஜோக்


ஹைதராபாத்தில் மிக சில தமிழ் படங்களே நேரடியாக தமிழில் ரிலீஸ் செய்ய படும். கமல், ரஜினி, விஜய், சூர்யா, மற்றும் அஜித் படங்கள் கண்டிப்பாய் இங்கு ரிலீஸ் ஆகும். பெரும்பாலான தமிழ் படங்கள் பிரசாத்ஸ் மல்டிப்ளெக்ஸில் சனி, மற்றும் ஞாயற்று கிழமையில் காலை காட்சியாக மட்டுமே திரையிடப்படும். படம் ரொம்ப நன்றாக இருந்தால் அடுத்த வாரமும் ஓடும். நான் பார்த்த வரையில் கிட்ட தட்ட 10 வாரங்கள் (5 வாரம் டெய்லி நான்கு காட்சிகள், 5 வாரம் வீக் எண்டு ரெண்டு காட்சிகள்) ஓடி சாதனை புரிந்த படம் எந்திரன் மட்டுமே. சூர்யா படங்கள் அதிகபட்சம் 3 வாரம் வரை ஓடும். விஜய், அஜித் படங்கள் ரெண்டு வாரம் ஓடினால் அது எட்டாவது அதிசியம். ஹைதராபாத்தில் தமிழ் மக்கள் ரொம்ப ஜாஸ்தி, இருந்தாலும் ஏனோ இங்கு பெங்களூர் அளவுக்கு தமிழ் படங்கள் திரையிட படுவது இல்லை. அப்படியே ரிலீஸ் செய்தாலும் நிறைய காட்சிகளாக ஓடுவது இல்லை, வாரம் ரெண்டு காட்சிகள் தான். அந்த ரெண்டு காட்சிகளுக்கான டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்து படம் பார்ப்பது என்பது இங்கு தீபாவளிக்கு தட்கல் டிக்கெட் புக் செய்வதை போன்ற அட்வென்ச்சர் அனுபவம். 90% முயற்சி தோல்வியிலே முடியும். சில நேரங்களில் வெற்றி பெறலாம். அப்படி பட்ட முயற்சியில் எனக்கு இந்த வாரம் வெற்றி (டிக்கெட்) கிடைத்தது. அப்படி டிக்கெட் கிடைத்த படம் தான் "சகுனி".
அதுவும் இல்லாமல் கார்த்திக்கு சூர்யாவை போலவே ஆந்திராவில் நல்ல மார்க்கெட் உள்ளது, அவரது முதல் டப்பிங் படம் "ஆயிரத்தில் ஒருவன்", இந்த ஊர் மக்களுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. பிறகு "பையா" பக்கா மசாலா படம், இங்கும் நன்றாக ஓடியது, "நான் மகான் அல்ல" கூட இங்கு டப்பிங் செய்ய பட்டு சுமாராக ஓடியது. பருத்திவீரன் கூட "மல்லிகாடு" என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. ஆந்திர மக்களுக்கு ஹீரோவோ அல்லது ஹீரோயின் சாவது போல் படம் எடுத்தால் கொலை வெறி கோபம் வந்து விடும், படம் ஊத்தி கொள்ளும்... அதனாலே நம்ப ஊரில் ஹீரோ செத்த "ரமணா" இங்கு "தாகூர்" ஆக மாறி வரும் போது ஹீரோ ஜெயிலில் இருந்தது ரிலீஸ் செய்ய படுவது போல் படத்தை முடித்து இருப்பார்கள்.... நம்ம ஊர் "காக்க காக்க" இந்த ஊர் "கர்ஷனா" வாக மாறும் போது அசின் கதாபாத்திரம் கடைசியில் சாகாது. அதனாலே இங்கு பருத்திவீரன் ஊத்தி கொண்டது. இவர்களுக்கு பிடித்தது மாஸ் படங்கள் தான். ஹீரோ சும்மா தொடையை தட்டி பஞ்ச் பேச வேண்டும், ஹீரோயின் தொடையை தட்டி டூயட் பட வேண்டும் என்பது இங்கு எழுத படாத விதி.
கார்த்திக்கு ஆந்திராவில் மார்க்கெட் இருக்கு என்பதாலே சுத்தமாய் லாஜிக்கே இல்லாமல் இந்த ஊர் ஸ்டைலில் படம் எடுக்க வேண்டும்மா என்ன ???? சகுனி ஆந்திரா மக்களை குறி வைத்து எடுக்க பட்ட படம் போல் தான் எனக்கு தெரிகிறது. ஆனால் கொடுமை என்னவென்றால் "சகுனி" இந்த ஊர் மக்களுக்கும் சுத்தமாய் பிடிக்கவில்லை. ஆந்திரா மக்கள் டேஸ்டக்கே படம் சரி இல்லை என்று சொன்னால், ரசனையில் பல மடங்கு உயர்தவர்கலான தமிழ் மக்களும் மட்டும் படம் பிடித்து விடுமா என்ன ???? படம் சுர (சுறாவை விட) மொக்கை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி "ராஜபாட்டை" என்கிற உலக சினிமாவை 30 நிமிஷம் பார்த்தேன். அது தான் நான் பார்த்துததிலே மொக்கை படம் என்று எண்ணி இருந்தேன், இந்த படம் அதை முறியடித்து விட்டது.
படத்தோட கதை "தூள்" படத்தின் கதையை போன்றது. தூள் படத்தில் பாக்டரி கழிவு நீர் பிரச்சனைகாக விக்ரம் மந்திரியை பார்க்க சென்னை வருவார். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் சமாளித்து தன்னை ஏமாற்றிய மந்திரிக்கு பாடம் புகட்டுவார். தூள் படத்தில் அக்ஷ்ன், காமெடி, செண்டிமெண்ட் அனைத்தும் சரியான கலவையில் இருக்கும். படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. விக்ரம் பண்ணுவதில் லாஜிக் இடித்தாலும் நமக்கு எரிச்சல் வராது. சகுனி படமும் அதே போல் தான். ரயில்வே சப்வே கட்ட வேண்டி கார்த்திக் குடியிருக்கும் பெரிய வீட்டை முன்று மாதத்தில் இடிக்க நோட்டீஸ் குடுத்து விடுகிறார்கள் ரயில்வே ஆட்கள். தன் வீட்டை காப்பாற்ற வேண்டி சென்னை வரும் கார்த்தி தன்னை அரசாங்கமே ஏமாற்றுவதை உணர்கிறார். அதனால் தன்னை ஏமாற்றிய அரசாங்கத்தையே மாற்ற துணிந்து எடுக்கும் சகுனி தனமான முயற்சியே "சகுனி" படத்தின் கதை. ஏனோ தெரியவில்லை கார்த்திக் செய்யும் சகுனி தனமான வேலைகள் பார்க்கும் நமக்கு எரிச்சல் தான் ஏற்படுகிறது. கார்த்தி இன்னும் வளர வேண்டும் என்று நினைக்கிறன். சில நேரங்களில் அவர் காமெடி பண்ணுகிறாரா இல்லை சீரியஸ்யாக பேசுகிறாரா என்றே எனக்கு புரியவில்லை. தான் எப்படி நடித்தாலும் மக்கள் ஏற்று கொள்ளவார்கள் என்ற எண்ணமாய் கூட இருக்கலாம். கடைசி முன்று மெகா ஹிட் கூட காரணமாய் இருக்கலாம்.
படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம் தான். சும்மா சொல்ல கூடாது அவரின் கவுன்ட்டர் கமெண்ட்ஸ் வாய்ப்பே இல்லை. கார்த்திக் கதை சொல்லும் போது தியேட்டரில் ஆடியன்ஸ் குடுக்க வேண்டிய கமெண்டை எல்லாம் சந்தானமே குடுத்து நமக்கு வேலை இல்லாமல் செய்து விடுகிறார். ஆடியன்ஸ் லொள்ளு சபா பார்ப்பது போல் 20 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி பாட்டு பாட்டு என்று சத்தம் போடுவார்கள். சரியாய் ஒரு பாட்டு வரும், கொஞ்சம் நேரம் கழித்து செண்டிமெண்ட் செண்டிமெண்ட் என்று கேட்டால் உடனே செண்டிமெண்ட் சீன் வந்து விடும். கொஞ்சம் நேரம் கழித்து ஹீரோ வில்லனுக்கு சவால் விடும் காட்சி.. இன்னும் சரியாக சொன்னால் சகுனி படத்தை லொள்ளு சபாவில் கொஞ்சம் கூட மாற்றம் செய்யாமல் அப்படியே போட்டு விடலாம். அப்பேர்ப்பட்ட படம் இது.
இட்லி கடை வைத்து இருக்கும் ராதிகா சென்னை மாநகர் மேயர் ஆவது, ராமதாஸ்/ டி.யார் / சீமான் போன்ற ஒரு அரசியல் தலீவர் சி.எம் ஆவது போன்ற காட்சிகள் படத்தின் தரத்தை உங்களுக்கு பறை சாற்றுகிறது. படத்தில் ஹீரோயின் வேறு உள்ளார். பாட்டுக்கு உபயோகித்து உள்ளார் டைரக்டர். அனுஷ்கா, அண்டரியா வேறு கெஸ்ட் ரோல் செய்து உள்ளனர். பிரகாஷ்ராஜ் வழக்கம் போல் நடித்து உள்ளார். ஒரே மாதிரி கேரக்டரில் பிரகாஷ்ராஜயை பார்த்து பார்த்து எனக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது. இது மாதிரியான படங்களில் நடித்து வரும் பணத்தில் தான் அவரால் நல்ல படங்களை குடுக்க முடிகிறது. இன்னும் இதே போல் பல டப்பா படங்களில் அவரை நடிக்க வேண்டுகிறேன். அப்பொழுது தான் "டூயட் மூவீஸ்" எடுக்கும் எதார்த்த படங்கள் சாதாரண ரசிகனின் பார்வைக்கு உலக சினிமா போல் தெரியும்.

மொத்தத்தில் சகுனி: பெரிய சங்கு.
டிஸ்கி: படம் நெட்டில் ரிலீஸ் ஆகி விட்டது. டோரென்ட் கிடைக்கிறது. சொந்த ரிஸ்கில் படத்தை பாருங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
யூரோ கப் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த முறை பெரிய ஷாக்கர்ஸ் எதுவும் இல்லாத அசுவாரிசியமான தொடராக இருக்கிறது. அண்டர் டாக்ஸ் யாரும் கால் இறுதிக்கு கூட வர வில்லை என்பது பெரிய குறை. ஒரு முறை கூட கோப்பையை ஜெயக்காத இங்கிலாந்து இந்த முறை வெல்ல வேண்டும் என்பதே என் எண்ணம்.யூரோ கப் வரலாற்றில் இங்கிலாந்து ஒரே முறை தான் செமி-பைனல்ஸ் வரை சென்று உள்ளது. உலகில் தலை சிறந்த வீரர்களை தனி தனியே கொண்ட இங்கிலாந்து ஒரு அணியாக ஆடும் போது படு சொதப்பலாக அமைந்து விடும். லக் சிறிதும் இல்லாத அணி என்றே சொல்லலாம். சம பலம் பொருந்திய இத்தாலி அணியுடன் இன்று கால் இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது. பார்போம் என்ன நடக்கிறது என்று.
Update: 
லக் என்பது ஒரு துளி கூட இங்கிலாந்து அணிக்கு கிடையாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. பெனால்டி ஷூட் அவுட்டில் 2-1 என்று முன்னணி பெற்று, முட்டாள்தனமாக 2-4 என்று தோற்க உலகில் இங்கிலாந்து அணியால் மட்டுமே முடியும்.
இங்கிலாந்து சாக்கர் அணி= தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி..
Once again Heart Break for England Fans.....
புபான் (Buffon) மறுபடியும் தான் தான் உலகின் மிக சிறந்த கோல்-கீப்பர் என்பதை நிருபித்து விட்டார்.....
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

போட்டோ கமெண்ட்:
------------------------------------------------------------------------------------------------------------
மெக்சிகோ சலவைக்காரி ஜோக்:

மெக்ஸிகோவில் ஒரு சலவைக்காரி ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கம் போன ஆண்கள் அவளின் பின்பக்கமாக வந்து கசமுசா செய்து கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவளின் கழுதைக்கும் ஆசை வந்தது. எனவே கழுதையும் அவளை பின்பக்கமாக வந்து கசமுசா செய்தது. சிறிது நேரம் கழித்து சலவைக்காரி சொன்னாளாம்,

“அந்த ஏழாவது ஆள், மறுபடியும் வாங்க!”

இது தான் உண்மையான ஜோக்கா என்று தெரியவில்லை. நெட்டில் படித்தேன்


Thursday, June 07, 2012

கமல்ஹாசன்- கடவுளா?? மிருகமா???

பதிவிற்கான சில தகவல்கள் Facebook மற்றும் இந்த "IMDB" தளத்தில் இருந்தது பெற பட்டு உள்ளது.
இந்திய சினிமா வரலாற்றில் கமல்ஹாசன் என்ற ஒரு நடிகருக்கு தவிர்க்க முடியாத இடம் ஒன்று உள்ளது. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்துக்கு எடுத்து சென்றதில், சென்றுகொண்டு இருபதில் கமல் மாதிரி ஒரு கலைஞனை இது வரை நான் கண்டது இல்லை. SMS படத்துல சந்தானம் சொல்லற மாதிரி "நல்லவங்க கருத்து ரீச் ஆகும், ஆனா என்ன கொஞ்சம் லேட்டா ரீச் ஆகும்"..... கமல் படம் கண்டிப்பா மக்களை ரீச் ஆகும், என்ன ரொம்ப ரொம்ப லேட்டா KTV முலமா ரீச் ஆகும். அன்பே சிவம், குணா போன்ற படங்களை லேட் ரீச்க்கு நல்ல உதாரணமாக சொல்லாம்.

KTVயில ஓடுன நாட்கள் கூட இந்த படங்கள் தியேட்டரில் ஓடவில்லை. ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் போல நல்ல திரைப்படங்கள் தர வேண்டும் என்ற எண்ணத்தை கமல் ஒருபொழுதும் மாற்றி கொண்டதே இல்லை. சினிமாவில் சம்பாரித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்யும் சில மனிதர்களில் கமலும் ஒருவர். கமல் அளவுக்கு எந்த நடிகருக்கும் படங்கள் ப்ளாப் ஆனது கிடையாது. மாபெரும் பொருட்செலவில் கமல் எடுத்த சில படங்கள் அதள பாதாளத்தில் விழுந்து உள்ளன உ.தா: ஆளவந்தான். சில படங்கள் வெறும் ரெண்டே நாள் மட்டும் ஓடி வரலாற்று சாதனை புரிந்து உள்ளன. உ.தா: மும்பை எக்ஸ்பிரஸ்.இப்படியாக நிறைய நல்ல/கெட்ட விஷயங்கள் கமலை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.
கமல் செய்யாத சாதனைகளே கிடையாது. சில சாதனைகள் இதோ:

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார். விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.தான் சினிமாவில் சம்பாத்திதை சினிமாவிலே முதலீடு செய்யும் ஒரு சிலரில் கமலும் ஒருவர்.

• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.


இவ்வளவு சாதனைகள் நிகழ்த்திய பிறகும், இத்தனை விருதுகள் வாங்கி குவித்த பிறகும் இணையத்தில் கமல் மீது நிறைய குற்றச்சாற்று வைக்க படுவதை பார்கிறேன். அவர் பாமர ரசிகனுக்கு புரியாத மாதிரி படம் எடுக்கிறார் என்பது முதல் குற்றச்சாற்று. ஹே ராம்: புரியாத படத்திற்கு நல்ல உதாரணம். அப்புறம் ஆங்கில படங்களில் இருந்து காப்பி அடிக்கிறார் என்று. கமல் காப்பி அடிப்பதை எப்பொழுதும் மறுத்ததும் கிடையாது, அதை ஆமோதித்ததும் கிடையாது. அவர் காப்பி அடித்தது/தழுவி எடுத்த என்று சொல்லப்படுகிற சில படங்களை பற்றி கீழே குடுத்து உள்ளேன். கமல் தன் கலை பயணத்தில் ஆங்கில படங்களை தழுவி தமிழில் எடுத்த படங்கள் இதோ:

Witness (1985):
Indiana Jones புகழ் ஹாரிசன் ஃபோர்டு நடித்த இந்த படத்தில் ஒரு கொலை நடந்து விடும், அந்த கொலைக்கு சாட்சி 8 வயது சிறுவன். ஹீரோ ஃபோர்டு போலீஸ் அதிகாரி. சிறுவனின் சாட்சியை வைத்து ஃபோர்டு கொலையாளியை பிடிப்பது தான் படத்தின் கதை. படம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
இதே போன்ற ப்ளாட் கொண்ட படம் சூரசம்ஹாரம். கமல் இதில் போலீஸ் ஆக நடித்து இருப்பார். நிழல்கள் ரவியின் கொலையை நேரில் பார்த்த சாட்சி ஒரு சிறுவன். அந்த சிறுவனின் உதவியால் கமல் கொலைகாரர்களை பிடிக்கும் படி கதை அமைக்க பட்டு இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த கமல் படங்களில் இதுவும் ஒன்று. வெளியான ஆண்டு 1988.

She-Devil (1989):
குண்டாய் இருக்கும் மாணவி, வழி தவறி வேறு ஒரு பெண்ணின் பின்னல் போகும் தன் கணவனை பழிக்கு பழி வாங்குவது தான் கதை.
சதிலீலாவதி She-Devil-ளின் தழுவல் என்று சொல்லலாம். இந்த படத்தில் கமலின் ஆஸ்தான செகண்ட் ஹீரோ ரமேஷ் அரவிந்த் நடித்து இருப்பார். குண்டாய் இருக்கும் கதாநாயகி கல்பனா, வழி தவறி போகும் தன் கணவனை தன் வழிக்கு கொண்டு வருவது தான் சதிலீலாவதி. கமல் இதில் கோவை சரளாவுடன் நடித்து புரட்சி செய்து இருப்பார். படம் வெளியான ஆண்டு 1995.

The Bachelor (1999):
ஹீரோ கல்யாணமே வேண்டாம் என்று இருக்கும் ஒரு பிரம்மச்சாரி, தன் தாத்தாவின் $100 மில்லியன் சொத்தை அடைய வேண்டும் என்றால் தனது 30 ஆவது பிறந்தநாளில் மாலை 6:05 மணிக்குள் திருமணம் செய்து இருக்க வேண்டும். ஹீரோவின் 30 ஆவது பிறந்த நாள் நாளை மறுநாள். ஹீரோவிடம் இருப்பதோ ஒரே நாள், இந்த ஒரு நாளில் அவன் தன் முன்னாள் காதலியை கை பிடித்தானா என்பதை மிகவும் நகைச்சுவை உடன் சொன்ன படம் தான் The Bachelor.
இதே போன்ற கதை அமைப்பு கொண்ட படம் "பம்மல் கே. சம்பந்தம்-(2002). தன் தாத்தாவின் மேன்ஷன் கமலுக்கு வர வேண்டும் என்றால் குறிபிட்ட நேரத்துக்குள் கமல் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். இந்த கான்செப்ட்-ஐ மட்டும் எடுத்து கொண்டு கமல் குடுத்த படம் தான் பம்மல் கே. மௌலி இதை டைரக்ட் செய்து இருப்பார்.

Nine to Five (1980):
முன்று கதாநாயகிகள் சப்ஜெக்ட். அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தின் மேனேஜர் ஒரு சபலிஸ்ட். தனக்கு கீழே வேலை செய்யும் பெண் ஊழியர்கள்யிடம் தவறாக நடக்க முயற்சி செய்பவன். தனக்கு ஒத்துழைப்பு அளிக்காத பெண் ஊழியர்களை காரணமே இல்லாமல் வேலையை விட்டு நீக்கி விடுவான். முன்று கதாநாயகிகள் ஒன்று சேர்ந்து சபலிஸ்ட் மேனேஜர் குடுக்கும் செக்ஷுவல் தொல்லைகளில் இருந்து தப்பித்து தங்கள் அலுவலகத்தில் உள்ள மற்ற பெண்களையும் எப்படி காப்ற்றுகிறார்கள் என்பதை மிகவும் நகைச்சுவை உடன் சொன்ன படம் தான் Nine to Five.
இதே கதையை கொண்டு கமல் தயாரித்த படம் தான் "மகளிர் மட்டும்". ரேவதி, ஊர்வசி, மற்றும் ரோகினி கதாநாயகிகளாக நடித்த இந்த படத்தில் நாசர் சபலிஸ்ட் மேனேஜர் ஆக நடித்து இருப்பார். கமல் கெஸ்ட் ரோல் வேறு செய்து இருப்பார். படம் வெளி வந்த ஆண்டு 1994.

The Reincarnation of Peter Proud (1975):
முன் ஜென்ம ஞாபகங்களை மையபடுத்தி எடுக்க பட்ட படம் இது. ஹீரோவுக்கு அடிக்கடி கொலை ஒன்று நடப்பது போன்ற கனவு வரும். அந்த கனவுக்கு விடை தேடி போகும் போது, தனது முன்ஜென்ம கதை தெரிய வரும். சுமாரான படம்.

இதே போன்றே முன்ஜென்மம் கான்செப்ட்ஐ கொண்டு கமல் நடித்த படம் "எனக்குள் ஒருவன்". இதுவும் சுமாரான படமே.

Moon Over Parador (1988):
இந்த படம் ஆள் மாறாட்ட காமெடி படம். பரடோர் நாட்டின் சர்வாதிகாரியான ஹீரோ தீடீர் என்று இறந்து விடுகிறார். சர்வாதிகாரி போலவே தோற்றம் கொண்ட ஒரு நடிகரை அந்த நாட்டின் சர்வாதிகாரியாக நடிக்க அழைத்து வருகிறார்கள். அதனால ஏற்படும் குழப்பங்களை காமெடியாக சொன்ன படம் தான் Moon Over Parador.
இதே போன்ற கதை அமைப்பு கொண்ட படம் தான் "இந்திரன்-சந்திரன்". இரண்டு கமல். ஒரு கமல் ஊழல்வாதி மேயார். இவர் கொலை செய்ய படுகிறார், இவரின் இடத்துக்கு இவரை போலவே தோற்றம் கொண்ட வேறு ஒரு கமலை கொண்டு வருவார்கள். இந்த படம் தெலுங்கில் வெளி வந்து தமிழ், மற்றும் ஹிந்தியில் டப்பிங் செய்ய பட்டது. படம் வெளி வந்த ஆண்டு 1989.

The Principal (1987):
முன்கோபகார ஹீரோ ஒரு பள்ளியில் டீச்சர் ஆக பனியாற்றி கொண்டு இருப்பவர். அவரது முன்கோபம் காரணமாக அவரை வேறு ஒரு பள்ளிக்கு ப்ரின்சிபால் ஆக மாற்றல் செய்கிறார்கள். அந்த பள்ளியில் போதை மருந்து புழக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அதே பள்ளியில் யாருக்கும் அடங்காத போதைக்கு அடிமையான மாணவன் ஒருவனுக்கும் ப்ரின்சிபால் ஹீரோவுக்கும் நடக்கும் மோதல் தான் The Principal.

இதே போன்று கதை அமைப்பு கொண்ட படம் "நம்மவர்". கமல் ஒரு கல்லூரிக்கு மாற்றல் ஆகி வருவார், அதே கல்லூரியில் படிக்கும் கரண்க்கும் நடக்கும் மோதலே நம்மவர் படத்தின் கதை. கரண்க்கு இது தான் முதல் படம். படம் வெளியான ஆண்டு 1994.

Planes, Trains & Automobiles (1987):
Thanks Giving நாளை தன் குடும்பத்துடன் கொண்டாட எண்ணி நியூயார்க் நகரில் இருந்தது சிக்காகோ நகரத்திற்கு நெல் பேஜ் என்பவன் செய்யும் பயணமே இந்த படம். சில பல அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த பயணத்தில் வாய் மூடாமல் பேசும் டெல் என்னும் கேரக்டர் கூட சேர்ந்து விடும். பனிப்புயல் காரணமாக 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய அவர்களது பயணம் கிட்டதட்ட முன்று நாட்கள் மேல் சென்று விடும். பயணத்தின் முடிவில் நெல் மற்றும் டெல் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகி விடுவார்கள்.
அன்பே சிவம்: கமலின் மிக சிறந்த படங்களில் ஒன்று, இதே போன்ற கதையை கொண்டு இருக்கும். தன் கல்யாணத்திற்கு புவனேஸ்வரில் இருந்தது சென்னைக்கு பயணம் செய்யும் மாதவனின் பயணத்தில் கூட கமல் சேர்ந்து கொள்வார். புயல் காரணமாக 1 மணி நேர விமான பயணம் முன்று நாட்கள் மேல் சென்று விடும். கமல் இந்த படத்தில் பேசும் ஒவொரு வசனமும் அற்புதமாய் இருக்கும். கம்யூனிஸ்ட்வாதியான கமலின் நடிப்பு இந்த படத்தில் அவரை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றது.

What About Bob? (1991):
அனைத்திற்கும் பயப்படும், பல போபியாவால் அவதி படும் பாப் (Bob) மன நோய் மருத்துவர் லியோ மார்வின் இடையே நடைபெறும் காமெடி கலாட்டா தான் What About Bob? மருத்துவர் லியோ தன் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க மலை பிரதேசம் செல்கிறார். அங்கு மருத்துவரை தேடி வரும் பாப் அவருக்கு பல இடைஞ்சல் ஏற்படுத்துகிறான். லியோவின் குடும்பத்திற்க்கு பாப்யை மிகவும் பிடித்து போய் விடுகிறது.லியோவிற்கு பாப்யை சுத்தமாக பிடிக்க வில்லை. இதன் இடையே லியோவின் தங்கை லில்லிக்கும் பாப்க்கும் காதல் ஏற்படுகிறது. காதலை பிரிக்க லியோ செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிய இறுதியில் பாப் & லில்லி திருமணம் இனிதே நடைபெறுகிறது.
இதே கதையை கொண்டு கமல் நடிப்பில் வெளி வந்த படம் "தெனாலி". மன நோய் மருத்துவராக ஜெயராம் நடித்து இருப்பார். ஜெயராமின் தங்கையாக ஜோதிகா. கமல் செய்யும் சேட்டைகளால் ஜெயராம் நொந்து நுல் ஆகும் காட்சிகள் மிகவும் ரசிக்கும் படி இருக்கும்.கமல் இதில் ஈழ தமிழ் பேசி நடித்து இருப்பார். காமெடியில் கலக்கி இருப்பார் கமல். எனக்கு மிகவும் பிடித்த படம் இது.

The God Father (1972):
டான் காரீயோலியின் மரணத்திற்கு பிறகு அவரின் சாம்ராஜ்யத்தை கட்டி காக்கும் பொறுப்பு மைகேல்க்கு வந்து சேரும். மைகேல் எப்படி டான் சாம்ராஜ்யத்தை காப்பாற்றி எதிரிகளை அழிகிறான் என்பது தான் காட் பாதர் படத்தின் அடிநாதம்.

"நாயகன்" தான் காட் பாதர் படத்தின் தழுவல் என்று காட் பாதர் பார்க்கும் வரை எண்ணி இருந்தேன். காட் பாதர் பார்த்த பிறகு அந்த படத்தின் சாயல் நாயகனை விட "தேவர் மகன்" படத்தில் நிறைய இருப்பதாய் எனக்கு தோன்றியது. சிவாஜியின் நடிப்பு,  குழந்தைகள் உடன் இருக்கும் போது ஏற்படும் சிவாஜியின் மரணம், கமல்-கௌதமி நிறைவேறாத காதல், கமலின் அண்ணனின் கையில் ஆகாதனம், கமலின் நாட்டம் தன் குடும்பத்தின் மேல் இல்லாமல் இருப்பது போன்ற சில விஷயங்கள் காட் பாதர் மற்றும் தேவர் மகனுக்கும் ஆனா நெருக்கத்தை எனக்கு காட்டின.

மேலே சொன்ன எந்த படத்திலும் கமல் முல கதைக்கான கிரெடிட் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாற்று அவர் மீது வைக்க படுகிறது. இப்பொழுது நீங்கள் கேட்கலாம் கமல் கடவுளா (தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து செல்வதில்) ..??? அல்லது மிருகமா..???(அடுத்தவரின் உழைப்பை எடுத்து அதற்கு உண்டான கிரெடிட் தராமல் இருப்பது).இந்த கேள்விற்கான விடையை அவர் அவர் மனசாட்சியின் பதிலுக்கே விட்டு விடுகிறேன்.

என்னை பொறுத்த வரை கமல் கடவுள் தான். மேலே சொன்ன படங்களை வைத்து கமலின் அர்ப்பணிப்பை கேள்வி கேட்பது பெரிய முட்டாள்தனம் என்றே நான் கருதுவேன். ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதுமையை புகுத்தி சராசரி ரசிகனின் ரசனையை சிறிதாவது உயர்த்த கமல் செய்யும்/செய்து கொண்டு இருக்கும்/செய்ய போகும் பணி மகத்தானது. கமல் நடித்த அணைத்து படங்களிலும் அவரது 100% உழைப்பை காண முடியும். தன் உயிர் இருக்கும் வரை தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அயராது பாடு படும் கமல் "IS A GENIUS".