Saturday, May 26, 2012

City of God-(2002)-கேங்ஸ் ஆப் பிரேசில் -15+


ஒரு நாட்டின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள ரெண்டு வழிகள் உள்ளன, ஒன்று நீங்கள் அந்த நாட்டிற்கு பயணம் செய்து அந்த நாட்டின் கலாச்சாரத்தை, வாழ்க்கைமுறையை அறிந்து கொள்ளலாம், அல்லது நீங்கள் அந்த நாட்டின் திரைப்படங்களை பார்க்கலாம் - யாரோ சொன்னது !!!!!
     
திரைபடங்கள் நமக்கு என்ன வாழ்க்கைமுறையை கற்று தர போகின்றது என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் பார்க்க வேண்டிய படம் "City of God-(2002)" a.k.a: Cidade de Deus. உங்கள் சந்தேகம் போயே போய் விடும். பிரேசில் என்றால் நமக்கு உடனே ஞாபகம் வருவது மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த புட் பால் விளையாட்டு வீரர்கள், சம்பா நடனம் மற்றும் பெரிய ஜீசஸ் சிலை தான். அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைமுறையை நாம் அறிந்திருக்க வாய்ப்பு ரொம்பவே குறைவு. இந்த படம் முலமாக நீங்கள் பிரேசில் நாட்டின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கைமுறையை அறிந்து கொள்ள முடியும்.எனக்கு பிரேசில் என்றால் இனி மேல் இந்த படமும் ஞாபகம் வரும்.
City of God பிரேசில் நாட்டின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோ அருகில் உள்ள ஒரு சேரி பகுதி. அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் தொகுப்பே இப்படம். அந்த சேரியில் நிறைந்து இருப்பது வன்முறை மற்றும் அதீத வன்முறை மட்டுமே. அது மட்டும் அல்லாது போதை மருந்து கும்பல், அவர்கள் செய்யும் கொலை, கொள்ளை என்று அந்த சேரியே வாழ தகுதியற்ற இடமாக மாறி கொண்டு வருகிறது. இந்த மாதிரி அசாதாரணமான சூழ்நிலையில் அந்த சேரியில் பின்புலத்தில் இருந்து வந்து, சிறந்த போட்டோக்ராப்பர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் ராக்கெட் (Rocket) என்ற இளைஞன் தனக்கும் City of God-க்கு இருக்கும் பந்தத்தை நமக்கு விவரிக்கும் கதையே இந்த படம். சும்மா சொல்ல கூடாது, இந்த படத்துல யாரும் நடிச்ச மாதிரி எனக்கு தெரியவில்லை, எல்லாம் அந்த அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பார்கள்
படத்தில் முதல் காட்சியில் City of God நகரின் மைய பகுதியில் ஒரு தாதா கேங், தங்கள் மதிய உணவிற்கு சிக்கன் சமைத்து கொண்டு இருப்பார்கள். அங்கு நிற்கும் ஒரு கோழி மரண பயத்துடன் மற்ற கோழிகள் சிக்கன் ஆவதை பார்த்து கொண்டு இருக்கும். பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று, தன் கட்டை தானே அவிழ்த்து கொண்டு தப்பித்து ஓடும். நம்ப ஊருல ஹீரோயின் கோழி தப்பிச்சி போச்சுனா அதை பிடிச்சு தர நம்ப ஹீரோ இருப்பாரு. கோழி பிடிக்கிற சாக்குல அவரு ஹீரோயின பிடிப்பாரு !! காதல் வரும், இது சராசரி சினிமா.. ஆனா நம்ப பார்கிறது உலக சினிமா. இங்க தப்பிச்ச கோழிய பிடிக்க அந்த தாதா கும்பலின் மொத்த பேரும் துப்பாக்கிய தூக்கிகிட்டு ஓடுவாங்க. சும்மா கிடையாதுங்க சுட்டுகிட்டே ஓடுவாங்க. எல்லாம் பத்து வயசுல இருந்து இருபது வயசுக்குள்ள தான் அந்த தாதா கேங் ஆளுங்க இருப்பாங்க. ஓடுற கோழி படத்தோட கதைசொல்லி ராக்கெட் பாகத்துல வந்து நிக்கும். அந்த கும்பலின் தலைவன் பேரு லில்' ஜே (Lil' Ze), வெறும் இருபது வயசு தான் இருக்கும். ஜே மற்றும் ராக்கெட் சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். ஜே ராக்கெட்கிட்ட அந்த கோழிய பிடிக்க சொல்லுவாரு. ராக்கெட் கோழி பிடிக்க ரெடி ஆவான். கரெக்டா அந்த நேரம் பார்த்து மொத்த போலீஸ் குரூப் தாதா லில்' ஜே கும்பலை உயிரோடு அல்லது பிணமாக பிடிக்க அன்புச்செல்வன் IPS மாதிரி விறப்பா வந்து சேருவாங்க. இந்த பக்கம் போலீஸ் படை, அந்த பக்கம் லில்' ஜே படை, நடுவுல ராக்கெட் & கோழி. இங்க இருந்து பிளாஷ்பேக்....... ராக்கெட் தன்னோட கடந்த காலத்தை பற்றியும் லில்' ஜேவை பற்றியும் மற்றும் அந்த சேரியில் வாழ்ந்த அனைவரை பற்றியும் நமக்கு கதை சொல்லுவார்.
ROCKET
கதை முதலில் 60's பயணம் செய்யும். இங்கு நாம் City of God-யின் ஆரம்ப நாட்களை பார்போம். ராக்கெட் மற்றும் லில்' ஜே சிறுவனாக இருப்பார்கள். லில்' ஜேவின் மற்றும் ஒரு நண்பனின் பெயர் பென்னி(Benny). அங்கு டெண்டர் ட்ரையோ (Tender Trio) என்ற முன்று பேர் கொண்ட கேங் சிறு, சிறு கொள்ளைகள் செய்து கொண்டு இருப்பார்கள். டெண்டர் ட்ரையோ கேங்கில் எப்படியாவது தங்களையும் சேர்த்து கொள்ள சிறுவர்கள் லில்' ஜே & பென்னி அந்த முன்று பேரை கெஞ்சி கொண்டு இருப்பார்கள். இப்படியாக 60's கதை பயணம் செய்யும். கதை முடிவில் ட்ரையோ கேங் மெம்பர்ஸ் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள்.
அடுத்து கதை 70's-க்கு நகரும். அங்கு ராக்கெட் பள்ளிக்கு செல்லும் வாலிபனாக வளர்ந்து இருப்பான். லில்' ஜே மற்றும் பென்னி அந்த நகரத்தில் பெரிய போதை மருந்து டீல்ர்ஸ் ஆக வளர்ந்து இருப்பார்கள். தங்கள் பாதையில் யார் வந்தாலும் போட்டு தள்ளிட்டு போய் கொண்டே இருப்பார்கள். அவர்களின் பிரதான எதிரி கேங் கேரட்(Carrot). பென்னி அனைவரையும் அனுசரித்து செல்லும் பொறுமைசாலி, லில்' ஜே அவனுக்கு நேர் எதிர். பொறுமை என்பதே கிடையாது. அனைவரிடமும் சண்டை போடும் கேரக்டர். ஒரு டான்ஸ் பார்ட்டியில் கேரடின் ஆள் தவறுதலாக லில்' ஜேவை சுடுவதற்கு பதில் பென்னியை சுட்டு கொன்று விடுவான். அதை பார்த்த லில்' ஜே வெறி கொண்டு, தன் நண்பனை கொன்ற கேரட் கேங்யை பழி வாங்க புறப்பட்டு விடுவான். இங்கு இருந்து கேங் வார் ஆரம்பிக்கும். இங்கு இருந்து 80's ஆரம்பிக்கும்.
இந்த கேங் வாரின் இறுதி தான் நாம் பார்த்த முதல் காட்சி.......

Children Shooting
படத்தில் சுவாரிசியங்கள் சில:

  • படம் நான்-லீனியர் பாணியில் சொல்ல பட்டு இருக்கும். ஆனால் நமக்கு குழப்பம் இல்லாமல் திரைக்கதை புரியும்.
  • படத்தில் ராக்கெட் கதை சொல்லும் விதம் புதுமையாக இருக்கும். ஒரு கதை அல்லது சம்பவம் என்று ராக்கெட் விவரிக்க ஆரம்பித்தால், கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று நம்மால் யூகிக்கவே முடியாது. எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று விடும் கதை. ஒரு கதாபாத்திரத்தை பற்றி சொல்லும் போது அந்த கதாபாத்திரத்தில் வரலாறு, புவியல், மற்றும் பூகோளம் போன்ற அணைத்து விசயங்களும் புட்டு புட்டு வைக்க படும். உ.தா: போதை மருந்து விற்க படும் ஒரு அப்பார்ட்மெண்ட் அறையை காட்டி, போன தலைமுறையில் அந்த அறையில் யார் முதலில் தங்கி இருந்தார்கள், அவர்களிடம் இருந்து யார் யாருக்கு அந்த அறை கை மாறியது, தற்பொழுது அந்த அறையில் யார் உள்ளார்கள் என்று அணைத்து விசயங்களும் நமக்கு விளக்க படும்.
  • படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் மிகவும் தந்துருபமாக படமாக்க பட்டு இருக்கும். ஒரு காட்சிகளில் 10 வயது சிறுவன் ஒருவனிடம் லில்' ஜே துப்பாக்கியை குடுத்து வேறு ஒரு 8 வயது சிறுவனை கொல்ல சொல்லும் காட்சி நம்மை உலுக்கி விடும்..8 வயது சிறுவனின் கண்ணில் தெரியும் உயிர் பயம் மற்றும் 10 வயது சிறுவன் தான் கொலை செய்ய வேண்டுமா என்று கண்ணில் மிரட்சியும் பயமும் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் காட்சி....யப்பா....கிரேட் ஆக்டிங் !!!
  • இறுதி காட்சி தான் படத்தின் அடிநாதமே. சினிமா தனம் இல்லாமல் மிகவும் எதார்த்தமான காட்சி அது.
  • இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட படம். படம் இறுதியில் நிஜ வாழ்வில் வாழ்ந்த கதாபாத்திரங்களின் படங்களை காட்டுவார்கள்.
இந்த படம் கட்டாயம் தவற விட கூடாத படம். கொஞ்சம் வன்முறை ஜாஸ்தி.அதீத வன்முறை காரணமாக இப்படம் 15+ வயதினற்கு மட்டுமே உகந்தது !!!!!!
My Rating: 9.8/10 .... Must watch..!!!!

டோர்ரென்ட் லிங்க்:
http://thepiratebay.se/torrent/7161060/City.Of.God.2002.720p.Bluray.x264.anoXmous

Monday, April 30, 2012

The Great Dictator-(1940)- சாப்ளின் அட்வைஸ் ஹிட்லர்க்கு

ஹிட்லர் காலத்தில் அந்த சார்லி சாப்ளின் தில்”.. இந்த வரிகள் விக்ரம் நடித்த தில் படத்தில் வரும் ஒரு பாடல் வரிகள். இந்த பாடல் வரிகளின் அர்த்தம் “The Great Dictator” என்ற படத்தை பார்க்கும் வரை எனக்கு புரியவில்லை. நமக்கு ஒரு நாட்டின் தலைவரோட (உ.த: கலைஞர், ஜெ , சோனியா) கொள்கை பிடிகலைனா என்ன பண்ணுவோம் ?? அவருக்கு நீ பண்ணுறது சரி இல்லைன்னு எப்படி சொல்லுவோம் ?? நம்மலோட எதிர்ப்பை எப்படி காட்டுவோம் ?? இப்ப இருக்குற இணைய வசதி முலம்மா நம்ப கருத்தை எப்படி வேண்டுமானாலும் வெளிபடுத்தலாம், எதிர்ப்பை வெளிபடுத்த நிறைய வழிகள் இருக்கு. போடியில உக்காந்துகிட்டு வைட் ஹவுஸ் ஒபாமாவுக்கு ஒரு பகிரங்க கடிதம் நம்ப ப்ளாக்ல எழுதலாம். அவருக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ அத பத்தி எல்லாம் நாம் கவலை பட வேண்டியது இல்லை. கடிதம் பிடிக்கலையா திருக்குறள் மாதிரி நாளே வரியில நச்சுனு ஒரு தலைவரோட கொள்கைய கிண்டல் பண்ணி ட்விட்டர்ல ட்வீட் போடலாம். இது எல்லாம் இப்ப நம்பல மாதிரி காமன் மேன் பண்ணுறது. ஆனா ஒரு சினிமா படைப்பாளி ஒரு தலைவர் பண்ணுற செயல் பிடிகலைனா தன்னோட கருத்தை சினிமா முலமா சொல்லுவான், ஆனா அப்படி கருத்து சொல்லற படம் எல்லாம் டாக்குமெண்டரி லிஸ்ட்ல சேந்துரும். அப்படி ஒரு கிரேட் லீடர்க்கு!!!! தி கிரேட் சார்லி சாப்ளின் அட்வைஸ் செஞ்சு எடுத்த தி கிரேட் திரைக்காவியம் தான் “The Great Dictator”. அந்த தலைவர்!!!! வேறு யாரும் இல்லை, சார்லி சாப்ளின் மாதிரியே மீசை வச்ச அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler).
      
            ஹிட்லரை பத்தி தெரியாதவங்க இருக்க முடியாது. தெரியாதவங்களுக்கு ஒரு சின்ன அறிமுகம். ஹிட்லர் ஜெர்மன் நாட்டை ஆட்சி செய்த ஒரு அரசியல்வாதி, சாதாரண ஆட்சியாளர் கிடையாது, மிக பயங்கரமான சர்வாதிகாரி. அவர் ஆட்சி செய்த காலகட்டத்தில் அவரின் யூத எதிர்ப்பு கொள்கை காரணமாக கிட்டதட்ட 11 மில்லியன் (1.1 கோடி) பேரை கொன்ற ஒரு கொடூரன். உலகையே தன் காலடியில் கொண்டு வர துடித்த கிராகதன். இரண்டாம் உலக போர் நடைபெற முக்கிய காரணமாக இருந்த ஒரு லீடர். இப்படி பட்ட ஒரு சர்வாதிகாரியை மிக பயங்கரமாக பகடி செய்து, “அடேய் நீ பண்ணுறது தப்பு, உன்னோட கொள்கைகள் ரொம்ப முட்டாள்தனமானதுன்னு” செவுட்டில் அறைந்தாற்போல் சாப்ளின் சொன்ன படம் The Great Dictator”.
      
            இந்த படத்தில் சாப்ளின் டபுள் அக்டு பண்ணி இருப்பர். ஒரு சாப்ளின் மூடி திருத்தும் நாவிதர், இவர் ஒரு யூதர். மற்றும் ஒரு சாப்ளின் டோமானியா (ஜெர்மனி) என்ற நாட்டை ஆண்டு வரும் சர்வாதிகாரி. பெயர் ஹெயக்கல் (ஹிட்லர்). இவருக்கு யூதர்களை கண்டால சுத்தமாக பிடிக்காது. தன் நாட்டில் யூதர்கள் யாரும் இருக்க கூடாது என்று, யூதர்களை பிடித்து சிறையில் அடைக்க தன் படையை ஏவி விட்டு இருப்பார். பார்பர் (நாவிதர்) சாப்ளின் ஹெயக்கல் படையிடம் இருந்து தப்பித்து உயிர் பிழைக்க ஓடி கொண்டு இருப்பார். இடையே ஹெயக்கல் பக்கத்து நாடான பாக்டீரியாவின் (இத்தாலி) சர்வாதிகாரி நபோலினியுடன் (முசோலினி) இனைந்து அடுத்த உலக போருக்கு ஆயுத்தம் ஆகி கொண்டு இருப்பார். பார்பர் சாப்ளின் ஹெயக்கல் படையிடம் மாட்டி சிறையில் அடைக்க பட்டு, பிறகு அங்கு இருந்து தப்பித்து ராணுவ உடையில் சுற்றி கொண்டு இருப்பார். பார்பர்ரின் முக அமைப்பு ஹெயக்கல்(ஹிட்லர்) போல் இருப்பதால், அவரை ஹெயக்கல் என்று ராணுவ தளபதி தவறாக எண்ணி, போருக்கு தயாராகி கொண்டு இருக்கும் ஹெயக்கலின் ராணுவ படை முன்பு உரையாற்ற சொல்வார். ஆனால் யாரும் எதிர் பார வண்ணம் பார்பர் யூதர்களுக்கு ஆதரவாக, உலக போருக்கு எதிராக, சமாதானத்தை வலியுறுத்தி ஏழு நிமிட உருக்கமான உரை ஒன்றை அளிப்பார். அந்த உரை முடிய, படமும் முடிவடையும்.

            
             சாப்ளின்  யூதர்களுக்கு ஆதரவாக மற்றும் ஹிட்லரை பகடி செய்து  அதுவும் ஹிட்லர் வாழ்ந்த காலத்திலே பேசும் படம் எடுத்தால் அவரை நிறைய பேர் யூதர் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் சாப்ளின் உண்மையில் யூதர் கிடையாது. யூதர்களின் கஷ்டங்களை புரிய நான் யூதராய் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று ஒரு முறை சொல்லி இருக்கார். நாஜி கொள்கைகளுக்கு எதிராக மற்றும் யூதர்களின் கஷ்டங்களை திரையில் பதிவு செய்த, செய்துகொண்டு இருக்கும் மற்றும் ஒரு மிக சிறந்த படைப்பாளி ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். நாலு படத்துக்கு ஒரு படம் இவர் கண்டிப்பா தன்னோட நாஜி எதிர்ப்பு கொள்கைய மையமா வச்சு ஒரு படத்தை குடுத்து விடுவார்.

படத்தின் சுவாரசியங்கள் சில:
  • சாப்ளின் எடுத்த முதல் பேசும் படம். படபிடிப்பு முழுவதும் அமெரிக்காவில் நடத்த பட்டது. இந்த படம் வெளிவந்த போது அமெரிக்கா உலக போரில் ஈடுபடவில்லை. இருந்தாலும் ஹிட்லரின் கொள்கைகள் தவறானவை என்று பொட்டில் அடித்தாற்போல் சொல்ல வேண்டும் என்று சாப்ளின் இப்படத்தை எடுத்தார்.
  • இந்த படம் தோல்வி அடைந்த இருந்தால், சாப்ளின் நடு தெருவுக்கு வந்து இருப்பார், ஆனால் அது போல் எல்லாம் நடக்காமல் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
  • ஹெயக்கல் (ஹிட்லர்) உலகமே பயந்த சர்வாதிகாரி, ஆனால் அவன் தனியாக இருக்கும் போது, மற்றும் அவன் அலுவலகத்தில் இருக்கும் போது செய்யும் சேட்டைகள், கிறுக்குத்தனங்களை செமையாய் கிண்டல் செய்து இருப்பார் சாப்ளின். ஹெயக்கல் ஒரு காட்சியில் தன் சிலை செய்யும் சிற்பிக்கு ரெண்டே செகண்ட் மட்டும் போஸ் குடுத்து விட்டு, அந்த எடத்தை விட்டு நகர்ந்து விடுவார். சிற்பி சிலை செய்ய ஆரம்பிதற்குகள் ஹெயக்கல் அங்கிருந்து போய் விடுவார். இப்படியாக பல காட்சிகள் வைத்து ஹிட்லரை பகடி செய்து இருப்பார் சாப்ளின்.
  • இப்படம் ஐந்து ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்க பட்டது. ஆனால் எந்த விருதும் கிடைக்கவில்லை.
இந்த படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய உலக சினிமா........

Tuesday, April 10, 2012

Call of Juarez-(PC/Xbox360) -சபிக்க பட்ட புதையலை தேடி ஒரு பயணம்



இப்போ வரைக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச சினிமாவை பத்தி எழுதிகிட்டு இருந்தா நான், இப்போ அதுல இருந்து கொஞ்சம் விலகி எனக்கு பிடிச்ச வேற ஒரு விசயத்தை பத்தி எழுதலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன்.. முன்னாடி பதிவுல சொன்ன மாதிரி நான் ரசித்த சில வெஸ்டர்ன் வீடியோ கேம்ஸ்-ஐ உங்களுக்கு அறிமுக படுத்தற பதிவு தான் இது. இந்த பதிவுல நாம பார்க்க போற கேம் “Call of Juarez”. இந்த கேம்-ல் மொத்தம் முனு சீரீஸ் வந்துள்ளது. நாம்ப இப்போ பார்க்க போறது முத பாகம் Call of Juarez – (2007) & ரெண்டாம் பாகம் Call of Juarez: Bound in Blood - (2009)  . இந்த கேம் PC & Xbox360 ரெண்டு வெர்ஷன்ளையும் வந்துள்ளது. நான் இதோட Xbox-360 வெர்ஷன் தான் விளையாடி இருக்கேன். சரி Call of Juarez கேம் பத்தி பார்க்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் வேற சில அடிப்படையான வீடியோ கேம்ஸ் பத்தி பார்போம்.
           90’s கால கட்டத்துல நிண்டெண்டோ (Nintendo) கேம்ஸ் மிக பிரபலமாக இருந்தது. 90-களின் வீடியோ கேம்ஸ் பிரியர்களுக்கு கண்டிப்பாய் "சூப்பர் மரியோ" (Super Mario) பற்றி தெரிந்து இருக்கும். அனேக கேம்ஸ் பிரியர்கர்கள் தங்களோட கேம்ஸ் கேரியர்யை சூப்பர் மரியோ-ல இருந்து தான் ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு உறுதியா சொல்லலாம். கேம் கான்செப்ட் ரொம்ப சிம்பிள், பிச் (Peach) என்ற காளான் ராஜியத்தின் இளவரசியை ப்ரௌசர் (Bowser) என்ற டிராகன் கடத்தி சென்று விடும். காளான் ராஜியத்தில் மொத்தம் எட்டு உலகங்கள், ஒவொரு உலகமும் நாலு லெவல் கொண்டது. மரியோ என்ற கதாபாத்திரத்தை ஏற்று விளையாடும் நாம் பிச் இளவரசியை தேடி ஒவொரு உலகமாய் பயணம் செய்ய வேண்டும். அணைத்து உலகத்தின் கடைசி லெவலில் வில்லன் ப்ரௌசர் நமக்காக காத்து கொண்டு இருக்கும், அதை கடந்து நாம் இளவரசி பிச்யை காப்பாற்ற வேண்டும். ஒவொரு உலகத்திலும் ப்ரௌசர் நமக்கு பல இடைஞ்சல்களை குடுக்கும், அவற்றை எல்லாம் முறியடித்து எட்டாவது உலகத்தில் கடைசி லெவலில் இருக்கும் பிச்யை மரியோ காப்பாற்றுவது தான் கேம் கான்செப்ட். சின்ன வயசுல மரியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கேம். கேம் விளையாட ஆரம்பிச்சு கரெக்டா முனு மாசம் கழிச்சு, என்னோட எட்டாவது முழு பரீட்சை லீவுன்னு நினைக்குறேன், ஒரு மதியான நேரத்துல பிச்யை சென்று அடைதேன். உடனே ஓடி போய் என்னோட பக்கத்து வீட்டு நண்பர்களை எல்லாம்  குப்பிட்டு வந்து காமிச்சது எல்லாம் ஆட்டோகிராப் நினைவுகள். இப்ப அந்த பழைய மரியோ கேம்ஸ் பார்த்தா ஏதோ பழைய எம்ஜியார் சிவாஜி படம் பார்க்கிற மாதரி இருக்கு.

           சின்ன வயசுல ஏற்பட்ட கேம்ஸ் மீதான பிடிப்பு இன்னும் எனக்கு கொஞ்சம் கூட குறையவேயில்லை. சம்பாரிக்க ஆரம்பிச்ச அப்புறம் நான் எனக்குன்னு வாங்குன முத பொருள் Xbox-360. வாங்கி நாலு வருஷம் ஆச்சு, கிட்டதட்ட 40 கேம்ஸ் என் கிட்ட இருக்கு. அதுல எனக்கு ரொம்பவே பிடிச்ச கேம் “Call of Juarez” சீரீஸ். இது வெஸ்டர்ன் டைப் பிரஸ்ட் பெர்சன் ஷூட்டர் (FPS) கேம். சில ஷூட்டர் கேம்ஸ்ல கன் (Gun) தூக்கிட்டு எதிர்ல யாரு வந்தாலும் சுட்டு தள்ளிட்டு ஓடிட்டே இருக்க வேண்டியது இருக்கும். ஏன் சுடுறோம், எதுக்கு சுடுறோம் ஒன்னுமே நமக்கு புரியாது. ஆனா சில கேம்ஸ் ரொம்ப சுவாரிசியமான கதைய அடிப்படையாக கொண்டு இருக்கும். நமக்கு குடுக்க பட்ட மிஷனை நாம் ரொம்ப யோசிச்சு, பிளான் பண்ணி முடிக்க வேண்டியதாக இருக்கும்.. ஒரு நல்ல கேம் நம்மை அந்த கேம் கதாபாத்திரமாக மாற்றி விட வேண்டும். சரி இப்போ “Call of Juarez” எப்படி பட்ட கேம் அப்படிங்கிறதை இப்போ பார்போம்.

           எப்படி ஒரு நல்ல படத்துக்கு அதோட முத சீன் முக்கியமோ, அதே போல ஒரு கேம் வெற்றி அடைய அந்த முத மிஷன் ரொம்ப முக்கியம். இந்த கேம்ல முத மிஷன் படு அமர்க்களமாய் இருக்கும். ஒரு கோட்டையில் கேம் ஆரம்பிக்கும். மிஷியன் கன் கொண்டு அந்த கோட்டைய பாதுகாத்து கொண்டு இருக்கும் வீரர்களை நாம் சுட வேண்டும். நிறுத்தாமல் சுட வேண்டும், அந்த உக்கிரமான சண்டை முடியும் தருவாயில் டக் என்று பிளாஷ்பேக். நாம் யார் ? ஏன் அந்த கோட்டைக்கு வந்தோம் ? எதற்காக அந்த சண்டை ? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான் 15 மிஷன்.

           Juarez என்ற சுடுகாட்டில் ஒளித்து வைக்க பட்டு உள்ள தங்க புதையலை தேடி எடுப்பது தான் மெயின் கதை.கேமில் மொத்தம் ரெண்டு முக்கியமான கதாபாத்திரங்கள். பில்லி (Billy) & ரே (Ray). நாம் இரண்டு கதாபாத்திரங்களின் வாயிலாக கேம் விளையட வேண்டும். ஒரு மிஷன்னில்
நாம் பில்லியாக விளையாடினால், அடுத்த மிஷன்னில் ரேவாக விளையாட வேண்டும். இருவரின் குணாதிசியங்கள் இதோ.
ரே: துப்பாக்கி சண்டை போடுவதில் கில்லாடி. நல்ல பலசாலி. டுயல் சண்டை போடுவதில் சூரன்.
பில்லி: இவன் அம்பு ஏய்வதில் பெரிய ஆள். ரே அளவு பலசாலி கிடையாது. மறைந்து அல்லது பதுங்கி தாக்குவதில் வல்லவன்.
ரேவின் தம்பி மகன் தான் பில்லி. ஒரு எதிர்பாரா சம்பவத்தால் ரேவின் தம்பி தாமஸ் (Thomas)கொல்ல பட்டு விடுவான். தன் தம்பியை கொன்றது பில்லி தான் என்று ரே தவறாக எண்ணி விடுவான். அந்த கொலைக்கு காரணம் தான் இல்லை என்று பில்லி எடுத்து கூறுவதை கேட்காமல் ரே பில்லியை துரத்த ஆரம்பித்து விடுவான். பில்லி ரேயிடம் இருந்து தப்பித்து புதையல் இருக்கும் Juarez நகரத்தை நோக்கி தன் பயணத்தை தொடர்வான். ரே பில்லியை தொடர்ந்து Juarez நகரத்தை வந்து அடைவான். தாமஸ்-ஐ கொன்ற உண்மையான கொலையாளி யார் ?? Juarez நகரத்தில் உண்மையிலே புதையல் இருந்ததா ?? முதல் காட்சியில் இருந்த அந்த கோட்டை யாருடயது ?? போன்ற பல சுவாரிசியமான கேள்விகளுக்கான விடை “Call of Juarez” PC/Xbox-360 கேமில் சொல்ல பட்டு இருக்கும்.
   
          எப்பவுமே ஒரு படம் பெரும் வெற்றியடைந்தால் அதன் ரெண்டாம் பாகம் வெளி வரும். இந்த செண்டிமெண்ட்க்கு கேம்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன. Call of Juarez”- (2007) வெற்றிக்கு பிறகு “Call of Juarez: Bound in Blood - (2009) என்று இதன் ரெண்டாம் பாகம் வெளி வந்தது. முதல் பாகத்தை விட ரெண்டாம் பாகத்தில் கிராபிக்ஸ் நல்ல மெருகேற்ற பட்டு இருக்கும். Call of Juarez” கேமில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சி மற்றும் ரே & தாமஸ்யின் இளமை பருவ வாழ்கை தான் “Bound in Blood”. இந்த கேமில் ரே மற்றும் தாமஸ் எப்படி Juarez நகரத்தில் இருக்கும் சபிக்கப்பட்ட புதையலை அடைந்தார்கள் என்பது தான் மெயின் ப்ளாட். ஒவொரு மிஷன் ஆரம்பிக்கும்பொழுது நாம் நமக்கு எந்த கதாபாத்திரம் வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளலாம். ஒவொரு மிஷன் முடிவில் கண்டிப்பாய் ஒரு டுயல் சண்டை இருக்கும். லெவல் ஏற ஏற சண்டை கடினம் ஆகும்.
         
          “Bound in Blood”-யின் பல காட்சிகள் The Good Bad and Ugly படத்தில் இருப்பது போன்று இருக்கும். அமெரிக்க உள்நாட்டு போர் நடைபெறும் காலகட்டத்தில் நடைபெறும் முதல் மிஷன் GBU படத்தில் வரும் உள்நாட்டு போர் காட்சி போன்றே இருக்கும். அது போக கேமில் வரும் மர வீடுகள், குதிரை சண்டை, டுயல் துப்பாக்கி சண்டை, பண்டி ஹண்டர் மற்றும் பேய் நகரம் (Ghost Town) கண்டிப்பாய் உங்களுக்கு நல்ல வெஸ்டர்ன் வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை குடுக்கும்.
  
            நீங்க வீடியோ கேம் பிரியரா இருந்ததா கண்டிப்பா இந்த கேம் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சியமா உங்களுக்கு பிடிக்கும்.

  இந்த கேமின் முன்றாவது பாகம் “Call of Juarez: The Cartel” என்ற பெயரில் வெளி வந்து உள்ளது. நான் இன்னும் இந்த கேம் விளையாட வில்லை. வாய்ப்பு கிடைத்து விளையாடினால் கண்டிப்பாய் அதை பற்றி எழுதுகிறேன்.

Wednesday, March 21, 2012

எதிர்பார்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள்- 2012

ஹாலிவுட்ல எவ்வளவு பெரிய டைரக்டர் ஆக இருந்தாலும், இதுக்கு முன்னாடி எவ்வளவு பிரமாண்ட ஹிட் குடுத்து இருந்தாலும் அவங்க படம் கண்டிப்பா ஓடும்ன்னு சொல்லவே முடியாது. ஓடுதோ இல்லையோ, அத பத்தி நமக்கு கவலை கிடையாது, நமக்கு படம் பார்க்க நல்லா இருக்கனும், மொக்கையா இருக்க கூடாது, 2 மணி நேரம் நல்ல டைம் பாஸ் ஆகனும். அது தான் நமக்கு வேணும். ஆனா சில டைரக்டர்ஸ் படம் அந்த குறைந்தபட்ச உத்தரவாதத்தை கூட நிறைவேற்றாமல் போய் விடும். ஒரு நல்ல உதாரணம் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், எப்ப எந்த மாதிரியான படம் அவர் கிட்ட இருந்து வரும்னு சொல்லவே முடியாது. The Terminal என்ற அற்புத சினிமாவை எடுத்து முடிச்ச அப்புறம் அவரு எடுத்த மொக்கை படம் War of the Worlds. இப்படி தான் எப்பவுமே Expect the Unexpected-ன்னு எதிர் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தான். ஆனா என்னை பொறுத்த வரை சில பேர் எடுக்குற / எடுக்கபோற படங்கள் கண்டிப்பா சோடை போகாதுன்னு ஆணித்தரமா சொல்லுவோன். அப்படிப்பட்ட அந்த சில படங்களை இப்ப பார்போம்.நான் ரொம்ப ரொம்ப எதிர்பார்க்கிற படங்கள் ரெண்டே ரெண்டு தான். இந்த ரெண்டு படங்களும் இந்த வருஷம் (2012) ரிலீஸ் ஆக போற படங்கள்.

The Dark Knight Rises:


இந்த படத்தை எடுத்து கொண்டு இருப்பவர் கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan),இவரை பத்தி ரொம்ப சுருக்கமா சொல்லணும்னா இவர் பெரிய ஜீனியஸ், விஞ்ஞானி ஆகி இருக்க வேண்டியவர், தெரியாம சினிமா உலகத்துல வந்துட்டார், மிகவும் குழப்பமான திரைக்கதையை எடுப்பதில் வல்லவர். இது பேட்மேன் சீரீஸ்ல வர போற கடைசி படம். போன பேட்மேன் படமான The Dark Knight-ல ஜோக்கர் செஞ்ச அந்த வில்லன் கேரக்டர் மாதிரியே இந்த படத்துல நோலன் ரெண்டு வில்லன் கேரக்டர்களை அறிமுக படுத்த உள்ளார் . Bane & Cat woman. பேட்மேன் காமிக்ஸ் படிச்சவங்களுக்கு Bane பத்தி தெரிஞ்சு இருக்கும். Bane - அசுர பலம் மிக்க, பேட்மேனை விரும்பாத கெட்டவன். ஒரு தவறான ஆராச்சி முலம் அவன் உடம்பில் ஒரு வகையான நஞ்சு செலுத்த பட்டு விடும், அந்த நஞ்சின் வீரியத்தால் அவனுக்கு யானை பலம் கிடைத்து விடும். இந்த கதாபாத்திரம் ஜோக்கர் அளவுக்கு புத்திசாலி கிடையாது, ஆனா ரொம்ப பலசாலி. இந்த முறை பேட்மேன் Bane-ஐ எப்படி சமாளிக்க போறாருன்னு பார்போம்.
என்னோட கெஸ் என்னன்னா "The Man who Broke the Bat" அப்படிங்கற மிக பிரபலகாமிக் வாசகத்தை கண்டிப்பா Bane நிறைவேத்துவான்னு தோணுது. So its gonna be the end of Batman.ரொம்ப முக்கியமா நோலன் இப்படத்தை 70mm IMAX வெர்ஷனில் படமாக்கி இருக்காரு. கண்டிப்பாக ரசிகர்களுக்கு இப்படம் விஷுவல் ட்ரீட் ஆக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Skyfall:

எதிர்பார்பை எகிற செய்யும் அடுத்த படம் Skyfall, இது 007 மூவி, ஆமாங்க ஜேம்ஸ் பாண்ட் சீரீஸ்ல வர 23-வது படம் தான் Skyfall.பாண்ட் படத்துல கதை எல்லாம் பெருசா இருக்காது, வழக்கமான மசாலா கதை தான், ஆனா மேகிங் அட்டகாசமாய் இருக்கும். இதுலயும் டேனியல் கிரெய்க் (Daniel Craig) தான் பாண்ட் கதாபாத்திரத்தை பண்ணுறாரு, அப்புறம் முக்கியமா, படத்துல வில்லன் கேரக்டர் பண்ணுற ஆளு Javier Bardem, இவரு யாருனா No Country for Old Men படத்துல சைக்கோ கொலைகாரனாக மிரட்டின ஆண்டன் சிகுரு. இவருக்குகாக இந்த படத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன்.
மேல சொன்ன ரெண்டு படங்கள் தவிர இன்னும் நிறைய படங்கள் இந்த வருஷம் ரிலீஸ் ஆக போகுது. வில் ஸ்மித் (Will Smith) நடிக்கும் MIB-3, Bourne சீரீஸ்ல வர போற நாலாவது படம் The Bourne Legacy. ஸ்பைடர்மேன் சீரீஸ்ல வர போற நாலாவது படம் The Amazing Spider-Man.சோ, இந்த வருஷம் ஹாலிவுட் படங்களுக்கு பஞ்சமேயில்லைன்னு சொல்லலாம்.

Tuesday, March 13, 2012

ஆன்சைட் அனுபவங்கள் - கடைசி பாகம் -3

கடைசியா சொல்றேன் இது என்னோட சொந்த பதிவு கிடையாது. இந்த பதிவின் சொந்தக்காரர் பாலா என்பவர், அவரு அன்பே சிவம் அப்படிங்கற பேருல ஒரு வலைப்பூ எழுதிட்டு வரார். அவரின் அனுமதி பெற்று இந்த பதிவின் கடைசி பாகத்தை வெளியிடுறேன். இந்த பதிவின் முதல் பாகத்தை இங்கே பார்க்கவும், இரண்டாம் பாகத்தை பார்க்க இங்கே செல்லவும்.

எப்படியோ அடிச்சு பிடிச்சு ஆன்சைட் வந்தாச்சு, இப்ப அந்த ஆன்சைட் ஊருல நம்ப ரொம்ப காமென்-ஆ சந்திக்கிற சிக்கல்கள் என்னான்னு பார்போம்.
ஏர்போர்ட்ல நம்பல கூட்டிட்டு போக நம்ப நண்பர் யாராவது வந்திருந்தா விஷேசம், இல்லேனா குஷ்டந்தான்..திருவிழால காணாம போன திருவாத்தான் மாதிரி முழிச்சுகிட்டு நிக்க வேண்டியது தான்..அங்க எல்லாம் தெள்ளத்தெளிவா படம் போட்டு காட்டிருப்பான்.(நமக்குதான் பகல்லயே பசுமாடு தெரியாதே, இருட்டுலயா எருமை மாடு தெரியப்போகுது..) தட்டுத்தடுமாறி கேப் புடிச்சு நம்ப கலீக்கோடா ரூமுக்கோ, இல்லேனா அவரு முன்கூட்டியே ஏற்பாடு பண்ணிருக்கற ரூம்ல போயி புது நண்பர்களோட ஐக்கியமாயிர வேண்டியது தான்.
ஆன்சைட்ல வாழ அடிப்படையான விஷயங்கள்:
** உணவு, உடை, உறைவிடம் அப்பறம் பிராட்பேண்ட் கனெக்ஷனோட ஒரு லேப்டாப்.
நம்ம டிவி, ரேடியோ, மியூசிக் பிளேயர், விளையாட்டு மைதானம், சினிமா தியேட்டர், புத்தகம், நியூஸ் பேப்பர் எல்லாமே அதுதான். சாயங்காலம் வந்தோடனே சாணி போட்ட மாதிரி அப்படியே சத் துனு உக்காந்திர வேண்டியது தான்.
அப்புறம் சராசரி தமிழனை உறுத்தற ரெண்டு விஷயங்கள்:
1. டாய்லெட்டில் டிஸ்யூ பேப்பர்....
நம்மூர்ல பேப்பர்னா சரஸ்வதிங்கறான், கால்ல பட்டாவே.. பத்துதடவ தொட்டு கும்புடுவான்.ஆனா அங்க பேப்பரை வேற எதுக்கோ யூஸ் பண்ணுவான் வெள்ளைகாரன்.
2. காலநிலை மாற்றம்
வெயில் காலத்துல வெளிச்சமும், குளிர் காலத்துல இருட்டும் ஜாஸ்த்தியா இருக்கும். நீங்க சாயங்காலம் எவளோ லேட்டா வீட்டுக்கு வந்தாலும் நேரத்துலையே வந்த மாதிரி ப்ரெஷ்சாவே இருக்கும். ஏன்னா வெயில் காலத்துல பத்துமணிக்கு தான் கொஞ்சம் லைட்டா இருட்டும்.நைட் கொஞ்சம் லேட்டா பசங்களோட பேசிட்டு இருந்தம்னா திடீர்னு விடிஞ்சிரும்.குளிர் காலத்துல இதுக்கு நேர்மாறு, 3 மணிக்கெல்லாம் இருட்டீரும். எப்பவுமே நைட் ஷிப்ட்ல இருக்கற பீலிங் இருக்கும்.கன்னிப்பொண்ணு மனசு மாதிரியே வானிலை இருக்கும், பத்து நிமிஷம் அப்படியே இருட்டு கட்டி மழை பேயும், அப்புறம் பாத்தா இன்னிக்கா அப்படி பாத்தங்கறா மாதிரி சுள்ளுன்னு வெயிலடிக்கும்.
வேல ரீதியா பாத்தா ஒன்னும் பெருசா வித்யாசம் இருக்காது..அதே வேலை, ஆனா வெள்ளைக்கார மொதலாளி. நமக்கு கிளையன்ட் நல்ல படியா அமையனும் அது ரொம்ப முக்கியம், அத விட முக்கியம் Off-shore team (அந்த எட்டு பேரு) சரியா வாய்க்கனும் இல்லென சிக்கி சீரழிய வேண்டியதுதான். விடிய விடிய உக்காந்து ட்ரான்ஸ்சிசன் குடுத்திட்டு காலைல திரும்ப வந்து கேட்டா “ராமனுக்கு பொண்டாட்டி ரம்பா”ன்னு சொல்லுவான் அகராதி புடிச்ச பயபுள்ள.
நம்ப வீட்டுல இருக்கறவங்க அடிக்கடி கேக்கற கேள்வி,
“அங்க எல்லாம் கெடைக்குமாப்பா??”....
பொன்னி அரிசிலேருந்து முருங்கைக்காய் வரைக்கும் தரமான பொருளாவே நமக்கு கெடைக்கும்.ஊர்ல கால்ல பட்ற பாத்தரத்த கூட எடுத்து வெக்க மாட்டான் இங்க வந்து குமிஞ்சு கோலம் போடறதா தவிர எல்லா வேலையும் துல்லியமா செய்வான்! வேற வழி?
நம்புடைய புதிய பொழுதுபோக்குகளில் சமையலும் கண்டிப்பா சேர்ந்திரும் குழிப்பனியாரம், கொழுக்கட்டை, பருப்பு வடை, பாயசம்ன்னு பயலுக நொறுக்குவானுக. ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க, சில பொண்ணுகள விட பசங்க ரொம்ப நல்லாவே சமைப்பானுக. பசங்க நாலு பேரு ஒரு வீட்ல இருந்தா கூட, ஒரே அடுப்புதான் எரியும், ஆனா பொண்ணுக வீட்டுல கொறஞ்சது ரெண்டு அடுப்பாவது எரியும். சரி, பிரச்சன திசை மாறுது…
அங்க போயும் நம்பாளுக்கு பூ பூக்க ஆரம்பிச்சிரும். “மச்சி, நான் சொல்லலே என்னோட தேவதைன்னு, அங்க பார்ரா பனியில நனைஞ்ச புஷ்பம் மாதிரி” ன்னு சொல்லிகிட்டிருக்கும் போதே அவனோட வெள்ளைகார தேவதை நல்ல பத்து செண்டி மீட்டர்ல ஒரு சிகரட்ட எடுத்து பத்தவெக்கும்…  அசிங்கத்த மிதிச்ச மாதிரி அப்பறமாதான் அடங்குவான்…
வெள்ளக்காறன பொருத்தவர ஒவ்வொரு வீக்எண்டும் தீபாவளி மாதிரி..திங்கக்கெழமைலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் கன்னுக்குட்டி மாதிரி சாதுவா இருப்பானுக.. வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில இருந்து காட்சில்லாவா மாறிருவானுக. 5 மணியில இருந்தே அய்யனார் வேட்டைக்கு கெளம்பற மாதிரி டிசைன் டிசைனா ஆம்பள பொம்பள வித்யாசமில்லாம கெளம்பு வாங்க…வேற எதுக்கு குடிச்சுட்டு கூத்தடிக்கத்தான்.
நம்ப ஊர்ல பொண்ணுக நம்பல கண்டாவே “அதுங்க வந்திருச்சுன்னு” ஜுராசிக் பார்க்ல ஓடற மாதிரி ஓடுவாங்க…இங்க நெலமை நேர்மாறு நாலு பொண்ணுக கூட்டமா வந்தா நாயப்பாத்து ஒதுங்கற மாதிரி தப்பிச்சு ஓடிரனும்..இல்லேனா ஆகற சேதாரத்துக்கு கம்பேனி பொறுப்பில்லீங்க!!
இந்த ஆச்சர்யம், திகைப்பெல்லாம் மொத ரெண்டு வாரத்துக்குத்தான்.. ஐஸ்வர்யாராயே பொண்டாட்டியா வந்தாலும், அந்த பெருமை, சந்தோசமெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்..அப்புறம் அவ ஒழுங்கா சமைக்க மாட்டேங்கறா, ஒரு சைடா நடக்கறான்னு எதாவது கொற சொல்ல ஆரம்பிச்சிருவோம்.பழகப்பழக பாலும் புளிக்குங்கற மாதிரி நம்ப மெக்கானிக்கல் வாழ்க்கை போர் அடிக்க ஆரம்பிச்சிரும். நாம ஊருக்கு திரும்பிப்போற நாள பத்தி கற்பனை பண்ண ஆரம்பிசிருவோம்.
கிட்ட தட்ட நம்ப வந்த வேலை பாதி முடிசிருக்கும். அதுக்குள்ள தம்பி நீ ஆணி புடுங்குன வரைக்கும் போதும், பட்ஜெட் மேல ஏறுது, நீ ஊருக்கு திரும்பி வான்னு சொல்லி வர சொல்லிருவாங்க. அப்பிடியே அந்த கடைசி வீக் என்டுல அந்த ஊருல இருக்குற பெரிய ஷாப்பிங் மால் போய் நம்ப வீட்டு ஆளுங்களுக்கு தேடி தேடி வெளிநாட்டு பொருள்களை (சென்ட், வாக்மேன், ஐ-பேட்) எல்லாம் வாங்கிட்டு சந்தோஷமா ஊருக்கு கிளம்புவோம். எப்படி இந்த ஊருக்கு வரும் போது மனசு சந்தோஷமா இருந்திச்சோ அத விட பல மடங்கு சந்தோஷம் நம்ப சொந்த ஊருக்கு போகும் போது இருக்கும். எனக்கு அப்படி தான் இருந்திச்சு. கடைசியில ப்லைட் நம்ப ஊருல லேன்ட் ஆகும் போது கிடைக்கிற திருப்தி இருக்கே. அதையும் அனுபவிக்கணும்.
மொத்ததுல பில்லா அஜித் ஸ்டைல்ல படிங்க....
ஆன்சைட்ன்றது இளைய தளபதி விஜய் படம் மாதிரி, தியேட்டர் உள்ள இருக்குறவன் வெளிய வர பார்ப்பான்,  வெளிய இருக்கறவன் தியேட்டர் உள்ள போகனும் பார்ப்பான். படத்தோட டிரைலர் மட்டும் தான் நல்லா இருக்கும். புல் படத்தை நீங்க ரொம்ப ரொம்ப கஷ்ட பட்டு தான் பார்க்கணும்.... அது.