Thursday, February 02, 2012

The Good, the Bad and the Ugly- (1966) செர்ஜியோ லியோனியின் டாலர்ஸ் ட்ரையாலஜி பாகம் -3

இந்த பதிவு முலமாக நான் உங்களுக்கு அறிமுக படுத்த போற படம் The Good Bad and Ugly, இது ஒரு வெஸ்டர்ன் வகையை சேர்ந்த படம். அதுவும் இல்லாம இது டாலர்ஸ் ட்ரையாலஜி சீரீஸ்ல வந்த கடைசி படம். இந்த சீரீஸ்ல ஏற்கனவே வந்த ரெண்டு படத்தையும் என்னோட ப்ளாக்ல எழுதி உள்ளேன். முத படம் FistfulOf Dollars ரெண்டாவது படம் For a Few Dollars More. செர்ஜியோ லியோனி இயக்கிய இந்த திரைக்காவியம் அவரோட முத ரெண்டு டாலர்ஸ் படத்தையும் தூக்கி சாப்பிட்டுச்சு. அந்த காலத்தில் இப்படி பட்ட ஒரு பிரண்டமான படம் எடுத்த செர்ஜியோவுக்கு முத சல்யூட்.செர்ஜியோ இத்தாலிய டைரக்டர், அவர் டாலர்ஸ் ட்ரையாலஜி படங்களை முதலில் இத்தாலிய மொழியில் தான் எடுத்தார், பிறகு இப்படங்கள் இங்கிலீஷில டப்பிங் செய்ய பட்டு அமெரிக்காவில் ரிலீஸ் செய்ய பட்டன. இந்த படத்தை மிஞ்சுற மாதிரி ஏன் இது பக்கத்துல வர மாதரி கூட இந்த நாள் வரை எந்த வெஸ்டர்ன் படமும் வந்தது இல்லை. வெஸ்டர்ன் படம்னா அது The Good Bad and Ugly. ஏன் இந்த படத்துக்கு இந்த பில்ட் அப் அப்படின்னு இப்ப பார்போம்....


படத்தை பத்தி பார்க்கிறதுக்கு முன்னாடி செர்ஜியோ லியோனி பத்தி கொஞ்சம் பார்போம். லியோனியின் 25 வருஷ டைரக்டர் கேரியரில் அவர் மொத்தமே 10 படங்களை தான் இயக்கி உள்ளார். அதில் ஒன்று கூட நேரடி ஆங்கில படம் கிடையாது. எல்லாமே இத்தாலிய மொழி படங்கள் தான். முக்கியமா அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் அவரின் அணைத்து படங்களும் அமெரிக்கா முதல் கொண்டு உலகம் முழுவதும் இன்று வரை கொண்டாடபடுகிறது. வெஸ்டர்ன் படங்களுக்கு என்றே இவர் தனியா ஒரு பாணியை உருவாக்கினார். முக்கியாமாக பண்டி ஹண்டர்ஸ், வங்கி கொள்ளை, புதையல் தேடி அலைவது, டுயல் துப்பாக்கி சண்டை, மர விடுகள், குதிரையில் இருந்த படியே துப்பாக்கி சண்டை, வறண்ட பாலைவனம், பழிவாங்குதல், பயங்கர முகம் கொண்ட வில்லன்கள் போன்ற விசயங்கள் கண்டிப்பாக அவரின் அணைத்து படங்களிலும் இடம் பெற்றன. நம்ப வாழ்கை முறைக்கு சம்பந்தமே இல்லாத வெஸ்டர்ன் வாழ்கை முறை மேல ஏனோ எனக்கு சின்ன வயசுல இருந்து ஒரு பயங்கர பிடிப்பு. நம்பனால டெக்சாஸ், மெக்ஸிகோ போன்ற ஊருக்கு எல்லாம் போய் அந்த வாழ்க்கைய அனுபவிக்க முடியாது. ஆனா அந்த கௌபாய் உலகத்தை கண்டிப்பா செர்ஜியோவின் படங்களின் முலமாக அனுபவிக்கலாம். அந்த வாழ்கையை வேற ஒரு வழி முலமாக கூட அனுபவிக்கலாம், அது என்னன்னு வேற பதிவுல சொல்றேன்...


இந்த திரைப்படத்தின் ஆரம்பம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். முன்று கதாபாத்திரங்களின் அறிமுகத்தோடு படம் ஆரம்பிக்கும். முதலில் டுகோ. டுகோ தான் UGLY. இவன் ஒரு பலே திருடன். பண்டி ஹண்டரிடம் இருந்து டுகோ தப்பிப்பது போன்று இவரின் ஆரம்ப காட்சி இருக்கும். இந்த காட்சி நல்ல நகைச்சுவையாக இருக்கும். அடுத்து ஏஞ்சல் ஐஸ். இவன் தான் BAD. இவன் ஒரு முன்னாள் அமெரிக்க ராணுவ வீரனை விசாரணை செய்வது போன்று ஆரம்ப காட்சி இருக்கும். இந்த காட்சி Inglorious Basterds படத்தில் Waltz செய்யும் விசாரணை காட்சிக்கு ஈடானது. இதில் இவனது கொடூர குணம் நமக்கு தெரிய வரும். அடுத்து ஈஸ்ட் வூட், இவரு தான் Good. டுகோவை வேறு சில பண்டி ஹண்டரிடம் இருந்து இவர் காப்பாற்றுவது போன்ற ஒரு காட்சி. இதில் ஈஸ்ட் வூட்டின் துப்பாக்கி உபயோக படுத்தும் வேகம், அவரின் திறமை நமக்கு தெரிய வரும். இப்போ முனு முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகம் முடிஞ்சுது. அடுத்து என்ன ஹீரோயின் அறிமுகமா..??? அது தான் கிடையாது இந்த படத்துல பொண்ணுங்களே கிடையாது. ஒரே ஒரு காட்சியில் மட்டும் ஒரு பொண்ணு வரும். அது என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க...

18 ஆம் நுற்றாண்டு இறுதியில், அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடைபெற்ற காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை அமைக்க பட்டு இருக்கும். வழக்கம் போல இந்த படத்துலயும் ஈஸ்ட் வூட்க்கு பேர் கிடையாது. டுகோ அவரை பிளாண்டி(Blondie)அப்படின்னு தான் குப்பிடுவான். பிளாண்டியும் டுகோவும் சந்தர்ப்ப வசத்தால் நண்பர்கள் ஆனவர்கள். மேலும் சந்தர்ப்ப வசத்தால் அவர்கள் இருவருக்கும் $20,000 மதிப்புள்ள ஒரு புதையல் ரகசியம் தெரிய வருகிறது.புதையல் இருக்கும் இடம் ஒரு சுடுகாடு. அந்த சுடுகாட்டின் பெயர் டுகோவுக்கு தெரிய வரும். ஆனால் எந்த கல்லறையில் அந்த புதையல் புதைக்கப்பட்டு உள்ளது என்று பிளாண்டிக்கு தெரிய வரும். இருவரும் சேர்ந்து புதையலை எடுப்பது என்று தீர்மானித்து தம் பயணத்தை தொடர்வார்கள். அந்த நீண்ட பயணத்தில் ஏஞ்சல் ஐஸ்யும் (BAD) சேர்ந்து கொள்வான். புதையல் எடுக்க இந்த முன்று கில்லாடி கௌபாய்கள் இடையே நடைபெறும் போட்டி தான் மீதி படம்.

லியோனியின் பள்ளி நண்பரான எனியோ மோரிகோன் இந்த படத்துக்கு மியூசிக் போட்டு இருப்பார். அந்த அறிமுக மியூசிக், மிகவும் அற்புதமாய் இருக்கும். அந்த மியூசிக் கேட்கும்போது கண்டிப்பாய் நமக்கு இனம் புரியாத ஒரு சுகமான வருடல் உணர்வை தரும்.


பாடலை அனுபவிக்க: 


உண்மையில் சுருட்டு பிடிக்க தெரியாத ஈஸ்ட் வூட், படம் முழுவதும் சுருட்டு பிடிப்பது போன்று வரும், அவர் சுருட்டு பிடிக்கும் ஸ்டைல்,சும்மா அதகளமாய் இருக்கும். ஈஸ்ட் வூட்டின் பல மேனரிசங்களை பார்க்கும் போது நமக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்ப்பது போன்று இருக்கும்.


டுகோ, இவரை பற்றி கண்டிப்பாய் சொல்ல வேண்டும். படத்தில் காமெடிக்கு இவர் தான். ஆனால் பேர் UGLY. முன்று பேரில் என்னை மிகவும் கவர்ந்தது டுகோ தான். இவர் உயிரை குடுத்து !!! படத்தில் நடித்து இருப்பார். படபிடிப்பின் போது இவர் தூக்கில் தொங்க வேண்டிய ஒரு காட்சியில் குதிரை வேகமாய் ஓடி விட, டுகோ உண்மையில் தூக்கில் தொங்க வேண்டியது ஆகி விட்டது. பிறகு பட குழுவினர் இவரை காபற்றினார். மற்றும் ஒரு சந்தர்பத்தில் தண்ணி என்று நினைத்து அங்கு உள்ள ஆசிட்டை குடித்து விட்டார். இப்படி இவர் உயிரை குடுத்து இப்படத்தை உருவாக்கினர்.


அடுத்து ஏஞ்சல் ஐஸ், இவர் தான் BAD. For a Few Dollars More படத்தில் 2nd ஹீரோவாக நடித்தவர். இவரும் தன் சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பார். 

படத்துல நிறைய பிரண்டமான போர் காட்சிகள் வரும். ஒவ்வொரு போர்க்களக் காட்சிக்கும் பெருங்கூட்டம் தேவைப்பட்டது. சிக்கனம் கருதி லியோனி ஸ்பெயின் நாட்டில் படத்தை எடுத்து வந்தார். ஸ்பெயின் அரசின் சிறப்பு அனுமதி பெற்று, ஆயிரத்தி ஐநூறு நிஜமான இராணுவ வீரர்களையே இலவசமாக நடிக்கவைத்துவிட்டார் செர்ஜியோ.

படத்தில் முதல் 10 நிமிடங்கள் வசனமே கிடையாது. அடுத்து நீங்க அனுபவிக்க போகும் 170 நிமிடங்களுக்கு அந்த 10 நிமிடங்களில் உங்களை நன்றாக தயார் படுத்தி விடும். அந்த முதல் 10 நிமிடங்கள் ஒரு நல்ல வார்ம் அப் (Warm Up). 

படத்தில் இறுதியில் வரும் டுயல் (Duel) சண்டை, உங்கள் டெம்போவை கண்டிப்பாய் ஏற்றி விடும். அது இந்த முன்று முக்கிய கதாபாத்திரங்களின் இடையே நடக்கும் டுயல்.


இந்த படத்தை நீங்கள் “The God Father” படத்துடன் கண்டிப்பாய் ஒப்பிடலாம். God Father படம் பார்த்தவர்களுக்கு கண்டிப்பாய் அந்த தாக்கம் குறைந்தது ரெண்டு நாட்கள் இருக்கும். இந்த படத்தை பார்த்ததும் அதே தாக்கம் உங்களுக்கு கண்டிப்பாய் ஏற்படும். இது ஒரு எபிக் சாகா (Epic Saga).

டிஸ்கி: 
வெஸ்டர்ன் திரைப்படங்களை போலவே இருக்கும் நிறைய வெஸ்டர்ன் வீடியோ கேம்ஸ் விளையாடி உள்ளேன். அதை பற்றி எழுதலாம் என்று ஒரு எண்ணம் உள்ளது. இடை இடையே நான் ரசித்த வீடியோ கேம்ஸ் பற்றி எழுத போறேன்.

My Rating: 9.1/10......


31 comments:

  1. கொஞ்ச நேரம் இருங்க..படிச்சுட்டு வந்துடறேன்..

    ReplyDelete
  2. என் இனிய காலை வணக்கம் நண்பரே,
    கலக்கிட்டீங்க நண்பரே..இத்தனை நாட்களுக்கும் சேர்த்து நல்ல உணவாக இந்த விமர்சனம் அமைந்துள்ளது..செர்ஜியோ லியோனியை பற்றிய சிறிய தொடக்கமும், கதையை சுருக்கமாக சுவார்ஸ்யத்துடன் சொன்ன விதமும் அருமை..
    என் வாழ் நாளில் (இப்பதான் சின்ன வயசு) மறக்க முடியாத ஏதாவது படங்களை எதிர்க்காலத்தில் யாராவது கேட்டால் கண்டிப்பாக நான் சொல்லும் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கக்க்கூடும்..அவ்வளவு சிறந்த படம்.அதுவரை வெஸ்டர்ன் சினிமாக்களுக்கு இருந்த மதிப்பை ஒரேடியாக மாற்றிப்போட்ட ஒரு காவியம்.அருமையாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்களோடு என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  3. ஆம் ஒரு காட்சியில் வெள்ளை உடை அணிந்த பெண்ணை ஏஞ்சல் ஐஸ் விசாரிப்பார்....நீங்கள் அந்த காட்சியைதான் குறிபிட்டு சொல்கிறிர்கள் என்று நினைக்கிறன்...சரியா

    ReplyDelete
  4. OUTLAW என்ற ஒரு பழைய வீடியோ கேம் இருகின்றது....மார்ஷலாக FPS கேம்... அது வெஸ்டேர்ன் ஸ்டைல்

    ReplyDelete
  5. Tex Viller என்ற காமிக்ஸ் கதாபாத்திரம் எனக்கு புடித்த ஹீரோ....

    ReplyDelete
  6. ஆமாம் Niko,
    சரியாக சொன்னிர்கள். நீங்கள் குறிப்பிட்ட காட்சியில் ஏஞ்சல் ஐஸ் தான் பில் கார்சன் என்று நினைத்து ஒரு பெண் பேசுவாள்.... அந்த வசனம் கூட பின்வருமாறு இருக்கும்...அந்த காட்சியில் நமக்கு ஏஞ்சல் ஐஸ் உடைய கொடூர மனம் தெரிய வரும்..

    Maria : Is that you Bill? Bill!
    Angel Eyes: Go on talking about Bill Carson.

    ReplyDelete
  7. @ Niko
    //OUTLAW என்ற ஒரு பழைய வீடியோ கேம் இருகின்றது....மார்ஷலாக FPS கேம்//

    அது போக போன வருடம் வெளிவந்த "Red Dead Redemption"..... மிகவும் அற்புதமாய் வடிவமைக்க பட்ட வெஸ்டர்ன் கேம்..... இதில் டுயல் சண்டை, பண்டி ஹண்டர், போன்ற பல விசயங்கள் இருக்கும்...... கதை கூட அருமையாக இருக்கும்...இதை படமாக வேறு எடுக்க போகிறார்களாம்...????
    ஆனால் இது இன்னும் PC -க்கு வர வில்லை.. வெறும் Xbox360 & PS3.....

    ReplyDelete
  8. @Kumaran
    //என் வாழ் நாளில் (இப்பதான் சின்ன வயசு) மறக்க முடியாத ஏதாவது படங்களை எதிர்க்காலத்தில் யாராவது கேட்டால் கண்டிப்பாக நான் சொல்லும் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கக்க்கூடும்..அவ்வளவு சிறந்த படம்.அதுவரை வெஸ்டர்ன் சினிமாக்களுக்கு இருந்த மதிப்பை ஒரேடியாக மாற்றிப்போட்ட ஒரு காவியம்//
    உண்மை தான் நண்பரே....வெஸ்டர்ன் சினிமாக்களில் இந்த படம் ஒரு மாஸ்டர் பீஸ் என்று கண்டிப்பாய் சொல்லலாம்....கருத்துகளுக்கு மிக்க நன்றி.....
    ஆனா இந்த சின்ன !!!! வயசுலேயே நீங்க இவ்வளவு நல்ல திரைப்படங்களை நீங்க அறிந்து இருப்பது பெரிய விஷயம்....உங்க வயசுல நான் ஜெட்லி, ரம்போவை தாண்டல....

    ReplyDelete
  9. @ Niko
    //Tex Viller என்ற காமிக்ஸ் கதாபாத்திரம் எனக்கு புடித்த ஹீரோ....//
    .நண்பரே......Tex Viller சீரியஸ் ஹீரோ......My all time favourite....முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ்.....நம்ப சின்ன வயசுல இவங்களை கடக்காம வந்து இருக்க முடியாது.....
    ஆனால் நம்ப லக்கி லுக் காமெடி + சாகசங்கள் நிறைந்த ஒரு கதாபாத்திரம்..... அவரையும் எனக்கு பிடிக்கும்....

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  10. உங்க அளவு எனக்கு விஷயங்கள் தெரியாது நண்பரே.....உங்கள் பதிவு அனைத்தும் மிக அருமை....அனைத்திலும் உங்கள் narration excellent...தொடரட்டும் உங்கள் சேவை...மிக்க நன்றி

    ReplyDelete
  11. @ Niko
    //உங்க அளவு எனக்கு விஷயங்கள் தெரியாது நண்பரே.....உங்கள் பதிவு அனைத்தும் மிக அருமை....அனைத்திலும் உங்கள் narration excellent...//
    மிக்க நன்றி நண்பரே....எனக்கும் நிறைய விசயங்கள் தெரியாது....ஏதோ எனக்கு கொஞ்சம் தெரிந்ததை உங்களுக்கு அறிமுக படுத்துவதே இந்த வலை பூவின் நோக்கம்...... மறுபடியும் மிக்க நன்றி....அடிக்கடி இந்த பக்கம் வாங்க.... :)

    ReplyDelete
  12. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ராஜ். டொலர் ட்ரைலாஜியில் இன்னும் ஒரு படம் கூடப் பார்க்கலன்னு சொல்றப்போ ஹாலிவுட்ரசிகன்னு சொல்லவே வெட்கமா இருக்கு.

    ரொம்ப விவரமா அனுபவித்து எழுதியிருக்கீங்க. நல்ல விமர்சனம். சீக்கிரமே வீடியோ கேம்ஸ் பற்றியும் எழுதுங்க.

    ReplyDelete
  13. நான் முன்பு சொன்னது போல எனக்கு பழைய படங்கள் பிடிக்காததால் இந்தப் படத்தை இன்ஸ்பையர் செய்து 2008ல் வந்த The Good, the Bad, the Weird கொரியன் படம் பார்த்தேன். அதுவும் காமெடியா நல்லா இருந்துச்சு. முடிஞ்சா தேடிப் பாருங்க.

    ReplyDelete
  14. இப்பவே மூன்று படத்தையும் டவுன்லோட் லிஸ்டில் போட்டுட்டேன். சீக்கிரம் பார்க்க முயற்சிக்கிறேன். நீங்க விமர்சனம் எழுதியதால் “பார்த்த படங்கள்” செக்சனில் இதுக்கு லிங்க் கொடுத்துடலாம். எனக்கும் வேலை மிச்சம். ஹி ஹி

    ReplyDelete
  15. @ ஹாலிவுட்ரசிகன்
    வருகைக்கு நன்றி நண்பரே.... கூடிய விரைவில் நான் ரசித்த வீடியோ கேம்ஸ் பற்றி எழுதுகிறேன்...... GBW நான் டவுன்லோட் செய்து இருக்கிறேன்....இன்னும் பார்க்கவில்லை....ஆனால் வாய்ப்பு கிடைத்தால் டாலர்ஸ் சீரீஸ் பாருங்கள்.....உங்களை கண்டிப்பாய் கவரும்....
    //நீங்க விமர்சனம் எழுதியதால் “பார்த்த படங்கள்” செக்சனில் இதுக்கு லிங்க் கொடுத்துடலாம். எனக்கும் வேலை மிச்சம். ஹி ஹி///
    மிக்க நன்றி பாஸ்......

    ReplyDelete
  16. சீக்கிரம் வீடியோ கேம்ஸ் பற்றி எழுதுங்க...உங்க விமர்சனத்திற்காகவே விரும்பி படிக்கலாம்.

    ReplyDelete
  17. நண்பா ... எனக்கு ஏதோ லிப்ஸ்டர் அவார்ட்ன்னு ஒன்னு கொடுத்தாங்க.அதை உங்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். உங்களுக்கு பிடித்த இன்னும் 5 புதிய பதிவர்களுக்கு இதைப் பகிரவும்.

    மேலதிக விபரங்களுக்கு - http://hollywoodrasigan.blogspot.com/2012/02/liebster-blog-award.html

    ReplyDelete
  18. இந்த படத்தை பற்றி அதிகம் கேள்விப்ட்டதுண்டு. ஆனால் பார்த்ததில்லை. இன்னிக்கு டவுன்லோட் பண்ணிரவேண்டியதுதான்...நன்றி!

    ReplyDelete
  19. இந்த படத்தின் இசையை இன்னமும்கூட காப்பி அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அந்த அளவுக்கு ஒரு impactஐ கொடுத்த படம் இது.

    தமிழ் சினிமா உலகம்

    மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

    ReplyDelete
  20. படத்துக்கு ஏற்ற கலக்கல் விமர்சனம் ராஜ். உண்மையிலே கலகிடிங்க.

    //////சும்மா அதகளமாய் இருக்கும். ஈஸ்ட் வூட்டின் பல மேனரிசங்களை பார்க்கும் போது நமக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்ப்பது போன்று இருக்கும்.///////
    கரெக்ட் தான் ராஜ், இதை பற்றி நிறைய பேர் சொல்லி/படித்து கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆன தலைவர் சில சீரியஸ் காட்சியில கூட சிரிப்பாரு, ஈஸ்ட் வூட் காமெடி காட்சியில கூட மிக சீரியஸ்'ஸா முக பவனை இருக்கும்

    ReplyDelete
  21. கருத்து சொன்ன அணைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி...
    @சி.பி.செந்தில்குமார்...
    நீங்க இங்க வந்தது எனக்கு ரொம்ப பெருமை பாஸ்.....கண்டிப்பா வீடியோ கேம்ஸ் பத்தி எழுதுறேன்....
    @Chilled Beers
    கண்டிப்பா பாருங்க பாஸ்....உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்...

    @சாவி..
    உண்மை தான் நண்பரே....

    @MuratuSingam
    உண்மை தான் அருண்.....

    ReplyDelete
  22. நல்லா எழுதியிருக்கிங்க நண்பா! வெஸ்டர்ன் படங்களின் அதி தீவிர ரசிகன் நான். இதுபோன்ற கிளாசிக் படங்கள் மட்டுமின்றி இன்னமும் தொடர்ந்து பார்த்துவருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். ரஸ்க் க்ரோ கன்னை சுத்துற சீனுக்காகவே பத்துமுறை The Quick and the Dead பார்த்திருக்கேன். ஆனா தொடர்ந்து மெலோ ட்ராமாக்களையே எழுதுவதால், இவற்றை எழுத முடியவில்லை. நீங்க தொடர்ந்து எழுதுங்க.....

    ReplyDelete
  23. @ முரளிகுமார் பத்மநாபன்..
    வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி பாஸ்...நீங்களும் அடிக்கடி எழுதுங்க...

    ReplyDelete
  24. நான் அதிகமுறை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  25. வணக்கம் சகோ ! இன்றைய வலைச்சரத்தில் தங்களது தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்
    மனம் கவர்ந்த பதிவுகள்

    நன்றி
    சம்பத்குமார்

    ReplyDelete
  26. naan intha padathin korean version ai pona month paathen. antha padathoda peyar "the good the bad and the weird"

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Hi Bro,

    Nice Review. Anyway have you watched the movie 'Once upon a time in the west and Once upon a time in america' Less popular among Sergio's fans. But I would say both are the best movies in his direction. It will gives you a effect which others dont.

    Here's a intro scene of 'Once upon a time in the west' which proves how great he was in story telling. a master story teller we miss.

    http://vimeo.com/27565941

    ReplyDelete
  29. Nice Review Buddy. I Already saw this Movie Before. but After Reading u'r Blog, sure I am Going to Watch this Movie Again. Thanks for Sharing...

    ReplyDelete
  30. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

    வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல் - குப்ரி

    ReplyDelete