The Dark Knight வெளி வந்து சரியாய் நாளு வருடம் கழித்து வெளி வந்து உள்ளது "The Dark Knight Rises". TDKR அளவுக்கு வேற எந்த படத்துக்கும் இவ்வளவு எதிர்பார்ப்பு இருந்து நான் பார்த்தது இல்லை. உலகமே பட ரிலீஸ்சை நாள் கணக்கில் எண்ணி பிறகு மணி கணக்கில் எண்ணி கொண்டு இருந்து. வானுயர்ந்த எதிர்பார்ப்பு. பேட்மேன் மேல் இருந்த எதிர்பார்ப்பை விட எனக்கு நோலன் மற்றும் வில்லன் பேன் (Bane) மேல் தான் எதிர்பார்ப்பு அதிகம். Bane மேல் எதிர்பார்ப்பு வர காரணம் ஜோக்கர். நோலன் உருவாக்கிய அதி அற்புத கதாபாத்திரம் ஜோக்கர். The Dark Knight படத்தில் அதகளம் பண்ணி இருப்பார். நோலன் இவ்வளவு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார...???? கண்டிப்பாய், உங்கள் எதிர்பார்ப்பையும் மீறி பூர்த்தி செய்து உள்ளார் நோலன். அவர் என்றுமே ஏமாற்றியது இல்லை. இந்த முறையும் பேட்மேன் ரசிகர்களை மட்டும் அல்லாது நோலன் ரசிகர்களையும் திருப்தி படுத்தி உள்ளார்.
கோத்தம் நகரை ஆழிக்க புறப்பட்டு வந்து இருக்கும் Bane மற்றும் அவனது படையை பேட்மேன் தடுத்து நிறுத்துவது தான் படத்தின் கதை என்று ஒரு வரியில் சொல்லி விட முடியாது. TDKR பார்பதற்கு காமிக்ஸ் படித்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் கண்டிப்பாய் பேட்மேன் திரைபடங்கள் முதல் ரெண்டு பாகம் பார்த்து இருக்க வேண்டியது அவசியம். பேட்மேன் முதல் பாகமான Batman Begins படத்தில் ப்ரூஸ் வேனை (Bruce Wayne) பேட்மேன் ஆக மாற்றிய League of Shadows என்ற ஒரு குழுவை பற்றி நோலன் சொல்லி இருப்பார். அடுத்து வந்த Dark Knight படத்தில் லீக் ஆப் ஷடோவ்ஸ் பற்றி ஒரு வார்த்தை கூட வராது. ஆனால் TDK படத்தில் ஹார்வி டென்ட் (Harvy Dent) என்ற டிஸ்டிரிக்ட் அட்டர்னி (DA) என்ற கதாபாத்திரம் பண்ணும் கொலைகளுக்காண பழியை பேட்மேன் ஏற்று கொள்ளவது போல் படத்தை முடித்து இருப்பார். இந்த இரண்டு விஷயங்களையும் (League of Shadows & ஹார்வி டென்டின் கொலைகளையும்) மேலும் சில முதல் ரெண்டு பாக முடிச்சுக்கலையும் நோலன் இந்த படத்தில் மிக அருமையாக அவிழ்த்து இருக்கிறார்.
TDK படத்தில் ஜோக்கரின் அறிமுகம் அந்த கதாபாத்திரத்தின் புத்திசாலி தனத்தை நமக்கு எடுத்து காட்டும். TDKR படத்தின் வில்லன் Bane, மிக மிக பலசாலி, ஸோ, அவனது அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் ?? சும்மா அட்டகாசமாய் இருக்க வேண்டாமா..??? நோலன் இந்த காட்சியில் பின்னி இருப்பார். நோலன் Bane-னின் அறிமுக காட்சியை அவனது பலத்தை நிரூபிப்பது போல் வைத்து இருப்பார். வானத்தில் பறந்து கொண்டு இருக்கும் ஒரு ஏரோ-பிலேன்னை Bane தகர்ப்பது போன்ற ஒரு காட்சி. தியேட்டரே கதறி விட்டது. நான் பார்த்தது வெறும் 70mm ஸ்கிரின் தியேட்டரில், அதுவே அட்டகாசமாய் இருந்தது, IMAX யில் பார்த்தால் இன்னும் பிரமாதமாய் இருந்தது இருக்கும்.அடுத்த வாரம் தான் IMAX பெரிய ஸ்க்ரீனில் பார்க்க போகிறேன்.
Bane Flight Scene |
Bane ஆக நடித்து இருப்பவர் டாம் ஹார்டி (Tom Hardy). இவரது நடிப்பை ஜோக்கர் அளவுக்கு கம்பேர் செய்வது சரி இல்லை என்று நான் நினைக்கிறன். Bane தனது முகத்தை முக்காவாசி மாஸ்க் போட்டு மறைத்து இருப்பார். வெறும் கண்கள் அவரது நெற்றி, மற்றும் தோள்பட்டை மட்டுமே வைத்து ஜோக்கர் அளவுக்கு பெர்பார்மன்ஸ் குடுப்பது சத்தியமே இல்லை. ஆனாலும் ஹார்டி Bane ஆக மிகவும் சிறப்பான நடிப்பை வெளி படுத்தி இருப்பார். அவரது குரல் வித்தியாசமாய் இருக்கும் .ஜோக்கர் அளவுக்கு இல்லை என்றாலும் Bane மேல் எனக்கு பயம் வர தான் செய்தன. Baneனை வில்லன் என்பதை விட தீவிரவாதி என்றால் சரியாக இருக்கும். அவன் செய்யும் செயல் எல்லாமே தேர்ந்த பயங்கரவாதி போல் தான் இருக்கும். பேட்மேன்க்கு உடல் ரீதியான சவால் ஏற்படுத்தி இருப்பார் Bane.
Catwomen ஆக நடித்த அன்னே ஹாத்வே (Anne Hathaway). அன்னேயிடம் இருந்தது இப்படி பட்ட பெர்பார்மன்ஸ் நான் சத்தியமா எதிர்பார்க்க வில்லை.படத்தில் இரண்டாவது பெஸ்ட் பெர்பார்மன்ஸ். நளினமான நடிப்பு ஆகட்டும், ஆக்சன் காட்சி ஆகட்டும், அன்னே அற்புதமாய் பண்ணி இருக்காங்க. சூப்பர் ஹீரோயின் CatWomen னை அப்படியே நாம் கண் முன்னே கொண்டு வந்து இருப்பார் அன்னே. அன்னே பேட்மேன் வாகனமான பைக் (Batpod) ஓட்டும் ஒரு காட்சி செமயாய் இருக்கும். படத்தில் அன்னே கதாபாத்திரத்தை கொண்டு நோலன் பல ட்விஸ்ட் வைத்து இருப்பார். அதை சொல்லி படத்தின் சுவாரிசியத்தை குறைக்க விரும்ப வில்லை.
Catwomen with BatPod |
அடுத்து படத்தின் பெஸ்ட் பெர்பார்மர் மைக்கேல் கைன் (Michael Caine). இவர் பேட்மேனின் நலம் விரும்பி ஆல்ஃபிரட். இவரும் பேட்மேனும் பேசும் சில வசனங்கள் எனக்கு கண்ணீர் வர வழைத்து விட்டன. ஒரு சூப்பர் ஹீரோ/ ஆக்சன் படத்தில் இப்படி பட்ட உணர்ச்சி மிக்க காட்சிகள் வைக்க நோலனாலே மட்டுமே முடியும். God Father II, The Shawshank Redemption படத்தில் வரும் சில உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு ஈடான காட்சிகள் ஆல்ஃபிரட் மற்றும் பேட்மேன் பேசும் காட்சிகள். மொத்தமே நான்கு ஐந்து காட்சிகள் தான் ஆல்ஃபிரட் வருவார். ஆனால் அதில் ஆஸ்கார்க்கு போதுமான நடிப்பை வெளி படுத்தி இருப்பார். Hats Off கைன்.
Caine |
கடைசியாக பேட்மேன் ஆக நடித்து இருக்கும் கிறிஸ்டியன் பேல். முதல் ரெண்டு பேட்மேன் படங்களை விட இந்த படத்தில் தான் பேல் தனது நடிப்பு முத்திரையை மிகவும் அழுத்தமாக பதித்து உள்ளார். ப்ரூஸ் வேனே (Bruce Wayne) ஆக 8 வருடங்கள் ஓய்வு எடுத்து கொண்டு இருப்பவரை Bane மற்றும் CatWomen இருவரும் சேர்ந்து மீண்டும் பேட்மேன் சூட் போட வைத்து விடுவார்கள். படத்தில் முதல் தடவையாக பேட்மேன் சூட் போட்டு கொண்டு பேல் பைக் (Batpod) ஓட்டும் அந்த காட்சிக்கு தியேட்டரே ஆரவாரம் செய்தது. Batpod யில் இருந்தது பறக்கும் வாகனமான BatWing க்கு பேட்மேன் மாறும் அந்த காட்சியை பார்த்த எனக்கு ஏ.ஸி குளிரிலும் வேர்த்து விட்டது. அப்படி பட்ட அட்டகாசமான காட்சி அது. மிகவும் அற்புதமாய் எடுத்து இருப்பார் நோலன். Bane மற்றும் பேட் மேன் சண்டை போடும் காட்சி இன்னும் நன்றாக எடுத்து இருக்கலாம்.
படத்தில் நிறைய நோலன் ட்விஸ்ட் இருக்கிறது. படத்தின் முடிவு அல்லது சஸ்பென்சை பார்வையாளர்கள் யூகிக்க நோலன் படத்தின் நடுவில் சில கேரக்டர் முலம் கொஞ்சம் ஹின்ட் தருவார். The Prestige படத்தில் கட்டர் (Caine) சொல்லும் ஒரு வசனம் முலமாக படத்தின் கிளைமாக்ஸ் பற்றி நோலன் ஒரு ஹின்ட் குடுத்து இருப்பார். அதே போல் இந்த படத்திலும் நிறைய ஹின்ட் குடுத்து இருப்பார் நோலன். The Child, Auto Pilot, மற்றும் ஆல்ஃபிரட் பேசும் சில வசனங்கள் முலமாக நீங்கள் கிளைமாக்சை ஓர் அளவு யூகிக்கலாம்.
முக்கியமாக பின்னணி இசை, Hans Zimmer மிகவும் அருமையான இசையை வழங்கி உள்ளார். பேட் மேன் Bane யிடம் அடி வாங்கி மறுபடியும் ரீ-என்ட்ரி ஆகும் காட்சியில் மனுஷன் பின்னி இருப்பார். கேமராமேன் Wally Pfister, இவர் தான் நோலனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர், ஸ்டாக் மார்க்கெட் பைக் சேஸிங் காட்சிகள், மற்றும் கிளைமாக்ஸ் BatWing சேசிங் காட்சிகளை மிகவும் தந்துருபமாய் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பார். Bane கோத்தம் நகரை வெடிக்க வைக்கும் காட்சி, ரொம்பவும் ரியல்ஸ்டிக் ஆக படம் ஆக்கி இருப்பார் Pfister.
Bat-Wing |
படம் மொத்தம் 165 நிமிடங்கள், ஒரு இடத்தில கூட ஏன் ஒரு வினாடி கூட எனக்கு போர் அடிக்க வில்லை. ஐயோ அதுக்குள்ளே முடிந்து விட்டதே என்று தான் இருந்து. படத்தில் சில பல குறைகள், லாஜிக் மிஸ்டேக் இருக்க தான் செய்தன, ஆனால் படத்தின் பிரம்மாண்டத்தின் முன்பு அதை எல்லாம் நீங்கள் மறந்து போவீர்கள். படத்தை அட்டகாசமாய் முடித்து இருப்பார் நோலன். படம் முடிந்த உடன் தியேட்டரே எழுந்து நின்று கை தட்டடியது. பெரிய வருத்தம் என்ன வென்றால் இனி மேல் பேட் மேன் படங்களை நோலன் இயக்க மாட்டார், பேட் மேன் ஆக பேல்லும் நடிக்க மாட்டார் என்பது உறுதி ஆகி உள்ளது. இனி மேல் வர போகும் பேட் மேன் படங்களை WB வேறு டைரக்டர் கொண்டு எடுக்க வேண்டியது தான். ஆனால் அவர்களால் நோலன் தொட்ட உச்சத்தை தொட முடியுமா என்பது சந்தேகமே !!!!!!
The Dark Knight Rises - EPIC CONCLUSION
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் படத்தின் மிட் நைட் பிரிமியர் ஷோ ஒன்றில் புகுந்த ஒரு சைகோ கொலைகாரன் படம் பார்த்து கொண்டு இருந்த 12 அப்பாவி பொது மக்களை சுட்டு கொன்று உள்ளன். 24 வயது நிரம்பிய அந்த சைகோவின் பெயர் ஹோம்ஸ். அவனை அரெஸ்ட் செய்த கொலராடோ போலீஸ்யிடம் தான் தான் ஜோக்கர் என்றும் உளறி உள்ளன். இந்த மாதிரி பைத்தியக்கார்களுக்கு அமெரிக்காவில் பஞ்சமே இருக்காது. அனைவரையும் இந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
My Rating: 9.2/10......
My Rating: 9.2/10......
படத்துக்கு தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்... படம் பாத்துட்டு வந்து உங்க விமர்சனத்த படிக்கிறேன் :-)
ReplyDeleteநீங்க கண்டிப்பா இந்த படத்தை பத்தி எழுதியே ஆகணும்.....இது வேண்டுகோள் இல்லை பாஸ்.... கட்டளை.... :)
Deleteபடம் பாத்தாச்சு தல...
Deleteஎன்னுடைய Homeland பத்தின பஹ்டிவில் நீங்க இப்படி சொல்லியிருந்தீங்க - "உங்களுக்கும் எனக்கும் நிறைய எடத்துல எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்கு.."
அப்ப நான் அத பெருசா எடுத்துக்கல. ஆனா இப்போ உங்க TDKR விமர்சனத்த படிச்ச பிறகு முழுசா ஒத்துக்குறேன். உங்களுக்கும் எனக்கு பல எடங்கள்ல ஒத்துப் போகுது :-)
சும்மா பேச்சுக்கு இப்படி சொல்லல, உண்மையாகவே வரிக்கு வரி உங்களோட இந்த பதிவுல எழுதியிருக்குற அத்தனையையும் அப்படியே வழிமொழிகிறேன். நான் விமர்சனம் எழுதியிருந்தால் நிச்சயம் இதையே தான் சொல்லியிருப்பேன்! பிறகு படம் நல்லா இல்லன்னு சொல்ற மேதாவிகளை நாம கண்டுக்க வேணாம். அவங்க வழில அவங்க எதையோ உளறிகிட்டுத் திரியட்டும். உண்மைய சொல்லனும்னா The Dark Knightஐ விட எனக்கு இந்த பாகம் ரொம்பவும் பிடித்தது! எத்தனை முறை தியேட்டரில மட்டும் பார்க்க போறேன்னு தெரியல!
தல, உங்க ப்ளாக்கை முத முறை படிச்ச உடனே எனக்கு புரிஞ்சது, உங்களுக்கு எனக்கு ஒரே frequency....
Deleteஅப்புறம் IMDB ரேட்டிங் வந்துருச்சு... ரேட்டிங் 8.7....... Top 250 #18.... நோலன் மறுபடியும் நிருபிச்சுடார்...நான் TOP #10 குள்ள எதிர்பார்த்தேன்...
IMDB ரேட்டிங் பேர்ல எனக்கு அவ்ளோ ஈடுபாடு இல்ல. என் ரசனைய மட்டும் நம்புறவன் நான் :-) ஆனாலும் இன்னமும் reviews வந்துகிட்டே தான் இருக்கு. ரேட்டிங் ஏற நிறைய வாய்ப்பு இருக்கு...
DeleteGood review. American incident is very tragic
ReplyDeletevery very Sad incident... :(
Deleteதல நானும் இன்னைக்கு போறேன்... அப்பறம் தல நீங்க தேனியா ... நான் போடி தல
ReplyDeleteரொம்ப நெருங்கிட்டேங்க....எனக்கு கூடலூர், கம்பத்துக்கு அடுத்த ஊர் தல.....
Deleteநம்ப பிரதீப் கூட போடி தான்...நிறைய வாட்டி போடி வந்து இருக்கேன்.....என்னோட ஒரு Thickest Friend போடி தான்....
என்னோட ஐடி : raj.zte@gmail.com ஒரு மெயில் தட்டுங்க... :)
படம் பார்த்திட்டு வந்து நீங்களும் எழுதுங்க...ஆவலாய் இருக்கேன்...
என்னது லக்கி போடிக்காரரா?!?!
Deleteஆகா.. எனக்கு இன்னும் காத்திருக்கனுமே! விட்டா ஃபிளைட் எடுத்துட்டு இந்தியா வந்து பார்த்துரலாம் ரேஞ்சுல இருக்கேன்.. உங்க ரிவ்யூ படிச்சதுக்கப்புறம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்னு தோணுது!! ஆனா கருந்தேள் வேற மாதிரி எழுதியிருக்காரே..
ReplyDeleteபடத்தை நல்லா இல்லைன்னு யாருமே சொல்ல மாட்டாங்க தல...அப்படி சொன்னா வீம்புக்கு தான் சொல்லுறாங்க. TDK அளவுக்கு வேணா இல்லைன்னு சொல்லாம்.... This film has some very fine moments......
Deleteநான் கருந்தேள் பதிவை இன்னும் படிக்கல தல.....
நானும் இன்று படத்துக்கு போறேன் மச்சி நீங்க மட்டும் தான் படத்தை குறை சொல்லாமல் எழுதி உள்ளீர் பெரும்பாலானோர் அந்த அளவு இல்லை என்றே சொல்லுகின்றனர்...
ReplyDeleteசின்னா, நீங்க பார்த்திட்டு வந்து சொல்லுங்க......ஒரு சீன்ல போர் அடிச்சா கூட நீங்க எனக்கு சொல்லுங்க.....பார்போம்.....
Deleteபடம் பார்த்தேன் ரொம்ப சூப்பர் என்ன ஜோக்கர் நினைத்து கொண்டு போனால் உங்களுக்கு படம் அவ்வளவாய் இருக்காது bane ஒரு முரட்டு ஆள் அவ்வளவு தான் மற்றபடி வேற எதுவும் அவனிடம் எதிர்பார்க்க முடியாது...tdk அளவிற்கு இல்லை நோலன் சாதித்துவிட்டார்...கிளைமாக்ஸ் அவ்வளவு தான் பேட்மேன் காலி என்றே நினைத்தேன் அப்ப தான் எனக்கு ரொம்ப பீலிங்கா போச்சு...catwomen பிடிக்கலை ஆனா அந்த லிப்ஸ் பார்த்தா என்ன சொல்லுறது...
Deleteஎன்னுடைய தளத்தையும் உங்க ப்ளாக் வைத்து உள்ளீர்களே ரொம்ப நன்றி....
Deleteவிமர்சனம் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள், ஆனால் படம் பார்க்க முந்தைய பாகம் வேண்டும் என்று சொல்லிவிட்டதால் நான் முதலில் இருந்தே தொடங்குகிறேன். விமர்சனம் மிக மிக அருமை...
ReplyDeleteTM 4
இதுவரை படித்த விமர்சனகள் எல்லாமே படம் மொக்கை என்றே சொல்கின்றன..கருந்தேள் படத்தை விமர்சனத்தில் கிழிக்க முடியாமல் ஒருவாறு பார்க்கலாம் என்று எழுதியுள்ளார். உங்கள் பக்கம் வந்தால் படம் சூப்பர் என்று சொல்கிறீர்கள் .ஒரு முடிவெடுக்க முடியவில்லை.
ReplyDeleteராஜ்,
ReplyDeleteதியேட்டரில் துப்பாக்கி சூடு ரொம்ப வருத்தமான நிகழ்வு, உள்ள வரவங்க கிட்டே ஆயுதம் இருக்கான்னு எல்லாம் செக் செய்ய மாட்டாங்களா?
சென்னையில் ஆல்பர்ட் தியேட்டரில் "hand held metal detector" வைத்து சோதனை செய்றாங்க, மேலும் திண்பண்டம் இருக்கானு எல்லா தியேட்டரில் சோதனை செய்து வாங்கிடுறாங்க.
படத்தை பற்றி, நீங்க சூப்பர்னு சொல்றிங்க ,ஆனால் பிரபல சினிமா பதிவரோ மொக்கைனே சொல்லிட்டாரே, ஒரே படத்தினை ஒருத்தர் சூப்பர்னும் இன்னொருத்தர் மொக்கைனும் சொல்றிங்க,எதை நம்பி பார்க்க?
ஹி...ஹி நான் எப்படி இருந்தாலும் பார்த்துடுவேன், படத்தின் தொழில்நுட்பத்துக்காவே.மற்றவங்க குழம்பிடுவாங்களேனு சொன்னேன்.
கண்டிப்பா செக் செஞ்சு தான் அனுப்பி இருப்பாங்க வவ்வால்....
ReplyDeleteஆனா பாருங்க அந்த மெண்டல் படம் ஆரம்பிச்ச 30 நிமிஷத்துல அவசரம்ன்னு சொல்லி எமர்ஜென்சி exit வழியா வெளிய போய் கீழ காருல வச்சு இருந்த துப்பாக்கிய எடுத்துட்டு வந்து சுட்டு இருக்கு...... (விக்கிபீடியா)
அப்புறம் படத்தை பத்தின நெகடிவ் விமர்சனத்துக்கு......
ஒவொருதருகும் ஒரு மாதிரியான ரசனைகள், படம் பார்க்கும் மனநிலைகள்....ஒன்னா இருக்கும்னு சொல்லவே முடியாது....
எனக்கு படம் ரொம்பவே பிடிச்சு இருந்தது....
நான் எப்பவுமே படம் பாருங்க, பார்காதேங்கன்னு சொல்லவே மாட்டேன்....இஷ்டம் இருந்தா அவங்க அவங்க பார்ப்பாங்க.... :)
எனக்கு இந்த படம் எந்த மாதிரியான அனுபவத்தை குடுதிச்சுன்னு மட்டும் தான் எழுதுவேன்.....அப்படி தான் எழுதி இருகிறதா நம்புறேன்..... :)
நல்ல விமர்சனம் நண்பரே! எனக்கும் படம் பிடித்தது!
ReplyDelete//அவரது குரல் வித்தியாசமாய் இருக்கும்//
உண்மையில் அவர் இழுத்து இழுத்துப் பேசியது எனக்கு எரிச்சலாகவே இருந்தது! :)
//படம் மொத்தம் 165 நிமிடங்கள், ஒரு இடத்தில கூட ஏன் ஒரு வினாடி கூட எனக்கு போர் அடிக்க வில்லை//
நிஜம், பெரும்பாலும் போர் அடிக்கவே இல்லை!
ஒண்ணும் வாசிக்கல பாஸ். உங்களுக்கு படம் புடிச்சிருக்குன்னு மட்டும் தெரியுது. நம்ம ரெண்டு பேருக்கும் அநேகமா ஒரே ட்ராக்ல டேஸ்ட் இருக்கிறதால எனக்கும் படம் புடிக்கும்னு தோணுது. :)
ReplyDeleteதல...இரண்டரை மணி நேர படம் போர் அடிக்கவில்லை என்பது நிஜம் தான்.படம் மொக்கை,போர் அடிக்கிறது என்று சொன்னால் அது அபத்தம். ஆனால் எனக்கும் படம் பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்தது. அதிலும் கிளைமாக்ஸ் பெரும் ஏமாற்றம்.மூன்று படங்களில் இது சுமார் ரகம் தான். ஆனாலும் படத்தை இரண்டாம் முறை பார்க்க வேண்டும் என தோன்றுகிறது. படத்திற்கு Robin Begins என்பதே சரியான தலைப்பாக இருக்கும்.
ReplyDeleteவிமர்சனம் நன்று. எப்படியும் படம் இங்க ரிலீஸ் செய்தவுடன் பார்த்திடுவேன். சில நெகடிவ் விமர்சனங்கள் வந்த பிறகும் படம் பார்க்கும் ஆவல் ஒன்றும் குறையவில்லை.
ReplyDeleteDark Knight rises is quite a disappointment. Well shot and edit but lots of subplots, lots of plot holes, and most of all, way too slow.. i felt like, let the bomb go off and finish off the movie.. Thank god they concluded with this..
ReplyDeleteInterstellar படம் பற்றிய சுவாரசிய தகவல்கள்:
ReplyDeleteInception, Memento மற்றும் The Dark Knight படங்களை குடுத்த Christopher Nolan ன் சமிபத்திய படம் தான் Interstellar.
(1) இந்த படத்தின் கதை மற்றும் திரைகதையை உருவாக்க Christopher Nolan மற்றும் அவரது சகோதரர் Jonathan Nolan அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தது.
(2) நோலனின் சகோதரர் Jonathan Nolan இந்த கதை முழுக்க Relativity, Gravity, WormHole, Blackhole போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருப்பதால் கலிபோர்னியா யுனிவர்சிட்டியில் Relativity பற்றி படித்துக் கொண்டே இந்த கதையை உருவாக்கினார்.
(3) படத்தில் உள்ள ஒரு சோளக்காடு எரிவது போல உள்ள காட்சியமைப்புக்காக நோலன் கிராபிக்ஸ் பண்ண விரும்பவில்லை. Production Designer ஐ அழைத்து 500 ஏக்கர் அளவில் சோளத்தை பயிரிட்டு அது வளர்ந்ததும் அதை கொண்டு காட்சியமைப்பை உருவாக்கினார்.
(4) படத்தில் நிறைய அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருப்பதால் அறிவியலை தவறாக சொல்லிவிடக்கூடாது, முடிந்தவரை சரியாக சொல்ல வேண்டும் என்பதற்காக Theoretical physicist Kip Thorne அவரை இந்த படத்தின் scientific consultant ஆக நியமித்து அவர் மூலம் இந்த Relativity, Wormhole மற்றும் Blackhole பற்றி முடிந்தவரை சரியாக படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
(5) படத்தில் Wormhole மற்றும் Blackhole காட்சியமைப்புக்காக Theoretical physicist Kip Thorne மற்றும் 30 பேர் கொண்ட Visual Effects குழுவும் இணைந்து பணியாற்றினர். உண்மையாக Wormhole மற்றும் Blackhole எப்படி இருக்குமோ அதை திரையில் உருவாக்க Kip Thorne அவர்கள் Theroritical equation ஐ உருவாக்கி அதில் உள்ளது படி Visual Effects செய்தனர்.
(6) Blackhole உருவாக்கத்தில் உள்ள சில frame ஐ correction செய்யவே 100 மணி நேரம் ஆகியதாம். அதற்காக அவர்கள் பயன்படுத்திய data மட்டும் 800TB அளவானது.
Blockhole Making Video...
https://www.youtube.com/watch?v=MfGfZwQ_qaY
(7) IMAX கேமராவில் 66 நிமிடங்கள் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. The Dark Kinght Rises படம் 72 நிமிடங்கள் படப்பிடிக்கப்பட்டது. அந்த படத்திற்கு அடுத்தபடியாக இந்த படம் தான் அதிக நேரம் IMAX கேமராவில் எடுக்கப்பட்ட திரைப்படம்.
மேலும் பல உலக சினிமா தகவலுக்கு
https://www.facebook.com/hollywoodmve
லைக் செய்யவும்...