Sunday, April 29, 2012

The Great Dictator-(1940)- சாப்ளின் அட்வைஸ் ஹிட்லர்க்கு

ஹிட்லர் காலத்தில் அந்த சார்லி சாப்ளின் தில்”.. இந்த வரிகள் விக்ரம் நடித்த தில் படத்தில் வரும் ஒரு பாடல் வரிகள். இந்த பாடல் வரிகளின் அர்த்தம் “The Great Dictator” என்ற படத்தை பார்க்கும் வரை எனக்கு புரியவில்லை. நமக்கு ஒரு நாட்டின் தலைவரோட (உ.த: கலைஞர், ஜெ , சோனியா) கொள்கை பிடிகலைனா என்ன பண்ணுவோம் ?? அவருக்கு நீ பண்ணுறது சரி இல்லைன்னு எப்படி சொல்லுவோம் ?? நம்மலோட எதிர்ப்பை எப்படி காட்டுவோம் ?? இப்ப இருக்குற இணைய வசதி முலம்மா நம்ப கருத்தை எப்படி வேண்டுமானாலும் வெளிபடுத்தலாம், எதிர்ப்பை வெளிபடுத்த நிறைய வழிகள் இருக்கு. போடியில உக்காந்துகிட்டு வைட் ஹவுஸ் ஒபாமாவுக்கு ஒரு பகிரங்க கடிதம் நம்ப ப்ளாக்ல எழுதலாம். 

அவருக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ அத பத்தி எல்லாம் நாம் கவலை பட வேண்டியது இல்லை. கடிதம் பிடிக்கலையா திருக்குறள் மாதிரி நாளே வரியில நச்சுனு ஒரு தலைவரோட கொள்கைய கிண்டல் பண்ணி ட்விட்டர்ல ட்வீட் போடலாம். இது எல்லாம் இப்ப நம்பல மாதிரி காமன் மேன் பண்ணுறது. ஆனா ஒரு சினிமா படைப்பாளி ஒரு தலைவர் பண்ணுற செயல் பிடிகலைனா தன்னோட கருத்தை சினிமா முலமா சொல்லுவான், ஆனா அப்படி கருத்து சொல்லற படம் எல்லாம் டாக்குமெண்டரி லிஸ்ட்ல சேந்துரும். அப்படி ஒரு கிரேட் லீடர்க்கு!!!! தி கிரேட் சார்லி சாப்ளின் அட்வைஸ் செஞ்சு எடுத்த தி கிரேட் திரைக்காவியம் தான் “The Great Dictator”. அந்த தலைவர்!!!! வேறு யாரும் இல்லை, சார்லி சாப்ளின் மாதிரியே மீசை வச்ச அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler).


ஹிட்லரை பத்தி தெரியாதவங்க இருக்க முடியாது. தெரியாதவங்களுக்கு ஒரு சின்ன அறிமுகம். ஹிட்லர் ஜெர்மன் நாட்டை ஆட்சி செய்த ஒரு அரசியல்வாதி, சாதாரண ஆட்சியாளர் கிடையாது, மிக பயங்கரமான சர்வாதிகாரி. அவர் ஆட்சி செய்த காலகட்டத்தில் அவரின் யூத எதிர்ப்பு கொள்கை காரணமாக கிட்டதட்ட 11 மில்லியன் (1.1 கோடி) பேரை கொன்ற ஒரு கொடூரன்.

 உலகையே தன் காலடியில் கொண்டு வர துடித்த கிராகதன். இரண்டாம் உலக போர் நடைபெற முக்கிய காரணமாக இருந்த ஒரு லீடர். இப்படி பட்ட ஒரு சர்வாதிகாரியை மிக பயங்கரமாக பகடி செய்து, “அடேய் நீ பண்ணுறது தப்பு, உன்னோட கொள்கைகள் ரொம்ப முட்டாள்தனமானதுன்னு” செவுட்டில் அறைந்தாற்போல் சாப்ளின் சொன்ன படம் The Great Dictator”.


இந்த படத்தில் சாப்ளின் டபுள் அக்டு பண்ணி இருப்பர். ஒரு சாப்ளின் மூடி திருத்தும் நாவிதர், இவர் ஒரு யூதர். மற்றும் ஒரு சாப்ளின் டோமானியா (ஜெர்மனி) என்ற நாட்டை ஆண்டு வரும் சர்வாதிகாரி. பெயர் ஹெயக்கல் (ஹிட்லர்). இவருக்கு யூதர்களை கண்டால சுத்தமாக பிடிக்காது. தன் நாட்டில் யூதர்கள் யாரும் இருக்க கூடாது என்று, யூதர்களை பிடித்து சிறையில் அடைக்க தன் படையை ஏவி விட்டு இருப்பார். பார்பர் (நாவிதர்) சாப்ளின் ஹெயக்கல் படையிடம் இருந்து தப்பித்து உயிர் பிழைக்க ஓடி கொண்டு இருப்பார். இடையே ஹெயக்கல் பக்கத்து நாடான பாக்டீரியாவின் (இத்தாலி) சர்வாதிகாரி நபோலினியுடன் (முசோலினி) இனைந்து அடுத்த உலக போருக்கு ஆயுத்தம் ஆகி கொண்டு இருப்பார்.

பார்பர் சாப்ளின் ஹெயக்கல் படையிடம் மாட்டி சிறையில் அடைக்க பட்டு, பிறகு அங்கு இருந்து தப்பித்து ராணுவ உடையில் சுற்றி கொண்டு இருப்பார். பார்பரின் முக அமைப்பு ஹெயக்கல்(ஹிட்லர்) போல் இருப்பதால், அவரை ஹெயக்கல் என்று ராணுவ தளபதி தவறாக எண்ணி, போருக்கு தயாராகி கொண்டு இருக்கும் ஹெயக்கலின் ராணுவ படை முன்பு உரையாற்ற சொல்வார். ஆனால் யாரும் எதிர் பார வண்ணம் பார்பர் யூதர்களுக்கு ஆதரவாக, உலக போருக்கு எதிராக, சமாதானத்தை வலியுறுத்தி ஏழு நிமிட உருக்கமான உரை ஒன்றை அளிப்பார். அந்த உரை முடிய, படமும் முடிவடையும்.

            
சாப்ளின்  யூதர்களுக்கு ஆதரவாக மற்றும் ஹிட்லரை பகடி செய்து  அதுவும் ஹிட்லர் வாழ்ந்த காலத்திலே பேசும் படம் எடுத்தால் அவரை நிறைய பேர் யூதர் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் சாப்ளின் உண்மையில் யூதர் கிடையாது. யூதர்களின் கஷ்டங்களை புரிய நான் யூதராய் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று ஒரு முறை சொல்லி இருக்கார்.

 நாஜி கொள்கைகளுக்கு எதிராக மற்றும் யூதர்களின் கஷ்டங்களை திரையில் பதிவு செய்த, செய்துகொண்டு இருக்கும் மற்றும் ஒரு மிக சிறந்த படைப்பாளி ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். நாலு படத்துக்கு ஒரு படம் இவர் கண்டிப்பா தன்னோட நாஜி எதிர்ப்பு கொள்கைய மையமா வச்சு ஒரு படத்தை குடுத்து விடுவார்.


படத்தின் சுவாரசியங்கள் சில:
 • சாப்ளின் எடுத்த முதல் பேசும் படம். படபிடிப்பு முழுவதும் அமெரிக்காவில் நடத்த பட்டது. இந்த படம் வெளிவந்த போது அமெரிக்கா உலக போரில் ஈடுபடவில்லை. இருந்தாலும் ஹிட்லரின் கொள்கைகள் தவறானவை என்று பொட்டில் அடித்தாற்போல் சொல்ல வேண்டும் என்று சாப்ளின் இப்படத்தை எடுத்தார்.
 • இந்த படம் தோல்வி அடைந்த இருந்தால், சாப்ளின் நடு தெருவுக்கு வந்து இருப்பார், ஆனால் அது போல் எல்லாம் நடக்காமல் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
 • ஹெயக்கல் (ஹிட்லர்) உலகமே பயந்த சர்வாதிகாரி, ஆனால் அவன் தனியாக இருக்கும் போது, மற்றும் அவன் அலுவலகத்தில் இருக்கும் போது செய்யும் சேட்டைகள், கிறுக்குத்தனங்களை செமையாய் கிண்டல் செய்து இருப்பார் சாப்ளின். ஹெயக்கல் ஒரு காட்சியில் தன் சிலை செய்யும் சிற்பிக்கு ரெண்டே செகண்ட் மட்டும் போஸ் குடுத்து விட்டு, அந்த எடத்தை விட்டு நகர்ந்து விடுவார். சிற்பி சிலை செய்ய ஆரம்பிதற்குகள் ஹெயக்கல் அங்கிருந்து போய் விடுவார். இப்படியாக பல காட்சிகள் வைத்து ஹிட்லரை பகடி செய்து இருப்பார் சாப்ளின்.
 • இப்படம் ஐந்து ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்க பட்டது. ஆனால் எந்த விருதும் கிடைக்கவில்லை.
இந்த படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய உலக சினிமா........

My Rating: 8.6/10......


26 comments:

 1. ஏறக்குறைய ரொம்ப நாட்களுக்கு பிறகு தங்களது திரைப்பட விமர்சனத்தை வாசிக்கிறேன்..மிகவும் நன்றாக உள்ளது.இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை நண்பா. கண்டிப்பா பார்க்கிறேன்.இனி அடிக்கடி எழுதுங்கள்..மிக்க நன்றி.

  ReplyDelete
 2. சிறிது வேலை பளு காரணமாக பதிவு எழுத முடியவில்லை.. இனி அடிக்கடி எழுத முயற்சி செய்கிறேன்... தொடர்ந்து ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 3. ரொம்ப பிடிச்ச படங்களுள் ஒண்ணு.., அதுவும் அந்த கிளைமாக்ஸ் டய்லாக் மாஸ்டர்பீஸ்...

  ReplyDelete
 4. என்னுடைய ஆதர்ச நாயகன் படத்தை பதிவிட்டதற்க்கு நன்றி..ராஜ்.

  ReplyDelete
 5. படத்தை பற்றி நிறைய தகவல்கள் ... நன்றி

  ReplyDelete
 6. @ ...αηαη∂....
  உங்க Profile படத்தில் இருப்பது கூட Dictator சாப்ளின் படம் தானே ?
  நிறைய உலக சினிமா ரசிகர்கள் தங்கள் Profile படமாக சாப்ளின் படத்தை வைத்து இருப்பதை பார்த்து உள்ளேன்...
  உண்மையிலே அந்த கிளைமாக்ஸ் ஸ்பீச் மாஸ்டர் கிளாஸ்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அந்த கிளைமேக்ஸ் ஸ்பீச் ஸ்டில் தான் அது.. :)

   Delete
 7. @உலக சினிமா ரசிகன்
  உலக சினிமாவில் தவிர்க்க முடியாத படம் இப்படம்... வருகைக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 8. // யூதர்களின் கஷ்டங்களை புரிய நான் யூதராய் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று ஒரு முறை சொல்லி இருக்கார். //

  அருமையான கருத்துக்கள். அருமையான விமர்சனம்.

  படம் உடனே பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. இனி நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு படங்களையும் பார்த்விடுவது என்று முடிவெடுத்துள்ளேன். காரணம் ரசிப்புத் தன்மையுள்ள படங்களைத் தான் நீங்கள் பரிந்துரைபீர்கள் என்று தெரியும்


  நேரம் இருந்தால் இந்தக் கதையை படித்துப் பாருங்கள்
  http://seenuguru.blogspot.com/2012/04/blog-post_30.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே... கண்டிப்பாய் பாருங்கள்... நிச்சியம் ரசிப்பேர்கள் படத்தை டவுன்லோட் செய்ய லிங்க் கிடைத்தால் பதிவில் போடுகிறேன்...
   உங்கள் கதையை நான் காலையிலே படித்து விட்டேன்...கருத்தும் இட்டு உள்ளேன்.

   Delete
  2. டொராண்டில் படங்களை தரவிரக்கலாமா?

   Delete
  3. http://www.yify-torrents.com/movie/Charlie_Chaplin_The_Great_Dictator_1940
   நண்பரே....
   மேலே சொன்ன லிங்கில் இப்படத்தின் டொரென்ட் கிடைக்கும். நான் இதில் இருந்து தான் டவுன்லோட் செய்து பார்த்தேன்...

   Delete
 9. இந்த படத்தை ஹிட்லர் ஒரு தனி அறையில் உட்கார்ந்து பார்த்து கடுப்பானாராம்.. சாப்ளினின் வாழ்க்கை வரலாறு படு சுவாரஸ்யமாக இருக்கும்.. படித்து பாருங்கள் ..

  ReplyDelete
  Replies
  1. ஹிட்லர் படத்தை பார்த்து இருந்தா கண்டிப்பா செம கடுப்பு ஆகி இருப்பார்....ஹிட்லரை இந்த படத்தில் சாப்ளின் To the core ஒட்டி இருப்பார்....
   சாப்ளினின் வாழ்க்கை வரலாறை அங்கே இங்கே என்று கொஞ்சம் படித்து உள்ளேன்...முழுசா படிக்கணும்

   Delete
 10. உண்மையிலேயே மிகச்சிறந்த படம் ராஜ். என்னுடைய 12 வயதில் திருவாரூரில் உள்ள ஒரு திரையரங்கில் சாப்ளின் படவிழா நடந்தது. அதில் பார்த்தேன். உங்கள் விமர்சனம் படித்த பிறகு மற்றொரு முறை பார்க்க வேண்டும் போல் உள்ளது.

  ReplyDelete
 11. சாப்ளின் ஒரு சிறந்த நடிகன் அவரை பற்றி பதிவு எழுதிய உங்களுக்கு என் நன்றிகள்

  ReplyDelete
 12. நேத்து நைட் மாசக்கடைசி என்பதால் கிட்டத்தட்ட 15 ஜி.பிக்கு மேல் டவுன்லோட் பண்ணினேன். நிறைய படங்கள் பழசு. நேத்தே பார்த்திருந்தால் இதையும் டவுன்லோட்ல போட்டிருக்கலாம்.

  ஏற்கனவே நம்ம கொழந்த சார் பதிவொன்றில் வாசித்த ஞாபகம். அப்பவே பாக்கணும்னு நெனச்சேன். ஞாபகப்படுத்திட்டீங்க. சீக்கிரம் டவுன்லோட் செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. http://www.yify-torrents.com/movie/Charlie_Chaplin_The_Great_Dictator_1940

   கண்டிப்பா பாருங்க...மேல லிங்க்ல நல்ல பிரிண்ட் கிடைக்குது....
   கொழந்த அவர்களின் பதிவை நானும் படித்து உள்ளேன்,,,,, அத படிச்சிட்டு தான் நான் படத்தை டவுன்லோட் பண்ணினேன்... :)

   Delete
 13. சிறப்பான விமர்சனம் நண்பா! ரொம்ப நாள் முன்பு பார்த்தது.. உங்கள் விமர்சனத்தின் தயவால் அந்த இறுதி உரையை மீண்டும் பார்க்க வேண்டும் போலிருக்கிறது!!

  ReplyDelete
 14. நிறைவான தகவல்.. ஒரு நகைச்சுவை நடிகருக்குள் இவ்வளவு கொள்கை பிடிப்பா?! நன்றி

  ReplyDelete
 15. ரொம்ப நல்ல ஒரு திரைப்படத்தை விமர்சித்து இருக்கீங்க, சூப்பர். இதே போல் நல்ல படங்களின் விமர்சனம் கொடுங்கள்.
  அந்த கிளைமாக்ஸ் உரையை சரியாய் கவனமில்லை, கவனிக்காமல் விட்டு இருப்பேன் போல நீங்க சொன்ன பிறகு தான் அதை திரும்பியும் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

  ReplyDelete
 16. அருமையான விமர்சனம் ராஜ்... கண்டிப்பாக டி.வி.டி வாங்கி பார்க்கிறேன்... தவிறிரக்கம் செய்ய லிங்க் இருந்தால் கொடுங்களேன் பாஸூ

  ReplyDelete
 17. எனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் அதை ஏற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கின்றேன்


  மீண்டு(ம்) வந்தேன்

  ReplyDelete
 18. இதில் இல்லாத ஒரு மொழியை பேசி நடித்திருப்பார். . அதை விட்டுடீங்களே ?

  ReplyDelete