என் விகடன் "மதுரை" ஆன்லைன் பதிப்பில் என்னுடைய ப்ளாக் இந்த வாரம் அறிமுக படுத்த பட்டு உள்ளது. அதன் முழு விவரத்தை இங்கு காணலாம். சும்மா படங்களை மட்டும் குடுக்க வேண்டாமே என்று என்னை பற்றிய சிறு பிளாஷ்பேக் உடன் இந்த பதிவை தொடங்குகிறேன்.
5 வருடங்கள் முன்பு Memento கதையை புரிந்து கொள்ள கூகிள்லில் "Memento விமர்சனம்" என்று தேடிய பொழுது தான் தமிழ் ப்ளாக் பற்றி எனக்கு தெரிய வந்தது. அதில் நிறைய மக்கள் தமிழில் எழுதுகிறார்கள் என்று எனக்கு தெரிந்தது. தேடுதல் முடிவில் நிறைய சினிமா சம்பந்த பட்ட வலைப்பூக்களை காண நேர்ந்தது. அந்த வலைப்பூக்களை புக்மார்க் செய்து கொண்டு நேரம் கிடைக்கும் போது அதை படித்து வந்தேன். விமர்சனம் நல்லா இருக்கும் படங்களை வீக் எண்டு நாட்களில் டவுன்லோட் செய்து பார்க்கவும் செய்தேன். பல வலைப்பூக்களை படித்து வந்தாலும் ஒரே ஒருவருக்கு மட்டும் பின்னுட்டம் இட்டேன், என்னுடைய முதல் பின்னுட்டம் காண இங்கே செல்லவும். கிட்ட தட்ட 5 வருடங்கள் வலைப்பூ வாசிப்பு அனுபவத்தை வைத்து சென்ற வருடம் நாமும் வலைப்பூ ஒன்றை ஆரம்பிப்போம் என்று நான் உருவாக்கியது தான் இந்த ப்ளாக்.
பள்ளி நாட்களில் நான் தமிழ் மொழி படித்ததே கிடையாது. மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை என்னுடைய செகண்ட் லாங்குவேஜ் ஹிந்தி, அப்புறம் 11, 12 ஆம் வகுப்பில் பிரெஞ்சு ஆக இருந்தது. தமிழை ராணி காமிக்ஸ், குமுதம், ஆனந்த விகடன், ராஜேஷ்குமார் நாவல் முலமே கற்று கொண்டேன். இப்படி பட்ட தமிழ் அறிவு கொண்ட நான் தமிழில் கதை, கவிதை, கட்டுரை எழுதி குத்துயிர் கொலையுயிர் ஆக இருக்கும் தமிழை இன்னும் கொலை செய்ய வேண்டாம் என்று, தமிழ் இலக்கணம் அதிகம் தேவை படாத சினிமாவை பற்றி எழுதலாம் என்று முடிவு செய்து சினிமாவை தேர்ந்தெடுத்து எழுதி வருகிறேன். சினிமா, வீடியோ கேம்ஸ் என்று இருந்த நான் இடையில் பாதை மாறி செல்வது போல் நான் உணர்கிறேன். மீண்டும் சினிமா பதிவுகளை எழுத என் விகடன் ஊக்கம் அளித்து உள்ளது.
விகடனில் தமிழ் வலைப்பூக்களை "என் விகடனில்" அறிமுக படுத்த ஆரம்பித்த உடன் அவர்களுக்கு எழுதி போடலாம் என்று எண்ணினால், ஏதோ ஒன்று என்னை தடுத்து. நாம் அந்த அளவு வொர்த் ஆக எழுதிவிட்டோமோ என்று. சரி இன்னும் கொஞ்சம் நன்றாக் எழுதி தன்னம்பிக்கையை கூடிய பிறகு எழுதி போடலாம் என்று இருந்தேன். கடைசியில் "என் விகடன்" புக்கை நிறுத்தும் அளவுக்கு போய் விட்டார்கள், சரி இன்னும் தாமதிக்க வேண்டாம் என்று போன வாரம் எழுதி போட்டேன். இந்த வாரம் வெளியிட்டு விட்டார்கள்.
விகடன் படித்து தமிழ் கற்று கொண்ட எனக்கு விகடனில் எனது வலைப்பூ பற்றிய அறிமுகம் வந்தது அளவில்லா மகிழ்ச்சி...! இதில் ஆஸ்கார் தமிழன் தவிர அணைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்தது தான் பெற பட்டது.
வாழ்த்துக்கள் நண்பா கலக்குறிங்க
ReplyDeleteநன்றி ஹாரி... :)
Deleteவாழ்த்துக்கள் தலைவா :)..,
ReplyDeleteஇணையத்துல மட்டுமா இல்ல ஹார்ட் காப்பியும் வருமா ??
இல்ல தல, ஹர்ட் காப்பி நிறுத்திட்டாங்க.. :(
Deleteஇனிமே ஆன்லைன்ல மட்டும் தான் என் விகடன் வரும்..வாழ்த்துக்கு நன்றி தல..
வாழ்த்துக்கள் பாஸ்! திறைமைக்கேற்ற அங்கீகாரம்தான்.. :-)
ReplyDelete*ஆக்சுவலி அதே பதிவுல தான் என்னோட முதல் கமெண்டும் இருந்திச்சு.. (ஆனா ஒரு வெளம்பரத்துக்காக)
நன்றி தல... சமீபத்துல ஜெய்க்கு பல கமெண்ட் போட்டேன்..கமெண்ட் வருதான்னு அடிக்கடி பார்க்க அங்க போவேன்..அப்ப உங்க கமெண்ட் கண்ணுல பட்டுச்சு...அது தான் உங்க முதல் கமெண்ட் என்று எனக்கு தெரியல..
Deleteஅப்புறம் உங்க http://www.sportsjz.blogspot.in/ அப்டேட் பண்ணுறது இல்ல போல... :)
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநன்றி நண்பரே....நீங்களும் அடிக்கடி பதிவு எழுதுங்கள்....இப்ப சினிமா பதிவுலகம் கொஞ்சம் டல் அடிக்கிற மாதிரி இருக்கு... :)
Deleteஅப்புறம் உங்களை வேறு விதத்தில் கான்டாக்ட் செய்ய முடியுமா...மெயில் முலம்..என்னோட மெயில் raj.zte@gmail.com
மிக்க மகிழ்ச்சி... விளக்கமாக சொன்னதற்கு நன்றி... மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteநன்றி தனபாலன் சார்..வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி,..
Deleteவாழ்த்துக்கள் ராஜ்.......
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜ் :-)
ReplyDeleteநன்றி Jey..
Deleteவாழ்த்துக்கள் ராஜ்.
ReplyDeleteஆனந்த விகடன் உங்களை அங்கீகரித்தது ...தமிழ்த்தாய் உங்கள் திறமையை உச்சி முகர்ந்து வாழ்த்தியதற்கு சமம்.
இன்னும் நிறைவாக... வளர்வீர்கள்.
வாழ்த்துக்கள்.
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி சார்...
Deleteஏற்கனவே உங்கள பாலோ பண்ணிருந்தேன் , இப்ப என்னோட மெயின் மெயில் ஐடி மாத்தி , பழச நீக்குனதுல பழைய ஃபாலோயிங் காணோம். இப்ப மறுபடியும் புதுசா உங்களை பாலோ பண்ணுரேன். இனி உங்க பதிவு மிஸ்ஸாகாம படிச்சிடுவேன் :)
ReplyDeleteகண்டிப்பா Jey...பதிவுலகம் முலமாக நாம் இனைந்து இருப்போம்..
Deleteஹிரேட் தல! நான் நேற்றே என் விகடன் தளத்தில் பார்த்துவிட்டேன். கொழந்த ப்ளாக்கும் வந்திருந்தது!அப்புறம் அந்த Memento விசயம் சூப்பர்! நானும் அதே போல சினிமா ஆய்வில் ஈடுபடும் போதுதான் ப்ளாக்கென்ற ஒரு விடயம் இருப்பதாகவே அறியமுடிந்தது. அந்த ஜெய் ஏன் ப்ளாக் எழுதுவதை மூட்டை கட்டிவிட்டார்! நோலனோட படங்களின் சில முடிச்சுக்களை அருமையாக எழுதியிருப்பார். அவர் பதிவிற்கு பின்னான பின்னூட்ட விவாதங்களும் அருமையாக இருக்கும் மனுஷன் அப்புறம் எங்க போனார்?
ReplyDeleteஜெய் எழுதாம இருக்கிறதுக்கு ஒரு பெரிய வரலாறு நிகழ்வு இருக்கு...அதை பத்தி நம்ம தனியா பேசுவோம்... :)
Deleteரொம்ப நல்ல மனுஷன் ஜெய்...சிறந்த பதிவர்....அவர் எழுதாம இருக்கிறது எனக்கும் ரொம்ப கஷ்டமான விஷயம் தான்... நிறைய வாட்டி மீண்டும் எழுத வர சொல்லி மெயில் அனுப்பினேன்..ஆனால் ரிப்ளை வர வில்லை.. :(
அமைச்சரே ... வரலாறு ரொம்ப முக்கியமாச்சே? கொஞ்சம் சொல்லுங்களேன். ;)
Deleteவாழ்த்துக்கள் ராஜ் ..........
ReplyDeleteநன்றி தல..
Deleteவாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteமென்மேலும் உயர எனது வாழ்த்துக்கள் நண்பா.
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே...
Deleteவாழ்த்துக்கள் நண்பா ... பிரபல பதிவர்கள் வரிசையில் நீங்களும் சேர்ந்துவிட்டீர்கள். இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteதல, எப்படி ஒரே ஒரு பாட்ஷா தானோ.. அதே போல் ஒரே ஒரு பிரபல பதிவர் மட்டும் தான் ஊருல இருக்கார்.."பிரபல பதிவர்" என்கிற பேருல வலைப்பூ வேற எழுதிக்கிட்டு இருக்கார்..பிரபல பதிவர்™ (Trade Mark) வேற வாங்கி இருக்கார்.. :)
Deleteஆங் ... மறந்துட்டேன். சினிமா சினிமான்னு சொல்லிட்டு விகடன் காரனுங்க உங்க ஒரு சினிமா பத்தின பதிவையும் போடலியே? வொய் திஸ் கொலவெறி?
ReplyDeleteஇல்ல தல..அவங்களுக்கு என்னோட எல்லா பதிவுகளையும் அனுப்பி இருந்தேன்...ஏனோ எடிட் செய்ய கஷ்டமா இருந்து இருக்கலாம்..அதனாலே வெறும் ஜோக்ஸ், ஒரே ஒரு ஆஸ்கார் பதிவை மட்டும் போட்டு இருக்காங்க..அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்...பட் ஓகே.. :)
Deleteஹி ஹி ... இதுக்கு தான் நம்மள மாதிரி சினிமான்னா, சினிமாவோட மட்டும் ஒட்டிக்கணும். அவங்களும் நோ சாய்ஸ். :)
Deleteநீங்க மட்டும் தான் தல...உங்க பாதையில் இருந்து மாறாம ஹாலிவுட் சினிமா, வீடியோ கேம்ஸ் பத்தி மட்டும் எழுதிக்கிட்டு இருக்கீங்க..ஏனோ நான் இடையில கொஞ்சம் விலகி போயிட்டேன்...அடுத்து மீண்டு வர இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்தி கொள்ளவேண்டும்..
Delete//ஏனோ நான் இடையில கொஞ்சம் விலகி போயிட்டேன்//
Deleteயுத்தம் ஆரம்பதுக்காக கொஞ்சம் விலக வேண்டி இருக்கும்.. அண்ணே மாட்டேன்னு மெயில் மட்டும் அனுபிடாதிங்க அண்ணே.. மீ இப்பவே வெரி பாவம்..
வாழ்த்துக்கள் நண்பா...தொடர்ந்து கலக்குங்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே... :)
Deleteபட்டைய கெளப்புங்க பாஸு.....
ReplyDeleteநன்றி டாக்டர் சார்.. :)
Deleteநீ இன்னும் சீக்கிரம் ப்ளாக் தொடங்கி இருக்கணும் ராஜ்.அஞ்சு வருஷம் ஏன்.? உன்னையும் பதிவர் குமரனையும் நான் மறக்க முடியாது .நான் ப்ளாக் தொடங்கிய போது நீங்கள் இருவரும் எனக்கு தந்த ஆதரவு நான் மறக்க கூடாதது.உன் ப்ளாக் விகடனில் வந்தது உனக்கு எவ்வளோ மகிழ்ச்சியோ அதே மகிழ்ச்சி எனக்கும்.
ReplyDeleteஇல்ல விஜய்...தமிழ் எழுதுறதுல எனக்கு கொஞ்சம் தகராறு..அது தான் ரொம்ப ரொம்ப லேட் பண்ணிட்டேன்...
Deleteகுமரன், அப்புறம் முரட்டு சிங்கம் அருண் இவங்க ரெண்டு பேரும் தான் முத முதல என்னோட ப்ளாக்கு வந்து என்னையும் ஊக்க படுத்தினார்...
உங்க வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி விஜய்...நீங்களும் விகடன்க்கு எழுதி போடுங்க...எப்படி அவர்களுக்கு எழுத வேண்டும் என்று உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்....
வாழ்த்துக்கள் நண்பா! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது :-)
ReplyDelete// சினிமா, வீடியோ கேம்ஸ் என்று இருந்த நான் இடையில் பாதை மாறி செல்வது போல் நான் உணர்கிறேன் //
சீக்கிரம் பேக் டு பார்ம் வாங்க... இன்னும் நிறைய எழுதுங்க. நானே இப்போ மாசத்துக்கு 10 பதிவு போடுறேன் :-) நீங்க கலக்க வேண்டாமா?
மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தொடரட்டும் நற்பணி :-)
கண்டிப்பா தல....சீக்கிரம் பார்ம்க்கு வறேன்.... :)
Deleteஉங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.....
வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ஜீவா.. :)
Deleteவாழ்த்துகள் அண்ணா.
ReplyDeleteநன்றி பிரபு.... நீங்கள் ரெனால்ட் நண்பர் என்று இந்த வாரம் தான் தெரிந்தது..:)
Deleteவாழ்த்துக்கள் ராஜ்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.
நன்றி நண்பரே..
Deleteமிகவும் மகிழ்ச்சி ராஜ்..
ReplyDeleteதொடர்ந்து இதுபோல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள்
நன்றி பாஸ்...சாதனை எல்லாம் ஒன்னும் இல்ல நண்பா.. :)
Deleteவருகைக்கு மிக்க நன்றி..
இது வலைப்பூக்களுக்கு கொடுக்கப்படும் ஆஸ்கார் விருது..வாழ்த்துக்கள் பாஸ்.....
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பாஸ்... :)
Deleteதல கலக்றீங்க போங்க... நீங்கதான் தல அந்த பிரபலம்... அட்லீஸ்ட் நான் ஒரு விகடன் பிரபலம்னு நீங்க சொலலாம்... டிரீட் எப்போ
ReplyDeleteஅடுத்து இந்த மாசம் கடைசியில சென்னை வரேன் தல...அப்போ மீட் பண்ணும் போது ட்ரீட் தரேன்.. :)
Deleteமிக மகிழ்ச்சி வாழ்த்துகள் ராஜ்
ReplyDeleteமிக்க நன்றி சார்..
DeleteCongrats Raj!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜ்!
ReplyDelete// சரி இன்னும் தாமதிக்க வேண்டாம் என்று போன வாரம் எழுதி போட்டேன். இந்த வாரம் வெளியிட்டு விட்டார்கள்.//
உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு :-))
வாங்க வவ்வால்...
Deleteஉங்க வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... :)
வாழ்த்துகள் ராஜ்! தொடர்ந்து கலக்குங்கள்! சினிமா மட்டுமல்லாமல் அரசியல், சமூகம், உங்கள் ஹைதராபாத் அனுபவங்கள் என்று வேறு பகுதிகளும் முயலுங்களேன்!
ReplyDeleteC ongratulations.....................
ReplyDeleteகலகுரிங்க ராஜ், வாழ்த்துகள்.
ReplyDeleteஉள்ளம் நிறை வாழ்த்துக்கள் தல ..
ReplyDelete