Friday, January 25, 2013

விஸ்வரூபம் (2013) விமர்சனம் - இயக்குனர் கமலின் மாஸ்டர் பீஸ் படம்.

((( நோ ஸ்பாய்லர்கள் - No Spoilers )))

விஸ்வரூபம் படத்தை நான் வசிக்கும் சான் டியகோ நகரில் இன்று இரவு 8:30 காட்சி பார்த்தே விட்டேன். கடந்த ரெண்டு நாட்களாய் என்னுடைய எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி கிடந்தது, படம் அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று. இந்த படத்திருக்கு நான் கிட்ட தட்ட ஆறு மாதமாய் காத்து இருந்தேன், இத்தனை நாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா என்றால், நிச்சியம் கண் மேல் பலன் கிடைத்தது. விஷுவல் ட்ரீட், மைன்ட் ப்லோவிங் படம் இது. தமிழில் இது வரை இது போன்ற ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு படம் வெளி வந்து உள்ளது. படம் என்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி செய்து உள்ளது என்றே சொல்வேன். கிளாஸ், டெக்னாலஜி, மரண மாஸ் என்ற அணைத்து வஸ்துகளையும் சரியான விகிதத்தில் கலந்து வழங்கி உள்ளார் இயக்குனர் கமல்ஹாசன். நான் பார்ப்பது தமிழ் படமா இல்லை, ஹாலிவுட் படமா என்கிற சந்தேகம் படம் முழுக்க எனக்கு வந்து கொண்டே இருந்தது. கமல் பேசும் தமிழை வைத்து தான் நான் பார்ப்பது தமிழ் படம் என்கிற உணர்வே எனக்கு வந்தது. அப்படி பட்ட படம் இது. வொர்த் வாட்சிங்.


படத்தின் ஒன் லைனர், படத்தின் பாடல் வெளியீடு விழாவில் ஏற்கனவே கமல் சொல்லி இருக்கிறார். விஷ் (கமல்) மற்றும் பூர்ணிமா (பூஜா குமரி) இருவருக்கும் கல்யாணம் நடந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசிக்கிறார்கள். விஷ் கதக் சொல்லி குடுக்கும் மாஸ்டர். பூர்ணிமா அமெரிக்க வருவதருக்கு விஷ்சை திருமணம் செய்ய ஒத்து கொள்கிறார். பூர்ணிமாவிருக்கு விஷ் மீது பெரிய ஈடுபாடு கிடையாது. டைவர்ஸ் வாங்க விஷ்சிடம் எதாவது குறை கண்டுபிடிக்க வேண்டி பூர்ணிமா பிரைவேட் டிடக்டிவ் ஒருவரை அமர்த்தி அவரை பின் தொடர செய்கிறார். அந்த டிடக்டிவ் விஷ்ஷை பின் தொடர்ந்து செல்ல, அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்து இருக்கிறது. கதை அங்கிருந்து அசுர வேகம் பிடிக்கிறது. எதிர்பாரா திருப்பங்களுடன் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், அல்கொய்தா, ஜிஹாத், தாலிபான், ஒசாமா பின்லேடன், என்று பயணம் செய்து கடைசியில் அமெரிக்காவில் அதுவும் அடுத்த பாகத்துக்கு ஆச்சாரம் போட்டு அட்டகாசமாய் முடிகிறது.


படத்தின் நாயகன் கமல் ஹாசன், இவரின் நடிப்பை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். மனிதர் அந்த காதபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளார். கதக் ஆடும் போது அவர் காட்டும் முக பாவனைகள் அற்புதம். ஏதோ ஒரு நளினமான பெண் தான் கமல் போல் வேடம் பூண்டு உள்ளாரோ என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. உண்மையான பெண் கூட இவர் அளவுக்கு முக  பாவனைகளை தந்துருபமாக காட்டி இருப்பாரா என்பது சந்தேகமே. படத்தில் கமலின் பரிணாம மாற்றம் (Transformation) காட்சி ஒன்று வரும், அந்த காட்சி ஒரு மாஸ் காட்சிக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதருக்கு தக்க சான்று. ஏசி குளிரிலும் எனக்கு கூஸ்பம்ப்ஸ் ஏற்பட்டது. செம சீன் அது. சண்டைகாட்சிகளில் கமல் கடுமையாக உழைத்து உள்ளார். ஆனால் ஆரம்ப காட்சிகளில் கமலின் முக சுருக்கம் நன்றாக தெரிகிறது. படத்தில் வயதான முக தோற்றத்தை ஜஸ்டிபை செய்து இருப்பார் கமல். நிருபமா விஷ்ஸிடம் டைவர்ஸ் கேட்க வயதான முக தோற்றத்தை ஒரு காரணமாக சொல்லி இருப்பார்.


படத்தின் கதாநாயகி நிருபமா (பூஜா குமரி) மற்றும் அஸ்மிதா (அண்ட்ரியா). இருவரில் பூஜா குமாரிக்கு கொஞ்சமே கொஞ்சம் ஹெவி ரோல். அமெரிக்காவில் Phd முடித்த அணு விஞ்ஞானியாக வருகிறார். இவர் பேசும் ஐயர் பாஷை சில நேரங்களில் சிரிப்பை வர வைத்தாலும், நிறைய நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கமல் டச் காமெடி வசனங்கள் இவர் முலம் கேட்கலாம். பெரிய சிரிப்பு வர வில்லை என்றாலும் கண்டிப்பாய் ஸ்மைல் பண்ணலாம். அண்ட்ரியாவிருக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை, ட்ரைலரில் அவர் பேசிய வசனங்கள் தான் படத்தில் பேசி உள்ளார். பெருசாய் ஒன்றும் இல்லை.

வில்லன் ஓமர் (ராகுல் போஸ்), ஆப்கான ஜிஹாத் போராளியாக வருகிறார். நிஜமான ஆப்கான் ஜிஹாத் போராளி ஒருவன் எப்படி இருப்பான் என்று நான் கற்பனை செய்து இருந்தேனோ, அதே போல் தான் இவரும் நடித்து இருக்கிறார். மனிதர் அந்த காதபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளார். விஜயகாந்த் படத்தில் வரும் தீவிரவாதி வாசிம்கான் போல் இவர் என்று நீங்கள் கற்பனை செய்தால், ரொம்ப சாரி. இவர் கத்தி கூட பேச மாட்டார். எந்த காட்சியிலும் எரிச்சல் வருவது போல் இவரது ஆக்டிங் இல்லை என்பது பெரிய ஆறுதல். ஒரு காட்சியில் Tall sheikh வேறு வருவார், அவர் யார் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஓமர் ஏன் தமிழ் பேசுகிறார் என்பதருக்கு அவர் ஒரு காரணம் சொல்வர், "நான் கொஞ்சம் காலம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்தேன், அதனால் எனக்கு தமிழ் தெரியும்" என்று சொல்லவர், இந்த காட்சி அவசியம் தேவை, இல்லை என்றால் படம் முழுக்க அவர் உருது தான் பேசி கொண்டு இருப்பார். தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்பு ஒன்று இந்த காட்சிக்கு ஆட்சேபனை செய்து ஓமர் என்கிற போராளி எப்படி இந்தியா வந்து திரும்பி போனார் என்று கமலிடம் ஆதாரம் கேட்கிறது. நெம்ப கஷ்டம் தான்.


படத்தின் பின்னணி இசை மிக பெரிய ஏமாற்றம். டெம்போவை ஏற்றும் இசை என்று எதையும் சொல்ல முடியாது. நிறைய இடங்களில் மொக்கையாய் இருந்தது. கமல் இசை பொறுப்பை ஷங்கர், எசன்லாய்யிடம் குடுத்ததுக்கு பதில், ரஹ்மானிடம் குடுத்து இருக்கலாம். அவருக்கு ஏற்ற ப்ளாட். படம் இன்னும் அட்டகாசமாய் வந்து இருக்கும். படத்தில் வெறும் நிறைகள் மட்டும் தான் உள்ளது, குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம், பெரிய குறை ஒன்று உள்ளது. வழக்கமா கமல் படத்தில் இருக்கும் குறை தான். படம் படித்தவர்களுக்கு தான் புரியும். நிறைய டெக்னிகல் வார்த்தைகள், சிலியும் பாம், ஆட்டாமிக் பவர், ஷீல்ட் பாக்ஸ் என்று பாமரன் கேள்விபடாத வார்த்தைகள் அப்புறம் அவனுக்கு அவ்வளவு தெரியாத அமெரிக்க ஆப்கன் போர் என்று சில விசயங்கள் இருக்க தான் செய்கிறது. ஆனால் ஆப்கான் போர், ஜிஹாத் பற்றி கொஞ்சம் இணையத்தில் படித்தவர்கள் இந்த படத்தை ஹாலிவுட் படத்திருக்கு இணையாக கொண்டாடுவார்கள். 

கடைசியாக இந்த படத்தில் தமிழ்நாடு முஸ்லிம் அமைப்புகள் சொல்வது போல், சர்ச்சைக்குரிய காட்சிகள், முஸ்லிமை இழவுப்படுதும் காட்சிகள் இல்லையா என்று என்னை கேட்டல், இல்லை என்று தான் நான் சொல்வேன். படத்தில் நிறைய இடத்தில அல்லா புகழ் தான் பாடி உள்ளார் இயக்குனர் கமல்ஹாசன். சின்ன ஸ்பாய்லர், படம் ஆரம்பித்த உடன் தெரிந்து விடும், படத்தில் கமல் பிராமன் இல்லை, அவர் "விசிம்" என்கிற முஸ்லிம் என்று. அப்புறம் இந்த படத்தை யார் எல்லாம் எதிர்க்கலாம் என்றால், அல் கொய்தா அமைப்பை சேர்ந்தவர்கள், ஜிஹாத் போராளிகள், வெடி குண்டு வைக்கும் தீவிரவாதிகள் வேண்டும் என்றால் எதிர்க்கலாம். காமன் மேன்னுக்கு இது ஒரு விஸ்வரூப அனுபவம்.
அடுத்த பதிவில் இயக்குனர் கமல் பற்றி எழுதுகிறேன்.

விஸ்வரூபம் - Mind Blowing...

My Rating : 8.4 ....


Thursday, January 24, 2013

விஸ்வரூபம் - இயக்குனர் கமல் - யுஸ் ரீலீஸ் - எகிறும் எதிர்பார்ப்பு !!

கமல் "விஸ்வரூபம்" படத்தை ஆரம்பிக்கும் போது சத்தியமாக கனவிலும் இப்படி ஒரு எதிர்ப்பு வரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். செல்வராகவன் இயக்கத்தில் கமல் - படத்தின் பெயர் "விஸ்வரூபம்" என்கிற அறிவிப்பு வந்தவுடன், எனக்கு பெரிய ஆச்சிரியம், கமல் எப்படி செல்வா இயக்கத்தில் நடிப்பார் என்று, சத்தியமாக ஒத்து வரவே வராது என்று எண்ணினேன். நான் நினைத்தது போலவே படம் ஆரம்பித்த சில நாட்களிலே செல்வா படத்தில் இருந்து விலகினார். படத்தை இயக்கும் பொறுப்பு கமலிடம் வந்து சேர்ந்தது. கமல் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை விட அவர் மிக சிறந்த இயக்குனர், அதற்க்கு சாட்சி அவர் இயக்கிய படங்கள் "ஹேராம்" மற்றும் "விருமாண்டி". ஹேராம் வணிகரீதியான தோல்வி என்றாலும், தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு எடுத்து சென்ற படம் என்கிற பெயர் உண்டு. "விருமாண்டி" வணிகரீதியாக சுமாரான வெற்றி என்றாலும், எனக்கு மிகவும் பிடித்த கமல் படங்களில் ஒன்று. கமலில் கதை சொல்லும் பாணி அட்டகாசமாய் இருந்தது. உலக சினிமா அறிவு (இணைய கூகிள் அறிவு - அது தானே உலக சினிமா அறிவு !! ) எதுவும் தெரியாத வயதில் நான் பார்த்து அசந்து போன படம். 


ஒரே சம்பவங்களை, கொத்தாளத் தேவர் முதலில் சொல்லும் போது தன் வசதிப்படி சுருக்கிச் சொல்வார். விருமாண்டி குறித்த நமது சந்தேகங்கள், தொடர்ந்து விருமாண்டியே தன் கதையை விரிவாகச் சொல்லும் போது அகலுகின்றன. சிறப்பான கதை சொல்லும் உத்தியைக் கடைபிடித்து இருப்பார் இயக்குனர் கமல். மனித உளவியலை தந்துருபமாக காட்டி இருந்தார் கமல். மனிதன் தன்னை தன்னை எப்பொழுதும் நல்லவனாக காட்டி தான் எந்த உண்மையும் சொல்லுவான் என்கிற சித்தாந்தை கொண்ட படம். நம்மில் 99% பேர் "கொத்தலத் தேவர்" கதாபாத்திரம் கதை சொல்வது போல் நம் வாழ்கையில் கண்டிப்பாய் கதை சொல்லி இருப்போம். நான் அடிக்கடி எனது நண்பர்களிடையே சொல்லும் வாசகம் "விருமாண்டி ஸ்டைல் கதை சொல்லாத டா" என்பதே ஆகும். 

விருமாண்டி பார்த்து விட்டு தலைவர் சுஜாதா இது போன்று சொல்லி இருந்தார் ''“சிக்கலான இரண்டு ‘பாயிண்ட் ஆஃப் வியூ’வில் (POV) சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையை மக்கள் புரிந்துகொள்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை என்கிற செய்தி, தமிழ் சினிமாவின் முன்னேற்றத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் அறிகுறி. மேலும், இவ்வகை முயற்சிகளில் ஈடுபட அது தெம்பு அளிக்கும்
விருமாண்டி என்னை பொறுத்த வரை "ரோஷோமான்" படத்தை விட சிறந்த படைப்பு. ரோஷோமான் படத்தில் அகிரோ ஒரே சம்பவத்தை பல கோணங்களில் நான்கு பேர் தங்களை நல்லவர்கள் போல் காட்டி அந்த சம்பவத்தை விவரிப்பது போல் சொல்லி இருப்பார். கேமரா ஆங்கில் ஒவொருவரும் கதை சொல்லும் போது மாறும். ஆனால் கமல் அதை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் பல சம்பவங்களை ஒரே கேமரா ஆங்கிளில் காட்டி இருப்பார். "ரோஷோமான்" பார்க்கும் போது எனக்கு கொட்டாவி தான் வந்தது, படத்தில் விறுவிறுப்பு மற்றும் சுவாரிசியம் மிஸ்ஸிங். ஆனால் விருமாண்டியில் அனைத்தும் இருந்தது.


இப்படி பட்ட நல்ல திரைபடத்தை இயக்கிய கமல், தனது அடுத்த படமான விஸ்வரூபத்தை இயக்க எடுத்து கொண்ட காலம் கிட்ட தட்ட 5 வருடம். கண்டிப்பாய் கதையை நன்றாக செதுக்கி இருப்பார், படம் செம விறுவிறுப்பாய், எந்த பிசிறும் இல்லாமல் இருக்கும் என்று நான் நம்புகிறேன். படம் தமிழகத்தில் 28 தேதி வரை ரீலீஸ் இல்லை, என்கிற செய்தி பார்த்தேன். நான் இருக்கும் சான் டியாகோவில் (CA) இன்று இரவு 8:30 மணிக்கு ரீலீஸ் ஆகிறது. டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் செய்து உள்ளோம். இங்கு தியேட்டர் எல்லாம் குப்பை போல் தான் இருக்கும். நல்ல தியேட்டரில் பிறகு பார்த்து கொள்ளலாம். இப்போதைக்கு படம் பார்த்தால் மட்டும் போதும் என்பது போல் உள்ளது.

படம் பார்த்த ஒருவர், அல்-கொய்தா, LeT போன்ற டெர்ரரிஸ்ட் நெட்வொர்க் எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றிய த்ரில்லர் டாகுமெண்டரி போல் உள்ளது என்று சொல்லி இருந்தார். செம இன்டரிஸ்டிங் ப்ளாட் போல் எனக்கு தெரிகிறது. விஜயகாந்த் படம் போல், தீவிரவாதி பாகிஸ்தான் பார்டரில் நின்று லாரி ஏறி இந்தியாவுக்குள் வந்து பாம் வைத்து விட்டு போவது போல் கண்டிப்பாய் இருக்காது. கமல் எப்படி அவர்கள் நெட்வொர்க் வேலை செய்கிறது என்பதை நம்பும் படி காட்டி இருப்பார். சோ, அவர் சொல்லுவது போல் படம் டெர்ரரிஸ்ட் நெட்வொர்க் பற்றி படம் என்றால், ஞாயமாக அல்-கொய்தா, LeT போன்ற அமைப்புகள் தான், தங்கள் ரகசியங்களை வெளியீட்டு விட்டார்கள் என்று போராட வேண்டும், ஏன் தமிழ் நாட்டு முஸ்லீம்ஸ் போராடுகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை.

படம் இங்கு வெளி ஆவது உறுதி, இந்திய நேர படி நாளை மதியம் படத்தை பற்றிய எனது பார்வையை இங்கு பதிவு செய்கிறேன்.


Wednesday, January 23, 2013

சமர் - (2013) காப்பியை கண்டு பிடிக்கும் மேனியா.

நீண்ட காலமாய் தமிழ் பதிவர்களிடம், பேஸ் புக் பயனீட்டாளர்களிடம் ஒரு விதமான மேனியா இருப்பதை காண முடிகிறது, அதை மேனியா என்று சொல்வதும் சரி வராது. வேறு வார்த்தை கிடைக்காதால் இப்பொழுதுக்கு அதை மேனியா என்றே வைத்து கொள்வோம். அது என்ன வென்றால், எதாவது வித்தியாசமா கதையை, திரைகதையை கொண்டு ஒரு சுவாரிசயமான தமிழ் படம் வந்தால், அதன் மூலத்தை ஆராய்வது. அது எந்த ஆங்கில மொழி இல்லையென்றால் பிறமொழி படத்தில் இருந்து தழுவி/காப்பி அடித்து எடுக்க பட்டது என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவது. 

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், துப்பாக்கி படம் - தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைகதையை கொண்டு வெளி வந்த படம், நிறைய பதிவர்கள் கண்டிப்பாய் இது ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தில் இருந்து சுட்டு எடுக்க பட்டது என்று எழுதினார்கள். ஆனால் எந்த வெளிநாட்டு படம் என்று இது வரைக்கும் யாராலும் துப்பாக்கி பார்த்தவுடன் சொல்ல முடியவில்லை. நிறைய பேர் துப்பாக்கியின் மூலத்தை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்று "IMDB" தொறந்து வைத்து கொண்டு "டெரரிஸ்ட்" ஆக்டடை பின்னணியை கொண்ட பாரின் படங்களாய் பார்த்து தள்ளுகிறார்கள். என்றாவது ஒரு நாள் துப்பாக்கியின் மூலத்தை கண்டு பிடிக்காமல் விட மாட்டோம் என்று சபதம் பூண்டு உள்ளார்கள். எனக்கு இவர்கள் ஏன் இப்படி செய்து தங்கள் நேரத்தை வீணாக்கி கொள்கிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. இவர்கள் இப்படி செய்வது, தமிழ் இணைய உலகம் தங்களை உத்து நோக்க வேண்டும், தங்களுக்கு நிறைய உலக சினிமா அறிவு உள்ளது என்று ரீடர்ஸ் எண்ண வேண்டும் என்கிற என்னமாய் கூட இருக்கலாம். 

தமிழ் படங்கள் அனைத்துமே ஆங்கில படத்தின் தழுவல் என்கிற எண்ணம் நிறைய பேரிடம் உள்ளது, எந்த அளவுக்கு அந்த எண்ணம் என்றால் "அலெக்ஸ் பாண்டியன்" என்கிற மொக்கை படம் ஆங்கில "டிரான்ஸ்போட்டர்" படத்தின் காப்பி என்று சொல்லும் அளவுக்கு. "டிரான்ஸ்போட்டர்" படத்தில் ஹீரோ வில்லனிடம் காசு வாங்கி கொண்டு ஹீரோயினை கடத்தி கொண்டு போய் விடுவார். அலெக்ஸ் பாண்டியன் படத்திலும் ஹீரோ அதே போல் செய்கிறார், அதனால் "அலெக்ஸ்" "டிரான்ஸ்போட்டர்" படத்தின் காப்பி என்று காரணம் சொல்கிறார்கள். எனக்கு எங்கு போய் முட்டுவதே என்றே தெரியவில்லை. "விஸ்வரூபம்" படத்தின் ஒன் லைனர் (கமல் மனைவிக்கு தெரியாமல் ஸ்பை ஆக இருப்பது) வைத்தே அது ''ட்ரூ லைஸ்" படத்தின் காப்பி என்று சொல்லும் மேதாவிகள் வாழும் சமுகத்தில் தான் நானும் வாழ்கிறேன். 

நாள் ஆக, நாள் ஆக இந்த "காப்பியை கண்டுபிடிக்கும் மேனியா" ஜாஸ்தியா ஆகிறதே ஒழிய, குறைய மாட்டேன் என்கிறது. உண்மையில இது ஒரு விதமான மன நோய் என்றே நினைக்கிறன். இந்த காப்பி கண்டுபிடிக்கும் மேனியா கண்டிப்பாய் நமக்கு ஒரு படத்தை ரசிக்கும் மனநிலையை தராது, இது காட்சி, எந்த ஆங்கில படத்தில் இருந்து எடுக்க பட்டது, என்கிற சிந்தனையிலே அந்த காட்சியை ரசிக்க மாட்டோம். 

நானும் ஒரு காலத்தில் இந்த காப்பி மேனியாவில் அவதி பட்டேன், பிறகு யோசித்து பார்த்தால், நாமே நிறைய படத்தை பைரசி டவுன்லோட் செய்து பார்க்கிறோம், உரியவனுக்கு பணத்தை தராமல் படத்தை ரசிக்கிறோம், அதில் அந்த படம் வேற்று மொழி காப்பியாய் இருந்தால் என்ன, தழுவல் ஆக இருந்தால் என்ன. ஏன் அதன் மூலத்தை ஆராயிந்து மண்டையை குழப்பி சினிமாவின் உண்மையான சுவையை இழக்க வேண்டும் என்று எண்ணி, காப்பி ஆராய்ச்சியை விட்டு விட்டேன். இப்பொழுது முன்னை விட சினிமாவின் சுவை நன்றாக தெரிகிறது. 

சிலரின் காப்பி மேனியா ரொம்ப மோசமாய் இருக்கும், தமிழ் படத்தின் ஏதாவது ஒரு காட்சியின் சாயல் வேறு ஒரு வெளிநாட்டு படத்தில் இருந்து விட்டால். படமே மொத்த காப்பி, படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து உள்ளார்கள் என்று கைக்கு வந்ததை எழுதுவார்கள். அதற்க்கு சமிபத்திய உதாரணம் விஷால் நடிப்பில் வெளி வந்து "சமர்". இது "தி ட்ரூமேன் ஷோ" மற்றும் ''தி கேம்" படத்தின் அப்பட்ட காப்பி என்று சில பதிவர்கள் எழுதி இருப்பதை பார்க்க நேர்ந்தது. 

ஆனால் என்னை பொறுத்த வரை "சமர்" படத்தின் ஒன்று அல்லது ரெண்டு காட்சிகளின் சாயல் மேற்சொன்ன படங்களில் இருக்கலாம், ஆனால் நிச்சியமாக அப்பட்ட காப்பி இல்லை. நன்றாக ரசித்து முடிச்சுகள் தெரியாமல் பார்க்க வேண்டிய படம். நல்ல த்ரில்லர் ரைட் போன அனுபவத்தை குடுக்கும்.

ஊட்டி பாரஸ்ட் ஆபீசர் மகன் விஷால், இவருக்கும் சுனைனாவுக்கும் காதல். சரியான புரிந்துணர்வு இல்லாததால் அந்த காதல் புட்டுக்கொள்ள சுனைனா தாய்லாந்து கிளம்பி போகிறார், அங்கிருந்து விஷாலுக்கு "உன்னை மறக்க முடியவில்லை... உடனே புறப்பட்டு பாங்காக் வா..." என லவ் லெட்டருடன் பிளைட் டிக்கெட்டையும் அனுப்பி வைக்கிறார். முன்பின் விமானத்தில் சென்ற அனுபவமில்லாத விஷால், ஏர்போர்டில் முழிக்க, அங்கு த்ரிஷாவை பார்க்கிறார், அவரிடம் சென்று உதவி கேட்க, த்ரிஷாவும் உதவி செய்கிறார். பாங்காக் வந்து சேரும் விஷாலுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இவர் பெரிய கோடீஸ்வரன் என்று ஒரு கும்பல் சொல்கிறது, இன்னும் ஒரு கும்பல் இவரை கொலை செய்ய துரத்துகிறது என்று ஏகப்பட்ட ட்விஸ்ட். நிறைய முடிச்சுகள் விஷாலை சுத்தி போடபடுகிறது, விஷாலுடன் சேர்ந்து நாமும் குழம்புகிறோம். இறுதியில் போடப்பட்ட அணைத்து முடிச்சுகளும் ஒவொன்றாய் அழகாய் அவிழ்க்க படுகிறது. அந்த முடிச்சுகள் தெரிய படத்தை பார்ப்பது தான் நல்லது. கதை தெரிந்து இந்த படம் பார்ப்பது சுத்த வேஸ்ட். 

படத்தில் அரை மணி நேரம் நீங்களும் விஷாலுடன் சேர்ந்து சுத்துவீர்கள், அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று ஏகத்துக்கும் நம்மை யோசிக்க வைத்து விடுவார் இயக்குனர் திரு. இவர் விஷாலை வைத்து "தீராத விளையாட்டு பிள்ளை" என்கிற மொக்கை படத்தை எடுத்தவர். சண்டைகாட்சிகளில் நிறையவே உழைப்பை பார்க்க முடிகிறது. ஆனால், விஷால் இன்னும் நடிப்பு கற்று கொண்டே வருகிறார் என்று நினைக்கிறன். நிறைய சீரியஸ் காட்சிகளில் இவர் நடிப்பை பார்க்கும் போது எனக்கு கொட்டாவி வந்தது. இவரை விட ஒரு நல்ல நடிகர் இந்த படத்தில் நடித்து இருந்தால் படம் இன்னும் நல்ல ரீச் ஆகி இருக்கும். பாலா பள்ளியில் ஒரு கோர்ஸ் படித்த பிறகும் இவ்வளவு தான் நடிப்பு வரும் என்றால், விஷால் ரொம்ப கஷ்டம் பாஸ்.

த்ரிஷா, அழகாய் வருகிறார், அளவாய் நடிக்கிறார். பாடல் காட்சிகள் மனதில் ஒட்டவே இல்லை. சுனைனாவிருக்கு சில காட்சிகள், மற்றும் ஒரு பாடல், அவ்வளவு தான். பெரிய வேலை இல்ல. படத்தில் காமெடி இல்லவே இல்லை. இது போன்ற சீரியஸ் படங்களுக்கு காமெடி அனாவிசியம் தான். வசங்கள் எஸ்.ரா, அவர் எழுத்தை போலவே, சுலபமாக சொல்லி புரிய வைக்க வேண்டியதை, கடினமாக ஆக்கி உள்ளார். நார்மலா பேச வேண்டிய வசங்களை, சுத்தி வளைத்து கஷ்டமான வார்த்தைகள் கொண்டு கதாபாத்திரங்கள் பேசுகிறார்கள். ஆனால் அவரின் எழுத்தை போலவே நன்றாக உள்ளது. தமிழுக்கு வித்தியாசமான கதையை யோசித்த இயக்குனர், மேக்கிங்கில், மற்றும் ஹீரோ தேர்வில் பெரிய ஓட்டை விட்டு விட்டார் என்றே நாள் சொல்வேன்.

சமர் - சுமார்

My Rating: 6.5/10......


Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013) - கொண்டாட்டம் ..!!!!

"அலெக்ஸ் பாண்டியன்" ஹாங் ஓவர் குறைய கண்டிப்பாய் இன்று "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படம் பார்த்தே தீருவது என்று நேற்றே முடிவு செய்து விட்டேன். இன்று காலை முதல் ஷோ போய் இந்த படத்தை பார்த்தேன். படம் ஆரம்பிக்கும் முன்பு " இன்று போய் நாளை வா" படத்தின் மூல கதையை வழங்கிய இயக்குனர் "திரு.பாக்யராஜ்" அவர்களுக்கு நன்றி என்ற வார்த்தைகளுடன் படம் ஆரம்பித்தது. படம் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றல் ?? நிச்சியம் என்னுடிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், என்னுடைய "அலெக்ஸ் பாண்டியன்" தலைவலியில் இருந்தும் விடுதலை கிடைத்தது. வயறு வலிக்க சிரித்து மகிழ்தேன். சந்தானம் ஏன் இந்த படத்தை "அலெக்ஸ் பாண்டியன்" ரீலீஸ் ஆகி ரெண்டு நாள் கழித்து வெளியிட்டார் என்று இப்பொழுது புரிகிறது. இரண்டு நாட்கள் கழித்து மொத்த கூட்டமும் தன் படத்திருக்கு வந்துவிடும் என்கிற அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது போன்ற கொண்டாட்டமான படத்தை பார்த்து நிறைய நாட்கள் ஆகிறது. 


சரி இப்பொழுது படத்தின் கதையை பார்போம். 1981 வருடம் வெளி வந்த "இன்று போய் நாளை வா" படத்தின் அதே கதை தான். "இன்று போய் நாளை வா" பிடிக்காது என்று தமிழகத்தில் யாரும் சொல்லி இது வரை நான் கேட்டது இல்லை. கே டிவியில் இந்த படத்தை எப்பொழுது போட்டாலும் இருக்கும் வேலையை அப்படியே போட்டு விட்டு படம் பார்க்க உட்கார்ந்து விடுவேன், எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். அட்டகாசமான திரைகதையை கொண்ட படம் இன்று போய் நாளை வா. ஒரு பெண்ணை முன்று கதாநாயகர்கள் லவ்வுவதை செம நகைச்சுவையாக சொல்லி இருப்பார் பாக்யராஜ். அந்த படத்தை சிறு சிறு மாறுதல்கள் உடன் மறுபதிப்பு செய்து சந்தானம், ராக்கிங் பவர் ஸ்டார், சேது மற்றும் விஷாகாவை கொண்டு வழங்கி உள்ளார் இயக்குனர் மணிகண்டன். 

வேலை வெட்டி எதுவும் இல்லாத வழக்கமான தமிழ் ஹீரோ கதாபாத்திரம் சிவா (சேது). இவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் புதுசாய் குடி வரும் சௌமியாவை (விஷாகா ) பார்த்தவுடன் காதல் கொள்கிறார் சிவா. அவருடன் சேர்ந்து அவரின் நண்பர்கள் "கால்கட்டு கலியபெருமாள்" என்கிற கே.கே (சந்தானம்) மற்றும் பவர் குமார் (பவர் ஸ்டார்). முன்று பேரும் எப்படியாவது சௌமியா மனதில் இடம் பிடிக்க போட்டி போடுகிறார்கள். இறுதியில் யார் போட்டியில் வெற்றி பெற்றார் என்கிற கேள்விக்கான விடையை பயங்கர நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.


முன்று கதாநாயர்களின் அறிமுகம் வழக்கமான தமிழ் சினிமா வாய்ஸ் ஓவரில் ஆரம்பிகிறது. அதில் செமையாய் ஸ்கோர் செய்வது பவர் தான். மாஸ் ஹீரோவுக்கு கிடைக்கும் விசில் சத்தம் பவருக்கு கிடைத்தது. நானும் இவரை முதல் முறை பெரிய திரையில் பார்கிறேன். மனிதர் பின்னி பெடல் எடுத்து உள்ளார். நிறைய காட்சிகளில் நானே பவர்க்கு கை தட்டினேன். டான்ஸ் கற்று கொள்வது, சௌமியாவிடம் ப்ரோபஸ் செய்வது, ஹீரோயினை இம்ப்ரெஸ் செய்ய இவர் செய்யும் செண்டிமெண்ட் டிராமா, கிளைமாக்ஸ் டெர்ரர் பைட் என்று பவர் செய்யும் அனைத்து அலப்பறைகளும் சிரிப்பு சர வெடிகள் தான். இவரை மிக சரியாக உபயோக படுத்தி உள்ளார் இயக்குனர். ஆனால் முக எக்ஸ்பரஷன் மட்டும் வரவே மாட்டேன் என்கிறது. போக போக அடுத்த படத்தில் இருந்து பிக் அப் செய்து விடுவார் என்று நம்புவோம் ஆக.

அடுத்து சந்தானம், உண்மையில் இவர் காமெடி சூப்பர் ஸ்டார் தான். இயக்குனர் "ராஜேஷ்" காம்பினேஷனில் தான் இவரிடம் இருந்து இப்படி பட்ட காமெடி ட்ரீட்டை பார்த்து உள்ளேன். இது போன்ற நகைச்சுவை படங்கள் இன்னும் ரெண்டு குடுத்தால் இவருக்கு காமெடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தாராளமாக வழங்கலாம். படத்தில் தேர்ந்த நடிகர் என்பது இவர் மட்டும் தான், அதனால் நிறைய இடங்களில் இவர் தான் படத்தை தாங்கி செல்கிறார். குபீர் சிரிப்பை வரவைக்கும் நிறைய கௌண்டர் அட்டாக்ஸ் காமெடியை படம் நெடுக்க தூவி உள்ளார், அட்டகாசம். இவர் சௌமியாவிடம் ப்ரோபஸ் காட்சியில் கை தட்டல் குறைய நிறைய நேரம் ஆனது. தன் படம் என்பதால் மனிதர் கடுமையாக உழைத்து உள்ளார் என்பது தெரிகிறது.


சேது என்கிற புது முக நடிகர் நடித்து உள்ளார். ஹீரோயின் விவேல் விளம்பரத்தில் நடித்தவர், "டல் திவ்யாவாக, இப்ப தூள் திவ்யா ஆகிடா". பாட்டு வாத்தியாராக VTV கணேஷ், டான்ஸ் மாஸ்டர் ஆக "வரலாறு படத்தில் அஜித்துக்கு டான்ஸ் சொல்லி குடுத்தவர், கோவை சரளா, பட்டிமன்ற ராஜா என்று நிறைய நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.சிறப்பு தோற்றத்தில் "சிம்பு" மற்றும் "கெளதம் மேனன்". இருவரும் VTV-2 படபிடிப்பில் இருப்பது போன்ற காட்சி அமைப்பு.

பாடல்கள் எல்லாமே படத்தில் தேவைக்கு ஏற்ப சரியான நேரத்தில் வருகிறது. பின்னணி இசை தேவையான அளவுக்கு வழங்கி உள்ளார் "தமன்". மொத்தத்தில் ஒரு காட்சியில் கூட நகைச்சுவை குறையாமல், லாஜிக் பற்றி அதிகம் யோசிக்க விடாமல்,  பெரிய குறை எதுவும் சொல்ல முடியாத படி திருப்தியான படத்தை வழங்கிய சந்தானம் மற்றும் பட குழுவினருக்கு என் நன்றிகள்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா - கொண்டாட்டம் ..!!!!

My Rating: 8.0/10......


Saturday, January 12, 2013

அலெக்ஸ் பாண்டியன் (2013) - மரண மொக்கை ..!!!!

த்ரிஷா இல்லாட்டி திவ்யா, என்கிற தமிழர்களின் கொள்கையை சரியாக புரிந்து கொண்டு சரியான நேரத்தில் வெளி வந்து கல்லா கட்ட போகும் திரைப்படம் தான் அலெக்ஸ் பாண்டியன். விஸ்வரூபத்தை எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு விஸ்வரூபம் வெளிவராமல் ஏமாற்றி விட, சரி கார்த்தியின் "அலெக்ஸ் பாண்டியன்" படத்திருக்கு போய் பண்டிகை சீசனை நல்ல முறையில் தொடங்குவோம் என்று நினைத்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைத்து இருக்க கூடாது . ஐயா, ஒரு புது படத்தை நம்ம பதிவர்களில் விமர்சனம் எதுவும் படிக்காம பார்க்க நினைச்சது தப்பா ...?? அப்படி பார்க்க போன என்னைய இப்படியா கொத்து கொத்துன்னு கொத்தி அனுப்பனும் ???


தமிழ்ல சில நல்ல டைரக்டர், நல்ல நடிகரின் படத்தை காசு குடுத்து தியேட்டரில் பார்க்கும் வழக்கம் கொண்டவன் நான். அந்த லிஸ்டில் கார்த்தியின் பெயரும் "பருத்தி வீரன்", "ஆயரத்தில் ஒருவன்" காரணமாய் இருந்தது. இனி மேல் அந்த லிஸ்டில் கண்டிப்பாய் கார்த்தி இருக்க மாட்டார். இனி கார்த்தியின் அணைத்து படமும் டவுன்லோட் தான். சகுனியில் இருந்தாவது அவர் பாடம் கற்று இருக்க வேண்டும் . ஆனால் தான் எப்படி மொக்கையாய் நடித்தாலும் தமிழ் மக்கள் பார்ப்பார்கள் என்கிற எண்ணத்தில் மற்றுமோர் மரண மொக்கை படத்தை வழங்கி உள்ளார் கார்த்தி.

படத்தின் டைரக்டர் சூராஜ்யை நினைத்தால் எனக்கு பொறமையாக இருக்கிறது. எப்படி இந்த படத்தின் கதையை கார்த்தியிடம் சொல்லி ஓகே வாங்கினார் என்று. பெரிய திறமைசாலி தான். இப்படி தான் கதை சொல்லி இருப்பார் என்று நினைக்கிறன் . கார்த்தி சார், " ஓபன் பண்ணுனா நீங்களும் அனுஷ்கா மேடமும் ஓடுறீங்க, தண்டவாளத்துல ஓடுறீங்க, ட்ரைன் மேல ஓடுறீங்க , ஓடிகிட்டே இருக்கீங்க . வில்லன் உங்க ரெண்டு போரையும் ரிச்சா ஹெலிஹப்ட்டர்ல சேஸ் பண்ணுறான். அப்படியே உங்களை நோக்கி துப்பாகியால சுடுறான். நீங்க ரெண்டு பேரும் கடல்ல குதிக்கறீங்க. கட் பண்ணுனா நீங்க சந்தானம் சார் வீட்டுல ஹாய்யா படுத்துட்டு இருக்கீங்க. 


அடுத்த அரை மணி நேரம் நீங்களும் சந்தானம் சாரும் சேர்ந்து அவரோட முனு தங்கச்சிகளை வச்சு காமெடி பண்ணுறீங்க. எல்லாம் டபுள் மீனிங் காமெடி, அப்ப தான் யூத் ஆடியன்ஸ் கவர் ஆவாங்க. நீங்க கடல்ல விழுந்த இடத்தை வச்சு, வில்லன் குரூப் ஊர் ஊரா உங்களை தேடுறாங்க. ஹீரோயின் அனுஷ்கா மயக்கமா சித்த வைத்திய சாலையில இருக்காங்க. பிரஸ்ட் ஆப் குத்து பாட்டுக்கு சந்தானம் முனு தங்கச்சிகளை யூஸ் பண்ணுறோம். இடைவேளைக்கு பத்து நிமிஷம் முன்னாடி வில்லன் குரூப் நீங்க இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சு உங்களை சுமோ, இன்னோவா கார்ல சேஸ் பண்ணுறாங்க. நீங்க சந்தானம், அப்புறம் அனுஷ்கா மேடம் முனு பேரும் மாருதி -800 கார்ல 40 km ஸ்பீட்ல தப்பிச்சு போறீங்க. வில்லன் குரூப் 90 km ஸ்பீட்ல வந்தும் உங்களை பிடிக்க முடியல. அப்ப தான் சார் செம ட்விஸ்ட் ஒன்னு வருது கதையில, சந்தானம் சார், அனுஷ்கா மேடம் யாருன்னு கேட்க, நீங்க அவங்க "தமிழ்நாடு CM பொண்ணு" என்கிற பயங்கரமான நெஞ்சை உறைய வைக்கும் உண்மையை கூல்லா சொல்லுறீங்க. நீங்க தான் CM பொண்ணை கடத்துனீங்க என்கிற வரலாற்று உண்மையையும் சொல்லுறீங்க. அத்தோட இன்டர்வெல் விடுறோம்.

இன்டர்வெல்ல தப்பிச்சு போன ஆடியன்ஸ் போக மிச்ச மீதி இருக்கிற ஆடியன்ஸ்க்கு "நீங்க ஏன் CM பொண்னான அனுஷ்கா மேடமை கடத்துனீங்க" என்கிற காரணத்தை போட்டு உடைக்கிறோம். அப்படியே உங்களுக்கும் சீப் மினிஸ்டருக்கும்  என்ன வாய்கா தகராறு ..??? அனுஷ்கா மேடமை நீங்க எப்படி புத்திசாலிதனமா பிளான் பண்ணி கடத்துனீங்க ..?? மேடம்க்கும் உங்களுக்கும் எப்படி கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆச்சு ..?? என்பது போன்ற பஸ்ட் ஆப் முடிச்சுகளை அவிழ்கிறோம். செகண்ட் ஆப்ல் விட்டதை பிடிக்கிற மாதிரி உங்களுக்கும் மேடம்கும் ரெண்டு செம குத்து பாட்டு போட்டு தாக்குறோம். மானே தேனே மாதிரி போர் அடிச்சா, நீங்க வில்லன்களை போட்டு கும்முறீங்க. கொஞ்ச நேரம் சந்தானம் கூட சேர்ந்து காமடி பண்ணுறீங்க. கடைசியில எல்லா வில்லன்களையும் கொன்னுட்டு மேடம் கையை பிடிக்கிறீங்க, அத்தோட"BAD BOYS" பாட்டை போட்டு குத்துயிர், கொலைஉயிர்ருமாய் இருக்கிற ஆடியன்ஸை மொத்தமா முடிக்கிறோம்.


இப்படி பட்ட மொக்கை கதைக்கு எப்படி தான் சிவக்குமார் குடும்பம் ஓகே சொல்லுச்சோ, சத்தியம்மா இன்னும் எனக்கு புரியல. இந்த படத்தை தெலுங்கு படத்தோட கம்பார் பண்ணுனா, அது தெலுங்கு சினிமாவை அவமான படுத்துற மாதிரி ஆகிரும். தெலுங்கு மக்கள் இதை விட மிக சிறப்பாய் மசாலா படம் எடுப்பார்கள்.

கார்த்தி, "பருத்தி வீரன்" படத்துல நடிச்ச ஆள். எப்படி எல்லாம் நடிச்ச நடிகர், இப்ப இப்படி மொக்கையா நடிக்கிறாரே. சோ சேடு ..!! கூடிய விரைவில் பரத், விஷால்,பாக்கு தல  சுந்தர்.C , சிம்பு , தனுஷ்  லிஸ்டில் சேர்ந்து விடுவார். அனைத்துக்கும் ஒரே எக்ஸ்ப்ரெஷன் காட்டி நடிக்கிறார். கோப பட சொன்னால் மொறைக்கிறார். மாறுங்க கார்த்தி, இல்லாட்டி சிரமம் தான்.

அனுஷ்கா - முதல் பாதியில் ஒரு டயலாக் கூட இல்லை. இரண்டாம் பாதியில் இரண்டு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். இவருக்கு இது மற்றுமொறு படம். ஒன்றும் சொல்வதருக்கு இல்லை. படத்தில் இருக்கும் ஒரே எண்டர்டைன்மெண்ட் சந்தானம் தான். இவர் இருந்த காரனத்தால் தான் படத்தில் சிறிது நேரம் ஒட்கார முடிந்தது. அனால் நிறைய டபுள் மீனிங் ஜோக்ஸ். டபுள் மீனிங் பேசியே ஒழிந்து போன விவேக் மாதிரி இவர் ஆகிவிட கூடாது.

பாடல்கள் ஒன்றுமே மனதில் தங்க வில்லை. "BAD BOYS" பாட்டு மட்டும் டிவி விளம்பரம் காரணமாக நான் எதிர்பார்த்து சென்றேன். ஆனால் கடைசியில் சுபம் போட்டவுடன் பாட்டை போட்டார்கள். எனக்கு "ராஜா பாட்டை" ஞாபகம் தான் வந்தது. பாட்டை ரசிக்கும் மனநிலையில் சத்தியமாக அப்பொழுது நான் இல்லை. எப்படா தியேட்டரை விட்டு வெளியே ஓடுவோம் என்கிற மனநிலை தான் எனக்கு இருந்தது. தம் இருந்தா போய் தியேட்டர்ல பாருங்க.


அலெக்ஸ் பாண்டியன் - மரண மொக்கை ..!!!!

My Rating: 3.2/10......


Tuesday, January 08, 2013

"விஸ்வரூபம்" - ஒரு மாறுபட்ட பார்வை.

விகடன் வலைத்தளத்தில் இந்த கட்டுரையை படித்தேன். மிகவும் பிடித்து இருந்த காரணத்தால் அதை இங்கு பகிர்கிறேன்.

சுற்றிலும் ராணி, குதிரை, யானை, சோல்ஜர்கள் இருந்தும் ராஜாவை காப்பாற்ற  முடியாமல் கமல் செஸ் ஆட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார். (இறுதி வெற்றி  எனக்கே என்ற அவரது தன்னம்பிக்கைக்கு விடை தெரிய இன்னும் முழுசாக ரெண்டு  வாரங்கள் காத்திருக்க வேண்டும்) எதிர் தரப்பில் ராணியும் இல்லை, குதிரையும்  இல்லை. யானையும் இல்லை. ஆனால் ராஜாவை குறிவைத்து நெருங்கிக்  கொண்டிருக்கும் அவர்களின் பக்கத்தில் துணையாக வைத்திருப்பது யாரை? அல்லது யார்  யாரையெல்லாம்?

அதை தெரிந்து கொள்வதற்கு முன் கமல் என்ற முன்மாதிரியை,முழு கலைஞனை,  கலியுகத்தின் கலிலியோவை பற்றி அறிந்து கொள்வது நல்லது.

'மகாநதி' திரைப்படம் தயாரிப்பில் இருந்த நேரம்.சென்னையிலிருக்கிற முன்னணி  சினிமா எடிட்டர்கள் பலர் ரூம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்."கமல் ஏதோ  'ஆவிட்'டுன்னு ஒண்ணு கொண்டு வராராம்.அஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹா...அதை  கொண்டு வந்து வச்சுகிட்டுதான் மகாநதியை எடிட் பண்ண போறாராம்.அதென்ன  ஆவிட்டோ, டேவிட்டோ? இங்க ஒருத்தனுக்கும் புரியல.தணிகாசலம் சாரு பிலிமை  கையில புடிச்சு ஸ்பாட் வச்சு நறுக்கிற வேகம் வருமா? இல்ல அந்த பர்பெக்ஷன்தான்  அதுல வந்துருமா? வௌங்கிரும்."

இவர்களின் பேச்செல்லாம் அப்படியே கமல் காதுகளுக்கும் போனது.ஆனால்"நம்ம  படத்துக்கு ஆவிட் எடிட்டிங்தான்.மூவியாலாவெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில்  இருக்காது.வேணும்னா அதையெல்லாம் மியூசித்துல பார்த்துக்கலாம்" என்ற கமல், இந்த  விஷயத்தையும் ஒரு கை பார்த்துக்கலாம் என்று தன்னம்பிக்கையோடு களம் இறங்கினார்.

மும்பையிலிருந்து ஸ்பெஷலாக ஒரு எடிட்டர் வந்துதான் மகாநதியை எடிட் பண்ண  வேண்டியதாயிற்று.இங்குள்ள யாரும் அதை கற்று கொள்கிற எண்ணத்திலேயே இல்லை.  அவ்வளவு ஏன்? இதை வேடிக்கை பார்க்கக் கூட யாரும் வரவேயில்லை அங்கு.

அது நடந்து சில பல வருடங்களில் ஒவ்வொரு எடிட்டிங் ஸ்டுடியோக்களிலும் ஆவிட்  புகுந்து கொண்டது. ஏதோ ஆமை புகுந்தது போல ஆவிட்டை பார்த்து அஞ்சிய அத்தனை  எடிட்டர்களும் தடவி தடவி கற்றுக் கொண்டார்கள் இந்த ஆவிட் தொழில் நுட்பத்தை.  அதுதான் கமல்ஹாசன்! படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு கம்ப்யூட்டரை வைத்துக்  கொண்டு ஸ்பாட் எடிட்டிங் செய்கிற அளவுக்கு தொழில் முற்றிப் போனதற்கு காரணமும்  கமல்தானே அய்யா?


அப்படியே இன்னொரு சம்பவம்...இன்று வீட்டுக்கு வீடு பரவிவிட்டது கம்ப்யூட்டர்  சாதனம்! பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன்,  பல பத்திரிகை அலுவலகங்களில் கூட அது இருந்ததில்லை. க் ச் ம் என்று  எழுத்துக்களை தேடி எடுத்து பொருத்தி கொள்கிற அவஸ்தையும் இருந்தது.ஒரு சில  மிகப்பெரிய பத்திரிகை அலுவலகங்களில் மட்டும் டிடிபி என்று சொல்லப்படுகிற அதிநவீன  தட்டச்சு இயந்திரத்தை பயன்படுத்தினார்கள்.ஏதோ பூச்சாண்டியை பார்ப்பது போலவே  கம்ப்யூட்டரை பலரும் கருதி வந்த காலம் அது.

பத்திரிகையாளர்களை சந்திக்கிற சினிமாக்காரர்கள் பத்திரிகை செய்திகளை கைகளால்  எழுதி,அதை ஜெராக்ஸ் எடுத்து விநியோகம் செய்வார்கள்.போட்டோக்கள்?  நூற்றுக்கணக்கான போட்டோக்களை பிரிண்ட் போட்டு மேக்ஸி, போஸ்ட் கார்டு சைஸ்  என்று விதவிதமாக தருவார்கள்.அதை ஒரு அட்டையில் ஒட்டி பிலிம் எடுத்து பிளேட்  போட்டு என்று...ஆறேழு பரீட்சைகளை தாண்டிதான் ஒரு துணுக்கு செய்தியாக  இருந்தாலும் பத்திரிகையில் இடம் பிடிக்கும்.

அந்த கால கட்டத்தில்தான் நான் கமல் பிரஸ்மீட் ஒன்றுக்கு சென்றிருந்தேன்.கேள்வி  பதில் நேரம் முடிந்து கிளம்பும்போது அழகாக வட்ட வடிவில் ஒரு பொருளை கையில்  கொடுத்தார்கள் கமல் அலுவலக ஊழியர்கள். அதுதான் குறுந்தகடு என்பதே தெரியாமல்  கையில் வைத்துக் கொண்டு திருதிருவென விழித்தார்கள் அநேக நிருபர்கள். (நானும்  கூட) இதுக்குள்ளேதான் கமல் சாரோட போட்டோ இருக்காம்.கொண்டு போய் ஆபிஸ்ல  கொடுங்கப்பா. அவங்க கம்ப்யூட்டர்ல போட்டு கண்டுபிடிப்பாங்க என்றெல்லாம்  ஆளாளுக்கு ஆம்ஸ்ட்ராங் ஆனார்கள்.

கமல் சொன்னார்,"இன்னும் கொஞ்ச நாளில் இப்படிதான் ஆகப்போவுது. போட்டோ  பிரிண்ட் போட்டு கொடுக்கிற வழக்கமெல்லாம் மறைஞ்சுரும்"என்று. ஆழ்வார்பேட்டை  ஏரியாவிலிருக்கிற இறைச்சி கடைகளில் 'தல'கறிக்கு அவ்வளவு விற்பனை இல்ல.  ஏன்னா கமல் மாதிரி ரொம்ப பேரு இங்க இருப்பாங்க போலிருக்கு என்று கமென்ட்  அடித்தபடியே கலைந்த கூட்டம்தான் நாங்கள் எல்லாம்.

எதையும் இன்னும் பத்து வருடங்கள் கழித்து...என யோசிப்பவர் கமல்.நாமெல்லாம்  பஞ்சாங்கத்தில் நல்லநேரம் பார்த்துக் கொண்டிருந்தால்,கமல் அண்டார்டிகாவுக்கு அந்த  பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்.அவரால்  நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்களில் ஒன்றுதான் இந்த டிடிஎச் ஒளிபரப்பு.(கமல்  செய்யாவிட்டால் இதை வேறு யார் செய்து தொலைப்பதாம்?)


விஸ்வரூபம் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது.அப்படி ஒளிபரப்பினால்  தியேட்டர்களை இழுத்து மூட வேண்டி வரும் என்று அவரவர் தொழில் குறித்து  அச்சப்படுவதும் நியாயம்தான். சின்னத்திரை வந்தபோதும் இதே அச்சத்தோடு  இருந்தவர்கள்தான் தியேட்டர்காரர்கள். ஆனால் அப்போதைவிட இப்போதைக்குதான்  படங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. எங்கள் படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர்  கிடைக்கவில்லை என்ற புலம்பலும் கூடியிருக்கிறது.இத்தனைக்கும் தினந்தோறும் மூன்று  படங்களையாவது ஒளிபரப்பிவிடுகின்றன முன்னணி சேனல்கள்.

சின்னத்திரையில் படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தபோது, சினிமாக்காரர்கள் திரண்டு  சென்று அப்போதைய முதல்வர் கலைஞரை சந்தித்து முறையிட்டார்கள்."ஏன்யா...  உங்க சினிமா வந்து நாடகத்தை அழிக்கலையா? அதுமாதிரிதான் இதுவும்.இந்த  விஞ்ஞான வளர்ச்சியை ஏத்துகிட்டுதான் ஆகணும்" என்றார் கலைஞர். அதே  போன்றதொரு 'உரத்த குரல்' இப்போது தேவைப்படுகிறது கமலுக்கும்!

ஆடியோ மார்க்கெட் ஒழிஞ்சுருச்சே என்று சினிமாக்காரர்கள் அலறும்போதுதான் அதைவிட  பல மடங்கு கொட்டிக் கொடுக்கிறதே,சேனல் ரைட்ஸ்...அத பற்றி ஏம்ப்பா பேச  மாட்டேங்கிறீங்க? என்ற எதிர் கேள்வி பிறக்கிறது இங்கே.

சரி விவாதத்தை விட்டுவிட்டு கமல் பிரச்சனைக்கு வருவோம்.சுமார் எழுபது கோடியை  இந்த படத்திற்காக இறைத்திருக்கிறார் அவர்.நேற்று வந்த நடிகர்கள் எல்லாம், முப்பது  கோடி சம்பளம் கேட்கும்போது சாதனையாளர் கமல்,படத்திற்கு ஆன செலவு போக  பதினைந்து கோடியாவது இப்படத்தின் மூலம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று  நினைப்பது தவறா?

இப்படத்தின் முதல் தயாரிப்பாளராக தன்னை இணைத்துக் கொண்ட பிவிபி நிறுவனம்,  போட்ட பணத்தை திரும்ப கேட்கிறது.சுமார் ஐம்பது கோடி ரூபாயை அவர் தரவேண்டிய  நிலையிலிருக்கிறார்.ஆனால் விநியோகஸ்தர் தரப்பிலிருந்து இந்த படத்தின் மொத்த  விலையுமே ஐம்பது கோடியாகதான் நிர்ணயிக்கிறார்களாம்.அதை மேலும் குறைக்கிற  விதத்தில் நடுவில் வந்து சேர்ந்தது முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக  கிசுகிசுப்பு எழுந்ததுமே படத்தின் வியாபார தொகையும் பாதிக்குமேல் குறைக்கப்பட்டதாக  கூறுகிறார்கள்.

தீப்பிடிக்கிற நேரத்தில் தப்பி ஓடுகிற வழியில் அழகான கோலம் போட்டிருக்க வேண்டும்  என்றோ, அது கிழக்கு வாசலாக இருக்க வேண்டும் என்றோ நினைக்க முடியாது.  நடுநிலையோடு நோக்கினால் கமலின் நிலையும் அதுதான். போட்ட பணத்தை  எடுப்பதற்காக அவர் புதிதாக திறந்த புழக்கடைதான் இந்த டிடிஎச் என்று கருத  வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் சுயலாபத்துக்காக உயிராக நேசிக்கும் சினிமாவை  காவு கொடுக்கிறவரல்ல கமல் என்பதையும் அவரது கடந்த கால சினிமா வரலாறுகள்  நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.


பாரம்பரியமான சினிமா நிறுவனங்கள் எல்லாம் எங்கே போயின? சத்யா மூவிஸ் எங்கே,  தேவர் பிலிம்ஸ் எங்கே? சூப்பர்குட் எங்கே, எல்.எம்.எம் எங்கே? ஏ.வி.எம் நிறுவனம்  ஏன் வருடத்திற்கு ஒரு படத்தை கூட எடுக்க மாட்டேன் என்கிறது? இன்னும் இதுபோன்ற  முக்கிய நிறுவனங்கள் எல்லாம் ஏன் ஒதுங்கின? சினிமா ஆரோக்கியமாக இல்லை.  பணம் போடுகிற முதலாளி அப்படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் ஓடி ஒளிகிற அவல நிலை  இங்கு தொடர்கிறது. 

ரியல் எஸ்டேட் புரோக்கர்களும், கள்ளப்பண முதலாளிகளும் ஆசைக்கு ஒரு படம்  எடுத்து அதிலும் தானே ஹீரோவாக நடித்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.அவ்வளவு ஏன்?  பல்லாயிரம் கோடிகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்து  கோலி குண்டு விளையாடும் கார்ப்பரேட் நிறுவனங்களே கூட விழிபிதுங்கி கிடக்கின்றன.

எல்லாவற்றுக்கும் காரணம் வியாபாரத்தை இங்கே சுதந்திரமாக செய்ய முடிவதில்லை  என்பதுதான். சூழ்ச்சியும் அசந்த நேரத்தில் கால்களை வாரிவிடும் கலையும் இங்கே  சகஜமாக இருக்கின்றன. படப்பெட்டிகளை டெலிவரி செய்யும்போது பேசிய பணத்தை  எண்ணி வைக்கிற விநியோகஸ்தர்கள் இங்கே இருப்பதே இல்லை. இங்கு எல்லா  படங்களின் டெலிவரியும் ரத்தக்கறையோடு நடப்பதை லேப் பக்கம் சென்றால் நடுங்க  நடுங்க கவனிக்க முடியும்.

'விஸ்வரூபம்' விஷயத்தில் கூட கமலுக்கு எதிரான சில சினிமா பிரமுகர்கள் முஸ்லீம்  அமைப்புகளையும், தியேட்டர்காரர்களையும் தூண்டி விடுவதாக கூறப்படுகிறது. ஒரு  படம் தோல்வியடைந்தால் இதே சினிமாவிலிருக்கும் பெரும்பாலனோர் பார்ட்டி வைத்து  கொண்டாடுகிறார்களே, சினிமா எப்படி பிழைக்கும்?

ஒரு சங்கத்தின் சட்டதிட்டங்கள் இன்னொரு சங்கத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆனால்  சினிமாவில் முடியும். விருப்பமே இல்லாவிட்டாலும் இந்த கட்டுக்கோப்பான  சட்டதிட்டங்களை எல்லாரும் மதித்தே ஆக வேண்டும் என்கிற முரட்டு சிந்தனை இங்கே  பல வருடங்களாக இருக்கிறது.வேதனை என்னவென்றால் பணம் போடுகிற முதலாளியும்  இங்கே கைகட்டி நிற்க வேண்டி இருக்கிறது.

கமல் என்ற முதலாளியின் நிலைமையும் இன்று அப்படிதானிருக்க வேண்டும் என்று  நினைக்கிறார்கள் பலர்.'உன் தியேட்டரில் முறுக்கு விற்க கூடாது.சுண்டல் விற்க  கூடாது' என்று சொல்ல எப்படி எந்த பட முதலாளிக்கும் அதிகாரம் இல்லையோ,  அப்படிதான் 'உன் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது என்று இவர்கள் சொல்வதற்கும்  அதிகாரம் இல்லை.

இந்த சின்ன உண்மையை புரிந்து கொண்டால் போதும்... விஸ்வரூபம் பிரச்னை,  இவ்வளவு பெரிய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கவேண்டிய தேவையே இருக்காது!

நன்றி -  ஆர்.எஸ். அந்தணன்  (விகடன்) 


Tuesday, January 01, 2013

கமலின் "விஸ்வரூபம்" - ஏர்டெல் டிடிஎச் புக்கிங் - முன்னோட்டம்

இந்த வருடத்தில் நான் மிகவும் எதிர்பார்த்த படமான "விஸ்வரூபம்" வரும் ஜனவரி-11 தேதி தியேட்டரில் ரீலீஸ் ஆகுமா இல்லையா என்று எனக்கு தெரியாது, ஆனால் எனது வீட்டில், அதுவும் எனது டிவியில் ஜனவரி-10 தேதி, இரவு 9:30 மணிக்கு கண்டிப்பாய் ரீலீஸ் ஆகிறது. ஆம், நான் எனது ஏர்டெல் டிடிஎச-ல் விஸ்வரூபம் படத்திருக்கு அட்வான்ஸ் புக்கிங் செய்து உள்ளேன். என்னை போலவே இங்கு ஹைதராபாத்தில் என்னுடன் பணி புரியும் நிறைய நண்பர்கள், அட்வான்ஸ் புக்கிங் செய்து உள்ளார்கள். இன்னும் சில நண்பர்கள், அவசர அவசரமாக ஏர்டெல் கனெக்ஷன் பெறுவதில் மும்மரமாய் இருக்கிறார்கள். அனைவருக்கும் கமலின் "விஸ்வரூபம்" மீது பயங்கர எதிர்பார்ப்பு என்று சொல்ல முடியாது, ஆனால் படத்தை தியேட்டர் ரீலீஸ்க்கு முன்பே பார்க்க போகிறோம் என்ற எண்ணமும், தங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, குடும்பத்துடன் இரவு உணவை சாப்பிட்டு கொண்டே ஒரு புது படத்தை பார்க்க போகிறோம், அதுவும் கமல் படத்தை பார்க்க போகிறோம் என்ற உணர்வே அனைவருக்கும் இருக்கிறது.


ஹைதராபாத்தில் தமிழ் படம் ரீலீஸ் என்பதே அறிய நிகழ்வு, அப்படியே ரீலீஸ் ஆனாலும் வெள்ளி, சனி, ஞாயறு என்று முன்று நாட்கள் தான் ஓடும். அதிலும் காலை காட்சி மட்டும் தான், சில நேரங்களில் இரண்டு காட்சிகள். நல்ல நடிகரின் படத்திருக்கு அதிக பட்சம் மொத்தம் 3~5 காட்சிகள் தான். அதில் ஒரு காட்சிக்கு டிக்கெட் எடுப்பது என்பது "பொங்கலுக்கு தட்கல்" டிக்கெட் எடுப்பது போன்றது. வெள்ளிகிழமை படத்திருக்கு புதன் கிழமையே "Book My Show" ஓபன் செய்து ரெப்ரெஷ் செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். நிறைய நேரங்களில் "பிம்பளிக்கி பிளாப்பி" தான். இப்படி பட்ட சூழநிலையில் வாழும் எங்களை போன்ற வெளி மாநில தமிழ் படத்தை விரும்பும் ரசிகர்களுக்கு டிடிஎச ரீலீஸ் என்பது மிக பெரிய வர பிரசாதம். வெளி மாநிலத்தில் வாழும் எங்கள் நிலைமையே இப்படி என்றால், வெளி நாட்டில் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களின் நிலைமையை நான் சொல்ல வேண்டியது இல்லை. கமல் இந்தியாவில் மட்டும் டிடிஎச் ஐடியாவை நிறுத்தி கொள்ளாமல், இந்தியாவிற்கும் வெளியே இதை கொண்டு செல்ல வேண்டும்.

கமல் தனது டிடிஎச் முயற்சி பற்றி சொன்ன போது, நானும் சிரித்தேன், நடக்கவே நடக்காது என்று தான் நினைத்தேன். ஆனால் கமல் நடத்தி காட்டி விட்டார். "கலைஞர் சீரியஸ்" என்பது போல், கமல் முன்றே மணி நேரத்தில் முன்னுறு கோடி ரூபாய் சம்பாரித்து விட்டார் என்று பேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி கொண்டு இருக்கிறது. நான் எப்பொழுதும் சினிமாவின் லாப நஷ்ட கணக்கை பற்றி கவலை பட மாட்டேன். ஒரு ரசிகனாய் படம் எப்படி இருக்கிறது, நான் செலவு செய்த காசுக்கு படம் என்னை திருப்தி படுத்தியதா என்று தான் பார்பேன். ரஜினியின் தீவிர ரசிகனாகிய நான் இது வரை ரஜினி படத்திருக்கு மட்டும் தான் FDFS (முதல் நாள் முதல் காட்சி) பார்க்க, இல்லாட்டி முதல் நாளே பார்க்க கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை செய்து உள்ளேன். பெங்களூரில் "சிவாஜி"-க்கு நான் குடுத்த ஒரு டிக்கெட் விலை 600/-, குப்பை தியேட்டரில் கூட கொண்டாட்டமாய் பார்த்தேன். "எந்திரன்" லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் இருக்கும் ஒரு சிறு ஊரில் பார்த்தேன். டிக்கெட் விலை 30$ (1,200 ரூபாய்). எந்திரன் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆனவுடன் எதுவும் யோசிக்காமல் எனக்கும் எனது நண்பர்க்கும் சேர்த்து இரண்டு டிக்கெட் புக் பண்ணி விட்டேன். அதன் பிறகு தான் நண்பர் சொன்னார், 30$ என்பது இங்கு டூ மச், அவதார் கூட 15$ தான் என்று. ஆனால் எனக்கோ, அப்பாடி டிக்கெட் கிடைத்து விட்டதே என்கிற நிம்மதி மட்டும் தான் இருந்தது. ஏனோ ரஜினி மீது மட்டும் எனக்கு அப்படி ஒரு வெறி. ரஜினி படத்தை பார்க்க போகிறோம் என்பதே எனக்கு பெரிய சந்தோஷத்தை குடுக்கும்.


கமலை நடிகராய் பிடிக்கும், ஆனால் கமல் படத்தை பார்க்க போகிறோம் என்பதில் சந்தோஷத்தை விட ஒரு பயமே இருக்கும். படம் எப்படி இருக்க போகிறதோ என்கிற பயம், மட்டும்மல்ல, படம் எனக்கு புரியுமா என்கிற பயமும் எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். விவரம் தெரிந்து கமல் படம் பார்க்க ஆரம்பித்த உடன் நிறைய தடவை பல்பு வாங்கி உள்ளேன். ஆளவந்தான், ஹேராம் (உலக சினிமா பாஸ்கரன் புண்ணியத்தில் இப்பொழுது தான் இந்த படத்தில் கமலின் உழைப்பு எனக்கு புரிந்தது, கமல் படத்தை ஜஸ்ட் லைக் தட் பார்க்க கூடாது என்ற உண்மையும் ஹேராம் தொடர் முலம் கிட்டியது) மும்பை எக்ஸ்ப்ரெஸ், அன்பே சிவம் என்று என்னில்அடங்கா தடவை பல்பு வாங்கி உள்ளேன். கமலின் நிறைய படங்கள் அவையார் ஆரம்ப பாடசாலையில் பயிலும் மாணவனுக்கு ஐ.ஐ.டி சிலபஸ் சொல்லி குடுப்பது போன்று இருக்கும். ஆனாலும் அவர் எப்படியும் ரசிகனின் ரசனை தரத்தை உயர்த்தியே தீருவது என்பதில் உறுதியாக உள்ளார். என்றாவது ஒரு நாள் அதில் வெற்றியும் பெறுவார். 

கடைசியாக கமல் "சாதாரண சினிமா ரசிகனை", என்னையும் சேர்த்து திருப்தி படுத்திய படம் என்றல் அது "தசாவதாரம்" மட்டும் தான். அதிலே எனக்கு இன்னும் முதல் காட்சி, மற்றும் கடைசி காட்சி புரியவில்லை. "கிறிஸ்டியன் பிளெட்சர்", "ரங்கராஜ நம்பி" மற்றும் "வின்சென்ட் பூவராகவன்" ஆக மாறி என்னை குதூகல படுத்தி இருந்தார். "தசாவதாரம்" என்னை பொறுத்த வரை மாஸ் எண்டர்டேயினர். அது போன்ற ஒரு படத்தை தான் கமலிடம் இருந்து நான் மட்டும் அல்ல, சராசரி சினிமா ரசிகனும் எதிர்பார்க்கிறான். "விஸ்வரூபம்" அது போன்ற ஒரு படமாய் இருக்க வேண்டும். படத்தின் ட்ரைலர் கூட அப்படி தான் இருக்கிறது. இது வரை வந்த அணைத்து ட்ரைலர்களிலும் "இந்த கதையில எல்லோருக்கும் டபுள் ரோல்" என்கிற வசனம் இடம் பெறுகிறது, அது கொஞ்சம் நெருடலை தருகிறது. அது மட்டும் அல்லாமல், தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி அடைந்த படங்களில் அனைத்திலும் "டெர்ரர் அல்லது கெத்து வில்லன்" கதாபாத்திரம் ஒன்று கண்டிப்பாய் இருந்தே இருக்கும். கமலின் தசாவதாரதில் "பிளெட்சர்", எந்திரனில் "சிட்டி 2.0", மங்காத்தா "விநாயக் மகாதேவ்" , பாட்ஷா "ஆன்டனி", சிவாஜி "ஆதி",காக்க காக்க "பாண்டியா" என்று நிறைய உதாரணம் சொல்லலாம். "விஸ்வரூபம்" படத்தின் வில்லன் யார் என்றே ட்ரைலர் வைத்து சொல்ல முடியவில்லை. அது போக படத்தில் நடித்து உள்ள நிறைய நடிகர்கள் தமிழுக்கு புதுமுகங்கள். இவை எல்லாம் படத்தின் ஓட்டத்தை பாதிக்காது என்றே நம்புவோம் ஆக.


கடைசியாக ஏர்டெல் கஸ்டமர் கேரிடம் பேசியதில் இருந்து டிடிஎச்சில் இருக்கும் ஒரே குறை, படம் பார்க்கும் போது கரண்ட் கட் ஆனாலோ, அல்லது மோசமான வானிலை காரணமாக உங்க ஏரியாவில் மட்டும் ஒலிபரப்பு தடை பட்டாலோ, படத்தை மறு ஒளிபரப்பு பண்ண மாட்டார்கள். கரண்ட் கட் என்பது நமது பிரச்னை என்பதால் மறு ஒளிபரப்பு இல்லை என்கிற விளக்கம் எனக்கு குடுக்க பட்டது. அடுத்து படத்தை யாரும் ரெகார்ட் செய்ய முடியாது. அதருக்கு அவர்கள் குடுத்த விளக்கம் -நீங்கள் படத்தை பிரிண்ட் போட்டால், அல்லது உங்கள் கேமராவில் ரெகார்ட் செய்து, இன்டர்நெட்டில் உலாவ விட்டால், யாரின் டிடிஎச்சில் இருந்து கேமரா ரெகார்ட் செய்ய பட்டது என்று மிக சுலபமாக தெரிந்து விடும், படம் உங்கள் டிவியில் வரும் போது, உங்களுக்கு என்று ஒதுக்க பட்ட "யூனிக் பார் கோட்" ஒன்று உங்கள் திரையில் படம் முழுவதும் வரும். ஒவ்வொரு வீடுக்கும் ஒவ்வொரு கோட். அதனால், நீங்கள் ரெகார்ட் செய்தால் கண்டிப்பாய் யார் வீட்டில் இருந்து ரெகார்ட் செய்ய பட்டது என்பது தெரிந்துவிடும். ஆனால் இதருக்கு எல்லாம் நம் ஆட்கள் பயபடுவர்கள் என்று நான் நம்ப தயாராக இல்லை. படம் வெற்றி அடையுதோ இல்லையோ, ஆனால் கமலின் டிடிஎச் முயற்சி தமிழ்/இந்திய சினிமாவின் பெரிய புரட்சி என்றே நான் சொல்லுவேன்.

ஹாட்ஸ் ஆப் கமல் !!!