Thursday, January 24, 2013

விஸ்வரூபம் - இயக்குனர் கமல் - யுஸ் ரீலீஸ் - எகிறும் எதிர்பார்ப்பு !!

கமல் "விஸ்வரூபம்" படத்தை ஆரம்பிக்கும் போது சத்தியமாக கனவிலும் இப்படி ஒரு எதிர்ப்பு வரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். செல்வராகவன் இயக்கத்தில் கமல் - படத்தின் பெயர் "விஸ்வரூபம்" என்கிற அறிவிப்பு வந்தவுடன், எனக்கு பெரிய ஆச்சிரியம், கமல் எப்படி செல்வா இயக்கத்தில் நடிப்பார் என்று, சத்தியமாக ஒத்து வரவே வராது என்று எண்ணினேன். நான் நினைத்தது போலவே படம் ஆரம்பித்த சில நாட்களிலே செல்வா படத்தில் இருந்து விலகினார். படத்தை இயக்கும் பொறுப்பு கமலிடம் வந்து சேர்ந்தது. கமல் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை விட அவர் மிக சிறந்த இயக்குனர், அதற்க்கு சாட்சி அவர் இயக்கிய படங்கள் "ஹேராம்" மற்றும் "விருமாண்டி". ஹேராம் வணிகரீதியான தோல்வி என்றாலும், தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு எடுத்து சென்ற படம் என்கிற பெயர் உண்டு. "விருமாண்டி" வணிகரீதியாக சுமாரான வெற்றி என்றாலும், எனக்கு மிகவும் பிடித்த கமல் படங்களில் ஒன்று. கமலில் கதை சொல்லும் பாணி அட்டகாசமாய் இருந்தது. உலக சினிமா அறிவு (இணைய கூகிள் அறிவு - அது தானே உலக சினிமா அறிவு !! ) எதுவும் தெரியாத வயதில் நான் பார்த்து அசந்து போன படம். 


ஒரே சம்பவங்களை, கொத்தாளத் தேவர் முதலில் சொல்லும் போது தன் வசதிப்படி சுருக்கிச் சொல்வார். விருமாண்டி குறித்த நமது சந்தேகங்கள், தொடர்ந்து விருமாண்டியே தன் கதையை விரிவாகச் சொல்லும் போது அகலுகின்றன. சிறப்பான கதை சொல்லும் உத்தியைக் கடைபிடித்து இருப்பார் இயக்குனர் கமல். மனித உளவியலை தந்துருபமாக காட்டி இருந்தார் கமல். மனிதன் தன்னை தன்னை எப்பொழுதும் நல்லவனாக காட்டி தான் எந்த உண்மையும் சொல்லுவான் என்கிற சித்தாந்தை கொண்ட படம். நம்மில் 99% பேர் "கொத்தலத் தேவர்" கதாபாத்திரம் கதை சொல்வது போல் நம் வாழ்கையில் கண்டிப்பாய் கதை சொல்லி இருப்போம். நான் அடிக்கடி எனது நண்பர்களிடையே சொல்லும் வாசகம் "விருமாண்டி ஸ்டைல் கதை சொல்லாத டா" என்பதே ஆகும். 

விருமாண்டி பார்த்து விட்டு தலைவர் சுஜாதா இது போன்று சொல்லி இருந்தார் ''“சிக்கலான இரண்டு ‘பாயிண்ட் ஆஃப் வியூ’வில் (POV) சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையை மக்கள் புரிந்துகொள்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை என்கிற செய்தி, தமிழ் சினிமாவின் முன்னேற்றத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் அறிகுறி. மேலும், இவ்வகை முயற்சிகளில் ஈடுபட அது தெம்பு அளிக்கும்
விருமாண்டி என்னை பொறுத்த வரை "ரோஷோமான்" படத்தை விட சிறந்த படைப்பு. ரோஷோமான் படத்தில் அகிரோ ஒரே சம்பவத்தை பல கோணங்களில் நான்கு பேர் தங்களை நல்லவர்கள் போல் காட்டி அந்த சம்பவத்தை விவரிப்பது போல் சொல்லி இருப்பார். கேமரா ஆங்கில் ஒவொருவரும் கதை சொல்லும் போது மாறும். ஆனால் கமல் அதை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் பல சம்பவங்களை ஒரே கேமரா ஆங்கிளில் காட்டி இருப்பார். "ரோஷோமான்" பார்க்கும் போது எனக்கு கொட்டாவி தான் வந்தது, படத்தில் விறுவிறுப்பு மற்றும் சுவாரிசியம் மிஸ்ஸிங். ஆனால் விருமாண்டியில் அனைத்தும் இருந்தது.


இப்படி பட்ட நல்ல திரைபடத்தை இயக்கிய கமல், தனது அடுத்த படமான விஸ்வரூபத்தை இயக்க எடுத்து கொண்ட காலம் கிட்ட தட்ட 5 வருடம். கண்டிப்பாய் கதையை நன்றாக செதுக்கி இருப்பார், படம் செம விறுவிறுப்பாய், எந்த பிசிறும் இல்லாமல் இருக்கும் என்று நான் நம்புகிறேன். படம் தமிழகத்தில் 28 தேதி வரை ரீலீஸ் இல்லை, என்கிற செய்தி பார்த்தேன். நான் இருக்கும் சான் டியாகோவில் (CA) இன்று இரவு 8:30 மணிக்கு ரீலீஸ் ஆகிறது. டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் செய்து உள்ளோம். இங்கு தியேட்டர் எல்லாம் குப்பை போல் தான் இருக்கும். நல்ல தியேட்டரில் பிறகு பார்த்து கொள்ளலாம். இப்போதைக்கு படம் பார்த்தால் மட்டும் போதும் என்பது போல் உள்ளது.

படம் பார்த்த ஒருவர், அல்-கொய்தா, LeT போன்ற டெர்ரரிஸ்ட் நெட்வொர்க் எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றிய த்ரில்லர் டாகுமெண்டரி போல் உள்ளது என்று சொல்லி இருந்தார். செம இன்டரிஸ்டிங் ப்ளாட் போல் எனக்கு தெரிகிறது. விஜயகாந்த் படம் போல், தீவிரவாதி பாகிஸ்தான் பார்டரில் நின்று லாரி ஏறி இந்தியாவுக்குள் வந்து பாம் வைத்து விட்டு போவது போல் கண்டிப்பாய் இருக்காது. கமல் எப்படி அவர்கள் நெட்வொர்க் வேலை செய்கிறது என்பதை நம்பும் படி காட்டி இருப்பார். சோ, அவர் சொல்லுவது போல் படம் டெர்ரரிஸ்ட் நெட்வொர்க் பற்றி படம் என்றால், ஞாயமாக அல்-கொய்தா, LeT போன்ற அமைப்புகள் தான், தங்கள் ரகசியங்களை வெளியீட்டு விட்டார்கள் என்று போராட வேண்டும், ஏன் தமிழ் நாட்டு முஸ்லீம்ஸ் போராடுகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை.

படம் இங்கு வெளி ஆவது உறுதி, இந்திய நேர படி நாளை மதியம் படத்தை பற்றிய எனது பார்வையை இங்கு பதிவு செய்கிறேன்.


16 comments:

 1. Its so sad that Gulf Countries banned the film and much awaited a Movie of the Year..!

  ReplyDelete
 2. சுட்ட விமர்சனம்
  http://sekkaali.blogspot.com/2013/01/blog-post_24.html

  ReplyDelete
 3. Where in San diego this movie is going to be released?

  ReplyDelete
  Replies
  1. Digiplex Cinemas (Old UltraStar Cinemas)
   13475 Poway Road
   Poway, CA 92064

   Thu (01/24) 8:30 PM

   Delete
 4. Good post!.
  I support kamalhasan!!

  http://aatralarasau.blogspot.com/2013/01/blog-post_3377.html
  Thank you

  ReplyDelete
 5. வயித்தெறிச்சலுடன் வாழ்த்துக்கள் தல :-) பெங்களூரில் ரிலீஸ் ஆகிறதா இல்லையா என்றே தெரியவில்லை. நாளை முதல் ஷோ வந்தால் தான் தெரியும் # fingers crossed :-(

  உள்ளதை உள்ளபடி அதே சமயம், கதையைச் சொல்லிவிடாமல் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்... காத்திருக்கிறோம் :-)

  ReplyDelete
 6. காத்திருக்கிறேன் உங்கள் பார்வைக்காக...

  ReplyDelete
 7. LUCKY RAJ. WAITING FOR UR REVIEW. DONT MAKE US WAIT.

  ReplyDelete
 8. //அவர் சொல்லுவது போல் படம் டெர்ரரிஸ்ட் நெட்வொர்க் பற்றி படம் என்றால், ஞாயமாக அல்-கொய்தா, LeT போன்ற அமைப்புகள் தான், தங்கள் ரகசியங்களை வெளியீட்டு விட்டார்கள் என்று போராட வேண்டும், ஏன் தமிழ் நாட்டு முஸ்லீம்ஸ் போராடுகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை.//

  நியாயமான கேள்வி... படம் பாத்துட்டு சீக்கிரம் review எழுதுங்க ராஜ்.. waiting...

  ReplyDelete
 9. படம் திரையரங்குக்கு வரும் வரை கதை சொல்வதை தவிர்க்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. ராஜ், கண்டிப்பா Spoliers இல்லாம படத்தை பத்தி என்னுடைய அனுபவத்தை மட்டும் எழுதுறேன்... :):)

   Delete
 10. நியாயமான பதிவு.
  //சோ, அவர் சொல்லுவது போல் படம் டெர்ரரிஸ்ட் நெட்வொர்க் பற்றி படம் என்றால், ஞாயமாக அல்-கொய்தா, LeT போன்ற அமைப்புகள் தான், தங்கள் ரகசியங்களை வெளியீட்டு விட்டார்கள் என்று போராட வேண்டும், ஏன் தமிழ் நாட்டு முஸ்லீம்ஸ் போராடுகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை//
  உண்மை தாங்க .எல்லோரும் இதுபற்றி சீரியஸா சிந்திக்க வேண்டும்.

  ReplyDelete
 11. @அகல்!இப்பத்தான் பட விமர்சனங்கள் தமிழகத்தில் வெளியாகும் வரை வேண்டாம்ன்னு சொல்றேன்.அதுக்குள்ள ரிவியு வேணுமா உங்களுக்கு?

  கமலின் உழைப்பும்,முதலீடும்,எதிர்ப்புக்கள் போன்றவை என பலவும் கலந்துள்ளது.நமக்கென்ன பதிவை போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு தாண்டி விடுவோம்.

  ReplyDelete
 12. தமிழ் மணத்தில் இன்றைய ஸ்பெஷல் தோசை!

  சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
  please go to visit http://tamilnaththam.blogspot.com/

  ReplyDelete
 13. உங்களுடைய கருத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன் ராஜ்.
  இது ஒரு தேவை இல்லாத பிரச்னை , இதில் இருந்து கமல் மீண்டு இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  ReplyDelete