Showing posts with label அனிமேஷன் சினிமா. Show all posts
Showing posts with label அனிமேஷன் சினிமா. Show all posts

Saturday, May 24, 2014

கோச்சடையான் (2014) - தாறுமாறு !!!

ரஜினி என்கிற மாபெரும் நடிகரை மட்டுமே நம்பி மோஷன் காப்ச்சர் தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவில் அறிமுக படுத்தி இருக்கிறார்கள். இது போன்ற புது  தொழில்நுட்பங்களை (ஆரோ 3D)கமல் மட்டுமே அறிமுக படுத்தி வந்துள்ளார். ரஜினிக்கு இதுவரை ஒரு புது தொழில்நுட்பத்தில் முதல் முறையாக அறிமுக படுத்த வாய்ப்பு இல்லாமலே போனது, என்னை போன்ற ரஜினி வெறியர்களுக்கு பெரிய குறையாகவே இருந்து வந்தது. இனி மேல் அந்த கவலை இல்லை. 3டி மோஷன் காப்ச்சர் டெக்னாலஜி என்கிற தொழில்நுட்பத்தை இந்தியாவிற்க்கே அறிமுக படுத்தியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் என்று காலரை தூக்கி விட்டு சொல்லி கொள்ளலாம்.


  2009ம் ஆண்டில் வெளியான "அவதார்" மற்றும் 2011ம் ஆண்டில் வெளியான "அட்வஞ்சர்ஸ் ஆஃப் டின் டின்" போன்ற படங்களை உருவாக்க பயன்படுத்தப்பட அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் உருவாக்கப்பட்ட படம் தான் கோச்சடையான். "அவதார்" "டின் டின்" படங்களை விட கோச்சடையானை உருவாக்குவதில் சிக்கல் அதிகம். பாண்டோரா கிரகத்தில் வாழும் "நாவியையோ" அல்லது டின் டின் கதாபாத்திரத்தையோ யாரும் பார்த்தது இல்லை, அதன் உடல் மொழியை எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. நாவி இப்படி தான் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நாவி எப்படி நடந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்கள். ஆனால் ரஜினி எப்படி நடப்பார், எப்படி ஓடுவார், எப்படி சிரிப்பார் என்று , ரஜினியின் அணைத்து உடல்மொழியும் தமிழ் மக்களுக்கு அத்துபடி. இந்த சவாலை திறம்பட சாமாளித்து, நிஜ ரஜினியை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்கள் பட குழுவினர்கள். நல்ல தொழில்நுட்பத்துடன் சிறந்த கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை, உலக தரமான இசை என்று அணைத்தும் சரியான விகிதத்தில் சேர்ந்து விஷுவல் விருந்து படைத்தது இருக்கும் சரித்திர சாகசம் தான் கோச்சடையான்.


 ஒற்றை வரியில் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் கதை என்று சொல்லி விட முடியாது. விறு விறு திரைக்கதை முலம் இந்த சாதாரண கதையை அற்புதமாய் செதுக்கி மற்றுமொரு ரஜினி மாஸ் படத்தை நமக்கு வழங்கி உள்ளார் செளந்தர்யா மற்றும் கே.ஸ் ரவிக்குமார் கூட்டணி. இது போன்ற விறுவிறுப்பான திரைகதை கடந்த இருபது ஆண்டுகளில் ரஜினிக்கு அமையவில்லை என்றே நான் சொல்வேன். இது போன்ற எக்ஸ்பிரஸ் வேக கதை கடைசியாய் சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷாவில் வழங்கி ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தினார். அதன் பிறகு இப்பொழுது கோச்சடையான். பரம திருப்தி.
   
  கோட்டையபட்டினம் என்கிற தேசத்து மன்னன் ரிஷிகோடங்கன் (நாசர்). அந்த நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான் (ரஜினி). இவருக்கு ராணா, சேனா என இரு மகன்கள். கோச்சடையான் நல்லவன் யாருக்கும் அஞ்சா மாபெரும் வீரன். அதனால் நாட்டு மக்கள் அவர் மேல் அளவு கடந்த அன்பு வைக்கின்றனர். இது நாசருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் கோச்சடையானை எப்படியாவது  அழிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார். சதி செய்து கோச்சடையான்னை அழித்தும் விடுகிறார். தன் தந்தையை கொன்ற நாசரை எப்படி ராணா பழிக்கு பழி வாங்குகிறார் என்பதை எக்ஸ்பிரஸ் வேக திரைகதையில் விடை சொல்லி இருக்கிறார் கே.ஸ்.

  
முதல் இருபது நிமிடங்கள் படத்தோடு ஓட்டுவது கொஞ்சம் சிரமம் தான். மோஷன் காப்ச்சர் டெக்னாலஜிக்கு நம் கண்கள் பழக எடுத்து கொள்ளும் நேரம் தான் இது. கண்கள் பழகியவுடன் திரைக்கதை வேகம் எடுக்கிறது. சிறிது கூட தொய்வு ஏற்படாமல் இறுதி வரை டெம்போவை தக்க வைத்த இயக்குனர் செளந்தர்யாவிருக்கு பெரிய சபாஷ். கோச்சடையான், ராணா, சேனா என மூன்று கேரக்டரில் ரஜினி கலக்குகிறார். இவரது உடல் மொழி, ஸ்டைல்கள் படத்திற்கு பெரிய பலம். கோச்சடையான் ரஜினி ஆடும் சிவதாண்டவம் ரசிகர்களை கைதட்ட வைக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள், தத்துவங்களாக அனல் கக்குகின்றன. தீபிகா படுகோனேவை முதல் பாதியில் ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு ஸ்கோர் பண்ணுகிறார். மற்ற நடிகர்கள் தேர்வும் கன கச்சிதம். நாகேஷ்க்கு உடல்மொழியை செய்தவர் ரமேஷ்கண்ணா. மிகவும் நன்றாக செய்து உள்ளார். ஷோபனா, ருக்மணி, சண்முகராஜன் ஆகியோரின் கேரக்டர்களும் அம்சமாக உள்ளது. 
  
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், வைரமுத்து – வாலியின் வரிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, வசனம், ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, ஆர்.மாதேஷின் கிரியேட்டிவ், ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் செளந்தர்யா பிரமாண்டமாக ஜெயித்திருக்கிறார்!

கோச்சடையான் (2014) - தாறுமாறு !!!
My Rating : 8.8


Monday, November 21, 2011

டின்டினின் சாகசங்கள் The Adventures of Tintin-The Secret of the Unicorn (2011)

படத்தை பற்றி பார்பதற்கு முன்பு டின் டின் யார் என்று பார்போம். 17 வயது நிரம்பிய துப்பறியும் கார்ட்டூன் கதாபாத்திரம் தான் டின் டின். இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவரின் பெயர் Hergé. இவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த கார்டூனிஸ்ட். டின்டினின் சாகசங்கள் என்ற தலைப்பில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை எழுதி தள்ளினார். சுருக்க சொல்லவேண்டு என்றால் டின்டின் ஜேம்ஸ் பாண்டு போன்று ஒரு கற்பனை பாத்திரம். டிண்டின் காமிக்ஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் விதமாக எழுத பட்டு இருக்கும்.
டின்டினின் அணைத்து காமிக்ஸ்கலிலும் அவனுக்கு உற்ற தோழனாக வருவது அவனது நாய் ஸ்னோவி (Snowy). மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் ஹேடாக் (Haddock), இவர் ஒரு கப்பல் கேப்டன். சதா எந்த நேரமும் தண்ணியில் மிதப்பவர். பிறகு ப்ரொஃபஸர் கால்குலஸ் (calculus), இவர் ஒரு விஞ்ஞானி. காமிக்ஸில் வரும் முக்கிய விஞ்ஞான புதிர்களை அவிழ்ப்பதற்க்கு இவர் பயன் படுவார். இது போக இரட்டைப் போலீஸ்காரர்கள் "தாம்ஸன்" & "தாம்ப்ஸன்" (Thomson & Thompson). இந்த படத்தில் ஸ்னோவி, ஹேடாக் மற்றும் "தாம்ஸன்" & "தாம்ப்ஸன்" மட்டுமே உள்ளனர். ஏனோ கால்குலஸ் இல்லை. வில்லனாக வரும் கதாபாத்திரத்தின் பெயர் ஸாஹரின் (Sakharine).
      
மொத்தம் 23 டின்டின் காமிக்ஸ்கள் வெளிவந்துள்ளன. இந்த திரைப்படம் முன்று காமிக்ஸ்களின் கதையை கலவையாக்கி வெளிவந்துள்ளது. The Secret of the Unicorn (1943), The Crab with the Golden Claws (1941) மற்றும் Red Rackham's Treasure (1944) ஆகிய மூன்று காமிக்ஸ் கதைகளையும் சேர்த்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படமே இந்தப் படம்.  
படம் ஆரம்பித்தவுடன்  நாம் கதைக்குள் நுழைந்து விடுவோம். டின்டின் ஒரு பொம்மை கப்பலை (Unicorn) ஒரு பவுண்ட் விலை குடுத்து வாங்குவார். அங்கு வரும் ஸாஹரின் அந்த கப்பலை தனக்கு குடுக்கும்மாறு டின்டினை மிரட்டுவார். ஆனால் டின்டின் அதற்கு மறுத்து கப்பலை தன் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார். வீட்டில் நாய் ஸ்னோவிக்கும் ஒரு பூனைக்கும் நடக்கும் சண்டையில் அந்த பொம்மை கப்பல் உடைந்து விடுகிறது. அதில் இருந்த ஒரு ரகசிய பேனா வெளி வந்து மேசை அடியில் சென்று ஒளிந்து கொள்கிறது.

டின்டின் வெளியில் சென்ற நேரம் பார்த்து ஸாஹரின் ஆட்கள் வந்து டின்டினின் வீட்டை சோதனையிட்டு அந்த கப்பலை திருடி சென்று இருப்பார்கள். அபொழுது தான் டின்டின்க்கு அந்த கப்பலில் ஏதோ மர்மம் இருப்பது புரிய வரும். தவறி மேசைக்கு அடியில் விழுந்த பேனாவை நாய் ஸ்னோவி கண்டுபிடித்து விடும். அந்த பேனாவின் உள்ளே ஒரு காகிதம் இருக்கும். படித்து பார்த்தால் ஏதோ புதையல்க்கு ஆனா ரகசிய குறியீடு போல் தோன்றும்.
மறு நாள் டின்டின் வீட்டுற்கு வரும் ஒரு மர்ம ஆசாமி ஸாஹரின் ஆட்களால் சுட்டு கொல்ல படுகிறார். பிறகு அந்த மர்ம ஆசாமி ஒரு போலீஸ்காரர் என்று தெரிய வருகிறது. அவர் டின்டினிடம் ஏதோ ஒரு ரகசியத்தை சொல்ல வந்து இருப்பார், ஆனால் அதற்கு முன்பே அவர் இறந்து விடுவார். அதன் பிறகு அங்கு நடக்கும் கலாட்டாவில் டின்டின் ஸாஹரின்  ஆட்களால் தாக்கப்பட்டு காரபௌட்ஜின் (Karaboudjan) என்ற கப்பலுக்கு பெட்டியில் அடைத்து எடுத்து செல்ல படுகிறான். அந்த கப்பலில் இருந்து நாய் ஸ்னோவியின் உதவியுடன் தப்பிக்கும் டின்டின், அதே கப்பலில் சிறைவைக்கப்பட்ட கேப்டன் ஹேடாக்கை (Haddock), சந்திக்கிறான்.
டின்டின்னும் கேப்டன் ஹேடாக்வும் இனைந்து காரபௌட்ஜின் (Karaboudjan) கப்பலில் இருந்து தப்பிக்கிறார்கள். தப்பித்த டின்டின் பஹார் (Bagghar) என்ற ஊரில் புதையல்க்காண ரகசியம் மறைந்து இருப்பதை அறிகிறான். ஹேடாக், டின்டின் மற்றும் ஸ்னோவி  பஹார் (Bagghar) செல்கிறார்கள். புதையலை ரகசியத்தை தேடி வில்லன் ஸாஹரின் மற்றும் அவனது ஆட்கள்களும் அங்கு வருகிறார்கள்.

ஸாஹரின் கேப்டன் ஹேடாக்கை மற்றும் டின்டினை ஏன் கடத்தினான். புதையல் ரகசியம் என்ன ? டின்டின் அந்த புதிர்களை எப்படி அவிழ்த்தான் ? புதையல் இருந்ததா ? அதை யார் கை பற்றினார்கள் ? என்ற பல கேள்விகள்க்கு டின்டினின் சாகசங்கள் முலம் படம் பதில் சொல்கிறது.

இதை படம் என்று சொல்வதை விட ஒரு அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் 3D அனுபவம். படத்தின் இறுதியில் வரும் துரத்தல் கட்சிகள் உங்களை மெய் சிலிர்க்க வைத்து விடும்.
      
படத்தை இயக்கியவர் ஸ்பீல்பெர்க் (Spielberg). இவரை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. இவரே தான் ஒரு டின்டின் காமிக்ஸ் ரசிகன் என்று கூறி உள்ளார். அதனால் படத்தை பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார்.

இந்த அளவு தந்துருபமான கிராபிக்ஸ் கட்சிகளை நான் வேற எந்த படத்திலும் பார்த்ததில்லை, அவதார் தவிர்த்து.
டின்டின் காமிக்ஸ் பிரியர்கள் மட்டும் அல்லது அணைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக படம் வெளிவந்துள்ளது.

My Rating: 7.8/10......