Sunday, December 22, 2013

Dhoom 3 (2013) - ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட் !!

இந்த வருடத்தில் இறுதியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான தூம் -3 எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா இல்லையா என்பதை பார்போம்.  ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு என்று ஒரு பார்முலா உண்டு. முதல் பத்து நிமிட சாகச காட்சி, படத்தின் பெயர் போடும் போது பிரபல பாப் பாடகியின் பாடல், ஜேம்ஸ்பாண்ட் M மை சந்தித்து வில்லனை பற்றி அறிந்து கொள்வார், பிறகு பாண்ட் வில்லனை தேடி அவனது இடத்துக்கு செல்வார், முதல் முயற்சியில் தோல்வி, பிறகு இரண்டாம் முயற்சியில் வில்லனை விழ்த்தி வெற்றி பெறுவார். இது போன்ற பிக்ஸ்டு டெம்ப்ளேட் தான் அணைத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் காண கிடைக்கும். 

இதே போல் தான் தூம் சீரீஸ்க்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. அது திருடன் - போலிஸ் விளையாட்டு. முதலில் திருடன் ஒரு கொள்ளையை வெற்றிகரமாக நடத்தி விடுவான். பிறகு இரண்டாம் கொள்ளை, அதில் போலீஸ் திருடனை பிடிப்பது போல் அருகில் வரும், ஆனால் திருடன் தப்பித்து விடுவான். கடைசியாக முன்றாவது கொள்ளை. அதில் போலீஸ் திருடனை பிடித்து விடும். இடையில் மானே தேனே போல் திருடனுக்கு அழகிய காதலி என்ற கதைக்கு திரைக்கதை எழுதினால் தூம் ரெடி.


இதில் போலீஸ் கேரக்டருக்கு அபிஷேக் பச்சன் என்று பிக்ஸ் செய்து கொண்டு, திருடன் கேரக்டருக்கு ஹீரோக்களை மாற்றி கொண்டே இருப்பார்கள். தூம் -1 திருடன் கேரக்டர் செய்தது ஜான் ஆபிரகாம், தூம் -2 க்கு ரித்திக் ரோஷன். இந்த முறை திருடனுக்கு அமீர்கான் என்ற அறிவுப்பு வந்தவுடனே படத்தை ரொம்பவே எதிர்பார்த்து விட்டேன். ஆனால் பலவீனமான் திரைக்கதையால், ஆபரேஷன் (வசூல்) சக்சஸ், பேஷன்ட் (படம்) கவலைக்கிடம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. அமீர்கான் தூம் ப்ரண்ட்க்காக மட்டுமே நடிக்க ஒத்து கொண்டு உள்ளார் என்று நினைக்கிறன். முழு கதையை கேட்டு இருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறன்.

சிகாகோவில் சர்கஸ் கம்பெனி நடத்தி வருபவர் ஜாக்கி ஷெராப். அவரது மகன் தான் ஆமிர்கான். வெஸ்டர்ன் பேங்க் ஆப் சிகாகோ மூலமாக கடன் வாங்கி சர்கஸ நடத்தி வருகிறார். வாங்கிய கடனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். கடைசியாக தன்னிடம் உள்ள ஒரு மேஜிக் ஆக்ட்டை வங்கி ஆட்களுக்கு செய்து காட்டுகிறார். அதில் திருப்தி ஏற்பட்டால் வங்கி சர்கஸ் நடத்த தொடர்ந்து இடமும் பணமும் குடுக்கும். ஆனால் அந்த மேஜிக் ஆக்ட் வங்கி ஆட்களை கவரவில்லை. கடன் நிறுத்தப்படுகிறது. விரக்தியில் தன் மகன் முன்னாலே ஜாக்கி தற்கொலை செய்து கொள்கிறார். 


ஆமிர்கான் வளர்ந்துவுடன் வெஸ்டர்ன் பேங்க் ஆப் சிகாகோவை பழி வாங்க புறபடுகிறார். வங்கி கிளைகள் கொள்ளை அடிக்கிறார். முதல் கொள்ளை வெற்றி. இரண்டாம் கொள்ளையில், அபிஷேக் என்ட்ரி. இறுதி கொள்ளை என்னவானது என்பதை வெண்திரையில் கண்டு கொள்ளுங்கள். படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த மேஜிக் ஆக்ட்டை பார்த்தவுடனே அதன் ப்ரெஸ்டிஜ் எபெக்ட் தெரிந்து விடுகிறது. அதன் பிறகு வரும் இடைவேளை ட்விஸ்ட் பெரிய ஆச்சிரயத்தை குடுக்கவில்லை. வங்கியை கொள்ளை அடித்து ஆமிர்கான் தப்பிக்கும் காட்சியில் கிலோ கணக்கில் பூ கடையை காதில் சுற்றுகிறார்கள். வெறுமென சேசிங் காட்சிகள் மட்டுமே படம் முழுக்க வருகிறது. புதிசாலிதனமான காட்சிகள் மிஸிங், ஓசோன் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் படம் முழுக்க பரவி கிடைக்கிறது. 

படத்தில் கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது ஆமிர்கான் மட்டுமே. மனிதர் பின்னி உள்ளார். வில்லத்தனம் அவருக்கு பக்காவாய் பொருந்துகிறது. குறை சொல்ல முடியாத நடிப்பு. அபிஷேக் பச்சன் வழக்கம் போல் தன் போலீஸ் பணியை செய்து விட்டு போகிறார். அலட்டல் இல்லாத நடிப்பு. பிரேம்ஜியை  எப்படி நாம் எல்லா வெங்கட் படங்களிலும் சகித்து கொள்கிறோமோ, அதே போல் தூம் படங்களில் நாம் உதய் சோப்ரா என்கிற கோமாளியை நாம் சகித்து கொள்ள தான் வேண்டும். இந்த முறை அந்த கோமாளியின் கடி ரொம்பவே ஜாஸ்தி. ஸ்கின் ஷோவுக்கும் லிப் கிஸ்க்கும் கத்ரீனா கைப், அவ்வளவு தான்.


ஜேம்ஸ்பாண்ட் தீம் மியூசிக் போல், தூம் தீம் மியூசிக் ஒன்று உள்ளது. எதன்னை வருடம் கேட்டாலும் அலுக்காது. தீம்மை கொஞ்சம் மெருகேற்றி உள்ளார்கள். ஆனால் பாடல்கள் சுமார், பின்னணி இசையும் ஓகே ரகம் தான். ஒளிப்பதிவு ரொம்பவே ஸ்லோவாக இருக்கிறது. ஸ்லோ மோஷன் காட்சிகளில் குட்டி துக்கம் போட்டு எழுந்து விடலாம். ஹிந்தி ஆடியன்ஸ் எந்த பெரிய ஹீரோ படம் வந்தாலும் விழுந்து எழுந்து பார்ப்பார்கள். இந்த படத்தையும் கண்டிப்பாய் பார்ப்பார்கள். சமிபத்தில் மெகா மெகா ஹிட் என்று சொல்ல படுகிற ஹிந்தி படங்களில் தரத்தை வைத்து பார்க்கும் போது, தூம் மெகா மெகா மெகா ஹிட் ஆகும் என்று நான் நினைக்கிறன். ஆந்திரா மக்களுக்கு இருக்கும் குறைந்த பச்ச லாஜிக் சென்ஸ் கூட ஹிந்தி ஆடியன்ஸுக்கு கிடையாது என்பது பல முறை நிருபணம் ஆகி உள்ளது. இந்த படம் வெற்றி அடைந்தால், அது மீண்டும் உறுதி படுத்த படும்.

Dhoom-3 ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட்!!
My Rating: 6.4/10.

சமிபத்தில் எழுதியது: பிரியாணி (2013) 


Friday, December 20, 2013

பிரியாணி (2013) - செம டேஸ்ட் மா !!

சான்டியாகோவில் ரீலீஸ் ஆகும் அணைத்து தமிழ் படங்களையும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கையின் படி இன்று இரவு "பிரியாணி" படத்துக்கு சென்றோம். கார்த்திக்கின் முந்திய படங்களினால் ஏகத்துக்கும் பல்பு வாங்கி இருந்த காரணத்தால் பிரியாணியை ஸ்கிப் செய்து விடலாம் என்று தான் முடிவு செய்து இருந்தேன். இருந்தாலும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து தான் படத்துக்கு சென்றோம். கோவா தவிர்த்து வெங்கட்டின் அணைத்து படங்களும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. வெங்கட் பிரபு வழக்கம் போல் எங்களை ஏமாற்ற வில்லை. பிரியாணியை மிகுந்த சுவையுடன் பரிமாறி, வயறு நிறைய திருப்தியுடன் எங்களை திருப்பி அனுப்பி உள்ளார். வெங்கட் ஸ்டைலில் நல்ல சஸ்பென்ஸ் படம் பார்த்த திருப்தி கிட்டியது.


சுகன் (கார்த்திக்) மற்றும் பிரேம்ஜி சிறு வயது நண்பர்கள். தற்சமயம் ஒரே கம்பெனியில் வேலை செய்கிறார்கள். கார்த்திக்கின் காதலி ஹன்சிகா. வீக் எண்ட்டில் பப்பு, பார்ட்டி என்று வாழ்க்கையை கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்தியாவின் பெரிய பணக்காரர் நாசர். கிரானைட் முறைகேட்டில் சிபிஐ அவரை கைது செய்ய துடிக்கிறது. பிளே பாய் வாழ்க்கையை வாழும் கார்த்திக்கிற்கு ஒரு கெட்ட பழக்கம். பார்ட்டியில் தண்ணி அடித்துவிட்டால் வயிறு முட்ட பிரியாணி சாப்பிட வேண்டும். ஆம்பூரில் தண்ணி பார்ட்டிக்கு போகும் கார்த்திக் பிரேம்ஜி கூட்டணி பிரியாணி சாப்பிட அலைகிறார்கள். பிரியாணி சாப்பிடும் இடத்தில அழகிய (!) பெண் ஒருத்தியை பார்த்து அவள் பின்னால் போகிறர்கள். ரீசர்ட்டுக்கு போகும் அவர்கள் அங்கு குடித்து விட்டு மட்டை ஆகிறார்கள். 

முழித்து பார்க்கும் போது தான் தாங்கள் பெரிய பிரச்சினையில் மாட்டி இருப்பது தெரியவருகிறது. அதுவும் யாரோ இவர்களை ப்ளான் செய்து மாட்டி விட வைத்து இருப்பதும் தெரிய வருகிறது. அது என்ன பிரச்சனை, இவர்களை மாட்டி விட நினைப்பது யார், அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டார்கள் என்பதை வெங்கட் பிரபு சரோஜா பாணியில் சொல்லி இருக்கிறார். முதல் பாதியில் நடைபெறும் சிறு சிறு சம்பவங்களை கூட இரண்டாம் பாதியில் மையின் சஸ்பென்ஸுடன் முடிச்சு போட்டு மிக அழகாய் அவித்து இருக்கிறார் இயக்குனர். முதல் பாதி ஜாலி பட்டாசு என்றால் இரண்டாம் பாதி நிற்காமல் வெடிக்கும் சரவெடி. 


கார்த்திக்கின் ஈவாய் சிரிப்பு, ஸ்டைல் என்று நினைத்து தலைசாய்ந்து நடக்கும் கோண நடை, கிண்டல் பேச்சு போன்ற கிளிசேக் மேனரிசம் எதுவும் இந்த படத்தில் இல்லை. மிகவும் சீரியஸாக நடித்து இருக்கிறார். பிளே பாய் கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தி வருகிறார். அக்ஷன் காட்சிகளில் செமையாய் ஸ்கோர் செய்கிறார். பிரேம்ஜியை இவர் கலாய்ச்சு எடுக்கும் காட்சிகள் அனைத்துமே அருமை. ஹன்சிகாவிடம் பிரியாணி கடையில் நடந்த சம்பவங்களை விவரிக்கும் காட்சிகள் சிரிப்பு வெடி. ஹன்சிகா தனது பணியை கச்சிதமாக செய்து இருக்கிறார். ஒரு கவர்ச்சி (!) பாட்டு, ஹீரோ பின்னால் வர ஒரு பாட்டு என்று தன் வேலையை குறை சொல்ல முடியாத படி செய்து இருக்கிறார்.

பிரேம்ஜி பற்றி என்ன சொல்ல. அவரிடம் ஆஸ்கார் நடிப்பை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்திலே "என்ன கொடுமை சார் இது", அளவுக்கு தான் நடிக்க முடியும் என்று மிக தெரிவாக சொல்லி விட்டார்கள். நீண்ட நாட்கள் கழித்து ராம்கி, நல்ல ரோல். வயது கூடினது போல் தெரியவில்லை. செந்துரபூவே படத்தில் பார்த்தது போலே இருக்கிறார். 90's அக்ஷன் ஹீரோவான் ராம்கிக்கு கிளைமாக்ஸ் சண்டைகாட்சியில் இன்னும் நல்ல ஸ்கோப் உள்ள அக்ஷன் பிளாக் வைத்து இருக்கலாம். நசார் வழக்கம் போல் தன் பங்கை மிக சிறப்பாய் செய்து இருக்கிறார். உமா ரியாஸ் சப்ரைஸ் பேக்கேஜ். காண்ட்ராக்ட் கில்லர் ரோலில் நன்றாக மிரட்டி உள்ளார். மௌன குரு படத்திருக்கு பிறகு நல்ல ரோல்.


சம்பத் மற்றும் ஜெயப்ரகாஷ் வீணடிக்க பட்டு விட்டார்கள். ஜெயப்ரகாஷ் கதாபாத்திரதால் கதைக்கு பெரிய யூஸ் எதுவும் இல்லை. போலீஸ் கேரக்டர் ஒன்று வேண்டும் என்பதால் அவரை நுழைத்து இருக்கிறார் என்று நினைக்கிறன். முந்திய வெங்கட் படத்தில் வந்த  ஜெய், வைபவ், அரவிந்த் ஆகாஷ் என்று அனைவரும் படத்தில் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விடுகிறார்கள். ரசிகர்கள் பல்ஸ் பார்த்து காட்சி வைப்பதில் வெங்கட் கில்லாடி. யார் யாருக்கு என்ன என்ன டயலாக் குடுத்தால் எடுபடும் என்று நன்றாக் தெரிந்து வைத்து இருக்கிறார். அதனால் தான் பிரேம்ஜி போன்ற நடிகர்கள் வைத்து தொடர்ச்சியாய் ஹிட் குடுக்க முடியாது. யுவனின் 100 படம் இது. இசை ஓகே, பின்னணி இசை எனக்கு ஏமாற்றமே. இன்னும் உழைத்து இருக்கலாம் யுவன். வெங்கட்டின் ஆஸ்தான் ஒளிபதிவாளர் சக்தி சரவணன், சேஸ்ஸிங் காட்சிகளில் கேமரா விளையாடி உள்ளது. கெஸ்ட் ரோலில் அஜித் வேறு இருக்கிறார் என்று யாரோ புண்ணியவான் விக்கிபீடியாவில் அப்டேட் செய்து இருந்தார்கள். அது மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. வெங்கட் பிரபுவின் சரோஜா படம் உங்களுக்கு பிடித்தது என்றால் நீங்கள் தவற விட கூடாத "பிரியாணி".

பிரியாணி - செம டேஸ்ட் மா 
My Rating: 8.0/10.
சமிபத்தில் எழுதியது : இவன் வேற மாதிரி (2013)


Tuesday, December 17, 2013

இவன் வேற மாதிரி (2013) - ஒன்னும் புதுசா இல்ல.

கெட்ட அரசியல்வாதியை பழி வாங்க புறப்படும் சராசரி காமன்மேன் சந்திக்கும் பிரச்சனைகள் தான் "இவன் வேற மாதிரி". கெடுதல் செய்யும் அரசியல்வாதியை கடத்தி கொண்டு போய் அவர்களுக்கு பாடம் புகட்டுவது தமிழ் சினிமாவிற்க்கு பழைய கள் என்றாலும், அதையே புதிய பாட்டிலில் அடைத்து தர முயற்சி செய்து உள்ளார் இயக்குனர் எம் சரவணன். சிட்டிசன் படத்தில் அஜித் அத்திப்பட்டிகாகவும், சமுராய் படத்தில் விக்ரம் தன் காதலி கவிதாவிற்காக செய்த கடத்தல் பணியை போன்றே, விக்ரம் பிரபு சட்ட கல்லூரியில் குழப்பம் விளைவித்த சட்ட அமைச்சரின் தம்பியை கடத்தி நீதியை நிலைநாட்டுகிறார்.


தமிழ் நாட்டிற்கு பழக்கமான சட்ட கல்லூரி கலவரத்துடன் படம் ஆரம்பிகிறது. கலவரத்தை தூண்டி விட்டது சட்ட அமைச்சர். போலீஸ் வேடிக்கை பார்க்க நடந்த கலவரத்தில் 3 மாணவர்கள் கொல்ல படுகிறார்கள். அதை செய்தியில் பார்த்த குணசேகரன் (விக்ரம் பிரபு) ஆத்திரம் தாங்காமல் அமைச்சரை பழி வாங்க புறப்படுகிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்து வழி, 15 நாள் பரோலில் வந்த அமைச்சரின் தம்பியை (ஈஸ்வரன்) கடத்தி கொண்டு போய் அமைச்சரை சிக்கலில் மாட்டி விடுவது தான். குணசேகரன் எதிர்பார்த்தது போலவே அமைச்சரின் பதவி பறி போகிறது. பிறகு ஈஸ்வரனை ரீலீஸ் செய்கிறார். தன் அண்ணனின் பதவியை பறித்த விக்ரம் பிரபுவை தேடி கண்டுபிடித்து பழி வாங்க புறபடுகிறார், ஈஸ்வரன் விக்ரம் பிரபுவை கண்டுபிடித்து பழி வாங்கினாரா என்பது தான் மீதி கதை.

எம் சரவணனின் "எங்கேயும் எப்போதும்" எனக்கு மிகவும் பிடித்த படம். இரண்டு ட்ராக்கில் செல்லும் சாதாரண காதல் கதையை செம த்ரில்லர் போல் சொல்லி இருப்பார். பார்வையாளர்களை இறுதி காட்சியில் சீட்டின் நுனியில் கொண்டு வந்து விடுவார். ஆனால் பக்கா த்ரில்லர் ப்ளாட்டில் கோட்டை விட்டு விட்டார் என்றே நான் சொல்வேன். "தடையற தற்க்க" போல் பக்கா அக்ஷன் த்ரில்லர் மாதிரி வந்து இருக்க வேண்டிய படம், எளிதாக யூகிக்கக்கூடிய திரைக்கதை, பழக்க பட்ட கிளிஷேக்கள் என்று நிறைய இடங்களில் நொண்டி அடிக்கிறது. காதல் காட்சிகளில் மட்டுமே எங்கேயும் எப்போதும் சரவணன் தெரிகிறார். மற்ற காட்சிகளில் அவரின் ஸ்டைல் மிஸ்ஸிங்.


இது வரை மிர்ச்சி சிவா மட்டுமே "நோ எக்ஸ்பிரஷன்" நடிகர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் விக்ரம் பிரபு வாசன் ஐ கேர் விளம்பரம் போல் "நான் இருக்கிறேன்" என்று சொல்கிறார். படம் முழுக்க ஒரே முகபாவனைகைகள், முடியல பா. கும்கி யானை இவரை விட சிறப்பாக நடித்து இருந்தது, முதல் படம் என்பதால் ஓகே. ஆனால் இதில், முதல் படத்தை விட மோசமாக நடித்து உள்ளார் விக்ரம் பிரபு. அக்ஷன் காட்சிகளில் நன்றாக செய்து உள்ளார், ஆனால் ரொமான்ஸ், எமோஷனல் காட்சிகளில் தான் நன்றாக சொதப்பி உள்ளார். 

எங்கேயும் எப்போதும் படத்தில் வந்தது போன்றே இதிலும் செம க்யூட் கதாநாயகி சுரபி. ஒரு சதவிதம் கூட ஆபாசம் இல்லாமல், செம க்யூடாய் ஹீரோயின் கதாபாத்திரத்தை வடிவைமைத்து மீண்டும் தனது ரசனையை நிருபித்து உள்ளார் சரவணன். ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்துக்கு காமெடியன் வைக்க வாய்ப்பு இருந்தும், வைக்காமல் கதையில் அதித நம்பிக்கை வைத்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் ஹீரோ தேர்வில் இன்னும் கொஞ்சம் மென கெட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. அக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவு அட்டகாசம். பாடல்கள் ஓகே ரகம். இன்னும் கொஞ்சம் மென கெட்டு இருந்தால், இந்த வருடத்தின் பக்கா அக்ஷன் த்ரில்லராக வந்து இருக்க கூடும். அடுத்த படத்துல பார்த்துக்கலாம் சரவணன்.

My Rating: 6.8/10.
இவன் வேற மாதிரி - ஒன்னும் புதுசா இல்ல.


Friday, November 22, 2013

இரண்டாம் உலகம் (2013) - சொதப்பல் செல்வா !!

இரண்டு உலகத்தில் பாரல்லாக நடக்கும் பேண்டஸி கதை தான் "இரண்டாம் உலகம்" என்று படத்தின் ட்ரைலர் பார்த்தவுடனே புரிந்து விட்டது. ட்ரைலர் உடன் நிறுத்தி இருக்க வேண்டும். செல்வா என்கிற சினிமா வெறியன் மீது நம்பிக்கை வைத்து, படம் பார்க்க சென்ற எங்களை இந்த அளவு வதைத்து இருக்க வேண்டாம். சாண்டியாகோவில் ரீலீஸ் ஆகும் அணைத்து தமிழ் படங்களையும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்கிற கொள்கை படி, வீக் டே என்று கூட பாராமல் இன்று படத்துக்கு சென்ற எங்களுக்கு இது மாதிரியான தண்டனை  கிடைத்து இருக்க கூடாது. 

செல்வாவிடம் “நீங்கள் இதுவரை எடுத்த படங்களில் ஒன்றை மொத்தமாக அழிக்க வேண்டுமென்று என்று சொன்னால் எந்தப் படத்தை அழிப்பீர்கள்” என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல் “ஆயிரத்தில் ஒருவன்” என்று சொன்னார். ஆனால் இனி மேல் அதே கேள்வியை இப்பொழுது கேட்டால், அவரது பதில் "இரண்டாம் உலகம்" என்று தான் வரும். செல்வாவின் கேரியரில் அவருக்கு அழிக்க முடியாத கெட்ட பேரை இந்த ஒரு படம் சம்பாரித்து குடுத்து விடும் என்று நான் நம்புகிறேன். மிஷ்கினுக்கு முகமுடி போல, செல்வாவுக்கு "இரண்டாம் உலகம்".


இரண்டு உலகம். இரண்டிலும் ஆர்யா - அனுஷ்கா ஜோடி. நிஜ உலகத்தில் வாழும் ரம்யா (அனுஷ்கா) டாக்டர். மதுவை (ஆர்யா) பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆர்யா முதலில் மது வேண்டாம் என்று சொல்கிறார், பிறகு ஓகே சொல்கிறார். பிறகு ரம்யா தனக்கு மது வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு ஓகே சொல்கிறார். படிக்கும் போதே தலை சுற்றுகிறதா ? படத்தில் இன்னும் பயங்கர குழப்பமாக இருக்கும். செல்வாவின் இத்தனை வருட படங்களிலே இது போன்ற மொக்கை காதல் எபிசோட்டை பார்த்து இருக்க முடியாது. 

பேண்டஸி உலகத்தில் யாருக்கும் தான் அடிமை இல்லை என்று சொல்லிகொள்ளும் வீர (!) பெண் வர்ணா (அனுஷ்கா). இவர் மீது மோகம் கொள்கிறார் அதே உலகத்தில் வாழும் ஆர்யா. கவனிக்க மோகம் தான், காதல் அல்ல. இந்த உலகத்தில் காதல், வெக்கம் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. இந்த உலகத்தில் ராஜா வேறு இருக்கிறார். கடவுளும் வாழ்கிறார். சந்தர்ப்ப வசத்தால், ஆர்யா-அனுஷ்கா திருமணம் நடக்கிறது. ஆர்யா பிடிக்காமல் அனுஷ்கா விபரித முடிவு ஒன்றை எடுக்கிறார். அதே நேரத்தில் நிஜ உலகிலும் விபரிதம் ஒன்று நடக்கிறது. அது என்ன விபரிதம் என்று அறிந்துகொள்ள உங்களிடம் அசாத்திய பொறுமை இருந்தால், தியேட்டரில் போய் பாருங்கள். அப்படி பொறுமை இல்லையென்றால் படத்தை பார்க்காமல் இருப்பதே நன்று.


இன்று இரண்டாம் உலகம் படத்திருக்கு போகும் முன்பு, செல்வாவின் ஆனந்த விகடன் பேட்டியை பார்த்துவிட்டு தான் சென்றேன். அவரின் பேச்சில் தான் சினிமாவை காக்க வந்த கடவுள் போலவும், தமிழ் ரசிகர்களுக்கு ரசனையே இல்லை என்பது போல் தோன்றும். ஆனால் உண்மையில் தமிழ் ரசிகர்களுக்கு ரசனை இருக்கிறதோ இல்லையோ, சகிப்புத்தன்மை ரொம்பவே ஜாஸ்தி. இது மாதிரி மெண்டல் தனமான படங்களை எல்லாம் சகித்து கொள்கிறார்களே. இந்த காவியத்தை முழுசாய் பார்த்த அனைவருக்கும் செல்வா வீடு வீடாய் சென்று, கையை பிடித்து நன்றி சொல்ல வேண்டும்.

ஆர்யா, செல்வா சொன்னதை அப்படியே கேட்டு நடித்து இருக்கிறார். அனுஷ்காவும் அதையே செய்து இருக்கிறார். இருவரும் இயக்குனர் மீது அதித நம்பிக்கை வைத்து, அவர் சொன்னதை அப்படியே செய்து இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற பலவீனமான கதையில், நடிகர்கள் என்ன தான் குட்டிகரணம் அடித்தாலும் எடுபட்டு இருக்காது. இது போன்ற செயற்கை தனமாக காட்சிகள் கொண்டு எந்த படமும் வந்தது இல்லை, இனி மேலும் வருமா என்று எனக்கு சந்தேகமே. 


ஆர்யா, அனுஷ்கா தவிர்த்து மற்ற நடிகர்களின் தேர்வில் பெரிய கோட்டை விட்டு உள்ளார் செல்வா. பேண்டஸி உலகில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே ஹிந்தி டப்பிங் நாடகங்களில் வருவது போல் வந்து செல்கிறார்கள். காட்சியமைப்பை பற்றி சொல்லவே வேண்டாம். படுமோசமாய் அமைக்க பட்டு இருக்கிறது. வசனங்கள், ஸ்கூல் டிராமாவில் கூட இதை விட சிறப்பாய் எழுதி இருப்பார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு நிறைய உழைத்து இருக்கிறார்கள். சரியாக சொன்னால் ஆயிரத்தில் ஒருவனை விட நன்றாக இருந்தது.

படத்தின் ஒரே ஆறுதல் பின்னணி இசை மட்டுமே. ட்ரைலரில் வரும் பின்னணி இசையை தான் படம் முழுக்க தவழ விட்டு இருக்கிறார் அனிருத். பாடல்கள், மெல்ல மெல்ல செத்து கொண்டிருக்கும் போது, கழுத்தில் ஏறி மிதிப்பது போல் இருக்கிறது. ஹாரிஸ் சார், அந்த 12B டியூன்னை எப்ப தான் விடுவீங்களோ ? பேண்டஸி உலகத்தை நம் கண் முன்னே கொண்டு வர மிகவும் மெனக்கட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. விஷுவல்ஸ் அனைத்துமே நன்றாக உள்ளது. வலுவில்லாத திரைக்கதை, மொக்கை காட்சிகளை கொண்டதால், இது செல்வாவின் வொர்ஸ்ட் மூவி என்று உறுதியாக சொல்லலாம்.

இரண்டாம் உலகம் - சொதப்பல் செல்வா !!
My Rating: 4.0/10.

சமிபத்தில் எழுதியது : வில்லா (2013)


Tuesday, November 19, 2013

வில்லா (2013) - பயமே இல்லா திகில் படம் !!

தமிழில், இல்லை இல்லை இந்தியாவிலே இது வரை வந்த திகில் பேய் படங்களிலே சிறந்தது எது என்று என்னை கேட்டால் கண்ணை முடி கொண்டு "பீட்சா" என்று சொல்வேன். ஹார்ட் பீட் எகிறும் அளவுக்கு பயத்தை விதைத்து இருப்பார்கள். அது போக கிளைமாக்ஸ் ட்விஸ்ட் யாராலும் அவ்வளவு சீக்கிரம் யூகித்து இருக்க முடியாது. ஹாலிவுடில் பீட்சா ரீமேக் செய்யபடுவதாய் கூட ஒரு செய்தி படித்தேன். அடுத்த பாகத்துக்கான அடித்தளத்துடன் தான் பீட்சா முடிக்க பட்டு இருக்கும். ப்ரம் மேக்ர்ஸ் ஆப் பீட்சா என்கிற விளம்பரத்தோடு வெளியான வில்லா பீட்சாவின் தொடர்ச்சியாய் இருக்கும் என்று தான் நம்பி இருந்தேன். ஆனால் படத்தின் முதல் ட்ரைலரில் ஒரு கதாபாத்திரம் “இது சீக்வலா ?” என்று கேட்க்கும், அதற்கு கதாநாயகன் “இல்ல, இது டோட்டலா வேற கதை” என்று சொல்லுவார். பீட்சாவின் தொடர்ச்சியாக இல்லாமல் இது புது கதைக்களம் என்று இயக்குனர் மிக தெளிவாக குறிப்பிட்டு விட்டார். அதனாலே வில்லாவை பீட்சாவுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் "வில்லா" சராசரி திகில் படத்தின் அனுபவத்தையே எனக்கு குடுத்து ஏமாற்றி விட்டது.


கதையின் நாயகன் ஜெபின் (அசோக் செல்வன்) சாதிக்க துடிக்கும் இளம் எழுத்தாளர். அவரது அப்பா (நாசர்) கோமாவில் படுத்து இறந்து போகிறார். அப்பா இறந்தவுடன், தன் குடும்ப வக்கீல் முலம்  பாண்டிச்சேரியில் தனக்கு ஒரு வில்லா இருப்பது தெரிய வருகிறது. அதை விற்று தான் எழுதிய புத்தகத்தை பதிப்பிக்க விரும்புகிறார். அதனால் அந்த வில்லாவை விற்க தன் காதலி ஆர்த்தியை (சஞ்சிதா ஷெட்டி) கூட்டி கொண்டு பாண்டிச்சேரி செல்கிறார். அந்த வில்லாவில் சில பல ஓவியங்களை பார்க்கிறார். ஜெபின் வாழ்வில் பல வருடங்கள் முன்பு நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாய் அவ் ஓவியங்களை அவர் கண்ணுக்கு தெரிகிறது. அந்த ஓவியங்களை வரைந்தது யார் ?  ஏன் வரைந்தார்கள் ? ஓவியங்களில் வரைந்த இருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தனவா என்கிற சுவாரசிய முடிச்சுகளை சுவாரசியம் இல்லாமல் அவிழ்ப்பது தான் மீதி கதை. 

எனர்ஜியை உருவாகவும் முடியாது, அதை அழிக்கவும் முடியாது. எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு, என்று நாம் எப்போதோ படித்த அறிவியல் பாடங்களை வைத்து கதையை பின்னி இருக்கிறார் அறிமுக இயக்குனர் தீபன் சக்ரவர்த்தி. தன் அப்பா வரைந்த ஓவியங்களிலால் ஒருவனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும் திகில் முடிச்சுகளை, எப்படி அவன் எதிர்கொள்கிறான் என்பது தான் கதையின் ஆதார முடிச்சு. இதை வலுவில்லாத திரைக்கதையின் மூலம் சொல்லி சொதப்பி விட்டார். இன்னும் நிறைய பில்ட் வொர்க் பண்ணி இருந்தால் சிறப்பாய் குடுத்து இருக்கலாம்.


மணிவண்ணனின் 100 ஆவாது நாள் படத்தில் கூட, நளனி கனவில் காண்பது எல்லாம் நிஜத்தில் நடப்பது போல் கதை அமைக்க பட்டு இருக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் என்று எந்த ஜல்லியும் அடிக்காமல், ஏன் அது போன்று நடக்கிறது என்பதருக்கு விஜயகாந்த முலம் மிக எளிமையாக விளக்கி இருப்பார் மணிவண்ணன். ராஜவின் பின்னணி இசை சாதாரண காட்சியை கூட திகில் காட்சி போன்ற தோற்றத்தை உண்டு பண்ணும். இதிலும் கனவு போன்றே எதிர்காலத்தை நடப்பதை கணிக்கும் கான்செப்ட் தான், ஆனால் நெகடிவ் எனர்ஜி, பிளாக் மேஜிக், நர பலி என்று ஏதோ ஏதோ சொல்கிறார்கள். சரி திகில் காட்சிகளாவது நன்றாக இருக்குமா என்று பார்த்தால், அதிலும் பெரிய அளவு தாக்கம் ஏற்படவில்லை.

நாயகன் அசோக், படம் முழுக்க இறுக்கமான முக தோற்றத்துடன் தான் வருகிறார். கதையின் தேவைக்கு அப்படி வருகிறாரா, இல்லை அவரின் முகமே அப்படித்தானா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. திகில் காட்சிகளிலும் ஒரே மாதிரியான முகபாவனைகைகள். பீட்சா விஜய் சேதுபதியுடன் கம்பேர் செய்தால் ஒன்றுமே இல்லை. நாயகி சஞ்சிதா ஷெட்டி, சூது கவ்வும் ஷாலுமா. நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. இவரின் கதாபாத்திரத்தை பீட்சா போல் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வைக்கிறேன் என்று சொல்லி குழப்பி கூல் ஆக்கி விட்டார் இயக்குனர்.

பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் கலக்கியிருந்தாலும் படத்தின் திரைக்கதை அவருடைய பின்னணி இசைக்கு ஈடு கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. நெகடிவ் எனர்ஜியை விரட்ட எடுக்க படும் முயற்சியின் போது ஒளிப்பதிவில் கலக்கியிருக்கிறார் தீபக் குமார், ஆனால் பார்வையாளனை பயமுறுத்தும் வகையில் காட்சிகள் இல்லாமல் போனது அவரின் துரதிஷ்டம். கடைசியாக இன்னும் மெனக்கெட்டு கட்டி இருந்தால் வில்லா பேச பட்டு இருக்கும்.

வில்லா - பயமே இல்லா திகில் படம்.
My Rating: 6.2/10.

சமிபத்தில் எழுதியது : FAR CRY 3


Sunday, November 17, 2013

FAR CRY 3 - உயிர் வாழ போராட்டம் (18+)

இந்தியாவில் இருந்த வரைக்கும் Xbox360 தான் என்னுடைய உற்ற தோழனாக இருந்து வந்தந்து. அமெரிக்கா வந்துவுடன் அந்த இடத்தை PS3 எடுத்து கொண்டது. வந்த சிறிது நாட்களிலே PS3 ஸ்லிம் 120GB வாங்கி விட்டேன். இந்தியாவில் கஷ்டமாக கிடைக்க கூடிய கேம்ஸ் இங்கு சுலபமாக கிடைத்தது இன்னும் வசதியாக போய் விட்டது. மாதம் ஒரு கேம் என்று, இதுவரை கிட்டத்தட்ட 7 கேம் விளையாடி முடித்து விட்டேன். இரண்டு பேட்மேன் கேம்களும் அதில் அடக்கம். நான் இது வரை விளையாடியதில் என்னை மிகவும் கவர்ந்த "FAR CRY-3" என்கிற FPS கேம் பற்றிய பதிவு தான் இது. அதித வன்முறை,  சைக்கோ வில்லன்கள், கிராபிகல் செக்ஸ், கொடூர கொலைகள், மற்றும் நாம் வாழ எந்த அளவுக்கும் போகலாம் என்கிற தீம்மை கொண்ட 18+ அமெரிக்கன் கேம். வீடியோ கேம் பிடிக்காதவர்கள் அப்படியே அப்பிட் ஆகி விடுவது நலம்.


கேம் ப்ளாட்: 

ஒரு கேம் வெற்றியடைய முதல் தேவை நல்ல ஸ்டோரி லைன். அது FAR CRY 3 யில் நிச்சியம் இருக்கிறது. கேமின் நாயகன் "ஜேசன் பிராடி" (Jason Brody). 20 வயதே நிரம்பிய அக்மார்க அமெரிக்க வாலிபன். விடுமுறையை கழிக்க தன் அண்ணன், நண்பர்கள், மற்றும் காதலியுடன் பாங்காக் நகரம் வருகிறான். வந்த இடத்தில ஸ்கை டைவிங் செல்கிறான். அதில் விபத்து ஏற்பட்டு ரூக் ஐலேன்ட் என்கிற பகுதியில் தரை இறங்குகிறான். 

ரூக் தீவுகளை தன் கட்டுபாட்டில் வைத்து இருப்பவன் வாஸ் மாண்டினீக்ரோ (Vaas Montenegro). மொத்த நண்பர்களும் வாஸ் மற்றும் அவனது பைரேட்ஸிடம் மாட்டி சிறை படுகிறார்கள். பைரேட்ஸ் சிறையில் இருந்து தப்பிக்கும் வேளையில் ஜேசனின் அண்ணன் "கிரான்ட்" வாஸிடம் மாட்டி தன் உயிரை விடுகிறான். ஜேசன் மட்டும் தப்பித்து ரூக் தீவுகளில் மறைந்து வாழும் "ரக்கியாட்" (Rakyat) பழங்குடியின மக்களை சந்திக்கிறான். ரக்கியாட் மக்களின் பயற்சியில் தேர்ந்த வீரனாக மாறும் ஜேசன், தன் அண்ணனை கொன்ற வாஸ்சை பழி வாங்கி, தன் மீதி நண்பர்களை காப்பற்றி, ரூக் ஐலேன்ட்டை பைரேட்ஸிடம் இருந்து மீட்பது வரை தான் பாதி ப்ளாட்.

கேமின் முதல் பாதி முழுக்க வாஸ் மாண்டினீக்ரோவின் சைக்கோ கொலைகார படையை எதிர்த்து போராட வேண்டும். இரண்டாம் பாதியில் வாஸின் பாஸ் "ஹோய்ட் வோல்கர்" (Hoyt Volker) என்கிற ஸ்லேவ் வியாபாரியை எதிர்த்து போராட வேண்டும். வாஸ் ரூக் தீவின் வடக்கு பகுதியை தன் கட்டுபாட்டில் வைத்து இருந்தால், ஹோய்ட் தெற்கு பகுதியில் கோலோச்சி இருப்பான். இவனது போதை மருந்து சாம்ராஜியத்தை வீழ்த்தி ரூக் தீவிருக்கு முழு சுதந்திரம் பெற்று தருவது தான் மீதி ப்ளாட்.


கேம் ப்ளே:

கேம் ப்ளாட் ஏதோ ஹாலிவுட் படம் போல் தெரிகிறதா. Apocalypse Now படம் கூட FAR CRY 3 போன்றே திரைக்கதை அமைப்பை கொண்டுயிருக்கும். ஒன்ரை மணி நேர படத்திருக்கு திரைக்கதை எந்த அளவு முக்கியமோ, அதே போல் வீடியோ கேமிற்கு கேம் ப்ளே ரொம்பவே முக்கியம். ஒரு கேம் முடிக்க சராசரியாய் 10~15 மணி நேரம் வரை ஆகும். 15 மணி நேரம் சுவாரிசியம் குறையாமல் பார்த்து கொண்டால் தான் அதை கிரேட் கேம் என்று சொல்லுவோம். அப்படி பார்த்தால் FAR CRY 3 கிரேட் கேம் லிஸ்டில் தராளமாய் இடம் பிடித்து விடும். அட்டகாசமான கேம் ப்ளே அனுபவத்தை நமக்கு வழங்குகிறது FAR CRY 3. முதலில் இது ஓபன் வேர்ல்ட் கேம். ஓபன் வேர்ல்ட் என்றால், மிஷன் முடித்தவுடன் நாம் எங்கு வேண்டுமென்றாலும் உலாவலாம். ரூக் தீவுகளை சுற்றி வரலாம். நமக்கு பிடித்தமானதை செய்யலாம். நமக்கு தோணும் போது மெயின் மிஷன்களை விளையாடலாம்.

Apocalypse Now நாயகன் தன்னை வேட்டையாட வருபவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி கொண்டேயிருப்பான். ஒரு கட்டத்தில் பொருத்தது போதும் என்று திருப்பி தாக்க ஆரம்பிப்பான். இந்த கேமிலும் நாயகன் ஜேசன் பிராடி வாஸின் படைகளிடம் இருந்து தப்பித்து ஓடி கொண்டே இருக்க வேண்டும். அதே நேரம் தன் திறமைகளை வளர்த்து கொண்டே திருப்பி தாக்க வேண்டும். 


வாஸின் கட்டுப்பாடில் இருக்கும் "அவுட் போஸ்ட்களை" விடுவிக்க வேண்டும். அடர்ந்த காட்டில் இருக்கும் கொடிய மிருகங்களை வேட்டையாடி அதன் முலம் வரும் புள்ளிகளை கொண்டு ஜேசனின் துப்பாக்கி சுடும் திறன்கள், பதுங்கி தாக்குதல், வேகமாய் ஓடுதல், பாஸ்ட் ஹீலிங் போன்ற திறன்களை வளர்த்து கொல்லலாம். அது போக தீவில் இருக்கும் ரேடியோ டவர்களை அக்டிவேட் செய்து ரூக் தீவின் புதைந்திருக்கும் மர்மங்களை வெளி கொண்டுவரலாம்.

இந்த கேம் நிச்சியம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தான். வார்த்தைக்கு வார்த்தை ஃபக் வந்து விடும். அது போக முன்று உடலுறவு காட்சி வேறு உண்டு. அதனாலே அமெரிக்காவில் மிக பெரிய ஹிட் அடித்தது. Call of Juarez,  Assassin's Creed போன்ற புகழ் பெற்ற கேம்மை உருவாகிய  Ubisoft நிறுவனம் தான் FAR CRY 3 யின் டெவலப்பர்கள். Ubisoft நிறுவனத்தினரிடம் இருந்து வரும் கேம்களின் கிராபிக்ஸ் தாறுமாறாய் இருக்கும். இதிலும் கிராபிக்ஸ் மிகவும் தந்துருபமாய் இருக்கும். 2012 ஆண்டிற்க்கான சிறந்த அக்ஷன் கேம்கிற்கான விருதினை பெற்றது. இது வரை மொத்தம் 5 மில்லியன் காப்பி விற்பனை ஆகி உள்ளது. FPS அக்ஷன் பிரியர்கள் தவற விட கூடாத கேம் FAR CRY 3.

My Rating: 9.0/10


Sunday, November 03, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா (2013) - ஜென் தத்துவம் !!

ஹிந்தியில் "மிதுன் சக்கரவர்த்தி" என்ற ஒரு நடிகர் இருக்கிறார். அவரிடம் ஒரு சாதனை இருக்கிறது. இந்தியாவிலே அதிக ப்ளாப் படங்கள் குடுத்தது அவர் தான். A மற்றும் B சென்டரில் தான் அவர் படங்கள் ப்ளாப் ஆகும், ஆனால் C சென்டரில் சக்கை போடு போடும். கார்த்தி "அழகுராஜா" போன்ற படங்களில் நடித்து கொண்டே போனால் மிதுன் சாதனையை அசால்டாக முறியடித்து விடுவார். ஒரே வித்தியாசம் கார்த்தி படங்கள் அணைத்து சென்டரிலும் அட்டர் ப்ளாப் ஆகும், மிதுன் படங்கள் C சென்டரில் ப்ளாக்பஸ்டர் கொண்டாடும். "அலெக்ஸ்பாண்டியன்" என்கிற உலக சினிமாவை படம் பார்த்த பிறகு இனி மேல் கார்த்தி படங்களை பார்க்கவே கூடாது என்று உறுதியாய் இருந்தேன். ஆனால் ராஜேஷ் - சந்தானம் கூட்டணி மேல் இருக்கும் அசாத்திய நம்பிக்கை காரணமாக ஜென் தத்துவத்தை உரக்க சொல்லும்  "அழகுராஜா" என்கிற காவியத்தை பார்க்க சென்றோம். பார்த்து நொந்து நூடுல்சாய் திரும்பி வந்தோம்.


நான் சமிபத்தில் இது போன்ற மரண மொக்கை படத்தை பார்த்ததே இல்லை. இனி மேலும் பார்ப்பேனா என்பதும் சந்தேகமே. அழகுராஜா (கார்த்தி) AAA என்கிற லோக்கல் சேனல் ஓனர் மற்றும் MD, இவரிடம் வேலை பார்க்கும் ஆபிசர் கல்யாணம் (சந்தானம்). AAA சேனலை நம்பர் 1 சேனலாக மாத்தாமல் திருமணம் செய்து கொள்ள போவது இல்லை என்கிற லட்சியம் வேறு. பாய் பிரியாணி சாப்பிட ஒரு கல்யானதிருக்கு செல்லும் கார்த்தி அங்கு தேவி பிரியாவை (காஜல் அகர்வால்) பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ரெகுலர் ராஜேஷ் படங்களில் வரும் நாயகன் போல் லூசு தனமாய் ஏதோ ஏதோ செய்து காஜலின் மனதில் இடம் பிடிக்கிறார். 

காஜலின் குடும்ப பின்னணி தெரிந்தவுடன் அழகுராஜாவின் அப்பா பிரபு திருமணத்துக்கு தடை போடுகிறார். அதற்க்கு மகா திரபையான பிளாஷ்பேக் வேறு. இறுதியில் அழகுராஜாவும் தேவி பிரியாவும் இணைந்தார்களா இல்லையா என்கிற சஸ்பென்ஸ் முடிச்சை, யாரும் படம் பார்த்து அவிழ்க்கும் முயற்சியில் இறங்க வேண்டாம். நீங்கள் யாரும் கஷ்டப்பட்டு படம் பார்க்கவேண்டாம் என்று அந்த  சஸ்பென்ஸசை நானே சொல்லி விடுகிறேன். இறுதியில் அழகுராஜாவும் தேவி பிரியாவும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். டிவியில் கூட பார்க்க லாய்க்கு அற்ற திரைக்காவியம் இது. 


கார்த்தியை நினைத்து பரிதாப பட தான் முடியும். பருத்திவீரன் படத்துடன் நடிகர் "கார்த்தி" இறந்தே விட்டார் என்று நினைக்கிறன். படத்தில் வரும் காட்சியமைப்புகள் மொக்கை தான். அந்த மொக்கை காட்சியமைப்பை மரண மொக்கையாய் மாற்றுவதில் கார்த்தியின் பங்கு மிக பெரியது. கடந்த முன்று படங்களிலும் தனது "ஈ" வாயை மாற்றாமல் நம்மை படுத்தி எடுக்கிறார். 

கார்த்தி காஜலிடம், "நீ நன்றாக பாடுவதாய் உன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வேலையாட்கள் மட்டும் தான் இது வரை சொல்லி இருக்கிறார்கள், வீதில் இறங்கி பாடினால் கல்லை கொண்டு எறிவார்கள்" என்கிற ஜென் தத்துவத்தை  உதிர்ப்பார். ஆனால் அந்த ஜென் தத்துவம் அவருக்கு தான் மிக சரியாய் பொருந்தி இருக்கிறது. இதே போன்று படங்களில் நடித்து மக்களை வதைத்து கொண்டு இருந்தால் கல்லால் தான் அடி வாங்க வேண்டியது வரும்.


காஜல் அக்மார்க் லூசு பெண். வழக்கம் போல் வருகிறார், ஆடுகிறார் அவ்வளவு தான். தமிழ் சினிமாவில் என்று தான் "கதா"நாயகிகளை பார்க்க முடியுமோ தெரியவில்லை. பிரபு, சரண்யாவை குறை கூற முடியாது, தங்களுக்கு வழங்க பட்ட ரோல்லை சரியாய் செய்து இருக்கிறார்கள். கார்த்தியிடம் இருந்து நல்ல படம் வந்தால் தான் ஆச்சிரியம். ஆனால் சந்தானத்திடம் இருந்து மொக்கை படம் வந்தால் பெரிய ஆச்சிரியம். அது இந்த படத்தில் நடந்து இருக்கிறது. 

படத்தின் மிக பெரிய லெட் டவுன் சந்தானம் தான். கடைசியாக சந்தானம் காமெடி எடுபடாமல் போன ரெண்டு படமும் கார்த்தியின் திரைக்காவியங்கள் தான். இதற்கு முன்னால் அலெக்ஸ்பாண்டியன். ப்ளீஸ், சந்தானம் இனி மேல் கார்த்தி படங்களில் தயவு செய்து நடிக்காதீர்கள். 

இயக்குனர் ராஜேஷ்க்கு வேக் அப் கால். படத்தை எடுத்துடன் ஒரு முறை போட்டு பார்த்து இருக்கலாம். பார்த்து இருந்தால் கண்டிப்பாய் ரீலீஸ் செய்து இருக்க மாட்டார். முன்று படங்களில் சம்பாதித்து பேரை ஒரே படத்தில் கோட்டை விட்டு விட்டார். இசை மாற்றும் பாடல்கள் ஓகே ரகம். "உன்னை பார்த்த நேரம்" பாடல் மட்டும் எனக்கு பிடித்து இருந்தது. படம் நமக்கு கற்று தரும் ஜென் தத்துவம் பொறுமை. ஆர்ட் ஆப் லிவிங் போய் வராதா பொறுமையும், சகிப்புத்தன்மையும் இந்த படத்தை முழுசாய் பார்த்ததின் முலம் எனக்கு கிட்டியது. நன்றி ராஜேஷ் M.

ஆல் இன் ஆல் அழகுராஜா  - ஜென் தத்துவம்
My Rating: 3.5/10.


Thursday, October 31, 2013

ஆரம்பம் (2013) - மாஸ் ஒன் மேன் ஷோ !!!

சான்டியாகோவில் எந்த தமிழ் படம் ரீலீஸ் ஆனாலும், தவறாது முதல் காட்சியே அட்டென்டன்ஸ் போடும் நாங்கள், அஜித்தின் ஆரம்பத்தை மட்டும் தவற விட்டு விடுவோமா என்ன ? வழக்கம் போல் முதல் நாள் முதல் காட்சியே தியேட்டரில் ஆஜர் ஆனோம். வீக் டே என்ற போதிலும் நிறைய தமிழ் மக்களை தியேட்டரில் காண முடிந்தது. அதில் முக்காவாசி தீவிர அஜித் ரசிகர்கள், மீதி பேமலி ஆடியன்ஸ். தியேட்டர் 70% நிரம்பியது. படம் எப்படி என்று இப்பொழுது பார்போம். ஆரம்பம் படத்தின் ட்ரைலர் என்னை பெரிதாய் கவரவில்லை. அதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தான் சென்றேன். எதிர்பார்ப்பு இல்லாத படங்கள் என்னை என்றுமே ஏமாற்றியது இல்லை. ஆரம்பமும் என்னை ஏமாற்றவில்லை. பில்லா -2 வில் சராசரி ரசிகனை கவர தவறிய அஜித், இதில் நின்று மங்காத்தா ஆடி உள்ளார். 


மும்பை நகரில் முன்று முக்கிய இடங்களில் வெடி குண்டு வெடிக்கிறது. குண்டும் வைத்து, அதை போலீஸ்க்கும் தகவல் குடுக்கிறார் அஷோக் (அஜித்). இதற்க்கு இடையில் கம்ப்யூட்டர் ஹேக்கரான ஆர்யாவை கடத்தி கொண்டு வந்து, அவர் மூலமாக மும்பை நகரில் இயங்கி வரும் முக்கிய டிவி சேனலான "பிளாஷ் டிவியை" ஹேக் செய்து அதன் ஒளிபரப்பை தடுத்து நிறுத்துகிறார் அஜித். அது போக ஆர்யாவை வைத்து கொண்டே சில கொலைகளை வேறு செய்கிறார். அஜித் குறிவைப்பது மகாராஷ்டிரா ஹோம் மினிஸ்டர் மகேஷ் மஞ்ச்ரேகர் சாம்ராஜியத்தை. அஜித் யார் ? அவருக்கும் ஹோம் மினிஸ்டர்ருக்கும் என்ன தொர்பு. ஏன் குண்டுவெடிப்பு, டிவி சேனல் ஹேக்கிங் மற்றும் கொலைகளை செய்கிறார் என்கிற மர்ம முடிச்சுகளை முதல் பாதியில் போட்டு, அத்தனை முடிச்சுகளையும் பக்கா ஒன் மேன் அக்ஷன் பேக்கேஜ் முலம் அவிழ்த்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

ஊருக்கே பிடிக்காதா பில்லா-2 எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, காதல், காமெடி என்ற வழக்கமான தமிழ் சினிமா போல் இல்லாமல் வித்தியாசமான முயற்சியாய் எனக்கு தெரிந்தது. பில்லா-2 தோல்வி அஜித்தை பழைய குருடி கதவை திறடி என்பது போல் வழக்கமான் தமிழ் சினிமாவிற்குள் இழுத்து விடும் என்று நினைத்தேன். அதற்க்கு இடம் தராமல், மீண்டும் ஒரு சோதனை முயற்சியில் இறங்கிய அஜித்தை பாராட்டியே ஆக வேண்டும். தனது பலம் என்ன வென்று மிக சரியாக புரிந்துவைத்து உள்ளார். டான்ஸ், ரொமான்ஸ் என்று எந்த விஷ பரிட்சையும் செய்யாமல், மங்காத்தாவில் செய்ததை போல், தனக்கு மிக கச்சிதமாய் பொருந்திய நெகடிவ் கதாபாத்திரத்தை சரியாய் செலக்ட் செய்தது மறுபடியும் ஜெயித்து காட்டி இருக்கிறார்.


அஜித் செம ஸ்மார்டாக இருக்கிறார். அவருக்கு என்றே சில டிரேட் மார்க் மேனரிசம் உண்டு. படம் நெடுக்க கூலிங்கிளாஸ் சகிதம் தான் வலம்வருகிறார். பல காட்சிகளில் பிட்டாக தெரிகிறார். பாடல் காட்சிகளில் ரொம்பவே குண்டாய் தெரிகிறார். டான்ஸ் பற்றி ரெண்டே வார்த்தையில் சொன்னால் ஹீ..ஹீ...பஞ்ச் டயலாக் பேசாமல் மாஸ் காட்சி குடுக்க ரஜினிக்கு பிறகு அஜித் தான் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார். நடிப்பு பற்றி சொல்ல வேண்டுமென்றால், "மேக் இட் சிம்பிள்" என்று அதிக அலட்டல் இல்லாமல், சிம்பிள் பட் பவர்புல் பெர்பார்மனஸ் வழங்கி உள்ளார். சரியாய் சொன்னால் ஒத்தை ஆளாய் படத்தை முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் தாங்கி உள்ளார். 

ஸ்க்ரீன் முழுக்க அஜித் ராஜ்ஜியம் செய்வதால், ஆர்யா அமெரிக்க மாப்பிளை போல் வந்து செல்கிறார். செகண்ட் ஹீரோ என்று கூட சொல்ல முடியாது. ஆனால் தனக்கு குடுத்த வேலையை மிக சரியாய் செய்து இருக்கிறார். அஜித்திடம் மாட்டி முழிக்கும் காட்சிகளிலும், அங்கிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகளும் செம த்ரில்லர். ஆர்யா குண்டு பாய்யாய் தாப்ஸியிடம் லவ்வை சொல்லும் காட்சிகள் தான் காமெடி காட்சிகள் என்று இயக்குனர் நினைத்து விட்டார் போல் இருக்கிறது. பாவம் இயக்குனருக்கும் காமெடிக்கும் வெகு தூரம் என்று மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. ஆர்யா, தாப்ஸி கெமிஸ்ட்ரி சுத்தமாய் வொர்க் அவுட் ஆகவில்லை. நயன்தாரா அஜித்திற்கு உதவி புரிகிறார். அஜித் யார் தெரியுமா என்று பிளாஷ்பேக் சொல்கிறார். மற்றபடி எந்த வேலையும் இல்லை. அதுல் குல்கர்னி, கிஷோர், ராணா என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் படத்தில் காண கிடைக்கிறது. ஆனால் அஜித் என்னும் திமிங்கலம் முன்பு இவர்கள் எல்லாம் சிறு சிறு மீன்கள் போல் தான் தெரிகிறார்கள். 


பாடல்கள் செம சொதப்பல். அஜித்திருக்கு என்று வரும் போது மட்டும் எப்படி தான் யுவனுக்கு பின்னணி அமைகிறதோ தெரியவில்லை. பிரமாத படுத்தி இருக்கிறார். யுவனின் பின்னணி இசை அட்டகாசம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் மும்பை மிக அழகாக தெரிகிறது. இமையமலை கிளைமாக்ஸ் கன் பைட் அதகளம். ATF க்கு வழங்க பட்ட புல்லெட் ப்ரூப் ஜாக்கெட்டில் நடைபெற்ற ஊழலை பற்றி சொல்ல ஆரம்பித்து, படம் எங்கெங்கோ செல்கிறது. லாஜிக் ஓட்டை ஓசோன் மண்டல ஓட்டையை விட மிக பெரிதாக இருக்கிறது. ஆனாலும் பரபரப்பான அக்ஷன் காட்சிகள் முலம் லாஜிக் ஓட்டைகளை பற்றி அதிகம் சிந்திக்க விடாமல் படம் மிக வேகமாய் நகர்கிறது. மொத்தத்தில் கூட்ஸ் வண்டி போல் மெதுவாய் ஆரம்பிக்கும் படம், பிறகு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணம் செய்து, பிளாஷ்பேக்கில் கொஞ்சம் வேகம் குறைந்து, பிறகு சூப்பர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடிகிறது. 

சமிபத்தில் எழுதியது : New World (2013) 
ஆரம்பம் - மாஸ் ஒன் மேன் ஷோ !!!
My Rating: 7.9/10.


Sunday, October 27, 2013

New World (2013) - கொரியன் கேங்ஸ்டர் மூவி !!!

கேங்ஸ்டர் படங்களின் மீது எனக்கு எப்பொழுதும் தனி ஈர்ப்பு உண்டு. கேங்ஸ்டர் படங்கள் மீதான் என்னுடைய காதல் 8 வயதில் ஆரம்பம் ஆனது என்று நினைக்கிறன். அந்த வயதில் தான் "நாயகன்" படம் பார்த்தேன். கோவை அருண் தியேட்டரில் நாயகன் படம் பார்த்து, கமல் இறக்கும் இறுதி காட்சியில் நான் தேம்பி தேம்பி அழுதது இன்னும் என் நினைவில் இருக்கிறது. பெரியவன் ஆனதும் வேலு நாயகர் போல் நானும் கேங்ஸ்டர் ஆக வேண்டும் என்றெல்லாம் எண்ணியது உண்டு. விவரம் புரிய ஆரம்பித்தவுடன் நான் அதிக முறை ரசித்து பார்த்த ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படம் "பாட்ஷா". ரஜினி டானாக மாறி படியில் நடந்து வரும் காட்சியை இப்பொழுது பார்த்தாலும் எனக்கு வேர்த்து விடும். IMDB மற்றும் ஹாலிவுட் படங்களின் அறிமுகம் கிடைத்தவுடன் நான் தேடி தேடி பார்த்தது அனைத்துமே கேங்ஸ்டர் படங்கள் தான். 


இன்று வரையில் நான் சிறந்த கேங்ஸ்டர் படமாக கருதுவது கொப்பாலாவின் "The God Father" படம் தான். அதன் பிறகு நான்  வேர்க வேர்க்க ரசித்து பார்த்த ஹாலிவுட் கேங்ஸ்டர் படம் "The Departed". பிறகு தான் தெரிந்தது "The Departed" "Infernal Affairs" என்கிற கேன்டனீஸ் படத்தின் தழுவல் என்று. அன்று ஆரம்பித்த ஆசியன் படங்கள் மீதான் மோகம் இன்னும் எனக்கு குறையவேயில்லை. சமிபத்தில் நண்பர் பிரதீப் ரெகமென்ட் செய்த கொரியன் படமான "New World" பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. Infernal Affairs, Departed அளவுக்கு வேர்கவில்லை என்றாலும், மிக சிறந்த த்ரில்லர் படம் பார்த்த திருப்தி  கிட்டியது. பிரதீப்க்கு என் நன்றிகள்.

படத்தின் ஆரம்பம்பமே ரத்த களரி தான். போலீஸ் உளவாளி என்று சந்தேகிக்கும் ஒரு நபரை சித்திரவதை செய்து கொலை செய்கிறார்கள் "கோல்ட்மூன்" என்கிற கொரிய மாபியா கும்பலை சேர்ந்தவர்கள்.  கோல்ட்மூன் நிறுவனம் கொரியாவின் மிக பெரிய கார்ப்பரேட் மாபியா கூட்டமைப்பு. இந்த மாபியா கும்பலில் கடந்த எட்டு வருடங்கள் விசுவாசமாய் கொலை செய்து வருபவன் கதையின் நாயகன் "Jung-Jae". இவர் போலீஸ் என்பது படம் ஆரம்பித்தவுடன் நமக்கு தெரிந்து விடுகிறது.

 Jung-Jae-னை ஆட்டுவிப்பது போலீஸ் கமிஷனர் Min-sik Choi. "Old Boy" படத்தில் மாயாஜாலம் நிகழ்த்தியவர். இதிலும் வெயிட்டான ரோல். இவரின் ஒரே மிஷன் கோல்ட்மூன் கூட்டமைப்பை போலீஸ் கட்டுபாட்டில் கொண்டு வந்து அவர்களை மொத்தமாய் ஒழித்து புது உலகம் படைப்பது தான். அந்த ஆபரேஷனுக்கு பெயர் தான் "New World". ஆபரேஷனின் ஒரு பகுதியாய் தான் Jung-Jae போன்று பல போலீஸ் அதிகாரிகளை கோல்ட்மூன் நிறுவனத்தில் ஊடுருவி இருப்பார்கள். யார் போலீஸ், யார்  மாபியா என்று நம்மால் யூகிக்க முடியாத படி ஏகப்பட்ட ட்விஸ்ட்.


கோல்ட்மூன் கூட்டமைப்பின் சேர்மன் கார் விபத்தில் மர்மமான முறையில் கொல்லபடுகிறார். அடுத்த தலைவருக்கான் தேர்தல் நடைபெறும் வேளையில், சேர்மன் பதவிக்கு இரண்டாம் கட்ட தலைவர்களான Jeong மற்றும் Lee யிடையே கடும் கேங் வார் மூள்கிறது. கதையின் நாயகன் "Jung-Jae" Jeong - கின் வலது கை. இவர்களின் கேங் வாரின் இறுதியில் யார் உயிர் பிழைக்கிறார்கள், யார் மரணத்தை தழுவுகிறார்கள் என்பதை ஏகப்பட்ட ட்விஸ்ட் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

துரோகம் மற்றும் நம்பிக்கை துரோகதிருக்கு இருக்கும் மிக மெல்லிய வித்தியாசத்தை மிக அழகாக காட்சிபடுத்தி இருப்பார் இயக்குனர் Hoon-Jung Park. முதல் காட்சி மற்றும் கார் பார்கிங் சண்டை தவிர்த்து அதிக ரத்த வன்முறை இல்லாமல் படத்தை கொண்டு சென்றது பெரிய ஆறுதல்.  "The GodFather" படத்தின் சாயல் இல்லாமல் எந்த கேங்ஸ்டர் படமும் எடுக்க முடியாது. அல் பசினோ டான்னாக மாறும் காட்சியை அவரின் மனைவி மிரட்சியுடன் கதவின் வழியே பார்க்கும் காட்சி போன்று இதிலும் உள்ளது. 


கொரியன் கேங்ஸ்டர் படங்களின் சிறப்பே, கேங்ஸ்டர் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு தான். செம ஸ்டைலிஷாய் இருப்பார்கள். கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் சீப் அதிகாரிகள் போல் இருப்பார்கள். இந்த படத்திலும் செம காஸ்ட்யூம். அதிக வன்முறையை காட்டாமல், வசனங்கள் மூலமாய் சூழ்நிலையின் வீரியத்தை சொல்லி விடுகிறார் இயக்குனர். குறைந்த அக்ஷன் காட்சிகள் இருந்தாலும், இருக்கும் இரண்டு சண்டை காட்சிகள் ரியலிஸ்டிக்காக இருப்பது மற்றுமோர் சிறப்பு. 

இயக்குனர் Park Hoon Jeong இதற்க்கு முன்பு "I Saw the Devil" என்கிற கிரைம் படத்துக்கு திரைக்கதை எழுதியவர். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பிரமாதம். பின்னணி இசை படத்தின் டெம்போவை குறைக்காமல் கொண்டு செல்வதில் பெரும் பங்கு ஆற்றி உள்ளது. The Departed ஸ்டைல் கேங்ஸ்டர் படம் பார்க்கும் எண்ணம் இருந்தால் நீங்கள் கண்டிப்பாய் தவற விட கூடாத படம் New World.

சமிபத்தில் எழுதியது : The chaser (2008)

New World  - கொரியன் கேங்ஸ்டர் மூவி
My Rating: 7.8/10.


Sunday, October 20, 2013

The chaser (2008) - சீரியல் கில்லரை துரத்தும் பிம்ப் !!

தமிழ், ஹாலிவுட் தவிர்த்து நான் மிகவும் விரும்பி பார்ப்பவை கொரியன் படங்களே. சில கொரியன் படங்கள் தரத்தில் ஹாலிவுட் படங்களையே மிஞ்சி விடும். தரம் என்று நான் இங்கு குறிப்பிடுவது தொழில்நுட்பத்தை அல்ல, தொழில்நுட்பத்தில் இவர்கள் இன்னும் அவதார், அவென்ஜர்ஸ் அளவுக்கு வளரவில்லை என்றாலும், புதுமையான கதை களம், அற்புதமான திரைக்கதை, பர பர அக்ஷன் படங்கள் குடுப்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். உலக சினிமாவில் அணைத்து ஜெனரில் இருந்தும் சிறந்த படங்களை தேர்வு செய்தால், அந்த அந்த ஜென்ரில் இருக்கும் முதல் ஐந்து படங்களில் கண்டிப்பாய் கொரியன் படங்கள் தவறாமல் இடம் பிடித்து இருக்கும். The chaser 2008 ஆம் ஆண்டு வெளிவந்த மிக சிறந்த த்ரில்லர் படம். சவுத் கொரியாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்க பட்ட படம். 


கதையின் நாயகன் "Yun-seok Kim", சந்தர்ப வசத்தால் தன் டிடெக்டிவ் வேலையை விட்டு விட்டு விபசாரத்துக்கு பெண்களை சப்பளை செய்யும் மாமா வேலை பார்க்கிறான். தொழில்க்கு அனுப்பிய அவனது இரு பெண்களை திடீரென்று மாயமாய் மறைந்து போகிறார்கள். ஒரு கஸ்டமரிடம் இருந்து அழைப்பு வர, அவனது டீமில் இருக்கும் "Mi-jin" என்கிற பெண்ணை அந்த கஸ்டமரை அட்டென்ட் செய்ய அனுப்புகிறான். "Mi-jin" க்கு எட்டு வயதில் பெண் குழந்தை வேறு இருக்கிறது. கால் வரும் நேரத்தில் அவளுக்கு உடம்பு முடியாமல் வேறு இருக்கிறது. 

Yun-seok Kim அவளை மிகவும் வற்புறுத்தி அந்த கஸ்டமரை அட்டென்ட் செய்ய சொல்கிறான். Kim ஆபீஸில் உட்கார்ந்து இருக்கும் போது தான் அந்த கஸ்டமரின் போன் நம்பரை எதேச்சையாக பார்க்கிறான். "4885" என்று முடிகிறது அந்த நம்பர். கடைசியாக காணாமல் போன அவனது இரு கால் கேர்ள்சை அழைத்த அதே நம்பர். "Mi-jin"-னை பகடை காயாய் வைத்து காணமல் போன அவனது இரண்டு பெண்களை மீட்க நினைக்கிறான். 

Mi-jin வேறு வழி இல்லாமல் "4885" கஸ்டமரின் வீட்டுக்கு செல்கிறாள். ரெஸ்ட் ரூம் சென்று அங்கிருந்து Kim க்கு அவள் இருக்கும் வீட்டின் அட்ரெசை அனுப்புவது தான் திட்டம். ரெஸ்ட் ரூமில் தன் மொபைல் போனை எடுத்தால், அதில் சிக்னல் பார் சீரோ. வெளியில் வந்தால் கையில் சுத்தியில் மற்றும் உளியுடன் "4885". Yun-seok Kim Mi-jin-னை தேடி கொண்டு அதே ஏரியாவில் வந்து சேர்கிறான். இங்கு இருந்து வேகம் பிடிக்கும் படம் இறுதி வரை பரபரப்பு குறையாமல் பயணம் செய்கிறது. Mi-jin மீட்கப்பட்டாளா ?? "4885"  யார் ?? காணமல் போன கால் கேர்ள்ஸ் என்ன ஆனார்கள் ?? போன்ற கேள்விக்கான விடைகளை "நெட்பிளிக்ஸ்" அல்லது "டோரென்ட்" உதவியை நாடி அறிந்து கொள்ளுங்கள். 


படம் சீரியல் கில்லரை பற்றியது என்று முன்பே சொல்லி விட்டேன். ஆனால் நார்மல் படங்களில் இருப்பதை விட ரத்த வன்முறை குறைவு தான். படத்தின் போஸ்டரில் "புருடல்" என்று விளம்பரத்துக்கு பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் அதித கொடூர காட்சிகளுக்கு வாய்ப்பு இருந்தும் இயக்குனர் ஏனோ அதை தவிர்த்து இருப்பார். பின்னணியில் மெல்லிய இசை தவழ, ரத்தம் தெறிக்க நடைபெறும் ஒரு கொலை காட்சியை தவிர படத்தில் கொடூர காட்சிகள் ஒன்றுமேயில்லை. அதிலும் கூட பார்வையாளனின் கற்பனைக்கே அந்த காட்சியை விட்டு விடுவது இன்னும் சிறப்பு.

Yun-seok Kim தேர்ந்த டிடெக்டிவ். அவன் ஏன் பிம்ப் ஆனான் என்பதருக்கு எந்த சோக பிளாஷ்பேக்கும் இல்லாதது பெரிய ஆறுதல். இவரது கதாபாத்திர தன்மையை ஆரம்ப காட்சிகளில் இயக்குனர் நன்றாக புரிய வைத்து விடுவார். தனது டீமில் இருக்கும் கால் கேர்ள்ஸுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உதவிக்கு ஓடி வருவதில் இருந்ததே பிம்ப் ஆக இருந்தாலும் அவனுக்கும் ஈரம் இருக்கிறது என்பது புரிந்து விடுகிறது. Mi-jin அடைக்க பட்ட வீட்டை இவர் தேடி செல்லும் ட்ரையல் செமையாக இருக்கும். கிடைக்கும் தடையங்களை வைத்து சிக்கலான முடிச்சுகள் இவர் அவிழ்க்கும் காட்சிகளில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. 


Jung-woo Ha "4885" சீரியல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர். இவருக்கும் எந்த பிளாஷ்பேக்கும் வைக்காமல், இவர் ஏன் கால் கேர்ள்சை தேடி தேடி கொல்கிறார் என்பதை ஒரு விசாரணை காட்சியில் விவரித்து இருப்பார்கள். அட்டகாசமான காட்சி அது. விசாரணை செய்பவர் Jung-woo தொடர் கொலைகளை செய்வதின் காரணத்தை விவரிக்கும் காட்சியில் இவரின் முகபாவனைகைகள் மிகவும் தந்துருபமாய் இருக்கும். இந்த பூனையும் பால் குடிக்குமா போன்ற இவரின் முகம் சீரியல் கில்லர் கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தி உள்ளது. 

Na Hong-jin என்பவரின் முதல் படைப்பு The chaser. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் அப்பட்டமாய் தெரியும். ஆனால் திரைகதையின் வேகத்தில் அந்த குறைகள் பெரிதாய் தெரியாது.  இதே படத்தை தழுவி (??!) ஹிந்தியில் மர்டர் -2 என்கிற காவியத்தை எடுத்தார்கள். நல்ல த்ரில்லர் படங்களை பார்க்க விரும்பும் யாரும் தவற விட கூடாத படம் இது. 

The chaser - செம த்ரில்லர் !!!
My Rating: 8.1/10.


Sunday, October 13, 2013

வணக்கம் சென்னை - (2013) மொன்னை காமெடி

சாண்டியாகோவில் இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் ரீலீஸ் செய்ய பட்டது. மொத்தம் முன்று காட்சிகள், வெள்ளி மற்றும் சனி இரவு காட்சியாக "நய்யாண்டி" படமும் ஞாயிறு பகல் காட்சி "வணக்கம் சென்னை" போடுவதாய் "SD Talkies" ஸில் விளம்பரம் செய்ய பட்டது. வெள்ளி இரவு ஒரே காட்சியில் "நய்யாண்டி" படுமோசமாய் ஊத்தி கொள்ள, சனி மற்றும் ஞாயிறு காட்சிகள் "வணக்கம் சென்னை" திரையிடப்பட்டது. தமிழ் சினிமாவை வாழ வைக்கும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாக திரையரங்கு சென்று இந்த மகா காவியத்தை கண்டு ரசித்தோம். ககலைஞர் குடும்பத்தில் எனக்கு பிடித்த நபரான உதயநிதியின் துணைவி கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் முதல் படம். உலக சினிமாவை எதிர்பார்க்காமல் டைம் பாஸாக மட்டும் இருந்தால் போதும் என்கிற எண்ணத்திலே தியேட்டரில் நுழைந்தோம். இறுதியில் எங்கள் எண்ணம் நிறைவேறியது என்றே சொல்லலாம்.


அஜய் (மிர்ச்சி சிவா) ஐடி வேலை கிடைத்து சென்னைக்கு வருகிறார். அஞ்சலி (ப்ரியா ஆனந்து) தென்னிந்திய கலாச்சாரத்தை படமெடுக்க புகைப்பட கலைஞராக லண்டனில் இருந்து சென்னைக்கு வருகிறார். சந்தர்ப்ப வசத்தால் இருவரும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை எற்படுகிறார். அஞ்சலி ஏற்கனவே லண்டன் மாப்பிள்ளை ஒருவருக்கு நிச்சயம் செய்ய பட்டவர். ஆரம்பம் முதலே இருவருக்கு ஒத்து போக மாட்டேன் என்கிறது. எலியும் பூனையும்போல போல் இருந்த இருவரும் எப்படி வாழ்கையில் (!!)  இணைகிறார்கள் என்பதை ஜிவ்வ்வ்வ்வு போன்று இழுத்து சொல்லி இருக்கிறார்கள்.

மிர்ச்சி சிவா வழக்கம் போல் நடித்து இருக்கிறார். "தமிழ் படத்தில்" அவரின் நோ எக்ஸ்பிரஷன் முகம் ஒத்து போனது என்பதற்காக எல்லா படத்திலும் அதே போன்று நோ எக்ஸ்பிரஷன் தான் காட்டுவேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது. சில இடங்களில் "குமுதம்" புக்கில் வரும் ஜோக்ஸ் போன்று மொக்கை போடுகிறார். சில காட்சிகள் "ஆனந்த விகடன்" புக் ஜோக்ஸ் போன்று ஸ்மைல் பண்ண கூடிய டயலாக்ஸ் சொல்கிறார். ரொமாண்டிக் காட்சிக்கும் இவருக்கும் வெகு தூரம் என்று மறுபடியும் நிருபித்து உள்ளார். டான்ஸா, அப்படினா என்னவென்று பாடல் காட்சிகள் நாம் தேட வேண்டியுள்ளது. வேறு நல்ல இளம் நடிகரை போட்டு இருந்தால் படம் கொஞ்சம் நல்லா வந்து இருக்கும். சிவாவை இந்த படத்திருக்கு செலக்ட் செய்த காரணத்தை எப்படி யோசித்தும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.


ப்ரியா ஆனந்து லண்டன் வாழ் பெண்ணாய் வந்து செல்கிறார். தேங்காய் எண்ணை  மாடல் போல் முகம் முழுக்க எண்ணையை தடவி கொண்டு திரிகிறார். சோகக் காட்சிகளில் கோபமாய் முகத்தை வைத்து, கோபமான காட்சிகளில் சோகமாய் முகத்தை வைத்து நடிப்பில் புதிய பாணியை கண்டுபிடிக்க முயற்சி செய்து இருக்கிறார். எத்தனையோ மொக்கை பீஸ்களை பார்த்த தமிழ் சமுகம் இவருக்கு இன்னும் இரண்டு வாய்ப்பு குடுக்காமலா போய் விடும். கண்டிப்பாய் குடுக்கும். இன்னும் இரண்டு படங்களில் இவர் நடித்தால் தமிழ் சினிமா எங்கோ சென்றுவிடும்.

சந்தானம் வீடு புரோக்கராக வருகிறார். இடைவேளைக்கு சிறிது முன்பு தான் இவரின் என்ட்ரி. படத்தின் இரண்டாம் பாதியில் சந்தானம் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பு தான். வழக்கம் போல் நாயகன் நாயகியை சேர்த்து வைத்து "ப்ரோ" வேலையை செய்கிறார். ஏழு காட்சிகள் இவருக்கு என்றால், அதில் ஆறு காட்சிகளில் சரக்கு அடித்து கொண்டே தான் இருக்கிறார். இவரின் டாஸ்மாக் காமெடிகள் ரொம்பவே புளித்து போய் விட்டது. சீக்கிரம் வேற ஜெனருக்கு மாறுங்க பாஸ். 


தமிழ் சினிமா அக்மார்க் லண்டன் மாப்பிள்ளையாக "ராகுல் ரவீந்திரன்". வந்து பல்ப் வாங்கி செல்கிறார். நிழல்கள் ரவி, ஊர்வசி, ரேணுகா ஆகியோர்கள் வந்து செல்கிறார்கள். அறிமுக இயக்குனர் கிருத்திகா உதயநிதி கணவருக்கு அதிகம் செலவு வைக்காமல் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் படத்தை முடித்து உள்ளார். சந்தானம், சிவா இருந்தும் டபுள் மீனிங் ஆபாச வசனங்கள் இல்லாதது இயக்குனரின் காரணத்தில் தான் என்பது நன்றாகவே தெரிகிறது. காஸ்டியூம் மற்றும் லைட்டிங்கில் இவரின் ரசனை நமக்கு தெரிந்து விடுகிறது. 

 ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். எங்கள் மாவட்டத்தை மிக அழகாய் படம் பிடித்து இருந்தார். வெஸ்டர்ன் ஆல்பத்தில் இருந்து இசையை சுட்டு நமக்கு வழங்கி உள்ளார் அனிருத். பிரபல பாடல்களை சுடாமல் அதிக பிரபலம் இல்லாத பாடல்களில் இருந்து சுட்டு தன் திறமையை நிருபித்து உள்ளார். இத்தனை குறைகள் இருந்தும் படம் தேறி விடும் என்றே தான் எனக்கு படுகிறது. காரணம் "நய்யாண்டி" மட்டுமே. 

வணக்கம் சென்னை - மொன்னை காமெடி 
My Rating: 6.0/10.


Monday, October 07, 2013

இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா - (2013) ரொம்ப சுமாரான படம் தான் !!!

போன வாரம் சொன்னது போலவே இந்த வாரம் சான்டியாகோ தமிழ் திரைஅரங்கில் விஜய் சேதுபதியின் "இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா" ரீலீஸ் ஆனது. படம் வியாழன் அன்றே ராஜ்தமிழ் இணையத்தில் கிடைத்தாலும், தமிழ் சினிமாவை வாழ வைத்தே தீர வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் சென்று "சுமார் மூஞ்சி குமாரை" கண்டு கழித்தோம். படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் சென்றேன். ஆனாலும் படம் எனக்கு முழு திருப்தியை தர வில்லை. ஷார்ட் பிலிம் ஆக எடுக்க வேண்டிய கதையை முழு நீள திரைப்படமாக எடுத்த காரணத்தால் நிறைய காட்சிகளில் நெளிய வேண்டிய நிலைமைக்கு தள்ள பட்டேன். 


ஒரே நாளில் நடைபெறு கதை தான் இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா. இரண்டு மையின் டிராக் கதை. இரண்டு சைடு டிராக்  கதை. இந்த நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் இணைவது தான் மீதி கதை. நான்கு கதைகளில் மிக அதிகம் ஸ்கோர் செய்வது "சுமார் முஞ்சி குமார்" மற்றும் "ரொம்ப சுமார் முஞ்சி குமார்" மட்டுமே. சுமார் முஞ்சி குமரேசனாக விஜய் சேதுபதி. வாழ்ந்து இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பு தான். சரியாக சொன்னால் இவர் வரும் காட்சிகள் மட்டுமே கலகலப்பு. மற்ற முன்று டிராக்கும் என் பொறுமையை ரொம்பவே சோதித்தது. கடைசி இருபது நிமிடம் மற்றும் கிளைமாக்ஸ் மருத்துவமனை காட்சியில் இவர் அடிக்கும் லூட்டி வயிற்றை பதம் பார்க்கிறது.

விஜய் சேதுபதி அலட்டல் இல்லாத நடிப்பு வழங்கி உள்ளார்.. சூழ்நிலைக்கு ஏற்ப அற்புதமாய் டயலாக் டெலிவரி செய்கிறார். சென்னை பாஷை அனாயாசமாக வருகிறது. "பிரண்டு லவ் மேட்டர்,  பீல் ஆகிட்டாப்ல, ஆப் அடிச்சா கூல் ஆகிடுவாப்ல" என்கிற எபிக் டயலாக்கை "என்னாச்சு, கிரிக்கெட் விளையாண்டோம்" போல் திரும்ப திரும்ப சொன்னாலும் கொஞ்சம் கூட அலுக்கவே இல்ல. தியேட்டரில் இருந்த இருபது பேரும் வி.பு.சி. அதே போல் "குமுதா ஹாப்பி" என்கிற டயலாக்கும் அட்டகாசம். இவர் விழுந்து விழுந்து காதலிக்கும் குமுதா பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கிறார். மேக் ஆப் தான் ரொம்ப ஓவர். 


நடுநாசி நாய்கள், மங்காத்தா படத்தில் துக்கடா கேரக்டரில் நடித்த அஸ்வின்க்கு இந்த படத்தில் கொஞ்சம் பெரிய ரோல். சுமாராய் நடித்து உள்ளார். "குமுதம்" ஒரு பக்க கதை போல் இருக்கிறது இவர் போர்ஷன். எப்பொழுதும் திட்டி கொண்டே இருக்கும் இவர் மேனேஜர், ஒரு கட்டத்தில் உன்னோட நல்லதுக்கு தான் அப்படி செய்தேன் என்று சொல்வது, அட போங்க பாஸ், பஞ்ச தந்திர நீதி கதை போல் இருந்தது. இவர்  விழுந்து பொரண்டு காதலிக்கும் "ரொம்பவே சுமார் முஞ்சி பிகர்" சுவாதி. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சுகர் சுகர் பேஷண்ட் தாதாவாக பசுபதி, முதல் பாதியில் சுமார் முஞ்சி குமார் - குமுதா காதலுக்கு பஞ்சாயத்து செய்கிறார். இவர் வரும் காட்சிகள் காமெடி கலாட்டா.

இது போக இரண்டு கிளை கதைகள். ஒரு கள்ளக்காதல் கதை. இது தான் படத்தின் டெம்போவை அடியோடு குறைப்பது. இடைவேளை வரை இவர்கள் எபிசோடை த்ரில்லர் போல் கொண்டு போய் விட்டு, இரண்டாம் பாதியில் காமெடி கள்ளக்காதல் என்று ஏதோ ஏதோ செய்கிறார்கள். தொழில்முறை கொலைகாரன் போல் இவர்கள் திருட்டு போன்னில் பேசுவது, கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. ஆனால் போன் தொலைவது திரைகதையின் தேவை. அதை வேறு மாதிரி குடுத்து இருக்கலாம். கள்ளக்காதல் கதையில் சூரி வேறு வருகிறார். மரண மொக்கை. காலாவதியான சின்ன கலைவாணர் விவேக் போல் சத்தம் போட்டு பேசுகிறார். சத்தம் போட்டு பேசுவது எல்லாம் காமெடி இல்ல என்று இவருக்கு யாரவது சொன்னால் தேவலை. குடி குடியை கெடுக்கும் என்கிற மெசேஜில் கொஞ்சம் செண்டிமெண்ட் வேண்டும் என்று 
கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவன் கதாபாத்திரத்தை சேர்த்து இருக்கிறார் இயக்குனர்.


சும்மாவே தமிழ் படங்களில் டாஸ்மாக் காட்சிகள் கொடி கட்டி பறக்கும். இதில் குடி குடியை கெடுக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி மெசேஜ் சொல்கிறார்கள். படத்தின் எல்லோரும் எதாவாது சரக்கு அடித்து கொண்டே இருக்கிறார்கள். டாஸ்மாக் அல்லது சரக்கு இல்லாத காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இயக்குனர் "கோகுல்", ரௌத்திரம் என்கிற அக்ஷன் படத்தை எடுத்தவர். வலுவான திரைக்கதை இல்லாதனால் படம் தோற்றது. இதிலும் வலுவான திரைக்கதை அமைக்க முடியாமல் தடுமாறுகிறார். இசை ஓகே ரகம் தான். விஜய் சேதுபதி வரும் இரண்டு பாடல்கள் மட்டுமே எனக்கு பிடித்து இருந்தது. 

இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா - ரொம்ப சுமாரான படம் தான்
My Rating: 6.5/10.
சமிபத்தில் எழுதியது : ராஜா ராணி (2013)


Sunday, September 29, 2013

ராஜா ராணி (2013) - த்ரிஷா இல்லைனா திவ்யா !!

காதல் தோல்வியோடு வாழ்க்கையும் முடிந்து விடுவது இல்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்ற உயரிய சிந்தனையை உரக்க சொல்லும் படம் தான் "ராஜா ராணி". ஜான் (ஆர்யா) ரெஜினா (நயன்தாரா) இருவரும் விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்கிறது. இருவருக்கு திருமணத்தில் ஏன் விருப்பம் இல்லை, என்ற கேள்விக்கான விடையை பிளாஷ்பேக் மூலம் சொல்கிறார்கள். இருவரும் காதலில் தோல்வி அடைந்தவர்கள். பெற்றோர் விருப்பதிருக்கு தான் இந்த திருமனத்திருக்கு ஒத்து கொண்டு இருக்கிறார்கள். காதலை பறிகொடுத்த இருஜோடியும்  தங்கள் பழைய பாதிப்பில் இருந்து மீண்டு, இவர்களின் தற்போதை திருமண வாழ்க்கையை எப்படி வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதுதான் மீதி கதை. 


படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நசிம், சந்தானம், சத்யராஜ் என்று ஏகப்பட்ட நடிகர் கூட்டம். அனைவரும் தங்கள் பணியை மிக சிறப்பாய் செய்து இருக்கிறார்கள். ஆர்யா அதிகம் அலட்டிக்கொல்லாமல் நடித்து இருக்கிறார். டெய்லி குடித்து விட்டு வந்து  ரெஜினாவையும் பக்கத்து வீட்டுகாரர்களையும் கடுப்பு ஏதும் காமெடி எபிசோடு செம. தனக்கு எது நன்றாக வருமோ அதை மிக சரியாய் செய்து இருக்கிறார். திருமணம் செய்தபிறகு தன்னை மதிக்காத நயன்தாரவை வெறுப்பேற்றும் காட்சியிலும், நஸ்ரியாவை விழுந்து விழுந்து காதலிக்கும்போதும், சந்தானத்துடன் இணைந்து காமெடி பண்ணுவதிலும் கலக்கியிருக்கிறார்.

நயன்தாராவின் கம் பேக் மூவி. யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நாம் பார்த்து பழகிய மேல் டாமினேட்டிங் கேரக்டர். மிகவும் தந்துருப்பமாய் நடித்து இருக்கிறார். இந்த ஊரில் தமிழ் படம் ஓடும் தியேட்டர்களில் பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. சீட் நம்பர் என்று எதுவும் கிடையாது. சீக்கிரம் போய் இடம் பிடித்தால் பின்னாடி சீட் கிடைக்கும், லேட்டாக போனால் முன்னாடி சீட் தான் கிடைக்கும். தெரியாத்தனமாய் நாங்கள் லேட்டாய் போய் விட்டோம். இரண்டாவது ரோவில் தான் சீட் கிடைத்தது. நயன் பிளாஷ்பேக்கில் கதறி அழும் கொடூர காட்சியை மிக அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அந்த கொடூரமான் காட்சியை தவிர அவர் நடிப்பை குறை சொல்ல முடியவில்லை. நயன் கொஞ்சம் டயட் கன்ட்ரோல் செய்தால் நல்லது, இல்லை என்றால் க்ளோஸ் அப் காட்சிகளை அறவே தவிர்ப்பது நலம்.


ஜெய்யின் நடிப்பு என்னை பெரிதாய் கவரவில்லை. நிறைய ஓவர் ப்ளே செய்து இருந்தார். இவருக்கும் நயனுக்கும் காதல் வரும் காட்சிகளில் அழுத்தமே இல்லை. அதனாலே இவர்களின் காதல் தோல்வி அடைந்தவுடன் பெரிய பச்சாதாபம் வர வில்லை. அது போக ஜெய்-நயன் கதையில் வரும் காமெடியும் படு மொக்கை. சத்யனுக்கு காமெடி சுட்டு போட்டாலும் வரது என்பதை மறுபடியும் நிருபித்து இருக்கிறார். முதல் பாதியில் நயன்தாராவின் முன்கதை, இரண்டாம் பாதியில் ஆர்யாவின் முன் கதை என்று படம் நகர்கிறது. 

இந்த இரண்டு ப்ளாஷ் பேக்களில் என்னை கவர்ந்தது ஆர்யா-நஸ்ரியா எபிசோடு தான். நாங்கள் ரொம்பவே ரசித்து பார்த்தோம். காரணம் வேறு யாரும் இல்லை, சந்தானம் தான். மனிதர் கலக்கி இருக்கிறார். நஸ்ரியா செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கிறது. சமயத்தில் காஜால் அகர்வாலின் மானரிஸம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டு அடி ஹீல்ஸ் போட்டும் அம்மணியால் ஆர்யாவின் தோள்பட்டையை கூட தொட முடியவில்லை. முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் படத்தை சோர்வு அடையாமல் அழைத்து செல்லும் பணியை செய்து இருக்கிறார் சந்தானம். இவரின் கழுத்தின் கீழே இருக்கும் சதை இவரின் மொரட்டு தீனியை நமக்கு எடுத்து சொல்கிறது. உடம்பை பார்த்துக்காங்க பாஸ். இல்லாட்டி கேப்டன் மாதிரி ஆகிருவீங்க. 


சத்யராஜ் இப்படத்தில்  இளமையாக தெரிகிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார். நயன்தாராவுக்கு அப்பாவாக மட்டுமல்லாமல், அவருக்கு நல்ல நண்பராகவும் தோன்றுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் வழக்கம் போல் மொக்கை வாங்கி உள்ளது. ஆர்யா-நஸ்ரியா பாடல் தவிர எதுவுமே மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை எங்கள் காதை பதம் பார்க்கிறது. ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி என்பவர் தான் இயக்கியிருக்கிறார். காட்சிகளை தெளிவாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். நம்முடைய பழைய வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு தற்போது கிடைக்கும் வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது என்பதை ரொம்பவே தெளிவாக சொல்லி இருக்கிறார். இடை இடையே எனக்கு மௌன ராகம் மற்றும் வாரணம் ஆயிரம் படத்தின் நிறைய காட்சிகள் ஞாபகம் வந்து தொலைத்தது. காதலித்த பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை காதலிக்க பழகிக்கொள்ளுங்கள் என்று ஒரு எதார்த்தமான கதையை எடுத்துக் கொண்டு அதை, அழகாகவும் அதிகம் குழப்பாம்மலும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அட்லி.

டிஸ்கி: படத்தின் இடைவேளையில் அடுத்த இந்த தியேட்டரில் ரீலீஸ் ஆகும் இரு படத்தின் ட்ரைலர் போட்டார்கள். ஒரு தல அஜித்தின் "ஆரம்பம்" , தீபாவளி ரீலீஸ். அடுத்த படம் தான் எங்களுக்கு பெரிய ஆச்சிரியம். பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே யுஸ்ஸில் ரீலீஸ் ஆகும் என்கிற மாயயை உடைத்து எரிவது போல் இருந்தது அந்த ட்ரைலர். அந்த படம் "சுமார் மூஞ்சி குமாரின் "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா". அடுத்த வாரம் இங்கு ரீலீஸ். வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி.

My Rating: 7.0/10.
சமிபத்தில் எழுதியது : B.A Pass (2013)


Saturday, September 28, 2013

B.A Pass (2013) - டெல்லி சவிதா ஆண்ட்டி ???

'Delhi Noir' என்ற சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்ற The Railway Aunty என்கிற கதையை தழுவி எடுக்க பட்ட படம் தான் BA Pass. வேற்று மொழிகளில் மட்டுமே சாத்தியமான "உலக சினிமா" கதைகளை ஹிந்தியில் குடுக்க விளைந்து, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். நான் அறிந்தவரையில் இந்தியாவில் சிறுகதைகளை தழுவி எடுக்க பட்ட படங்கள் மிகவும் குறைவே. அப்படியே எடுக்க பட்டு இருந்தாலும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தை திரையில் கொண்டு வருவது மிகவும் கடினம். வாசிப்பு அனுபவம் தரும் சுகத்தை கமெர்ஷியல் திரைப்படங்களினால் குடுக்க முடியாது என்கிற என்னத்தை உடைத்த எறிந்தது BA Pass. சிறுகதையின் மூலம் கெடாமல், அதன் தாக்கத்தை கொஞ்சமும் குறைக்காமல், சரியாய் சொன்னால் அதன் வீரியத்தை கூட்டி திரையில் விருந்து படைத்தது இருக்கிறார் இயக்குனர் அஜய் பாஹ்ல்.


 டெல்லியில் நடைபெறும் கதையின் கதாநாயகன் முகேஷ். பெற்றோரை இழந்த முகேஷ் தன் படிப்பிருக்காக டெல்லி வந்து தன் அத்தை வீட்டில் தங்குகிறான். தன் இரண்டு தங்கைகளை ஹாஸ்டலில் தங்க வைத்து விட்டு அத்தை வீட்டில் அவர்கள் சொல்லும் எடுபுடி வேலைகளை செய்து தன் படிப்பையும் தொடர்கிறான். அந்த வீட்டிருக்கு வரும் சரிகா ஆண்ட்டியின் அறிமுகம் அவனுக்கு கிடைக்கபெறுகிறது. ஆப்பிள் கூடை வாங்க சரிகா வீட்டிருக்கு போகும்போது ஒரு பலவீனமான தருணத்தில் முத்தத்தில் ஆரம்பித்து உறவில் போய் முடிகிறது.

 அதன் பின்பு முகேஷ் சரிகா ஆண்ட்டி சொல்லும் வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறான். அந்த வேலை இந்தியாவிருக்கு அதிகம் பரிச்சியம் இல்லாத "ஜிகோலோ" வேலை. கிளியராக சொல்ல வேண்டுமென்றால் ஆண் விபச்சாரம். பணம் பெற்றுக்கொண்டு பெண்களின் தாம்பத்திய தேவைகளை பூர்த்தி செய்யும் வேலையை செய்ய ஆரம்பிக்கிறான். அந்த வேலை அவன் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது, எதில் போய் முடிகிறது என்பதை கொஞ்சமும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதார்த்தமாய் சொல்கிறார்கள். முடிவு பார்பவர்களை உலுக்கி எடுத்து விடும் என்பதில் மட்டும் எனக்கு சந்தேகமேயில்லை. 


முதலில் இது போன்ற கதையை தேர்வு செய்த இயக்குனர் பாஹ்ல்க்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கத்தி மீது நடப்பது போன்ற கதைக்களம். இம்மியளவு பிசகினாலும் இரண்டாம்தர B கிரேடு படத்தில் சேர்ந்து விடும். சரிகா ஆண்ட்டி சவிதா பாபியாய் மாறி விட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பே தராமல் தேவையான அளவு மட்டுமே கவர்ச்சியை காண்பித்து அட்டகாசமான உலக சினிமாவை குடுத்து இருக்கிறார் இயக்குனர். டெல்லியின் சமூக அவலங்கள் அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார். படம் நகர வாழ்கையில் பெருகி வரும் "கே" கலாச்சாரம், ஆண் எஸ்கார்ட்டை, நம்பிக்கை துரோகம் என்று பல விஷயங்களை தொடுகிறது. 
  
முகேஷாக நடித்த இளைஞரின் பெயர் சதாப் கமல். அட்டகாசமான நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார். முதல் பாதி முழுக்க இவரின் வாய்ஸ் ஓவரில் தான் படம் நகருகிறது. டெல்லியின் வேகதிருக்கு ஈடு குடுக்க முடியாமல் இவர் முதிலில் தடுமாறி, ஒரு கட்டத்தில் சரிகாவின் மாய வலையில் விழுந்து, பிறகு சொன்ன வேலைகள் வேண்டா வெறுப்பாய் செய்து, பிறகு அதே வேலையை ரசித்து செய்கிறார். இவர் செஸ் மற்றும் செக்ஸில் ஒரு சேர தேர்ச்சி பேரும் காட்சி கவிதை. சரிகாவின் ட்ரைனிங் மூலம் கன்றுகுட்டியில் இருந்து பொலி காளையாய் மாறுகிறார். விரக்தியின் உச்சியில் கேவாக மாறி நைட் அவுட் போய் விட்டு வந்து காலையில் நடக்க முடியாமல் நடந்து வரும் காட்சியில் நம்மால் பரிதாப படாமல் இருக்க முடியாது.
  

சரிகாவாக நடித்து இருப்பவர் "ஷில்பா சுக்லா". ஆம்பிளை முக தோற்றம் கொண்டவர் போல் எனக்கு தோன்றியது. முகம் மட்டுமே அப்படி, ஆனால் நடிப்பில் குறை சொல்ல முடியாத படி செய்து இருக்கிறார். கண்களில் ஒரு வித போதையுடன் தான் படம் முழுக்க வலம்வருகிறார். பின்னணி இசை பிரமாதம். துணை கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சரிகாவின் வீட்டில் இருக்கும் பாட்டி, முகேஷின் செஸ் பார்ட்னர், கணவன் மரண படுக்கையில் இருக்கும் போது முகேஷை தேடி வரும் ஒரு ஆண்ட்டி என் அணைத்து கதாபாத்திர தேர்வும் அருமை. ட்ரைலர் மற்றும் படத்தின் ஸ்டில்ஸ் பார்த்து விட்டு கில்மா படம் அல்லது சூப்பர் மேட்டர் படம் என்று நம்பி போனால் நீங்கள் ஏமாற மாட்டீர்கள். படத்தில் செக்ஸும் உள்ளது, அழுத்தமான கதையும் உள்ளது. ஆனால் செக்ஸ் தீனிக்க பட்டது இல்லை. நல்ல சினிமாவை பார்க்க விரும்புவர்கள் கண்டிப்பாய் பார்க்கலாம்.

The Railway Aunty சிறுகதையை தமிழில் படிக்க மதுரை மல்லி 
ஆங்கிலத்தில் படிக்க Delhi Noir

My Rating: 7.8/10.


Thursday, September 19, 2013

மூடர் கூடம் (2013) - கொரியன் படத்தின் தழுவல் !!

வாழ்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்த நான்கு நண்பர்கள் சீட்டு கம்பெனி நடத்தி மக்கள் பணத்தை சுருட்டிய பணக்காரனின் வீட்டில் கொள்ளை அடிக்க செல்லும் நகைச்சுவை கலாட்டா தான் மூடர் கூடம். அடுத்தவனை வாய்க்கு வந்ததை சொல்லி ஓட்டுவது தான் நகைச்சுவை என்று இன்னும் நம்பி கொண்டிருக்கும் மக்கள், இது போன்ற "பிளாக் காமெடி" வகை படங்களையும் ரசிப்பது மாற்று சினிமாவிருக்கான நல்ல தொடக்கம் என்றே நம்ப தோன்றுகிறது. "பிளாக் காமெடி/டார்க் காமெடி" தமிழ்சினிமாவிருக்கு புதுசு. "சூது கவ்வும்" இந்த வகையில் வந்த மாஸ்டர் பீஸ். அதன் பிறகு நான் பார்த்த சிறந்த டார்க் காமெடி படம் "மூடர் கூடம்".


நான்கு பேர் நவீன், குபேரன், சென்ட்ராயன் மற்றும் வெள்ளையன் தமிழ் சினிமா மரபு மாறமால் வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். வாழ்கையில் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற முடிவிருக்கு வந்து குருட்டு தைரியத்தை மட்டுமே முதலீடாக கொண்டு வெள்ளையனின் மாமாவான சீட்டு கம்பெனி முதலாளி வீட்டில், அவர்கள் வெளியூர் சென்ற நேரம் பார்த்து திருட செல்ல, அந்த குடும்பமோ காலை 3 மணிக்கு பதில் மதியம் 3 மணி தான் கிளம்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. வேறுவழியின்றி அவர்களை வீட்டுக்காவலில் பிணைய கைதிகளாய் வைத்து அந்த வீட்டில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்க நினைகிறார்கள். அவர்கள் முயற்சி வென்றதா. அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தார்களா என்பதே மீதி கதை.

நான்கு நண்பர்கள் ஒவொருவரும் ஒரு விதம். சமூகத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டவர்கள், ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்தவர்கள். அனைவரது கடந்த காலத்தையும் பிளாஷ்பேக் முலம் பார்வையாளர்களுக்கு சொல்கிறார்கள். ஒவ்வொரு பிளாஷ்பேக்கையும் வித்தியாசப்படுத்தி ரசிக்கும் படி குடுத்தது கூடுதல் சிறப்பு. வீடு புகுந்து திருடுவதற்கு ஐடியா குடுப்பது நவீன். இவர் தான் படத்தின் இயக்குனர். தீவிர "சிவப்பு" கம்யூனிஸ்ட் பிரியர் போல் தெரிகிறது. போகிற போக்கில் "சிவப்பு" தத்துவங்களை தூவி செல்கிறார். ரொம்பவே எளிமையாக, ரசிக்கும் படி மற்றும் முக்கியமாக புரியும் படி வசனங்களை செதுக்கி உள்ளார். சிவப்பு மீது தீராத வெறுப்பில் இருக்கும் எனக்கே சில வசனங்கள் பிடித்து இருந்தன. அலட்டல் இல்லாத நடிப்பின் முலம் நம் மனதை கவருகிறார். 


"ரெண்டு வருஷம் முன்னாடி ரெண்டு ரூபாய் வித்த டீ இப்ப ஆறு ரூபாய். அதைக் கேட்கவே ஆளில்லை. கஞ்சா 400 ரூபாய்ன்னா மட்டும் தட்டி கேட்டுருவாங்களா?" என்று அறிமுகம் ஆகிறார் சென்ட்ராயன். இவர் பேசும் "பு" வசனங்கள் அதகளம். வெள்ளைக்காரன்கிட்ட தமிழிலே பேசுறீங்களாடா? அப்புறம் ஏன் தமிழன்கிட்ட மட்டும் இங்கிலீஷிலே பு ? என்று இவர் கேட்பது ஞாயமாக படுகிறது. ஆனால் நிறைய காட்சிகளில் இவரின் நடிப்பு ஓவர் டோஸ் மற்றும் எரிச்சலை வரவழைக்கிறது. 

தன்னை பச்சை பச்சையாய் திட்டியவனை விட்டுவிட்டு முட்டாள் என்று சொன்னவனை புரட்டி எடுப்பதிலே தெரிந்து விடுகிறது குபேரனின் வீக்னெஸ் என்னவென்று. குபேரனுடைய இளம் வயது முட்டாள் பிளாஷ்பேக்கை கார்ட்டூனாக காட்டியிருப்பது படத்தின் ஸ்டைலை மாற்றுகிறது. கடைசியாக வெள்ளையன். இவருக்கு மட்டும் காதலி உண்டு. 

படத்தில் வரும் நாய்க்கு கூட ரசிக்கும்படியான பிளாஷ்பேக். ஓவியா, ஜெயப்ரகாஷ், குண்டு சிறுவன், தாவூத்தின் சென்னை பிராஞ்ச்சை எடுத்து நடத்தும் சேட், ஜப் எத்திக்ஸ் திருடன் என்று அனைவருமே சிறப்பாய் நடித்து உள்ளார்கள். குறை என்று சொன்னால் பின்னணி இசை மற்றும் பிற்பாதியில் படத்தின் நீளம்.


 "Attack the Gas Station!" என்கிற கொரியன் படத்துல இருந்து   தழுவி எடுக்க பட்ட நிறைய காட்சிகளை நம்மால் மறைக்க முடியல. படத்தின் மூல கதை,  தலைகீழ் தண்டனை, சென்ட்ராயன் சேட்டைகள், கிளைமாக்ஸ் காட்சி என்று நிறைய காட்சிகள் கொரியன் படத்தை ஞாபக படுத்துகிறது. பிற மொழியில் இருந்து தழுவி எடுக்கிற தமிழ் படங்கள் என்னைக்குமே எனக்கு ஓகே தான். டோரன்ட்ல டவுன்லோட் பண்ணி அந்த கொரியன் படத்தை பார்த்த யாருக்கும் தழுவல்/கதை திருட்டை பத்தி பேசுற யோக்கியதை இல்லை என்பது என்னுடைய உறுதியான எண்ணம். எந்த மொழி படமாக இருந்தாலும் என்னை பொறுத்த வரை பார்வையாளர்களை கதையோடு கட்டி போட வேண்டும், படத்தை சுவாரிசியமாக குடுத்து இருக்க வேண்டும். வெற்றிக்கான மந்திரம் அது தான். அந்த வகையில் மூடர் கூடம் வெற்றி கோட்டை அசால்ட்டாக கடக்கிறான்.

மூடர் கூடம் - வெற்றி கூடம் 
My Rating: 8.0/10.


Monday, September 02, 2013

தங்க மீன்கள் (2013)- தூர்தர்ஷன் செண்டிமெண்ட் டிராமா

சராசரிக்கும் கீழ் புத்தி (IQ) உடைய குழந்தைக்கும், சரியான் படிப்பு இல்லாமல் நிலையான வேலைக்கு போகாமல், பணம் சம்பாரிக்க தெரியாத அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டம் தான் "தங்க மீன்கள்". கற்றது தமிழ் "ராமின்" இரண்டாவது படைப்பு இது. தமிழில் குழந்தைகளில் வாழ்வை யதார்த்தமாய் எடுத்து சொல்வது போல் வந்த படங்கள் ரொம்பவே குறைவு. மணியின் "அஞ்சலி" மற்றும் பாண்டியராஜனின் "பசங்க" படங்கள் குழந்தைகளின் நகர மற்றும் கிராம வாழ்கைகையை சாதாரண ரசிகனும் ரசிக்கும் படி படம் பிடித்து காட்டியிருந்தார்கள். 

அதே போன்று ராமுக்கு குழந்தைகளின் உலகை படம் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்துள்ளது. அது மாதிரி எண்ணம் வந்தது தவறு என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தான் என்ன சொல்ல வருகிறோம் என்று தெளிவாய் முடிவு செய்து இருக்க வேண்டும். மந்த புத்தி பெண் குழந்தை மற்றும் அதன் அப்பாவுக்கு இடையே இருக்கும் பந்தத்தை சொல்லவதா,  இல்ல தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் மேல்லானவை என்பதை சொல்வதா, இல்ல தனியார் பள்ளி ஆசிரியர்கள் குரலாய் ஒலிக்க வேண்டுமா என்பதில் ரொம்பவே குழம்பி விட்டார் ராம். படத்தின் முடிவில் போட்ட வார்த்தைகள் "போதுமான வசதிகள் இல்லையென்றாலும், போதிய வருமானம் கிடைக்கவில்லையென்றாலும், தன்னார்வத்தால் மாணவர்களுக்காகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு" என்கிற வாக்கியங்கள் நம்மை ரொம்பவே குழப்பி விட்டன. 


படத்தின் மையின் கதாபாத்திரம் செல்லம்மாவாக சிறுமி சாதனா. கதையின் ஆணிவேர் இவருடைய கதாபாத்திரம்தான். படம் முழுக்க ஒரு அப்பாவி மகளாக நெஞ்சை நெகிழ வைக்கிறார். விருது வாங்கும் அளவுக்கு நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார். செல்லமா பேசும் கொஞ்சும் தமிழை கேட்டுகொண்டே இருக்கலாம். "நிஜமா தான் சொல்றீயா" சிறு வயது அஞ்சலி போன்று எனக்கு தோன்றியது. இந்த குழந்தை‘எம்’முக்கும், ‘டபிள்யூ’வுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும் போது, ஆஹா, "தாரே ஜமின் பர்" போன்ற டிஸ்லெக்சியா (கற்றல் குறைபாடு) பற்றி பேச போகும் நல்ல படம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்த காட்சியில் ராம் பணம் இல்லாமல் வறுமையின் நிறம் சிவப்பு போல் கஷ்டபடுகிறார். கடைசியாக குழந்தை வோடபோன் நாய் வேண்டும் என்று கேட்டு அதை வாங்க பிற்பாதி முழுக்க கஷ்டபடுகிறார். இப்படி திக்கில்லாமல் அலைகிறது கதை.

அடுத்த முக்கிய கேரக்டர் கல்யாணி (ராம்). கற்றது தமிழ் ஜீவாவின் மறு பதிப்பு. நார்மல் மனநிலையில் யோசிக்காத கதாபாத்திரம். இவர் "பெருசிடம்" சம்பளம் இல்லாமல் வேலை செய்வதருக்கு சொல்லும் காரணம் செல்லமாவிடம் நேரம் செலவிட வேண்டும் என்பது தான். அந்த அளவு பாசம் வைத்து இருப்பார். குழந்தையை இவர் மனைவி சூடு போட்டு விட்டார் என்று அறிந்து, கதறி அழும் காட்சியில் தனக்கு நடிக்கவும் வரும் என்று நிருபித்து இருக்கிறார். வெள்ளைகார தம்பதியிடம் இவர் லேப்டாப் பிடுங்கி கொண்டு ஓடும் காட்சிகள் நாடக தனமானவை. ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் கடன் கேட்டு போகும் நண்பனிடம் அசிங்கபடுவது, தனியார் பள்ளி டீச்சரிடம் போய் ஹை பிட்சில் கத்தி பேசி, பின்பு பிரின்சிபாலிடம் கெஞ்சி பேசி, கடைசியாய் அப்பாவிடம் அடி வாங்குவது என்று அக்மார்க ராம் டைப் செண்டிமெண்ட் காட்சிகள். இது போன்ற காட்சிகள் இப்பொழுது தூர்தர்ஷன் சீரியலில் கூட வருவது இல்லை. 


கூலி வேலை தான் செய்வது என்று முடிவு செய்தவுடன், அதை கொச்சின் சென்று தான் செய்யவேண்டுமா ?? அதே கூலி வேலை அவர் இருக்கும் ஊரில் கிடைக்காதா ?? பிரிவை காட்ட வேண்டும் என்று வேண்டுமென்றே திணிக்க பட்ட காட்சிகள் நிறைய உள்ளது. தியேட்டர் கிடைக்கலன்னு மட்டும் ஒப்பாரி வச்சா போதாது, கொஞ்சம் முளையை யோசிச்சு சீன் எடுக்கவும் செய்யவும். ராம் மட்டும் இல்லாமல் செல்லமாவை சுற்றியே முழு கதையும் பின்னி இருந்தால் படம் கண்டிப்பாய் பேச பட்டு இருக்கும். அப்படியே ராம் இருந்தாலும், அவரை நார்மலாக உலாவ விட்டு இருக்கலாம். 

கற்றது தமிழில் செய்த அதே பிழையை தான் இதிலும் செய்து உள்ளார் ராம். அதில் கதாநாயகனுக்கு தமிழ் படித்தால் வேலை கிடைக்கவில்லை. தமிழ் படித்தால் வேலை கிடைப்பது கஷ்டம் என்று தெரிந்தே தானே படித்தார் ? தவறை தான் செய்துவிட்டு சமூகத்தை குறை கூறுவார். மெண்டல் தனமாய் ஐடி துறையில் வேலை செய்யும் ஒருவனை பிடித்து டார்ச்சர் செய்வார். பாலா கூட இது போன்ற மெண்டல் கதாபாத்திரங்களை பல படங்களில் காட்டி உள்ளார். அதை பார்க்கும் எனக்கு பயம் அல்லது பரிதாபம் வரும். ஆனால் ராம் படங்களில் வரும் மெண்டல் கதாநாயகர்களை பார்க்கும் எனக்கு எரிச்சல் தான் வருகிறது. ஊரோடு ஓத்து வாழ முடியாதவனை எங்கள் ஊரில் கிறுக்கன் என்று சொல்வோம். இதிலும் ஊரோடு ஓத்து வாழ தெரியாதவனின் வாழ்க்கையை தான் பதிவு செய்து உள்ளார் ராம். அவனின் கிறுக்குதனங்களுக்கு குறைவேயில்லை. சோ, எரிச்சல் தரும் காட்சிகளுக்கு பஞ்சமேயில்லை.


பணம் இல்லாதவர்கள் மட்டுமே ரொம்ப நல்லவர்கள், பாசத்துக்கு எதுவும் செய்பவர்கள். பள்ளி படிப்பு படிக்காதவர்கள் உண்மையில் அறிவாளிகள், ஆனால் சமுகத்தின் பார்வையில் முட்டாள்கள் என்கிற கருத்தை இந்த படத்தின் மூலமும் திணிக்க பார்க்கிறார் ராம். வெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் என்பது போல் இருக்கிறது, இவர் சொல்ல வந்த கருத்து. படித்தவன் எல்லாம் முட்டாள்கள், வாத்தியார் முட்டாள், ஆஸ்திரேலியாவில் இருந்து ஊருக்கு வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் முட்டாள், அவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாமே அபத்தமானவை. ராம் எடுக்கும் முடிவுகள் மட்டுமே சரியானவை என்பது போல் பல காட்சிகள் வைத்து இருக்கிறார். 

நிறைய இடங்களில் படத்தை தாங்கி நிற்பது யுவனின் பின்னணி இசை தான். நீண்ட நாட்கள் கழித்து வெகுநாட்கள் மனதில் தங்கும் இசையை கொடுத்துள்ளார் யுவன். ராமின் மனைவியாக ஷெல்லி கிஷோர், அப்பா, ‘பூ’ ராமு, அம்மா ரோகிணி, பூரிக்காக தன் சாவை தள்ளி போடும் சிறுமி என மற்ற அணைத்து கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து செதுக்கிய ராம், முக்கிய கேரக்டரான கல்யாணி மற்றும் செல்லமாவை ரொம்பவே குழப்பமாக வடிவைமைத்து, ரொம்பவே குழப்பமாக திரையில் காட்டி இருக்கிறார். அது தான் படத்தின் மிக பெரிய மைனஸ்.

தங்க மீன்கள் - தூர்தர்ஷன் செண்டிமெண்ட் டிராமா

My Rating: 6.5/10.