Sunday, October 27, 2013

New World (2013) - கொரியன் கேங்ஸ்டர் மூவி !!!

கேங்ஸ்டர் படங்களின் மீது எனக்கு எப்பொழுதும் தனி ஈர்ப்பு உண்டு. கேங்ஸ்டர் படங்கள் மீதான் என்னுடைய காதல் 8 வயதில் ஆரம்பம் ஆனது என்று நினைக்கிறன். அந்த வயதில் தான் "நாயகன்" படம் பார்த்தேன். கோவை அருண் தியேட்டரில் நாயகன் படம் பார்த்து, கமல் இறக்கும் இறுதி காட்சியில் நான் தேம்பி தேம்பி அழுதது இன்னும் என் நினைவில் இருக்கிறது. பெரியவன் ஆனதும் வேலு நாயகர் போல் நானும் கேங்ஸ்டர் ஆக வேண்டும் என்றெல்லாம் எண்ணியது உண்டு. விவரம் புரிய ஆரம்பித்தவுடன் நான் அதிக முறை ரசித்து பார்த்த ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படம் "பாட்ஷா". ரஜினி டானாக மாறி படியில் நடந்து வரும் காட்சியை இப்பொழுது பார்த்தாலும் எனக்கு வேர்த்து விடும். IMDB மற்றும் ஹாலிவுட் படங்களின் அறிமுகம் கிடைத்தவுடன் நான் தேடி தேடி பார்த்தது அனைத்துமே கேங்ஸ்டர் படங்கள் தான். 


இன்று வரையில் நான் சிறந்த கேங்ஸ்டர் படமாக கருதுவது கொப்பாலாவின் "The God Father" படம் தான். அதன் பிறகு நான்  வேர்க வேர்க்க ரசித்து பார்த்த ஹாலிவுட் கேங்ஸ்டர் படம் "The Departed". பிறகு தான் தெரிந்தது "The Departed" "Infernal Affairs" என்கிற கேன்டனீஸ் படத்தின் தழுவல் என்று. அன்று ஆரம்பித்த ஆசியன் படங்கள் மீதான் மோகம் இன்னும் எனக்கு குறையவேயில்லை. சமிபத்தில் நண்பர் பிரதீப் ரெகமென்ட் செய்த கொரியன் படமான "New World" பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. Infernal Affairs, Departed அளவுக்கு வேர்கவில்லை என்றாலும், மிக சிறந்த த்ரில்லர் படம் பார்த்த திருப்தி  கிட்டியது. பிரதீப்க்கு என் நன்றிகள்.

படத்தின் ஆரம்பம்பமே ரத்த களரி தான். போலீஸ் உளவாளி என்று சந்தேகிக்கும் ஒரு நபரை சித்திரவதை செய்து கொலை செய்கிறார்கள் "கோல்ட்மூன்" என்கிற கொரிய மாபியா கும்பலை சேர்ந்தவர்கள்.  கோல்ட்மூன் நிறுவனம் கொரியாவின் மிக பெரிய கார்ப்பரேட் மாபியா கூட்டமைப்பு. இந்த மாபியா கும்பலில் கடந்த எட்டு வருடங்கள் விசுவாசமாய் கொலை செய்து வருபவன் கதையின் நாயகன் "Jung-Jae". இவர் போலீஸ் என்பது படம் ஆரம்பித்தவுடன் நமக்கு தெரிந்து விடுகிறது.

 Jung-Jae-னை ஆட்டுவிப்பது போலீஸ் கமிஷனர் Min-sik Choi. "Old Boy" படத்தில் மாயாஜாலம் நிகழ்த்தியவர். இதிலும் வெயிட்டான ரோல். இவரின் ஒரே மிஷன் கோல்ட்மூன் கூட்டமைப்பை போலீஸ் கட்டுபாட்டில் கொண்டு வந்து அவர்களை மொத்தமாய் ஒழித்து புது உலகம் படைப்பது தான். அந்த ஆபரேஷனுக்கு பெயர் தான் "New World". ஆபரேஷனின் ஒரு பகுதியாய் தான் Jung-Jae போன்று பல போலீஸ் அதிகாரிகளை கோல்ட்மூன் நிறுவனத்தில் ஊடுருவி இருப்பார்கள். யார் போலீஸ், யார்  மாபியா என்று நம்மால் யூகிக்க முடியாத படி ஏகப்பட்ட ட்விஸ்ட்.


கோல்ட்மூன் கூட்டமைப்பின் சேர்மன் கார் விபத்தில் மர்மமான முறையில் கொல்லபடுகிறார். அடுத்த தலைவருக்கான் தேர்தல் நடைபெறும் வேளையில், சேர்மன் பதவிக்கு இரண்டாம் கட்ட தலைவர்களான Jeong மற்றும் Lee யிடையே கடும் கேங் வார் மூள்கிறது. கதையின் நாயகன் "Jung-Jae" Jeong - கின் வலது கை. இவர்களின் கேங் வாரின் இறுதியில் யார் உயிர் பிழைக்கிறார்கள், யார் மரணத்தை தழுவுகிறார்கள் என்பதை ஏகப்பட்ட ட்விஸ்ட் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

துரோகம் மற்றும் நம்பிக்கை துரோகதிருக்கு இருக்கும் மிக மெல்லிய வித்தியாசத்தை மிக அழகாக காட்சிபடுத்தி இருப்பார் இயக்குனர் Hoon-Jung Park. முதல் காட்சி மற்றும் கார் பார்கிங் சண்டை தவிர்த்து அதிக ரத்த வன்முறை இல்லாமல் படத்தை கொண்டு சென்றது பெரிய ஆறுதல்.  "The GodFather" படத்தின் சாயல் இல்லாமல் எந்த கேங்ஸ்டர் படமும் எடுக்க முடியாது. அல் பசினோ டான்னாக மாறும் காட்சியை அவரின் மனைவி மிரட்சியுடன் கதவின் வழியே பார்க்கும் காட்சி போன்று இதிலும் உள்ளது. 


கொரியன் கேங்ஸ்டர் படங்களின் சிறப்பே, கேங்ஸ்டர் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு தான். செம ஸ்டைலிஷாய் இருப்பார்கள். கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் சீப் அதிகாரிகள் போல் இருப்பார்கள். இந்த படத்திலும் செம காஸ்ட்யூம். அதிக வன்முறையை காட்டாமல், வசனங்கள் மூலமாய் சூழ்நிலையின் வீரியத்தை சொல்லி விடுகிறார் இயக்குனர். குறைந்த அக்ஷன் காட்சிகள் இருந்தாலும், இருக்கும் இரண்டு சண்டை காட்சிகள் ரியலிஸ்டிக்காக இருப்பது மற்றுமோர் சிறப்பு. 

இயக்குனர் Park Hoon Jeong இதற்க்கு முன்பு "I Saw the Devil" என்கிற கிரைம் படத்துக்கு திரைக்கதை எழுதியவர். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பிரமாதம். பின்னணி இசை படத்தின் டெம்போவை குறைக்காமல் கொண்டு செல்வதில் பெரும் பங்கு ஆற்றி உள்ளது. The Departed ஸ்டைல் கேங்ஸ்டர் படம் பார்க்கும் எண்ணம் இருந்தால் நீங்கள் கண்டிப்பாய் தவற விட கூடாத படம் New World.

சமிபத்தில் எழுதியது : The chaser (2008)

New World  - கொரியன் கேங்ஸ்டர் மூவி
My Rating: 7.8/10.


13 comments:

 1. தல படிக்குறப்பவே பார்க்கணும் போல இருக்கு பார்க்குறேன் பார்த்துட்டு வரேன் .... :) ;)

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல....பார்த்திட்டு நீங்களும் படத்தை பத்தி எழுதுங்க..

   Delete
 2. பார்க்கும் ஆவல் எழுந்தது... நன்றி...

  ReplyDelete
 3. டவுன்லோடு பண்ணி மூலையில கெடக்குது தல.. இனிமே தான் பாக்கனும்.. அப்பறம் எனக்கும் இந்த டான் கதைனா ரொம்ப புடிக்கும்.. குறிப்பா ஸ்கார்சசி எடுத்த அத்தனை கேங்க்ஸ்டர் படங்களும் .. சூப்பர் தல.. :)

  ReplyDelete
  Replies
  1. ஊரே கழுவி ஊத்துன பில்லா -2 எனக்கு பிடிச்சு இருந்தது. அந்த அளவு கேங்க்ஸ்டர் படங்கள் மீது வெறி எனக்கு.
   படம் கண்டிப்பா பாருங்க... :)

   Delete
 4. Small Correction, Infernal Affairs is a Honk Kong movie not Korean

  ReplyDelete
  Replies
  1. Thanks ஸாரா. It been long time i watched Infernal Affairs, hence forgot the Language. Now i have corrected the same. Thanks once again.. :)

   Delete
 5. நான் உங்களுக்கு இந்த படத்தை பற்றி கேட்டு மெயில் அனுப்பினேன்.படத்தை பற்றி பதிவே போட்டு எனக்கு பதில் சொல்லி இருக்கிறீர்கள்.
  இந்த படத்தை நேற்று இரவு பார்க்க தொடங்கி பாதி ஓடி உள்ளது இன்று இரவு மீதி பார்க்கணும் .

  ReplyDelete
  Replies
  1. போன பதிவுல "பிரதீப்" இந்த படத்தை பத்தி சொன்னார், சரியா நீங்களும் இதே படத்தை பத்தி கேட்டீங்க. செம Coincidence.
   உங்க டேஸ்ட்க்கு படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்...பார்த்திட்டு சொல்லுங்க..

   Delete
 6. I have also started to like Asian movies a lot these days.but could able to determine which movies are gud. I depend on Rajesh scorp site for that. Will see this movie too.keep sharing.

  ReplyDelete
 7. I have also started to like Asian movies a lot these days.but could able to determine which movies are gud. I depend on Rajesh scorp site for that. Will see this movie too.keep sharing.

  ReplyDelete
 8. இந்தப்படத்தை கடந்த மாதம் தான் பார்த்தேன்.. ரொம்ப நன்றாக இருந்தது.

  நீங்கள் கூறியது போல ரொம்ப ஸ்டைலிஷான படம். அதுவும் கடைசியில் பட்டாசாக இருக்கும். திடீர் திருப்பங்கள் பரபரப்பாக இருக்கும். கொரியன் டான் படங்கள் இது போலத் தான் இருக்கும்.

  எனக்கும் டான் படங்கள் என்றால் ரொம்ப விருப்பம். இதற்காகவே ராம் கோபால் படங்கள் விரும்பி பார்ப்பேன்... என் சோதனை சமீபமாக வந்த படங்கள் எல்லாமே மொக்கை படங்கள். சத்யா 2..உட்பட.

  ReplyDelete