Monday, October 07, 2013

இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா - (2013) ரொம்ப சுமாரான படம் தான் !!!

போன வாரம் சொன்னது போலவே இந்த வாரம் சான்டியாகோ தமிழ் திரைஅரங்கில் விஜய் சேதுபதியின் "இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா" ரீலீஸ் ஆனது. படம் வியாழன் அன்றே ராஜ்தமிழ் இணையத்தில் கிடைத்தாலும், தமிழ் சினிமாவை வாழ வைத்தே தீர வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் சென்று "சுமார் மூஞ்சி குமாரை" கண்டு கழித்தோம். படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் சென்றேன். ஆனாலும் படம் எனக்கு முழு திருப்தியை தர வில்லை. ஷார்ட் பிலிம் ஆக எடுக்க வேண்டிய கதையை முழு நீள திரைப்படமாக எடுத்த காரணத்தால் நிறைய காட்சிகளில் நெளிய வேண்டிய நிலைமைக்கு தள்ள பட்டேன். 


ஒரே நாளில் நடைபெறு கதை தான் இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா. இரண்டு மையின் டிராக் கதை. இரண்டு சைடு டிராக்  கதை. இந்த நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் இணைவது தான் மீதி கதை. நான்கு கதைகளில் மிக அதிகம் ஸ்கோர் செய்வது "சுமார் முஞ்சி குமார்" மற்றும் "ரொம்ப சுமார் முஞ்சி குமார்" மட்டுமே. சுமார் முஞ்சி குமரேசனாக விஜய் சேதுபதி. வாழ்ந்து இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பு தான். சரியாக சொன்னால் இவர் வரும் காட்சிகள் மட்டுமே கலகலப்பு. மற்ற முன்று டிராக்கும் என் பொறுமையை ரொம்பவே சோதித்தது. கடைசி இருபது நிமிடம் மற்றும் கிளைமாக்ஸ் மருத்துவமனை காட்சியில் இவர் அடிக்கும் லூட்டி வயிற்றை பதம் பார்க்கிறது.

விஜய் சேதுபதி அலட்டல் இல்லாத நடிப்பு வழங்கி உள்ளார்.. சூழ்நிலைக்கு ஏற்ப அற்புதமாய் டயலாக் டெலிவரி செய்கிறார். சென்னை பாஷை அனாயாசமாக வருகிறது. "பிரண்டு லவ் மேட்டர்,  பீல் ஆகிட்டாப்ல, ஆப் அடிச்சா கூல் ஆகிடுவாப்ல" என்கிற எபிக் டயலாக்கை "என்னாச்சு, கிரிக்கெட் விளையாண்டோம்" போல் திரும்ப திரும்ப சொன்னாலும் கொஞ்சம் கூட அலுக்கவே இல்ல. தியேட்டரில் இருந்த இருபது பேரும் வி.பு.சி. அதே போல் "குமுதா ஹாப்பி" என்கிற டயலாக்கும் அட்டகாசம். இவர் விழுந்து விழுந்து காதலிக்கும் குமுதா பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கிறார். மேக் ஆப் தான் ரொம்ப ஓவர். 


நடுநாசி நாய்கள், மங்காத்தா படத்தில் துக்கடா கேரக்டரில் நடித்த அஸ்வின்க்கு இந்த படத்தில் கொஞ்சம் பெரிய ரோல். சுமாராய் நடித்து உள்ளார். "குமுதம்" ஒரு பக்க கதை போல் இருக்கிறது இவர் போர்ஷன். எப்பொழுதும் திட்டி கொண்டே இருக்கும் இவர் மேனேஜர், ஒரு கட்டத்தில் உன்னோட நல்லதுக்கு தான் அப்படி செய்தேன் என்று சொல்வது, அட போங்க பாஸ், பஞ்ச தந்திர நீதி கதை போல் இருந்தது. இவர்  விழுந்து பொரண்டு காதலிக்கும் "ரொம்பவே சுமார் முஞ்சி பிகர்" சுவாதி. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சுகர் சுகர் பேஷண்ட் தாதாவாக பசுபதி, முதல் பாதியில் சுமார் முஞ்சி குமார் - குமுதா காதலுக்கு பஞ்சாயத்து செய்கிறார். இவர் வரும் காட்சிகள் காமெடி கலாட்டா.

இது போக இரண்டு கிளை கதைகள். ஒரு கள்ளக்காதல் கதை. இது தான் படத்தின் டெம்போவை அடியோடு குறைப்பது. இடைவேளை வரை இவர்கள் எபிசோடை த்ரில்லர் போல் கொண்டு போய் விட்டு, இரண்டாம் பாதியில் காமெடி கள்ளக்காதல் என்று ஏதோ ஏதோ செய்கிறார்கள். தொழில்முறை கொலைகாரன் போல் இவர்கள் திருட்டு போன்னில் பேசுவது, கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. ஆனால் போன் தொலைவது திரைகதையின் தேவை. அதை வேறு மாதிரி குடுத்து இருக்கலாம். கள்ளக்காதல் கதையில் சூரி வேறு வருகிறார். மரண மொக்கை. காலாவதியான சின்ன கலைவாணர் விவேக் போல் சத்தம் போட்டு பேசுகிறார். சத்தம் போட்டு பேசுவது எல்லாம் காமெடி இல்ல என்று இவருக்கு யாரவது சொன்னால் தேவலை. குடி குடியை கெடுக்கும் என்கிற மெசேஜில் கொஞ்சம் செண்டிமெண்ட் வேண்டும் என்று 
கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவன் கதாபாத்திரத்தை சேர்த்து இருக்கிறார் இயக்குனர்.


சும்மாவே தமிழ் படங்களில் டாஸ்மாக் காட்சிகள் கொடி கட்டி பறக்கும். இதில் குடி குடியை கெடுக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி மெசேஜ் சொல்கிறார்கள். படத்தின் எல்லோரும் எதாவாது சரக்கு அடித்து கொண்டே இருக்கிறார்கள். டாஸ்மாக் அல்லது சரக்கு இல்லாத காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இயக்குனர் "கோகுல்", ரௌத்திரம் என்கிற அக்ஷன் படத்தை எடுத்தவர். வலுவான திரைக்கதை இல்லாதனால் படம் தோற்றது. இதிலும் வலுவான திரைக்கதை அமைக்க முடியாமல் தடுமாறுகிறார். இசை ஓகே ரகம் தான். விஜய் சேதுபதி வரும் இரண்டு பாடல்கள் மட்டுமே எனக்கு பிடித்து இருந்தது. 

இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா - ரொம்ப சுமாரான படம் தான்
My Rating: 6.5/10.
சமிபத்தில் எழுதியது : ராஜா ராணி (2013)


15 comments:

 1. அப்ப டிவில போடும் போது பார்த்துக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நல்ல படமா வந்து இருக்க வேண்டியது ஜீவா.
   விஜய் சேதுபதி போர்ஷனுக்கு வேண்டி கண்டிப்பா பார்க்கலாம். :):)

   Delete
 2. இந்தப்படம் நல்ல பிரிண்ட் டவுன்லோட் பண்ணியே நாலு நாளாச்சு தல.. ஆனா இன்னும் படம் பாக்கனும்ங்கற எண்ணமே வரலை.. படம் பாத்த ஃப்ரண்ட்சும் படம் மொக்கயா போவுதுடாங்கறாய்ங்க...!! அதான் அப்டியே வுட்டு வச்சுருக்கேன்.

  நீங்க சொல்றத பாத்தா, விஜய் சேதுபதி சீன்ஸ் மட்டும் பாக்கலாம் போலருக்கே...!! பாத்துருவோம்..!!

  ReplyDelete
  Replies
  1. ஓநாயும் ஆடுகுட்டிக்கும் குடுக்க வேண்டிய பணத்தை இது மாதிரியான படத்துக்கு செலவு செஞ்சுகிட்டு இருக்கேன் தல. மனசே கேட்கல. :(:(

   Delete
 3. நான் நேற்று மதியம் தான் பார்த்தேன். ஆனால் வெள்ளிக்கிழமையிலிருந்து ஆஹா ஓஹோ என்று தங்கமீன்கள், மூடர்கூடம், ஓ.ஆட்டுகுட்டி படங்களின் வரிசையில் மீண்டும் ஒரு நல்ல் படம் என்றெல்லாம் எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆனாலேயே மிகப்பரிய எதிர்பார்ப்புடன் சென்று சிறிது ஏமாற்றத்துடனேயே வந்தேன். கடத்தலை காமெடியாக 'சூது கவ்வும்' படத்தில் சொன்னது போல, கொலை செய்ததை காமெடியாக இந்தப் படத்தில் விவரிக்கிறார்கள். கொடுமையாக இருந்தது. விஜய் சேதுபதி போர்ஸன் மட்டும் அருமை. ரௌத்திரம் அருமையான ஆக்ஷன் படமாக வந்திருக்க வேண்டியது. சொதப்பல் ஆனது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு படத்தை எடுத்தவர் இன்று காமெடி படமெடுத்து நல்ல கமெண்ட்ஸும் வாங்கியிருக்கிறார்... பார்ப்போம் தமிழ் சினிமா எங்கு செல்கிறது என்று...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல....விஜய் சேதுபதி மட்டும் இல்லாட்டி டப்பா டான்ஸ் ஆடி இருக்கும். உங்க மிஷ்கின் பதிவுக்கு வைட்டிங். சீக்கிரம் ரீலீஸ் பண்ணுங்க. :):)

   Delete
 4. இ.தா.ஆ.பா இந்த படத்த முதல் நாளே பார்த்தேன் நண்பா , ஓகே தான் விஜய் சேதுபதி வர காட்சிகள் ரொம்ப பிடிச்சிருந்தது, ஆனா மற்றபடி இன்னொரு ட்ராக் கதை செம்ம போர். அவரின் படங்களில் இது தான் சுமார் ஆனா படம் என்று பெயர் எடுத்துடுச்சி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல. எனக்கும் அதே பீல் தான். விஜய் சேதுபதி தான் படத்தை காப்பற்றி உள்ளார்.. :):)

   Delete
 5. செமையா சொல்லியிருக்கீங்க ராஜ்... எனக்கும் படம் சுமார்னுதான் தோணுது...

  ReplyDelete
  Replies
  1. வாங்க மணிமாறன். நெட்ல் நல்ல பிரிண்ட் கிடைச்சா, ஓய்வு நேரத்துல பாருங்க.. :)

   Delete
 6. தலைவா படத்தை இலவசாமா பார்த்து முடிச்சு இருந்தால், நீங்க இதை காசு கொடுத்து பார்க்கலாம்.

  அதிகமான கரக்டர்கள் லூசுத்தனமான கொமடியுடன் இருப்பது கொஞ்சம் எரிச்சலாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் நண்பா.. விஜய் சேதுபதி மட்டும் தன் பங்கை மிக சிறப்பாய் செய்து இருப்பது போல் எனக்கு தோன்றியது..

   Delete