Sunday, October 20, 2013

The chaser (2008) - சீரியல் கில்லரை துரத்தும் பிம்ப் !!

தமிழ், ஹாலிவுட் தவிர்த்து நான் மிகவும் விரும்பி பார்ப்பவை கொரியன் படங்களே. சில கொரியன் படங்கள் தரத்தில் ஹாலிவுட் படங்களையே மிஞ்சி விடும். தரம் என்று நான் இங்கு குறிப்பிடுவது தொழில்நுட்பத்தை அல்ல, தொழில்நுட்பத்தில் இவர்கள் இன்னும் அவதார், அவென்ஜர்ஸ் அளவுக்கு வளரவில்லை என்றாலும், புதுமையான கதை களம், அற்புதமான திரைக்கதை, பர பர அக்ஷன் படங்கள் குடுப்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். உலக சினிமாவில் அணைத்து ஜெனரில் இருந்தும் சிறந்த படங்களை தேர்வு செய்தால், அந்த அந்த ஜென்ரில் இருக்கும் முதல் ஐந்து படங்களில் கண்டிப்பாய் கொரியன் படங்கள் தவறாமல் இடம் பிடித்து இருக்கும். The chaser 2008 ஆம் ஆண்டு வெளிவந்த மிக சிறந்த த்ரில்லர் படம். சவுத் கொரியாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்க பட்ட படம். 


கதையின் நாயகன் "Yun-seok Kim", சந்தர்ப வசத்தால் தன் டிடெக்டிவ் வேலையை விட்டு விட்டு விபசாரத்துக்கு பெண்களை சப்பளை செய்யும் மாமா வேலை பார்க்கிறான். தொழில்க்கு அனுப்பிய அவனது இரு பெண்களை திடீரென்று மாயமாய் மறைந்து போகிறார்கள். ஒரு கஸ்டமரிடம் இருந்து அழைப்பு வர, அவனது டீமில் இருக்கும் "Mi-jin" என்கிற பெண்ணை அந்த கஸ்டமரை அட்டென்ட் செய்ய அனுப்புகிறான். "Mi-jin" க்கு எட்டு வயதில் பெண் குழந்தை வேறு இருக்கிறது. கால் வரும் நேரத்தில் அவளுக்கு உடம்பு முடியாமல் வேறு இருக்கிறது. 

Yun-seok Kim அவளை மிகவும் வற்புறுத்தி அந்த கஸ்டமரை அட்டென்ட் செய்ய சொல்கிறான். Kim ஆபீஸில் உட்கார்ந்து இருக்கும் போது தான் அந்த கஸ்டமரின் போன் நம்பரை எதேச்சையாக பார்க்கிறான். "4885" என்று முடிகிறது அந்த நம்பர். கடைசியாக காணாமல் போன அவனது இரு கால் கேர்ள்சை அழைத்த அதே நம்பர். "Mi-jin"-னை பகடை காயாய் வைத்து காணமல் போன அவனது இரண்டு பெண்களை மீட்க நினைக்கிறான். 

Mi-jin வேறு வழி இல்லாமல் "4885" கஸ்டமரின் வீட்டுக்கு செல்கிறாள். ரெஸ்ட் ரூம் சென்று அங்கிருந்து Kim க்கு அவள் இருக்கும் வீட்டின் அட்ரெசை அனுப்புவது தான் திட்டம். ரெஸ்ட் ரூமில் தன் மொபைல் போனை எடுத்தால், அதில் சிக்னல் பார் சீரோ. வெளியில் வந்தால் கையில் சுத்தியில் மற்றும் உளியுடன் "4885". Yun-seok Kim Mi-jin-னை தேடி கொண்டு அதே ஏரியாவில் வந்து சேர்கிறான். இங்கு இருந்து வேகம் பிடிக்கும் படம் இறுதி வரை பரபரப்பு குறையாமல் பயணம் செய்கிறது. Mi-jin மீட்கப்பட்டாளா ?? "4885"  யார் ?? காணமல் போன கால் கேர்ள்ஸ் என்ன ஆனார்கள் ?? போன்ற கேள்விக்கான விடைகளை "நெட்பிளிக்ஸ்" அல்லது "டோரென்ட்" உதவியை நாடி அறிந்து கொள்ளுங்கள். 


படம் சீரியல் கில்லரை பற்றியது என்று முன்பே சொல்லி விட்டேன். ஆனால் நார்மல் படங்களில் இருப்பதை விட ரத்த வன்முறை குறைவு தான். படத்தின் போஸ்டரில் "புருடல்" என்று விளம்பரத்துக்கு பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் அதித கொடூர காட்சிகளுக்கு வாய்ப்பு இருந்தும் இயக்குனர் ஏனோ அதை தவிர்த்து இருப்பார். பின்னணியில் மெல்லிய இசை தவழ, ரத்தம் தெறிக்க நடைபெறும் ஒரு கொலை காட்சியை தவிர படத்தில் கொடூர காட்சிகள் ஒன்றுமேயில்லை. அதிலும் கூட பார்வையாளனின் கற்பனைக்கே அந்த காட்சியை விட்டு விடுவது இன்னும் சிறப்பு.

Yun-seok Kim தேர்ந்த டிடெக்டிவ். அவன் ஏன் பிம்ப் ஆனான் என்பதருக்கு எந்த சோக பிளாஷ்பேக்கும் இல்லாதது பெரிய ஆறுதல். இவரது கதாபாத்திர தன்மையை ஆரம்ப காட்சிகளில் இயக்குனர் நன்றாக புரிய வைத்து விடுவார். தனது டீமில் இருக்கும் கால் கேர்ள்ஸுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உதவிக்கு ஓடி வருவதில் இருந்ததே பிம்ப் ஆக இருந்தாலும் அவனுக்கும் ஈரம் இருக்கிறது என்பது புரிந்து விடுகிறது. Mi-jin அடைக்க பட்ட வீட்டை இவர் தேடி செல்லும் ட்ரையல் செமையாக இருக்கும். கிடைக்கும் தடையங்களை வைத்து சிக்கலான முடிச்சுகள் இவர் அவிழ்க்கும் காட்சிகளில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. 


Jung-woo Ha "4885" சீரியல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர். இவருக்கும் எந்த பிளாஷ்பேக்கும் வைக்காமல், இவர் ஏன் கால் கேர்ள்சை தேடி தேடி கொல்கிறார் என்பதை ஒரு விசாரணை காட்சியில் விவரித்து இருப்பார்கள். அட்டகாசமான காட்சி அது. விசாரணை செய்பவர் Jung-woo தொடர் கொலைகளை செய்வதின் காரணத்தை விவரிக்கும் காட்சியில் இவரின் முகபாவனைகைகள் மிகவும் தந்துருபமாய் இருக்கும். இந்த பூனையும் பால் குடிக்குமா போன்ற இவரின் முகம் சீரியல் கில்லர் கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தி உள்ளது. 

Na Hong-jin என்பவரின் முதல் படைப்பு The chaser. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் அப்பட்டமாய் தெரியும். ஆனால் திரைகதையின் வேகத்தில் அந்த குறைகள் பெரிதாய் தெரியாது.  இதே படத்தை தழுவி (??!) ஹிந்தியில் மர்டர் -2 என்கிற காவியத்தை எடுத்தார்கள். நல்ல த்ரில்லர் படங்களை பார்க்க விரும்பும் யாரும் தவற விட கூடாத படம் இது. 

The chaser - செம த்ரில்லர் !!!
My Rating: 8.1/10.


24 comments:

 1. வாய்ப்பு கிடைத்தால் பார்த்துவிடனும்... நல்லா எழுதியிருக்கீங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெற்றிவேல்..

   Delete
 2. ராஜ் குமார்.

  இந்த படம் நான் பார்த்துவிட்டேன்.செம படம்.கொரியா படங்கள் மீது தற்போது என் கவனம் திரும்பி உள்ளது.மேலும் சில படங்கள் நான் பார்க்கும்படி பரிந்துரைக்க முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. பெரிய லிஸ்ட் இருக்கு விஜய்..இதுல மொத்த படமும் இருக்கு..
   TBest Korean Movies IV (CRIME / THRILLERS / HORRORS /MYSTERY)
   Yellow Sea
   Man From No wheere..இந்த ரெண்டு படமும் நான் இந்த வாரம் பார்த்தது.. நல்ல அக்ஷன் படங்கள்..

   Delete
 3. Replies
  1. பாருங்க வருண்...செம படம்..

   Delete
 4. ராஜ், நான் மர்டர் 2 பார்த்திருக்கிறேன்.. இந்தப் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்குமென தோன்றுகிறது.. கிடைத்தால் பார்க்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. நானும் "மர்டர் 2" பார்த்து இருக்கேன் ஆவி....ஆனா இந்த கொரியன் படம் செமையா இருக்கும்.. கடைசி வரைக்கும் பரபரப்பா இருக்கும்...வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா பாருங்க.

   Delete
 5. ‘சேசர்’... எனது நண்பர் விடா வறுபுறுத்தல் காரணமாகவே பார்த்தேன்.
  நன்றாகவே இருந்தது.
  இது போன்ற படங்களால் கொரிய ‘திரில்லர்’ படங்களுக்கும் இப்போது மவுசு வந்து விட்டது.
  மேக்கிங்கில் ஹாலிவுட்டுக்கு ரியல் போட்டியாளர்கள் இன்று இவர்கள்தான்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் சார்.....இவங்களோட நிறைய படங்கள் ஹாலிவுட்ல ரீமேக் ஆகி நல்லா ஓடி இருக்கு..

   Delete
 6. Raj, It may be coincidental. yesterday i saw this movie for the 4th time in netflix. njoyable. Same team followed with the yet another thriller " The Yellow Sea" which is available in netflix and amazon on demand. This time Jung-woo Ha is the hero and Kim-Yun-seok is the villain. Gripping thriller and must watch but have lot of violence. I'm a big fan of Kim-Yun-seok his movies includes The Running Turtle, The Thieves etc...

  Scenecreator, Try watching the above movies for Kim-Yun-seok...u will love him.

  Thanks,
  Stanley, USA

  ReplyDelete
  Replies
  1. Thanks,,ஸாரா.. As per ur suggestion I watched "Yellow Sea" yesterday in Netflix and i liked it very much..but Chaser was better than Yellow sea.

   Delete
 7. I too remember seeing this movie. Damn Good. Also see "Mother" another good Korean Movie.
  Also see 3 part Swedish film ( Now being remade in English) called A Girl with Dragon tatoo. I am not sure about the title. Kindly Google and fine out. But excellent films.

  ReplyDelete
  Replies
  1. நன்றி Shankar.. I will try to watch the movies recommended by you.. :):)

   Delete
 8. கொரியப் படங்கள் எப்பொழுதுமே அட்டகாசமாகத்தான் இருக்கும். இந்தப் படம் பார்த்திருக்கிறேன். முழுதாக நினைவில் இல்லை என்றாலும் நல்ல படம் என்ற வகையில் ஞாபகம் இருக்கிறேது :-)

  சமீபத்திய கொரியன் ஹாட்-பிக் THE NEW WORLD - அருமையாக இருந்தது. கேங்ஸ்டர் படம். நேரம் இருந்தால் பார்த்துவிட்டு எழுதுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல..."THE NEW WORLD" IMDBல பார்த்தேன், கண்டிப்பா பார்த்திட்டு எழுதுறேன்..

   Delete
 9. நானும் நண்பர்களின் பரிந்துரைக்கு பின்பே கொரியன் படங்களை பார்க்க தொடங்கினேன் , அதிலும் பார்க்க தொடங்கிய நேரத்தில் இந்த படத்தையே பலரும் கூறினார்கள் ,அவ்விதமே படமும் அருமையாக இருந்தது இப்பொழுது உங்களின் கருத்துகளை பார்த்த பின் அதை மீண்டும் மனத்திரையில் ஓட்ட தோன்றுகிறது. இப்படத்தையும் விஞ்சும் ஒரு கொரியன் திரைப்படம் மெமரீஸ் ஒப் மர்டர்ஸ் நிச்சயம் பார்த்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் இல்லையென்றால் பார்த்துவிடுங்கள் நண்பா.... :)

  ReplyDelete
  Replies
  1. "மெமரீஸ் ஒப் மர்டர்ஸ்" பார்த்து இருக்கேன் நண்பா..செம படம். கொரியன் படங்களில் பெரிய பெரிய லாஜிக் ஓட்டை இருக்கும். அது மட்டும் தான் எனக்கு பிடிக்காத ஒன்னு.

   Delete
 10. என்ன ஒரு ஆச்சரியம்.. கொஞ்ச நாள் முன்னாடி தான் இந்தப்படம் பாத்தேன்.. பாத்துட்டு எழுதலாம்னு நினச்சா இணையத்துல இருக்கற முக்கால்வாசி பதிவர்கள் ஆல்ரெடி எழுதி நிறைச்சு வச்சுருக்காங்க.. அப்பறம் எங்கிட்டு போயி நாம எழுதறதுனு வுட்டுட்டேன்..!!
  இப்போ நீங்களும் எழுதிட்டீங்க.. சூப்பர் தல..!!

  சூப்பர் படம் தல.. நீங்க சொன்னா மாதிரி ஹாலிவுட் படங்களையும் மிஞ்சுற வகையில தான் கொரியன் படங்கள் இருக்கும்.. இந்தப்படம் கூட சேத்து தொடர்ச்சியா Memories of Murder, I Saw The Devil ம் பாத்தேன்.. அதையும் ஆல்ரெடி இணையத்துல அடிச்சு தொவச்சி காயப்போட்டு தொங்கப் போட்டுட்டாய்ங்க.. அதையும் பாத்துருங்க தல..!!

  ReplyDelete
  Replies
  1. இல்ல தல, இந்த படத்தை பத்தி ஜாக்கி மட்டும் தான் எழுதி இருந்தார். ஏதோ கில்மா படம் மாதிரி எழுதி இருந்தார். அடுத்தவங்களை பத்தி வோரி பண்ணாம உங்க ஸ்டைல்ல நீங்க எழுதுங்க தல..
   படத்தோட பேரு + விமர்சனம் ன்னு கூகிள்ல தேடி பாருங்க, யாரு தமிழ் ரிவியூ எழுதி இருக்காங்கன்னு தெரிஞ்சிடும்... :):)

   Delete
 11. செம பார்வை ராஜ் . நிறைய கொரிய படங்களைப் பற்றி எழுதுறீங்க . மூடர் கூடம் கொரிய படத்தின் தழுவல் என்று கண்டுபிடித்து இணையத்தில் முதலில் எழுதியது நீங்கள்தான் என நினைக்கிறேன் . நீங்கள் சொல்வதுபோல் அவர்களின் கதை களமும் திரைக்கதை யுத்தியும் உலக தரத்தில் இருப்பதால்தான் நம்மவர்கள் அதை காப்பி அடிக்கிறார்கள் என நினைக்கிறேன் . கொரிய படங்கள் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் .

  ReplyDelete
 12. endha website la download pananum thedi paathen mudila

  ReplyDelete