Sunday, October 13, 2013

வணக்கம் சென்னை - (2013) மொன்னை காமெடி

சாண்டியாகோவில் இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் ரீலீஸ் செய்ய பட்டது. மொத்தம் முன்று காட்சிகள், வெள்ளி மற்றும் சனி இரவு காட்சியாக "நய்யாண்டி" படமும் ஞாயிறு பகல் காட்சி "வணக்கம் சென்னை" போடுவதாய் "SD Talkies" ஸில் விளம்பரம் செய்ய பட்டது. வெள்ளி இரவு ஒரே காட்சியில் "நய்யாண்டி" படுமோசமாய் ஊத்தி கொள்ள, சனி மற்றும் ஞாயிறு காட்சிகள் "வணக்கம் சென்னை" திரையிடப்பட்டது. தமிழ் சினிமாவை வாழ வைக்கும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாக திரையரங்கு சென்று இந்த மகா காவியத்தை கண்டு ரசித்தோம். ககலைஞர் குடும்பத்தில் எனக்கு பிடித்த நபரான உதயநிதியின் துணைவி கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் முதல் படம். உலக சினிமாவை எதிர்பார்க்காமல் டைம் பாஸாக மட்டும் இருந்தால் போதும் என்கிற எண்ணத்திலே தியேட்டரில் நுழைந்தோம். இறுதியில் எங்கள் எண்ணம் நிறைவேறியது என்றே சொல்லலாம்.


அஜய் (மிர்ச்சி சிவா) ஐடி வேலை கிடைத்து சென்னைக்கு வருகிறார். அஞ்சலி (ப்ரியா ஆனந்து) தென்னிந்திய கலாச்சாரத்தை படமெடுக்க புகைப்பட கலைஞராக லண்டனில் இருந்து சென்னைக்கு வருகிறார். சந்தர்ப்ப வசத்தால் இருவரும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை எற்படுகிறார். அஞ்சலி ஏற்கனவே லண்டன் மாப்பிள்ளை ஒருவருக்கு நிச்சயம் செய்ய பட்டவர். ஆரம்பம் முதலே இருவருக்கு ஒத்து போக மாட்டேன் என்கிறது. எலியும் பூனையும்போல போல் இருந்த இருவரும் எப்படி வாழ்கையில் (!!)  இணைகிறார்கள் என்பதை ஜிவ்வ்வ்வ்வு போன்று இழுத்து சொல்லி இருக்கிறார்கள்.

மிர்ச்சி சிவா வழக்கம் போல் நடித்து இருக்கிறார். "தமிழ் படத்தில்" அவரின் நோ எக்ஸ்பிரஷன் முகம் ஒத்து போனது என்பதற்காக எல்லா படத்திலும் அதே போன்று நோ எக்ஸ்பிரஷன் தான் காட்டுவேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது. சில இடங்களில் "குமுதம்" புக்கில் வரும் ஜோக்ஸ் போன்று மொக்கை போடுகிறார். சில காட்சிகள் "ஆனந்த விகடன்" புக் ஜோக்ஸ் போன்று ஸ்மைல் பண்ண கூடிய டயலாக்ஸ் சொல்கிறார். ரொமாண்டிக் காட்சிக்கும் இவருக்கும் வெகு தூரம் என்று மறுபடியும் நிருபித்து உள்ளார். டான்ஸா, அப்படினா என்னவென்று பாடல் காட்சிகள் நாம் தேட வேண்டியுள்ளது. வேறு நல்ல இளம் நடிகரை போட்டு இருந்தால் படம் கொஞ்சம் நல்லா வந்து இருக்கும். சிவாவை இந்த படத்திருக்கு செலக்ட் செய்த காரணத்தை எப்படி யோசித்தும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.


ப்ரியா ஆனந்து லண்டன் வாழ் பெண்ணாய் வந்து செல்கிறார். தேங்காய் எண்ணை  மாடல் போல் முகம் முழுக்க எண்ணையை தடவி கொண்டு திரிகிறார். சோகக் காட்சிகளில் கோபமாய் முகத்தை வைத்து, கோபமான காட்சிகளில் சோகமாய் முகத்தை வைத்து நடிப்பில் புதிய பாணியை கண்டுபிடிக்க முயற்சி செய்து இருக்கிறார். எத்தனையோ மொக்கை பீஸ்களை பார்த்த தமிழ் சமுகம் இவருக்கு இன்னும் இரண்டு வாய்ப்பு குடுக்காமலா போய் விடும். கண்டிப்பாய் குடுக்கும். இன்னும் இரண்டு படங்களில் இவர் நடித்தால் தமிழ் சினிமா எங்கோ சென்றுவிடும்.

சந்தானம் வீடு புரோக்கராக வருகிறார். இடைவேளைக்கு சிறிது முன்பு தான் இவரின் என்ட்ரி. படத்தின் இரண்டாம் பாதியில் சந்தானம் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பு தான். வழக்கம் போல் நாயகன் நாயகியை சேர்த்து வைத்து "ப்ரோ" வேலையை செய்கிறார். ஏழு காட்சிகள் இவருக்கு என்றால், அதில் ஆறு காட்சிகளில் சரக்கு அடித்து கொண்டே தான் இருக்கிறார். இவரின் டாஸ்மாக் காமெடிகள் ரொம்பவே புளித்து போய் விட்டது. சீக்கிரம் வேற ஜெனருக்கு மாறுங்க பாஸ். 


தமிழ் சினிமா அக்மார்க் லண்டன் மாப்பிள்ளையாக "ராகுல் ரவீந்திரன்". வந்து பல்ப் வாங்கி செல்கிறார். நிழல்கள் ரவி, ஊர்வசி, ரேணுகா ஆகியோர்கள் வந்து செல்கிறார்கள். அறிமுக இயக்குனர் கிருத்திகா உதயநிதி கணவருக்கு அதிகம் செலவு வைக்காமல் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் படத்தை முடித்து உள்ளார். சந்தானம், சிவா இருந்தும் டபுள் மீனிங் ஆபாச வசனங்கள் இல்லாதது இயக்குனரின் காரணத்தில் தான் என்பது நன்றாகவே தெரிகிறது. காஸ்டியூம் மற்றும் லைட்டிங்கில் இவரின் ரசனை நமக்கு தெரிந்து விடுகிறது. 

 ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். எங்கள் மாவட்டத்தை மிக அழகாய் படம் பிடித்து இருந்தார். வெஸ்டர்ன் ஆல்பத்தில் இருந்து இசையை சுட்டு நமக்கு வழங்கி உள்ளார் அனிருத். பிரபல பாடல்களை சுடாமல் அதிக பிரபலம் இல்லாத பாடல்களில் இருந்து சுட்டு தன் திறமையை நிருபித்து உள்ளார். இத்தனை குறைகள் இருந்தும் படம் தேறி விடும் என்றே தான் எனக்கு படுகிறது. காரணம் "நய்யாண்டி" மட்டுமே. 

வணக்கம் சென்னை - மொன்னை காமெடி 
My Rating: 6.0/10.


10 comments:

 1. தல, என் ஃப்ரண்டு ஒருத்தன் படம் பாத்துட்டு வந்து போட்ட ஸ்டேட்டஸ் இது "The worst movie i have ever seen in theatre is 'Vanakkam chennai' "..!!

  நீங்க என்னா தல கடந்த ரெண்டு, மூனு மாசமா இந்த மாதிரி படத்துக்கா போயிட்டு வந்து எயுதுறீங்க.. ஹாலிவுட்ல இருந்துகிட்டு தமிழ்படத்துக்கா எயுதுறீங்க.. இப்போ என்னமோ க்ராவிட்டினு ஒரு படம் வந்து சக்கைப்போடு போடுதாமே.. அதப்பத்தி எயுதுங்க தல..!! இன்னிக்கி காலைல கூட கருனானிதி அர்ஜித் இந்தப்படத்தை பத்தி எயுதி இருக்காரு.. !!

  ஆனாலும் படம் மொக்கைனு தெரிஞ்சே போயிருக்கீங்களே.. உங்க மனதைரியமே தைரியம் தல.. :)

  ReplyDelete
  Replies
  1. எந்த தமிழ் படம் வந்தாலும் போய் பார்கிறது எங்க கொள்கை தல.. எவ்வளவு மொக்கையா இருந்தாலும் பார்த்து தமிழ் சினிமாவை வளர்க்காம விட மாட்டோம். :):):)

   Delete
 2. இதே போல் தொடர்ந்தால் சிவாவிற்கு வாய்ப்புகள் கிடைப்பது சிரமம் தான்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன். மீடியம் பட்ஜெட் படங்களில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கத்தான் செய்யும்..

   Delete
 3. தல இந்த படத்த மொதோனாலே பார்த்துட்டு ரெம்ப சங்கட பட்டேன் , என்ன பண்றது ஒரு சில சீன் ஓகே தான்பா ஆனாலும் அனிருத் பின்னணி இசை நல்லாவே இருந்துச்சு பாட்டைவிட. முதல் படமா இயக்குனருக்கு ஓகே ஆனா சிவா ??? எப்படி தான் தேற போறாரோ ???? நன்றி :) :)

  ReplyDelete
  Replies
  1. சில காட்சிகள் ஓகே தல... ஓவர் ஆல் படம் எனக்கு திருப்தி இல்ல. கிளைமாக்ஸ் செம இழுவை..

   Delete
 4. படம் தேறிவிடுமா....பரவாயில்லை ஒரு பெண் இயக்குனர் என்கிற வகையில் பாராட்டித்தான் ஆகவேண்டும்... உங்கள் பார்வையும் நடுநிலையாகத்தான் இருக்கிறது ராஜ்.. இதற்கு வரிவிலக்கு கிடைக்கவில்லையாமே..

  ReplyDelete
  Replies
  1. வாங்க Manimaran. தமிழ் நாட்டுல இது மாதிரி மொக்கை காமெடி படங்கள் தான் ஓடுது. வ.வா.ச, தேசிங்கு ராஜா போன்ற மொன்னை காமெடி படங்கள் நல்லா வசூல் செய்வதா செய்தி படிச்சேன். அதே போல் இதுவும் தேறிவிடும் என்றே நான் நினைக்கிறன். அது போக நய்யாண்டி படமும் ஒரு காரணம்.
   உதயநிதியின் படம் என்பதால் வரி விலக்கு இல்லை. வரிவிலக்கு கிடைத்தால் தான் ஆச்சிரியம். :):)

   Delete
 5. // வேறு நல்ல இளம் நடிகரை போட்டு இருந்தால் படம் கொஞ்சம் நல்லா வந்து இருக்கும்.//

  ஆமா, அதே போல நய்யாண்டி படத்துல தனுஷுக்கு பதிலா மிர்ச்சி சிவா நடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னு ஒரு நண்பர் பீல் பண்ணி சொன்னார்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆவி. நய்யாண்டி திரைக்கதைக்கு "டிகாப்ரியோ" நடிச்சாலும் ஓடி இருக்காது. :):)

   Delete