Friday, November 23, 2012

The Attacks Of 26/11(2012) - 7 நிமிட முன்னோட்டம்

எனக்கு மிகவும் பிடித்த பாலிவுட் டைரக்டர் "ராம் கோபால் வர்மா"  மும்பை 26/11 தாக்குதல்களை மைய படுத்தி "The Attacks Of 26/11" என்கிற பெயரில் ஒரு திரைபடத்தை எடுத்து உள்ளார். படத்தின் ட்ரைலரை வெளியிடாமல், படத்தின் முதல் 7 நிமிட காட்சிகள் வெளியிட்டு உள்ளார். யூ ட்யூப் வீடியோ காண கிடைக்கிறது. ராம் கோபால் வச்சா குடுமி, செரச்சா மொட்டை என்கிற ரீதியில் படம் எடுப்பார். அவரின் ஒன்று படம் செம கிளாஸ் ஆக இருக்கும் உ.தா (சர்க்கார்-1, உதயா, ரத்தசரித்திரம்-1) , இல்லை படு மொக்கையாக யாருமே பார்க்க முடியாத படி இருக்கும் (ஷோலே ரீமேக் ஆக்). The Attacks Of 26/11 எந்த மாதிரியான படம் என்பதை 7 நிமிட முன்னோட காட்சிகளை கொண்டு என்னால் யூகிக்க முடியவில்லை.

நானா பட்டேகர் மும்பை தாக்குதல்களை விவரிக்கும் படி படம் ஆரம்பிக்கிறது. இந்திய படகு ஒன்று வழி தவறி பாகிஸ்தான் கடல் எல்லையில் நுழைந்து விடுவது போன்ற காட்சி ஒன்று வருகிறது. அங்கு உதவி கேட்டு ஒரு பாகிஸ்தான் படகு இந்திய படகை நோக்கி வருகிறது. அந்த பாகிஸ்தான் படகில்  இருந்தது 11 தீவிரவாதிகள் இந்திய படகில் நுழைவது போன்ற ஒரு காட்சி,அத்துடன் வீடியோ முடிவடைகிறது. தீவிரவாதிகளில் கடைசியாக இந்திய படகில் நுழைபவன் அஜ்மல் கசாப். "சஞ்சீவ் ஜெய்ஸ்வால்" என்கிற டெல்லியை சேர்ந்த டிவி நடிகர் ஒருவர் கசாப் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து உள்ளார். ஹாலிவுட் போன்றே இந்தியாவிலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் வருவது நிச்சியம் வரவேற்க்க தக்க விஷயமே. படம் அடுத்த மாதம் ரிலீஸ். படத்தை காண மிகவும் ஆவலாய் இருக்கிறேன்.

ட்ரைலர் காண: 



12 comments:

  1. இன்னும் டிரைலர் பார்க்கவில்லை.
    எனக்கும் அவரை பிடிக்கும்.
    பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கிருஷ்ணா, ஏனா இந்த முன்னோட்டம் என்னை ரொம்பவே கவர்ந்தது விட்டது..

      Delete
  2. சரியான நேரத்தில்தான் படம் வெளியாகிறது.

    ReplyDelete
  3. பார்க்கிறேன் நண்பரே...

    நன்றி...
    tm3

    ReplyDelete
  4. ராம் கோபால் வர்மா படம் இது வரைக்கும் பார்த்து இல்ல... நல்ல இயக்குனர் ன்னு சொல்லி இருக்காங்க... ஆனா நான் பட்ட படம் எல்லாமே படு பிளப்... ரத்த சரித்திரம் உட்பட... இந்தக் கதை அம்சம் நல்லா இருக்கு பார்க்கலாம்... முதல் ஷோ பார்க்கணும் போல் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. மச்சி, RGV யின் 80% படங்கள் அட்டர் ப்ளாப்..ஆனால் பாலிவுட்டின் தவிர்க்க முடியாதா டைரக்டர்... :):):)

      Delete
  5. மேலும் இல்லமால் புது முயற்சி அருமை

    ReplyDelete
  6. @@ ராம் கோபால் வச்சா குடுமி, செரச்சா மொட்டை என்கிற ரீதியில் படம் எடுப்பார். அவரின் ஒன்று படம் செம கிளாஸ் ஆக இருக்கும் உ.தா (சர்க்கார்-1, உதயா, ரத்தசரித்திரம்-1) , இல்லை படு மொக்கையாக யாருமே பார்க்க முடியாத படி இருக்கும் (ஷோலே ரீமேக் ஆக்) @@

    ரொம்பவும் உண்மை..அவரது படங்கள் பிடிக்கும் நண்பா..ஆனால், சில நேரத்துல ஏன்-தான் இந்த படம் பண்ணாரு சொல்ற அளவுக்கு இருக்கும்.
    இன்னும் வீடியோ பார்க்கல.கொஞ்சம் நேரம் போக பார்க்கிறேன்.தொடருங்கள்..நன்றி

    ReplyDelete
  7. இன்னும் ட்ரைலரை பார்க்கவில்லை நண்பா.. கசாப் இறந்ததிற்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்தார்கள் இந்தியர்கள்... சரியான நேரத்தில் தான் படம் வருதிறது போல...

    ReplyDelete
  8. RGV படங்கள்மேல அவ்வளவு இன்ட்ரஸ்ட் இருந்ததில்லை.. ரத்த சரித்திரம்-1 பிடிச்சிருந்தது. எதுக்கும் நீங்க பார்த்து விமர்சனம் எழுதினதுக்கப்புறம் தான் டிசைட் பண்ணனும்!

    ReplyDelete
  9. I like RGV's Movies like sathya, Company & Rakth Charithra. Thanks for Sharing Raj.

    ReplyDelete