Wednesday, July 18, 2012

The Dark Knight Rises- ஜோக்கர் -பாகம்-2

நோலன் பேட்மேன் சீரீசில் எடுத்த இரண்டாவது படம் The Dark Knight (2008). இந்த முறை நோலன் தன் பேட்மேன் படத்திருக்கு தேர்வு செய்த வில்லன் ஜோக்கர். காமிக்ஸ் படித்த அனைவருக்கும் தெரியும், ஜோக்கர் தான் பேட்மேன் வில்லன்களிலே மிகவும் முக்கியமான வில்லன் என்று. அதுவும் இல்லாமல் அதி புத்திசாலி வேறு. பேட்மேன் ஜோக்கரை பிடிக்க ஒரு மூவ் அல்லது பிளான் A தயார் செய்தால், ஜோக்கர் அதை முறியடிக்க  16 மூவ் மற்றும் பிளான் A, B, C, D என்று பல பிளான் தயார் செய்து வைத்து இருப்பான். பிளான் A தோல்வி அடைந்தால் பிளான் B, அதுவும் போச்சு என்றால் பிளான் C. இப்படியாக  பேட்மேனை கவிழ்க வரிசையாக பல ஐடியாகளை எப்பொழுதும் தயாராகவே வைத்து இருக்கும் கதாபாத்திரம் தான் ஜோக்கர்.
அளவுக்கு அதிகமான கிறுக்குத்தனம், எதிரியை உளவியல் ரீதியாக பயமுறுத்தி கொலை செய்வது, பணத்தின் மீது துளியும் ஈடுபாடு இல்லாதது போன்றவை ஜோக்கரில் சில பண்புகள். பேட்மேனை தன்னால் மட்டுமே விழத்த முடியும் என்ற அசாத்திய நம்பிக்கை ஜோக்கர்க்கு உண்டு. இந்த மாதிரியான உளவியல் கதாபதிரங்களை     செதுக்கி திரையில் கொண்டு வருவது என்றால் நோலன்க்கு அல்வா சாப்பிடுவது போல். மனுஷன் பின்னி விடுவார். பேட்மேன் சீரீஸ் தவிர்த்து நோலன் எடுத்த அணைத்து படங்களும் உளவியல் சம்பந்த பட்ட படங்கள் தான். 15 நிமிடங்களுக்கு மேல எதையும் ஞாபகம் வைத்து கொள்ள முடியாத Memento, தூங்க முடியாமல் அவதி படும் Insomania, மாஜிக் கலைஞர்களின்  ரகசியங்களை சொன்ன The Prestige போன்ற பல உளவியல் படங்களை நோலன் எடுத்து இருந்தார்.
இப்படியாக உளவியல் படங்களை எடுப்பதில் வல்லவரான நோலன் ஜோக்கர் கேரக்டர்ரை பெரிய திரையில் எப்படி கொண்டு வர போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இதற்கு முன்பு வந்த Batman Begins வெற்றியும் The Dark Knight (2008) படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தன. ஆனால் நோலன் அனைவரின் எதிர்பார்ப்பையும் தனது ஜோக்கர் கதாபாத்திரம் முலம் தகர்த்து எறிந்து விட்டார். இது வரை வந்த அணைத்து சூப்பர் ஹீரோ படங்களில்…. ஏன் இனி மேல வர போகும் அணைத்து சூப்பர் ஹீரோ படத்தின் வில்லனாலும் நோலனின் ஜோக்கர் கதாபாத்திர படைப்பின் அருகில் கூட வர முடியாது. இப்படி பட்ட சிறப்பு மிக்க ஜோக்கர் கதாபாத்திரத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர் ஹீத் லெட்ஜர் (Heath Ledger).  The Dark Knight படத்தில் லெட்ஜர்  சும்மா அதகளம் பண்ணி இருப்பார். முகபாவத்தில் மட்டுமன்றி, உடலிலின் ஒவ்வொரு அங்கத்தினாலும் ஜோக்கருக்கு உயிரூட்டியிருபார் லெட்ஜர் .

The Dark Knight  படத்தில் முதல் காட்சி ஒரு வங்கி கொள்ளையில் ஆரம்பிக்கும். ஜோக்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மொத்தம் ஐந்து பேர் சேர்ந்து அந்த கொள்ளையை நடத்துவார்கள். அனைவரும் மாஸ்க் அணிந்து இருப்பார்கள். பார்பவர்களுக்கு யார் ஜோக்கர் என்றே தெரியாது. கொள்ளை முயற்சி நடக்க நடக்க...ஒவொருவராய் மற்றவர்களை கொலை செய்து கொண்டே வருவார்கள். அணைத்து கொலைகளும் சரியான டைமிங்கில் நடக்கும். கடைசியில் மிஞ்சி இருப்பது மாஸ்க் அணிந்த ஒரே ஆள் தான். எல்லாம் முடிந்த பிறகு கடைசியில் அந்த ஆள் மாஸ்கை கழற்றுவான், அவன் தான் தி ஜோக்கர். அந்த வங்கி கொள்ளை காட்சியிலே நமக்கு தெரிந்து விடும், இது சாதாரண படம் கிடையாது... ஜோக்கரும் சாதாரண வில்லன் கிடையாது என்று.
அடுத்து ஜோக்கர் இந்த படத்தில் பேசும் வசனங்கள். இவர் பேச ஆரம்பதாலே நமக்கு திகில் பரவ ஆரம்பிக்கும்.  ஒரு இடத்தில கூட ரத்தத்தை காட்டி இருக்க மாட்டார் நோலன். ஆனால் படத்தில் மொத்தம் 36 கொலைகள் நடக்கும். அதில் பாதிக்கும் மேல் ஜோக்கர் செய்வது தான்.

ஒரு காட்சியில் பென்சிலை மறைய வைக்கிறேன் பார் என சொல்லி கொண்டே பென்சிலை மறைய வைக்கும் அதிரடியிலாகட்டும், கிறிஸ்டியன் பேல் விருந்தில் நடுவே  புகுந்து " Good evening, ladies and gentlemen. We are tonight's entertainment! " என்று படு ஸ்டைலாக வசனம் பேசியபடி ஹீரோயினை மிரட்டு அந்த காட்சி ஆகட்டும், ஹீரோயினை  அந்தரத்தில் தொங்க விட்டு விட்டு பேட் மேனிடம் “Ooh, very poor choice of words”  என்று சொல்லி பேட்மேன் காதலியை அப்படியே விட்டு விடுவது ஆகட்டும், பேட்மேன் தனது மாஸ்க்கை கழற்ற வேண்டி ஜோக்கர் செய்யும் அட்டகாசங்கள் ஆகட்டும், பேட்மேனிடம் மாட்டிய பிறகு அந்த விசாரணை அறையில் பேசும் வசனங்கள் ஆகட்டும், மருத்துவமனையுள் புகுந்து அதை வெடிக்க செய்வது என்று லெட்ஜர் பின்னி எடுத்து இருப்பார்.
இந்த படத்தை நான் ஹைதராபாத் IMAX யில் தியேட்டரில் பார்த்தேன். நான் IMAXயில் பார்த்த முதல் படம் இது தான். அந்த அனுபவம் மறக்கவே முடியாத அனுபவம். ஒரு காட்சியில் நோலன் ஹாங்காங் நகரை வானில் இருந்து காட்டி இருப்பார். அதை பார்க்கும் போது நாமும் அந்தரத்தில் மிதப்பது போன்று இருக்கும். சுருக்க சொன்னால் Gaint Wheel –லில் மேலே இருந்து கீழே வரும் போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்று இருக்கும், அதே போன்ற அனுபவம் இந்த படத்தை IMAX யில் பார்க்கும் போது எனக்கு கிட்டியது.
Heath Ledger

எனக்கு பேட் மேன் கிறிஸ்டியன் பேலின் நடிப்பை விட ஜோக்கராய் நடித்த லெட்ஜர் நடிப்பு மிகவும் பிடித்து இருந்தது. இந்த படத்திற்கு தயார் செய்வதற்க்காக லெட்ஜர் தினமும் 15 மணி நேரம் தனியே ஹோட்டல் அறையில் பூட்டி கொண்டு பயற்சி செய்தாராம். படம் வெளி வருவதற்க்கு முன்று மாதங்கள் முன்பு அதிகமான டோஸ் கொண்ட மாத்திரைகளை எடுத்து காரணத்தால் இறந்து விட்டார். இந்த மாபெரும் நடிகர் The Dark Knight படத்திற்காக உயரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்றார்.
Let his Soul Rest in Peace....


24 comments:

  1. நல்ல விமர்சனம்... சுவாரஸ்யமாக இருந்தது...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 1)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //பேட் மேன் கிறிஸ்டியன் பேலின் நடிப்பை விட ஜோக்கராய் நடித்த லெட்ஜர் நடிப்பு மிகவும் பிடித்து இருந்தது//

    SAME FEELING (T.M.3)

    நேற்று தான் நண்பா த.ம. என்றா என்ன என்று அர்த்தம் தெரியும்.. ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. விடுங்க ஹாரி... இப்பவாச்சும் தெரிஞ்சதே... :)

      Delete
  4. இந்த படத்திலேயே ஜோக்கரைப் பற்றி பேசும்போது, ப்ரூஸ் வெய்ன்'னோட பணியாளர் ஆல்ப்ஃரெட் ஒரு சின்ன கதையை சொல்வார். வியட்நாம் சண்டையின் போது ரத்தினக் கற்கள் திருட்டு போய்விடுவதும்,அதனை ஆறு மாதங்கள் தேடியும் கிடைக்காமல் நொந்து விடுவார்கள் ஆல்ப்ரெட்'டின் சகாக்கள். ஏனென்றால் அவர்கள் தேடியது வழக்காமா இடங்களில் (திருட்டு பொருளை வாங்குபவர்கள், கள்ள மார்க்கெட் பேர்வழிகள், இத்யாதி, இத்யாதி). ஆனால் அந்த இரத்தினக் கல்லை திருடியவன் அதை ஒரு ஜாலிக்காக திருடியவன் என்பதால் அந்த இரத்தினக் கற்களை ஒரு குக்கிராமத்தில் இருக்கும் சிறுவர்களிடம் விளையாடக் கொடுத்திருப்பான்.

    இந்த மாதிரி ஒரு மோட்டிவ் இல்லாமல் செயல்படுபவனை / அவனுடைய சிந்தனைகளை கணிப்பது மிகவும் சிரமம் என்று சொல்வார். இதுதான் ஜோக்கரின் கேரக்டர்.

    BTW,
    அட்டகாசமான பதிவு.

    ReplyDelete
  5. (இந்த படத்திலேயே) ஜோக்கரைப் பற்றி பேசும்போது, ப்ரூஸ் வெய்ன்'னோட பணியாளர் ஆல்ப்ஃரெட் ஒரு சின்ன கதையை சொல்வார். வியட்நாம் சண்டையின் போது ரத்தினக் கற்கள் திருட்டு போய்விடுவதும்,ஆல்ப்ரெட்'டின் சகாக்கள்அதனை ஆறு மாதங்கள் தேடியும் கிடைக்காமல் நொந்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தேடியது வழக்காமான இடங்களில் (திருட்டு பொருளை வாங்குபவர்கள், கள்ள மார்க்கெட் பேர்வழிகள், இத்யாதி, இத்யாதி Based On Logic). ஆனால் அந்த இரத்தினக் கல்லை திருடியவன் அதை ஒரு ஜாலிக்காக திருடியவன் என்பதால் அந்த இரத்தினக் கற்களை ஒரு குக்கிராமத்தில் இருக்கும் சிறுவர்களிடம் விளையாடக் கொடுத்திருப்பான்.

    இந்த மாதிரி ஒரு மோட்டிவ் இல்லாமல் செயல்படுபவனை / அவனுடைய சிந்தனைகளை கணிப்பது மிகவும் சிரமம் என்று சொல்வார். இதுதான் ஜோக்கரின் கேரக்டர்.

    BTW, அட்டகாசமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி King Viswa....
      ஆல்ப்ஃரெட் சொல்லும் கதை அப்படியே ஜோக்கரை பிரதிபலிக்கும்.....
      ஒரு காட்சியில் பேட்மேன் "why do you want to kill me?" என்று கேட்பார்..அதற்கு ஜோக்கர் சொல்லும் பதில் "I don't, I don't want to kill you! What would I do without you? you... complete me. " செம பதில்...ரொம்பவே வியந்தேன்...ஜோக்கர் கதாபாத்திரத்தை பார்த்து... :)

      Delete
  6. ஊரெல்லாம் பேட்மேன் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது... வெள்ளிக்கிழமை டிக்கெட் கிடைக்காமல் சனி காலை தான் புக் செய்திருக்கிறேன். IMAXல் பார்க்கும் வரம் கிடைக்கவில்லை. அதனால் எங்கள் பெங்களூர் IMAXஆன ஊர்வசியில் பார்க்கப் போகிறேன்... நீங்க டிக்கெட் போட்டாச்சா?

    ReplyDelete
    Replies
    1. நான் நாளைக்கு (Friday) காலையில CINEMAX தியேட்டர்ல ரெண்டு டிக்கெட் போட்டு இருக்கேன் தல....
      சாதா தியேட்டர் தான்...அடுத்த வாரம் சனிக்கிழமை தான் IMAX கடைசி ரோ டிக்கெட் கிடைச்சது...போட்டு இருக்கேன்...
      படம் ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்தா, வீக் டேல கூட ரெண்டு வாட்டி போலாம்னு இருக்கேன்.... :)

      Delete
  7. ஜோக்கரை வில்லன் ஆக்கிவிட்டீர்களே நண்பா

    //இப்படியாக பேட்மேனை கவிழ்க வரிசையாக பல ஐடியாகளை எப்பொழுதும் தயாராகவே வைத்து இருக்கும் கதாபாத்திரம் தான் ஜோக்கர்.// ரொம்ப நல்ல இருக்கு. கணிதப்ப பாகனும் போல இருக்கு. இது போன்ற கதை அம்சம் கொண்ட படங்கள் என்னக்கு ரொம்ப பிடிக்கும் தல

    //15 நிமிடங்களுக்கு மேல எதையும் ஞாபகம் வைத்து கொள்ள முடியாத Memento, தூங்க முடியாமல் அவதி படும் Insomania, மாஜிக் கலைஞர்களின் ரகசியங்களை சொன்ன The Prestige போன்ற பல உளவியல் படங்களை நோலன் எடுத்து இருந்தார்.// விமர்சனம் மட்டும் சொல்லாமல் பல அறிய புதிய தகவல்களை அள்ளி வீசுகிறீர்கள் நண்பா சூப்பர்.

    INCEPTION கூட கொஞ்சம் அப்படித் தானே நண்பா

    மொத்தத்தில் அருமை நண்பா.... உங்கள் எழுத்தின் வேகம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்வது குறிபிடத்தக்கது... த ம 4

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு....
      அப்புறம் ஜோக்கர் எப்பவுமே வில்லன் தான்.... :)

      Delete
  8. Joker பேசும் எனக்கு பிடித்த ஒரு டயலாக்..
    if u r good at something .. never do it for free

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் தான் தல....

      Delete
  9. எனக்கு Heath Ledger நடித்த 10 things i hate about you படமும் மிகவும் பிடிக்கும் .
    அருமையான நடிகர்...

    ReplyDelete
    Replies
    1. நான் Ledger நடிச்ச வேற எந்த படமும் பார்த்தது இல்லை நண்பா.....
      வருகைக்கு மிக்க நன்றி.... :)

      Delete
  10. என்னாது ஹீத் லெஜர் இறந்துட்டாரா? இன்னிக்கு தான் இந்த நியுஸ் தெரியும். :( :( :(

    நாளை மறுநாளுடன் இந்த பில்டப் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துரும். ஸ்ஸ்ஸபா.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இந்த பில்ட் ஆப் குறைய ஒரு வாரம் ஆகும்.....
      எந்த டிவிய போட்டாலும் பேட் மேன் தான்... :)

      Delete
  11. படத்தை பற்றி சொல்லும் முன் நிறைய சுவாரஸ்ய தகவல்கள் சொல்கிறீர்கள்
    //ஒரு இடத்தில கூட ரத்தத்தை காட்டி இருக்க மாட்டார் நோலன். ஆனால் படத்தில் மொத்தம் 36 கொலைகள் நடக்கும்//

    ஹும் நம்ம தமிழ் படங்களும் தான் இருக்குதே

    ReplyDelete
    Replies
    1. தமிழ்லிலும் சில நல்ல படங்கள் வர தான் செய்கிறது சார்....
      வருகைக்கு மிக்க நன்றி.. :)

      Delete
  12. ஜோக்கர் (லெட்ஜர்) விட்ட இடத்தை நிரப்புவது கடினம்.. இருந்தாலும் எனக்கு டாம் ஹார்டி தனது பாணியில் கிட்டத்தட்ட லெட்ஜரை மேட்ச் பண்ணி விடுவார் என்று நம்பிக்கை உண்டு!

    ReplyDelete
  13. நானும் அதை தான் எதிர்பார்கிறேன் நண்பா...
    பேட்மேன் பேல் மேல எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லை...வில்லன் ஹார்டி மேல தான் எனக்கு ரொம்ப எதிர்பார்ப்பு...

    ReplyDelete
  14. என்ன இறந்து விட்டாரா மிக சிறந்த நடிகர்...என் அந்த படத்திற்கு பிறகு ஒரு படத்திலும் நடிக்கவில்லை என நினைத்தேன் ரொம்ப வேதனையாய் இருக்கு சிறந்த வில்லன்...அவர் தன்னோட வாய் அருபட்டதிற்கு ஒவ்வொரு முறையும் ஒரு கதை சொல்லுவார் அது எனக்கு ரொம்ப பிடிக்கும்...தொன தொனவென்று பேசியே கொன்றுவிடுவார்...பேட்மேன் அடிக்க அடிக்க சிரிப்பார் பாருங்க செம்ம...பேட்மேன் ரொம்ப கடுப்பு ஏற்றியவர் இவர் தான்...

    ReplyDelete
  15. ஜோக்கரை பற்றி நீங்கள் விவரித்து அருமை.
    படத்தில் 36 கொலைகள் காட்டி அதில் பதிக்கு மேல் ஜோகர் செய்திருக்கிறார் என்பது புது தகவல்.

    ReplyDelete