ஆக்ஷ்ன், காமெடி, காதல், செண்டிமெண்ட்ன்னு சினிமாவுல பல வகைகள் இருக்கு. ஆக்ஷ்ன்லியே பல வகையான படங்கள் இருக்கு. சில படங்கள் சாதா ஆக்ஷ்ன் படங்களா இருக்கும், ஹீரோ வில்லன் மற்றும் அவரோட கூட இருக்கிற அடியாட்களை கையிலே அடிச்சு தும்சம் பண்ணுவாரு. பார்க்கிற நமக்கும் வில்லனை போட்டு அடிக்கணும்ன்னு தோணும். படமும் பர பரன்னு இருக்கும். தூள், கில்லி மாதிரி படங்களை இந்த லிஸ்ட்ல சேர்க்கலாம். அடுத்தது மிரட்டல் ஆக்ஷ்ன், சும்மா பார்க்கிறவன் கண்ணுல கத்தி, அருவாளை விட்டு ஆட்டுறது, புதுபேட்டை, தடையற தாக்க மிரட்டல் ஆக்ஷ்ன் லிஸ்ட்ல சேர்க்கலாம். படம் பார்பவர்களுக்கு ஒரு மாதிரியான திகில் அனுபவத்தை இந்த மாதிரி மிரட்டல் ஆக்ஷ்ன் படங்கள் ஏற்படுத்தும். இப்ப புதுசா ஸ்டைலிஷ் ஆக்ஷ்ன் படங்கள்ன்னு ஒரு டிரண்ட உருவாகி இருக்கு. செம ஸ்டைலான ஆக்சன் காட்சிகள், எப்போ யாரு யாரை சுடுவாங்கன்னு தெரியாம இருக்கிறது தான் ஸ்டைலிஷ் ஆக்ஷ்ன் படங்களோட ஸ்பெஷாலிட்டி. பில்லா-2 மேல சொன்ன சாதா ஆக்ஷ்ன்ல ஆரம்பிச்சு, மிரட்டல் ஆக்ஷ்ன்ல பயணம் செஞ்சு செம ஸ்டைலிஷா முடியும்.
படத்தோட கதைய அவங்க போஸ்டரிலே சொல்லிட்டாங்க.. " Every Don has a History". இந்த படம் டான்னின் வரலாற்றை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. ஒரு டானின் வாழ்கையை நாம் அருகில் இருந்தது பார்ப்பது போல் இருக்கிறது. ஒரு டான்னின் வாழ்கையை இவ்வளவு தந்துருபமாய் இது வரை யாரும் தமிழ்லில் படம் பிடித்தது கிடையாது. தமிழில் வந்த சிறந்த கேங்க்ஸ்டர் படங்களில் வரிசையில் பில்லா-2 படத்திருக்கு நிச்சியம் இடம் உண்டு. இது சாதாரண தமிழ் சினிமா கிடையாது, ஒரே பாட்டுல ஹீரோ கஷ்ட பட்டு பணக்காரனாக மாறுறது, கெட்டவனா இருக்கிற ஹீரோ ஹீரோயின் அன்பால நல்லவனா மாறுறது, ஹீரோ வில்லன் கூடவே இருந்திட்டு கடைசியில் "ஐயாம் போலீஸ், இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ், உன்ன பிடிக்க தான் மாறுவேசத்துல உன் கூட சேர்ந்து கெட்டவன் மாதிரி நடிச்சேன்னு" சொல்லுறது, போன்ற என்ற எந்த சராசரி விஷயமும் இந்த படத்துல கிடையாது. வேற என்ன தான் இருக்குன்னு கேட்குறீங்களா. இது இருக்கிறது வெறும் "அஜித், அஜித், அஜித் தான். அதுவும் ரொம்ப ரொம்ப ரொம்ப கெட்ட அஜித்...
அகதியா வர அஜித், மெல்ல மெல்ல எப்படி இன்டர்நேஷனல் டான் ஆக மாறுகிறார் என்பது தான் கதையே. முதல வைர கடத்தல்ல தொடங்கி, போதை மருந்துல கால் வச்சு, கடைசியில ஆயுத பிசினஸ்ல முடியுது படம். அஜித் எப்படி அகதியாக மாறுனாறுன்னு படத்துல எங்கேயும் சொல்ல பட வில்லை. அதே போல் படத்தில் இலங்கை அகதி என்று வார்த்தை எங்கும் வர வில்லை. ஆனா அதுக்குள்ளே அஜித் இலங்கை அகதி, டான் ஆகி வர பணத்துல புரட்சிக்கு உதவி செய்வார்ன்னு கொளுத்தி போட்டுட்டாங்க. தினமலர் பேப்பர்ல இந்த வரிகளை பில்லா வரதுக்கு முன்னாடி போட்டு இருந்தாங்க """அஜித் இலங்கை அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இண்டர்நேஷனல் அளவில் ஈழப்புரட்சிக்கு உதவுவதாக கதை....""". இது மாதிரி எல்லாம் படத்துல காட்சி கிடையாது.
அப்புறம் படம் அல்பாசினோ நடிச்ச "SCARFACE" படத்தோட தழுவல் அப்படின்னு ஒரு பேச்சு வேற. அது உண்மை தான். சில காட்சிகள் SCARFACE படத்தில இருந்தது அப்படியே பயன்படுத்தி இருக்காங்க. SCARFACE படத்துல அல்பாசினோ போதை மருந்து விற்க ஒரு ஹோட்டல் அறைக்கு போவார், அவர் அந்த ரூம்ல நுழையும் போது அங்க ஒரு பொம்பளை டிவி பார்த்திட்டு இருக்கும். டீல் பேசிட்டு இருக்கும் போது அந்த கும்பல் பாசினோவையும் அவர் கூட வந்த நண்பனையும் பிடிச்சு வச்சுகிட்டு போதை மருந்தை குடுத்திட சொல்லி மிரட்டுவாங்க. டிவி பார்த்திட்டு இருந்த பொம்பளை திடிர்ன்னு மிஷின் கன் எடுத்து காட்டுற சீன் செமயா இருக்கும். அல்பாசினோவை அந்த கும்பல் ரொம்பவே கொடுமை படுத்துவாங்க, கடைசியில தன்னோட பிரென்ட் உதவியால அல்பாசினோ அந்த ஹோட்டல இருந்தது தப்பிச்சு, அந்த கும்பல் தலைவனை நடு ரோடுல சுட்டு கொல்லுவார். டென்ஷன் எகிற வைக்கும் காட்சி அது, அதே போல ஒரு காட்சி பில்லா படத்திலும் இருக்கும். ஆனால் இதில் பெரிய த்ரில் எதுவும் இல்லாமல் சுமாராய் இருக்கும். அந்த காட்சியில் வில்லன் தேர்வு சரியாக செய்ய பட இல்லை. இன்னும் நன்றாக செய்து இருக்கலாம்.
படத்தில் அஜித் பேசும் வாசங்கள் மிக மிக குறைவே. அத்திபட்டியை தொலைத்து விட்டு பேசிய அஜித்துக்கும் இதில் தேவை படும் போது மட்டும் பேசும் அஜித்க்கும் நிறையவே வித்தியாசங்கள். டான் படங்களின் முன்னோடியாக கருத படும் "GOD FATHER" படத்தில் வசனங்கள் மூலமாவே பார்க்கும் பார்வையாளர்களை மனதில் பயத்தை உண்டு பண்ணுவார் மார்லின் பிராண்டோ. அஜித் கூட அதே போல் முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்று உள்ளார்.
பழைய அஜித் படங்களில் பஞ்ச் டயலாக் என்று சொல்லி கொண்டு ஹை பிட்சில் வெறும் சவுண்ட் மட்டுமே விடுவார்.உ.தா: "நான் தனி மனுஷன் இல்லை, என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு". ஆனால் இந்த படத்தில் அஜித் பேசும் ஒவொரு வசனமும் செம ஷார்ப், கொஞ்சம் அசந்தா நம்ம கழுத்தை கிழித்து விடும்.
படத்தில் அஜித் கொலை செய்கிறார். வெறும் கொலை மட்டுமே செய்கிறார். எதிரி என்று நினைபவர்களை கண்ட படி துப்பாகியால் சுடுகிறார். கேங் ஸ்டார் படத்துல கொலை செய்யாமல் வடையா சுடுவார்கள். வன்முறை அதிகம் தான். ஆனால் வன்முறை இல்லாமல் கண்டிப்பாய் கேங்க்ஸ்டர் வாழ்கையை படம் பிடிக்க முடியாது. ஆனால் என்னை பொறுத்த வரை முகம் சுளிக்க வைக்கும் வன்முறை கிடையாது. பார்க்க கூடியது தான்.
படத்துல ஹீரோயின் வேற இருக்காங்க. பாட்டுக்கு கூட அவங்களை உபயோக படுத்த வில்லை.அப்புறம் படம் இவ்வளவு வசூல் செய்தது, இவ்வளவு செலவு செஞ்சாங்க, இவ்வளவு தியேட்டர்ல போட்டாங்க, ஓடுமா ஓடாதா போன்ற எந்த விஷயமும் எனக்கு சம்பந்தம் இல்லாது. நான் ஒன்னும் படத்தோட டிஸ்ட்ரிபுட்டர் கிடையாது. வெற்றி தோல்வி பத்தி கவலை பட. படம் எனக்கு நல்ல அனுபவத்தை குடுத்திச்சு. எனக்கு படம் ரொம்பவே பிடித்து இருந்தது. அஜித்யின் திரைப்பட கேரியரில் இந்த படத்தை ஒரு மைல்கல் என்றே நான் சொல்வேன்..
பிற சேர்க்கை: நண்பன் JZ எழுதிய கருத்து எனக்கு மிகவும் பிடித்து இருந்தது... அதையும் பதிவில் சேர்த்து உள்ளேன்..:
படத்தில் இறுதிக் காட்சி வரை வன்முறையைக் கையாண்டிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிற என்ற கருத்துக்கு பதில் இதோ:
பில்லா பாகம்-1 நினைவிருக்கிறதல்லவா... அதில் பிரபு பில்லாவின் எழுச்சி பற்றி பில்டப் பண்ணும் சீன்களையும், அஜித் படத்தில் காட்டப்படும் லெவலையும், அவரது சொர்க்க மாளிகையும், அங்கு திரியும் கவர்ச்சி நாயகிகளையும், இருந்தும் அவர்கள் மீதும், நயனின் மீதும் பெரிதாக ஈடுபாடு கொள்ளாமல் விலகிச் செல்வதையும், அவர் பின்னால் காட்டப்பட்ட அடியாள் பலத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்..
இல்லாத இவை அனைத்தையும், உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு டோல்டி தலையில் விழுந்திருக்கிறது.. அவ்வளவு முக்கியமாக காட்டப்படும் பில்லா, அவனது எழுச்சிப் பாதையில் அதிகமான வயலன்ஸையும், அதிகமான கவர்ச்சியையும் பார்க்காமலா வந்திருப்பான்??..
அகதியாக வந்த ஒருவனுக்கு எடுத்த எடுப்பிலேயே இன்டர்நேஷனல் டானாக முடியாது.. படிப்படியாக அவன் முன்னேறுவதைக் காட்டுவததற்கு அதிகப்படியான சண்டைக்காட்சிகள் தேவையே! சண்டைக்காட்சிகள் அலுப்படிக்கிறது என்பதற்காக படத்தின் நீளத்தை கூட்டி காமெடி சீன்களையும், ரொமான்ஸ் சீன்களையும் போட்டிருந்தால் அது கேங்க்ஸ்டர் படம் என்று குறிப்பிடுவத்கே தகுதியற்றதாக மாறிவிட்டிருக்கும்!
தமிழர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. பொங்கியெழுவார்கள் என்பதற்காக கடைசி வரை இந்த மாதிரி படங்கள் வந்து விடாமலா போய்விடும்? குடும்பத்தோடு பார்க்க வேண்டாம், இளகிய மனம் கொண்டவர்ககள், வயது குறைந்தவர்கள் பார்க்க வேண்டாம் என்பதற்குத்தான் "ஏ" சேர்ட்டிஃபிகேட் இருக்கே..எல்லாரும் பார்ப்பதற்காக அல்ல என்று சொன்ன பின்னும் போய் பார்த்துவிட்டு படத்தை 'அதற்காக' குறை கூறுபவர்கள் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்!
படத்துக்கு A ரேட்டிங் கொடுத்தால் அது படம் வசூல் குவிப்பதற்கான நிகழ்தகவைக் குறைத்துவிடும்தான். ஒத்துக்கொள்கிறேன்.. மாறாக படத்தை U/A ஐ நோக்கி எடுத்திருந்தால், அது படத்தின் கதைக்கு தேவையான intensityஐ குறைத்துவிட்டிருக்கும்..
super விமர்சனம் ராஜ்.........கலக்குங்க............
ReplyDeleteநன்றி பாஸ்... நீங்க எல்லா படத்துக்கும் விமர்சனம் போடுவேங்க....அஜித் படத்துக்கு இன்னும் எழுதாம இருக்கேங்க...சிக்கிரம் உங்க கருத்தை சொல்லுங்க...
Deleteநல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்.
ReplyDeleteஅந்த bottle க்கு நன்றி.
கிரேட் எஸ்கேப்.
விமர்சனம் அருமை.
நன்றி பாஸ்
Deleteஇப்போ தான் பாசிடிவ் விமர்சனம் பார்க்குறேன்...அருமை
ReplyDeleteநன்றி நண்பரே....நிறைய பேரை படம் கவரவில்லை என்பதே உண்மை....எனக்கு வன்முறை பிடிக்கும் என்பதால் படம் ரொம்பவே பிடித்து இருந்தது...
Delete// பில்லா-2 மேல சொன்ன சாதா ஆக்ஷ்ன்ல ஆரம்பிச்சு, மிரட்டல் ஆக்ஷ்ன்ல பயணம் செஞ்சு செம ஸ்டைலிஷா முடியும்.// செம நண்பா, சூப்பரா சொல்லி இருக்கீங்க
ReplyDelete//அஜித், அஜித், அஜித் தான். அதுவும் ரொம்ப ரொம்ப ரொம்ப கெட்ட அஜித்...// புல்லரிக்குது இந்த வார்த்தைகள படிக்கும் போது
//ஆனால் இந்த படத்தில் அஜித் பேசும் ஒவொரு வசனமும் செம ஷார்ப், கொஞ்சம் அசந்தா நம்ம கழுத்தை கிழித்து விடும். // வசனங்கள் அஜ்ஜெதிடம் இருந்து வெளிப்படும் பொழுது அருமை
//ஆனால் என்னை பொறுத்த வரை முகம் சுளிக்க வைக்கும் வன்முறை கிடையாது. பார்க்க கூடியது தான்.// ஓரளவிற்க்கு ஒத்துக் கொள்ளக் கூடியது தான், ஒரே ஒரு ஆபாசக் காட்சியை மட்டும் என்னால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை, தலைய நமக்கு மட்டும் பிடிச்ச போதாது சின்ன குழந்தைங்களுக்கும் பிடிக்கணும், இதைப் பார்த்த எப்படி பிடிக்கும்.
//அஜித்யின் திரைப்பட கேரியரில் இந்த படத்தை ஒரு மைல்கல் என்றே நான் சொல்வேன்..// நிச்சயமாக...
நானும் விமர்சனம் எழுதி உள்ளேன், அது தங்களுக்கு நிச்சயம் பிடிக்காமல் போகலாம்...மீண்டும் ஒருமுறை மன்னிக்க வேண்டுகிறேன்,
உங்கள் விமர்சனம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
TM 1
ReplyDeleteஃஃஃஃஅத்திபட்டியை தொலைத்து விட்டு பேசிய அஜித்துக்கும் இதில் தேவை படும் போது மட்டும் பேசும் அஜித்க்கும் நிறையவே வித்தியாசங்கள்.ஃஃஃஃ
ReplyDeleteதமிழ் சினிமாவின் அனேக நகைச்சுவைக்காட்சிகள் கொடுத்த பாடமாக இருக்கலாம்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்
நன்றி சுதா.....
Deleteராஜ்...ரொம்பவும் சிறப்பான விமர்சனம்..இந்த படத்தை பற்றி படிக்கிற முதல் விமர்சனம் உங்களது..படம் கட்டாயம் பார்த்திடுவேன்.அழகான பதிவை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி..வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி குமரன்...நீங்க ரொம்ப நாலா ஆளை காணம்...நீங்களும் நீங்க பார்த்த ரசித்த படத்தை பத்தி சிக்கிரமே எழுதுங்க...
Deleteஒரே சண்டை என்றால் பெண்கள் குழந்தைகளுக்கு பிடிக்காது ஏனோ எனக்கு டிரைலரே ஈர்க்க வில்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை. உங்களுக்கு படம் பிடித்துள்ளது. நீங்கள் என்ஜாய் செய்ததில் மகிழ்ச்சியே
ReplyDeleteஎனக்கு பிடித்து இருந்தது சார்...நான் ஒரு கேங்ஸ்டர் படம் விரும்பி....அதன்னாலே எனக்கு ரொம்ப பிடித்து இருந்து...
Deleteநானும் படம் பார்த்தேன் நண்பா.. ரெண்டு மணிநேரம் 'தமிழ்த்திரைப்படம்' என்கிற அடையாளத்துக்குள் விழாமல் செமத்தியாக போனது! தலயின் screen presence எனர்ஜி படத்துக்கு படம் கூடிக் கொண்டே போகிறது!
ReplyDeleteநீங்கள் கூறியவை தவிர்த்து என்னை படத்தில் கவர்ந்த விடயங்கள் -
* அஜித்தின் காஸ்ட்யூம் மாற்றங்கள் (சாரத்திலிருந்து, சாதா பேன்ட், கெத்தான ஷேர்ட் & ஜீன்ஸ் வரை சென்று இறுதியில் கோட்-சூட்)
* டிமித்ரியாக வரும் வில்லனும், அவனது இன்ட்ரோ சண்டைக் காட்சியும்..
* "உனக்குள்ளே மிருகம்" பாடல் படமாக்கப்பட்ட விதம்!
*நீங்கள் தமிழ்சினிமா விமர்சனம் எழுதும் விதம் சுவாரஷ்யமாக உள்ளது.. நேரம் கிடைத்தால், இதுபோல முண்ணனிப் படங்கள் ரிலீசாகும் போது பதிவிட வேண்டுகிறேன்
கண்டிப்பா தல....அடுத்து BATMAN தான்... IMAXல Friday Prebook போட்டு இருக்கேன்..டிக்கெட் கிடைச்சா பெரிய லக்கி ப்ரைஸ் தான்...நானும் ஒரே வட்டத்துல மாட்ட வேண்டாமே என்று தான் பார்க்கிற படத்தை பத்தி எல்லாம் எழுதிட்டு இருக்கேன்...கண்டிப்பா அதை தொடர்வேன்....
Deleteஉங்க விமர்சனமும் சீனு விமர்சனம் மட்டுமே பிடித்து உள்ளது....படம் பார்த்து விட்டு நான் நொந்து விட்டேன் சுத்தமா பிடிக்கவே இல்லை...உங்களுக்கு பிடித்தது ரொம்ப சந்தோசம்...வன்முறை படம் என சொல்லுகிறார்கள் டான் படம் என்றால் வன்முறை இல்லாமல் என்ன இருக்கும்...எதற்கு எடுத்தாலும் தல மட்டும் அடிபடாமல் எதிரில் உள்ளவர்களை அடிப்பது,சுடுவது செம்ம காமெடி....
ReplyDeleteவிடுங்க தல...அடுத்த படத்துல விட்டதை பிடிச்சுடுவார்....ஏங்க எந்த படத்திலும் ஹீரோவுக்கு அடிபடாது.... :) அட்லீஸ்ட் பில்லாவுல நிறைய எடத்துல க்ளோஸ் கால் இருந்தது.... அந்த வீட்டுல நடக்குற போதை மருந்து டீலிங்....
Deletesuper vimarchanam good
ReplyDeleteThanks Bro...
Deleteபதிவுக்கு பதிவு நடை அருமை ஆகிக்கொண்டே போகுது ராஜ்.எனக்கு விஜய் ,அஜித் இருவரையும் பிடிக்கும் .ஆனால் அஜித் ரசிகர்களை பிடிக்காது.காரணம் விஜய் 51 % ,அஜித் 49% இந்த அளவில் எனக்கு பிடிக்கும்.விஜய்க்கு பிறகு தான் அஜித் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே...நான் யார் ரசிகரும் கிடையாது......யாரு படம் நல்லா இருந்தாலும் பார்ப்பேன்.....ஆனா ரஜினி படத்தை மட்டும் ரொம்பவே விரும்பி பார்ப்பேன்...
Deleteஅடுத்து வாரம் "Batman", அப்புறம் துப்பாக்கி இல்லாட்டி விஸ்வரூபம்...எது முதல வருதோ அதை எதிர் பார்க்க வேண்டியது தான்.......
நீங்க சொல்லுறது கரெக்ட் தான்...அஜித் விஜய் ரசிகர்கள் சண்டை கமல், ரஜினி ரசிகர்கள் சண்டை மாதிரி தான்...படம் வரும் போது அடிச்சுகாவங்க..அப்புறம் ஒண்ணா ஆகிருவாங்க.....
//ரஜினி படத்தை மட்டும் ரொம்பவே விரும்பி பார்ப்பேன்...// super
ReplyDeleteவிமர்சனம் ஓகே நான் இன்னும் படம் பார்கவில்லை நண்பா..
அதற்குள் விமர்சனம்...? வாழ்த்துக்கள்... உங்கள் பாணியில் நன்றாகவே அலசி இருக்கிறீர்கள்... நன்றி... (த.ம. 5)
ReplyDeleteபில்லா 2 நன்றாக இல்லை என்று சொன்னதால் .... Abraham Lincoln, Vampire Hunterயிடம் மாட்டிக்கொண்டேன். நீங்கள் சொல்வதை பார்த்தல் பில்லாவுக்கே போயிருக்கலாம் போலவே....
ReplyDeleteஅடடா ... நேத்து கொழும்பு போயிருந்தப்போ நண்பர்களோட போக ப்ளான் பண்ணியிருந்தேன். படம் பார்த்தவனுங்க ரொம்ப நொந்து போய் தவறிக்கூட போய்ராதடா என்று சொன்னதால ஸ்பைடர்-மேனுக்கு போய்ட்டேன். (இங்க நேத்து தான் ஃபர்ஸ்ட் ஷோ)
ReplyDeleteநீங்க புடிச்சிருக்குன்னு சொல்றீங்க. JZ வேற நல்லாயிருக்குன்னு சொல்றாரு. சரி ... அடுத்தவாரம் மீண்டும் போகும்போது வேறு படம் ரிலீஸ் ஆகலைன்னா இதுக்கு போவோம். :)
உங்க தமிழ்ப்பட விமர்சனம் நல்லாயிருக்கு ராஜ். கன்டினியு ...
different review
ReplyDelete