Sunday, July 15, 2012

The Dark Knight Rises- பில்ட் அப்- பாகம் -1

இந்த பதிவு "The Dark Knight Rises" படத்திற்கான பில்ட் அப் மட்டுமே.....
நான் மட்டும் அல்ல உலகமே மிகவும் எதிர்பார்க்கும் "The Dark Knight Rises" படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 20. எந்திரனுக்கு பிறகு நான் ரொம்பவே எதிர்பார்க்கும் படம் The Dark Knight Rises. அதுவும் இல்லாமல் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் "கிறிஸ்டோபர் நோலன்" அவர்களின் படம் வேறு. Christian Bale தான் பேட் மேன். நோலனின் ஆஸ்தான ஹீரோ Bale அவர்களின் அர்பணிப்பு பற்றி நான் சொல்ல ஒன்றும் இல்லை. Rescue Dawn மற்றும் The Machinist படங்கள் இவரின் நடிப்பு வெறியை உலகிற்கு எடுத்து காட்டிய படங்கள். ஹாலிவுட் கமல்ஹாசன் என்று கூட சொல்லலாம், நடிப்பில் !!!!! நோலன் மாதிரி நல்ல தரமான படங்களை இது வரைக்கும் யாரும் தொடர்சியா குடுத்து கிடையாது. படம் நல்லா இருந்தா கிரிட்டிக் (Critic) ரேட்டிங் வராது, ரேட்டிங் வந்தா படம் வசூல்ல சொதப்பிடும், வசூல் மற்றும் ரேட்டிங் ரெண்டுமே கிடைக்க பெற்ற ஒரே டைரக்டர் நோலன் மட்டுமே என்பது என் கருத்து...
நோலன் மொத்தமே ஆறு படம் தான் எடுத்து இருக்கார் The Following படத்தை நான் இந்த ஆறு படத்தில் சேர்க்க வில்லை. அதுல அஞ்சு படம் IMDB Top 125  லிஸ்ட்ல இருக்கு. Memento (2000) IMDB-8.6, Insomnia (2002), Batman Begins (2005) IMDB-8.3, The Prestige (2006) IMDB-8.4, The Dark Knight (2008) IMDB-8.9,Inception (2010) IMDB-8.8. Insomnia மட்டும் கம்மி ரேட்டிங் 7.2. அந்த படத்திருக்கு நோலன் திரைகதை எழுதாதது தான் காரணம். நோலன் அந்த படத்தை வெறும் டைரக்ட் மட்டுமே செய்து இருப்பார். நோலனின் மிக பெரிய பலமே அவரது திரைக்கதை தான். அவரது ஒவொரு படமும் நமக்கு புது புது அனுபவத்தை குடுக்கும். படத்தை ஒரு தடவை பார்ப்பது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நீங்க அவரின்  படங்களை எத்தனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம். ஒவொரு முறையும் ஒரு புது விஷயத்தை அவரின் படம் முலம் நீங்கள் அறிவீர்கள். நேற்று கூட The Dark Knight படம் பார்த்தேன், ஏற்கனவே ஏழு எட்டு முறை பார்த்து இருந்தாலும் ஜோக்கர் கேரக்டர் பேசும் சில வசனங்கள் எனக்கு புதுசாய் தெரிந்தன. முதல் தடவை பார்க்கும் போது எனக்கு என்ன த்ரில் கிடைத்ததோ, அதில் சற்றும் குறையாத விறுவிறுப்பு மற்றும் த்ரில் நேற்றும் கிட்டியது. பார்வையாளனுக்கு என்ன வேண்டுமோ அதை மிக சரியாக கொடுப்பவர் நோலன்.    

சூப்பர் ஹீரோ கதைக்கு ஒரு புது இலக்கணத்தை ஏற்படுத்தியவர் நோலன். எல்லா சூப்பர் ஹீரோவிற்கும் ஒரே வேலை தான் இருக்கும், உலகத்தை தீய சக்திகளிடம் இருந்தது காப்பாற்றுவது. பேட் மேன் கூட அதே வேலையை தான் செய்வார். ஆனால் அதே வேலையை பேட் மேன் நோலனின் திரைக்கதை முலம் செய்யும் போது அது வேறு மாதிரியாக இருக்கிறது. நான் பார்த்த எல்லா சூப்பர் ஹீரோவும் கிராபிக்ஸ் முலமே தனது சாகசங்களை செய்து காட்டும் போது, நோலன் மட்டும் தனது பேட் மேன் படங்களுக்கு அதிகமாய் கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் ரியல் டைம் ஆக்சன் காட்சிகளை கொண்டு பேட் மேன் சீரீஸ் எடுத்து இருப்பார். பேட் மேன் காமிக்ஸ் படிக்காதவர்கள் கூட பேட் மேன் படங்களை குழப்பம் இல்லாமல் பார்க்கலாம். சரி இப்பொழுது Batman Series...

Batman Begins (2005) படத்தில் பேட் மேன்க்கு வெறும் அறிமுகம் மட்டுமே குடுக்க பட்டு இருக்கும். பேட் மேன் என்பவன் யார் ? அவனது பெற்றோர்கள், அவனது பலம், எப்படி அவன் பேட் மேன் ஆக மாறினான் என்பது போன்ற விஷயங்கள் Batman Begins படத்தில் சொல்லி இருப்பார் நோலன். சாதாரண திரைக்கதை, பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் இருக்கும். வேறு சூப்பர் ஹீரோகள் போல் பேட் மேன்க்கு முழு உலகத்தையும் காக்கும் வேலை இல்லை. அவன் வாழும் கோத்தாம் நகரத்தை மட்டும் அழிவில் இருந்தது காத்தால் போதும். ஆனால் அந்த வேலை அவ்வளவு சுலபமானது கிடையாது. வேறு சூப்பர் ஹீரோக்கள் வில்லன்கள் பஞ்சத்தால் அவதி படும் போது, பேட் மேன்க்கு மட்டும் வில்லன்கள் பஞ்சமே கிடையாது. ஒவ்வொரு வில்லன்க்கும் ஒரு படம் என்று நோலன் எடுக்க வேண்டியது இருந்தால் நோலன் குறைந்தது பத்து பேட் மேன் படங்கள் எடுக்க வேண்டியது வரும். அதனால் நோலன் பேட்மேன் வில்லன்களில் மிக மிக சிறந்த வில்லனான ஜோக்கரை தனது இரண்டாவது படத்தில் உபயோக படுத்தி இருப்பார். முதல் பாகத்தில் ஒரு சுமாரான வில்லனை போட்டு இருப்பர். அவன் தான் "ஸ்கேர் க்ரோ" (Scarecrow). முதல் பாகத்தில் பேட்மேன்க்கு இவனை சமாளிப்பது பெரிய கஷ்டம் இல்லாது போல் இருக்கும். வில்லனின் பலத்தை/கேரக்டரரை வைத்து தான் சூப்பர் படங்கள் வெற்றி அடைகிறது என்று நான் சொல்வேன். சூப்பர் ஹீரோ படங்களில்  வில்லனாக சொத்தையாக இருந்தால் படம் சொத்தையாக தான் இருக்கும். இது அணைத்து படங்களுக்கும் பொருந்தும். 

நோலனின் தீவிர ரசிகர்களுக்கு  Batman Begins சிறிது ஏமாற்றம் என்றே நான் சொல்லுவேன், காரணம் படம் நேர்கோட்டில் போகும், ஹாப்பி எண்டிங், பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லாதது போன்ற குறைகள் இருக்க தான் செய்தன. நோலன் Batman Begins முலம் Batman சீரீஸ்க்கு ரீபூட் (Reeboot) குடுத்தார். அதற்கு முன்பு வந்த பேட் மேன் படமான Batman & Robin  படு மொக்கையாய் இருந்தது. Batman & Robin உடன் ஒப்பிட்டு பார்த்தல் Batman Begins ரீபூட்க்கு ரொம்ப நல்ல தொடக்கமே. எப்போதும் புல் மீல்ஸ் சாப்பிடுவதற்கு முன்பு நன்றாக பசி ஏற்ற Appetizer  சூப் சாப்பிடுவோம், அது மாதிரியான Appetizer  சூப் தான் Batman Begins. அடுத்து நோலன் குடுத்து Dark Knight  என்னும் புல் மீல்ஸ். இது வரை வந்த பேட் மேன் படங்களில் மட்டும் அல்லாது ஹாலிவுட் வரலாற்றில் சிறந்த ஐந்து திரைப்படங்களை நாம் வரிசை படுத்தினால் அதில் Dark Knight  படத்திருக்கு நிச்சியம் ஐந்தில் ஒரு இடம் உண்டு. Dark knight  வெற்றிக்கும் மிக முக்கிய காரணம் அதன் வில்லன் "தி ஜோக்கர்". மிரட்டல் நடிப்பு என்றால் அது ஜோக்கர் தான்.


27 comments:

  1. தலைவா ... உங்களுக்கு நேர்மாறு நான் எனக்கு மிகவும் பிடித்த படம் Batman Begins ... Dark Knight அல்ல. நேற்று நீங்கள் Dark Knight...நான் Batman Begins பார்த்தேன்... என்னே ஒரு ஒற்றுமை..

    ReplyDelete
    Replies
    1. தல,
      நான் Dark Knight நான் IMAX தியேட்டரில் பார்த்தேன்...Begins டிவியில் .. Knight படத்தை விட எனக்கு ஜோக்கர் கேரக்டர் மிகவும் பிடித்து இருந்தது....அருமையான நடிப்பை வழங்கி இருப்பார் லெட்ஜர். அதற்காவே படம் பிடித்து இருந்தது...காகா விரட்டி (Scarecrow) பெருசாய் என்னை கவர வில்லை..

      Delete
  2. நோலன் பற்றி இப்போது தான் அறிகிறேன் (நமக்கு ஆங்கில பட அறிவு சற்று குறைவு) பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி சார்..

      Delete
  3. ஹி ஹி ... நேத்து தான் Batman Begins ப்ளுரே காப்பி டவுன்லோட் பண்ணி வச்சேன். இங்க 10ம் திகதிக்கு பிறகு தான் ரிலீஸ். அப்போ ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள்ள இரண்டு படத்தையும் மீண்டும் ஒருவாட்டி பாத்துட்டு படத்துக்கு போகப் ப்ளான்.

    //அது மாதிரியான Appetizer சூப் தான் Batman Begins. அடுத்து நோலன் குடுத்து Dark Knight என்னும் புல் மீல்ஸ்.//

    U mean Dark Knight Rises is only டெசர்ட்???? :P

    ReplyDelete
    Replies
    1. தல,
      Rises கண்டிப்பா Dessert கிடையாது...அப்படி சொன்னா ஹாலிவுட் சாமி கண்ண குத்திரும்... :)
      Bane கிட்ட இருந்தது ஜோக்கர்க்கு ஈடான, இல்ல இல்ல அதுக்கும் மேலான பெர்பார்மன்ஸ் நான் எதிர்பார்கிறேன்....

      Delete
  4. // வேறு சூப்பர் ஹீரோகள் போல் பேட் மேன்க்கு முழு உலகத்தையும் காக்கும் வேலை இல்லை. //ஹா ஹா ஹா வேலைப் பளுவை குறைத்து விட்டார்கள் போல

    INCEPTION இவர் தன இயகினாரா, எனக்கு ரொம்பப் பிடித்த படம் அது, கவவிற்குள் கனவிற்குள் ன்று சென்று நம் தலையை சுற்ற வைத்தலும் திரைக் கதையில் எந்த சிக்கலும் இல்லாமல் கொண்டு சென்றிப்பார்,

    இவ்ளோ சொல்றீங்க கண்டிப்பா பாக்கறேன் தல... உங்களுக்காக

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க சீனு...

      Delete
  5. நோலன் பற்றி ஓரளவு தெரியும். உங்கள் பதிவின் மூலம் நிறைய அறிந்து கொண்டேன் நண்பா...

    தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 5)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

      Delete
  6. மச்சி நேற்று நைட் தான் பேட்மேன் பற்றி கொஞ்சம்மாய் எழுதி டிராப்ட் போட்டு விட்டு காலையில் puplish செய்யலாம் என இருந்தேன் காலையில் ஒரு ஏழு மணிக்கு பார்த்தல் உங்கள் பேட்மேன் சீரியஸ் வந்து உள்ளது உலகமே பேட்மேன் எதிர்பார்த்து கொண்டு உள்ளது பேட்மேன்க்கா இல்லை நோலன் மட்டும்மே நோலன் எடுத்ததில் நான் முதலில் பார்த்த படம் inception அதன் பிறகு அவரின் மற்ற படத்தையும் பார்த்தாச்சு...தமிழ் உதயநிதி விடுறார் போல......

    ReplyDelete
  7. ஆமா தல..நானும் உதயநிதி விளம்பரம் பார்த்தேன்.....நோலன் படத்தை இங்கிலீஷில் பார்த்தல் தான் நன்றாக இருக்கும்.... வசனங்கள் மிகவும் intelligent ஆக எழுதி இருப்பார் நோலன்... தமிழ்லில் பார்த்தல் அவ்வளவாய் பீல் கிடைக்காது......
    நீங்களும் உங்க பேட் மேன் பதிவை பப்ளிஷ் பண்ணுங்க....நோலனை பத்தி 2~3 பதிவுல எழுதிற முடியாது......நான் சும்மா ஏதோ எனக்கு தோன்றியதை எழுதி இருக்கேன்...நிறைய பேர் அவரை பத்தி ஆராச்சி எல்லாம் பண்ணி இருக்காங்க...

    ReplyDelete
    Replies
    1. மச்சி எனக்கு எல்லாம் நோலன்னை பற்றி எல்லாம் ஒன்னும் தெரியாது..ஏதோ நாலு வரியில் பேட்மேன் என டைட்டில் போட்டு எழுதி உள்ளேன் அவ்வளவு தான் வந்து பார்க்கவும்...

      Delete
    2. மச்சி உன்னோட மெயில் ID கிடைகும்மா.... chinnamalai7@gmail.com

      Delete
  8. எதிர்பார்த்து எதிர்பார்த்து பி.பியே வந்துரும் போல இருக்கு இங்க.. ரிலீஸ் ஆவற அன்னைக்கே பார்க்க முடியாதது பெரிய வருத்தம் நண்பா!

    ReplyDelete
    Replies
    1. நான் prebook போட்டு உள்ளேன் நண்பா...டிக்கெட் கிடைப்பது ரொம்ப கஷ்டம் போல் தான் தெரிகிறது...

      Delete
  9. நல்ல அறிமுகம் நண்பரே!

    ReplyDelete
  10. நன்றி நண்பா..

    ReplyDelete
  11. வெள்ளிக்கிழமைக்கு இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கிறது!!!

    ReplyDelete
  12. நானும் ஆர்வத்துடன் படத்தை எதிர்பார்கிறேன். இன்போர்மேட்டிவான தொகுப்பு. வாழ்த்துக்கள் நண்பரே...
    உங்கள் திரைவமர்சனம் படித்து விட்டு தான் படத்திற்கு போகலாமா இல்லையா என்று முடிவு செய்ய உள்ளேன்

    ReplyDelete
  13. இன்னும் 72 மணி நேரம் தான் வெட்டிங் வெயிட்டிங்.., குட் போஸ்ட் பாஸ் :)

    ReplyDelete
  14. ரொம்ப எதிர் பார்புல இருக்கேன், ஆனால் என்ன... படம் இங்க டைரக்ட் ரிலீஸ் கிடையாது. ஒரு இரண்டு வாரங்கள் கழித்துதான் இங்க ரிலீஸ் செய்வாங்க. உங்களுடை இந்த தொடர்ச்சி மற்றும் ரிலீஸ் ஆகும் அடுத்த பாகத்தின் விமர்சனத்தையும் எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  15. Batman Begins படமும் நன்றாக இருக்கும்...அதுவரை மற்ற எந்த Batman திரைப்படங்களில் வராத பல விஷயங்களை மற்றும் Batman'னோட வழக்கை போன்றதை இதில் காட்டி இருப்பர் நோலன்.

    ReplyDelete