Showing posts with label போர் திரைப்படம். Show all posts
Showing posts with label போர் திரைப்படம். Show all posts

Sunday, April 29, 2012

The Great Dictator-(1940)- சாப்ளின் அட்வைஸ் ஹிட்லர்க்கு

ஹிட்லர் காலத்தில் அந்த சார்லி சாப்ளின் தில்”.. இந்த வரிகள் விக்ரம் நடித்த தில் படத்தில் வரும் ஒரு பாடல் வரிகள். இந்த பாடல் வரிகளின் அர்த்தம் “The Great Dictator” என்ற படத்தை பார்க்கும் வரை எனக்கு புரியவில்லை. நமக்கு ஒரு நாட்டின் தலைவரோட (உ.த: கலைஞர், ஜெ , சோனியா) கொள்கை பிடிகலைனா என்ன பண்ணுவோம் ?? அவருக்கு நீ பண்ணுறது சரி இல்லைன்னு எப்படி சொல்லுவோம் ?? நம்மலோட எதிர்ப்பை எப்படி காட்டுவோம் ?? இப்ப இருக்குற இணைய வசதி முலம்மா நம்ப கருத்தை எப்படி வேண்டுமானாலும் வெளிபடுத்தலாம், எதிர்ப்பை வெளிபடுத்த நிறைய வழிகள் இருக்கு. போடியில உக்காந்துகிட்டு வைட் ஹவுஸ் ஒபாமாவுக்கு ஒரு பகிரங்க கடிதம் நம்ப ப்ளாக்ல எழுதலாம். 

அவருக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ அத பத்தி எல்லாம் நாம் கவலை பட வேண்டியது இல்லை. கடிதம் பிடிக்கலையா திருக்குறள் மாதிரி நாளே வரியில நச்சுனு ஒரு தலைவரோட கொள்கைய கிண்டல் பண்ணி ட்விட்டர்ல ட்வீட் போடலாம். இது எல்லாம் இப்ப நம்பல மாதிரி காமன் மேன் பண்ணுறது. ஆனா ஒரு சினிமா படைப்பாளி ஒரு தலைவர் பண்ணுற செயல் பிடிகலைனா தன்னோட கருத்தை சினிமா முலமா சொல்லுவான், ஆனா அப்படி கருத்து சொல்லற படம் எல்லாம் டாக்குமெண்டரி லிஸ்ட்ல சேந்துரும். அப்படி ஒரு கிரேட் லீடர்க்கு!!!! தி கிரேட் சார்லி சாப்ளின் அட்வைஸ் செஞ்சு எடுத்த தி கிரேட் திரைக்காவியம் தான் “The Great Dictator”. அந்த தலைவர்!!!! வேறு யாரும் இல்லை, சார்லி சாப்ளின் மாதிரியே மீசை வச்ச அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler).


ஹிட்லரை பத்தி தெரியாதவங்க இருக்க முடியாது. தெரியாதவங்களுக்கு ஒரு சின்ன அறிமுகம். ஹிட்லர் ஜெர்மன் நாட்டை ஆட்சி செய்த ஒரு அரசியல்வாதி, சாதாரண ஆட்சியாளர் கிடையாது, மிக பயங்கரமான சர்வாதிகாரி. அவர் ஆட்சி செய்த காலகட்டத்தில் அவரின் யூத எதிர்ப்பு கொள்கை காரணமாக கிட்டதட்ட 11 மில்லியன் (1.1 கோடி) பேரை கொன்ற ஒரு கொடூரன்.

 உலகையே தன் காலடியில் கொண்டு வர துடித்த கிராகதன். இரண்டாம் உலக போர் நடைபெற முக்கிய காரணமாக இருந்த ஒரு லீடர். இப்படி பட்ட ஒரு சர்வாதிகாரியை மிக பயங்கரமாக பகடி செய்து, “அடேய் நீ பண்ணுறது தப்பு, உன்னோட கொள்கைகள் ரொம்ப முட்டாள்தனமானதுன்னு” செவுட்டில் அறைந்தாற்போல் சாப்ளின் சொன்ன படம் The Great Dictator”.


இந்த படத்தில் சாப்ளின் டபுள் அக்டு பண்ணி இருப்பர். ஒரு சாப்ளின் மூடி திருத்தும் நாவிதர், இவர் ஒரு யூதர். மற்றும் ஒரு சாப்ளின் டோமானியா (ஜெர்மனி) என்ற நாட்டை ஆண்டு வரும் சர்வாதிகாரி. பெயர் ஹெயக்கல் (ஹிட்லர்). இவருக்கு யூதர்களை கண்டால சுத்தமாக பிடிக்காது. தன் நாட்டில் யூதர்கள் யாரும் இருக்க கூடாது என்று, யூதர்களை பிடித்து சிறையில் அடைக்க தன் படையை ஏவி விட்டு இருப்பார். பார்பர் (நாவிதர்) சாப்ளின் ஹெயக்கல் படையிடம் இருந்து தப்பித்து உயிர் பிழைக்க ஓடி கொண்டு இருப்பார். இடையே ஹெயக்கல் பக்கத்து நாடான பாக்டீரியாவின் (இத்தாலி) சர்வாதிகாரி நபோலினியுடன் (முசோலினி) இனைந்து அடுத்த உலக போருக்கு ஆயுத்தம் ஆகி கொண்டு இருப்பார்.

பார்பர் சாப்ளின் ஹெயக்கல் படையிடம் மாட்டி சிறையில் அடைக்க பட்டு, பிறகு அங்கு இருந்து தப்பித்து ராணுவ உடையில் சுற்றி கொண்டு இருப்பார். பார்பரின் முக அமைப்பு ஹெயக்கல்(ஹிட்லர்) போல் இருப்பதால், அவரை ஹெயக்கல் என்று ராணுவ தளபதி தவறாக எண்ணி, போருக்கு தயாராகி கொண்டு இருக்கும் ஹெயக்கலின் ராணுவ படை முன்பு உரையாற்ற சொல்வார். ஆனால் யாரும் எதிர் பார வண்ணம் பார்பர் யூதர்களுக்கு ஆதரவாக, உலக போருக்கு எதிராக, சமாதானத்தை வலியுறுத்தி ஏழு நிமிட உருக்கமான உரை ஒன்றை அளிப்பார். அந்த உரை முடிய, படமும் முடிவடையும்.

            
சாப்ளின்  யூதர்களுக்கு ஆதரவாக மற்றும் ஹிட்லரை பகடி செய்து  அதுவும் ஹிட்லர் வாழ்ந்த காலத்திலே பேசும் படம் எடுத்தால் அவரை நிறைய பேர் யூதர் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் சாப்ளின் உண்மையில் யூதர் கிடையாது. யூதர்களின் கஷ்டங்களை புரிய நான் யூதராய் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று ஒரு முறை சொல்லி இருக்கார்.

 நாஜி கொள்கைகளுக்கு எதிராக மற்றும் யூதர்களின் கஷ்டங்களை திரையில் பதிவு செய்த, செய்துகொண்டு இருக்கும் மற்றும் ஒரு மிக சிறந்த படைப்பாளி ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். நாலு படத்துக்கு ஒரு படம் இவர் கண்டிப்பா தன்னோட நாஜி எதிர்ப்பு கொள்கைய மையமா வச்சு ஒரு படத்தை குடுத்து விடுவார்.


படத்தின் சுவாரசியங்கள் சில:
  • சாப்ளின் எடுத்த முதல் பேசும் படம். படபிடிப்பு முழுவதும் அமெரிக்காவில் நடத்த பட்டது. இந்த படம் வெளிவந்த போது அமெரிக்கா உலக போரில் ஈடுபடவில்லை. இருந்தாலும் ஹிட்லரின் கொள்கைகள் தவறானவை என்று பொட்டில் அடித்தாற்போல் சொல்ல வேண்டும் என்று சாப்ளின் இப்படத்தை எடுத்தார்.
  • இந்த படம் தோல்வி அடைந்த இருந்தால், சாப்ளின் நடு தெருவுக்கு வந்து இருப்பார், ஆனால் அது போல் எல்லாம் நடக்காமல் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
  • ஹெயக்கல் (ஹிட்லர்) உலகமே பயந்த சர்வாதிகாரி, ஆனால் அவன் தனியாக இருக்கும் போது, மற்றும் அவன் அலுவலகத்தில் இருக்கும் போது செய்யும் சேட்டைகள், கிறுக்குத்தனங்களை செமையாய் கிண்டல் செய்து இருப்பார் சாப்ளின். ஹெயக்கல் ஒரு காட்சியில் தன் சிலை செய்யும் சிற்பிக்கு ரெண்டே செகண்ட் மட்டும் போஸ் குடுத்து விட்டு, அந்த எடத்தை விட்டு நகர்ந்து விடுவார். சிற்பி சிலை செய்ய ஆரம்பிதற்குகள் ஹெயக்கல் அங்கிருந்து போய் விடுவார். இப்படியாக பல காட்சிகள் வைத்து ஹிட்லரை பகடி செய்து இருப்பார் சாப்ளின்.
  • இப்படம் ஐந்து ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்க பட்டது. ஆனால் எந்த விருதும் கிடைக்கவில்லை.
இந்த படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய உலக சினிமா........

My Rating: 8.6/10......


Saturday, November 19, 2011

போரின் கொடுரத்தை உணர்த்தும் Black Hawk Down-(2001)

இந்த இடுகையின் முலமாக நான் உங்களுக்கு அறிமுக படுத்த போகும் படம் Black Hawk Down. படம் வெளிவந்த ஆண்டு 2001. இந்த படம் சோமாலியாவில் நடந்த உள் நாட்டு போரை மையமாக கொண்டு எடுக்க பட்டு இருக்கும். நான் போரை மையபடுத்தி எத்தனையோ படங்களை பார்த்து இருந்தாலும் இந்த படம் ஏற்படுத்திய பாதிப்பை வேற எந்த படமும் எனக்குள் ஏற்படுத்தியது இல்லை.
இந்த படம் 1999 ஆம் வெளிவந்த Black Hawk Down: A Story of Modern War என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்டு இருக்கும். அந்த நாவல் 1993 ஆம் ஆண்டு சோமாலியாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுத பட்டு இருக்கும்.

எனக்கு போரின் அறிமுகம் சின்ன வயசுல நடந்துச்சு. சின்ன வயசுல DD National மட்டுமே இருந்த காலத்தில, ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு கடவுள் கிருஷ்ணர் சங்கு ஊதி போரை ஆரம்பிப்பார். பாண்டவர்கள் பக்கத்தில் இருந்து அர்ஜூனன் அம்பை விடுவர். அந்த ஒரு அம்பு பத்து அம்பா மாறி கெட்டவாங்களை போய் குத்தும். சில நேரத்துல அம்பு பக்கத்துல வந்த உடனே வில்லன் மறைஞ்சி போய்டுவார். பார்க்க நல்லா இருக்கும். நான் வளர வளர போர்ன்னா அது இல்லை, அது ரொம்ப மோசமானதுன்னு தெரிஞ்சது.
இந்தியாவில் நான் வாழும் காலத்தில் நடந்த போர்னா அது கார்கில் போர் தான். அப்புறம் கொஞ்சம் வருஷம் கழிச்சு அமெரிக்கா தனது கண்டுபிடிப்புகளை பரிசோதனை செய்ய மற்றும் பெட்ரோல் கொள்ளைக்காக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மேல போர் தொடுத்தது. அப்போ கூட போரை பற்றியும், அதன் உண்மையான பாதிப்புகளையும் நான் உணரவில்லை. இலங்கையில் நாம் ஈழமக்கள் மீது போர் தொடுக்க பட்டதே, அப்பொழுது தான் போரின் கொடுமையை நான் உணர்தேன்.

இந்த படம் நமக்கு போரின் தாகத்தை அதன் வலியை நமக்கு உணர்த்தும். போர் காட்சிகள் மிகவும் தந்துருப்பமாக படமாக்க பட்டு இருக்கும். இளகிய மனம் படைத்தவர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது. சரி படத்தை பற்றி பார்போம்.
ஆண்டு 1993: சோமாலியாவில் உள்நாட்டு போர் நடந்து கிட்டு இருக்கு. இப்போ சமீபத்தில் EGYPT & LIBIYA வில் நடந்துச்சே, அதே மாதிரி. எந்த ஏழை நாட்டுல உள்நாட்டு போர் அல்லது புரட்சி நடந்தாலும் அமெரிக்காவுக்கு முக்கு வேர்துடுமே. அவன் கண்டுபிடிச்சு வச்சு இருக்குற நவீன ஆயுதங்கள் பரிசோதனை பண்ண ஒரு இடம் கிடைச்சாச்சுன்னு அங்க கிளம்பிறுவான். இங்கேயும் கிளம்பி வரான். அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு நாள் உண்மை சம்பவமே இந்த திரைப்படம்.

போரில் மாட்டி கஷ்ட படுற சோமாலியா மக்களுக்கு U.N உணவு பொருட்களை அனுப்புறாங்க. அந்த உணவு பொருட்கள் எல்லாம் மக்களுக்கு போய் சேர விடாம பண்னுறது, உள் நாட்டு போர் நடக்க முக்கிய காரணமாக இருக்கும் தலைவன். அவன் பேரு, விடுங்க பேரா முக்கியம். இந்த படத்தை பொறுத்தவரை அவன் தான் வில்லன். அவனுக்கு ரெண்டு தளபதிகள், நம்ப இளைய தளபதி இல்லேங்க, அந்த ரெண்டு பேரும் போர் படை தளபதிகள். அந்த ரெண்டு படை தளபதிகளை பிடிச்சுட்டா போர் முடிவுக்கு வந்துடும்.
அதனால அமெரிக்கன் வீரர்கள் 123 பேர் அவங்களை பிடிக்க போறாங்க. அவங்க போற போர் ஹெலிகாப்டர் பேரு தான் Black Hawk. அந்த ரெண்டு பேரை பிடிப்பது ரொம்ப சுலபமான வேலைன்னு எல்லா வீரர்களும் நெனைச்சுக்கிட்டு அந்த மிஷன்க்கு கிளம்புவாங்க. ஆனா அவங்களுக்கு அங்க ஒரு அதிர்ச்சி காத்துக்கிட்டு இருக்கும். அமெரிக்கன் வீரர்கள் நெனச்சதுக்கு மேலையே தளபதிகள் (புரட்சி படை)கிட்டே இருந்து எதிர்ப்பு இருக்கும். 

அமெரிக்க படைகளுக்கும் சோமாலியா கிளர்ச்சி/புரட்சி படைக்கும் நடக்கும் சண்டை தான் படமே. புரட்சி படை சுமார் ஆயரம் பேர் இருப்பார்கள். புரட்சி படை ரெண்டு அமெரிக்கன் போர் ஹெலிகாப்டர்ன்னா ப்ளாக் ஹாக்யை (Black Hawk) சுட்டு விழித்தி விடுவார்கள். தப்பி பிழைத்த மீதம் இருக்கும் அமெரிக்கன் படைக்கும் புரட்சி படைக்கும் இடையே மிகவும் உக்கிரமான சண்டை நடக்கும்.
அதன் பிறகு தான் போரின் கொடுரத்தை நாம் உணர ஆரம்பிப்போம். போர் நடக்கும் அந்த இடத்தில மாட்டி கொண்ட மீதம் இருக்கும் அமெரிக்கன் வீரர்கள் UN மற்றும் NATO படையினர்களால் எப்படி மீட்க்க பட்டனர் என்பதே மிதி படம். இறுதி காட்சி வரை விறுவிறுப்பு குறையாமல் போகும் படம். 

இந்த படம் 2 ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ளது. ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல விருந்து. 
பலம்:
  • படத்தில் ஹீரோ கிடையாது. அதனால் கதை ஒருவரை சுற்றி நகராது. 
  • படத்தில் காதல் கிடையாது. ஹாலிவுட் போர் படங்களில் வருவது போல் இதில் செண்டிமெண்ட் சுத்தமாக கிடையாது. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆக்சன் தான். 
  • இந்த அளவு போர் காட்சிகள் தந்துருப்பமாக வேறு எந்த படத்திலும் காட்ட பட வில்லை. நீங்களே அந்த இடத்தில இருப்பது போல் உணர்வீர்கள்.· 
பலவீனம்
  • அமெரிக்கனின் பார்வையில் படம் சொல்ல பட்டு இருக்கும். சோமாலியாவில் உள்நாட்டு போர் ஏன் நடக்குது என்று சொல்ல பட்டு இருக்காது.
My Rating: 7.5/10.........