Friday, September 28, 2012

தாண்டவம் (2012)- மிஸ் ஆன ருத்ரதாண்டவம்

கல்லூரி முடித்த பிறகு பல வருடங்கள் கழித்து இன்று தான் ஒரு படத்திருக்கு FDFS (முதல் நாள் முதல் காட்சி) பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் டாக்டர் சியான் விக்ரம் நடித்த சஸ்பென்ஸ் த்ரில்லர் "தாண்டவம்". படத்திருக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் போனேன். படம் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று கேட்டல் ஓர் அளவு பூர்த்தி செய்தது என்றே சொல்வேன். அது என்ன ஓர் அளவு..?? சில காட்சிகள், சூப்பராகவும், சில காட்சிகள் சுமாரகவும், சில காட்சிகள் மொக்கையகவும் இருந்தன. இதை நல்ல படம் என்று கொண்டாட முடியாது, மொக்கை என்று ஒதுக்கவும் முடியாது. சுமார் லிஸ்டில் சேர்க்கலாம். கதை லண்டனில் ஆரம்பித்து, இந்தியா வந்து, இறுதியில் லண்டனில் முடிகிறது.


போன வாரம் தாண்டவம் படத்தின் மீது "கதை திருட்டு" வழக்கு ஒன்றை ஒரு உதவி இயக்குனர் போட்டதாய் செய்தி படித்தேன். அதனால் படம் வெளி ஆவதில் சிக்கல் இருப்பது போல் தெரிந்தது. ஆனால் அந்த வழக்கு பற்றிய எந்த ஒரு சுவடும் வெளியில் தெரியாமல், இன்று வெற்றிகரமாக படம் வெளியானதில் எனக்கு பெரிய ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. என்னை பொறுத்த வரை அரசியலில் ஊழலை எப்படி ஒழிக்க முடியாதோ, அதே போல் சினிமாவில் "கதை திருட்டு"/ஹாலிவுட் படத்தின் தழுவல், போன்றவற்றை ஒழிக்கவே முடியாது. எப்படி ஊழலுடன் வாழ பழகி, அதை சர்வசாதாரணமாக எடுத்து கொள்கிறேனோ, அதே போல் தழுவல்களையும் ஈசியாக எடுத்து கொள்ள பழகி விட்டேன். படத்தின் மூலத்தை தேடி அலைந்து எனது நேரத்தை விரயம் செய்யாமல், படம் நன்றாக இருந்தால் ரசிப்பது, மொக்கையாக இருந்தால் மறந்து விடுவது என்று இருக்கிறேன். இப்பொழுது தாண்டவம் படத்தின் கதை சுருக்கத்தை பார்போம்.

படம் லண்டன் நகரில் ஆரம்பிக்கிறது. லண்டன் நகரில் 2011 வருடம் ஜனவரி 1 ஆம் தேதி காலை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல இடங்களில் வெடி குண்டு வெடிக்கிறது. பல பேர் உயிர் இழக்கிறார்கள். அமெரிக்காவின் செப்டம்பர் -11 போன்ற தாக்குதல் என்று மீடியாக்கள் கூறுகின்றது. குண்டு வெடித்த சரியாய் ஒரு வருடம் கழித்து நகரில் வெவ்வேறு இடங்களில், ஒரே மாதிரி முன்று கொலைகள் நடைபெறுகிறது. கொலைகளை பற்றி துப்பறிய லண்டன் போலீஸ் அதிகாரியாக "வீர கத்தி" என்கிற இலங்கை தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் நாசர் அறிமுகம் ஆகிறார். ஒரு கட்டத்தில் கொலைகளை செய்வது கண் பார்வை அற்ற "கென்னி" (விக்ரம்) என்று தெரிய வருகிறது. கென்னி தனது நான்காவது கொலையை அரங்கேற்றம் செய்யும் வேலையில், படத்தில் இடைவேளை வேண்டி, போலீஸ் கென்னியை சூழ்ந்து கொள்கிறது. இடைவேளை முடிந்ததும் வழக்கம் போல  கென்னி போலீஸ்ஸிடம் இருந்தது தப்பித்து விடுகிறார். 


பிறகு என்ன பிளாஷ்பேக் தான். பிளாஷ்பேகில் கென்னியின் உண்மையான பெயர் சிவகுமார் என்று நமக்கு தெரிகிறது. இந்தியாவின் ரா அமைப்பின் முக்கிய ஆபிசர்  விக்ரம். அவருக்கும் அனுஷ்காவிற்கும் கிராமத்தில் கல்யாணம் நடக்கிறது. விக்ரம் ஏன் இந்தியாவில் இருந்தது லண்டன் வந்தார்..?? ஏன் பெயரை கென்னி என்று மாற்றி கொள்கிறார் ..?? ஏன் கொலை செய்கிறார்..??அவரது கண் பார்வை எப்படி பறி போனது..?? முதல் காட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கும் விக்ரமிருக்கு என்ன சம்பந்தம் ?? குண்டு வைத்து யார்..?? இது போன்ற கேள்விக்கான விடையை அறிய விரும்புவார்கள் "தாண்டவம்" படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கொஞ்சம் பொறுமையாக முன்று மாதம் வெயிட் செய்தால் விஜய் டிவியில் படத்தை போடும் போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Human Echolocation
விக்ரம்- வழக்கம் போல் இந்த படத்திலும் தனது முழு உழைப்பை வாரி வழங்கி உள்ளார். ஒரு துளி கூட குறை சொல்ல முடியாத நடிப்பு. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடுடன் நடிப்பதில் கமலுக்கு அடுத்து தமிழ் திரையுலகில் விக்ரம் தான் என்று கண்ணை முடி சொல்வேன். பார்வை அற்ற கேரக்டரில் விக்ரம் கன கச்சிதமாய் பொருந்துகிறார். கண் தெரியாமல் மனித எதிரொலி இடமாக்கம் (Human Echolocation)என்கிற டெக்னிக் முலம் எதிராளிகளை அடித்து விழுத்துக்கிறார். கண் பார்வை இல்லாதவர்கள் ஒலி எழுப்பி அதில் வரும் ரெஸ்பான்ஸ் வைத்து எதிரில்  யார் இருக்கிறார்கள், என்ன இருக்கிறது என்று அறிந்து அதன் படி நடப்பது தான்  Echolocation டெக்னிக். விக்ரம் இந்த டெக்னிக் முலம் எதிரிகளை வீழ்த்தும் காட்சிகள் நம்பும் படியாக உள்ளன. நிறைய இடங்களில் விக்ரமின் முதுமை, மற்றும் கழுத்தில் சுருக்கம் நன்றாகவே தெரிகிறது. 

அனுஷ்கா- பிளாஷ்பேகில் விக்ரமின் ஜோடியாக வருகிறார். இவருக்கு நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. காட்சிகளும் ரொம்பவே குறைவு தான். இவரும் முத்தின பீஸ் மாதிரி தான் தெரிந்தார். விக்ரம்மிற்கு ஏற்ற ஜோடி. லண்டன் டாக்ஸி டிரைவர் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்து உள்ளார். இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது போல, நிறைய காமெடி மொக்கை ரகம், சில "பேஸ் புக்" ஜோக்ஸ் வேறு உபயோகித்து உள்ளார். சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் இந்தியாவில் எடுத்தது போல் எனக்கு தெரிந்தது. லண்டன் அழகியாக நடித்த எமி ஜாக்சனுக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. சும்மா ஒரு பாடலுக்கு மட்டும் பயன் படுத்தப்பட்டு உள்ளார். சிறிது நேரம் பார்வை இல்லாத விக்ரமை லவ் செய்கிறார், அவ்வளவே. ஜெகபதி பாபு விக்ரமின் நண்பராக வருகிறார்.


G.V பிரகாஷின் சில பாடல்கள் ஏற்கனவே மதராசபட்டினம் படத்தில் கேட்ட மாதிரி இருந்தது. பின்னணி இசையும் அவ்வளவு ஈர்க்கவில்லை, சுமார் ரகம் தான். 
ஒளிப்பதிவு பல இடங்களில் கண்ணுக்கு குளுர்ச்சி. இயக்குனர் நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் குடுக்க வேண்டும் என்று தான் நினைத்து படத்தை எடுத்து உள்ளார். கதையும் அது போல் தான், ஆனால் நிறைய ட்விஸ்ட் என்னால் யூகிக்க முடிந்தது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் படம் இன்னும் சிறப்பாய் வந்து இருக்கும்.

தாண்டவம்- ருத்ர தாண்டவம் ஆகி இருக்க வேண்டியது, ஆனால் ஜஸ்ட் மிஸ்.


45 comments:

 1. நான் பேஸ்புக்கில் சொன்னதையே இங்கும் பகிர்கிறேன்.

  // தமிழ் சினிமாவில் புதிய முயற்சி என்ற பெயரில் பழைய சாதம். ஆயிரம் சினிமாக்களில் பார்த்த அதே பார்முலா. எகோ-லொகேஷன்னு எதோ சொன்னாங்க. அத பத்தின போதின விளக்கம் இல்ல. என்னதான் ட்ரைனிங் எடுத்தாலும் இந்த அளவு பண்றது எல்லாம் கொஞ்சம் ஓவர்.

  படத்துல உருப்படியான விஷயம்னா
  1. கேமரா
  2. அனுஷ்கா

  சந்தானம் இருந்தாலும் பெரிசா ஒரு ரோல் இல்ல. அந்த பிரெண்ட் கரெக்ட்டர் எல்லாம் வில்லன்னு முதல் ஷாட்லையே தெரியுது. அப்பறம் எதுக்கு அதுக்குள்ளே ஒரு ட்விஸ்டு? ச்சே ... பேசாம வீட்ல இருந்து மேட்ச சரி பாத்திருக்கலாம். இந்த படத்துக்கு டிவிடியே போதும்.

  ஆங் மறந்துட்டேன் ... அனுஷ்காவின் தங்கச்சியா வர்றது செம்ம கட்ட ... :) :) //

  ReplyDelete
  Replies
  1. சேம் blood பாஸ்..இன்னும் திரைகதையில் கொஞ்சம் மென கெட்டு இருக்கலாம்.. :):)

   Delete
 2. தமிழக அரசியலில் ஊழலையும், தமிழ் சினிமாவில் கதை திருட்டையும் நாங்கள் சகிக்க பழகிகொள்ளவேண்டும்ன்னு சொன்னீங்க பாருங்க.. சூப்பர்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல..வாழ பழகி கொள்ள வேண்டும் தல..நான் பழகிட்டேன் :):)

   Delete
 3. ///லண்டன் டாக்ஸி டிரைவர் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்து உள்ளார். இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது போல, நிறைய காமெடி மொக்கை ரகம், சில "பேஸ் புக்" ஜோக்ஸ் வேறு உபயோகித்து உள்ளார். சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் இந்தியாவில் எடுத்தது போல் எனக்கு தெரிந்தது////


  தீவிர சந்தானம் ரசிகர்கள் ஆன நமக்கு, இதுல கொஞ்சம் கூட உடன்பாடு இல்ல.. இருந்தாலும் உங்கள் கருத்து இப்புடி இருந்தா, நாங்க என்ன பண்ணுரதாம்??


  ஆனாலும் இதுவரையும் படத்த பார்க்காத நான் எதுவும் சொல்ல விரும்பல...

  ReplyDelete
  Replies
  1. தல படத்துல ரெண்டே பேருக்கு தன் விசில் அடிச்சாங்க ..அதுல சந்தானதுக்கு தான் செம விசில். நானும் சந்தானம் தீவிர பேன், கவுண்டர் ரசிகனா இருந்து இப்ப சந்தானம் விசிறியா மாறி இருக்கேன்.
   OKOK, பாஸ் என்கிற பாஸ்கரன் , தெய்வ திருமகன் அளவுக்கு இதுல சந்தானம் கவுன்ட்டர் இல்ல, ரொம்பவே சுமார் ரகம் தான். ரெண்டு முனு இடத்துல தான் நல்லா இருந்திச்சு.

   Delete
  2. அதுக்கு மெயின் காரணம் என்னன்னா.. நம்ம சந்தானத்திற்கு ஹீரோ-காமெடியன் கவுன்ட்டர் டயலாக் பாணி தான் சூப்பர்'ஆ ஒர்க்அவுட் ஆகும்.. இதுக்கு அதுல வாய்ப்பு இருக்கலன்னு நம்ம சந்தானமே சொல்லி இருந்தாரு.. விடுங்க விடுங்க..

   Delete
 4. ராஜ்,

  ஹுமன் எக்கோலேஷன் கூட டேர் டெவில் படத்தில் இருந்து சுட்டது ,கதை கூட அதுவா இருக்கலாம், அப்பாவை கொன்னவங்களை கண்ணு தெரியாத பென் அஃப்லேக் பழி வாங்குவார் :-))

  அதே சமயம் அவ்ரோட காதலியையும் வில்லன் அடியால் காலின் பேரல் கொன்னுடுவார் சோ எல்லாத்துக்கும் சேர்த்து பழி வாங்குவார்.

  ஜகபதி பாபு கேரக்டர் மட்டும் தான் புதுசு.

  டான் பிரவுனின் டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் கதையில் இதே போல வரும், கண்ணு தெரியாத கொலைகாரன் ஆனால் வில்லன், ஹீரோவை தொறத்திக்கிட்டு இருப்பான், அவனுக்கு தகவல் கொடுப்பது ஹீரோவின் நண்பன் என.

  எனவே நாவல், படம் என சுட்டு கலந்து கட்டி எடுத்து ஆடவிட்டு இருப்பாங்க போல. இன்னும் படம் பார்க்கவில்லை பார்த்தால் ஏகப்பட்ட "சுட்ட மேட்டர்" வரும் போல :-))

  ReplyDelete
  Replies
  1. வாங்க வவ்வால், டேர் டெவில் படம் நான் பார்த்து இருக்கேன். அதுவும் இதுவும் வேற வேற கதை. டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் படிச்சது இல்ல...
   "தாம் தும்" என்று ஜெயம் ரவி படம் முனு வருஷம் முன்னாடி வந்துச்சு, எனக்கு தாண்டவம் படம் பார்க்கும் போது "தாம் தும்" படம் தான் ஞாபகம் வந்திச்சு.... கிட்ட தட்ட அதே கான்செப்ட் தான் ரெண்டு படத்துக்கும்.. கேஸ் போடறது னா "தாம் தும்" பட டைரக்டர் தான் போடணும்.ஆனா பாவம் அவர் இப்ப இல்ல, இறந்துட்டார்.... :)
   படம் பாருங்க..பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.. :)

   Delete
 5. ஹி...ஹி சொல்ல மறந்துட்டேன் ,தமிழ் சினிமா பார்த்தால் நியாபக சக்தி தூண்டப்படும் :-))

  பழசை எல்லாம் நினைத்து பார்த்தால் நல்ல மெமரி பவர் வருமாம் :-))

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா வரும்..எனக்கு பழைய படம் ஞாபகம் எல்லாம் வந்திச்சு.. :):)

   Delete
 6. படம் பார்க்கலாமா...? இல்லை நீங்கள் சொல்வது போல் மூன்று மாதம் கழித்து தொ(ல்)லைக்காட்சியில் பார்க்கலாமா...? என்று குழப்பம் வந்து விட்டது...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார் ..டிவி யில போடும் போது பாருங்க தனபாலன் சார்..

   Delete
 7. நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்.. வாழ்த்துக்கள்

  நன்றி பாஸ்... என் தளத்திற்கு வந்து பின்னூட்டம் இட்டமைக்கு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி Balamurugan..என்ன பாஸ் அந்த பதிவை நீக்கி விட்டீர்கள்.. :(

   Delete
 8. எப்படி என்றாலும் விக்கி வருசத்துக்கு 2 படமாவது நடிக்க இனி முயற்சிக்க வேணும்.. இல்லாட்டா வரலாற்றுல விமர்சனகள் செறிந்த அவேரேஜ் படங்களே அதிகம் இருக்கும்.. மற்றபடி விமர்சனம் கலக்கல்

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஹாரி, விக்ரமிருக்கு வயசு ஆகிருச்சு. ரெண்டு வருஷம் எடுத்து ஒரு மொக்கை படம் குடுக்கிறதுக்கு, அதே ரெண்டு வருஷத்துல நாளு படம் பண்ணலாம்.

   Delete
 9. இன்னைக்கு போகலாம்ன்னு இருந்தேன் இப்படி எல்லாம் கொடூரமா இருக்குன்னு சொல்றிங்க.., வில் வெயிட் ஃபார் சன் டீவி :)

  ReplyDelete
  Replies
  1. வொர்த் வெயிட்டிங்.. :)

   Delete
 10. நான் இன்னும் படம் பாக்கல... அதனால விமர்சனத்தையும் மேலோட்டமா தான் படிச்சேன் :-)

  கண் தெரியாத நபர் தனது காதுகளையே கண்களாக உபயோகிப்பதாக ஏற்கனவே தமிழிலேயே ஒரு படம் வந்துள்ளது. பண்டி சரோஜ் குமார் என்பவர் இயக்கிய "போர்க்களம்". நல்ல படம். நேரம் இருப்பின் நச்சயம் பாருங்க தல. நான் YouTubeல தான் பார்த்தேன். லின்க் - http://www.youtube.com/watch?v=uMLo26r-QVU இவரது ஷாட்ஸ், ஒளிப்பதிவு அருமையாக இருக்கும். இந்த 'ஏக்கோ' சமாச்சாரத்திற்கு நல்ல விளக்கம் இருக்கும். இந்த மாதிரி படங்கள் வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை. இந்த இயக்குனரது சமீபத்திய படம் "அஸ்தமனம்". அது இன்னமும் பாக்கல...

  ReplyDelete
  Replies
  1. தல,
   "போர்க்களம்" படம் வந்த அப்ப சன் டிவியில விளம்பரம் பார்த்தேன் தல..making ரொம்ப வித்தியாசமா இருந்தது. ஒரு மாதிரி black & White ஸ்டைல்ல. அந்த லிங்க்ல பார்க்கிறேன். அஸ்தமனம் 75 mins படம் என்று wiki சொல்கிறது..அதையும் பார்போம்.. :)
   அப்புறம் தாண்டவம் பார்த்திட்டு கருத்தை சொல்லுங்க..அட்லீஸ்ட் ஒரு வரி கருத்தாவது...

   Delete
 11. தாண்டவம் படத்தை நான் புறக்கணித்துவிட்டேன்... தெய்வத்திருமகளும் பார்க்கவில்லை... இனிவரும் இயக்குனர் விஜய் படங்கள் எதையும் பார்க்கமாட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. பிரபா,
   நான் எல்லா படமும் பார்த்து பழகிட்டேன் :)

   Delete
 12. // படத்தில் இடைவேளை வேண்டி, போலீஸ் கென்னியை சூழ்ந்து கொள்கிறது. இடைவேளை முடிந்ததும் வழக்கம் போல கென்னி போலீஸ்ஸிடம் இருந்தது தப்பித்து விடுகிறார்.
  // ஹா ஹா ஹா சூப்பர் தல

  தல மோஸ்ட்லி நாம ரெண்டு பெரும் ஒரே மாதிரி எழுதி இருக்கோம், நல்ல சுவாரசியமா எழுதி இருக்கீங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றி மச்சி..same freq..

   Delete
 13. அனுஷ்காவை பற்றி நீங்க எழுதியது தான் நண்பா வருத்தமா இருக்கு :)

  ReplyDelete
  Replies
  1. சார்,
   உண்மையிலே அந்த அம்மா ஆண்டி மாதிரி தான் இருந்தாங்க.. :)

   Delete
 14. இப்போ எல்லாம் த்ரில்லர் படங்கள் தமிழில் மொக்கையா தான் இருக்கு....... பழைய தமிழ் த்ரில்லர் படங்களே மிகவும் நன்றாக இருக்கும்....படம் பத்தி எந்த அறிவுப்பும் இல்ல....திடிர்னு ரிலீஸ் பண்ணி இருகாங்க.....

  ReplyDelete
  Replies
  1. வாங்க அருண்...நல்ல பிரேக்கு அப்புறம் மீண்டும் வந்துடீங்க.. சிக்கிரமே பதிவை போடுங்க...
   இல்ல அருண்..தாண்டவம் படத்துக்கு நல்லா தான் விளம்பரம் பண்ணுனாங்க.

   Delete
 15. //கொஞ்சம் பொறுமையாக முன்று மாதம் வெயிட் செய்தால் விஜய் டிவியில் படத்தை போடும் போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.//
  இதுக்கு மேல விமர்சனம் தேவை இல்லை. புரிஞ்சி போச்சு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி MURALIDHARAN...

   Delete
 16. படம் மிஸ் ஆகும்னு ஓரளவு மொதல்லயே தெரிஞ்சிருச்சு.. ஆனா விக்ரமுக்காக போய் பார்க்கலாமுன்னு இருக்கேன்!

  ReplyDelete
  Replies
  1. விக்ரம் மட்டும் தான் ஒரே ஆறுதல் பாஸ்..

   Delete
 17. இவர்கள் வேறு படத்தை காப்பி செய்து எடுப்பதை கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் தானே கதையை எழுதியது போலவும் , இதற்கு முன் இப்படி ஒரு கதையை யாரும் எடுக்கவில்லை என்பது போலவும் செய்யும் பில்ட்ப் வேலைகளை பார்க்கும் போது தான் கடுப்பாகிறது.

  சரி காப்பி அடித்து விட்டார்கள் நன்றாக எடுத்திருப்பார்கள் தமிழில் வித்தியாசமான கதையை பார்த்து ரசிக்கலாம் என்றால் அதுவும் கிடையாது

  ReplyDelete
  Replies
  1. வாங்க லக்கி..
   அது உண்மை தான்..காப்பி/தழுவல் செஞ்சாலும் அதையும் உருப்படியா பண்ணுனா பரவாயில்லை. அதுலயும் நிறைய சொதப்பல்..

   Delete
 18. I have't seen the movie yet but I think they had copied film Zatoichi for fighting concept.

  ReplyDelete
  Replies
  1. I havent seen Zatoichi..but looks like "Zatoichi" is about blind swordsman.
   Thanks for your visit and comments..

   Delete
 19. சில வேலைகள் இருந்ததால் இரண்டு நாட்களாக ப்ளாக் பக்கமே வர முடியவில்லை.இப்போதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்.திங்கள் கிழமை தான் படம் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.பார்த்துவிட்டு எழுதுகிறேன் .படம் ரொம்ப சுமார் தான் போல. எல்லாரும் அப்படிதான் எழுதி இருக்கிறார்கள்.இந்த படமும் அவ்வளவுதான? இந்த வருஷம் எதிர்பார்த்த படங்கள்(சகுனி,பில்லா,முகமுடி ) எல்லாமே அவுட் .

  ReplyDelete
  Replies
  1. பாருங்க விஜய்...பார்த்திட்டு எழுதுங்க..இன்னும் மாற்றான், விஸ்வருபம், துப்பாக்கி இருக்கு..வெயிட் பண்ணுங்க..

   Delete
 20. sify விமர்சனம் பார்த்து ஏமாந்து நாளை இரவுக்காட்சி புக் பணிடனே பாஸ்.
  விதி யார விட்டது.ஒரே ஆறுதல் அனுஷ்கா.அதுவும் கொஞ்சநேரம் தான் போல.
  சரி விடுங்க.ஏன் நல்ல இல்லைன்னு நானும் பாத்துட்டு வரேன்.

  ReplyDelete
 21. இந்த படமும் புட்டுகிச்சு விக்ரம் எக்கோ டெக்னாலஜி நல்லா இருந்தது இருந்தாலும் நம்ப முடியலை சந்தானம் காமெடி அவ்வளவாய் இல்லை......

  ReplyDelete
 22. எக்கோ டெக்னாலஜி பத்தி ஏற்கனவே டிஸ்கவரில ஒளிபரப்பிருக்காக்க சகோ,,, உண்மைதான்.. என்ன படத்தில் கொஞ்சம் ஒப்பனை அதிகம்...


  ReplyDelete
 23. இதுவும் சுமார்தானா? அதான் என்னைப் போல கொஞ்சம் பழசான நல்ல படங்களை பார்க்கப் பழகிடணும் ... டவுன்லோட் quality நன்றாக இருக்கும் ...
  நம்ம விமர்சனம்
  http://varikudhirai.blogspot.com/2012/10/blog-post.html

  ReplyDelete
 24. ரொம்ப தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.சரியான விமர்சனம் ராஜ்..நல்ல சினிமாவை விரும்புவன் நான்.அதனால்தான் என்னவோ தாண்டவம் மாதிரி படங்களை ஏற்க மனம் மறுக்கிறது.நிறையவே எதிர்ப்பார்த்தேன்.வழக்கம் போல ஏமாற்றம் தான்..ஒரே மாதிரியான கதை, காட்சிகள் அதில் டிவிஸ்ட்டுகள் என்று எத்தனை காலம் ஏமாற்றுவார்கள்.நல்ல விமர்சனம்.தொடருங்கள்..நன்றி.

  ReplyDelete
 25. First murder scene-- lifted from a tom cruise movie, Taxi is the name I think, Family dying in bomb blast and following revenge concept.... from collateral damage, I dont know exactly which film they adapted for the blind man concept. So, see the advantage here, we can watch "multiple" hollywood blockbusters in one go!!!. BTW, dhaam dhoom is relicate of Richard Gere's Red corner.

  ReplyDelete