இரண்டாம் உலக போரை மையபடுத்தி எத்தனையோ வீடியோ கேம்ஸ் வந்து இருந்தாலும், "The Saboteur" அளவுக்கு எந்த கேமும் என்னை கவர்ந்தது இல்லை. Saboteur என்றால் "நாச வேலை செய்பவர்" என்று பொருள், நாம் அதை புரட்சிக்காரன் அல்லது கலகக்காரன் என்று வைத்து கொள்வோம். கேம் பற்றி பார்க்கும் முன்பு இணையத்தில் உலாவும் சில வகையான புரட்சியாளர்களை பற்றி பார்போம். புரட்சியாளர்களில் பல வகைகள் உண்டு. முதலில் இணையத்தில் உலாவும் வீக் எண்ட் புரட்சியாளர்கள் பற்றி பார்போம். இவர்கள் வாரம் ஐந்து நாளும் அமைதியாக இருந்து விட்டு சனி மற்றும் ஞாயற்று கிழமைகளில் மட்டும் புரட்சி செய்வார்கள்.இவர்கள் 90% பேர் உழலை ஒழிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். அடுத்த குரூப், 24 மணி நேரமும் இணையத்தில் இருந்து கொண்டு, ஏதாவது பேக் பெயரில் ********* போராளி குழு பக்கம் என்று ஒன்றை பேஸ் புக்கில் ஆரம்பித்து, அடுத்த நாட்டுக்கு விடுதலை வாங்கியே தருவேன் என்று அடம் பிடிப்பார்கள். இவர்கள் பண்ணும் அலப்பறைகள் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது. அடுத்து சே குவாரா அல்லது பிரபாகரன் போட்டோவை ப்ரோபைல் போட்டோவாக வைத்து கொண்டு இந்தியாவை ஆளும் மத்திய அரசு, மாநில அரசு மட்டுமல்லாது அமெரிக்காவை ஆளும் ஜனநாயக கட்சி வரை திட்டி தீர்க்கும் புரட்சியாளர்கள், ஏன்யா கண்டபடி எல்லாரையும் திட்டுறே என்று கேட்டல், நீங்கள தொலைந்தீர்கள், உங்களுக்கு வசைவு விழும். வினவு குரூப்பை இந்த லிஸ்டில் சேர்க்கலாம்.
இன்னும் சில போராளிகள் இருக்கிறார்கள். உலக மேப்பில் பாலஸ்தீனம், இஸ்ரேல் என்கிற நாடு எங்கிருக்கு என்று கூட தெரியாமல், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே சொம்பு, ஆலமரம் இல்லாமல் பஞ்சாயத்து செய்யும் புரட்சியாளர்கள். இவர்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் ஏதாவது புரட்சி செய்ய வேண்டும், அந்நிய சக்தியால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தை மீட்டக வேண்டும் என்கிற வெறி வந்தது. எனது புரட்சி வெறியை The Saboteur என்கிற கேம் தீர்த்து வைத்து. இந்த கேம்மில் நீங்கள் விடுதலை வாங்கி குடுக்க வேண்டிய நகரம் "பாரிஸ்". இரண்டாம் உலக போரின் ஆரம்பத்தில் ஜெர்மன் நாஜிகளின் பிடியில் அடைபட்டு கிடக்கும் பாரிஸ் நகரத்தை நீங்கள் புரட்சிபடையுடன் சேர்ந்து மீட்பது தான் கேம். 90% வீடியோ கேம்மில் இருப்பது போல் இதிலும் ஹிட்லரின் நாஜிகள் தான் வில்லன்கள். வழக்கம் போல் அணைத்து நாஜிகளை ஒழித்து நீங்கள் வெற்றி கொடியை நாட்ட வேண்டும்.
கேம் ப்ளாட்:
கதை ஜெர்மன் ஆக்கிரமிப்பு பிரான்சில் நடைபெறும். நீங்க இதில் விளையாட போகும் கதாபாத்திரத்தின் பெயர் சீன் டெவ்லின் (Sean Devlin ). அடிப்படையில் டெவ்லின் எதற்கும் அதிகம் அலட்டிகொள்ளாத, குடியை விரும்பும் ரேஸ் கார் மெக்கானிக். டெவ்லின் ஐரிஷ் நாட்டை சேர்ந்தவர். இரண்டாம் உலக போரின் கலந்து கொள்ளாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது நடக்கும் "கிராண்ட் பிரிக்ஸ்" கார் பந்தயத்தில் கலந்து கொள்வார். அப்படி ஒரு முறை சார்ப்ருக்கேன் (Saarbrücken) நகரத்தில் நடக்கும் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் கலந்து கொள்கிறார். அதே பந்தயத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த நாஜி கர்னல் கர்ட் டீர்கர் கூட (Kurt Dierker) கலந்து கொள்கிறான்.அனைவரும் நாஜி கர்னல் தான் கார் பந்தையத்தில் ஜெயிப்பார் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது, புயலாக புகுந்து சீன் டெவ்லின் கார் பந்தயத்தில் நாஜி கர்னலை ஓவர் டேக் செய்து ஜெயிக்கும் நிலைக்கு வந்து விடுகிறான். கோபம் கொண்ட கர்னல் பந்தயத்தின் போது டெவ்லின் காரை சுட்டு சேத படுத்தி விடுகிறான். பிறகு கர்னல் பந்தயத்தில் ஜெயித்தும் விடுகிறான்.
தன்னை ஏமாற்றி வெற்றி கொண்ட கர்னலை பழி வாங்கும் பொருட்டு டெவ்லின் மற்றும் அவனது நண்பன் ஜூல்ஸ் இருவரும் சேர்ந்து, கர்னல் பரிசாக பெற்ற காரை திருடி மலையில் இருந்தது உருட்டி வெடிக்க செய்து விடுகிறார்கள். அதன் பிறகு இருவரையும் கைது செய்யும் கர்னல், அதில் ஜூல்ஸ்சை சித்ரவதை செய்து கொன்று விடுகிறான். நாஜிகளிடம் இருந்தது தப்பிக்கும் டெவ்லின், பாரிஸ் நகரத்திருக்கு சென்று அங்கு ஏற்கனவே நாஜிகளை எதிர்த்து போராடி வரும் பிரஞ்சு புரட்சி படையினர் உடன் சேர்ந்து நாசிகளுக்கு எதிராக நிறைய நாச வேலைகள் செய்து, மெல்ல நாஜிகள் பிடியில் இருந்தது பாரிஸ் நகரத்தை மீட்டு இறுதியில் மெயின் வில்லன் கர்ட் டீர்கரை கொன்று தன் நண்பனின் கொலைக்கு பழி வாங்குவது உடன் கேம் நிறைவு பெறுகிறது.
கேம் ப்ளே:
The Saboteur அற்புதமான் கேம் ப்ளே அனுபவத்தை குடுக்கும். கதை 1940 நடப்பதால், கேம் கிராபிக்ஸ் கூட அந்த காலத்திற்கு ஏற்றார் போல் செய்து இருப்பார்கள். பாரிஸ் நகரம், மற்றும் அதன் வீடுகள், கார்கள், என்று அனைத்துமே நமக்கு பழைய காலத்தை ஞாபக படுத்தும். GTA போல் இதுவும் ஓபன் வேர்ல்ட் ப்ரீ ரோம் (Free Roam) கேம். நகரத்தில் உலா வரும் பொழுது நமக்கு பிடித்த காரை நிறுத்தி, அதில் ஏறி கொள்ளலாம். அதே காரை கொண்டு நமக்கு வேண்டிய இடத்திருக்கு செல்லலாம். பாரிஸ் நகரத்தில் நாஜிக்களின் ஆதிக்கத்தின் இருக்கும் பகுதிகள் கருப்பு- வெள்ளை கலரில் இருக்கும். அங்கு நாம் மிகவும் ஜாக்கிரதையாக நடமாட வேண்டும். நாஜிகளுக்கு சிறிது சந்தேகம் வந்தாலும் நாம் காலி. அந்த பகுதிகளில் டெவ்லின் புரட்சி செய்து, அங்கு உள்ள நாஜிகளை விரட்டி அடித்தவுடன் அதே பகுதி கலராக மாறி விடும். அதற்கு அந்த பகுதியில் உள்ள இராணுவ தளங்களை அழிக்க வேண்டும். அதை பல்வேறு மிஷன் முலம் செய்ய வேண்டும். வண்ண பகுதிகளில் நாஜிகளின் கெடுபிடிகள் அதிகம் இருக்காது. அங்கு நாம் தைரியமாக நடமாடலாம்.
கேம் முழுவதும், டெவ்லின் கதாபாத்திரத்தை "சலுகைகளை"(Perk) வடிவில் மேம்படுத்த முடியும். Perk ஒவ்வொரு மிஷன் முடிக்கும் போது நமக்கு குடுக்க படும். இதன் முலம் டெவ்லினின் ammo, குறி பார்த்து சுடும் திறன், கட்டிடங்களில் வேகமாக ஏறும் திறன் போன்றவற்றை மேம்படுத்தி கொள்ளலாம். மிகவும் இக்கட்டான் நிலையில் நாஜி வீரரை கொன்று அவரது சீருடையை நாம் போட்டு கொண்டு இரகசியமான அந்த இடத்தை விட்டு தப்பித்து போய் விடலாம். நாஜிகள் போல் மாறுவேடம் போட்டு நாம் தப்பிக்கும் இடங்கள் மிகவும் சுவாரிசியமாக இருக்கும். இறுதியாக பாரிஸ் நகரத்தில் உள்ள அணைத்து பகுதிகளை வண்ண மயமாக மாற்றி, பாரிஸ்க்கு விடுதலை வாங்கி குடுத்த பிறகு, மெயின் வில்லன் கர்னல் கர்ட் டீர்கரை நிறைய போராட்டத்திற்க்கு பிறகு இறுதி அத்தியாத்தில் கொல்ல வேண்டியது வரும்.
இந்த கேம்மை உருவாக்கியவர்கள் பான்டமிக் ஸ்டுடியோஸ் (Pandemic Studios), இவர்கள் உருவாக்கிய கடைசி கேம் இது தான், அதன் பிறகு இவர்கள் கடையை முடி விட்டார்கள். கேம்மை வெளியிட்டவர்கள் Electronic Arts. சரியான மார்க்கெட்டிங் இல்லாதனால் கேம் நிறைய மக்களை சென்றடைய வில்லை. ஆனால் Saboteur அற்புதமான வீடியோ கேம். GTA பாணியில் புரட்சி செய்ய விரும்புவோர்கள்,ஆக்சன் பிரியர்கள் தவற விட கூடாத கேம்.
கேமில் சில இடங்களில் நிர்வான காட்சிகள் இடம் பெறுவதால் இதற்க்கு ESRB ரேட்டிங் M (Mature 17+) குடுத்து உள்ளது.
My Rating: 8.5/10
கேம் பற்றிய விமர்சனம் நன்றாக இருந்தது.
ReplyDeleteநான் இந்த கேம் பற்றி கேள்விப்படவில்லை.
அதற்கு காரணம் நீங்கள் கூறியதாக இருக்கலாம்.
நான் சமீபமாக மேக்ஸ் பெயின் 3 விளையாடினேன்.
அதுவும் நன்றாகவே இருந்தது.
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
என்னிடம் Max Payne-3 உள்ளது நண்பரே..இன்னும் விளையாட ஆரம்பிக்க இல்லை. RockStar கேம்ஸின் தீவிர ரசிகன் நான். :)
Deleteபுரட்சியாளர்கள் பற்றிய முன்னுரை அருமை..
ReplyDeleteகார் ரேசில் ஆரம்பித்து வேர்ல்ட் வாரின் முடிகிறது கதை..
மிகவும் அருமையாக உள்ளது விமர்சனம்....
வருகைக்கு நன்றி நண்பரே..
Deleteஇது Fisrt Person Shooter கேம் ஆ இல்ல Third Person Shooter GaMe ஆ? படங்கள் எல்லாம் வீடியோவுல இருந்து எடுத்தது மாதிரி இருக்கு அதான் கேட்டேன்:)
ReplyDeleteஅப்படியே சிஸ்டம் Requirements பத்தியும் சொல்லிட்டிங்கண்ணா என்னய மாதிரி 20 ஆயிரம் ரூபாய்க்கு லாப்டாப் வாங்கி வச்சுருக்கவங்க எல்லாம் தேவையில்லாம டவுன்லோட் பண்ணி நேரத்த வேஸ்ட் ஆக்க மாட்டாங்க :)
போராளிகள் பத்தின பத்தி சூப்பரா இருந்துச்சு தல :)
தல,
Deleteஇது TPS (Thrid Person Shooter) கேம், GTA மாதிரியே இருக்கும்....இனி மேல் சிஸ்டம் requirement கூட குடுக்கிறேன். நான் இதை Xbox-360 ல விளையாடினேன். இப்ப வர கேம்க்கு தான் advanced graphics card வேணும், அதனாலே கொஞ்சம் பழைய கேம் ஆ பார்த்து எழுதினேன் :). Xbox வாங்குங்க தல, கிராபிக்ஸ் கார்டு பிரச்னையே வராது... :)
ReplyDeleteOS: Windows XP SP3, Windows Vista SP1, Windows 7
CPU: Core 2 Dual Core 2.4GHz or AMD equivalent
RAM: 2GB or more
DISC DRIVE: Dual Layer 1x or faster DVD Drive
Hard Drive: At least 7GB of free space
Video: Nvidia Geforce 7800 GTX with 256MB of VRAM or ATI Radeon HD 2600 Pro with 256MB of VRAM
Sound: Direct X 9.0c compatible sound card
எனக்கு சூட் ஆகாது.... காலம் பூராவுல் ஃப்லாஷ் கேம் தான் வெளையாடனும் போல :(
நல்ல 'கிக்'கோடு எழுதியிருக்கிறீர்கள் நண்பா.. எப்ப எடுத்து விளையாட முடியுமோ தெரியாது.. ஆனாலும் தெரிஞ்சு வைச்சிருக்கது நல்லதே!
ReplyDeleteவாய்ப்பு கிடைச்சால் விளையாடுங்க தல, ரொம்ப நல்ல டைம் பாஸ், கேம்..செம த்ரிலா இருக்கும்..
Deleteவீடியோ கேம்-ல் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை.
ReplyDeleteநீங்கள் எழுதி இருப்பதை பார்த்தால், எனக்கும் விளையாட ஆசை வந்து விட்டது..
Soon i ll purchase xbox or ps3 to play this game.
thanks Raj.
TM5
Deleteரொம்பத் தீவிரமா கேமிங்கில் ஈடுபட்டிருந்தபோது (கேம் வந்த டைமில்) விளையாடிய ஞாபகம். பேக்டரிக்குள் ஊடுருவுவது, குண்டு வைப்பது, ரேஸ் போவது என செம என்டர்டெயினிங்கான கேம். GTA அளவுக்கு ஈர்க்கவில்லை. ஆனாலும் ஃபன்.
ReplyDeleteஹ்ம் ... இப்போ படம் பார்க்கவே நேரமில்லை. கேம் எல்லாம் யோசிச்சுப் பார்க்கவே....ப்ச்..விடுங்க பாஸ். ரொம்ப ஃபீலாகுது. :(
hi
ReplyDeleteyou have written so well that i want to dump my pc games and purchase xbox 360,
but i heard that xbox games are very costly. where do you buy the games or do you download from net ?
Hi Shylendar,
ReplyDeleteYes, Xbox games are costly in range from 1000 ~3,000 per game. But I got my Xbox-360 from US 4 yrs ago, and have cracked it here in Hyderabad, they charge 800 for cracking (Mod Xbox), I have never faced any issues with cracked xbox, it works fine.. I get cracked games in the same shop for rs-100/, for some games i used to download from net and write it in CD, but mostly it doesn't work or the CD gets spoiled.
Some shops even sell cracked Xbox360..
Write to me @ raj.zte@gmail.com if u need more info on Mod Xbox...
Thanks for visiting my blog.. :)
Thank you raj :) surely will write to your email id
ReplyDeleteand i loved your game reviews.
keep writing them :)