Thursday, June 07, 2012

கமல்ஹாசன்- கடவுளா?? மிருகமா???

பதிவிற்கான சில தகவல்கள் Facebook மற்றும் இந்த "IMDB" தளத்தில் இருந்தது பெற பட்டு உள்ளது.
இந்திய சினிமா வரலாற்றில் கமல்ஹாசன் என்ற ஒரு நடிகருக்கு தவிர்க்க முடியாத இடம் ஒன்று உள்ளது. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்துக்கு எடுத்து சென்றதில், சென்றுகொண்டு இருபதில் கமல் மாதிரி ஒரு கலைஞனை இது வரை நான் கண்டது இல்லை. SMS படத்துல சந்தானம் சொல்லற மாதிரி "நல்லவங்க கருத்து ரீச் ஆகும், ஆனா என்ன கொஞ்சம் லேட்டா ரீச் ஆகும்"..... கமல் படம் கண்டிப்பா மக்களை ரீச் ஆகும், என்ன ரொம்ப ரொம்ப லேட்டா KTV முலமா ரீச் ஆகும். அன்பே சிவம், குணா போன்ற படங்களை லேட் ரீச்க்கு நல்ல உதாரணமாக சொல்லாம்.

KTVயில ஓடுன நாட்கள் கூட இந்த படங்கள் தியேட்டரில் ஓடவில்லை. ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் போல நல்ல திரைப்படங்கள் தர வேண்டும் என்ற எண்ணத்தை கமல் ஒருபொழுதும் மாற்றி கொண்டதே இல்லை. சினிமாவில் சம்பாரித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்யும் சில மனிதர்களில் கமலும் ஒருவர். கமல் அளவுக்கு எந்த நடிகருக்கும் படங்கள் ப்ளாப் ஆனது கிடையாது. மாபெரும் பொருட்செலவில் கமல் எடுத்த சில படங்கள் அதள பாதாளத்தில் விழுந்து உள்ளன உ.தா: ஆளவந்தான். சில படங்கள் வெறும் ரெண்டே நாள் மட்டும் ஓடி வரலாற்று சாதனை புரிந்து உள்ளன. உ.தா: மும்பை எக்ஸ்பிரஸ்.இப்படியாக நிறைய நல்ல/கெட்ட விஷயங்கள் கமலை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.
கமல் செய்யாத சாதனைகளே கிடையாது. சில சாதனைகள் இதோ:

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார். விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.தான் சினிமாவில் சம்பாத்திதை சினிமாவிலே முதலீடு செய்யும் ஒரு சிலரில் கமலும் ஒருவர்.

• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.


இவ்வளவு சாதனைகள் நிகழ்த்திய பிறகும், இத்தனை விருதுகள் வாங்கி குவித்த பிறகும் இணையத்தில் கமல் மீது நிறைய குற்றச்சாற்று வைக்க படுவதை பார்கிறேன். அவர் பாமர ரசிகனுக்கு புரியாத மாதிரி படம் எடுக்கிறார் என்பது முதல் குற்றச்சாற்று. ஹே ராம்: புரியாத படத்திற்கு நல்ல உதாரணம். அப்புறம் ஆங்கில படங்களில் இருந்து காப்பி அடிக்கிறார் என்று. கமல் காப்பி அடிப்பதை எப்பொழுதும் மறுத்ததும் கிடையாது, அதை ஆமோதித்ததும் கிடையாது. அவர் காப்பி அடித்தது/தழுவி எடுத்த என்று சொல்லப்படுகிற சில படங்களை பற்றி கீழே குடுத்து உள்ளேன். கமல் தன் கலை பயணத்தில் ஆங்கில படங்களை தழுவி தமிழில் எடுத்த படங்கள் இதோ:

Witness (1985):
Indiana Jones புகழ் ஹாரிசன் ஃபோர்டு நடித்த இந்த படத்தில் ஒரு கொலை நடந்து விடும், அந்த கொலைக்கு சாட்சி 8 வயது சிறுவன். ஹீரோ ஃபோர்டு போலீஸ் அதிகாரி. சிறுவனின் சாட்சியை வைத்து ஃபோர்டு கொலையாளியை பிடிப்பது தான் படத்தின் கதை. படம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
இதே போன்ற ப்ளாட் கொண்ட படம் சூரசம்ஹாரம். கமல் இதில் போலீஸ் ஆக நடித்து இருப்பார். நிழல்கள் ரவியின் கொலையை நேரில் பார்த்த சாட்சி ஒரு சிறுவன். அந்த சிறுவனின் உதவியால் கமல் கொலைகாரர்களை பிடிக்கும் படி கதை அமைக்க பட்டு இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த கமல் படங்களில் இதுவும் ஒன்று. வெளியான ஆண்டு 1988.

She-Devil (1989):
குண்டாய் இருக்கும் மாணவி, வழி தவறி வேறு ஒரு பெண்ணின் பின்னல் போகும் தன் கணவனை பழிக்கு பழி வாங்குவது தான் கதை.
சதிலீலாவதி She-Devil-ளின் தழுவல் என்று சொல்லலாம். இந்த படத்தில் கமலின் ஆஸ்தான செகண்ட் ஹீரோ ரமேஷ் அரவிந்த் நடித்து இருப்பார். குண்டாய் இருக்கும் கதாநாயகி கல்பனா, வழி தவறி போகும் தன் கணவனை தன் வழிக்கு கொண்டு வருவது தான் சதிலீலாவதி. கமல் இதில் கோவை சரளாவுடன் நடித்து புரட்சி செய்து இருப்பார். படம் வெளியான ஆண்டு 1995.

The Bachelor (1999):
ஹீரோ கல்யாணமே வேண்டாம் என்று இருக்கும் ஒரு பிரம்மச்சாரி, தன் தாத்தாவின் $100 மில்லியன் சொத்தை அடைய வேண்டும் என்றால் தனது 30 ஆவது பிறந்தநாளில் மாலை 6:05 மணிக்குள் திருமணம் செய்து இருக்க வேண்டும். ஹீரோவின் 30 ஆவது பிறந்த நாள் நாளை மறுநாள். ஹீரோவிடம் இருப்பதோ ஒரே நாள், இந்த ஒரு நாளில் அவன் தன் முன்னாள் காதலியை கை பிடித்தானா என்பதை மிகவும் நகைச்சுவை உடன் சொன்ன படம் தான் The Bachelor.
இதே போன்ற கதை அமைப்பு கொண்ட படம் "பம்மல் கே. சம்பந்தம்-(2002). தன் தாத்தாவின் மேன்ஷன் கமலுக்கு வர வேண்டும் என்றால் குறிபிட்ட நேரத்துக்குள் கமல் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். இந்த கான்செப்ட்-ஐ மட்டும் எடுத்து கொண்டு கமல் குடுத்த படம் தான் பம்மல் கே. மௌலி இதை டைரக்ட் செய்து இருப்பார்.

Nine to Five (1980):
முன்று கதாநாயகிகள் சப்ஜெக்ட். அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தின் மேனேஜர் ஒரு சபலிஸ்ட். தனக்கு கீழே வேலை செய்யும் பெண் ஊழியர்கள்யிடம் தவறாக நடக்க முயற்சி செய்பவன். தனக்கு ஒத்துழைப்பு அளிக்காத பெண் ஊழியர்களை காரணமே இல்லாமல் வேலையை விட்டு நீக்கி விடுவான். முன்று கதாநாயகிகள் ஒன்று சேர்ந்து சபலிஸ்ட் மேனேஜர் குடுக்கும் செக்ஷுவல் தொல்லைகளில் இருந்து தப்பித்து தங்கள் அலுவலகத்தில் உள்ள மற்ற பெண்களையும் எப்படி காப்ற்றுகிறார்கள் என்பதை மிகவும் நகைச்சுவை உடன் சொன்ன படம் தான் Nine to Five.
இதே கதையை கொண்டு கமல் தயாரித்த படம் தான் "மகளிர் மட்டும்". ரேவதி, ஊர்வசி, மற்றும் ரோகினி கதாநாயகிகளாக நடித்த இந்த படத்தில் நாசர் சபலிஸ்ட் மேனேஜர் ஆக நடித்து இருப்பார். கமல் கெஸ்ட் ரோல் வேறு செய்து இருப்பார். படம் வெளி வந்த ஆண்டு 1994.

The Reincarnation of Peter Proud (1975):
முன் ஜென்ம ஞாபகங்களை மையபடுத்தி எடுக்க பட்ட படம் இது. ஹீரோவுக்கு அடிக்கடி கொலை ஒன்று நடப்பது போன்ற கனவு வரும். அந்த கனவுக்கு விடை தேடி போகும் போது, தனது முன்ஜென்ம கதை தெரிய வரும். சுமாரான படம்.

இதே போன்றே முன்ஜென்மம் கான்செப்ட்ஐ கொண்டு கமல் நடித்த படம் "எனக்குள் ஒருவன்". இதுவும் சுமாரான படமே.

Moon Over Parador (1988):
இந்த படம் ஆள் மாறாட்ட காமெடி படம். பரடோர் நாட்டின் சர்வாதிகாரியான ஹீரோ தீடீர் என்று இறந்து விடுகிறார். சர்வாதிகாரி போலவே தோற்றம் கொண்ட ஒரு நடிகரை அந்த நாட்டின் சர்வாதிகாரியாக நடிக்க அழைத்து வருகிறார்கள். அதனால ஏற்படும் குழப்பங்களை காமெடியாக சொன்ன படம் தான் Moon Over Parador.
இதே போன்ற கதை அமைப்பு கொண்ட படம் தான் "இந்திரன்-சந்திரன்". இரண்டு கமல். ஒரு கமல் ஊழல்வாதி மேயார். இவர் கொலை செய்ய படுகிறார், இவரின் இடத்துக்கு இவரை போலவே தோற்றம் கொண்ட வேறு ஒரு கமலை கொண்டு வருவார்கள். இந்த படம் தெலுங்கில் வெளி வந்து தமிழ், மற்றும் ஹிந்தியில் டப்பிங் செய்ய பட்டது. படம் வெளி வந்த ஆண்டு 1989.

The Principal (1987):
முன்கோபகார ஹீரோ ஒரு பள்ளியில் டீச்சர் ஆக பனியாற்றி கொண்டு இருப்பவர். அவரது முன்கோபம் காரணமாக அவரை வேறு ஒரு பள்ளிக்கு ப்ரின்சிபால் ஆக மாற்றல் செய்கிறார்கள். அந்த பள்ளியில் போதை மருந்து புழக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அதே பள்ளியில் யாருக்கும் அடங்காத போதைக்கு அடிமையான மாணவன் ஒருவனுக்கும் ப்ரின்சிபால் ஹீரோவுக்கும் நடக்கும் மோதல் தான் The Principal.

இதே போன்று கதை அமைப்பு கொண்ட படம் "நம்மவர்". கமல் ஒரு கல்லூரிக்கு மாற்றல் ஆகி வருவார், அதே கல்லூரியில் படிக்கும் கரண்க்கும் நடக்கும் மோதலே நம்மவர் படத்தின் கதை. கரண்க்கு இது தான் முதல் படம். படம் வெளியான ஆண்டு 1994.

Planes, Trains & Automobiles (1987):
Thanks Giving நாளை தன் குடும்பத்துடன் கொண்டாட எண்ணி நியூயார்க் நகரில் இருந்தது சிக்காகோ நகரத்திற்கு நெல் பேஜ் என்பவன் செய்யும் பயணமே இந்த படம். சில பல அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த பயணத்தில் வாய் மூடாமல் பேசும் டெல் என்னும் கேரக்டர் கூட சேர்ந்து விடும். பனிப்புயல் காரணமாக 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய அவர்களது பயணம் கிட்டதட்ட முன்று நாட்கள் மேல் சென்று விடும். பயணத்தின் முடிவில் நெல் மற்றும் டெல் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகி விடுவார்கள்.
அன்பே சிவம்: கமலின் மிக சிறந்த படங்களில் ஒன்று, இதே போன்ற கதையை கொண்டு இருக்கும். தன் கல்யாணத்திற்கு புவனேஸ்வரில் இருந்தது சென்னைக்கு பயணம் செய்யும் மாதவனின் பயணத்தில் கூட கமல் சேர்ந்து கொள்வார். புயல் காரணமாக 1 மணி நேர விமான பயணம் முன்று நாட்கள் மேல் சென்று விடும். கமல் இந்த படத்தில் பேசும் ஒவொரு வசனமும் அற்புதமாய் இருக்கும். கம்யூனிஸ்ட்வாதியான கமலின் நடிப்பு இந்த படத்தில் அவரை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றது.

What About Bob? (1991):
அனைத்திற்கும் பயப்படும், பல போபியாவால் அவதி படும் பாப் (Bob) மன நோய் மருத்துவர் லியோ மார்வின் இடையே நடைபெறும் காமெடி கலாட்டா தான் What About Bob? மருத்துவர் லியோ தன் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க மலை பிரதேசம் செல்கிறார். அங்கு மருத்துவரை தேடி வரும் பாப் அவருக்கு பல இடைஞ்சல் ஏற்படுத்துகிறான். லியோவின் குடும்பத்திற்க்கு பாப்யை மிகவும் பிடித்து போய் விடுகிறது.லியோவிற்கு பாப்யை சுத்தமாக பிடிக்க வில்லை. இதன் இடையே லியோவின் தங்கை லில்லிக்கும் பாப்க்கும் காதல் ஏற்படுகிறது. காதலை பிரிக்க லியோ செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிய இறுதியில் பாப் & லில்லி திருமணம் இனிதே நடைபெறுகிறது.
இதே கதையை கொண்டு கமல் நடிப்பில் வெளி வந்த படம் "தெனாலி". மன நோய் மருத்துவராக ஜெயராம் நடித்து இருப்பார். ஜெயராமின் தங்கையாக ஜோதிகா. கமல் செய்யும் சேட்டைகளால் ஜெயராம் நொந்து நுல் ஆகும் காட்சிகள் மிகவும் ரசிக்கும் படி இருக்கும்.கமல் இதில் ஈழ தமிழ் பேசி நடித்து இருப்பார். காமெடியில் கலக்கி இருப்பார் கமல். எனக்கு மிகவும் பிடித்த படம் இது.

The God Father (1972):
டான் காரீயோலியின் மரணத்திற்கு பிறகு அவரின் சாம்ராஜ்யத்தை கட்டி காக்கும் பொறுப்பு மைகேல்க்கு வந்து சேரும். மைகேல் எப்படி டான் சாம்ராஜ்யத்தை காப்பாற்றி எதிரிகளை அழிகிறான் என்பது தான் காட் பாதர் படத்தின் அடிநாதம்.

"நாயகன்" தான் காட் பாதர் படத்தின் தழுவல் என்று காட் பாதர் பார்க்கும் வரை எண்ணி இருந்தேன். காட் பாதர் பார்த்த பிறகு அந்த படத்தின் சாயல் நாயகனை விட "தேவர் மகன்" படத்தில் நிறைய இருப்பதாய் எனக்கு தோன்றியது. சிவாஜியின் நடிப்பு,  குழந்தைகள் உடன் இருக்கும் போது ஏற்படும் சிவாஜியின் மரணம், கமல்-கௌதமி நிறைவேறாத காதல், கமலின் அண்ணனின் கையில் ஆகாதனம், கமலின் நாட்டம் தன் குடும்பத்தின் மேல் இல்லாமல் இருப்பது போன்ற சில விஷயங்கள் காட் பாதர் மற்றும் தேவர் மகனுக்கும் ஆனா நெருக்கத்தை எனக்கு காட்டின.

மேலே சொன்ன எந்த படத்திலும் கமல் முல கதைக்கான கிரெடிட் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாற்று அவர் மீது வைக்க படுகிறது. இப்பொழுது நீங்கள் கேட்கலாம் கமல் கடவுளா (தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து செல்வதில்) ..??? அல்லது மிருகமா..???(அடுத்தவரின் உழைப்பை எடுத்து அதற்கு உண்டான கிரெடிட் தராமல் இருப்பது).இந்த கேள்விற்கான விடையை அவர் அவர் மனசாட்சியின் பதிலுக்கே விட்டு விடுகிறேன்.

என்னை பொறுத்த வரை கமல் கடவுள் தான். மேலே சொன்ன படங்களை வைத்து கமலின் அர்ப்பணிப்பை கேள்வி கேட்பது பெரிய முட்டாள்தனம் என்றே நான் கருதுவேன். ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதுமையை புகுத்தி சராசரி ரசிகனின் ரசனையை சிறிதாவது உயர்த்த கமல் செய்யும்/செய்து கொண்டு இருக்கும்/செய்ய போகும் பணி மகத்தானது. கமல் நடித்த அணைத்து படங்களிலும் அவரது 100% உழைப்பை காண முடியும். தன் உயிர் இருக்கும் வரை தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அயராது பாடு படும் கமல் "IS A GENIUS".


46 comments:

  1. என்னாது வர வர கமல் பற்றிய அலசல்கள் அதிகமாகிக் கொண்டே போகுது? ஒரு பக்கம் ஃபேஸ்புக்கில அவரை மேய்றாங்க. மறுபக்கம் பதிவுலகில் நம் உலகசினிமா ரசிகர் ஹேராமை வைத்து ஒரு தொடர், நேற்று கூட கமலின் காமெடிப் படங்கள் பற்றி ஒரு பதிவு. இன்று நீங்க. எனிதிங் ஸ்பெசல்?

    நீங்க சொல்லியிருக்கும் ஆங்கிலப் படங்களைப் பார்க்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் சொன்ன பத்து ஆங்கில படங்களில் ஏழு படங்களை தான் நான் பார்த்து உள்ளேன்..மீதி படங்களின் கதையை படித்து தெரிந்து கொண்டேன்..
      ///எனிதிங் ஸ்பெசல்?..//
      ஒன்னும் இல்லை பாஸ்...என்னோட நண்பன் ஒருத்தன் கமல் வெறியன், அவன் தான் கமலை பத்தி ஒரு பதிவு எழுத சொன்னான். அது தான், வேற ஸ்பெஷல் எல்லாம் ஒன்னும் இல்லை...
      எனக்கும் ஹாலிவுட் படங்களை பத்தி எழுதி அயர்ச்சி ஆகி விட்டது...

      Delete
  2. Planes, Trains & Automobiles மட்டும் எடுத்துப் பார்த்தேன். அனேகமாக கதை அது தான் என்றாலும் அ.சிவத்தில் கமல்-கிரண் லவ், சென்டிமென்டல் க்ளைமேக்ஸ் என்று அட்டகாசமாக இருக்கும். சில நேரங்களில் நகல் அசலை விட நன்றாக அமைவதும் உண்டு தானே?

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் பாஸ்...Planes, Trains & Automobiles விட பல மடங்கு சிறந்த படம் அன்பே சிவம்... கமல் எப்பொழுது முல கதையை அப்படியே எடுக்க மாட்டார். அதில் சரியான அளவு செண்டிமெண்ட், காதல், தனது ஸ்டைல்யை சிறிது புகுத்தி தமிழ்க்கு ஏற்றார் போல் குடுப்பார்..

      Delete
  3. பதிவர் கருந்தேள் பக்கம் சென்று பாருங்க..அவர் இன்னும் எழுதி இருப்பார்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... சென்று பார்கிறேன். அவரின் பார்வை வேறு மாதிரி இருக்கிறது..

      Delete
  4. நெகட்டிவ்வா ஏதும் எழுதி சண்டையை தூண்டப் போறீங்களோன்னு பதட்டத்தோட வந்தேன்.. உங்க பார்வையில அவரைப் பற்றிய தகவல்கள் கொடுத்திருக்கீங்க.. நன்றி!


    //• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.//
    இந்த தகவலலை எங்கேயிருந்து எடுத்தீங்கன்னு சொல்ல முடியுமா நண்பா? "உலகிலேயே" என்று நீங்கள் சொல்வதை ஊர்ஜிதப் படுத்த முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. இந்த தகவல் Facebook-கில் இருந்து பெற பட்டது. "உலகிலேயே" என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை நண்பரே...கண்டிப்பாய் இந்திய அளவில் அதிக விருதுகள் பெற்றது கமல் என்று நிச்சியமாக கூற முடியும்.

      Delete
  5. Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.....

      Delete
  6. கமலை பற்றி அற்புதமாக எழுதி உள்ளீர்கள்.
    நிறைய தகவல்கள் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரசிகரே. யார் என்ன சொன்னாலும் கமலுக்கு இந்திய சினிமா வரலாற்றில் நிரந்தர இடம் ஒன்று உண்டு....

      Delete
  7. ஹாலிவுட் ரசிகர் சொல்வது போல கொஞ்ச நாட்களாகவே கமல் பற்றிய பதிவுகள் வந்த வண்ணமே உள்ளது..இப்பொழுது நீங்கள்..இதுவரை ஆங்கில படங்களை அலசி இப்போது கொஞ்சம் மாற்றி தமிழ்-ஆங்கில படங்களை பற்றி எழுதி இருக்கீங்க..அதுவும் கமல் ஹாசன் பற்றி..அருமைங்க..தொடருங்க.நன்றி.

    கடைசி பத்தியில் நீங்கள் சொன்னதை என் மனம் அறிய ஏற்றுக்கொள்கிறேன் நண்பரே..கமல் ஹாசன் அவர்கள் தமிழ் சினிமாவுக்காக வாழ்பவர்..அதிலேயே தனது வியர்வையை அயராது சிந்தி வருபவர்..ஓர் உயரிய கலைஞன்..நீங்கள் கொடுத்த லிஸ்டில் சில படம் பார்த்திருக்கிறேன்.அன்பே சிவம் ஒரு சிறந்த படைப்பு..ஏறக்குறைய கடைசியாக கமல் அவர்களின் புத்திசாலித்தனமான திரைக்கதையில் சிறந்த நடிப்பை உணர்வுப்பூர்வமாக நான் பார்த்த படம்..

    விஸ்வரூபம் எப்படியென்று எதிர்ப்பார்ப்போம்.நல்ல பகிர்வு நண்பா..தொடர்ந்து தமிழ் சினிமாவையும் எழுதுங்கள்..வாழ்த்துக்களோடு நான்..

    ReplyDelete
    Replies
    1. நிச்சியம் எனக்கு தெரிந்தை எழுதுகிறேன் நண்பரே.. ஹாலிவுட் என்ற வட்டத்தில் சுருங்க வேண்டாம் என்றே இந்த பதிவு....
      விஸ்வரூபம் கூட "Silence Of Lambs" படத்தின் தழுவல் என்று ஒரு செய்தி படித்தேன்.. உண்மையா என்று தெரியவில்லை.. எப்படியோ நம் மக்களுக்கு Anthony Hopkins-கின் அறிமுகம் கிடைத்தால் நல்லது தான்..

      Delete
  8. வடிவேலு..கவுண்டமணியின் நடிப்பிற்கு முன் கமலகாசனின் நடிப்பெல்லாம் தூசு

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, கவுண்டர் அளவுக்கு எல்லாம் கமல் வொர்த் இல்லேங்க...
      வருகைக்கு மிக்க நன்றி.. :)

      Delete
  9. ராஜ்,
    பதிவு மிக அருமை.கமலுக்கு இந்திய சினிமாவில் ஒரு முக்கிய இடம் உண்டு.ஹிந்தி நடிகர்கள் கமலை மிகவும் மதிக்கிறார்கள்.என்னக்கு நன்றாக நினைவிருக்கிறது,பஞ்சதந்திரம்,பம்மல் சம்மந்தம் போன்ற படங்களும் கூட திரை அரங்கை விட டி.வி யில் மிகவும் ரசிகிரார்கள்.இந்த படங்கள் அந்த நேரத்தில் ஏன் ஓடவில்லை என்று அந்த படங்களை பார்க்கும் போது யோசிப்பேன்.இந்த copy பற்றிய கேள்விக்கு கமலே பதில் சொல்லயுள்ளார்.அதாவது தான் நடிக்கும் படங்களோ,தான் கதை ,வசனம் எழுதும் படங்களோ, copy என்பதை பற்றி யோசிப்பதில்லை.நல்ல படத்தை தர வேண்டும் என்று அதை செய்கிறேன் என்றும் ஆனால் தானே இயக்கம் படங்கள் (உத-ஹே ராம்,விருமாண்டி,மும்பை எக்ஸ்பிரஸ்,விஸ்வரூபம் ) இந்த copy இருக்காது என்றும் தன் சொந்த கற்பனையாக இருக்கும் என்று சொல்லியுள்ளார்.

    நீங்கள் பட்டியலிட்டுள்ள படங்களில் சில விஷயங்கள்.சூரா சம்ஹாரம்,இந்திரன் சந்திரன் இந்த இரண்டு படங்களிலும் கமல் வெறும் நடிப்பு மட்டுமே.நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற படங்கள் அவர் கதை,வசனம்,தயாரிப்பு என அவர் பங்கு அதிகம்.ஆனால் ஒரு படத்தை யாரும் copy என்று சொல்ல முடியாது.அந்த படம் "மகாநதி".கமலின் மிக சிறந்த படமாக நான் நினைப்பது அந்த படம் தான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் விஜய்,
      கமல் ஆங்கில படங்களை தழுவி எடுத்தாலும் அதை நம் மொழி, கலாச்சாரதிற்கு ஏற்றார் போல் மாற்றி விடுவார்.. அது போக அவரின் தனித்தன்மை அணைத்து படங்களிலும் பளிச்சிடும்... என்னை பொருத்தவரை அன்பே சிவம் தான் அவரின் சிறந்த படைப்பு என்று சொல்வேன்..

      Delete
    2. ஹி..ஹி மகாநதி "சாஃப்ட்கோர்" வகையை சேர்ந்த ஆங்கிலப்படமான(மூலம் ஜெர்மன் என நினைக்கிறேன்) "ஹார்டுகோர்" தழுவல்.

      கதை இது தான், மனைவியை இழந்த \ஒரு தொழிலதிபர் ,தனது குழந்தைகளுடன் சுற்றுலா போன இடத்தில் டீன் ஏஜ் பெண்ணை தவற விட்டுவிடுகிறார், எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.பின்னர் சில காலம் கழித்து அவர் பார்க்கும் ஒரு ஆபாச படத்தில் நடித்திருக்கும் பெண் , அவரது மகள் எனத்தெரிந்து , அவளை தேடி சென்று , பெண்களை கடத்தி ஆபாச படம் எடுக்கும் கும்பலிடம் இருந்து மகளை, ஒரு நண்பர் உதவியுடன் மீட்கிறார்.

      தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ப கதையை மாற்றிவிடுகிறார் :-))

      அவரோட எந்தப்படமும் சொந்தக்கருத்தே இல்லை, இதுல அவரை ஆஹா ஒஹோ என்பது எல்லாம் பாமரத்தனம்.

      Delete
  10. அவ்வை சண்முகி கூட ஒரு படத்தின் தழுவலே. அண்மையில் அடிக்கடி KTVயில் அந்த படத்தை போட்டனர். பெயர் ஞாபகம் இல்லை..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே,
      அந்த படம் Mrs.DoubtFire. கமலின் 10 தழுவல்கள் மட்டுமே எழுதியதல் அவ்வை ஷண்முகி பற்றி சொல்ல வில்லை...
      வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..

      Delete
  11. நாம் ஒன்றை மறந்துவிட்டோம் ...நம் பிறப்பில் இருந்து நாம் நம் சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனும் பிறரை பார்த்து பிறர் செயலை பார்த்து தான் தன கற்றலை ஆரம்பிக்கிறான் ..அந்த வகையில் பார்த்தால் கமல் என்னும் சினிமா மாணவனும் தன் சினிமா உலகில் கற்றதை தன சுற்றத்துக்கு ஏற்ப மாற்று வடிவம் தந்து தன படைப்பை செதுக்குகிறான் ..இதில் தவறு எதுவும் இல்லை ....மேலாண்மை படிட்பில் கூட 'Benchmark Practices' என்று சொல்வார்களே !! அதை போல் சிறந்த விடயங்களை தழுவுவது தவறு இல்லை ....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..
      என்னை பொறுத்த வரை கமல் செய்வதும் தவறே இல்லை....
      அவர் சில சுமாரான ஆங்கில படங்களை தமிழில் தழுவி எடுத்து உள்ளார். அவர் கை பட்டதால் அவை மேலும் மெருகு ஏற்ற பட்டு வேறு தளத்தில் தெரிகிறது.
      உ.த: அன்பே சிவம்.

      Delete
  12. ராஜ். உலக சினிமா என்று பெயர் வைத்துவிட்டு என்ன கமலஹாசனைப் பற்றி எழுதி உள்ளார் என்று நினைத்தேன், பின்பு தான் நினைவுக்கு வந்தது அவரே உலக நாயகன் தானே என்று. உங்கள் பதிவு மிகவும் அருமை . ஒரு விவாதம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் எந்தப் பக்கம் செய்வது என்று தெரியாமல் பின்பு அங்குமில்லாமல் இங்குமில்லாமல் நடுநிலை என்ற பெயரில் சம்மந்தமே இல்லாத பதிலைத் தருவார்கள்.

    ஆனால் நீங்கள் விவாதித்த பொருள் அதற்க்கு கொடுத்த விளக்கம் அதிலிருந்து உங்கள் பார்வையில் உங்கள் நிலை என்ன என்பது வரை தெளிவாக கூறிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது அதற்க்கு ஒரு அழுத்தமான கைகுலுக்கல்கள்.
    உங்கள் எழுத்து நடை, நீங்கள் எடுத்துக் கூறிய விதம் ரசனையாக இருந்த்தது. ஒரு மனிதன் இவ்வளவுய் படம் பார்த்து அத்தனையையும் நினைவில் வைத்து விமர்சனம் எழுதுவது மிகப் பெரிய விஷயம், உங்களை பார்த்தால் அந்த வகையில் பிரமிப்பாக உள்ளது.

    இனி கமல் பற்றியது. கமல் மீது பல விதமான குற்றச் சாட்டுகள் எழுந்தாலும் ஆத்திகன நாத்திகன என்ற சர்ச்சையில் இருந்து மீள முடியாமல் இருந்தாலும், பெண்களிடம் இதழ் முத்தம் பெற துடிப்பவர் என்ற நிலைமைக்கு தள்ளப் பட்டாலும், அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் வழியில் தான் செல்லும் பாதையில் தெளிவாக உள்ள ஒரு கலைஞன் என்ற விதத்தில் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் எடுக்கும் புதிய முயற்சிகள் பின்பு தமிழ் சினிமாவில் பயிற்சிகள் ஆவது அவருக்கு கிடைக்கும் பெருமை. கமல் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் பேசும் பேச்சை செவில் வாங்குவது கிடையாது, காரணம் அவர்களால் கமல் ஆக முடியாது.

    நல பதிவு வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
      நீங்கள் கமலை பற்றி சொன்ன கருத்துகள் உடன் 100% உடன்படுகிறேன். ஒரு நடிகனின் பர்சனல் வாழ்கையை பத்தி நாம் ஏன் கவலை பட வேண்டும். அது எப்படி வேண்டும்ன்னாலும் இருந்தது விட்டு போகட்டும். அவரின் படங்களை நாம் விமர்சனம் செய்யலாம், அவரை விமர்சனம் செய்ய நமக்கு அதிகாரம் இல்லை என்றே நான் சொல்லுவேன்.......

      Delete
  13. நீங்கள் குறிப்பிட்ட சில ஆங்கில படங்களையும் , அதே பாணியில் வந்த கமலின் படங்களையும் பார்த்து இருக்கிறேன். பெரும்மாலான இடங்களில் ஆங்கில படத்தில் இருந்து ஒரு பொறி மட்டுமே சுடப்பட்டு தமிழுக்கு ஏற்றால் போல் கதை தயாரிக்கப்பட்டு உள்ளது, நம்ம விஜய் மில்டனின் "ஐ ஆம் சாம்" ரேஞ்சுக்கு மகா சுடல்கள் என்று கிடையாது. ஆனாலும் நீங்கள் கூறும் எதுவும் மறுப்பதற்கு இல்லை. அருமையான பதிவு, கூறியது ஏதும் பிழையெனில் மன்னிக்கவும்,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிஷோகர்.....
      கமல் எப்பொழுதும் ஆங்கில படங்களை அப்படியே தழுவி எடுக்க மாட்டார், அந்த படங்களை நம் கலாச்சாரதிற்கு ஏற்றார் போல் மாற்றி விடுவார்...நிறைய படங்கள் அசலை விட நகல் நன்றாக இருக்கும்..

      Delete
    2. நீங்க சொன்னா சரிதான் தலீவா!

      Delete
    3. //கிஷோகர்//

      விஜய் மில்டன் காமிராமேன் என்று நினைக்கிறேன்.நீங்கள் குறிப்பிடுபவர் A L விஜய் (தெய்வதிருமகள்) இயக்குனர்.

      சுட்டிக்காட்டியதை தவறாக நினைக்க வேண்டாம்..

      Delete
  14. Add "TRUE LIES" in this list. I think viswaroopam is lifted from true lies, going by the one line he has narrated. It is a shame.

    ReplyDelete
    Replies
    1. Thanks for visiting my Blog..
      Viswaroopam could be "True Lies" :)..
      If the movie is intresting ppl will watch...else it will be yet another Flop for Kamal...

      Delete
    2. //Add "TRUE LIES" in this list. I think viswaroopam is lifted from true lies, going by the one line he has narrated. It is a shame.//
      முதலில் ட்ரெய்லர் பார்க்கும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது, ஆனால் விஸ்வரூபம் படம் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன், true lies படத்தில் வருவது போல் நாயகன் தன் மனைவிக்கு தெரியாமல் ரகசிய உளவாளியாக இருப்பான் என்பது மட்டும்தான் ஒற்றுமையாக இருக்கும், அப்படி பார்த்தால் தமிழில் ஏகப்பட்ட படங்களை குறை சொல்லலாம், படம் வரட்டும் பார்ப்போம்

      Delete
  15. oh.....kamal pathti ningalum eluthiyacha?
    nalla pathivu.......valththukkal.....

    ReplyDelete
  16. அருமையான பதிவு ராஜ். கலைஞானியை பற்றி ரொம்ப விரிவாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  17. Good... நெறைய டைம் எடுத்து எழுதி இருக்கீங்க.. கமல் பண்ணது சரின்னு நான் சொல்லவே மாட்டேன்.. ஆனா கமல் படங்களும், கமலையும் எனக்கு எப்போவும் பிடிக்கும்..(ப்ளாக் பக்கம் கொஞ்ச நாலா வர முடியல..)

    ReplyDelete
  18. தலைவா... உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன்... பார்த்தீர்களா...

    ReplyDelete
  19. எனக்கு கமலின் படங்களில் அன்பே சிவம் , வசூல் ராஜா மிகவும் பிடித்த படங்கள் ஆனால் தழுவல் படம் என்னும் போது அவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அடுத்தவரின் உழைப்பை எடுத்து தான் பெயர் வாங்குவது யாராக இருந்தாலும் பிழையானதுதான்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      கமல் செய்வது தவறு தான்..ஆனாலும் அந்த ஒன்றை மட்டுமே வைத்து அவரை மட்டம் தட்ட கூடாது என்பது எனது எண்ணம்...கமலின் மொத்தம் 222 படங்களில் தழுவி எடுக்க பட்ட படங்கள் என்று சொன்னால் சுமாராய் 25`30 படங்கள் தேறும்....தழுவலை மட்டுமே குறை சொல்லி கொண்டு இருக்க கூடாது..

      Delete
  20. Kaml is an excellent actor. But.....

    //தழுவல் படம் என்னும் போது அவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அடுத்தவரின் உழைப்பை எடுத்து தான் பெயர் வாங்குவது யாராக இருந்தாலும் பிழையானதுதான்//

    This is what I also feel.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி சார்..

      Delete
  21. Superb Raj!!! A good collation about Genius Kamal Hassan.... You have clealy explained, the correlation between Cinema and Art! In Tamil Industry the success of an Actor is decided against the Box Office results.... But you have clearly put in front, the real milestones which the Legendary actor Kamal has achieved so far... Your article has made us to rate the actor's quality in a different perspective! Keep writing.....

    ReplyDelete
  22. மிக நேர்த்தியான ஒரு அலசல் ராஜ், நன்கு விரிவாக எழுதி உள்ளீர்கள்.
    படங்களின் கருவை மட்டும் அல்ல சில நடிகர்களின் நடிப்பை அல்லது அவர்களின் சாயலில் நிறைய படங்கள் நடித்துள்ளார்......
    ஆனால் அவருடைய ஒவ் ஒரு கதபாதிரத்திலும் நிறைய புதுமை மற்றும் குரல் வித்தியாசப் படுத்தி நடிப்பார். ஹே ராம், குருதி புனல் அவருடை பெஸ்ட் கண்டிப்பாக....
    கண்டிப்பா உங்க கடைசி பத்தி செரிதான். கலகிடிங்க.

    ReplyDelete
  23. வணக்கம் நண்பரே...

    உங்களின் தளம் (இந்தப் பதிவும்+2) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_8.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  24. I will appreciate your analysis and comparison of English Cinema with Kamal's Tamil makes, my suggestion is, Kamal was not coping the english film frame by frame, but he will fine tune the film suit to Indian and Tamilian cultures. There he stands. Sundar Raj.

    ReplyDelete