இந்தியாவில் இருந்த வரைக்கும் Xbox360 தான் என்னுடைய உற்ற தோழனாக இருந்து வந்தந்து. அமெரிக்கா வந்துவுடன் அந்த இடத்தை PS3 எடுத்து கொண்டது. வந்த சிறிது நாட்களிலே PS3 ஸ்லிம் 120GB வாங்கி விட்டேன். இந்தியாவில் கஷ்டமாக கிடைக்க கூடிய கேம்ஸ் இங்கு சுலபமாக கிடைத்தது இன்னும் வசதியாக போய் விட்டது. மாதம் ஒரு கேம் என்று, இதுவரை கிட்டத்தட்ட 7 கேம் விளையாடி முடித்து விட்டேன். இரண்டு பேட்மேன் கேம்களும் அதில் அடக்கம். நான் இது வரை விளையாடியதில் என்னை மிகவும் கவர்ந்த "FAR CRY-3" என்கிற FPS கேம் பற்றிய பதிவு தான் இது. அதித வன்முறை, சைக்கோ வில்லன்கள், கிராபிகல் செக்ஸ், கொடூர கொலைகள், மற்றும் நாம் வாழ எந்த அளவுக்கும் போகலாம் என்கிற தீம்மை கொண்ட 18+ அமெரிக்கன் கேம். வீடியோ கேம் பிடிக்காதவர்கள் அப்படியே அப்பிட் ஆகி விடுவது நலம்.
கேம் ப்ளாட்:
ஒரு கேம் வெற்றியடைய முதல் தேவை நல்ல ஸ்டோரி லைன். அது FAR CRY 3 யில் நிச்சியம் இருக்கிறது. கேமின் நாயகன் "ஜேசன் பிராடி" (Jason Brody). 20 வயதே நிரம்பிய அக்மார்க அமெரிக்க வாலிபன். விடுமுறையை கழிக்க தன் அண்ணன், நண்பர்கள், மற்றும் காதலியுடன் பாங்காக் நகரம் வருகிறான். வந்த இடத்தில ஸ்கை டைவிங் செல்கிறான். அதில் விபத்து ஏற்பட்டு ரூக் ஐலேன்ட் என்கிற பகுதியில் தரை இறங்குகிறான்.
ரூக் தீவுகளை தன் கட்டுபாட்டில் வைத்து இருப்பவன் வாஸ் மாண்டினீக்ரோ (Vaas Montenegro). மொத்த நண்பர்களும் வாஸ் மற்றும் அவனது பைரேட்ஸிடம் மாட்டி சிறை படுகிறார்கள். பைரேட்ஸ் சிறையில் இருந்து தப்பிக்கும் வேளையில் ஜேசனின் அண்ணன் "கிரான்ட்" வாஸிடம் மாட்டி தன் உயிரை விடுகிறான். ஜேசன் மட்டும் தப்பித்து ரூக் தீவுகளில் மறைந்து வாழும் "ரக்கியாட்" (Rakyat) பழங்குடியின மக்களை சந்திக்கிறான். ரக்கியாட் மக்களின் பயற்சியில் தேர்ந்த வீரனாக மாறும் ஜேசன், தன் அண்ணனை கொன்ற வாஸ்சை பழி வாங்கி, தன் மீதி நண்பர்களை காப்பற்றி, ரூக் ஐலேன்ட்டை பைரேட்ஸிடம் இருந்து மீட்பது வரை தான் பாதி ப்ளாட்.
கேமின் முதல் பாதி முழுக்க வாஸ் மாண்டினீக்ரோவின் சைக்கோ கொலைகார படையை எதிர்த்து போராட வேண்டும். இரண்டாம் பாதியில் வாஸின் பாஸ் "ஹோய்ட் வோல்கர்" (Hoyt Volker) என்கிற ஸ்லேவ் வியாபாரியை எதிர்த்து போராட வேண்டும். வாஸ் ரூக் தீவின் வடக்கு பகுதியை தன் கட்டுபாட்டில் வைத்து இருந்தால், ஹோய்ட் தெற்கு பகுதியில் கோலோச்சி இருப்பான். இவனது போதை மருந்து சாம்ராஜியத்தை வீழ்த்தி ரூக் தீவிருக்கு முழு சுதந்திரம் பெற்று தருவது தான் மீதி ப்ளாட்.
கேம் ப்ளே:
கேம் ப்ளாட் ஏதோ ஹாலிவுட் படம் போல் தெரிகிறதா. Apocalypse Now படம் கூட FAR CRY 3 போன்றே திரைக்கதை அமைப்பை கொண்டுயிருக்கும். ஒன்ரை மணி நேர படத்திருக்கு திரைக்கதை எந்த அளவு முக்கியமோ, அதே போல் வீடியோ கேமிற்கு கேம் ப்ளே ரொம்பவே முக்கியம். ஒரு கேம் முடிக்க சராசரியாய் 10~15 மணி நேரம் வரை ஆகும். 15 மணி நேரம் சுவாரிசியம் குறையாமல் பார்த்து கொண்டால் தான் அதை கிரேட் கேம் என்று சொல்லுவோம். அப்படி பார்த்தால் FAR CRY 3 கிரேட் கேம் லிஸ்டில் தராளமாய் இடம் பிடித்து விடும். அட்டகாசமான கேம் ப்ளே அனுபவத்தை நமக்கு வழங்குகிறது FAR CRY 3. முதலில் இது ஓபன் வேர்ல்ட் கேம். ஓபன் வேர்ல்ட் என்றால், மிஷன் முடித்தவுடன் நாம் எங்கு வேண்டுமென்றாலும் உலாவலாம். ரூக் தீவுகளை சுற்றி வரலாம். நமக்கு பிடித்தமானதை செய்யலாம். நமக்கு தோணும் போது மெயின் மிஷன்களை விளையாடலாம்.
Apocalypse Now நாயகன் தன்னை வேட்டையாட வருபவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி கொண்டேயிருப்பான். ஒரு கட்டத்தில் பொருத்தது போதும் என்று திருப்பி தாக்க ஆரம்பிப்பான். இந்த கேமிலும் நாயகன் ஜேசன் பிராடி வாஸின் படைகளிடம் இருந்து தப்பித்து ஓடி கொண்டே இருக்க வேண்டும். அதே நேரம் தன் திறமைகளை வளர்த்து கொண்டே திருப்பி தாக்க வேண்டும்.
வாஸின் கட்டுப்பாடில் இருக்கும் "அவுட் போஸ்ட்களை" விடுவிக்க வேண்டும். அடர்ந்த காட்டில் இருக்கும் கொடிய மிருகங்களை வேட்டையாடி அதன் முலம் வரும் புள்ளிகளை கொண்டு ஜேசனின் துப்பாக்கி சுடும் திறன்கள், பதுங்கி தாக்குதல், வேகமாய் ஓடுதல், பாஸ்ட் ஹீலிங் போன்ற திறன்களை வளர்த்து கொல்லலாம். அது போக தீவில் இருக்கும் ரேடியோ டவர்களை அக்டிவேட் செய்து ரூக் தீவின் புதைந்திருக்கும் மர்மங்களை வெளி கொண்டுவரலாம்.
இந்த கேம் நிச்சியம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தான். வார்த்தைக்கு வார்த்தை ஃபக் வந்து விடும். அது போக முன்று உடலுறவு காட்சி வேறு உண்டு. அதனாலே அமெரிக்காவில் மிக பெரிய ஹிட் அடித்தது. Call of Juarez, Assassin's Creed போன்ற புகழ் பெற்ற கேம்மை உருவாகிய Ubisoft நிறுவனம் தான் FAR CRY 3 யின் டெவலப்பர்கள். Ubisoft நிறுவனத்தினரிடம் இருந்து வரும் கேம்களின் கிராபிக்ஸ் தாறுமாறாய் இருக்கும். இதிலும் கிராபிக்ஸ் மிகவும் தந்துருபமாய் இருக்கும். 2012 ஆண்டிற்க்கான சிறந்த அக்ஷன் கேம்கிற்கான விருதினை பெற்றது. இது வரை மொத்தம் 5 மில்லியன் காப்பி விற்பனை ஆகி உள்ளது. FPS அக்ஷன் பிரியர்கள் தவற விட கூடாத கேம் FAR CRY 3.
My Rating: 9.0/10











