Tuesday, April 10, 2012

Call of Juarez-(PC/Xbox360) -சபிக்க பட்ட புதையலை தேடி ஒரு பயணம்


இப்போ வரைக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச சினிமாவை பத்தி எழுதிகிட்டு இருந்தா நான், இப்போ அதுல இருந்து கொஞ்சம் விலகி எனக்கு பிடிச்ச வேற ஒரு விசயத்தை பத்தி எழுதலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன்.. முன்னாடி பதிவுல சொன்ன மாதிரி நான் ரசித்த சில வெஸ்டர்ன் வீடியோ கேம்ஸ்-ஐ உங்களுக்கு அறிமுக படுத்தற பதிவு தான் இது. இந்த பதிவுல நாம பார்க்க போற கேம் “Call of Juarez”. இந்த கேம்-ல் மொத்தம் முனு சீரீஸ் வந்துள்ளது. நாம்ப இப்போ பார்க்க போறது முத பாகம் Call of Juarez – (2007) & ரெண்டாம் பாகம் Call of Juarez: Bound in Blood - (2009)  . இந்த கேம் PC & Xbox360 ரெண்டு வெர்ஷன்ளையும் வந்துள்ளது. நான் இதோட Xbox-360 வெர்ஷன் தான் விளையாடி இருக்கேன். சரி Call of Juarez கேம் பத்தி பார்க்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் வேற சில அடிப்படையான வீடியோ கேம்ஸ் பத்தி பார்போம்.
90’s கால கட்டத்துல நிண்டெண்டோ (Nintendo) கேம்ஸ் மிக பிரபலமாக இருந்தது. 90-களின் வீடியோ கேம்ஸ் பிரியர்களுக்கு கண்டிப்பாய் "சூப்பர் மரியோ" (Super Mario) பற்றி தெரிந்து இருக்கும். அனேக கேம்ஸ் பிரியர்கர்கள் தங்களோட கேம்ஸ் கேரியர்யை சூப்பர் மரியோ-ல இருந்து தான் ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு உறுதியா சொல்லலாம். கேம் கான்செப்ட் ரொம்ப சிம்பிள், பிச் (Peach) என்ற காளான் ராஜியத்தின் இளவரசியை ப்ரௌசர் (Bowser) என்ற டிராகன் கடத்தி சென்று விடும். காளான் ராஜியத்தில் மொத்தம் எட்டு உலகங்கள், ஒவொரு உலகமும் நாலு லெவல் கொண்டது. மரியோ என்ற கதாபாத்திரத்தை ஏற்று விளையாடும் நாம் பிச் இளவரசியை தேடி ஒவொரு உலகமாய் பயணம் செய்ய வேண்டும். அணைத்து உலகத்தின் கடைசி லெவலில் வில்லன் ப்ரௌசர் நமக்காக காத்து கொண்டு இருக்கும், அதை கடந்து நாம் இளவரசி பிச்யை காப்பாற்ற வேண்டும். ஒவொரு உலகத்திலும் ப்ரௌசர் நமக்கு பல இடைஞ்சல்களை குடுக்கும், அவற்றை எல்லாம் முறியடித்து எட்டாவது உலகத்தில் கடைசி லெவலில் இருக்கும் பிச்யை மரியோ காப்பாற்றுவது தான் கேம் கான்செப்ட். சின்ன வயசுல மரியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கேம். கேம் விளையாட ஆரம்பிச்சு கரெக்டா முனு மாசம் கழிச்சு, என்னோட எட்டாவது முழு பரீட்சை லீவுன்னு நினைக்குறேன், ஒரு மதியான நேரத்துல பிச்யை சென்று அடைதேன். உடனே ஓடி போய் என்னோட பக்கத்து வீட்டு நண்பர்களை எல்லாம்  குப்பிட்டு வந்து காமிச்சது எல்லாம் ஆட்டோகிராப் நினைவுகள். இப்ப அந்த பழைய மரியோ கேம்ஸ் பார்த்தா ஏதோ பழைய எம்ஜியார் சிவாஜி படம் பார்க்கிற மாதரி இருக்கு.

 சின்ன வயசுல ஏற்பட்ட கேம்ஸ் மீதான பிடிப்பு இன்னும் எனக்கு கொஞ்சம் கூட குறையவேயில்லை. சம்பாரிக்க ஆரம்பிச்ச அப்புறம் நான் எனக்குன்னு வாங்குன முத பொருள் Xbox-360. வாங்கி நாலு வருஷம் ஆச்சு, கிட்டதட்ட 40 கேம்ஸ் என் கிட்ட இருக்கு. அதுல எனக்கு ரொம்பவே பிடிச்ச கேம் “Call of Juarez” சீரீஸ். இது வெஸ்டர்ன் டைப் பிரஸ்ட் பெர்சன் ஷூட்டர் (FPS) கேம். சில ஷூட்டர் கேம்ஸ்ல கன் (Gun) தூக்கிட்டு எதிர்ல யாரு வந்தாலும் சுட்டு தள்ளிட்டு ஓடிட்டே இருக்க வேண்டியது இருக்கும். ஏன் சுடுறோம், எதுக்கு சுடுறோம் ஒன்னுமே நமக்கு புரியாது. ஆனா சில கேம்ஸ் ரொம்ப சுவாரிசியமான கதைய அடிப்படையாக கொண்டு இருக்கும். நமக்கு குடுக்க பட்ட மிஷனை நாம் ரொம்ப யோசிச்சு, பிளான் பண்ணி முடிக்க வேண்டியதாக இருக்கும்.. ஒரு நல்ல கேம் நம்மை அந்த கேம் கதாபாத்திரமாக மாற்றி விட வேண்டும். சரி இப்போ “Call of Juarez” எப்படி பட்ட கேம் அப்படிங்கிறதை இப்போ பார்போம்.

எப்படி ஒரு நல்ல படத்துக்கு அதோட முத சீன் முக்கியமோ, அதே போல ஒரு கேம் வெற்றி அடைய அந்த முத மிஷன் ரொம்ப முக்கியம். இந்த கேம்ல முத மிஷன் படு அமர்க்களமாய் இருக்கும். ஒரு கோட்டையில் கேம் ஆரம்பிக்கும். மிஷியன் கன் கொண்டு அந்த கோட்டைய பாதுகாத்து கொண்டு இருக்கும் வீரர்களை நாம் சுட வேண்டும். நிறுத்தாமல் சுட வேண்டும், அந்த உக்கிரமான சண்டை முடியும் தருவாயில் டக் என்று பிளாஷ்பேக். நாம் யார் ? ஏன் அந்த கோட்டைக்கு வந்தோம் ? எதற்காக அந்த சண்டை ? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான் 15 மிஷன்.

Juarez என்ற சுடுகாட்டில் ஒளித்து வைக்க பட்டு உள்ள தங்க புதையலை தேடி எடுப்பது தான் மெயின் கதை.கேமில் மொத்தம் ரெண்டு முக்கியமான கதாபாத்திரங்கள். பில்லி (Billy) & ரே (Ray). நாம் இரண்டு கதாபாத்திரங்களின் வாயிலாக கேம் விளையட வேண்டும். ஒரு மிஷன்னில்
நாம் பில்லியாக விளையாடினால், அடுத்த மிஷன்னில் ரேவாக விளையாட வேண்டும். இருவரின் குணாதிசியங்கள் இதோ.
ரே: துப்பாக்கி சண்டை போடுவதில் கில்லாடி. நல்ல பலசாலி. டுயல் சண்டை போடுவதில் சூரன்.
பில்லி: இவன் அம்பு ஏய்வதில் பெரிய ஆள். ரே அளவு பலசாலி கிடையாது. மறைந்து அல்லது பதுங்கி தாக்குவதில் வல்லவன்.
ரேவின் தம்பி மகன் தான் பில்லி. ஒரு எதிர்பாரா சம்பவத்தால் ரேவின் தம்பி தாமஸ் (Thomas)கொல்ல பட்டு விடுவான். தன் தம்பியை கொன்றது பில்லி தான் என்று ரே தவறாக எண்ணி விடுவான். அந்த கொலைக்கு காரணம் தான் இல்லை என்று பில்லி எடுத்து கூறுவதை கேட்காமல் ரே பில்லியை துரத்த ஆரம்பித்து விடுவான். பில்லி ரேயிடம் இருந்து தப்பித்து புதையல் இருக்கும் Juarez நகரத்தை நோக்கி தன் பயணத்தை தொடர்வான். ரே பில்லியை தொடர்ந்து Juarez நகரத்தை வந்து அடைவான். தாமஸ்-ஐ கொன்ற உண்மையான கொலையாளி யார் ?? Juarez நகரத்தில் உண்மையிலே புதையல் இருந்ததா ?? முதல் காட்சியில் இருந்த அந்த கோட்டை யாருடயது ?? போன்ற பல சுவாரிசியமான கேள்விகளுக்கான விடை “Call of Juarez” PC/Xbox-360 கேமில் சொல்ல பட்டு இருக்கும்.
   
எப்பவுமே ஒரு படம் பெரும் வெற்றியடைந்தால் அதன் ரெண்டாம் பாகம் வெளி வரும். இந்த செண்டிமெண்ட்க்கு கேம்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன. Call of Juarez”- (2007) வெற்றிக்கு பிறகு “Call of Juarez: Bound in Blood - (2009) என்று இதன் ரெண்டாம் பாகம் வெளி வந்தது. முதல் பாகத்தை விட ரெண்டாம் பாகத்தில் கிராபிக்ஸ் நல்ல மெருகேற்ற பட்டு இருக்கும். Call of Juarez” கேமில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சி மற்றும் ரே & தாமஸ்யின் இளமை பருவ வாழ்கை தான் “Bound in Blood”. இந்த கேமில் ரே மற்றும் தாமஸ் எப்படி Juarez நகரத்தில் இருக்கும் சபிக்கப்பட்ட புதையலை அடைந்தார்கள் என்பது தான் மெயின் ப்ளாட். ஒவொரு மிஷன் ஆரம்பிக்கும்பொழுது நாம் நமக்கு எந்த கதாபாத்திரம் வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளலாம். ஒவொரு மிஷன் முடிவில் கண்டிப்பாய் ஒரு டுயல் சண்டை இருக்கும். லெவல் ஏற ஏற சண்டை கடினம் ஆகும்.
         
Bound in Blood”-யின் பல காட்சிகள் The Good Bad and Ugly படத்தில் இருப்பது போன்று இருக்கும். அமெரிக்க உள்நாட்டு போர் நடைபெறும் காலகட்டத்தில் நடைபெறும் முதல் மிஷன் GBU படத்தில் வரும் உள்நாட்டு போர் காட்சி போன்றே இருக்கும். அது போக கேமில் வரும் மர வீடுகள், குதிரை சண்டை, டுயல் துப்பாக்கி சண்டை, பண்டி ஹண்டர் மற்றும் பேய் நகரம் (Ghost Town) கண்டிப்பாய் உங்களுக்கு நல்ல வெஸ்டர்ன் வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை குடுக்கும்.
  
நீங்க வீடியோ கேம் பிரியரா இருந்ததா கண்டிப்பா இந்த கேம் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சியமா உங்களுக்கு பிடிக்கும்.

  இந்த கேமின் முன்றாவது பாகம் “Call of Juarez: The Cartel” என்ற பெயரில் வெளி வந்து உள்ளது. நான் இன்னும் இந்த கேம் விளையாட வில்லை. வாய்ப்பு கிடைத்து விளையாடினால் கண்டிப்பாய் அதை பற்றி எழுதுகிறேன்.


20 comments:

 1. ஹாலிவுட் ரசிகர் மாதிரி நீங்களும் கேம்ஸ் விமர்சனங்களில் இறங்கிட்டீங்களே..அதையும் சிறப்பாவே செய்யுறீங்க..படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது,மிக்க நன்றி,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நன்றி குமரன்...ஹாலிவுட் ரசிகர் மாதிரியே எனக்கும் கேம்ஸ் மீது ரொம்ப ஈடுபாடு..
  அதுனால தான் இந்த பதிவு... அதுவும் இது வெஸ்டர்ன் கேம் வேற....அது தான் நம்ம மக்களுக்கு அறிமுக படுத்தலாமே என்று..

  ReplyDelete
 3. I want to play this game. but I wont. I am a game addict

  ReplyDelete
 4. ps3 வாங்கலாம்னு பிளான் போட்டுக்கிட்டு இருக்கேன். வாங்கின பிறகு தான் எல்லா கேமும்...

  ReplyDelete
  Replies
  1. வேணாம் பாஸ். இன்னும் கொஞ்சம் பொறுத்தால் Xbox 720 இல்லாட்டி PS4 வந்துடும். அப்புறம் PS3 பெரிதாக யுஸ் இருக்காது. வெயிட் அன்ட் என்சாய்.

   Delete
  2. @ ஹாலிவுட்ரசிகன்..
   ஆமோதிக்கிறேன்... வெயிட் பண்ணி வாங்குங்க..

   Delete
 5. Call of Juarez : Bound in Blood விளையாடி இருக்கிறேன். அதையும் முழுதாக முடிக்கவில்லை. ஏதோ ஒரு செவ்விந்திய அபாசே கிராமம் வரை வந்ததாக ஞாபகம். நல்ல கேம்.

  மாரியோவுக்கு எல்லாம் இன்ட்ரோ தேவையா?

  ReplyDelete
 6. என் கேம் கேரியர் ஆரம்பிச்சது Dave, Wolf ரெண்டுலயும்தான்.. Dangerous Daveஐ என் மூணு நண்பர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு விளையாட ஆரம்பித்து, ரெண்டாவதாக முடிச்சதுல்லாம் ஒரு காலம்..
  இப்பெல்லாம் sports கேமைத் தவிர எது விளையாடினாலும் சொதப்பலாவே வருது..

  இந்த கேமைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. PC வேர்ஷன் அகப்பட்டால் விளையாடத் தொடங்குகிறேன்! அறிமுகத்துக்கு நன்றி!! மேலும் பல வித்தியாசமான கேம் விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்..

  ReplyDelete
 7. @ Katz
  //I want to play this game. but I wont. I am a game addict//
  Try this out....Game playing time is not a big one....

  ReplyDelete
 8. @ லக்கி,
  //ps3 வாங்கலாம்னு பிளான் போட்டுக்கிட்டு இருக்கேன்//
  PS3 ய விட Xbox-360 நல்ல சாய்ஸ்.. PS3- crack பண்ண முடியாதுன்னு நினைக்குறேன்.
  நீங்க விருப்ப பட்ட கேம்ஸ் எல்லாம் விளையாட வேண்டு என்றல் செலவு ஜாஸ்தி.
  ஒவொரு original கேம் கிட்ட தட்ட 2000 ~ 3000 ரூபாய் வரைக்கும் வரும்.
  ஆனா Xbox-360 எனக்கு தெரிஞ்ச வரைக்கும் crack பண்ணலாம். crack பண்ண 1000/- வரைக்கும் செலவு ஆகும். அப்புறம் நீங்களே வேணா Xbox-360 கேம்ஸ் டவுன்லோட் பண்ணி CD'ல write பண்ணிக்கலாம், இல்லாட்டி pirated கேம்ஸ் 100/- கிடைக்கும்...இது என்னோட சாய்ஸ்... ஹி ஹி....

  ReplyDelete
 9. @ ஹாலிவுட்ரசிகன்
  //Call of Juarez : Bound in Blood விளையாடி இருக்கிறேன். அதையும் முழுதாக முடிக்கவில்லை//
  பாஸ்,
  கேம் கடைசியில வர டுயல் சண்டை தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்.. நம்ப துப்பாக்கிய எடுக்கறதுக்கு முன்னாடி நம்ம சுட்டுருவாங்க... சில நேரத்துல நம்மள இது ரொம்பவே கடுப்பு ஆக்கிரும் !!

  //மாரியோவுக்கு எல்லாம் இன்ட்ரோ தேவையா?//
  சும்மா ஒரு ப்ளோல வந்துருச்சு....!! ஹி..ஹி..அதுவும் இல்லாம பழச மறக்க முடியலையே.....!!! பால்ய நினைவுகள்..!!

  ReplyDelete
 10. @ JZ
  கண்டிப்பா நண்பரே..வாய்ப்பு கிடைத்தால் விளையாடி பாருங்கள்...முடிந்தால் இதன் டவுன்லோட் லிங்க் போடுகிறேன்,,,

  ReplyDelete
 11. எனக்கும் வீடியோ கேம்ஸ் விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.. அதுவும் ஷூட்டிங் கேம்ஸ்-னா சொல்லவே வேண்டாம்... இந்த கேம்-ஐ டவுன்லோட் செய்ய முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை.. உங்களிடம் இந்த கேம்ஸ் செட்அப் பைல் இருந்தால் 4shared.com-ல் அப்லோடூ செய்து அந்த லிங்க்-ஐ அனுப்பவும் நண்பரே... நன்றி

  ReplyDelete
  Replies
  1. @ சத்யா..
   நண்பரே, நான் இந்த கேம்ஐ 12 மாதங்களுக்கு முன்பு Skidrow சைட்யில் இருந்தது டவுன்லோட் செய்தேன்... தற்பொழுது இந்த கேம் என்னிடம் இல்லை. டெலீட் செய்து விட்டேன்... நான் டவுன்லோட் செய்த லிங்க் இதோ..
   Call-of-Juarez-"Bound-in-blood"
   http://www.skidrowgames.com/187/a-c/call-of-juarez-bound-in-blood-full-iso-full-rip-repack/

   http://skidrowgames.in/call-of-juarez-bound-in-blood-full-iso-full-rip-repack

   மேலே சொன்ன ரெண்டு லிங்கில் இப்பொழுது நான் முயற்சி செய்து பார்த்தேன்...கேம் கிடைக்கவில்லை.. "file not found" என்று வருகிறது.. நல்ல relaiable டோரென்ட் லிங்க் கிடைத்தால் கண்டிப்பாய் உங்களுக்கு பகிர்கிறேன்...

   Delete
  2. சிலவேளை வீடியோக்கள் ரிப் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் கேம் மட்டும் போதும் என்றால் இதையும் முயற்சித்துப் பாருங்கள். வெறும் 1ஜி.பி தான்.

   http://thepiratebay.se/torrent/4983243/PC_Call.Of.Juarez.Bound.In.Blood.Full-Rip.-TPTB

   Delete
  3. நண்பா தங்களூக்கு உலக சினிமாவில் விருப்பம் அதிகம் என் நினைக்கிறேன். எனது உற்ற தோழன் ஆங்கலத்தில் உலக சினிமா குறித்து அற்புதமாக தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் சென்று வாசிக்கலாம், movieretrospect.blogspot.com எனும் முகவரியில். சக உலக சினிமா ஆர்வலர்களுகும் இதனைப் பகிருங்கள்.

   Delete
 12. Mario பத்தி நீங்க எழுதனது எல்லாம் நானும் பண்ணிருக்கேன்.. Sweet memories... ரொம்ப நாள் கழிச்சி நான் இப்போ தான் கேம்ஸ் விளையாட ஆரம்பிச்சிருக்கேன்.. so thanks for the suggestion..

  ReplyDelete
 13. i have not played this game as i have PS#, I played Red dead redemption,

  its same kind of game and it was excellent.

  i differ from cracking the consol and downloading the same, its also a piracy and I prefer spending money for the game.

  ReplyDelete
  Replies
  1. @DHANS
   Thanks for visiting my blog and ur comments :)..
   Call of Juarez-Bound in Blood is availabe for PS3, but call of juarez is not availabe for PS3..
   I have also played RDR, one of the few games, which i brought the orginal xbox360 CD..
   RDR gameplay will be close to "Bound in Blood"..but RDR is the best western game i ever played with amazing graphics and superb gaming experience...
   If COJ gets 70%,
   I give RDR 100%.

   Delete
 14. என்னுடைய வலையில்,தவறை சரி செய்து விட்டேன் நன்பரே, ஆலோசனைக்கு மிக்க நண்றி. மேலும் ஏதும் தவறுகள் இருந்தால் சொல்லவும் திருத்தி கொள்கிறேன்.

  Read more: http://duraigowtham.blogspot.com/2012/04/kunjaliyan.html#ixzz1t4P377Af

  ReplyDelete