Wednesday, March 21, 2012

எதிர்பார்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள்- 2012

ஹாலிவுட்ல எவ்வளவு பெரிய டைரக்டர் ஆக இருந்தாலும், இதுக்கு முன்னாடி எவ்வளவு பிரமாண்ட ஹிட் குடுத்து இருந்தாலும் அவங்க படம் கண்டிப்பா ஓடும்ன்னு சொல்லவே முடியாது. ஓடுதோ இல்லையோ, அத பத்தி நமக்கு கவலை கிடையாது, நமக்கு படம் பார்க்க நல்லா இருக்கனும், மொக்கையா இருக்க கூடாது, 2 மணி நேரம் நல்ல டைம் பாஸ் ஆகனும். அது தான் நமக்கு வேணும். ஆனா சில டைரக்டர்ஸ் படம் அந்த குறைந்தபட்ச உத்தரவாதத்தை கூட நிறைவேற்றாமல் போய் விடும். ஒரு நல்ல உதாரணம் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், எப்ப எந்த மாதிரியான படம் அவர் கிட்ட இருந்து வரும்னு சொல்லவே முடியாது. The Terminal என்ற அற்புத சினிமாவை எடுத்து முடிச்ச அப்புறம் அவரு எடுத்த மொக்கை படம் War of the Worlds. இப்படி தான் எப்பவுமே Expect the Unexpected-ன்னு எதிர் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தான். ஆனா என்னை பொறுத்த வரை சில பேர் எடுக்குற / எடுக்கபோற படங்கள் கண்டிப்பா சோடை போகாதுன்னு ஆணித்தரமா சொல்லுவோன். அப்படிப்பட்ட அந்த சில படங்களை இப்ப பார்போம்.நான் ரொம்ப ரொம்ப எதிர்பார்க்கிற படங்கள் ரெண்டே ரெண்டு தான். இந்த ரெண்டு படங்களும் இந்த வருஷம் (2012) ரிலீஸ் ஆக போற படங்கள்.

The Dark Knight Rises:

இந்த படத்தை எடுத்து கொண்டு இருப்பவர் கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan),இவரை பத்தி ரொம்ப சுருக்கமா சொல்லணும்னா இவர் பெரிய ஜீனியஸ், விஞ்ஞானி ஆகி இருக்க வேண்டியவர், தெரியாம சினிமா உலகத்துல வந்துட்டார், மிகவும் குழப்பமான திரைக்கதையை எடுப்பதில் வல்லவர். இது பேட்மேன் சீரீஸ்ல வர போற கடைசி படம். போன பேட்மேன் படமான The Dark Knight-ல ஜோக்கர் செஞ்ச அந்த வில்லன் கேரக்டர் மாதிரியே இந்த படத்துல நோலன் ரெண்டு வில்லன் கேரக்டர்களை அறிமுக படுத்த உள்ளார் . Bane & Cat woman. பேட்மேன் காமிக்ஸ் படிச்சவங்களுக்கு Bane பத்தி தெரிஞ்சு இருக்கும். Bane - அசுர பலம் மிக்க, பேட்மேனை விரும்பாத கெட்டவன். ஒரு தவறான ஆராச்சி முலம் அவன் உடம்பில் ஒரு வகையான நஞ்சு செலுத்த பட்டு விடும், அந்த நஞ்சின் வீரியத்தால் அவனுக்கு யானை பலம் கிடைத்து விடும். இந்த கதாபாத்திரம் ஜோக்கர் அளவுக்கு புத்திசாலி கிடையாது, ஆனா ரொம்ப பலசாலி. இந்த முறை பேட்மேன் Bane-ஐ எப்படி சமாளிக்க போறாருன்னு பார்போம்.

என்னோட கெஸ் என்னன்னா "The Man who Broke the Bat" அப்படிங்கற மிக பிரபலகாமிக் வாசகத்தை கண்டிப்பா Bane நிறைவேத்துவான்னு தோணுது. So its gonna be the end of Batman.ரொம்ப முக்கியமா நோலன் இப்படத்தை 70mm IMAX வெர்ஷனில் படமாக்கி இருக்காரு. கண்டிப்பாக ரசிகர்களுக்கு இப்படம் விஷுவல் ட்ரீட் ஆக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Skyfall:

எதிர்பார்பை எகிற செய்யும் அடுத்த படம் Skyfall, இது 007 மூவி, ஆமாங்க ஜேம்ஸ் பாண்ட் சீரீஸ்ல வர 23-வது படம் தான் Skyfall.பாண்ட் படத்துல கதை எல்லாம் பெருசா இருக்காது, வழக்கமான மசாலா கதை தான், ஆனா மேகிங் அட்டகாசமாய் இருக்கும். இதுலயும் டேனியல் கிரெய்க் (Daniel Craig) தான் பாண்ட் கதாபாத்திரத்தை பண்ணுறாரு, அப்புறம் முக்கியமா, படத்துல வில்லன் கேரக்டர் பண்ணுற ஆளு Javier Bardem, இவரு யாருனா No Country for Old Men படத்துல சைக்கோ கொலைகாரனாக மிரட்டின ஆண்டன் சிகுரு. இவருக்குகாக இந்த படத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன்.

மேல சொன்ன ரெண்டு படங்கள் தவிர இன்னும் நிறைய படங்கள் இந்த வருஷம் ரிலீஸ் ஆக போகுது. வில் ஸ்மித் (Will Smith) நடிக்கும் MIB-3, Bourne சீரீஸ்ல வர போற நாலாவது படம் The Bourne Legacy. ஸ்பைடர்மேன் சீரீஸ்ல வர போற நாலாவது படம் The Amazing Spider-Man.சோ, இந்த வருஷம் ஹாலிவுட் படங்களுக்கு பஞ்சமேயில்லைன்னு சொல்லலாம்.


14 comments:

 1. நான் இவற்றோடு சேர்த்து ரிட்லி ஸ்கொட்டின் Prometheus மற்றும் The Avengers ஐயும் ரொம்ப எதிர்ப்பார்க்கிறேன். ஆனால் ரொம்பவும் எதிர்ப்பார்ப்புடன் இருப்பது Dark Knight Rises இற்கு தான். எப்படியாவது தியேட்டர்ல போட்டா (டவுட் தான்) பார்த்துவிட வேண்டும்.

  ReplyDelete
 2. என்ன பாஸ் ரெண்டு படத்தோட நீறுத்திடிங்க.. ஒரு 10 ,20 தாவது இருக்கும்ன்னு நினைச்சேன்...

  ReplyDelete
 3. @ ஹாலிவுட்ரசிகன்
  தகவலுக்கு நன்றி தல, Prometheus & The Avengers இப்ப தான் கேள்வி படுறேன்

  @ ...αηαη∂....
  என்னோட most expected லிஸ்ட்ல இந்த ரெண்டு படம் தான் பாஸ் இருக்கு. முக்கியமா நோலன் படம், அப்புறம் பாண்ட் படம் அதுவும் Javier Bardem-காக.... இன்னும் ரொம்ப எதிர்பார்க்கிற படங்களை வேற பதிவுல சொல்லுறேன்.

  ReplyDelete
 4. @ ஹாலிவுட்ரசிகன்
  Dark Knight Rises கண்டிப்பா என்னோட mostly awaited மூவி...

  ReplyDelete
 5. The Dark Knight Rises எப்படியும் பாக்ஸ் ஆபீஸில் சக்கைப் போடு போடும்.. ஒரு சில ஆஸ்கர்களும் எதிர்பார்க்கலாம்!
  ரெண்டு ாடத்தையும் தியேட்டரில் பார்ப்தாக உத்தேசம்!

  ReplyDelete
 6. கிறிஸ்டோஃபர் நோலனின் மண்டைகாய வைக்கும் டெக்னிக்கலுக்காகத்தான் வெயிட்டிங்

  ReplyDelete
 7. @ JZ..
  கண்டிப்பா பாஸ்...இப்பவே அட்வான்ஸ் புக்கிங் புல்ன்னு நெட்ல படிச்சேன். $17 விக்கிற டிக்கெட்டை $100--க்கு விக்கிறாங்க... கண்டிப்பா பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் தான்....

  @கவிதை காதலன் ...
  வருகைக்கு நன்றி நண்பரே, பேட்மேன் படங்களுக்கு என்றே புதிய இலக்கணத்தை உருவாக்கினர் நோலன்.....கண்டிப்பா இந்த படத்தை Dark Knight விட நன்றாக எடுத்து இருப்பார்..

  ReplyDelete
 8. The Avengers - May Release
  Battleship - May Release
  MIB 3 - May Release
  Snow White and the Huntsman - June Release
  Madagascar 3 - June Release
  SpiderMan - July
  Ice Age - July
  Dark Knight - July
  Bourne Legacy - August
  Finding Nemo in 3D - September
  Skyfall - November
  The Hobbit (Lord of the Rings) - December
  King of Elves - December

  ReplyDelete
 9. நன்றி பரணி....

  ReplyDelete
 10. Avengers ச நீ எப்படியா விடலாம்.. உன்ன Hulk க விட்டு கடிக்க வெச்சாதான் என் கோவம் தீரும் :) :)

  ReplyDelete
 11. @Castro Karthi...
  அது வேறயா...??? :) நம்ப ரேஞ்சுக்குப் Hulk எல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்.
  Avengers # இருக்குற சூப்பர் ஹீரோஸ் போதும் பாஸ்... இதுல சூப்பர் Human Beings எல்லாம் வேண்டாம்.. பாவம் ரசிகர்கள்..

  ரொம்ப நாள் ஆச்சு நீங்க பதிவு போட்டு..அடிக்கடி பதிவு போடுங்க..அட்லீஸ்ட் மாசத்துக்கு ஒரு தடவையாவது..

  ReplyDelete
 12. நண்பரே, முதலில் சில மன்னிப்புகள்..இணையப்பக்கம் சில கோளாருகளால் வர முடியவில்லை..அதனால் நான் மிஸ் பண்ணது நிறைய நல்ல பதிவுகள்..அதில் ஒன்று தங்களது..
  இந்த வருடம் திரையை எட்டவிருக்கும் சில படங்களை பற்றிய நல்ல குறிப்பு + அலசல்..அருமை,
  அதேப்போல ஸ்பீர்பெர்க்கோட ரசிகன் நான்..அவர் எடுத்துக்கொண்டிருக்கும் Lincoln (2012) படத்துக்கும் நான் ரொம்ப வெயிட்டிங்.

  ReplyDelete
 13. வருகைக்கு நன்றி குமரன்....
  மன்னிப்பு எல்லாம் எதற்கு நண்பரே. Steven Spielberg படம் என்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமே இருக்காது..
  சீக்கிரமே பதிவை போடுங்கள்..

  ReplyDelete