Monday, September 24, 2012

இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள்

முதல் முதலில் சாதனைகள் என்றுமே மகத்தானவை, நினைவை விட்டு அகலாதவை. முதல் முதலில் நிலவில் கால் பதித்த "நீல் ஆம்ஸ்ட்ராங்கை" யாராவது மறக்க முடியுமா ? முதல் முதலில் Mt.எவரெஸ்டில் கொடி நட்டிய  டென்சிங் நோர்கே மற்றும் எட்மண்ட் ஹிலாரியை அவ்வளவு சீக்கிரம் மறக்க தான் முடியுமா ? அதே போல் நமக்கு தெரியாத பல முதல் சாதனைகள் இந்திய சினிமாவில் நிகழ்த்த பட்டு உள்ளன. நான் மிகவும் நேசிக்கும் இந்திய சினிமாவில் சில முதல் முதலில் சாதனைகளை பார்போம்........

இந்தியாவின் முதல்இயக்குநர்கள்:
ஹீராலால் சென் மற்றும் ஹரிச்சந்திர சக்ராம் படவேத்கர் (சாவே தாதா என்று அறியப்பட்டவர்). இருவரும் புகைப்படக் கலைஞர்கள்.
H.S அவர்களின் முதல் செய்தி படம்
சென், மேடை நாடங்களை 1898 இலிருந்து படமாக்கத் தொடங்கினார். அவர் ராயல் பயாஸ்கோப் கம்பெனி என்ற பெயரில் இந்தியாவின் முதல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்தான் இந்தியாவின், பார்க்கப் போனால் உலகின் முதல் முழுநீளப் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற படத்தை 1904 இல் உருவாக்கியவர் என்று நம்பப்படுகிறது. என்றாலும் அந்தப் படத்தின் பிரதி கிடைக்கவில்லை. அவரது படைப்புகள் அனைத்தும் தீவிபத்தால் முற்றிலும் அழிந்துபோயின. நவம்பர் 1899 இல் படவேத்கர் பாம்பே தொங்கும் தோட்டத்தில் குத்துச்சண்டை ஒன்றைப் படமாக்கினார். வாட்சன் ஹாஸ்டலில் இந்தியாவின் முதல் திரையிடல் 1896 ஜூலை 7 இல் நடந்தபோது அவர் அங்கு இருந்தார். இந்தியாவின் முதல் செய்திப்படம் என்று கருதப்படும் இங்கிலாந்தி லிருந்து டிசம்பர் 1901 இல் இந்தியா திரும்பும் பாம்பே மாகாண கல்வித்துறை அமைச்சர் ஆர்.பி.பரஞ்சிப்பியின் வருகையையும் 1903 வருடம் கல்கத்தா நகரத்தில் நடைபெற்ற கிங் எட்வர்ட் VII அவர்களின் முடிசூட்டு விழாவில் கர்சன் பிரபு என்கிற பிரிட்டிஷ் வைஸ்ராயயை படம் பிடித்தார். 

முதல் திரைப்படத் தயாரிப்பாளர்:
ஜாம்ஷெட்ஜி ப்ராம்ஜி மதன் என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தியேட்டர் கலைஞர் தனது எல்பின்ஸ்டன் பயாஸ்கோப் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் வரிசையாக நிறைய குறும்படங்களைத் தயாரித்தார். அதுதான் பின்னாளில் மதன் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய தோற்றமாக 1918 இல் பரிணமித்தது. கல்கத்தாவில் ஒரு டெண்ட் கொட்டகையில் தனது படங்களை 1902 முதல் மதன் திரையிடத் தொடங்கினார். புதிதாகத் தோன்றி பெரிய அளவில் வளர்ந்து வந்த திரைப்படத் தொழிலின் வளர்ச்சியை உணர்ந்துகொண்ட அவர், தனது கம்பெனியை பரவலாக கொண்டு சென்றார். அது மௌனப் பட சகாப்தத்தில் ஒரு முதன்மையான சக்தியாக இருந்தது. இவர்தான் முதன் முதலில் திரைப்படத் தயாரிப்பு என்பதையும் தாண்டி, விநியோகம் மற்றும் கண்காட்சிக்கு வைத்தல் என்று விரிவுபடுத்தியவர். 
இந்தியாவின் முதல் திரைப்பட நிறுவனத்தை அவர் கல்கத்தாவில் நிறுவினார். வங்காளத்தின் முதல் வணிகரீதியான முழுநீள மௌனப்படமான பில்வமங்கள் என்ற படத்தை மதன் தியேட்டர்ஸ் தயாரித்தது. அப்படம் 1919 நவம்பர் 11 இல் கார்ன்வாலிஸ் தியேட்டர் என்ற திரையரங்கில் ஓடத் தொடங்கியது.அந்தப் படம் 10 ரீல்களைக் கொண்டது. 

முதல் திரையரங்கம்:
இந்தியாவின் முதல் திரையரங்கம் 1907 இல்ஜே.எஃப். மதனால் கல்கத்தாவில் எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் கதைப் படம் :
இந்தியாவின் முதல் கதைப் படமான புந்தலிக்,மே 19, 1912 இல் வெளியிடப் பட்டது. அதன் நீளம் 12 நிமிடங்கள்தான். இப்படம் மகாராஷ்டிராவின் துறவி ஒருவரைப் பற்றியது.

இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் :
ராஜா ஹரிச்சந்திரா படத்தில் ஒரு காட்சி
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்க படும் "தாதாசாகே பால்கே" அவர்களின் "ராஜா ஹரிச்சந்திரா" (1913 மே 3 ஆம் தேதி) தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படம். இந்த படம் பம்பாய் கோரனேஷன் சினிமாட்டோகிராஃப்  என்ற  அரங்கில் வெளியானது. இப்படத்தில் நடித்த அனைவருமே ஆண்கள், அந்த காலத்தில் சினிமாவில் நடிப்பதருக்கு பெண்கள் முன்வர வில்லை. அதனால பால்கே அவர்கள் ஆண் நடிகர்களை பெண் வேடம் இட்டு, படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களையும் படம் ஆக்கினர். படம் மக்களுக்கு காட்ட படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பாக (21 ஏப்ரல்)  பம்பாயின் மிக முக்கிய பிரபலங்கள் மற்றும் பல செய்தித்தாள்கள் ஆசிரியர்களுக்கு,  பாம்பே ஒலிம்பியா சினிமாவில், இப்படத்தின்  3,700 அடி நீள முன்னோட்டக் காட்சிக்கு தாதா சாஹேப் பால்கே ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தியத் திரையில் முதல் பெண்கள்:
துர்காபாயும் அவரது மகள் கமலாபாய் கோகலேயும் தாதா சாஹேப் பால்கேயின் இரண்டாவது படமான மோகினி பஸ்மசூர்(1914) என்ற படத்தில் நடித்தனர்.

முதல் வெற்றித் திரைப்படம் :
பால்கே இயக்கிய லங்கா தகன் (1921) முதன்முதலில் வசூலில் வெற்றி கண்ட படம். அது பாம்பே கிர்காம் என்ற இடத்திலுள்ள வெஸ்ட் எண்டு சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. 23 வாரங்கள் ஓடியது.

தடை செய்யப்பட முதல்இந்தியப் படம்:
பாம்பே கோஹினூர் ஸ்டூடியோஸ் தயாரித்த பகத் விதூர் (1921). ஸ்டுடியோவின் உரிமையாளர் துவாரகா தாஸ் நரந்தாஸ் சம்பத்தே அப்படத்தின் பிரதான வேடத்தில் நடித்தார். அதில் அவர் மகாத்மா காந்தி போன்ற தோற்றத்தில் நடித்தார். அரசியல் காரணங்களுக்காக அப்படத்தை சென்சார் தடை செய்தது. இருப்பினும் வேறு சில மாநிலங்களில் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது.

முதல் திரைப்படத் தணிக்கைக் குழு :
1920 இல் பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் ரங்கூனில் தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பிறகு லாகூரில் 1927 இல் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது. 

இந்தியாவின் முதல் திரை நட்சத்திரம் :
பேஷன்ஸ் கூப்பர். அவர் மதன்ஸ் ஆஃப் கல்கத்தா தயாரித்து, ஜ்யோதிஷ் பந்தோபாத்யாய் இயக்கிய நளதமயந்தி (1920) என்ற படத்திலும் ஏராளமான பிற படங்களிலும் நடித்தார்.
முதல் சமூக நையாண்டிப் படம்:
தீரேன் கங்கூலி
பிலேத் பேராட் (இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர், 1921, வங்க மொழிப்படம்). தயாரித்து நடித்தவர் தீரேன் கங்கூலி. இந்தப் படம் காதல் மற்றும் கிழக்கத்திய -மேற்கத்திய முரண்பாடு ஆகியவற்றைக் கையாண்ட சமூகத் திரைப்படங்களுக்கு முன்னோடி. தீரேன் கங்கூலி அவர்கள் பிற்காலத்தில் இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்க படும் மிக உயரிய விருதான "தாதாசாகே பால்கே" விருது மற்றும் "பத்ம பூஷன்" விருது பெற்றார். 
முதல் சரித்திரப் படம்:
சிங்காகாத் 1923,  பாபுராவ் பெயிண்டர் இயக்கியது. இதுதான் இந்தியாவின் முதல் முழு நீள வரலாற்றுத் திரைப்படம். இப்படம் சக்கரவர்த்தி சிவாஜியின் போர்ப்படையைப் பற்றிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு பெண் தயாரித்த முதல் இந்தியப் படம்:
புல்புல்- எ- பரிஸ்தான்(1926). இயக்குநர்: ஃபாத்மா பேகம்.

நில உரிமை பற்றிய முதல் படம்:
நீரா (1926). இந்தப் படம் ஆர்.எஸ்.சவுத்திரியால் இயக்கப்பட்டது. மெஹபூப் கான் இப்படத்தில் அவரது உதவியாளராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் நிலவுரிமைப் பிரச்சனைப் பற்றிய விரிவானப் பார்வையுடன் ரொட்டி (1942)  என்ற படத்தை இயக்கினார்.

முதல் தேவதாஸ் படம் :
நரேஷ் மித்ரா இயக்கி, பானி பர்மா நடித்த தேவதாஸ் (1928). ஒளிப்பதிவு: நிதின் போஸ். அனுராக் காஷ்யப்பின் தேவ் டி உட்பட, இந்தக் கதை மொத்தம் 12 முறை வங்காளம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டிருக்கிறது.

முதல் ரவீந்திரநாத் தாகூர் திரைத் தழுவல்:
நாவல் காந்தி இயக்கிய பலிதான் (1927). இப்படம் தாகூர் 1887 இல் எழுதிய நாடகமான பிசர்ஜனை அடிப்படையாகக் கொண்டது. தாகூரே இதை படமாக்க விரும்பி குழந்தை என்ற பெயரில் திரைக்கான எழுத்து வடிவமாக உருவாக்கியிருந்தார். என்றாலும் அது படமாகத் தயாரிக்கப்படவே இல்லை.

முதல் மொகலாய வரலாற்றுப் படம்:
நூர்ஜகான் (1923). இது மதன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் பேஷன்ஸ் கூப்பர் நடித்தது. அனார்கலி என்ற உருது நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இம்தியாஸ் அலி தாஜ் இயக்கிய  த லவ்ஸ் ஆஃப் அ மொகல் பிரின்ஸ் (1928) என்ற படம் மற்றொரு மொகலாயர் காலத்து வரலாற்றுப் படமாகும்.

சிவாஜி பற்றிய முதல் முக்கியப் படம்:
உதய் கல்(1930). மராத்திய வரலாற்றில் சிவாஜியை முக்கியமான ஒருவராகக் காட்டுவதற்கு இப்படம் பெருமளவு தாக்கம் தந்தது என்று சாந்தாராமே சொல்கிறார். மற்றொரு மராத்திய சினிமா முன்னோடியான பால்ஜி பெந்தர்கர், சிவாஜி பற்றிய பல படங்களை, சத்திரபதி சிவாஜி (1952) மற்றும் பவன் கிந்த்(1956) போன்ற படங்களைத் தந்தார்.

முதல் முத்த காட்சி
முதல் திரை முத்தம்:
எ த்ரோ ஆப் டைஸ் என்ற படத்தில் நடித்த சாரு ராயும் சீதா தேவியும் முதன்முதலாக திரையில் முத்தமிட்டுக் கொண்டனர். பிரிட்டிஷ் இந்தியாவில் திரைப்படத்தில் முத்தத்துக்குத் தடை இல்லை. 1933 இல் வெளியான கர்மா என்ற படத்தில் நிஜ வாழ்வில் தம்பதியரான ஹிமான்ஷு ராயும் தேவிகா ராணியும் தொடர்ந்து நான்கு நிமிடங்களுக்கு முத்தமிட்டுக் கொண்டனர்.

இந்தியத் திரையின் முதல் கவர்ச்சி நடிகை:
பதிபக்தி (1922) என்ற படத்தில் நடித்த இத்தாலிய நடிகை சினோரின்னா மனெல்லி. தயாரிப்பு மதன் தியேட்டர்ஸ். சினோரின்னா உடல்பாகங்கள் வெளியில் தெரியும் வண்ணம் மெல்லிய ஆடை அணிந்து ஆடிய நடனக் காட்சியை மறுதணிக்கை செய்ய வேண்டி வந்தது. கதாநாயகி பேஷன்ஸ் கூப்பர்.


இந்தியாவின் முதல் பேசும்படம்:
ஆலம் ஆரா
இந்தியாவின் முதல் பேசும்படம்: மார்ச்14, 1931 இல் வெளியான, இம்பீரியல் மூவிடோன்சின் ஆலம் ஆரா (ஓடும் நேரம் : 124 நிமிடங்கள்). இப்படம் மதன் தியேட்டர்சின் ஷிரின் ஃபர்ஹாத் என்ற படத்தை திரையில் தோல்வியுறச் செய்தது. ஆலம் ஆராவில் பாடல், நடனம் இசை ஆகியவை இடம்பெற்று இந்தியாவின் முதல் வணிகரீதியான படமாக நிலைத்து விட்டது. ஆலம் ஆரா ஒரு வெற்றி பெற்ற பார்சி நாடகமாகும். அர்தேஷிர் இரானி இதை தழுவி இந்தியாவின் முதல் பேசும் படமாக்கினார். படத்தின் பாடல்களுக்கான ட்யூன்களையும் பாடகர்களையும் அவரே தேர்வு செய்தார். பாடல்களுக்கு தபலா, ஹார்மோனியம் மற்றும் வயலின் ஆகிய மூன்றே மூன்று இசைக் கருவிகளே உபயோகப்படுத்தப்பட்டன. ஆலம் ஆரா இந்தியாவின் முதல் திரையசைப் பாடல்களை அளித்தது என்றாலும் படத்தின் டைட்டில் கார்டில் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.தேதே குதா கே நாம் பர் பியாரே, தாக்கத் ஹை கர் தேனே கி என்ற பாடலின் மூலம் இந்திய சினிமாவின் முதல் பாடகரானார் டபிள்யூ.எம்.கான். படத்தின் முதல் இசைத்தட்டு 1934 இல் தான் வெளிவந்தது. 


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கில பேசும் படம்: கர்மா(1933). இயக்கம்: ஹிமான்ஷு ராய். லண்டனில் உள்ள மார்பிள் ஆர்ச் பெவிலியனில் திரையிடப்பட்ட இப்படம் ஆங்கில பத்திரிகைகளால் வெகுவாகப் புகழப்பட்டது. ஒரு நாளிதழ் எழுதியது: "தேவிகா ராணி பேசும் ஆங்கிலத்தைக் கேளுங்கள், இத்தனை அழகான உச்சரிப்பை நீங்கள் கேட்டிருக்கமுடியாது.’’

இந்தியத் திரையில் முதல் ஆங்கிலப் பாடல்:
"Now the Moon Her light Has Shed" என்று தேவிகா ராணி கர்மா (1933) படத்துக்காகப் பாடிய பாடல். இசை அமைத்தவர் எர்னெஸ்ட் ப்ராதர்ஸ்ட்.

முதல் தமிழ் பேசும்படம்: 

 ஹெச்.எம்.ரெட்டி இயக்கிய காளிதாஸ். 1931 அக்டோபர் 31 ஆம் நாள் வெளியிடப்பட்டது. வசனம் தமிழிலும் பாடல்கள் தெலுங்கிலும் அமைந்தன.வணிக ரீதியாக இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது.Rs.8000 பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட  படம்,  Rs.75000 மேல் வசூலில் தாண்டியது. பட சுருள் சென்னை கொண்டுவரப்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று மலர்கள் தூவி, தேங்காய் உடைத்து, நறுமணப்பத்தி ஏற்றி பட சுருளை வழிபட்டனர். இப்படத்தில் தான் "சினிமா ராணி" என்று அழைக்கப்படும்  T. P. ராஜலக்ஷ்மி அறிமுகம் ஆனார், இவர் தான் பிற்காலத்தில் முதல் தமிழ் பெண் இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆனார்.
முதல் மலையாள பேசும்படம்எஸ்.நோதானி இயக்கிய பாலன்(1938).
முதல் கன்னட பேசும்படம்: பக்த துருவா (1934), எனினும் சதி சுலோச்சனாதான் முதலில் வெளியானது.

முதல் தெலுங்கு பேசும்படம்: ஹெச்.எம்.ரெட்டி இயக்கிய, பக்த பிரகலாத்(1931).


முதல் மலையாள முழுநீளத் திரைப்படம்:  
ஜே .சி.டேனியல் இயக்கிய, விகதகுமாரன்(1928).

முதல் மராத்தி மொழி பேசும்படம்: அயோதியாச்சே ராஜா (1932), வி.சாந்தாராம் இயக்கியது.

முதல் வங்காள மொழி பேசும் படம்:
அமர் சவுத்ரி இயக்கிய, ஜமாய் சாஷ்தி(1931). இப்படம் ஆலம் ஆரா வெளியாகி ஒரு மாதத்துக்குப் பின் ஏப்ரல் 11, 1931 இல் வெளியானது.

 முதல் அஸ்ஸாமியத் திரைப்படம்:
ஜாய்மதி (1935), ஜோதிப்ரசாத் அகர்வாலா இயக்கியது.

ஹாலிவுட் தாக்கத்தில் உருவான முதல் இந்தியப் படம்:
இந்திராமா (1934). கிளாரன்ஸ் பிரவுன்'ஸ் ஃப்ரீ சோல் (1931) என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல். அந்த காலத்திலே தழுவல்களை ஆரம்பித்து விட்டார்கள்.

முதல் வண்ணப்படம்:
கிசான் கன்யா
கிசான் கன்யா(1936), ஆதர்ஷ் இரானியின் இம்ப்பீரியல் மூவிடோன் தயாரிப்பில், மோடி கிட்வானி இயக்கியது. சாடட் ஹசன மண்டோ அவர்களின் நாவலை தழுவி எடுக்க பட்ட படம் தான் கிசான் கன். . வி சாந்தாராம் அவர்களின் சைரந்த்ரி (1933) என்கிற மராத்தி மொழி திரைபடத்தில் சில வண்ண காட்சிகள் இடம் பெற்றன, ஆனால் சைரந்த்ரி படதில் இடம் பெற்ற வண்ண காட்சிகளை ஜெர்மனியில் உருவாகினார்கள். ஆனால் கிசான் கன் திரைபடத்தில் இடம் பெற்ற வண்ண காட்சிகள் இந்தியாவிலே தயார் செய்யப்பட்டன. அதனால தான் முதல் இந்திய வண்ண படம் என்ற பெருமையை கிசான் கன் பெற்றது.
முதல் பின்னணிப் பாடல்: மேஸ்ட்ரோ ராய் சந்த் போரல், தூப் சாவோன் (1935)  என்ற படத்தில் முதன்முதலாக பின்னணிப் பாடும் முறையை அறிமுகப் படுத்தினார். " மே குஷ் ஹோனா சாஹூ" என்ற அந்தப் பாடலை பாருல் கோஷ் மற்றும் சர்கார் ஹரிமதியுடன் பெண்கள் குழுவினர் பாடியிருந்தனர்.
இந்திய அளவில் வெற்றிபெற்ற முதல் மெட்ராஸ் தயாரிப்பு :
எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா (1948).

கேன்ஸ் விருதை வென்ற முதல் இந்தியப் படம்:
நீச்சா நகர் (1946). இயக்கம்: சேத்தன் ஆனந்த். இப்படம் சமூக உண்மை நிலையினை மிக அழகாக படம் பிடித்து காட்டியது. சமூகத்தில் ஏழை மற்றும் பணக்காரர் இடையே இருக்கும் இடைவெளியை பற்றி பேசும் படம் இது. இப்படம் 1946 ஆண்டு நடைபெற்ற முதல் சர்வதேச  கேன்ஸ் திரைப்பட விழாவில் "சிறந்த திரைப்படத்திருக்கான" விருதை தட்டி சென்றது.
1954 இல் பிமல் ராயின் "தோ பீகா ஜமீனுக்கு" கேன்சின் சிறப்புப் பரிசு கிட்டியது. 

ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப் படம்:
மெஹபூப் கான் இயக்கிய, மதர் இந்தியா (1957).


ரித்விக் கட்டக்கின் அறிமுகம்:
நாகரிக்(1952). தனிச்சிறப்பு கொண்ட திரைக் கலைஞ ரான ரித்விக் கட்டக், ரசிகர் கள் மற்றும் தயாரிப்பாளர் களால் தன் வாழ்நாள் முழுதும் அவதிக் குள்ளானவர். இதனால் அவரது படைப்புகள் பல முழுமை பெறாமலேயே போயின. என்றாலும் தனது 20  வருட திரைப்பயணத்தில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்ததோடு திரையுலகை ஆட்சி செய்த வணிகப்படங்களுக்கு ஒரு சரியான மாற்றாகவும்  விளங்கினார் அவர். இந்திய சினிமா பிதாமகர்களின் வரிசையில் அவருக்கென்று தனித்த , நிலையான இடம் உண்டு.
சிவாஜி கணேசனின் அறிமுகம்: 
பராசக்தி (1952),இப்படத்துக்கு வசனங்கள்  மு.கருணாநிதி எழுதினார்.இதில் சிவாஜி பேசிய வசனங்கள் மிகவும் பிரசித்தி பெற்றன.

சத்யஜித் ரே அறிமுகம்:
பதேர் பாஞ்சாலி (1955),உலக சினிமா வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்தது இப்படம். எந்த முறையில் பட்டியலிட்டாலும் உலகின் சிறந்த திரைக்கலைஞர்களில் ஒருவராக தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வருபவர் ரே. சினிமா ஊடகத்தின் உண்மையான ஆசானான சத்யஜித் ரே, பலகலைகளில் தேர்ந்த படைப்பாளியாவார். அவர் இந்திய சினிமாவுக்கு உலக அளவில் உரிய அங்கீகாரம் தேடித் தந்தார்.

வணிக ஹிந்தி சினிமாவை மாற்றியமைத்த மூவர் குழுவின் எழுச்சி:
ராஜ்கபூர், திலீப்குமார் மற்றும் தேவ் ஆனந்த். இன்குலாபில் (1935)  அறிமுகமானபோது ராஜ்கபூருக்கு வயது 11. நீல்கமலில் (1947) மது பாலாவுக்கு ஜோடியாக கதாநாயகன் வேடத்தில் அவர் நடித்தார். 1948 இல் ஆர்.கே. பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதே ஆண்டில் ஆக் என்ற படத்தை இயக்க வும் செய்தார். திலீப்குமார்,  ஜ்வர் பாதா(1944)  என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தேவதாஸ்(1955) மற்றும் மொகலே ஆசாம் (1960) உள்ளிட்ட முத்திரை பதித்த படங்களில் நடித்தார். பிரபாத் தயாரித்த ஹம் ஏக் ஹைன் (1946)  என்ற படத்தின் மூலம் தேவ் ஆனந்த் அறிமுகமானார். 

ரஜினிகாந்த் என்ற அற்புதம்: கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் (1975) என்ற படத்தில் அறிமுகமானார். கமல்ஹாசன் கதாநாயக னாக நடித்த அப்படத்தில் ஒரு சிறிய வேடம். கமல் நடித்த மற்றொரு படமான மூன்று முடிச்சில் (1976) முக்கிய வேடத்தில் ரஜினி நடித்தார். பிறகு அவருக்கு இன்று வரை வெற்றிமுகம்தான்.

ராஜேஷ் கன்னா யுகம்:
அவரது முதல் படம் சேத்தன் ஆனந்த் இயக்கிய ஆக்ரி காத்(1966). முக்கிய வேடத்தில் அவர் நடித்த ராஸ் அவரது முதல் வெற்றிப் படம். ஆராதனா (1969) இந்த மெகா ஸ்டாரை உருவாக்கிய படம்.

அமிதாப் எழுச்சி:
கனத்த குரல் கொண்ட அமிதாபுக்கு மிருணாள் சென்னின் புவன் ஷோம் (1969) என்ற படத்தில் வர்ணனையாளராக முதல் வாய்ப்புக் கிடைத்தது. அவரது திரையில் தோன்றி நடித்த முதல் படம் கே.ஏ.அப்பாசின் சாத் ஹிந்துஸ்தானி. கோபக்கார இளைஞன் என்ற தோற்றம்  ஜஞ்சீர் (1973) மூலமே அவருக்குக் கிடைத்தது. 
கமல்ஹாசனின் முதல் படம்:

ஏ.பீம்சிங் இயக்கிய களத்தூர் கண்ணம்மாவில் (1959) ஒரு குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்ற கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானார். கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்களில் (1975) தன்னை விட மூத்த வயது பெண்ணை காதலிக்கும் இளைஞனாக நடித்ததன்  மூலம் ஒரு உச்ச நட்சத்திரமாக உயர்ந்த கமல்ஹாசன், சமீபத்தில் வெளிவந்த மன்மதன் அம்பு (2010) வரை தனது திரைப்பயணம் முழுதும் பரிசோதனைகள் செய்துவருகிறார். தனது உள்ளார்ந்த நடிப்புத் திறன் மூலம்,  பிம்ப முத்திரைகளுக்குள் விழுந்து விடும் மற்ற நட்சத்திரங்களைப் போலல்லாமல் எந்த பிம்பத்துக்கும் சிக்காமல் அவர் தனித்து விளங்குகிறார். பலதுறை வித்தகரான கமல் தான் இயக்கம் நான்காவது படமான விஸ்வரூபத்தை முடித்து விட்டார்.


இன்னும் சில தகவல்கள்

மெர்ச்சன்ட்- ஐவரி படங்களின் தொடக்கம்:
1961. இந்தியாவில் பிறந்த இஸ்மாயில் மெர்ச்சன்ட் சிறந்த தயாரிப்பாளருக்கான ஆஸ்கார் விருதுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்  பட்டவர்(எ ரூம் வித் எ வியூ, 1986; ஹோவர்ட்ஸ் எண்ட், 1992; ரிமைன்ஸ் ஆஃப் த டே,1993).


ஹிந்தியில் டப் செய்யப்பட்ட முதல் ஹாலிவுட் படம்:
ஜுராசிக் பார்க், 1993.

இந்தியாவின் முதல் மல்டிப்ளெக்ஸ்:
பி.வி.ஆர் அனுபம்(1997).

சலீம் -ஜாவேத்தின் முதல் திரைக்கதை:
சீதா அவுர் கீதா (1972).

காப்பீடு செய்யப்பட முதல் படம்:
சுபாஷ் கையின் தால்(1999)

முதல் திகில் படம்:
ராம்சே சகோதரர்களின் தோ கஸ் ஜமீன் கே நீச்சே (1972).

நவீன சினிமா தொடக்கம்:
மிருணாள் சென்னின் புவன் ஷோம் மற்றும் மணி கவுலின் உஸ்கி ரொட்டி (1969) ஆகிய படங்கள் வருகை

தேசிய விருதுகள் உருவாக்கப்பட்ட ஆண்டு:
1954.  

தகவல்கள் உதவி: சண்டே இந்தியன், விக்கிபீடியா.62 comments:

 1. அனைத்தும் அருமையான தகவல்கள் ராஜ்.
  பகிர்வுக்கு நன்றி.
  TM2.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே....உங்க வோட்டுக்கும் மிக்க நன்றி.. :)

   Delete
 2. சூப்பர் ராஜ்.
  பல அரிய தகவல்கள்.
  உங்களது உழைப்பு நன்றாக தெரிகிறது.
  பகிர்துகொண்டத்ர்க்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   Delete
 3. nice work Raj... lot of unknown information... thanks for the post

  ReplyDelete
  Replies
  1. Thanks Bro..Most of the info were taken from wiki and other tamil sites... I just presented them in a order.. :)
   thanks for your visit.. :)

   Delete
 4. மச்சி சூப்பர் புக் மார்க் பண்ண வைச்சுட்டிங்களே கலக்கல்.. முக்கியமா வாசிக்கும் போது ரஜினி வரணும் வரணும் என்று இருந்தேன்.. தலிவரு அபூர்வ ராகம் மூலம் போட்டிங்க இல்ல.. கலக்கல்..

  பவர் ஸ்டார் என்ற அற்புதம்

  பவர் ஸ்டார் கன்னா யுகம்

  பவர் ஸ்டார் எழுச்சி

  இப்படி தலைப்புக்கள் சேர்க்கபடாத படியால் கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்..

  மேலும் நண்பா இதில் நீங்க போட்டு இருக்கிற 80 % தகவல்கள் எனக்கு புதிது.. பதிவு உண்மையிலே கலக்கல்..

  ReplyDelete
  Replies
  1. // 80 % தகவல்கள் எனக்கு புதிது// ஹாரியிடம் இருந்து இருந்து கிடைக்கும் இப்படி ஒரு தகவல் புதிது #எப்புடி

   Delete
  2. மச்சி, பவர் ஸ்டாரை ஒரு பதிவுக்குள் அடக்க முடியுமா..."முதல் முதலில்" தனது முதல் படத்தையே 225 நாட்கள் ஒட்டி சாதனை புரிந்த ஸ்டாரை இவங்களோட சேர்த்து எழுத வேண்டாமே என்று விட்டு விட்டேன்..அவருக்கு தனி பதிவே போட்டுடுவோம்.

   Delete
 5. இவ்வளவு தகவல்கள் எப்படி பாஸ் சேகரித்திர்கள் ? அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. அணைத்து தகவல்களும் இணையத்தில் இருந்தது பெற பட்டவை தான் நண்பரே....

   Delete
 6. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. இணைத்து விட்டேன் பாஸ்..

   Delete
 7. அரிய தகவல் பாஸ்...எப்ப்டி..எப்படி..முடியுது...?

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் இணையம் தான் ஜீவா.. :)

   Delete
 8. // ரஜினிகாந்த் என்ற அற்புதம் // தல நீங்கள் எழுதிய அத்தனை வரிகளிலும் இந்த வரி தான் மிக மிக அற்புதம் ஹா ஹா ஹா

  தல அருமையான உழைப்பு... நல தகவல்களை சலிப்பு தட்டாமல் சொல்லி உளீர்கள்.... வாழ்க நீ எம்மான்... ஹா ஹா ஹா சும்மா ல்லுல்லுலாய்க்கு

  ReplyDelete
  Replies
  1. மச்சி பார்த்தியா நாம எப்பவுமே ஒரே கட்சி ஹி ஹி..

   Delete
  2. நன்றி சீனு...இந்திய சினிமா வரலாற்றை பற்றி எழுதும் போதும் தலைவர் இல்லாமலா... ???
   ஹாரி..நம்ம எல்லா ஒரே கட்சி...பெரிய கட்சி..

   Delete
 9. அற்புதம்.
  ‘முதன் முதலாக’ இத்தனை... திரையுலக விபரங்களுடன் வந்த ‘தமிழ் பதிவு’...
  அநேகமாக இதுதான் என நினைக்கிறேன்.
  நன்றியுடன் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

   Delete
 10. நிறைய தகவல்கள்....அதிகமான உழைப்பு....வாழ்த்துக்கள்!!!

  //பிம்ப முத்திரைகளுக்குள் விழுந்து விடும் மற்ற நட்சத்திரங்களைப் போலல்லாமல் எந்த பிம்பத்துக்கும் சிக்காமல் அவர் தனித்து விளங்குகிறார். பலதுறை வித்தகரான கமல்//

  உலகநாயகன் பற்றி நீங்கள் எழுதிய பகுதிக்கு "பிம்ப முத்திரைக்குள் சிக்காத முதல் (ஒரே)ஹீரோ" என்று தலைப்பிட்டிருக்கலாம்....

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் கரன்...எந்த பிம்பத்திலும் இது வரை என்ன இனிமேலும் சிக்காத ஒரே நடிகர் கமல்....He is a genius.. :)

   Delete
 11. இந்த முதல் முதல் மேட்டர்கள் இப்பதான் எனக்கு முதல் முதலா தெரியும், அதிலும் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் படம் "லாகான்" என்று தான் நினைத்திருந்தேன். இப்போ தெளிஞ்சிரிச்சு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க கிஷோர்..
   எனக்கும் இது எல்லாம் புது விஷயம் தான் கிஷோர்..கேன்ஸ் விருது இந்திய படம் வாங்கி உள்ளது என்பது போன்றவை நானும் முதல் முதல்லா கேள்விப்பட்டேன்..

   Delete
 12. மிகவும் தேடி எடுக்கவேண்டிய அறிய செய்திகளை ஒரே இடத்தில் கொடுத்தமைக்கு நன்றி ராஜ்... தொடரட்டும் :) ...!

  ReplyDelete
 13. அட சும்மா நிறைய பேட்டரை அள்ளி தெளிச்சு இருக்கிங்க.., நைஸ் போஸ்ட் பாஸ் :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி தல...நீங்களும் அடிக்கடி போஸ்ட் போடுங்க...

   Delete


 14. Film historians with a taste for the quirky say that the first lingering liplock of Indian cinema was between Devika Rani and Himanshu Rai in the film Karma, released in1933.

  But much before that, actors A.V.P. Menon and Padmini set the screen alight with a full-lipped long-drawn-out kiss in the forgotten Malayalam silent classic Marthanda Varma, based on the historical novel penned by C.V. Raman Pillai.

  “I was stunned to see the kiss which will beat films of today,” said Mr P. Gopakumar, movie critic and office-bearer of the Film Lovers Cultural Association, which is conducting a DVD screening of the 90-minute film in the state capital this week.

  Most film historians say that Marthanda Varma, the second Malayalam film, was made in 1931. However, others point out that it was released in early 1933. Even then, it beats Karma, by a whisker in the pecking order, so to say.

  “In the scene, Ananthapadmanabhan, who is disguised as a madman, meets his lover Parukkutty, and kisses her, overwhelmed by passion,” said Mr Gopakumar. “I don't know how it escaped the censor’s eye.”

  However, unlike Karma, which delighted even the British Royal family, Marthanda Varma, directed by P.V. Rao, was a doomed film.

  The producer, R. Sundar Raj, did not obtain rights for adapting the novel and in the midst of the first much-hyped screening in the Capitol Theatre in Thiruvananthapuram, the film’s print was seized by the court. “So it also became the first film to face a copyright case,” said Mr Gopakumar.

  The print lay undiscovered in the dusty cellar of the Kamalalaya Book Depot (which published the novel) here till the late 1970s when it was retrieved by the Film Archives.  முத்தக்காட்சிக்கு கொஞசம் டிட்பிட்ஸ் :))))))))))))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. புது தகவல் தல...அப்ப முத unofficial முத்த காட்சி மலையாள படத்துல தான் வச்சாங்க...
   முத copyright சர்ச்சையில் சிக்கிய படம் கூட அது தான் (Marthanda Varma) போல்...பதிவில் சேர்த்து விடுகிறேன்..மிக்க நன்றி தல..

   Delete
 15. http://www.andhrakaburlu.com/Photo/Malayalam%20film%20Kiss.jpg மக்களே நான்கு நிமிட முத்தக்காட்சி உங்களுக்காக :)

  ReplyDelete
  Replies
  1. செம காட்சி..ரொம்ப தந்துருபமா நடிச்சு இருக்காங்க...

   Delete
 16. பயங்கரமா ஹார்ட் வொர்க் பண்ணியிருக்கீங்க ராஜ் ... நிறைய நிறையத் தகவல்களைத் தெரிந்து கொண்டேன். சீக்கிரம் ஒரு விமர்சனம் எழுதிப் போடுங்க....ரொம்ப நாளாச்சு. :)

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் நெட்டுல கிடைச்ச தகவல்கள் தான் பாஸ்...கொஞ்சம் பட்டி, டிங்கேரிங் பார்த்து குடுத்து இருக்கேன்... :)
   அடுத்து விமர்சனம் தான் பாஸ்...Mulholland Dr பத்தி எழுதலாம் என்று ஐடியா இருக்கு...படத்தை பார்த்து வையுங்க...டிஸ்கஸ் பண்ணலாம்..

   Delete
 17. ஒரு 80 வருஷம் பின்னோக்கிப் பயணிச்ச ஃபீலிங்கு! கலக்கிட்டீங்க பாஸ்!

  ReplyDelete
 18. மிகச் சிறந்த தொகுப்பு... சேமித்துக் கொண்டேன்...

  உங்களின் உழைப்பிற்கு பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்..

   Delete
 19. ராஜ்,

  பல அரிய தகவல்கள்,நன்றாக உள்ளது.

  சில தகவல்கள் சந்தேகத்திற்கிடமானவையாக உள்ளது, முன்னர் ஒரு முறை சினிமா பற்றி தேடியப்போது பார்த்த நியாபகம் இப்போ நினைவில்லை.

  //இந்தியாவின் முதல் மல்டிப்ளெக்ஸ்:
  பி.வி.ஆர் அனுபம்(1997).//

  சென்னையில் சபையர் என்ற தியேட்டரே இந்தியாவின் முதல் மல்டிபிளெக்ஸ், சபையர், எமரால்ட்,டையமண்ட் என்று 3 அரங்குகள். அண்ணா மேம்பாலம் அருகே இருந்தது, இப்போது இடிக்கப்பட்டுவிட்டது.

  அதற்கு பின் தேவி,சங்கம்,ஆனந்த்,சத்யம் எல்லாம் மல்டிபிளெக்ஸ் ஆக தான் கட்டப்பட்டன.

  இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரையரங்கம் சென்னையின் மிட் லேண்ட் தான்,இப்போ ஜெயபிரதா.

  70 எம்.எம் தியேட்டர் பைலட் (இந்தியாவா ,தென்னிந்தியாவா என குழப்பம்)

  //முதல் திகில் படம்:
  ராம்சே சகோதரர்களின் தோ கஸ் ஜமீன் கே நீச்சே (1972).//

  எம்ஜிஆர் நடித்த மர்மயோகி, =(1951) , திகில் காட்சி இருக்கு என தமிழில் முதல் ஏ சான்று கொடுக்கப்பட்ட படம்.

  படத்தில் பேய் போல ஒரு உருவம் வரும் அதனால்.

  அதன் பின்னர் அந்த நாள், இரும்பு திரை, கருப்பு பணம், அதே கண்கள் என திகில்/மர்ம படங்கள் தமிழில் நிறைய வந்தன.

  1972 இல் வந்த படம் திகில் படம் என்பது சரியல்ல, ஒரு வேளை இந்தி படங்கள் மட்டும் கணக்கெடுத்து போட்டுடாங்களோ.

  இந்தியாவில் முதன் முதலில் நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து எடுத்ததும் தமிழ் தான் ,ஏ.வி.எம் எடுத்த படம், பேரு மறந்து போச்சு.

  இன்னும் பல இந்திய முதல்களில் தமிழுக்கு இடம் இருக்கு தேடிப்பார்க்கணும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வவ்வால்..
   மர்மயோகி முதல் "A" (Adults Only) படம், இந்த தகவல்ளை சேர்த்து விடுகிறேன்..
   எனக்கு தெரிந்து திருச்சி "மாரிஸ்" தியேட்டரில் ஐந்து அரங்குகள் இருந்தது...90 களில் இருந்தே மாரிஸ் இருந்தது..திருச்சியில் படிக்கும் போது 90 ல வந்த தளபதி படத்தின் ஷீல்ட் பார்த்து உள்ளேன்.
   ஆனால் ஆறு திரைஅரங்குகள் மேல் கொண்ட காம்ப்ளெக்ஸ் தான் மல்டிப்ளெக்ஸ் எனப்படுகிறது... அதனால் PVR தான் முதல் மல்டிப்ளெக்ஸ் என்று எண்ணுகிறேன்..தவறாய் இருந்தால் திருத்தி விடுகிறேன்..
   முழு நீள பேய் படத்தை தான் திகில் படம் என்று குறிப்பிட்டு உள்ளேன், "தோ கஸ் ஜமீன் கே நீச்சே" zombie பேய் பற்றிய படம்.
   அதே கண்கள் படத்தை சஸ்பென்ஸ் genere ரில் சேர்க்கலாம்..திகில் லிஸ்டில் வருமா என்று தெரியவில்லை
   //இந்தியாவில் முதன் முதலில் நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து எடுத்ததும் தமிழ் தான் ,ஏ.வி.எம் எடுத்த படம், பேரு மறந்து போச்சு///
   நானும் படித்து உள்ளேன்..எங்கே என்று ஞாபகம் வர வில்லை..
   உங்க கருத்துக்கு மிக்க நன்றி.. அடிக்கடி வாங்க...

   Delete
 20. அருமை! தல உங்க 100% உழைப்பு, சினிமா மேலுள்ள பற்று இந்தப் பதிவில் தெரிகிறது.

  எனது சினிமா வரலாறு பதிவிற்கு அடுத்து இந்த 'முதன்முதல்' சமாச்சாரத்தை தான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனா இவ்வளவு சிறப்பா நீங்க தொகுத்து கொடுத்துட்டீங்க... பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பதிவு இது... மிக்க நன்றி :-)

  ReplyDelete
  Replies
  1. நன்றி தல..உங்க சினிமா வரலாறு உழைப்புக்கு முன்னாடி நான் பண்ணுனது ஒண்ணுமே இல்லை, கொஞ்சம் பட்டி டிங்கேரிங் வேலை தான் பார்த்து இருக்கேன்....
   நீங்க விட்ட தமிழ் சினிமா தொடரை தொடருங்க... :)

   Delete
 21. நிறைய தகவல்கள்! தாதா சாகேப் இயக்கிய ராஜா ஹரிசந்திரா படம் யுடுபில் உள்ளது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பரே...தகவலுக்கு மிக்க நன்றி..யூ டுபில், .தேடினேன் கிடைத்தது..

   Delete
 22. உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்....
  எல்லா 'முதல்'களையும் பட்டியலிட்டு அசத்தியிருக்கீங்க...சூப்பர்.

  ReplyDelete
 23. தமிழின் முதல் வண்ணப்படம் அலிபாவும் நாற்பது திருடர்களும்னு நெனைக்கிறேன்.அதே போல் முதல் 70mm 'ராஜராஜ சோழன்' என்பது போல் நினைவு..
  தமிழில் 'ஸ்லோ மோசன்' மயக்கம் என்ன பாடலில்தான் அறிமுகப்படுத்தினார்கள் எனப் படித்தியிருக்கிறேன்...
  இந்திய அளவில் உள்ள தகவல்கள் யாவும் இப்போதுதான் படிக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க பாஸ்...உங்க "முதல் முதலில்" தகவலுக்கு மிக்க நன்றி....இணையத்தில் தேடும் போது அணைத்து தகவல்களும் கிடைத்தது..
   உங்க கருத்துக்கு நன்றி..

   Delete
 24. பாஸ் கர்மா படத்திலுள்ள அந்த முதல் முத்தக்காட்சி என்கிட்டதான் இருக்கு.. :-)))

  தமிழ் சினிமாவின் 'முத்தச் சரித்திர நாயகன்

  ReplyDelete
  Replies
  1. படித்தேன் பாஸ்....பெரிய ஆராய்ச்சியே பண்ணி இருக்கீங்க.....வாழ்த்துக்கள்..

   Delete
 25. அடடா.. அருமையான தகவல்கள்.. உங்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட்....ஆமா, முதல் முழு நீளத் காமெடி திரைப்படம் எதுவா இருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. தெரியல பாஸ்..தேடி பார்த்து விவரம் .கிடைத்தால் சொல்கிறேன்..உங்கள் வருகைக்கு மிக்க நன்றி..

   Delete
 26. engal thalaivar ulaganayagan avargal thaan miga periya arputham...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா அஜித்....என்னை பொறுத்தவரை கமல் ஒரு ஜீனியஸ்...

   Delete
 27. இவ்வளவு விவரங்கள் எப்படித்தான் கிடைத்தது உங்களுக்கு....கலகிடிங்க ராஜ்,
  உங்க உழைப்பு தெரிகிறது ராஜ்.

  //////முதல் திகில் படம்:
  ராம்சே சகோதரர்களின் தோ கஸ் ஜமீன் கே நீச்சே (1972). ////////
  இந்த தகவல் செரிதான?.....இதற்கு முன்பு எந்த திகில் படமும் வரவில்லையா!

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. அருமை மிக அருமை :)

  ReplyDelete