Monday, February 27, 2012

நானும் ஆஸ்கர் விருதும் - 2012

அடிச்சிகோ பிடிச்சிகோ என்று இன்று காலை 84-வது ஆஸ்கார் விருதுகள் அறிவிக்க பட்டு விட்டன. அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த முறை அதிக விருதுகள் வாரி குவித்துள்ள படம் "தி ஆர்டிஸ்ட்". இப்படம் 5 விருதுகளை வாங்கி குவிச்சிருக்கு. முக்கியமா சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர் போன்ற மிக முக்கிய விருதுகளை வாங்கி இருக்கு இந்த படம். வேற என்ன என்ன படம் விருது வாங்கி இருக்கு அப்படின்னு இப்போ பார்க்குற முன்னாடி ஆஸ்கார் விருதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு இப்போ பார்போம்.
          ஆஸ்கார் விருது ஹாலிவுட் காரர்களால் ஹாலிவுட் படங்களுக்கு குடுக்க படும் விருதுன்னு எல்லோருக்கும் தெரியும். 1997 -ஆம் ஆண்டு டைட்டானிக் படத்தோட தமிழ்நாட்டு ரிலீஸ்க்கு அப்புறமா தான் எனக்கு ஆஸ்கார் விருது பற்றிய அறிமுகம் கிடைச்சது. அதுக்கு முன்னாடி நான் ஆஸ்கார் பத்தி கேள்வி பட்டது கூட கிடையாது. டைட்டானிக் முன்னாடி எனக்கு தெரிஞ்ச ஹாலிவுட் படம்னா அது மம்மி, அனகோண்டா, ஜுராசிக் பார்க் மட்டும் தான். வின்னர் ஆப் 11 ஆஸ்கார் என்ற பயங்கரமான விளம்பரத்தோட டைட்டானிக் தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆச்சு. டைட்டானிக் பார்காட்டி தெய்வ குத்தம் ஆகிடும் அப்படிங்கற அளவுக்கும் சன் டிவி விளம்பரம் பண்ணுனாங்க. எதுக்கு சாமி பொல்லாப்புன்னு நானும் போய் டைட்டானிக் பார்த்தது எல்லாம் பெரிய வரலாற்று நிகழ்வு. என்னடா இது சண்டையே இல்லாத படத்துக்கு போய் பெரிய பெரிய விருது எல்லாம் குடுத்து இருகங்களே அப்படின்னு ரொம்ப பீல் பண்ணுனேன். டைட்டானிக் எனக்கு அப்போ பிடிக்கமா போச்சு. நம்ப ஊர் தேசிய விருது எப்படி பெங்காலி மற்றும் மலையாள ஆர்ட் மூவிக்கு தான் குடுப்பாங்கலோ, அதே போல  தான் ஆஸ்கார் அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதுக்கு அப்புறம் ஆஸ்கார் வாங்கின படம்னா அப்படியே தள்ளி வச்சிட்டு போயிடுவேன். அப்படி நான் நிறைய நல்ல படங்களை தவற விட்டு இருக்கேன்.
            இதே கதை 2009 வரைக்கும் தொடர்ந்து. எனக்கும் ஆஸ்கார் மேல அவ்வளவு ஈடுபாடு இருந்து கிடையாது. ஆனா 2009 - ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இசைக்கான ரெண்டு பிரிவுல ஒரு தமிழன் A.R. Rahman பரிந்துரை செய்ய பட்டு உள்ளார் என்று கேள்விபட்டு ரொம்ப ஆச்சிர்யமா போச்சு. அப்ப தான் SlumDog Millionaire படமும் நெட்ல டவுன்லோட் பண்ணி பார்த்தேன். அந்த படமும் அந்த படத்தின் இசையும் எனக்கு நிறைய விசயங்களை கத்து கொடுத்துச்சு. SlumDog போல் ஒரு விறுவிறுப்பாக திரைபடத்தை அது வரை நான் பார்த்தது கிடையாது.ஆரம்பம் முதல் கடைசி வரை கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குறையாமல் அதே நேரத்தில் மிக அழுத்தமான காட்சிகளோடு, யதார்த்தம் கொஞ்சமும் மீறாமல், பேண்டஸித் தன்மையோடு நகரும் பட காட்சிகள் எனக்கு புது அனுபவத்தை குடுத்தன. அந்த படத்தில் இறுதியில் வரும் ஒரு காட்சி இது, கடைசி கேள்விக்கு விடை தெரியாமல் ஜமால் முழிக்கும் நேரத்தில் டிவி பார்த்து கொண்டு இருக்கும் ஒரு வயதான முதாட்டி "ஜமால் உன்னால் முடியும்" என்று சொல்லும் அந்த வசனமும் அதற்கான பின்னணி இசையும் எனக்கு மிக பெரிய நம்பிக்கை டானிக். அந்த காட்சியை இப்போ நினைத்தாலும் எனக்கு புல் அரிக்கும். அப்படி பட்ட இசையை குடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை தான் ஆஸ்கார்க்கு பரிந்துரை செய்ய பட்டு உள்ளது என்ற எண்ணமே எனக்கு ஒரு திருப்தியை குடுத்தன.
            ஆனா அதுக்கும் மேல A.R. Rahman அந்த விருதை வாங்கி விழா மேடையில் "எல்லா புகழும் இறைவனுக்கே" அப்படின்னு தமிழ்ல சொன்னாரோ, அப்ப நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அந்த ஒரு வினாடிய இப்போ நினைச்சாலும் எனக்கு அப்பிடியே சிலிற்கும். ஏதோ நானே அந்த எடத்துல இருந்த மாதிரி ஒரு பீலிங். அப்போதான் எனக்கு புரிஞ்சது, ஆஸ்கார் விருது ஹாலிவுட் காரனுக்கு மட்டும் சொந்தமானது இல்லை, திறமை இருந்தா ஒரு தமிழன் கூட வாங்கலாம். அப்போ நீங்க கேட்கலாம் ரஹாமனை விட பல மடங்கு திறமை வாய்ந்த இசைஞானிக்கு ஏன் இன்னும் ஆஸ்கார் குடுக்கலன்னு ? காரணம் ரொம்ப சிம்பிள், இசைஞானி இன்னும் ஹாலிவுட் படத்துக்கு மியூசிக் போடல. என்ன கேட்டா இசைஞானிக்கு இன்னும் இந்தியாவில நல்ல அங்கீகாரம் கிடைகவில்லைன்னு தான் சொல்லுவேன். சரி விடுங்க எங்கேயோ போயிட்டோம், இப்போ மறுபடியும் ஆஸ்கார். 
             அதுக்கு அப்புறம் எனக்கு ஆஸ்கார் மேல ரொம்ப மரியாதை வந்துடுச்சு. அப்புறம் நான் ஆஸ்கார் வாங்கின படமா தேடி தேடி பார்த்தேன்.  ஆஸ்கார் வரலாறை எடுத்து பார்த்தா, வருஷா வருஷம் மிக சிறந்த படத்தை தான் அவங்க தேர்ந்து எடுத்து இருகாங்கன்னு எனக்கு புரிஞ்சது. 98% அவங்க தேர்வு சரியா இருக்கும். ஒன்னு ரெண்டு தடவை அவங்க முடிவு கொஞ்சம் தப்பாய் போய் இருக்கலாம். மற்ற படி ஆஸ்கார் அரசியல் அப்படின்னு ஒன்னும் கிடையாது என்பது என்னோட கருத்து. சரி இந்த வருஷம் ஆஸ்கார் வாங்கின படம் மற்றும் அதுக்கு போட்டியிட்ட படங்களை இப்போ பார்போம்.
               சிறந்த படத்துக்கான விருதுக்கு போட்டியிட்டது மொத்தம் 9 படங்கள்:
The Tree of Life , The Descendants, Extremely Loud & Incredibly Close, The Help, Midnight in Paris, Money ball, War Horse & The Artist.
மேல உள்ள படங்களை பத்தி ஏற்கனவே நம்ப தமிழ் ப்ளாக்கரஸ் கொஞ்ச பேரு எழுதி இருகாங்க. தனியா நான் வேற இந்த படங்களை பத்தி எழுத வேண்டாமேன்னு நினைச்சு நான் படிச்ச சில நல்ல விமர்சன்களை மட்டும் இங்கு குடுத்து இருக்கேன். அதோட லிங்க் இதோ, போய் பாருங்க.
ஹாலிவுட் ரசிகனின் Moneyball மற்றும் Hugo.
Tha Cinemaவின் பார்வையில் Midnight in Paris (2011) - கலை இலக்கிய ஃபேன்டஸி 
ஆனந்த அவர்களின் பார்வையில் தி ஆர்டிஸ்ட்.
விருதுக்கு பரிந்துரை செய்ய பட்ட மற்ற படங்களை பற்றி ஆனந்த இந்த போஸ்ட்ல ரொம்ப நல்லா எழுதி இருக்கார். 

இத்தனை கடும் போட்டிக்கு மத்தியில் சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருதினை வென்றது தி ஆர்டிஸ்ட். இந்த படத்தில் நடித்த Jean Dujardin -க்கு சிறந்த நடிகருக்கான விருதும், இப்படத்தை இயக்கிய Michel Hazanavicius -க்கு சிறந்த இயக்குனர்க்கான விருதும் வழங்க பட்டு உள்ளது.
அது போக சிறந்த கிராபிக்ஸ்/விஷுவல் எபக்ட்ஸ் உடைய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும். அந்த விருதினை தட்டி சென்ற படம் "The Hugo".
விஷுவல் எபக்ட்ஸ் பிரிவில் பரிந்துரைக்க பட்ட படங்களை பற்றிய நம்ப JZ அவர்கள் ரொம்ப டீபா அலசி உள்ள பதிவு 
அது போக சிறந்த அனிமேஷன் படத்துக்காண விருதை வென்ற படம் Rango
அனிமேஷன் படங்களை பற்றிய JZ அவர்களின் அலசல் பதிவு.
விருது பெற்ற படங்களின் பட்டியல் இதோ: 

BEST PICTURE
- The Artist
BEST DIRECTOR
- Michel Hazanavicius – The Artist
BEST ACTOR
- Jean Dujardin – The Artist
BEST ACTRESS
- Meryl Streep – The Iron Lady
BEST SUPPORTING ACTOR
- Christopher Plummer – Beginners
BEST SUPPORTING ACTRESS
- Octavia Spencer – The Help
BEST ORIGINAL SCREENPLAY
- Woody Allen – Midnight in Paris
BEST ADAPTED SCREENPLAY
- Alexander Payne, Nat Faxon & Jim Rash – The Descendants
BEST ANIMATED FILM
- Rango
BEST FOREIGN LANGUAGE FILM
- A Separation (Iran)
BEST CINEMATOGRAPHY
- Robert Richardson – Hugo
BEST DOCUMENTARY
- Undefeated
BEST DOCUMENTARY SHORT
- Saving Face
BEST SHORT FILM (ANIMATED)
- The Fantastic Flying Books of Mr. Morris Lessmore
BEST SHORT FILM (LIVE-ACTION)
- The Shore
BEST VISUAL EFFECTS
- Hugo
BEST ART DIRECTION
- The Artist
BEST COSTUME DESIGN
- The Artist
BEST MAKEUP
- The Iron Lady
BEST FILM EDITING
- The Girl with the Dragon Tattoo
BEST SOUND MIXING
- Hugo
BEST SOUND EDITING
- Hugo
BEST ORIGINAL SCORE
- Ludovic Bource – The Artist
BEST ORIGINAL SONG
- ‘Man or Muppet’ from The Muppets


Thursday, February 02, 2012

The Good, the Bad and the Ugly- (1966) செர்ஜியோ லியோனியின் டாலர்ஸ் ட்ரையாலஜி பாகம் -3

இந்த பதிவு முலமாக நான் உங்களுக்கு அறிமுக படுத்த போற படம் The Good Bad and Ugly, இது ஒரு வெஸ்டர்ன் வகையை சேர்ந்த படம். அதுவும் இல்லாம இது டாலர்ஸ் ட்ரையாலஜி சீரீஸ்ல வந்த கடைசி படம். இந்த சீரீஸ்ல ஏற்கனவே வந்த ரெண்டு படத்தையும் என்னோட ப்ளாக்ல எழுதி உள்ளேன். முத படம் FistfulOf Dollars ரெண்டாவது படம் For a Few Dollars More. செர்ஜியோ லியோனி இயக்கிய இந்த திரைக்காவியம் அவரோட முத ரெண்டு டாலர்ஸ் படத்தையும் தூக்கி சாப்பிட்டுச்சு. அந்த காலத்தில் இப்படி பட்ட ஒரு பிரண்டமான படம் எடுத்த செர்ஜியோவுக்கு முத சல்யூட்.செர்ஜியோ இத்தாலிய டைரக்டர், அவர் டாலர்ஸ் ட்ரையாலஜி படங்களை முதலில் இத்தாலிய மொழியில் தான் எடுத்தார், பிறகு இப்படங்கள் இங்கிலீஷில டப்பிங் செய்ய பட்டு அமெரிக்காவில் ரிலீஸ் செய்ய பட்டன. இந்த படத்தை மிஞ்சுற மாதிரி ஏன் இது பக்கத்துல வர மாதரி கூட இந்த நாள் வரை எந்த வெஸ்டர்ன் படமும் வந்தது இல்லை. வெஸ்டர்ன் படம்னா அது The Good Bad and Ugly. ஏன் இந்த படத்துக்கு இந்த பில்ட் அப் அப்படின்னு இப்ப பார்போம்....


படத்தை பத்தி பார்க்கிறதுக்கு முன்னாடி செர்ஜியோ லியோனி பத்தி கொஞ்சம் பார்போம். லியோனியின் 25 வருஷ டைரக்டர் கேரியரில் அவர் மொத்தமே 10 படங்களை தான் இயக்கி உள்ளார். அதில் ஒன்று கூட நேரடி ஆங்கில படம் கிடையாது. எல்லாமே இத்தாலிய மொழி படங்கள் தான். முக்கியமா அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் அவரின் அணைத்து படங்களும் அமெரிக்கா முதல் கொண்டு உலகம் முழுவதும் இன்று வரை கொண்டாடபடுகிறது. வெஸ்டர்ன் படங்களுக்கு என்றே இவர் தனியா ஒரு பாணியை உருவாக்கினார். முக்கியாமாக பண்டி ஹண்டர்ஸ், வங்கி கொள்ளை, புதையல் தேடி அலைவது, டுயல் துப்பாக்கி சண்டை, மர விடுகள், குதிரையில் இருந்த படியே துப்பாக்கி சண்டை, வறண்ட பாலைவனம், பழிவாங்குதல், பயங்கர முகம் கொண்ட வில்லன்கள் போன்ற விசயங்கள் கண்டிப்பாக அவரின் அணைத்து படங்களிலும் இடம் பெற்றன. நம்ப வாழ்கை முறைக்கு சம்பந்தமே இல்லாத வெஸ்டர்ன் வாழ்கை முறை மேல ஏனோ எனக்கு சின்ன வயசுல இருந்து ஒரு பயங்கர பிடிப்பு. நம்பனால டெக்சாஸ், மெக்ஸிகோ போன்ற ஊருக்கு எல்லாம் போய் அந்த வாழ்க்கைய அனுபவிக்க முடியாது. ஆனா அந்த கௌபாய் உலகத்தை கண்டிப்பா செர்ஜியோவின் படங்களின் முலமாக அனுபவிக்கலாம். அந்த வாழ்கையை வேற ஒரு வழி முலமாக கூட அனுபவிக்கலாம், அது என்னன்னு வேற பதிவுல சொல்றேன்...


இந்த திரைப்படத்தின் ஆரம்பம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். முன்று கதாபாத்திரங்களின் அறிமுகத்தோடு படம் ஆரம்பிக்கும். முதலில் டுகோ. டுகோ தான் UGLY. இவன் ஒரு பலே திருடன். பண்டி ஹண்டரிடம் இருந்து டுகோ தப்பிப்பது போன்று இவரின் ஆரம்ப காட்சி இருக்கும். இந்த காட்சி நல்ல நகைச்சுவையாக இருக்கும். அடுத்து ஏஞ்சல் ஐஸ். இவன் தான் BAD. இவன் ஒரு முன்னாள் அமெரிக்க ராணுவ வீரனை விசாரணை செய்வது போன்று ஆரம்ப காட்சி இருக்கும். இந்த காட்சி Inglorious Basterds படத்தில் Waltz செய்யும் விசாரணை காட்சிக்கு ஈடானது. இதில் இவனது கொடூர குணம் நமக்கு தெரிய வரும். அடுத்து ஈஸ்ட் வூட், இவரு தான் Good. டுகோவை வேறு சில பண்டி ஹண்டரிடம் இருந்து இவர் காப்பாற்றுவது போன்ற ஒரு காட்சி. இதில் ஈஸ்ட் வூட்டின் துப்பாக்கி உபயோக படுத்தும் வேகம், அவரின் திறமை நமக்கு தெரிய வரும். இப்போ முனு முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகம் முடிஞ்சுது. அடுத்து என்ன ஹீரோயின் அறிமுகமா..??? அது தான் கிடையாது இந்த படத்துல பொண்ணுங்களே கிடையாது. ஒரே ஒரு காட்சியில் மட்டும் ஒரு பொண்ணு வரும். அது என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க...

18 ஆம் நுற்றாண்டு இறுதியில், அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடைபெற்ற காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை அமைக்க பட்டு இருக்கும். வழக்கம் போல இந்த படத்துலயும் ஈஸ்ட் வூட்க்கு பேர் கிடையாது. டுகோ அவரை பிளாண்டி(Blondie)அப்படின்னு தான் குப்பிடுவான். பிளாண்டியும் டுகோவும் சந்தர்ப்ப வசத்தால் நண்பர்கள் ஆனவர்கள். மேலும் சந்தர்ப்ப வசத்தால் அவர்கள் இருவருக்கும் $20,000 மதிப்புள்ள ஒரு புதையல் ரகசியம் தெரிய வருகிறது.புதையல் இருக்கும் இடம் ஒரு சுடுகாடு. அந்த சுடுகாட்டின் பெயர் டுகோவுக்கு தெரிய வரும். ஆனால் எந்த கல்லறையில் அந்த புதையல் புதைக்கப்பட்டு உள்ளது என்று பிளாண்டிக்கு தெரிய வரும். இருவரும் சேர்ந்து புதையலை எடுப்பது என்று தீர்மானித்து தம் பயணத்தை தொடர்வார்கள். அந்த நீண்ட பயணத்தில் ஏஞ்சல் ஐஸ்யும் (BAD) சேர்ந்து கொள்வான். புதையல் எடுக்க இந்த முன்று கில்லாடி கௌபாய்கள் இடையே நடைபெறும் போட்டி தான் மீதி படம்.

லியோனியின் பள்ளி நண்பரான எனியோ மோரிகோன் இந்த படத்துக்கு மியூசிக் போட்டு இருப்பார். அந்த அறிமுக மியூசிக், மிகவும் அற்புதமாய் இருக்கும். அந்த மியூசிக் கேட்கும்போது கண்டிப்பாய் நமக்கு இனம் புரியாத ஒரு சுகமான வருடல் உணர்வை தரும்.


பாடலை அனுபவிக்க: 


உண்மையில் சுருட்டு பிடிக்க தெரியாத ஈஸ்ட் வூட், படம் முழுவதும் சுருட்டு பிடிப்பது போன்று வரும், அவர் சுருட்டு பிடிக்கும் ஸ்டைல்,சும்மா அதகளமாய் இருக்கும். ஈஸ்ட் வூட்டின் பல மேனரிசங்களை பார்க்கும் போது நமக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்ப்பது போன்று இருக்கும்.


டுகோ, இவரை பற்றி கண்டிப்பாய் சொல்ல வேண்டும். படத்தில் காமெடிக்கு இவர் தான். ஆனால் பேர் UGLY. முன்று பேரில் என்னை மிகவும் கவர்ந்தது டுகோ தான். இவர் உயிரை குடுத்து !!! படத்தில் நடித்து இருப்பார். படபிடிப்பின் போது இவர் தூக்கில் தொங்க வேண்டிய ஒரு காட்சியில் குதிரை வேகமாய் ஓடி விட, டுகோ உண்மையில் தூக்கில் தொங்க வேண்டியது ஆகி விட்டது. பிறகு பட குழுவினர் இவரை காபற்றினார். மற்றும் ஒரு சந்தர்பத்தில் தண்ணி என்று நினைத்து அங்கு உள்ள ஆசிட்டை குடித்து விட்டார். இப்படி இவர் உயிரை குடுத்து இப்படத்தை உருவாக்கினர்.


அடுத்து ஏஞ்சல் ஐஸ், இவர் தான் BAD. For a Few Dollars More படத்தில் 2nd ஹீரோவாக நடித்தவர். இவரும் தன் சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பார். 

படத்துல நிறைய பிரண்டமான போர் காட்சிகள் வரும். ஒவ்வொரு போர்க்களக் காட்சிக்கும் பெருங்கூட்டம் தேவைப்பட்டது. சிக்கனம் கருதி லியோனி ஸ்பெயின் நாட்டில் படத்தை எடுத்து வந்தார். ஸ்பெயின் அரசின் சிறப்பு அனுமதி பெற்று, ஆயிரத்தி ஐநூறு நிஜமான இராணுவ வீரர்களையே இலவசமாக நடிக்கவைத்துவிட்டார் செர்ஜியோ.

படத்தில் முதல் 10 நிமிடங்கள் வசனமே கிடையாது. அடுத்து நீங்க அனுபவிக்க போகும் 170 நிமிடங்களுக்கு அந்த 10 நிமிடங்களில் உங்களை நன்றாக தயார் படுத்தி விடும். அந்த முதல் 10 நிமிடங்கள் ஒரு நல்ல வார்ம் அப் (Warm Up). 

படத்தில் இறுதியில் வரும் டுயல் (Duel) சண்டை, உங்கள் டெம்போவை கண்டிப்பாய் ஏற்றி விடும். அது இந்த முன்று முக்கிய கதாபாத்திரங்களின் இடையே நடக்கும் டுயல்.


இந்த படத்தை நீங்கள் “The God Father” படத்துடன் கண்டிப்பாய் ஒப்பிடலாம். God Father படம் பார்த்தவர்களுக்கு கண்டிப்பாய் அந்த தாக்கம் குறைந்தது ரெண்டு நாட்கள் இருக்கும். இந்த படத்தை பார்த்ததும் அதே தாக்கம் உங்களுக்கு கண்டிப்பாய் ஏற்படும். இது ஒரு எபிக் சாகா (Epic Saga).

டிஸ்கி: 
வெஸ்டர்ன் திரைப்படங்களை போலவே இருக்கும் நிறைய வெஸ்டர்ன் வீடியோ கேம்ஸ் விளையாடி உள்ளேன். அதை பற்றி எழுதலாம் என்று ஒரு எண்ணம் உள்ளது. இடை இடையே நான் ரசித்த வீடியோ கேம்ஸ் பற்றி எழுத போறேன்.

My Rating: 9.1/10......