Monday, February 27, 2012

நானும் ஆஸ்கர் விருதும் - 2012

அடிச்சிகோ பிடிச்சிகோ என்று இன்று காலை 84-வது ஆஸ்கார் விருதுகள் அறிவிக்க பட்டு விட்டன. அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த முறை அதிக விருதுகள் வாரி குவித்துள்ள படம் "தி ஆர்டிஸ்ட்". இப்படம் 5 விருதுகளை வாங்கி குவிச்சிருக்கு. முக்கியமா சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர் போன்ற மிக முக்கிய விருதுகளை வாங்கி இருக்கு இந்த படம். வேற என்ன என்ன படம் விருது வாங்கி இருக்கு அப்படின்னு இப்போ பார்க்குற முன்னாடி ஆஸ்கார் விருதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு இப்போ பார்போம்.
          ஆஸ்கார் விருது ஹாலிவுட் காரர்களால் ஹாலிவுட் படங்களுக்கு குடுக்க படும் விருதுன்னு எல்லோருக்கும் தெரியும். 1997 -ஆம் ஆண்டு டைட்டானிக் படத்தோட தமிழ்நாட்டு ரிலீஸ்க்கு அப்புறமா தான் எனக்கு ஆஸ்கார் விருது பற்றிய அறிமுகம் கிடைச்சது. அதுக்கு முன்னாடி நான் ஆஸ்கார் பத்தி கேள்வி பட்டது கூட கிடையாது. டைட்டானிக் முன்னாடி எனக்கு தெரிஞ்ச ஹாலிவுட் படம்னா அது மம்மி, அனகோண்டா, ஜுராசிக் பார்க் மட்டும் தான். வின்னர் ஆப் 11 ஆஸ்கார் என்ற பயங்கரமான விளம்பரத்தோட டைட்டானிக் தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆச்சு. டைட்டானிக் பார்காட்டி தெய்வ குத்தம் ஆகிடும் அப்படிங்கற அளவுக்கும் சன் டிவி விளம்பரம் பண்ணுனாங்க. எதுக்கு சாமி பொல்லாப்புன்னு நானும் போய் டைட்டானிக் பார்த்தது எல்லாம் பெரிய வரலாற்று நிகழ்வு. என்னடா இது சண்டையே இல்லாத படத்துக்கு போய் பெரிய பெரிய விருது எல்லாம் குடுத்து இருகங்களே அப்படின்னு ரொம்ப பீல் பண்ணுனேன். டைட்டானிக் எனக்கு அப்போ பிடிக்கமா போச்சு. நம்ப ஊர் தேசிய விருது எப்படி பெங்காலி மற்றும் மலையாள ஆர்ட் மூவிக்கு தான் குடுப்பாங்கலோ, அதே போல  தான் ஆஸ்கார் அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதுக்கு அப்புறம் ஆஸ்கார் வாங்கின படம்னா அப்படியே தள்ளி வச்சிட்டு போயிடுவேன். அப்படி நான் நிறைய நல்ல படங்களை தவற விட்டு இருக்கேன்.
            இதே கதை 2009 வரைக்கும் தொடர்ந்து. எனக்கும் ஆஸ்கார் மேல அவ்வளவு ஈடுபாடு இருந்து கிடையாது. ஆனா 2009 - ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இசைக்கான ரெண்டு பிரிவுல ஒரு தமிழன் A.R. Rahman பரிந்துரை செய்ய பட்டு உள்ளார் என்று கேள்விபட்டு ரொம்ப ஆச்சிர்யமா போச்சு. அப்ப தான் SlumDog Millionaire படமும் நெட்ல டவுன்லோட் பண்ணி பார்த்தேன். அந்த படமும் அந்த படத்தின் இசையும் எனக்கு நிறைய விசயங்களை கத்து கொடுத்துச்சு. SlumDog போல் ஒரு விறுவிறுப்பாக திரைபடத்தை அது வரை நான் பார்த்தது கிடையாது.ஆரம்பம் முதல் கடைசி வரை கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குறையாமல் அதே நேரத்தில் மிக அழுத்தமான காட்சிகளோடு, யதார்த்தம் கொஞ்சமும் மீறாமல், பேண்டஸித் தன்மையோடு நகரும் பட காட்சிகள் எனக்கு புது அனுபவத்தை குடுத்தன. அந்த படத்தில் இறுதியில் வரும் ஒரு காட்சி இது, கடைசி கேள்விக்கு விடை தெரியாமல் ஜமால் முழிக்கும் நேரத்தில் டிவி பார்த்து கொண்டு இருக்கும் ஒரு வயதான முதாட்டி "ஜமால் உன்னால் முடியும்" என்று சொல்லும் அந்த வசனமும் அதற்கான பின்னணி இசையும் எனக்கு மிக பெரிய நம்பிக்கை டானிக். அந்த காட்சியை இப்போ நினைத்தாலும் எனக்கு புல் அரிக்கும். அப்படி பட்ட இசையை குடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை தான் ஆஸ்கார்க்கு பரிந்துரை செய்ய பட்டு உள்ளது என்ற எண்ணமே எனக்கு ஒரு திருப்தியை குடுத்தன.
            ஆனா அதுக்கும் மேல A.R. Rahman அந்த விருதை வாங்கி விழா மேடையில் "எல்லா புகழும் இறைவனுக்கே" அப்படின்னு தமிழ்ல சொன்னாரோ, அப்ப நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அந்த ஒரு வினாடிய இப்போ நினைச்சாலும் எனக்கு அப்பிடியே சிலிற்கும். ஏதோ நானே அந்த எடத்துல இருந்த மாதிரி ஒரு பீலிங். அப்போதான் எனக்கு புரிஞ்சது, ஆஸ்கார் விருது ஹாலிவுட் காரனுக்கு மட்டும் சொந்தமானது இல்லை, திறமை இருந்தா ஒரு தமிழன் கூட வாங்கலாம். அப்போ நீங்க கேட்கலாம் ரஹாமனை விட பல மடங்கு திறமை வாய்ந்த இசைஞானிக்கு ஏன் இன்னும் ஆஸ்கார் குடுக்கலன்னு ? காரணம் ரொம்ப சிம்பிள், இசைஞானி இன்னும் ஹாலிவுட் படத்துக்கு மியூசிக் போடல. என்ன கேட்டா இசைஞானிக்கு இன்னும் இந்தியாவில நல்ல அங்கீகாரம் கிடைகவில்லைன்னு தான் சொல்லுவேன். சரி விடுங்க எங்கேயோ போயிட்டோம், இப்போ மறுபடியும் ஆஸ்கார். 
             அதுக்கு அப்புறம் எனக்கு ஆஸ்கார் மேல ரொம்ப மரியாதை வந்துடுச்சு. அப்புறம் நான் ஆஸ்கார் வாங்கின படமா தேடி தேடி பார்த்தேன்.  ஆஸ்கார் வரலாறை எடுத்து பார்த்தா, வருஷா வருஷம் மிக சிறந்த படத்தை தான் அவங்க தேர்ந்து எடுத்து இருகாங்கன்னு எனக்கு புரிஞ்சது. 98% அவங்க தேர்வு சரியா இருக்கும். ஒன்னு ரெண்டு தடவை அவங்க முடிவு கொஞ்சம் தப்பாய் போய் இருக்கலாம். மற்ற படி ஆஸ்கார் அரசியல் அப்படின்னு ஒன்னும் கிடையாது என்பது என்னோட கருத்து. சரி இந்த வருஷம் ஆஸ்கார் வாங்கின படம் மற்றும் அதுக்கு போட்டியிட்ட படங்களை இப்போ பார்போம்.
               சிறந்த படத்துக்கான விருதுக்கு போட்டியிட்டது மொத்தம் 9 படங்கள்:
The Tree of Life , The Descendants, Extremely Loud & Incredibly Close, The Help, Midnight in Paris, Money ball, War Horse & The Artist.
மேல உள்ள படங்களை பத்தி ஏற்கனவே நம்ப தமிழ் ப்ளாக்கரஸ் கொஞ்ச பேரு எழுதி இருகாங்க. தனியா நான் வேற இந்த படங்களை பத்தி எழுத வேண்டாமேன்னு நினைச்சு நான் படிச்ச சில நல்ல விமர்சன்களை மட்டும் இங்கு குடுத்து இருக்கேன். அதோட லிங்க் இதோ, போய் பாருங்க.
ஹாலிவுட் ரசிகனின் Moneyball மற்றும் Hugo.
Tha Cinemaவின் பார்வையில் Midnight in Paris (2011) - கலை இலக்கிய ஃபேன்டஸி 
ஆனந்த அவர்களின் பார்வையில் தி ஆர்டிஸ்ட்.
விருதுக்கு பரிந்துரை செய்ய பட்ட மற்ற படங்களை பற்றி ஆனந்த இந்த போஸ்ட்ல ரொம்ப நல்லா எழுதி இருக்கார். 

இத்தனை கடும் போட்டிக்கு மத்தியில் சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருதினை வென்றது தி ஆர்டிஸ்ட். இந்த படத்தில் நடித்த Jean Dujardin -க்கு சிறந்த நடிகருக்கான விருதும், இப்படத்தை இயக்கிய Michel Hazanavicius -க்கு சிறந்த இயக்குனர்க்கான விருதும் வழங்க பட்டு உள்ளது.
அது போக சிறந்த கிராபிக்ஸ்/விஷுவல் எபக்ட்ஸ் உடைய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும். அந்த விருதினை தட்டி சென்ற படம் "The Hugo".
விஷுவல் எபக்ட்ஸ் பிரிவில் பரிந்துரைக்க பட்ட படங்களை பற்றிய நம்ப JZ அவர்கள் ரொம்ப டீபா அலசி உள்ள பதிவு 
அது போக சிறந்த அனிமேஷன் படத்துக்காண விருதை வென்ற படம் Rango
அனிமேஷன் படங்களை பற்றிய JZ அவர்களின் அலசல் பதிவு.
விருது பெற்ற படங்களின் பட்டியல் இதோ: 

BEST PICTURE
- The Artist
BEST DIRECTOR
- Michel Hazanavicius – The Artist
BEST ACTOR
- Jean Dujardin – The Artist
BEST ACTRESS
- Meryl Streep – The Iron Lady
BEST SUPPORTING ACTOR
- Christopher Plummer – Beginners
BEST SUPPORTING ACTRESS
- Octavia Spencer – The Help
BEST ORIGINAL SCREENPLAY
- Woody Allen – Midnight in Paris
BEST ADAPTED SCREENPLAY
- Alexander Payne, Nat Faxon & Jim Rash – The Descendants
BEST ANIMATED FILM
- Rango
BEST FOREIGN LANGUAGE FILM
- A Separation (Iran)
BEST CINEMATOGRAPHY
- Robert Richardson – Hugo
BEST DOCUMENTARY
- Undefeated
BEST DOCUMENTARY SHORT
- Saving Face
BEST SHORT FILM (ANIMATED)
- The Fantastic Flying Books of Mr. Morris Lessmore
BEST SHORT FILM (LIVE-ACTION)
- The Shore
BEST VISUAL EFFECTS
- Hugo
BEST ART DIRECTION
- The Artist
BEST COSTUME DESIGN
- The Artist
BEST MAKEUP
- The Iron Lady
BEST FILM EDITING
- The Girl with the Dragon Tattoo
BEST SOUND MIXING
- Hugo
BEST SOUND EDITING
- Hugo
BEST ORIGINAL SCORE
- Ludovic Bource – The Artist
BEST ORIGINAL SONG
- ‘Man or Muppet’ from The Muppets


17 comments:

  1. ரொம்ப ரொம்ப அருமையான ஆஸ்கர் தொகுப்பு..அதில் தங்களது ஆஸ்கர் அனுபவத்தையும் சேர்த்து அழகாக எழுதிருக்கீங்க..வாழ்த்துக்கள்..

    நான் கூட ரெண்டு வருடத்துக்கு முன்னாடி ஆஸ்கர்னா என்னானுக்கூட தெரியாம இருந்தேன்.காரணம், அந்த டைம்ல தமிழ் படங்களுக்கு செம்ம அடிமையா இருந்த பீரியட் அது..நம்ம ஏஆர் ரஹ்மான் ஆஸ்கர் மேடையில் தமிழ் பேசிய பிறகு, யெப்பா தமிழரு அமெரிக்கா அளவுக்கு போயிருக்காரு, எனக்கு அதப்பத்தி ஒன்னுமே தெரிலனு வருத்தப்பட்டேன்..அப்புறம்தான் இணையத்தில் தேடி சில படங்களை பார்க்க தொடங்கினேன்.

    நண்பரே அருமையான முயற்சி..நீங்கள் கொடுத்த மற்றப்பதிவர்களின் விமர்சனங்களை ஏற்கனவே படித்துவிட்டேன்.இனிமேலதான் இன்னும் பார்க்காத ஆஸ்கர் வென்ற படங்களை பார்க்க வேண்டும்.விமர்சனம் போடலாமா இல்லையானுக்கூட தெரில பார்ப்போம்.மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அழகாக டைம் பார்த்து தொகுத்து பதிவிட்டிருக்கீங்க. நன்றி ராஜ்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு நண்பா.. உங்க சொந்த அனுபவம்லாம் வாசிக்க நன்றாகவே இருந்தது. எனக்கும் ஆஸ்கர் அரசியல் மேல 88% நம்பிக்கை இல்லை..
    *நம்ம லிங்கையும் ஷேர் செய்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. ஆஸ்காரில் அரசியல் இல்லையா...?

    நீங்கள் அறிந்தது அவ்வளவுதான்.

    ReplyDelete
  5. @ ராவணன்
    //ஆஸ்காரில் அரசியல் இல்லையா...?//
    இருக்கு பாஸ். ஆனா பல முறை அவங்க சரியான படத்தை தான் தேர்ந்து எடுத்து இருகாங்க. சில முறை அவங்க தப்பான படத்தை தேர்ந்து எடுத்து இருகாங்க.

    ReplyDelete
  6. @ ராவணன்
    பாஸ்,
    அது போக நானும் கேள்வி பட்டு உள்ளேன். வெறும் 6,000 பேர் கொண்ட AMPAS (Academy of Motion Picture Arts and Sciences) மெம்பர்களின் ஓட்டின் அடிப்படியில் தான் உலகின் மிக உயிரிய !!! விருது வழங்கபடுகிறது என்று.
    நம்ப தேசிய விருது குழுவில் மொத்தம் 13 பேர் இருப்பதாய் கேள்வி.
    சில நல்ல திரைப்படங்கள் ஆஸ்கரை வாங்காமல் போய் இருக்கலாம். ஆனால் ஆஸ்கார் வாங்கும் படங்கள் கண்டிப்பாய் மோசமாய் இருப்பது கிடையாது, நான் பார்த்த வரையில் :)

    ReplyDelete
  7. @ Kumaran
    நன்றி குமரன். ஏற்கனவே சொன்னது தான். நான் உங்க வயசுல ஜெட்லி, ரம்போவை தண்டல. உங்க தேடல் அபாரமானது.

    ReplyDelete
  8. ரெண்டு இங்கிலீஷ் படம் பாத்துட்டு அவனவன் சீன போட்டு திரியராணுவ.. பட் நீங்க ரொம்ப வெளிபடையா பேசுறிங்க.. இனி அடிகடி சந்திப்போம்..

    ReplyDelete
  9. ராஜ் ரொம்ப எதார்த்தமா மிகவும் ரசிக்கும்படியான விமர்சனம் பன்னிருகிங்க. அதிலும் எனக்கு பிடித்த உங்களுடைய ஸ்டைலில் அழுத்திய வரிகள் "டைட்டானிக் பார்காட்டி தெய்வ குத்தம் ஆகிடும் அப்படிங்கற அளவுக்கும் சன் டிவி விளம்பரம் பண்ணுனாங்க எதுக்கு சாமி பொல்லாப்புன்னு நானும் போய் டைட்டானிக் பார்த்தது எல்லாம் பெரிய வரலாற்று நிகழ்வு" ரொம்பவும் எதார்த்தம், இனிமை..! இந்த வரிகள் - "அழுத்தமான காட்சிகளோடு, யதார்த்தம் கொஞ்சமும் மீறாமல்" இத சன் டிவி திரை விமர்சனத்துல ஒரு அம்மா எப்பவும் யூஸ் பண்ற வார்தைகளாவே தோன்றியது :)... உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்..!!

    ReplyDelete
  10. நன்றி karthik,
    அடிக்கடி இங்க வாங்க.

    ReplyDelete
  11. அருமையான பதிவு ராஜ். நானெல்லாம் ரெண்டு பாட்டு ரெண்டு பைட்டுக்கு திருப்தி பட்டுக்கிற சி கிளாஸ் ரசிகன். நம்முடைய தரம் உயர்ந்ததாக இருந்தால் மட்டுமே உயர் ரக படங்களை பார்க்க முடியும் என்பது என்னுடைய எண்ணம். அதற்கு ஏற்றது போலவே நான் போன முறை பர்மா பஜாரில் வாங்கிய அந்த மாதிரி தரமான படங்களை என்னால் இன்று வரை பார்க்க முடியவில்லை. ஒரு படம் அரை மணிநேரத்திற்குள் நம்மை படத்துடன் கட்டிப் போட வேண்டும். இல்லையென்றால் என்னால் பார்க்க முடியாது. எடுத்து வைத்து விடுவேன்.

    ReplyDelete
  12. செந்தில்,
    வருகைக்கு மிக்க நன்றி..
    நானும் உங்களை போல் தான். ஒரு நல்ல படம் எந்த மொழியாக இருந்தாலும் நம்மை கட்டி போட வேண்டும். எனக்கும் மெதுவாக நகரும் திரைக்கதைகள் (உலக சினிமா !!! ) மேல அவ்வளவு ஆர்வம் கிடையாது. அதை பார்க்கும் பொறுமையும் கிடையாது. நான் அறிமுக படுத்தும் படங்கள் முக்காவாசி வேகமான/வித்தியாசமான திரைக்கதைகள் கொண்ட ஹாலிவுட் படங்கள் தான்.

    ReplyDelete
  13. நீங்கள் அறிமுகப்படுத்தும் படங்களை தற்போது வாங்கி பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். நன்றி ராஜ்.

    ReplyDelete
  14. Super Raj!!! I didnt know you are so talented.... It came in a flow,... and you have expressed well!!! The most important is the article is interesting till the end!!!

    ReplyDelete
  15. ரொம்ப நல்ல பதிவு, அப்போ என்னக்கு நேரம் கிடைக்கல (இந்தியாவுல இருந்தேன்). அது தான் வருகைக்கு தாமதம்.
    பரிந்துரைக்க பட்ட படங்களின் விமர்சனத்தை, சக பதிவர்களின் விமர்சனத்தின் லிங்க் குடுத்த உங்கள் மனப்பான்மைக்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. //////சில நல்ல திரைப்படங்கள் ஆஸ்கரை வாங்காமல் போய் இருக்கலாம். ஆனால் ஆஸ்கார் வாங்கும் படங்கள் கண்டிப்பாய் மோசமாய் இருப்பது கிடையாது, நான் பார்த்த வரையில் :)////////

    கண்டிப்பா ராஜ் நூற்றுக்கு நூறு உண்மை.

    ReplyDelete
  17. // எதுக்கு சாமி பொல்லாப்புன்னு நானும் போய் டைட்டானிக் பார்த்தது எல்லாம் பெரிய வரலாற்று நிகழ்வு. //
    உங்கள் ஆஸ்கர் அனுபவத்தோடு ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய அனுபவத்தையும் சேர்த்து புதுமையான வழியில் எங்கள் மூளைக்குள் புகுத்தியிருப்பது அருமை ராஜ்.

    ReplyDelete