பதிவுலகில் இரண்டு நாட்கள் முன்பு ஒரு சண்டையை காண நேர்ந்தது, நான் விரும்பி படிக்கும் "உலக சினிமா ரசிகன்" அவர்களுக்கும் ஹாலிவுட் பாலா அவர்களுக்குமான சண்டை அது. அந்த சண்டை ஏன் நடந்தது, யார் முதலில் ஆர்ம்பித்தது, யார் தவறு செய்தார் என்ற பஞ்சாயத்துக்கு நான் போக விரும்பவில்லை.அது என் வேலையும் இல்லை. ஆனால் மிகவும் உக்ரமான பர்சனல் சண்டை அதுவும் பொதுவில் போட பட்ட சண்டை அது என்று புரிந்தது.
பாலா என்னிடம் ராஜேஷ் அவர்களின் பதிவில் "உலக சினிமா ரசிகன்" சில தரமற்ற கமெண்ட் போட்டு உள்ளதாக சொன்னார், ராஜேஷ் தளத்தில் சென்று பார்த்தேன், அதில் "உலக சினிமா ரசிகன்" "காரிகன்" மற்றும் "கார்டின் மாசி" என்கிற முன்று பேர் இடையில் மிகவும் கீழ்த்தரமாக கமெண்ட் வார் நடந்து கொண்டு இருந்தது. "காரிகன்" என்கிற பதிவரை நான் பாஸ்கரன் அவர்களின் வலைபூவில் பார்த்து உள்ளேன். ஹேராம் பதிவில் பாஸ்கரன் உடன் கருத்து போர் புரிந்து உள்ளார். ராஜேஷ் பதிவில் நடந்த கருத்து மோதல்களை பார்த்து எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருந்தது, இந்த அளவு கீழ் தரமாக பொதுவில் பேசுகிறார்களே என்று. இன்னும் பெரிய ஆச்சிரியம் பாஸ்கரன் இப்படி பேசுகிறாரே என்று. "காரிகன்" அவர்களின் கமெண்ட் தரத்தை நான் பார்த்து உள்ளேன். அவரும் இந்த அளவுக்கு பேச மாட்டார் என்றே எனக்கு தோன்றியது.
மேல்லோட்டமாக பார்த்தால் "உலக சினிமா ரசிகன்" பாஸ்கரன் அவர்கள் தான் அணைத்து கமெண்டை இட்டது போன்று தோன்றும், எனக்கும் அதே தான் தோன்றியது. அணைத்து தரமற்ற கமெண்ட்களும் பாஸ்கரன் அவர்களின் எழுத்து நடையில் இருந்தது, அந்த ப்ரொபைலை கிளிக் செய்து பார்த்தேன், பாஸ்கரன் வைத்து இருக்கும் "சார்லி சாப்ளின்" படம் மற்றும் அவரது "About me" கூட அப்படியே இருந்தது. காரிகன் ப்ரொபைலை கிளிக் செய்தல் "Profile Not Available" என்று வந்தது. சரி இருவரும் பொதுவில் அடித்து கொள்கிறார்கள் என்றே நினைத்து இருந்தேன். ராஜேஷ் அவர்களே பாஸ்கரன் தான் அப்படி பின்னுட்டம் இட்டு விட்டார் என்று நினைத்து விட்டார். அப்படி நம்பக தன்மை வாய்ந்த கமெண்ட்கள் அவை. பிறகு அவரே யாரோ விளையாடி உள்ளார் என்று சொல்லி அணைத்து கமெண்ட்களையும் அழித்து விட்டார். அவர்களது தரமற்ற பேச்சுகளை கீழே குடுத்து உள்ளேன்.
நேற்று BABYஆனந்தன் தளம் சென்ற போது அவரது follower லிஸ்ட்டில் "உலக சினிமா ரசிகன்" என்கிற பெயர் முதலில் இருந்தது, எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. BABY பதிவில் பல வருடங்கள் முன்னாலே பாஸ்கரன் சேர்ந்து விட்டாரே, இது என்ன புதுசா சேர்ந்து இருக்காரே என்று அந்த ப்ரொபைலை ஓபன் செய்து பார்த்தல் தான் தெரிகிறது, அது "உலக சினிமா ரசிகன்" என்கிற பெயரில் உருவாக்க பட்ட போலி ப்ரொபைல் என்று. இது தாத்தா காலத்து டெக்னிக் என்றாலும், இந்த போலி ப்ரொபைல் உருவாக்க அந்த சைக்கோ நன்றாகவே உழைத்து உள்ளான் என்று தெரிந்தது. "உலக சினிமா ரசிகன்" பாஸ்கரன் எந்த எந்த சைட் follow செய்து உள்ளாரோ, அதே சைட்டை இந்த "போலி உலக சினிமா ரசிகனும் follow செய்து உள்ளான், அதே சார்லி சாப்ளின் படம், அதே "About me". அந்த போலி ப்ரொபைலை நேற்றே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து விட்டேன். இப்பொழுது அந்த ப்ரொபைலலை கிளிக் செய்தல் "Profile Not Available" என்று வருகிறது.
போலி உலக சினிமா ரசிகன்:
http://www.blogger.com/profile/03515772280139422535
இந்த படத்தில் "MY BLOGS" என்கிற ஆப்ஷன் இல்லை, அது கூட பரவாயில்லை, ஆனால் "On Blogger Since" என்பதில் "August 2012" என்று காட்டுகிறது. அதாவது இந்த பிளாக்கர் ஐடி ஆரம்பித்தது இந்த மாதம் தான். பாஸ்கரன் மீது தனி மனித தாக்குதல் நடத்த வேண்டும், அவரது பெயரில் இருந்தது அவரே எழுதியது போன்று கீழ்த்தரமாக கமெண்ட் போட்டு அவரை கோப படுத்தி அவர் வாயில் இருந்தது வசைவு வாங்க வேண்டும் என்று அந்த சைக்கோ திட்டம் போட்டு உள்ளான், அதில் ஓர் அளவு வெற்றியும் பெற்று உள்ளான். ராஜேஷ் கூட பாஸ்கரனை தவறாக எண்ண வைத்து விட்டான்.
ஒரிஜினல் உலக சினிமா ரசிகன்:
http://www.blogger.com/profile/01436031496772627920
ஒரிஜினல் ப்ரொபைலலில் மட்டுமே "MY BLOGS" என்று காட்டும், ஒரிஜினல் பிளாக்கர் ஐடியில் "On Blogger Since" என்பதில் "July 2010" என்று சரியாக காட்டுகிறது, பாஸ்கரன் ப்ளாக் எழுத ஆரம்பித்தது July-2010 தான்.
ராஜேஷ் பதிவில் கீழ்த்தரமாக கமெண்ட் சண்டை போட்ட இன்னொரு நபரின் ப்ரொபைல் பெயர் "காரிகன்", இதுவும் ஒரிஜினல் கிடையாது. உலக சினிமா ரசிகனின் ஹேராம் பதிவில் சண்டை போட்ட "காரிகன்" அவர்களின் ஒரிஜினல் ஐடி "http://www.blogger.com/profile/09686777906279690116", அவரது ஒரு கமெண்டை இந்த பதிவில் பார்க்கலாம். மிகவும் ஞாயமாக தன் கருத்தை சொல்லுபவர் இவர்.
//கமல் பலவிதமான தோற்றத்தில் வந்து ஒரு கோமாளி கூத்து அடித்த தசாவதாரத்திற்கு முன்னோடியாக/// இப்படியாக போகும் முதல் கமெண்ட்.
இபொழுது மேலே உள்ள காரிகன் அவர்களின் ப்ரொபைல் கிளிக் செய்தல் அதில் அவரது profile பார்க்கலாம், அவரது "My Blogs" "Blogs I Follow" தெரியும்
எனக்கு "ஒரிஜினல் காரிகன்" யார் என்று தெரியாது.
Original காரிகன் |
ஆனால் ராஜேஷ் அவர்களின் பதிவில் போலி உலக சினிமா ரசிகனை வம்பு சண்டை இழுத்த போலி "காரிகனின்" ஐடி "http://www.blogger.com/profile/13471892063903378299" இதை கிளிக் செய்தல் "Profile Not Available" என்று வருகிறது. இந்த ஐடி உருவாகியவனும் என்னை பொறுத்த வரை சைக்கோ தான்.
இரண்டு போலி ஐடி "காரிகன்" மற்றும் "உலக சினிமா ரசிகன்" உருவாகி அவர்கள் உள்ளே அடித்து கொண்டு, இரண்டு பேர் சண்டை இடுவதை போல் காட்ட வக்கிர மனம் படைத்த சைக்கோவால் மட்டுமே முடியும். இந்த இரண்டு போலி ஐடி களை யார் என்று தேடி வருகிறேன். எனக்கு என்ன வியப்பு என்றால் இப்படியும் கூட செய்வார்களா என்பது தான், அதுவும் தேர்ந்த கிரிமினல் போல் வேலை செய்து உள்ளார்களே என்று. இந்த இரண்டு சைக்கோகள் மேல் என்னால் பரிதாபம் மட்டுமே பட முடியும், அவர்களை சேர்ந்தவர்களை நினைத்தால் இன்னும் கஷ்டமாக இருக்கிறது. இந்த பதிவை நான் எழுதிய காரணம் நான் "உலக சினிமா ரசிகர்" பாஸ்கரனை தவறாக எண்ணி விட்டேன், அதே போல் வேறு சில நண்பர்கள் அவரை தவறாக எண்ணி இருக்க கூடும், அது போல் நடக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவை எழுதினேன்.ராஜேஷ் பதிவில் சண்டை இட்டது பாஸ்கரன் கிடையாது.
கடைசியாக இந்த பதிவின் தலைப்பில் குறிப்பிட்டது போல் ராஜேஷ் பதிவில் நான் கண்ட இரண்டு சைக்கோகளிடம் இருந்தது விலகி இருப்பதே நல்லது. முகமுடி அணிந்து கொண்டு கொரில்லா போர் புரிபவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்பது என் எண்ணம்.
சைக்கோ-1: <போலி உலக சினிமா ரசிகன்> ராஜேஷ் பதிவில் இட்ட கமெண்ட்ஸ்இங்கே இவன் பிளாக்கர் ஐடி http://www.blogger.com/profile/03515772280139422535 இதில் ஒரிஜினல் பாஸ்கரன் அவர்களின் கமெண்ட் வேறு உள்ளது.
சைக்கோ-2: <போலி காரிகன்> ராஜேஷ் பதிவில் இட்ட கமெண்ட்ஸ் இங்கே. இவன் பிளாக்கர் ஐடி http://www.blogger.com/profile/13471892063903378299
இந்த சைக்கோ தான் மிகவும் ஆபத்தானவன்.
இவர்கள் இருவர் பற்றியும் யாருக்காவது தகவல் தெரிந்தால் தயவு செய்து பாஸ்கரன் அவர்களுக்கு தெரிய படுத்த வேண்டாம்.
சில நண்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க, பதிவில் இரண்டு பத்திகளை நீக்கி விட்டேன்.
சில நண்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க, பதிவில் இரண்டு பத்திகளை நீக்கி விட்டேன்.
இது வேறா ? என்னக் கொடுமை சார் இது !!! இப்போது தான் மதவாதிகள் - எதிர்வாதிகள் கலகத்தில் பலர் போலி ஐடிகளில் இருப்பதாக ஒரு தகவல் வந்தது. இப்போது சினிமாப் பதிவர்களின் போலி ஐடிக்களையும் உருவாக்குகின்றார்களா ?
ReplyDeleteஎங்கே போய் முடியுமோ ?
வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்..
Deleteஒரு ஐடியில் இருந்தது தாக்கினால் பரவாய்ல்லை, இரண்டு வெவ்வேறு ஐடியில் இருந்தது அவர்கள் உள்ளே சண்டை இட்டு கொண்டு பார்ப்பவர்களை முட்டாள் ஆக்கி உள்ளார்கள், அது தான் எனக்கு பொறுக்க முடியல..
இப்படி மற்றவரை ஏமாற்றுவதால் என்ன பயன் அடைய போகிறார்கள் என தெரியவில்லை ?
ReplyDeleteநண்பரே, ஒரு விதமான குருர சந்தோஷம் தான், வேறு என்ன இந்த சைக்கோகளுக்கு கிடைத்து விட போகிறது..
Deleteஅடடே துப்பி எறிஞ்சிருக்கீங்க சாரி துப்பறிஞ்சிருக்கீங்க ........எனக்கு இந்தமாதிரி சந்தேகம் இருந்ததுண்டு . இப்போ தெளிவாகிடுசி .......நன்றி
ReplyDeleteவாங்க சிங்கம்...எவ்வளவு துப்பறிஞ்சாலும் என்னால அந்த ரெண்டு சைக்கோகளை கண்டே பிடிக்க முடியல. அவங்க போலி என்பது மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது..
Deleteஇவ்வளவு நடந்து இருக்கா நண்பரே?
ReplyDeleteமிகவும் பொறுமையாக இதைப்பற்றி ஆய்வு செய்து வெளியிட்டமைக்கு மிக்க நன்றி..
நான் கூட பாஸ்கரன் சார் என் இப்படி தேவை இல்லாத விவாதங்களில் ஈடுபடுகிறார் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.
மன்னித்து விடுங்கள் பாஸ்கரன் சார்.
இதை தெரியப்படுத்திய நண்பர் ராஜ்க்கு மனமார்ந்த நன்றிகள்.
வாங்க பாஸ்..நானும் முதலில் அவரை தவறாக நினைத்து விட்டேன், ஹேராம் பதிவில் அவருக்கும் ஒரிஜினல் "காரிகன்" அவர்களுக்கு நடந்த சண்டையை பயன்படுத்தி சைக்கோகள் அழகாக விளையாடி விட்டார்கள்..
Deleteஇதில் ஒரு இன்பம் அவர்களுக்கு....
ReplyDeleteஇதை நானும் வன்மையாக கண்டிக்கிறேன்...
பதிவுலகில் பல்வேற பிரச்சனைகளை கிளப்பவே இதுபோன்ற பதிவர் கிளம்பிவருகிறார்கள்.. நாமும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் இதுபோன்ற போலி சைக்காக்களிடம் இருந்து தப்பலாம்...
வெளிச்சம் போட்டு காட்டி பதிவிட்டதுக்கு நன்றி ராஜ்...
வாங்க பாஸ். பாதிக்க பட்டவர் கண்டிப்பாய் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார். ஆனாலும் இவர்கள் திருந்தாத ஜென்மங்கள்.. நிச்சியம் கண்டிக்க பட வேண்டியவர்கள்...
Deleteகிழிஞ்சுது.. பிரச்சனை என்னவோ.. நாம என்னத்துக்கு தலையிடனும்னு சும்மாவே வந்துட்டேன்..
ReplyDeleteசம்பந்தப் பட்டவர்களும் மெளனம் சாதித்தல் நன்றுன்னு படுது!
* இனி என் ஐடி நம்பரையே முழுசா பாடமாக்கி வைச்சிருக்கனும் போலவே? :)
இல்லை தல, நானும் அப்படி தான் இருந்தேன், ராஜேஷ் பதிவுல வந்த கமெண்ட் ரொம்பவே தரைகுறைவானவை. யாராக இருந்தாலும் பாஸ்கரனை தவறாக எண்ணி விடுவார்கள். அவர் கூட டென்ஷன் ஆகி ப்ளாக்கை ஹக் பண்ணிட்டாங்கன்னு நினைச்சுட்டார். ப்ளாக் ஐடி கூட மாத்த போறேன்னு சொன்னார், அந்த அளவுக்கு torture பண்ணிட்டாங்க இந்த ரெண்டு சைக்கோகள்..
Deleteராஜ்,
ReplyDeleteஇது போலி ஐ.டி உருவாக்கி கமெண்ட் போடுறது எல்லாம் ஆதிகாலத்து தொழில்நுட்பம், 2007 இல் பெருசா சலசலப்பூ ஏற்பட்டுச்சு, மேலும் நீங்க சொல்லித்தான் என் பேரில் ஒரு போலி இருப்பது தெரிந்தது, ஹி...ஹி நான் ஒரு வரி , ரெண்டு வரியில் பின்னூட்டம் போட்டேன்னு சொன்னா இங்கே யாருமே நம்ப மாட்டாங்க :-))
நான் எப்படி பேசுவேன்னு பொதுவா எல்லாருக்கும் தெரியும், சண்டைக்கு வந்தா தான் சண்டை சும்மா எல்லாம் வம்புக்கு போவதில்லை.
எவனோ வேலையத்தவன் எல்லாப்பேரிலும் ஐடிப்போட்டு கலகம் செய்யப்பார்க்கிறான்.
ஏன் எல்லாரும் புரோஃபைல்ப்பார்த்தால் எந்த ஆண்டில் இருந்து இருக்கும் ஐடினுப்பார்த்தே உண்மை, போலி கண்டுப்பிடிச்சு தெரிஞ்சுக்கலாமே, என்ன ஒரு 2 நிமிடம் கூட ஆகாது.
போலி ஐடினு தெரிஞ்சும் ஏன் அந்தப்பதிவர் எல்லா கமெண்டும் வச்சு இருக்கார்? நீக்கிடலாமே.
என் பேருல போலி உருவாக்க என்ன ஒரு துணிச்சல்? இனிமே கெட்டக்காலம் தான் ,கண்டுப்பிடிக்கிறேன் ,பிடிச்சு ... தலைக்கீழா தொங்க விட்டு மொளகாப்பொடி தூவிடுறேன் :-))
வாங்க வவ்வால் ஜி..
Deleteபழைய காலத்து டெக்னிக் தான்...ஆனா அதையே ரொம்ப மாடர்னா செஞ்சு இருக்காங்க, பாஸ்கரன் ப்ரொபைல இருக்கிற மாதிரியே போட்டோ வச்சு, அவர் follow செய்யுற எல்லா சைட்டையும் follow செஞ்சு, டக்குன்னு அந்த போலி ப்ரொபைல ஓபன் பண்ணுனா ஒரிஜினல் ப்ரொபைல மாதிரியே பண்ணி இருக்காங்க, அது தான் ஆச்சிரியம்.
//ஏன் எல்லாரும் புரோஃபைல்ப்பார்த்தால் எந்த ஆண்டில் இருந்து இருக்கும் ஐடினுப்பார்த்தே உண்மை, போலி கண்டுப்பிடிச்சு தெரிஞ்சுக்கலாமே, என்ன ஒரு 2 நிமிடம் கூட ஆகாது.//
எல்லோரும் அதை செய்ய மாட்டாங்க தல..மேல சொன்ன மாதிரி செஞ்சாங்கான என்ன பண்ணுறது..சொல்லுங்க..
//போலி ஐடினு தெரிஞ்சும் ஏன் அந்தப்பதிவர் எல்லா கமெண்டும் வச்சு இருக்கார்? நீக்கிடலாமே.//
அவர் அந்த கீழ் தரமான கமெண்ட்களை நீக்கிட்டார், மறுநாள் செய்தார் என்று நினைக்கிறன்.
// தலைக்கீழா தொங்க விட்டு மொளகாப்பொடி தூவிடுறேன்//
விடுங்க வவ்வால், உங்க கூட கமெண்ட் வார்ல யாராலும் ஜெய்க்க முடியாது.. :):) ஆனா இந்த பசங்க கெட்ட வார்த்தை பேசுறாங்க..
ராஜ்,
ReplyDelete//அவர்கள் இருவரும் பேசியது என்னை பொறுத்த வரை கல்லாய்தல் போல் தான் இருக்கிறது. ஆனால் எதற்கு இத்தனை பேரில் பேசினார்கள் என்று புரியவில்லை. சரி அது அவர்களது உரிமை, அதில் நான் தலையிட மாட்டேன்.//
என்னது, எல்லா ஐடியுமே போலி தான் அங்க்யே நீங்க குறிப்பிட்ட யாருமே பேசலை.
இவ்வளவு தேடின நீங்க ,மற்றவற்றையும் செக் செய்து இருக்கலாம்.
கேபிள்ஜிக்கு எல்லாம் வேற வேலை இல்லை ,இப்படி வந்து சண்டைப்போடுற இடத்தில பேசிக்கிட்டு இருக்க, நான் ராஜேஷ் என்பவர் பதிவே இப்போத்தான் பார்க்கிறேன். அவர் கமெண்ட் மட்டும் சிலப்பதிவுகளில் பார்த்து இருக்கேன்.
பழையப்பதிவர்கள் என்றால் எளிதில் இந்த போலியை கண்டுப்பிடித்துவிடுவார்கள், இப்போ அந்த அளவுக்கு விழிப்புணர்ச்சி இல்லை, நீங்க பதிவிட்டு சொல்லவில்லைனா எல்லாம் வேடிக்கைப்பார்த்து இருப்பாங்க போல,.நன்றி!
நீங்க ஹாலிவுட் பாலாவை கண்டுபிடிச்சீங்களா இல்லையா?நானும்தான் இன்னும் தேடிகிட்டே இருக்கேன்.
ReplyDeleteபோன மாசம் தான் கண்டுபிடிச்சேன் சார். அவரை பார்த்து தான் நான் பதிவு எழுதவே வந்தேன் :):)
Deleteஅவர் அதே ஐடியில தான் இருக்கார். FB ல இருக்கார். சீக்கிரம் ப்ளாக் எழுதுறேன் என்று சொன்னார். கொழந்தை என்கிற பதிவரின் பதிவில் அடிக்கடி கமெண்ட் இட்டு உள்ளார்..
ஏனோ ப்ரொபைலை முடி உள்ளார்..
நான் ஒரு கன்னி பதிவாளன். ஹாலிவூட் பாலா,கருந்தேள்,உலக சினிமா ரசிகன் இன்னும் பல பதிவர்களின் பதிவுகளால் லயித்து பதிவுலகிற்கு வருகை தந்தவன். கடந்த ஒரு மாதமாக நடந்த கசாப்புச் சண்டையைப் பார்த்து அடச்சீ....இங்க ஏண்டா வந்தேன் என்று கூட தோன்றியது. போலிஐடி போடுகிற பொறம்போக்குகளை ‘சைக்கோ’ என்று அழைப்பது 100% சரி!!
ReplyDeleteவாங்க மணி..இதை எல்லாம் பார்த்து நீங்கள் சங்கட பட வேண்டாம்..நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்...[பதிவுலகம் என்பது மிகவும் பெரிது கடல் போன்றது, இவர்கள் சண்டை அதில் விழும் மழை நீர் போன்றது. இதற்கு நீங்கள் சோர்ந்து விட வேண்டாம். திரட்டிகளை நம்புங்கள், அவை உங்களுக்கு blog readers குடுக்கும்.
ReplyDeleteஉங்க பதிவில் இனைந்து விட்டேன்..அடிக்கடி சந்திப்போம்.
எப்படித்தான் பாதுக்காப்பாக இருந்தாலும் இது மாதிரி சில ஆடுகள் உள் நுழைவதை தடுக்க முடிவதில்லை நண்பா ,..
ReplyDeleteஉங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி .. நன்றி
வாங்க நண்பரே.. வருகைக்கு நன்றி...என்னைக்கு ஆவது இந்த சைக்கோ ஆடுகள் மாட்டும் பாருங்க. :) :)
Deleteதல, பதிவுலகம், FBனு ஒரு இடம் விடாம எல்லாம் நாறுது... எல்லாத்தையும் பாத்தா கடைசியில கடுப்பு தான் மிஞ்சுது. இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையானு தோணுது. அவவனுக்கு பதிவெழுதவே நேரம் இல்ல, இதுல போலி ஐடி கிரியேட் பண்ணி, அடப்பதறுகளா... சரி, எவன் எப்படி போனா நமக்கென்னனு நம்ம வேலை, கருத்த மட்டும் சொல்லிகிட்டு இருந்தா யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது... நான் அத தான் செய்யலாம்னு இருக்கேன். இத பத்தி எனக்கு தெரிஞ்ச சில மேட்டர்கள டீடெய்லா உங்களுக்கு எழுதுறேன் :-)
ReplyDeleteவாங்க தல...
Deleteகிரிமினல் முளை இருக்கிறவன் தான் இப்படி எல்லாம் தரம் கெட்ட தனமாக யோசிப்பான். நான் இதுல எல்லாம் ஈடு படாம தான் இருந்தேன்...இந்த மேட்டர் சைக்கோ தனத்தின் உச்சம் போல எனக்கு தெரிஞ்சுது. அது தான் பதிவா போட்டுட்டேன்.
இதைப் போல் இரண்டு நண்பர்கள் போனில் பேசினார்கள்... (பெயர் வேண்டாமே..) ஒரு சிலரின் கருத்துக்களுக்காக தன் தளத்தின் நோக்கமே மாறி விட்டதாக கூறினார்கள்... இத்தனைக்கும் இருவரும் அனுபவ பதிவர்கள்... "இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்று சொல்லி மீண்டும் உங்களின் பதிவுகளை தொடருங்கள்" என்று எனக்கு தெரிந்தயளவு உற்சாகப்படுத்தினேன்...
ReplyDeleteபல சைக்கோக்கள் உள்ளார்கள்... அவர்களுக்கு நாம் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும்... நன்றி நண்பரே...(tm4)
ராஜேஷ் தனபாலன் அண்ணன் மேல் என் இந்த கொலைவெறி உங்களுக்கு??
Deleteராஜ்...உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி....அப்புறம் இந்த மாதிரி போலி களை கண்டுபடித்தமைக்கு நன்றி....
ReplyDeleteவாங்க ஜீவா..உங்களை சந்தித்தது எனக்கும் மிக்க மகிழ்ச்சி..
Deleteராஜ்,
ReplyDeleteமிகவும் பொறுமையாக இதைப்பற்றி ஆய்வு செய்து வெளியிட்டதற்கு நன்றி! இந்த போலி ஐடி பிரச்சினை ரொம்ப நாளாக இருக்கிறது. 2005 - 2007 ல் ரொம்ப அதிகமாக இருந்தது, எனது பெயரிலும் ஒரு போலி ஐடி இருந்த்து, பின்னர் தூக்கி விட்டார்கள் என நினைக்கிறேன். நீங்கள் கூறியபடி நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்!
வாங்க கார்த்தி,
Deleteஇந்த போலி சைக்கோகள் பிரச்னை ரொம்ப வருசமா இருக்கா..?? இப்ப தான் வவ்வால் கூட அதே சொன்னாரு.
நான் ஒரு பேக் ஐடி பார்த்து இருக்கேன், இங்க ரெண்டு பேரு, வெவ்வேறு பேருல சண்டை போடுறதை இப்ப தான் பார்கிறேன்.
நண்பரே...எவ்வளவு நேரம் செலவழித்திருந்தால் இத்தனை தகவல்களை திரட்டி இருக்க முடியும்!
ReplyDeleteஉங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.
நன்றி.
இந்த பதிவ பார்த்ததும் உங்க ப்ரோபைல கிளிக் பண்ணி பார்த்து பதிவு உண்மையான பாஸ்கரன் சாரோடதான்னு பார்த்துகிட்டேன். :D
Deleteஇந்த பதிவ பார்த்ததும் உங்க ப்ரோபைல கிளிக் பண்ணி பார்த்து பதிவு உண்மையான பாஸ்கரன் சாரோடதான்னு பார்த்துகிட்டேன். :D
Deleteஆகா ... பயங்கரமா ரிசர்ச் பண்ணியிருக்கீங்களே ராஜ்? நான் உ சி ர பேர்ல 2 ஐடி இருக்கிறத மட்டும் நோட் பண்ணேன். காரிகன் ஃப்ரொபைல் மத்ததெல்லாம் டீடெயிலா பார்க்கல. இதுல அந்த கேபிள், ஜாக்கி பெயர்ல வந்த கமெண்ட் எல்லாம் இன்னிக்கு தான் வாசிக்கிறேன். இப்ப, கிட்டத்தட்ட இன்செப்ஷன் பார்த்த ரேஞ்சுல மைண்ட் இருக்கு. அவ்வ்வ்
ReplyDeleteகடைசியா யாரத்தான் சைக்கோன்னு சொல்ல வர்றீங்க???
அந்த ரெண்டு பேக் ஐடியை உருவாக்கின ஆள் தான் அக்மார்க் சைக்கோ பாஸ்..
Deleteஇப்பதான் இங்க இத்தா பெரிய போஸ்ட்டை பார்த்தேன். ரைட்டு. ஹாலிவுட் ரசிகன் ஃபேஸ்புக்ல என்னை tag பண்ணிருக்காரு. இப்போ, எங்களுக்குள்ள நடந்ததைப் பத்தி ஒரு பெரிய அனாலிஸிஸ் நான் இங்க போட்டு, ஆல்ரெடி இந்தப் பிரச்னையை வெட்டித்தனமா பெரிசு பண்னுறவனுங்களுக்கு அவலோ தீனியோ போட விரும்பல. உங்களுக்கு நிஜமாவே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்க ஆர்வம் இருந்தால், தனியாக எனக்கு மின்னஞ்சல் செய்தால், அங்கே பேசிக்கிலாம்.. இதைத்தான் பாஸ்கரனும் சொல்லுவாருன்னு நினைக்கிறேன்
ReplyDeleteரியலி சாரி பாஸ் .... அந்த போஸ்ட் ப்ரைவேட் பண்ணியாச்சு. :)
Deleteவாங்க ராஜேஷ், என்னோட பதிவுல முத பேராவுல சொல்லி இருக்கறது தான், அவங்க உள்ள நடந்த பிரச்னை பத்தி எனக்கு கவலையே இல்லை..
Deleteஅவங்களுக்குள்ள நடந்த பிரச்னை பத்தி கவலை இல்ல. ஆனா நைசா அது கருந்தேள் கேங்ன்னு எழுதி, அதை அப்பால டிலீட் பண்றதுல மட்டும் கவலை இருக்கும் போல. ஒரு விஷயத்தப் பத்தி கவலை இல்லாம இருக்கலாம். தப்பில்ல. ஆனா செம்ம பயாஸ்டா போஸ்ட் போடுறதுல சில பிரச்னைகள் இருக்கு. உங்களுக்கான பதில்களை Facebookல நேத்தே கொடுத்தாச்சு. பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அங்க உங்களை ஹாலிவுட் ரசிகன் tag பண்ணாரு. ஆனா நீங்க அங்க வரவே இல்ல. எனிவே, இங்க மறுபடி மொதல்ல இருந்து ஆரம்பிக்க எனக்கு இன்ட்ரஸ்ட்டோ நேரமோ இல்ல. See you.
Deleteநன்றி ராஜேஷ்.. நானும் இதையே பிடிச்சுகிட்டு தொங்கிட்டு இருக்க முடியாது. We have to move on..
Deletecastro karthik அப்புறம் பாலா ரெண்டு பேரும் அந்த ரெண்டு பேராவை எடுக்க சொன்னாங்க, அது தான் எடுத்தேன். அவங்க தான் பேக் ஐடி யூஸ் பண்ணுனாங்கன்னு நான் சொல்லவே இல்லை, சொல்லவும் மாட்டேன். நீங்க தப்பா புரிஞ்சுகிட்டேங்க. :)
இப்ப கூட பார்த்தேன் ராஜேஷ், யாரும் என்னை FB ல tag பண்ணல. பாலா பேஜ் போன்னேன், அவர் என்னை unfriend பண்ணிட்டார்...
என்னது உங்களை டாக் பண்ணலையா?சரியா போச்சு போங்க. அதுல இருந்தது உங்க ப்ரொஃபைலேதான். சரி விடுங்க. வேலைய பார்ப்போம். மறுபடியும் ஸீ யூ. ஓவர் & அவுட் :)
Deleteஇப்படி சில வேலை அற்றவர்களின் சில்மிஷதல் சில சமயம் விபரீதங்கள் நேர்ந்து விடுகின்றன.
ReplyDeleteஅதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி ராஜ்.
வாங்க கிருஷ்ணா.. உங்க கருத்துக்கு மிக்க நன்றி..
Deleteபதிவுலகில் உள்ள இதுபோல ஒட்டுண்ணிகளை கண்டுபிடிச்சி அழிக்கனும் ராஜ்.என்ன ஒரு வக்கிர குணம்.
ReplyDeleteவாங்க மணிமாறன். உங்க கருத்துக்கு மிக்க நன்றி..அவங்களா திருந்துனா தான் உண்டு பாஸ்.. :) :)
Deleteஇந்த போலிகளும் கமென்ட் சண்டையும் பதிவுலகத்துல என்னக்கிதான் ஓயும்ன்னு தெரியல. இந்த சண்டைகள்ள இருந்து விலகி இருக்கறதுதான் நமக்கும் நல்லது.
ReplyDeleteவாங்க Dr....உங்க கருத்துக்கு நன்றி..
Deleteதகவலுக்கு ரொம்ப நன்றிங்க!
ReplyDeleteராஜ்!நம்மாளு ஆகஸ்ட் 15க்கு மிட்டாய் சாப்பிடனுமேன்னு கடைசியா வந்துட்டுப் போயிருக்கிறார்.புரபைல்தான் மூடிக்கிடக்குதே!குறைந்த பட்சம் கமெண்டாவது செய்யலாமில்ல!
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteஇப்போது தான் பதிவைப் படித்தேன்.
இவர்களுக்கு சுய சொறிதல் செய்வதை தவிர வேறு வழியேதும் இல்லைப் போல இருக்கு
நல்லதோர் முயற்சி, மிகுந்த தேடலுடன் சைக்கோவை அம்பலப்படுத்தியிருக்கிறீங்க.
வாங்க நிருபன்..
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
ஆஹா! இப்படித்தான் சண்டை மூட்டி விடறாங்களோ? நல்லதொரு பகிர்வு! போலிகளிடம் உஷாராக இருப்போம்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html
வாங்க சுரேஷ்..இவனுக்க கிட்ட ரொம்பவே உஷாரா இருக்கனும்..
Deleteகருத்துக்கு ரொம்ப நன்றி..
ஆனால் அந்த் குறிப்பிட்ட சில பின்னூட்டங்களை பார்த்ததுமே , (குறிப்பாக அந்த திருட்டு வி.சி.டி பற்றிய பின்னூட்டம்) பிஎனக்கு புரிந்துவிட்டது அது பாஸ்கர் அண்ணன் போட்ட பின்னூட்டங்களாக இருக்காது என்று.
ReplyDeleteவாங்க கிஷோர், உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி.. அது பாஸ்கரன் அண்ணன் கிடையாது என்று எனக்கு இந்த போலி சைக்கோ முலமாக தான் தெரிந்தது..
Deleteநண்பா நானும் மிக அதிக naatkalaaga இந்த பிரச்சினையை பார்த்து கொண்டு தான் இருந்தேன்.. அதை ரொம்ப சூப்பரா அலசிட்டிங்க.. ஏனோ உலக சினிமா ரசிகன் அண்ணா தன்னுடைய பதிவு மென்மையை இப்படியான சில காரணங்களுக்காக (காரிகன் ஆரம்பம்) விட்டு கொடுத்து விட்டாரோ என்று தான் பட்டது.. பதிவிலயே கடுப்பாகி அனேக இடங்களில் இருந்தார் (சாதாரணமாக கடுப்பு எனக்கே சில இடங்களில் வந்தது சில பின்னூட்டங்களை பார்த்து, அவருக்கு கடுப்பாக வாய்ப்பு அதிகம் - ஆனாலும் பொதுவில் எழுதி வெளியிட்டால் யாருக்கும் விமர்சிக்கும் உரிமை உண்டு என்று குண்டை போட்டு விடுவார்களே).. கமினோவிற்க்கு பிறகு தொடர்ந்து வாசித்தாலும் அடிக்கடி பிரசினை தான் அவரது பதிவில் முட்டிகொண்டது.. ஹீரோ வில்லன் சண்டை இல்லாமல் ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோ ஹீரோ (பதிவர்களை தான் சொன்னேன்) சண்டை என்ற படியால் நமக்கு ஏன் வம்பு என்று அமைதியாய் இருந்து விட்டேன்.. ஆனால் இடையில் காமடி பீஸ் எல்லாம் கனெக்ட் ஆகி விளையாடி இருக்கு என்று கண்டிப்பாக நீங்க சொன்ன பிறகு தான் நண்பா தெரிகிறது..
ReplyDeleteஆனால் உங்க pathivai நான் வாசிக்கும் போது மனதில் தோன்றிய முடிவை தான் நீங்களும் சாராம்சம் ஆக்கி இருக்கீங்க
//சைக்கோகளிடம் இருந்தது விலகி இருப்பதே நல்லது. முகமூடி அணிந்து கொண்டு கொரில்லா போர் புரிபவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்பது என் எண்ணம்.//
வாங்க ஹாரி..அந்த சைக்கோ யாருஎன்று எனக்கு தெரிந்து விட்டது... :) :)
Deleteஅதென்ன தம்பி கடைசி வரில //முகமுடி// என்று போட்டு இருக்க.. அப்ப தாடி, மீசை வைச்ச சைக்கோகளிடம் இருந்தது விலகி இருப்பதே நல்லது என்று சொல்ல வாறிங்களா.. இந்த வண்ணம் தாடி மீசை இல்லாத தமன்னா நிற (நன்றி - பிரபல பதிவர்) இப்படி கூறுகிறார் என்று ஒரு பெரிய சர்ச்சை பதிவு என் தளத்தில போட வேண்டி வரும்.. ஹி ஹி
ReplyDeleteவோய் ..ரணகளத்திலும் உனக்கு ஒரு குதூகலம் வேணும் போல...
Deleteவணக்கம் ராஜ் இன்று தான் இப்பதிவை பார்த்தேன்..
ReplyDeleteநிச்சயம் இவன் சைக்கோவே னால் இரண்டல்ல ஒன்று...ஒருவன் தான் இரண்டு பெயரில் போட்டு இருக்கனும் என்பதை அந்த கமெண்ட் மூலம் தெரிகிறது...
அடுத்து நிச்சயம் உலக சினமாவைப்பற்றி யார் யார் எழுதுகிறார்களோ அவர்களை வாட்சி செய்ததில் கிட்டத்தட்ட 5 பேருக்கு பக்காக உள்ளனர் இதில் உலக சினிமா ரசிகன், ராஜேஸ் இருவரும் இல்லை என்பது உங்கள் பதிவின் மூலம் தெளிவாகிறது... மீதி அதிகம் உலக சினிமா பற்றி எழுதும் நபர் மீது தான் என் சந்தேகம்..
பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுத்தான் ஆகவேண்டும்...
தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....
வாங்க சங்கவி..உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி..நிறைய பேச முடியவில்லை... :(
Deleteநீங்க சொல்லுவது உண்மையாக இருக்கலாம்...ஆனால் அதில் ஒரு சைக்கோ யார் என்று எனக்கு தெரிந்து விட்டது..நீங்கள் நினைத்த ஆள் தான் அவன். தனியாக உங்களுக்கு தெரியபடுதுகிறேன்...
வருகைக்கு மிக்க நன்றி..
தலை சுத்துது பாஸ்
ReplyDeleteவாங்க நண்பரே...இன்னும் இது மாதிரி நிறைய சைக்கோகள் பதிவுலகத்தில் இருக்காங்க..
Deleteஉலக சினிமா ரசிகன் பாஸ்கரன் அவர்களுடைய பதிவில் தரக்குறைவாகவோ..!அவரைப் போன்றே போலி பெயரில் ஆள்மாறாட்டம் செய்து அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவர்கள் மீது மானநஷ்ட ஈடு/மற்றும் கிரிமினல் வழக்கு/அநாகரிகமாக சொல் பயன் படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்,/சைபர் கிரைம்,/ போன்ற குற்றங்களின் கீழ் வழக்கு தொடுப்போம் என இதன் மூலம் அறிவிக்கின்றோம்.
ReplyDeleteஇப்படிக்கு
கோவை குழுமம்
வாங்க சுரேஷ்..
ReplyDeleteஇது ரொம்பவே நல்ல விஷயம்..இந்த மாதிரி கேடு கெட்டவங்களை மீது கோவை நண்பர்கள் எடுக்க போகும் கிரிமினல் நடவடிக்கைக்கு என் முழு ஆதரவு உண்டு. அவர்கள் மீது சைபர் க்ரைம் போலீசில் கூட புகார் அளிக்கலாம்...
இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்தல் அந்த சைக்கோ யார் என்று கண்டு பிடித்து விடலாம். நம்மிடம் அவனது பிளாக்கர் ப்ரோபைல் உள்ளது. அதை வைத்து அவனை நெருங்கி விடலாம். நான் என் வழியில் முயற்சி செய்கிறேன்...நீங்களும் உங்கள் வழியில் தொடருங்கள்..
இது போன்ற நேரத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதன் முலம் பதிவர்கள் ஒற்றுமையை எடுத்து உரைப்போம்..
வணக்கம் ராஜ் நண்பரே ,
ReplyDeleteதங்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ,நன்றிகள் பல .உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி .
கோவை பதிவர்கள் சார்பாகவும் நன்றிகள்