Sunday, August 05, 2012

சொர்க்க வாசலில் ஜார்ஜ் புஷ்-இந்திய அரசியல்வாதிகள்


Facebook மற்றும் இணையத்தில் நான் ரசித்த சில ஜோக்ஸ்.....
சொர்க்கத்திற்குள் நுழைபவர்களிடம் ‘அவர்கள் சரியான நபர்கள்தானா?’ என்ற சோதனை நடத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். ஐன்ஸ்டீன் வந்தார். ‘அவர்தான் ஐன்ஸ்டீன்’ என்பதை நிரூபிக்குமாறு கேட்டார்கள். அவர் ஒரு கரும்பலகையைக் கொண்டு வரச் சொன்னார். அதில் ரிலேடிவிட்டி தியரியை விளக்க ஆரம்பித்தார். அவர் ஐன்ஸ்டீன்தான் என்பதை அறிந்துகொண்ட காவலாளிகள், உள்ளே போக அனுமதித்தார்கள்.

அடுத்து பிக்காசோ வந்தார். அவருக்கும் அதே சோதனை. பிக்காசோ, ஐன்ஸ்டீன் எழுதிய ரிலேட்டிவிட்டி தியரியை ஆங்காங்கே அழித்தும், இடையில் சில கோடுகள் போட்டும் ‘இதுதான் மாடர்ன் ஆர்ட்’ என்றார். அவரையும் உள்ளே அனுமதித்தார்கள்.

அடுத்து புஷ் வந்தார். அவரிடம் சொன்னார்கள்: “ஐன்ஸ்டீனும், பிக்காசோவும் தங்களை நிரூபித்து விட்டு சொர்க்கத்திற்குள் போயிருக்கிறார்கள். அதேபோல் நீங்களும் உங்களை நிரூபித்துவிட்டு, உள்ளே போகலாம்.”

“ஐன்ஸ்டீன், பிக்காசோ? யார் அவர்கள்?”

“அப்ப கண்டிப்பா நீங்கதான் புஷ். நீங்க உள்ளே போகலாம்.”
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், ‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார். ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார்.

“உன் பெயர் என்ன?”

“டேவிட்”

“கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?’

“3 கேள்விகள் கேட்கப்போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே?”

அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார். இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும் வகுப்புக்கு வந்தார். “கேள்விகள் கேட்கலாம்” என்றார்.

வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார்.

“ராபர்ட்”

“உன் கேள்விகள் என்ன?”

“5 கேள்விகள் கேட்கப் போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே? வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது? முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே?”
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஜார்ஜ் புஷ் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்தை நோக்கி காரில் விரைந்து கொண்டிருந்தார். கார் ஒரு பன்றிப் பண்னையை நெருங்கும்போது, வெள்ளைப் பன்றி ஒன்று எதிர்பாராத விதமாக காரில் அடிபட்டு இறந்துவிட்டது. ஜார்ஜ் புஷ் டிரைவரிடம், “உள்ளே சென்று நடந்ததை பண்ணை உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உடனே வா” என்று பணித்தார்.

அவ்வாறே உள்ளே சென்ற டிரைவர் திரும்பி வரும்போது, கை நிறைய பணமும், நிறைய பரிசுப் பொருட்களும் கொண்டுவந்தார். “அவரது பன்றியைக் கொன்றதற்காக அவர் கோபிக்கவில்லையா? அவர் பரிசு தருமளவிற்கு என்ன சமாதானம் கூறினாய்?” என்று கேட்டார். அதற்கு டிரைவர் சொன்ன பதில்: “நான் ஜார்ஜ் புஷ்ஷின் கார் டிரைவர். அந்தப் பன்றியை இப்போதுதான் கார் ஓட்டி கொன்றேன் எனக் கூறினேன்.”
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு தடவை இந்திய அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர். எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளானது. கிராமத்து ஆள் ஒருவர் இறந்தவர்களின் உடல்களை எல்லாம் அடக்கம் செய்தார். சில நாட்கள் கழித்து விபத்து குறித்து விசாரிக்க வந்த காவல் துறையினர், கிராமத்து ஆளை கண்டுபிடித்து கேள்விகள் கேட்டனர்.


‘இறந்து விட்டார்கள் என்பதை உறுதிபடுத்திவிட்டுதான் அவர்களை புதைத்தாயா?’

‘இல்லை. நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நம்ம அரசியல்வாதிகளைப் பற்றித்தான் தெரியுமே! எப்போதும் பொய் சொல்பவர்கள் தானே என்று அவர்களையும் சேர்த்து புதைத்துவிட்டேன்’18 comments:

 1. ஹி ஹி.. சூப்பர் மாமா கலக்கிட்ட.. 5 கேள்வி காமெடி செமையா இருந்தது..

  ReplyDelete
 2. எல்லாம் செம ஜோக்ஸ். விலையேற்றம் போற போக்கைப் பார்த்தால் நீங்க சொன்ன மாதிரி வெகு சீக்கிரம் கன் வாங்கித் தான் சாப்பாடு வாங்கணும் போல இருக்கு.

  ReplyDelete
 3. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்.....

  ReplyDelete
 4. ஜார்ஜ் புஷ் டோட்டல் டேமேஜ்

  அந்த லெட்டரும் செம காமெடி

  ReplyDelete
 5. அனைத்து காமடியும் நன்றாக இருந்தது.
  அதுவும் அந்த லெட்டரும் கடைசி அரசியல்வாதி ஜோக்கும் சூப்பர்.

  ReplyDelete
 6. ஜார்ஜ் புஷ் கேள்விகள் காமெடி அருமை!

  ReplyDelete
 7. ஹா...ஹா.. அனைத்தும் கலக்கல் ஜோக்ஸ்...
  தொடர வாழ்த்துக்கள்...நன்றி... (T.M. 4)  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
 8. அனைத்துமே அருமை ராஜ்... அந்த ஆங்கிலக் கடிதம் செம கலக்கல்... பயபுள்ள உக்காந்து யோசிசருப்பான் போல

  ReplyDelete
 9. தல சூப்பர் ஜோக்ஸ் எல்லாமே எனக்குப் புதிது.....செம செம.....
  ரைவர் டயலொக் கொஞ்சம் யோசிச்ச பிறகுதான் புரிஞ்சுது..

  ReplyDelete
 10. LOL... ஜார்ஜ் புஷ் டோட்டல் டேமேஜ்.. சொர்க்கமும் 5 கேள்விகளும், Fair & handsome விளம்பரமும் சூப்பர்...

  ReplyDelete
 11. எல்லாமே செம..செம..செம... நல்லா சிரிச்சேன்.

  :D

  ReplyDelete
 12. கருத்து சொன்ன அணைத்து நண்பர்களுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 13. அண்ணே ! ஜார்ஜ் புஷ் மேல அப்புடி என்னாணே கோவம், ஆனாலும் ஜோக்குகள் செம, அந்த கேள்வி ஜோக்கை நான் வேறு மாதிரி ப‌டித்திருக்கிறேன்!

  ReplyDelete
 14. ராஜ்August 8, 2012 6:01 PM
  பாஸ்,
  சிறு அறிமுகம் என்னை பற்றி....நான் ஹைதரபாதில் இருக்கிறேன்..கடந்த 10 மாசமா தமிழில் வலைப்பூ எழுதி வரேன். எனக்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது..
  வாய்ப்பு அமைந்தால் நானும் கண்டிப்பாய் கலந்து கொள்கிறேன்..

  Reply
  Replies

  மோகன் குமார்August 8, 2012 8:22 PM
  ராஜ் அவசியம் வர முயலுங்கள் நண்பா. உங்களை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்

  ReplyDelete
 15. புஷ் ஜோக்ஸ் கலக்கல்! வலைச்சரம்மூலம் முதல்வருகை! இணைந்து விட்டேன்! தொடர்வேன்!நன்றி!

  இன்று என் தளத்தில்
  பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
  நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
  http://thalirssb.blogspot.in/2012/08/17.html

  ReplyDelete
 16. ஹா ஹா.. ஜோக்ஸ் அருமை.. மனம் விட்டு சிரித்தேன், நன்றி!! :)

  ReplyDelete
 17. ரொம்ப லேட்டாதான் உங்க பதிவை படிச்சேன், வாய் விட்டு சிரித்தேன், நன்றி.

  ReplyDelete
 18. கலக்கல் ராஜ், எல்லா ஜோக்குகளும் மிக அருமை. .

  ReplyDelete