Wednesday, August 29, 2012

ஒரு பதிவில் நான் கண்ட இரண்டு சைக்கோகள்

பதிவுலகில் இரண்டு நாட்கள் முன்பு ஒரு சண்டையை காண நேர்ந்தது, நான் விரும்பி படிக்கும் "உலக சினிமா ரசிகன்" அவர்களுக்கும் ஹாலிவுட் பாலா அவர்களுக்குமான சண்டை அது. அந்த சண்டை ஏன் நடந்தது, யார் முதலில் ஆர்ம்பித்தது, யார் தவறு செய்தார் என்ற பஞ்சாயத்துக்கு நான் போக விரும்பவில்லை.அது என் வேலையும் இல்லை. ஆனால் மிகவும் உக்ரமான பர்சனல் சண்டை அதுவும் பொதுவில் போட பட்ட சண்டை அது என்று புரிந்தது.
பாலா என்னிடம் ராஜேஷ் அவர்களின் பதிவில் "உலக சினிமா ரசிகன்" சில தரமற்ற கமெண்ட் போட்டு உள்ளதாக சொன்னார், ராஜேஷ் தளத்தில் சென்று பார்த்தேன், அதில் "உலக சினிமா ரசிகன்" "காரிகன்" மற்றும் "கார்டின் மாசி" என்கிற முன்று பேர் இடையில் மிகவும் கீழ்த்தரமாக கமெண்ட் வார் நடந்து கொண்டு இருந்தது. "காரிகன்" என்கிற பதிவரை நான் பாஸ்கரன் அவர்களின் வலைபூவில் பார்த்து உள்ளேன். ஹேராம் பதிவில் பாஸ்கரன் உடன் கருத்து போர் புரிந்து உள்ளார். ராஜேஷ் பதிவில் நடந்த கருத்து மோதல்களை பார்த்து எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருந்தது, இந்த அளவு கீழ் தரமாக பொதுவில் பேசுகிறார்களே என்று. இன்னும் பெரிய ஆச்சிரியம் பாஸ்கரன் இப்படி பேசுகிறாரே என்று. "காரிகன்" அவர்களின் கமெண்ட் தரத்தை நான் பார்த்து உள்ளேன். அவரும் இந்த அளவுக்கு பேச மாட்டார் என்றே எனக்கு தோன்றியது.
மேல்லோட்டமாக பார்த்தால் "உலக சினிமா ரசிகன்" பாஸ்கரன் அவர்கள் தான் அணைத்து கமெண்டை இட்டது போன்று தோன்றும், எனக்கும் அதே தான் தோன்றியது. அணைத்து தரமற்ற கமெண்ட்களும் பாஸ்கரன் அவர்களின் எழுத்து நடையில் இருந்தது, அந்த ப்ரொபைலை கிளிக் செய்து பார்த்தேன், பாஸ்கரன் வைத்து இருக்கும் "சார்லி சாப்ளின்" படம் மற்றும் அவரது "About me" கூட அப்படியே இருந்தது. காரிகன் ப்ரொபைலை கிளிக் செய்தல் "Profile Not Available" என்று வந்தது. சரி இருவரும் பொதுவில் அடித்து கொள்கிறார்கள் என்றே நினைத்து இருந்தேன். ராஜேஷ் அவர்களே பாஸ்கரன்  தான் அப்படி பின்னுட்டம் இட்டு விட்டார் என்று நினைத்து விட்டார். அப்படி நம்பக தன்மை வாய்ந்த கமெண்ட்கள் அவை. பிறகு அவரே யாரோ விளையாடி உள்ளார் என்று சொல்லி அணைத்து கமெண்ட்களையும் அழித்து விட்டார். அவர்களது தரமற்ற பேச்சுகளை கீழே குடுத்து உள்ளேன்.

நேற்று BABYஆனந்தன் தளம் சென்ற போது அவரது follower லிஸ்ட்டில் "உலக சினிமா ரசிகன்" என்கிற பெயர் முதலில் இருந்தது, எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. BABY பதிவில் பல வருடங்கள் முன்னாலே பாஸ்கரன் சேர்ந்து விட்டாரே, இது என்ன புதுசா சேர்ந்து இருக்காரே என்று  அந்த ப்ரொபைலை ஓபன் செய்து பார்த்தல் தான் தெரிகிறது, அது  "உலக சினிமா ரசிகன்" என்கிற பெயரில் உருவாக்க பட்ட போலி ப்ரொபைல் என்று. இது தாத்தா காலத்து டெக்னிக் என்றாலும், இந்த போலி ப்ரொபைல் உருவாக்க அந்த சைக்கோ நன்றாகவே உழைத்து உள்ளான் என்று தெரிந்தது. "உலக சினிமா ரசிகன்" பாஸ்கரன் எந்த எந்த சைட் follow செய்து உள்ளாரோ, அதே சைட்டை இந்த "போலி உலக சினிமா ரசிகனும் follow செய்து உள்ளான், அதே சார்லி சாப்ளின் படம், அதே "About me". அந்த போலி ப்ரொபைலை நேற்றே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து விட்டேன். இப்பொழுது அந்த ப்ரொபைலலை கிளிக் செய்தல் "Profile Not Available" என்று வருகிறது.

போலி உலக சினிமா ரசிகன்:
http://www.blogger.com/profile/03515772280139422535

இந்த படத்தில் "MY BLOGS" என்கிற ஆப்ஷன் இல்லை, அது கூட பரவாயில்லை, ஆனால் "On Blogger Since" என்பதில் "August 2012" என்று காட்டுகிறது. அதாவது இந்த பிளாக்கர் ஐடி ஆரம்பித்தது இந்த மாதம் தான். பாஸ்கரன் மீது தனி மனித தாக்குதல் நடத்த வேண்டும், அவரது பெயரில் இருந்தது அவரே எழுதியது போன்று கீழ்த்தரமாக கமெண்ட் போட்டு அவரை கோப படுத்தி அவர் வாயில் இருந்தது வசைவு வாங்க வேண்டும் என்று அந்த சைக்கோ திட்டம் போட்டு உள்ளான், அதில் ஓர் அளவு வெற்றியும் பெற்று உள்ளான். ராஜேஷ் கூட பாஸ்கரனை தவறாக எண்ண வைத்து விட்டான்.

ஒரிஜினல் உலக சினிமா ரசிகன்:
http://www.blogger.com/profile/01436031496772627920


ஒரிஜினல் ப்ரொபைலலில் மட்டுமே "MY BLOGS" என்று காட்டும், ஒரிஜினல் பிளாக்கர் ஐடியில் "On Blogger Since" என்பதில் "July 2010" என்று சரியாக காட்டுகிறது, பாஸ்கரன் ப்ளாக் எழுத ஆரம்பித்தது July-2010 தான்.

ராஜேஷ் பதிவில் கீழ்த்தரமாக கமெண்ட் சண்டை போட்ட இன்னொரு நபரின் ப்ரொபைல் பெயர் "காரிகன்", இதுவும் ஒரிஜினல் கிடையாது. உலக சினிமா ரசிகனின் ஹேராம் பதிவில் சண்டை போட்ட "காரிகன்" அவர்களின் ஒரிஜினல் ஐடி "http://www.blogger.com/profile/09686777906279690116", அவரது ஒரு கமெண்டை இந்த பதிவில் பார்க்கலாம். மிகவும் ஞாயமாக தன் கருத்தை சொல்லுபவர் இவர். 
//கமல் பலவிதமான தோற்றத்தில் வந்து ஒரு கோமாளி கூத்து அடித்த தசாவதாரத்திற்கு முன்னோடியாக/// இப்படியாக போகும் முதல் கமெண்ட்.
இபொழுது மேலே உள்ள காரிகன் அவர்களின் ப்ரொபைல் கிளிக் செய்தல் அதில் அவரது profile பார்க்கலாம், அவரது "My Blogs" "Blogs I Follow" தெரியும்
எனக்கு "ஒரிஜினல் காரிகன்" யார் என்று தெரியாது.
Original  காரிகன்
ஆனால் ராஜேஷ் அவர்களின் பதிவில்  போலி உலக சினிமா ரசிகனை வம்பு சண்டை இழுத்த போலி "காரிகனின்" ஐடி "http://www.blogger.com/profile/13471892063903378299" இதை கிளிக் செய்தல் "Profile Not Available" என்று வருகிறது. இந்த ஐடி உருவாகியவனும் என்னை பொறுத்த வரை சைக்கோ தான்.

இரண்டு போலி ஐடி "காரிகன்" மற்றும் "உலக சினிமா ரசிகன்" உருவாகி அவர்கள் உள்ளே அடித்து கொண்டு, இரண்டு பேர் சண்டை இடுவதை போல் காட்ட வக்கிர மனம் படைத்த சைக்கோவால் மட்டுமே முடியும். இந்த இரண்டு போலி ஐடி களை யார் என்று தேடி வருகிறேன். எனக்கு என்ன வியப்பு என்றால் இப்படியும் கூட செய்வார்களா என்பது தான், அதுவும் தேர்ந்த கிரிமினல் போல் வேலை செய்து உள்ளார்களே என்று. இந்த இரண்டு சைக்கோகள் மேல் என்னால் பரிதாபம் மட்டுமே பட முடியும், அவர்களை சேர்ந்தவர்களை நினைத்தால் இன்னும் கஷ்டமாக இருக்கிறது. இந்த பதிவை நான் எழுதிய காரணம் நான் "உலக சினிமா ரசிகர்" பாஸ்கரனை தவறாக எண்ணி விட்டேன், அதே போல் வேறு சில நண்பர்கள் அவரை தவறாக எண்ணி இருக்க கூடும், அது போல் நடக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவை எழுதினேன்.ராஜேஷ் பதிவில் சண்டை இட்டது பாஸ்கரன் கிடையாது.

கடைசியாக இந்த பதிவின் தலைப்பில் குறிப்பிட்டது போல் ராஜேஷ் பதிவில் நான் கண்ட இரண்டு சைக்கோகளிடம் இருந்தது விலகி இருப்பதே நல்லது. முகமுடி அணிந்து கொண்டு கொரில்லா போர் புரிபவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்பது என் எண்ணம்.

சைக்கோ-1: <போலி உலக சினிமா ரசிகன்> ராஜேஷ் பதிவில் இட்ட கமெண்ட்ஸ்இங்கே இவன் பிளாக்கர் ஐடி http://www.blogger.com/profile/03515772280139422535 இதில் ஒரிஜினல் பாஸ்கரன் அவர்களின் கமெண்ட் வேறு உள்ளது. 
சைக்கோ-2: <போலி காரிகன்> ராஜேஷ் பதிவில் இட்ட கமெண்ட்ஸ் இங்கே. இவன் பிளாக்கர் ஐடி http://www.blogger.com/profile/13471892063903378299
இந்த சைக்கோ தான் மிகவும் ஆபத்தானவன்.

இவர்கள் இருவர் பற்றியும் யாருக்காவது தகவல் தெரிந்தால் தயவு செய்து பாஸ்கரன் அவர்களுக்கு தெரிய படுத்த வேண்டாம்.

சில நண்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க, பதிவில் இரண்டு பத்திகளை நீக்கி விட்டேன்.


Sunday, August 12, 2012

Trust (2010): ஆன்லைன் சாட்டிங் வக்கிர மிருகங்கள்.

Trust (2010) அமெரிக்காவில்  இளம் டீன் ஏஜ் பெண்கள் எப்படி ஆன்லைன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுகிறார்கள் என்பதை கொஞ்சம் கூட எதார்த்தத்தை மீறாமல் சொல்லும் படம். ஆன்லைன் சாட்டிங் நம்மில் அனைவரும் செய்து இருப்போம். முகம் தெரியாத நிறைய நபர்களை நாம் சந்திக்க ஒரு வாய்ப்பாய் அமைக்கிறது ஆன்லைன் சாட்டிங். முகம் தெரியாமல்/முகத்தை மூடி செய்ய படும் வாய்ஸ் சாட்டிங்கில் ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும், வயதான ஆள் தான் டீன் ஏஜ் பையன் போலவும் நம்முடன் சாட் செய்ய நிறையவே வாய்ப்பு  இருக்கிறது.


தவறான சாட் முலம் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுவதை, பெண்கள் ஏமாற்ற படுவதை நியூஸ் பேப்பரில் படித்து இருப்போம். நமக்கு அது வெறும் செய்தி தான், ஆனால் அந்த பெண் எந்த மாதிரியான மன உளைச்சலுக்கு ஆளாக்க படுகிறாள், அவளது குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்ன என்பதை, கண்டிப்பாய் முன்றாவது நபர்கள் ஆகிய நாம் உணர முடியாது. ஆன்லைன் சாட்டின் விளைவாக ஒரு அமெரிக்க  டீன் ஏஜ் பெண் எப்படி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்டு உடைந்து போகிறாள், எப்படி பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகிறாள், அந்த மன உளைச்சலில் இருந்தது எப்படி மீள்கிறாள் என்பதை அற்புதமாய் சொல்லும் படம் தான் Trust.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான அனே (Annie) 14 வயதை நெருங்கும் அமெரிக்க டீன் ஏஜ் பெண். முதல் காட்சியில் அனே நெட்டில் சிலருடன் தனது ஸ்கூல் வாலிபால் செலக்ஷன் பற்றி ஆன்லைன் குரூப் சாட் செய்வது போன்று படம் ஆரம்பிக்கும், அந்த சாட்டில் தன்னுடன் தவறாக பேசும் நபரை அனே உடனே பிளாக் செய்து விடுவாள். இதில் இருந்தது தவறாக பேசுபவர்களை கண்டு பிடிக்கும் அளவுக்கு வளர்ந்த பெண் அனே என்பது நமக்கு புரியும். அந்த குரூப் சாட்டில் சார்லி என்பவன் மட்டும் மிகவும் நல்லவன் போல் அனேவிற்கு வாலிபால் விளையாட்டு பற்றி டிப்ஸ் தருவான். அனேவும் ஸ்கூல் வாலிபால் டீமில் விளையாட செலக்ட் ஆகி விடுவாள். மறுநாள் சாட்டில் சார்லி அவளது செலக்ஷன் பற்றி கேட்க, அனேவிற்கு சார்லி மீது நல்ல அபிப்பிராயம் வருகிறது. இருவரும் சாட்டில் பேச ஆரம்பிக்கிறர்கள். சார்லி தனக்கு 15 வயது தான் ஆகிறது, தானும் ஸ்கூல் வாலிபால் பிளேயர் என்று சொல்லுவான். இப்படியாக சார்லி மற்றும் அனேவின் நட்பு சிறு புள்ளியில் ஆரம்பித்து வளர்கிறது.

இதற்கிடையே அனேவின் தந்தை வில் (Will) அவளது 14 ஆவது பிறந்த நாள் அன்று Apple Mac புக் ஒன்றை பரிசாக தருவார். Mac புக் முலம் அனே சார்லியுடனான தனது சாட்டிங்கை தொடர்கிறாள். அப்பொழுது சார்லி தான் 15 வயது பையன் இல்லை, தனக்கு 20 வயது ஆகிறது என்று சொல்லுவான். அனேவும் அதை பெரிய விஷயமாக எடுத்து கொள்ள மாட்டாள். சிறிது நாட்களில் இருவரும் டீப் சாட்டிங்கில் இறங்கி விடுவார்கள். பிறகு சார்லி தனக்கு 20 வயது இல்லை, தான் 25 வயது வாலிபன் என்று ஒரு புகைபடத்தை அனுப்புவான். அனே அப்பொழுதும் அவனை மன்னித்து விடுவாள்.
இருவரது சாட்டிங் எந்த தடையும் இன்றி வளர்கிறது. ஒரு நாள் சார்லி நாம் இருவரும் சந்தித்தால் என்ன என்று சொல்லி, அந்த சந்திப்புக்கு அனேவிடம் சம்மதம் வாங்கி விடுவான். அந்த ஊரில் இருக்கும் ஒரு மாலில் இருவரும் சந்திப்பது என்று முடிவு செய்கிறார்கள். அந்த மால்க்கு சென்று சார்லியை பார்த்த பிறகு தான் அனேவிற்கு தெரிய வரும், சார்லி 25 வயது வாலிபன் கிடையாது, 35 வயதை கடந்த நடுத்தர ஆள் என்பது. மால்லில் இருந்தது வெளியேற அனே செய்யும் முயற்சி, சார்லியின் நயவஞ்சக பேச்சால் தடுத்து நிறுத்த படுகிறது. மால்லில் இருந்தது அனேவை சார்லி ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று அவளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறான்.

அந்த சம்பவத்தினால் மனம் சோர்வடையும் அனே, அதை பற்றி தனது உயிர் தோழியான பிரிட்டானியிடம் சொல்கிறாள். ஆனால் பிரிட்டானி அந்த சம்பவத்தை அவர்கள் படிக்கும் ஸ்கூல் நிர்வாகத்திடம் சொல்லி விடுவாள். அங்கிருந்து லோக்கல் போலீஸ், பிறகு FBI வரை விஷயம் சென்று விடும். அனே ஒரு வயதான நபரால் ஏமாற்றி கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டு வில் (Will) உடைந்து விடுவார். FBI விசாரணையில் சார்லி இது போல் பல பெண்களை ஏமாற்றி இருப்பது தெரிய வரும். அதுவும் எந்த ஒரு தடயமும் விடாமல் தவறை சரியாக செய்பவன் சார்லி என்பது தெரியவரும். IP அட்ரெஸ், கிரெடிட் கார்டு, போட்டோ என்று ஒரு தடயம் கூட கிடைக்காது.
சாதாரண ஆக்சன் படமாக இருந்தால், பாதிக்க பட்ட பெண்ணின் அப்பா கதாபாத்திரம் தன் பெண்ணை மோசம் செய்தவனை துரத்தி துரத்தி கொலை செய்வது போல் இருந்தது இருக்கும். அது நடைமுறை சாத்தியம் இல்லாத செயல். அப்படி செய்து இருந்தால் பத்தோடு பதினொன்று என்று இந்த படம் ஆகி இருக்கும்.

ஆனால் Trust படத்தில் அந்த மாதிரி எதுவும் செய்யாமல், பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்ட பெண் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவர்களது குடும்பம் சந்திக்கும் சிக்கல்கள் பற்றி காட்டி இருப்பார் இயக்குனர் டேவிட் சுவிம்மர் (David Schwimmer). தன் அன்பு மகள் யாரோ ஒருவனால் ஏமாற்ற பட்டு விட்டாளே என்று  அனேவின் தந்தை கதாபாத்திரமான வில் கதறும் காட்சிகள் நம்மை நிறைய இடங்களில் உலுக்கி எடுத்து விடும். படம் நகர நகர நாமும் அவர்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ஆகி விடுவோம். அந்த குடும்பத்துக்கு எப்படியாது ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நம்மை ஏங்க வைத்து விடுவார் இயக்குனர். படத்தின் இறுதி காட்சியில் வில் மற்றும் அனே இடையே நடைபெறும் உரையாடல்கள் உலக தரமானவை. யாரையும் பழி வாங்காமல், யாருக்கும் அப்படி இரு, இப்படி இரு என்று அட்வைஸ் செய்யாமல் என்ன நடந்தாலும் Life has to Go On என்ற தத்துவத்துடன் படம் முடியும்.
படம் முடிந்து கிரெடிட்ஸ் போடும் போது சார்லி என்பவன் யார் என்று காட்டப்படும். அந்த காட்சியை பற்றி ரொம்ப நேரம் நினைத்து கொண்டு இருந்தேன். எனக்கு தோன்றியது சார்லி என்பவன் சமுகத்தில் முலையில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து வாழும் மிருகம் கிடையாது, அவன் சமுகத்தின் உயர்ந்த இடத்தில் கூட இருக்கலாம், எங்கும் இருக்காமல் எதிலும் இருக்காமல், யாராகவும் இருக்காமல்...

போன வருடம் இணையத்தில் ஒரு பிரச்சனை வெடித்தது, சாரு நிவேதிதா என்கிற எழுத்தாளர்/பிளாக்கர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசி விட்டார் என்ற சர்ச்சை வெடித்தது. அது உண்மையா என்று கூட எனக்கு தெரியாது. அனைவரும் சாரு நிவேதிதாவை அவர் சாட்டில் பேசியதை விட மிகவும் ஆபாசமாக பேசினார்கள். அந்த பெண்ணின் மனநிலையில் இருந்தது யோசித்து பார்த்தவர்கள் மிகவும் சில பேரே. எனக்கு இந்த படம் பார்த்த உடன் அந்த பெண்ணின் (அது பெண்ணே கிடையாது என்றும் சில பேர் சொன்னார்கள்) மன நிலையை யோசித்து பார்த்தேன், ஒரு கனம் என் உடம்பு நடுங்கி விட்டது. அது தான் Trust டின் தாக்கம்.

வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை கண்டிப்பாய் பாருங்கள். முழு படத்தையும் youtube யில் காண இங்கு கிளிக் செய்யவும்.

Trust: What Ever happens Life has to Go On.

My Rating: 8.3/10......


Sunday, August 05, 2012

சொர்க்க வாசலில் ஜார்ஜ் புஷ்-இந்திய அரசியல்வாதிகள்


Facebook மற்றும் இணையத்தில் நான் ரசித்த சில ஜோக்ஸ்.....
சொர்க்கத்திற்குள் நுழைபவர்களிடம் ‘அவர்கள் சரியான நபர்கள்தானா?’ என்ற சோதனை நடத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். ஐன்ஸ்டீன் வந்தார். ‘அவர்தான் ஐன்ஸ்டீன்’ என்பதை நிரூபிக்குமாறு கேட்டார்கள். அவர் ஒரு கரும்பலகையைக் கொண்டு வரச் சொன்னார். அதில் ரிலேடிவிட்டி தியரியை விளக்க ஆரம்பித்தார். அவர் ஐன்ஸ்டீன்தான் என்பதை அறிந்துகொண்ட காவலாளிகள், உள்ளே போக அனுமதித்தார்கள்.

அடுத்து பிக்காசோ வந்தார். அவருக்கும் அதே சோதனை. பிக்காசோ, ஐன்ஸ்டீன் எழுதிய ரிலேட்டிவிட்டி தியரியை ஆங்காங்கே அழித்தும், இடையில் சில கோடுகள் போட்டும் ‘இதுதான் மாடர்ன் ஆர்ட்’ என்றார். அவரையும் உள்ளே அனுமதித்தார்கள்.

அடுத்து புஷ் வந்தார். அவரிடம் சொன்னார்கள்: “ஐன்ஸ்டீனும், பிக்காசோவும் தங்களை நிரூபித்து விட்டு சொர்க்கத்திற்குள் போயிருக்கிறார்கள். அதேபோல் நீங்களும் உங்களை நிரூபித்துவிட்டு, உள்ளே போகலாம்.”

“ஐன்ஸ்டீன், பிக்காசோ? யார் அவர்கள்?”

“அப்ப கண்டிப்பா நீங்கதான் புஷ். நீங்க உள்ளே போகலாம்.”
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், ‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார். ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார்.

“உன் பெயர் என்ன?”

“டேவிட்”

“கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?’

“3 கேள்விகள் கேட்கப்போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே?”

அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார். இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும் வகுப்புக்கு வந்தார். “கேள்விகள் கேட்கலாம்” என்றார்.

வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார்.

“ராபர்ட்”

“உன் கேள்விகள் என்ன?”

“5 கேள்விகள் கேட்கப் போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே? வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது? முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே?”
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஜார்ஜ் புஷ் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்தை நோக்கி காரில் விரைந்து கொண்டிருந்தார். கார் ஒரு பன்றிப் பண்னையை நெருங்கும்போது, வெள்ளைப் பன்றி ஒன்று எதிர்பாராத விதமாக காரில் அடிபட்டு இறந்துவிட்டது. ஜார்ஜ் புஷ் டிரைவரிடம், “உள்ளே சென்று நடந்ததை பண்ணை உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உடனே வா” என்று பணித்தார்.

அவ்வாறே உள்ளே சென்ற டிரைவர் திரும்பி வரும்போது, கை நிறைய பணமும், நிறைய பரிசுப் பொருட்களும் கொண்டுவந்தார். “அவரது பன்றியைக் கொன்றதற்காக அவர் கோபிக்கவில்லையா? அவர் பரிசு தருமளவிற்கு என்ன சமாதானம் கூறினாய்?” என்று கேட்டார். அதற்கு டிரைவர் சொன்ன பதில்: “நான் ஜார்ஜ் புஷ்ஷின் கார் டிரைவர். அந்தப் பன்றியை இப்போதுதான் கார் ஓட்டி கொன்றேன் எனக் கூறினேன்.”
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு தடவை இந்திய அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர். எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளானது. கிராமத்து ஆள் ஒருவர் இறந்தவர்களின் உடல்களை எல்லாம் அடக்கம் செய்தார். சில நாட்கள் கழித்து விபத்து குறித்து விசாரிக்க வந்த காவல் துறையினர், கிராமத்து ஆளை கண்டுபிடித்து கேள்விகள் கேட்டனர்.


‘இறந்து விட்டார்கள் என்பதை உறுதிபடுத்திவிட்டுதான் அவர்களை புதைத்தாயா?’

‘இல்லை. நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நம்ம அரசியல்வாதிகளைப் பற்றித்தான் தெரியுமே! எப்போதும் பொய் சொல்பவர்கள் தானே என்று அவர்களையும் சேர்த்து புதைத்துவிட்டேன்’