போன வாரம் பேஸ்புக்கை மேய்ந்து கொண்டு இருக்கும் போது "உலக தரம் சினிமா & சாதனையாளர்கள் - ஒரு பார்வை" என்கிற பக்கத்தை பார்க்க நேர்ந்தது. எப்பொழுதாவது எழுதும் இவர்கள் சில நல்ல திரைப்படங்களை நேர்த்தியாக அறிமுக படுத்தி வருகிறார்கள். அந்த பக்கத்தில் இருந்து நான் பார்த்த/ரசித்த திரைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்போம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
ரஷ்யன் ஆர்க் (Russian Ark) 2002 ஆம் ஆண்டு வெளி வந்த வரலாறு சார்ந்த ரஷ்ய மொழி திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்கியவர் அலெக்ஸாண்டர் சொகுரோவ் (Alexander Sokurov) . இந்த படம் பொருளாதார அடிப்படையில் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் இது ஒரு சாதனை திரைப்படமாக கருதப்படுகிறது. 96 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் ஒரே கேமராவின் மூலம் ஒரே ஷாட் (shot) இல் எடுக்கப்பட்டது (Steadycam Sequence Shot ). ஒரே ஷட்டில் படம் பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. படம் எடுபவர்களுக்கு தான் அதன் கஷ்டம் தெரியும். இரண்டு டேக்கள் தொழில்நுட்ப தவறினால் தடைபட, முன்றாவது டேக் 96 நிமிடங்களில் ஓகே செய்ய பட்டது.
நடிகர்கள், துணை நடிகர்கள் என 2000 பேர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். 3 இசை குழுவினர் இசை அமைத்துள்ளனர். ரஷ்யாவின் St .Petersburg இல் இருக்கும் குளிர்கால அரண்மனை (Winter Palace) இல் முழு படபிடிப்பையும் நடத்தியுள்ளார் இயக்குனர். படம் ஒரே நாளில் படமாக்க பட்டது. கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த திரைப்படத்துக்கு பின்னால் எவ்வளவு பெரிய கடின உழைப்பு இருக்கிறது என்று. அந்த உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் இடம் பிடித்தது. கதை என்று பார்த்தல் படத்தில் அவ்வளவு சுவாரிசியம் இருக்காது, படம் கொஞ்சம் போர் தான், இந்த படம் ரஷியாவின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள நமக்கு பேர் உதவி செய்யும். படம் பார்க்கும் முன்பு ரஷிய கலாச்சாரத்தை/வரலாற்றை பற்றி நிறைய கிரௌண்ட் வொர்க் பண்ணி இருக்க வேண்டும். நான் அது மாதிரி எதுவும் செய்யாமல் படத்தை பார்த்தனால் எனக்கு நிறைய காட்சிகள் புரியவில்லை. மீண்டும் ரஷிய வரலாற்றை படித்து விட்டு படத்தை பார்க்க வேண்டும். என்னை பொறுத்த வரை புதிய முயற்சி காரணமாக உலக சினிமா வரலாற்றில் இந்த திரைப்படத்துக்கு ஒரு தனி இடம் இருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
Citizen Kane (சிட்டிசன் கேன்) - 1941 வது வருடம் வெளிவந்த ஆங்கில திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் ஓர்சன் வெல்ஸ். உலகின் மிகச்சிறந்த 10௦ படங்களில் சிட்டிசன் கேன் இருக்கும் என்பது பல சினிமா ஆய்வாளர்களின் கருத்து. இத்திரைப்படத்தின் இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை போன்றவை அக்காலத்தில் மிக சிறந்ததாக கருதப்பட்டது. இந்த திரைப்படத்தில் தான் முதன் முறையாக ஒளிப்பதிவுகளில் ஒரு வகையான "deep focus" என்ற முறையை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளனர். தூரத்தில் இருக்கும் ஒரு பொருள் கூட தெளிவாக தெரியும் அளவுக்கு இந்த ஒளிப்பதிவு இருக்கும். கதைப்படி ஒரு பத்திரிக்கையின் சொந்தக்காரரும் பெரும் செல்வந்தருமான சார்லஸ் போஸ்டர் கேன் (Charles Foster Kane) என்பவர் இறக்கும் தருவாயில் ரோஸ்பட் (Rosebud) என்று கூறி இறந்து விடுகிறார்.
பத்திரிக்கை ஆசிரியரான தொம்சன் (Thompson) என்பவர் கேன் உடைய சொந்த வாழ்க்கை பற்றியும் அவர் கூறிய கடைசி வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதையும் அறிய முயற்சி செய்கிறார். இதற்காக கேன் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் தேடி கண்டுபிடித்து விசாரணை செய்கிறார். இறுதியில் அவர் கண்டு பிடித்தாரா இல்லையா என்பது திரைப்படத்தின் முடிவு.இந்த திரைப்படம் 1942 ஆம் வருடம் ஆஸ்கார் விருதில் 9 துறைகளில் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த திரைக்கதைக்கான விருதை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
சரி, அந்த ரோஸ்பட் (Rosebud) என்பது என்னவாக இருக்கும்? கேன் தான் சின்ன வயதில் வைத்து விளையாடிய ஒரு பனி சறுக்கு பலகையின் பெயர் தான் ரோஸ்பட். அவர் தனது சிறு வயது வாழ்க்கையை நினைத்துக்கொண்டே உயிர் நீத்தார் என்பதையே இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. எனக்கு மிகவும் பிடித்த உலக சினிமா வரிசையில் "சிட்டிசன் கேன்" படத்திருக்கு நிச்சியம் ஒரு இடம் உண்டு. உலக சினிமாவை விரும்பும் யாரும் தவற விட கூடாத படம் இது.
எனக்கு மிகவும் பிடித்த உலக சினிமா வரிசையில் "சிட்டிசன் கேன்" படத்திருக்கு நிச்சியம் ஒரு இடம் உண்டு. உலக சினிமாவை விரும்பும் யாரும் தவற விட கூடாத படம் இது. படம் பார்த்த உடன், இப்படத்தின் தாக்கம் உங்களிடம் குறைந்தது ரெண்டு நாட்கள் இருக்கும் , கண்டிப்பாய் உங்கள் குழந்தை பருவம் உங்களுக்கு ஞாபகம் வரும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
சினிமா பேரடிசோ (Cinema Paradiso) - 1988 ஆம் ஆண்டு வெளி வந்த இத்தாலிய மொழி திரைப்படம். இதன் இயக்குனர் குஸாப்பே டோர்ணடோர் (Guiseppe Tornatore). நாம் சின்ன வயதில் நமது ஊர்களில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்ததை மறக்க முடியுமா....அது போல தான் இந்த படமும். ஒரு சினிமா இயக்குனர் தான் சின்ன வயதில் வாழ்ந்த ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸ் மற்றும் அதில் ஆபரேட்டராக வேலை செய்த ஒரு பெரியவர், இவர்களது ஆழ்ந்த நட்பு இவற்றை பற்றி சொல்லும் ஒரு கவித்துவமான திரைப்படம் தான் சினிமா பேரடிசோ.
இந்த திரைப்படம் 1989 ஆம் ஆண்டு சிறந்த வேற்று மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது, கோல்டன் க்ளோப் விருது, BAFTA விருது, கேன்ஸ் திரைப்பட விழாவில் Grand Prix Jury விருது போன்றவற்றை சேர்த்து இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. Empire Magazine தரவரிசைப்படி உலக சினிமாவின் சிறந்த 100 படங்களில் 27 வது இடத்தில் இத்திரைப்படம் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் திரைஅரங்குகளுக்கு போக ஆள் இல்லாததால் அவை இடிக்கப்பட்டு கல்யாண மண்டபம், வணிக வளாகம் என்று கட்டி கொண்டு இருக்கின்றனர். ஆனாலும் சின்ன வயதில் நாம் திருவிழா திரையில் பார்த்த திரைப்படங்கள், டூரிங் டாக்கீஸ் திரைப்படங்கள் இவைகளை மறக்க முடியுமா....இன்றும் அதையெல்லாம் Facebook பக்கத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு தானே இருக்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜஸ்ட் ஷேரிங் ஒரு செய்தி: இணையத்தில் என்னுடன் நெருக்கமாக பழகும் சில நண்பர்களுக்கு ஏற்கனவே தெரிந்த செய்தி தான். இருந்தாலும் சொல்கிறேன், நான் பணி புரியும் கம்பெனியின் தலைமையிடம் அமெரிக்காவில் "சான்-டியாகோ" என்கிற இடத்தில உள்ளது. நான் இங்கு இந்தியாவில் ஆணி புடுங்கும் அழகை பார்த்து, நீங்கள் ஏன் இங்கு வந்து அதே "ஆணியை" புடுங்க கூடாது என்று கேட்டார்கள். சரி என்று நானும் ஒத்து கொள்ள, அதற்கான பணிகளை தான் கடந்த ஆறு மாதம் காலமாக செய்து வந்தேன். ஆப்பர் லெட்டர், யு.எஸ் விசாவிருக்கு தயார் ஆவது என்று வாழ்கை மிகவும் பிஸியாக சென்றது. போன வாரம் தான் ஒபாமாவின் ஆட்கள் பெரிய மனது பண்ணி L1 (Inter Company Transfer) விசா அனுமதி குடுத்தார்கள். அடுத்த மாதம் யு.எஸ் சென்று விடுவேன்.
நீங்கள் பயபடுவது போல், நான் யு.எஸ் சென்ற உடன் அமெரிக்கா காரன், ரோட்டுல எச்சி துப்ப மாட்டான், காரை ரோடு மேல தான் ஒட்டுவான், சிக்னலில் காரை நிறுத்துவான் என்று இந்தியாவையும் அமெரிக்காவை கம்பேர் செய்து பதிவு எழுதி உங்களை வதைக்க மாட்டேன். இப்பொழுது செய்வதை தான் அங்கு சென்றும் செய்வேன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
மூன்றுமே சினிமா கல்வெட்டில் பதித்துக்கொண்ட பொக்கிஷமான படங்கள்.. நிறைய கேள்விப்பட்டிருந்தும் இன்னும் அவற்றில் ஒன்றுகூட நான் பார்க்காமலேயிருப்பதை எண்ணி இப்போது வெட்குகிறேன்.. கூடிய சீக்கிரம் பார்க்கிறேன்!
ReplyDeleteஉங்கள் அமெரிக்க எதிர்காலம் பிரகாசமாகத் தொடங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
நன்றி தல..கடந்து ஒரு மாசமா நிறைய வேலை, இணையம் பக்கமே வர முடியல.. உங்க பதிவுகள் நிறைய மிஸ் பண்ணிட்டேன். இன்னைக்கு தான் பொறுமையா படிச்சிட்டு வரேன். படிச்சிட்டு சொல்லுறேன்.
Deleteமுதலில் வாழ்த்துக்கள் தல... கடல்கடந்து சென்றாலும் நற்பணியைத் தொடர வேண்டும் என்பதே உங்கள் ரசிகர்களாகிய எங்களது விருப்பம் :-)
ReplyDeleteஇத்தனை நாள் எழுதாமல் விட்டதற்கு, சேர்த்து வைத்து மூன்று முக்கியப் படங்களைப் பற்றி எழுதிவிட்டீர்கள். Cinema Paradiso மட்டும் தான் இந்த மூன்றில் நான் பார்த்த படம். படத்தின் ஒவ்வொரு காட்சியும் இன்றும் என் நினைவில் இருக்கிறது. Russian Ark படத்தைப் பாராட்டலாம், ஆனால் பார்க்க முடியாது என்பதால் முயற்சி செய்யவில்லை. Citizen Kane வைத்திருக்கிறேன், இன்னும் பார்க்கவில்லை.
மீண்டும் வாழ்த்துக்கள் and All the Best :-)
உங்க வாழ்த்துகளுக்கு நன்றி பிரதீப். அங்க போனாலும் இணையம் முலமாக நாம் பேசி கொண்டு தான் இருக்க போகிறோம். :):):)
Deleteவழக்கம் போல விமர்சனங்கள் நன்றாக இருக்கின்றன.அமெரிக்க பயணத்திற்கு வாழ்த்துக்கள் ராஜ்.
ReplyDeleteஎனது client கூட கிரிக்கெட் communication சான்-டியாகோ மற்றும் டென்வரில் தான் உள்ளது.
வாய்பிருந்தால் சந்திப்போம்.
கண்டிப்பாய் கிருஷ்ணா, உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Deleteநான் போக போவது சான்-டியாகோ தான். கிரிக்கெட் communication, எங்களுக்கு ஆப்பிள்க்கு அடுத்த படியான பெரிய கஸ்டமர். வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாய் சந்திப்போம்.
ராஜ் நீங்கள் எந்த நிறுவனத்தின் சார்பாக போகிறீர்கள்.நான் TCS இல் வேலை செய்கிறேன்.
DeleteThis comment has been removed by the author.
Deleteமுதலில் அமெரிக்க பயணத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..தங்களது வாழ்க்கை தொடர்ந்து சிறப்பாக அமைந்திட மேலும் பல வாழ்த்துக்கள்.உலக சினிமாவின் தரத்தினை நிர்ணயம் செய்யும் மூன்று வித்தியாசமான படைப்புகளோடு, அதனை பற்றிய குட்டிக்குட்டி பார்வைகளை கொடுத்து இருக்கீங்க ராஜ்.நல்ல பதிவு..தொடர்ந்து இதுப்போல நல்ல படங்களை பதிவு செய்யுங்கள்.நன்றி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear raj
ReplyDeletecongratulations for both the trip and your ATTITUDE for not comparing US and INDIA. keep posting. my heart felt prayers for your good health and well wishing. Thanks.
anbudan
sundar g rasanai chennai.
Thanks for your wishes Bro...Be in touch.. :):):)
DeleteGood Post..Congrats for USA life!
ReplyDeleteஉங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி செங்கோவி...
Delete
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பாஸ்..
Delete