Sunday, September 29, 2013

ராஜா ராணி (2013) - த்ரிஷா இல்லைனா திவ்யா !!

காதல் தோல்வியோடு வாழ்க்கையும் முடிந்து விடுவது இல்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்ற உயரிய சிந்தனையை உரக்க சொல்லும் படம் தான் "ராஜா ராணி". ஜான் (ஆர்யா) ரெஜினா (நயன்தாரா) இருவரும் விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்கிறது. இருவருக்கு திருமணத்தில் ஏன் விருப்பம் இல்லை, என்ற கேள்விக்கான விடையை பிளாஷ்பேக் மூலம் சொல்கிறார்கள். இருவரும் காதலில் தோல்வி அடைந்தவர்கள். பெற்றோர் விருப்பதிருக்கு தான் இந்த திருமனத்திருக்கு ஒத்து கொண்டு இருக்கிறார்கள். காதலை பறிகொடுத்த இருஜோடியும்  தங்கள் பழைய பாதிப்பில் இருந்து மீண்டு, இவர்களின் தற்போதை திருமண வாழ்க்கையை எப்படி வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதுதான் மீதி கதை. 


படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நசிம், சந்தானம், சத்யராஜ் என்று ஏகப்பட்ட நடிகர் கூட்டம். அனைவரும் தங்கள் பணியை மிக சிறப்பாய் செய்து இருக்கிறார்கள். ஆர்யா அதிகம் அலட்டிக்கொல்லாமல் நடித்து இருக்கிறார். டெய்லி குடித்து விட்டு வந்து  ரெஜினாவையும் பக்கத்து வீட்டுகாரர்களையும் கடுப்பு ஏதும் காமெடி எபிசோடு செம. தனக்கு எது நன்றாக வருமோ அதை மிக சரியாய் செய்து இருக்கிறார். திருமணம் செய்தபிறகு தன்னை மதிக்காத நயன்தாரவை வெறுப்பேற்றும் காட்சியிலும், நஸ்ரியாவை விழுந்து விழுந்து காதலிக்கும்போதும், சந்தானத்துடன் இணைந்து காமெடி பண்ணுவதிலும் கலக்கியிருக்கிறார்.

நயன்தாராவின் கம் பேக் மூவி. யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நாம் பார்த்து பழகிய மேல் டாமினேட்டிங் கேரக்டர். மிகவும் தந்துருப்பமாய் நடித்து இருக்கிறார். இந்த ஊரில் தமிழ் படம் ஓடும் தியேட்டர்களில் பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. சீட் நம்பர் என்று எதுவும் கிடையாது. சீக்கிரம் போய் இடம் பிடித்தால் பின்னாடி சீட் கிடைக்கும், லேட்டாக போனால் முன்னாடி சீட் தான் கிடைக்கும். தெரியாத்தனமாய் நாங்கள் லேட்டாய் போய் விட்டோம். இரண்டாவது ரோவில் தான் சீட் கிடைத்தது. நயன் பிளாஷ்பேக்கில் கதறி அழும் கொடூர காட்சியை மிக அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அந்த கொடூரமான் காட்சியை தவிர அவர் நடிப்பை குறை சொல்ல முடியவில்லை. நயன் கொஞ்சம் டயட் கன்ட்ரோல் செய்தால் நல்லது, இல்லை என்றால் க்ளோஸ் அப் காட்சிகளை அறவே தவிர்ப்பது நலம்.


ஜெய்யின் நடிப்பு என்னை பெரிதாய் கவரவில்லை. நிறைய ஓவர் ப்ளே செய்து இருந்தார். இவருக்கும் நயனுக்கும் காதல் வரும் காட்சிகளில் அழுத்தமே இல்லை. அதனாலே இவர்களின் காதல் தோல்வி அடைந்தவுடன் பெரிய பச்சாதாபம் வர வில்லை. அது போக ஜெய்-நயன் கதையில் வரும் காமெடியும் படு மொக்கை. சத்யனுக்கு காமெடி சுட்டு போட்டாலும் வரது என்பதை மறுபடியும் நிருபித்து இருக்கிறார். முதல் பாதியில் நயன்தாராவின் முன்கதை, இரண்டாம் பாதியில் ஆர்யாவின் முன் கதை என்று படம் நகர்கிறது. 

இந்த இரண்டு ப்ளாஷ் பேக்களில் என்னை கவர்ந்தது ஆர்யா-நஸ்ரியா எபிசோடு தான். நாங்கள் ரொம்பவே ரசித்து பார்த்தோம். காரணம் வேறு யாரும் இல்லை, சந்தானம் தான். மனிதர் கலக்கி இருக்கிறார். நஸ்ரியா செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கிறது. சமயத்தில் காஜால் அகர்வாலின் மானரிஸம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டு அடி ஹீல்ஸ் போட்டும் அம்மணியால் ஆர்யாவின் தோள்பட்டையை கூட தொட முடியவில்லை. முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் படத்தை சோர்வு அடையாமல் அழைத்து செல்லும் பணியை செய்து இருக்கிறார் சந்தானம். இவரின் கழுத்தின் கீழே இருக்கும் சதை இவரின் மொரட்டு தீனியை நமக்கு எடுத்து சொல்கிறது. உடம்பை பார்த்துக்காங்க பாஸ். இல்லாட்டி கேப்டன் மாதிரி ஆகிருவீங்க. 


சத்யராஜ் இப்படத்தில்  இளமையாக தெரிகிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார். நயன்தாராவுக்கு அப்பாவாக மட்டுமல்லாமல், அவருக்கு நல்ல நண்பராகவும் தோன்றுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் வழக்கம் போல் மொக்கை வாங்கி உள்ளது. ஆர்யா-நஸ்ரியா பாடல் தவிர எதுவுமே மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை எங்கள் காதை பதம் பார்க்கிறது. ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி என்பவர் தான் இயக்கியிருக்கிறார். காட்சிகளை தெளிவாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். நம்முடைய பழைய வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு தற்போது கிடைக்கும் வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது என்பதை ரொம்பவே தெளிவாக சொல்லி இருக்கிறார். இடை இடையே எனக்கு மௌன ராகம் மற்றும் வாரணம் ஆயிரம் படத்தின் நிறைய காட்சிகள் ஞாபகம் வந்து தொலைத்தது. காதலித்த பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை காதலிக்க பழகிக்கொள்ளுங்கள் என்று ஒரு எதார்த்தமான கதையை எடுத்துக் கொண்டு அதை, அழகாகவும் அதிகம் குழப்பாம்மலும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அட்லி.

டிஸ்கி: படத்தின் இடைவேளையில் அடுத்த இந்த தியேட்டரில் ரீலீஸ் ஆகும் இரு படத்தின் ட்ரைலர் போட்டார்கள். ஒரு தல அஜித்தின் "ஆரம்பம்" , தீபாவளி ரீலீஸ். அடுத்த படம் தான் எங்களுக்கு பெரிய ஆச்சிரியம். பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே யுஸ்ஸில் ரீலீஸ் ஆகும் என்கிற மாயயை உடைத்து எரிவது போல் இருந்தது அந்த ட்ரைலர். அந்த படம் "சுமார் மூஞ்சி குமாரின் "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா". அடுத்த வாரம் இங்கு ரீலீஸ். வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி.

My Rating: 7.0/10.
சமிபத்தில் எழுதியது : B.A Pass (2013)


10 comments:

 1. தல... என்ன நீங்க ? சந்தானத்தோட கழுத்துக்கு கீழ இருக்குற சதையை எல்லாம் பார்த்துட்டு வர்றீங்க !

  ReplyDelete
  Replies
  1. படத்தை கூர்ந்து கவனிச்சு இருக்கோம் தல... :):):)
   அதுவும் இல்லாம முத ரோவுல உட்கார்ந்து பார்த்தனால் சந்தானம் கழுத்து சதை போன்ற குறியீடுகள் ஈசியா தெரிஞ்சுது..

   Delete
 2. தல,
  எனக்கு அப்டியே ஆப்போசிட்.. ஜெய்-நயன் போர்ஷன் தான் எனக்கு பிடிச்சது.. அவங்க கெமிஸ்ட்ரியும் நல்லா இருந்துச்சு. ஆனா ஆர்யா-நஸ்ரியா போர்ஷன் கொஞ்சம் போரடிச்சது. சந்தானம் காமெடி நல்லாருந்துச்சே தவிர அவங்களுக்கு இடையேயான காதல் கெமிஸ்ட்ரியே இல்லாத மாதிரி இருந்துச்சு. அதுவுமில்லாம அந்தக்காதல்ல எந்த புதுமையும் இல்லாம சும்மா பாத்தவுடனே காதல், டூயட்னு வழக்கம்போல இருந்ததால போரடிச்சது..
  சரி வுடுங்க..ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஃபீலிங்க்சு..!! :)

  ReplyDelete
  Replies
  1. படம் பார்த்து முடிஞ்சவுடனே உங்க விமர்சனம் தான் படிச்சேன் தல.. சில எடத்துல எனக்கும் உங்களுக்கும் ஒரே டேஸ்ட்..

   Delete
 3. படம் கண்டிப்பா பார்த்தே தீரனும் போல தல எங்க திரும்பினாலும் ராஜா ராணி எபெக்ட்டு தான் பட் என்னோட first choice ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தான்.. நாளைக்கு போறேன்

  ReplyDelete
  Replies
  1. பார்த்தே தீர வேண்டிய படம் எல்லாம் கிடையாது தல. சுமார் படம் தான். நல்லா ப்ரெசென்ட் பண்ணி இருக்காங்க. நீங்க ஓநாயும் ஆடுகுட்டியும் பார்த்திட்டு விமர்சனம் எழுதுங்க.. நான் இன்னைக்கு பார்க்க போறேன்.

   Delete
 4. இந்த ஊரில் தமிழ் படம் ஓடும் தியேட்டர்களில் பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. சீட் நம்பர் என்று எதுவும் கிடையாது. சீக்கிரம் போய் இடம் பிடித்தால் பின்னாடி சீட் கிடைக்கும், லேட்டாக போனால் முன்னாடி சீட் தான் கிடைக்கும். தெரியாத்தனமாய் நாங்கள் லேட்டாய் போய் விட்டோம். இரண்டாவது ரோவில் தான் சீட் கிடைத்தது.////

  ஹாஹாஹா அங்கையுமா சார்:-)))

  ReplyDelete
  Replies
  1. வாங்க mahesh reddy. யுஸ்ல தமிழ் படம் ஓடுற தியேட்டர் எல்லாம் இரண்டாம் தர தியேட்டர்கள் தான். ரொம்ப மோசமா இருக்கும். :(:(

   Delete
 5. ராஜ்.

  நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.இந்த படம் பார்க்கவில்லை.இருந்தாலும் 3 நாட்களாக இந்த படத்தின் விமர்சனங்களை பதிவுகளில் படித்து வருகிறேன்.சந்தேகமே இல்லாமல் உங்கள் விமர்சனம் தான் டாப்.எல்லோரும் ஒரே மாதிர் எழுதிகொண்டிருக்கும்போது நீங்கள் வேறுபட்டு அசதலை எழுதி இருகிறீர்கள்.
  அதிலும் சத்யனுக்கு காமெடி சுட்டு போட்டாலும் வரது என்பதை மறுபடியும் நிருபித்து இருக்கிறார்,இரண்டு அடி ஹீல்ஸ் போட்டும் அம்மணியால் ஆர்யாவின் தோள்பட்டையை கூட தொட முடியவில்லை போன்றவை செம.
  ஆமாம் தண்ணி ஓவராய் அடித்தால் தான் கழுத்துக்கு கீழே சதை தொங்கும் என்று கேள்விபட்டுளேன்.(கேப்டன்)? நீங்கள் தீனி என்கிறீர்களே?

  பாடல்கள்,ஹிட் ஆகாமலும் இந்த ஜி.வி.பிரகாஷை கட்டிக்கொண்டு எல்லோரும் ஏன் அழுகிறார்களோ தெரியவில்லை.இந்த படத்திற்கு என் சாய்ஸ் யுவன்?

  உங்கள் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனத்திற்கு காத்திருக்கிறேன்.அங்கே ரிலீஸ் உண்டா? இங்கே தமிழ்நாட்டிலேயே ரொம்ப கொஞ்சம் அதுவும் டப்பா தியேட்டர்கள் தான்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜய், மொரட்டு தண்ணி என்பதை தான் அப்படி சொன்னேன். :):):)
   யுவன் ரொம்ப நல்ல சாய்ஸ்.
   ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தியேட்டர்ல பார்க்க வேண்டிய படம். நேத்து தான் பார்த்தேன். எனக்கு தியேட்டர்ல பார்க்கிற பாக்கியம் கிடைக்கல. உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சா மிஸ் பண்ணாம தியேட்டர்ல பாருங்க. உங்க டேஸ்ட்க்கு ரொம்பவே பிடிக்கும். இரண்டரை மணி நேர த்ரில் ரைட்... :):)

   Delete