Thursday, September 19, 2013

மூடர் கூடம் (2013) - கொரியன் படத்தின் தழுவல் !!

வாழ்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்த நான்கு நண்பர்கள் சீட்டு கம்பெனி நடத்தி மக்கள் பணத்தை சுருட்டிய பணக்காரனின் வீட்டில் கொள்ளை அடிக்க செல்லும் நகைச்சுவை கலாட்டா தான் மூடர் கூடம். அடுத்தவனை வாய்க்கு வந்ததை சொல்லி ஓட்டுவது தான் நகைச்சுவை என்று இன்னும் நம்பி கொண்டிருக்கும் மக்கள், இது போன்ற "பிளாக் காமெடி" வகை படங்களையும் ரசிப்பது மாற்று சினிமாவிருக்கான நல்ல தொடக்கம் என்றே நம்ப தோன்றுகிறது. "பிளாக் காமெடி/டார்க் காமெடி" தமிழ்சினிமாவிருக்கு புதுசு. "சூது கவ்வும்" இந்த வகையில் வந்த மாஸ்டர் பீஸ். அதன் பிறகு நான் பார்த்த சிறந்த டார்க் காமெடி படம் "மூடர் கூடம்".


நான்கு பேர் நவீன், குபேரன், சென்ட்ராயன் மற்றும் வெள்ளையன் தமிழ் சினிமா மரபு மாறமால் வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். வாழ்கையில் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற முடிவிருக்கு வந்து குருட்டு தைரியத்தை மட்டுமே முதலீடாக கொண்டு வெள்ளையனின் மாமாவான சீட்டு கம்பெனி முதலாளி வீட்டில், அவர்கள் வெளியூர் சென்ற நேரம் பார்த்து திருட செல்ல, அந்த குடும்பமோ காலை 3 மணிக்கு பதில் மதியம் 3 மணி தான் கிளம்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. வேறுவழியின்றி அவர்களை வீட்டுக்காவலில் பிணைய கைதிகளாய் வைத்து அந்த வீட்டில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்க நினைகிறார்கள். அவர்கள் முயற்சி வென்றதா. அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தார்களா என்பதே மீதி கதை.

நான்கு நண்பர்கள் ஒவொருவரும் ஒரு விதம். சமூகத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டவர்கள், ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்தவர்கள். அனைவரது கடந்த காலத்தையும் பிளாஷ்பேக் முலம் பார்வையாளர்களுக்கு சொல்கிறார்கள். ஒவ்வொரு பிளாஷ்பேக்கையும் வித்தியாசப்படுத்தி ரசிக்கும் படி குடுத்தது கூடுதல் சிறப்பு. வீடு புகுந்து திருடுவதற்கு ஐடியா குடுப்பது நவீன். இவர் தான் படத்தின் இயக்குனர். தீவிர "சிவப்பு" கம்யூனிஸ்ட் பிரியர் போல் தெரிகிறது. போகிற போக்கில் "சிவப்பு" தத்துவங்களை தூவி செல்கிறார். ரொம்பவே எளிமையாக, ரசிக்கும் படி மற்றும் முக்கியமாக புரியும் படி வசனங்களை செதுக்கி உள்ளார். சிவப்பு மீது தீராத வெறுப்பில் இருக்கும் எனக்கே சில வசனங்கள் பிடித்து இருந்தன. அலட்டல் இல்லாத நடிப்பின் முலம் நம் மனதை கவருகிறார். 


"ரெண்டு வருஷம் முன்னாடி ரெண்டு ரூபாய் வித்த டீ இப்ப ஆறு ரூபாய். அதைக் கேட்கவே ஆளில்லை. கஞ்சா 400 ரூபாய்ன்னா மட்டும் தட்டி கேட்டுருவாங்களா?" என்று அறிமுகம் ஆகிறார் சென்ட்ராயன். இவர் பேசும் "பு" வசனங்கள் அதகளம். வெள்ளைக்காரன்கிட்ட தமிழிலே பேசுறீங்களாடா? அப்புறம் ஏன் தமிழன்கிட்ட மட்டும் இங்கிலீஷிலே பு ? என்று இவர் கேட்பது ஞாயமாக படுகிறது. ஆனால் நிறைய காட்சிகளில் இவரின் நடிப்பு ஓவர் டோஸ் மற்றும் எரிச்சலை வரவழைக்கிறது. 

தன்னை பச்சை பச்சையாய் திட்டியவனை விட்டுவிட்டு முட்டாள் என்று சொன்னவனை புரட்டி எடுப்பதிலே தெரிந்து விடுகிறது குபேரனின் வீக்னெஸ் என்னவென்று. குபேரனுடைய இளம் வயது முட்டாள் பிளாஷ்பேக்கை கார்ட்டூனாக காட்டியிருப்பது படத்தின் ஸ்டைலை மாற்றுகிறது. கடைசியாக வெள்ளையன். இவருக்கு மட்டும் காதலி உண்டு. 

படத்தில் வரும் நாய்க்கு கூட ரசிக்கும்படியான பிளாஷ்பேக். ஓவியா, ஜெயப்ரகாஷ், குண்டு சிறுவன், தாவூத்தின் சென்னை பிராஞ்ச்சை எடுத்து நடத்தும் சேட், ஜப் எத்திக்ஸ் திருடன் என்று அனைவருமே சிறப்பாய் நடித்து உள்ளார்கள். குறை என்று சொன்னால் பின்னணி இசை மற்றும் பிற்பாதியில் படத்தின் நீளம்.


 "Attack the Gas Station!" என்கிற கொரியன் படத்துல இருந்து   தழுவி எடுக்க பட்ட நிறைய காட்சிகளை நம்மால் மறைக்க முடியல. படத்தின் மூல கதை,  தலைகீழ் தண்டனை, சென்ட்ராயன் சேட்டைகள், கிளைமாக்ஸ் காட்சி என்று நிறைய காட்சிகள் கொரியன் படத்தை ஞாபக படுத்துகிறது. பிற மொழியில் இருந்து தழுவி எடுக்கிற தமிழ் படங்கள் என்னைக்குமே எனக்கு ஓகே தான். டோரன்ட்ல டவுன்லோட் பண்ணி அந்த கொரியன் படத்தை பார்த்த யாருக்கும் தழுவல்/கதை திருட்டை பத்தி பேசுற யோக்கியதை இல்லை என்பது என்னுடைய உறுதியான எண்ணம். எந்த மொழி படமாக இருந்தாலும் என்னை பொறுத்த வரை பார்வையாளர்களை கதையோடு கட்டி போட வேண்டும், படத்தை சுவாரிசியமாக குடுத்து இருக்க வேண்டும். வெற்றிக்கான மந்திரம் அது தான். அந்த வகையில் மூடர் கூடம் வெற்றி கோட்டை அசால்ட்டாக கடக்கிறான்.

மூடர் கூடம் - வெற்றி கூடம் 
My Rating: 8.0/10.


30 comments:

 1. எப்படியோ "கடந்தால்" சரி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க DD. வசூலில் கடந்த மாதிரி தெரியவில்லை. :):)

   Delete
 2. நாான் ரொம்ப ரசிச்சு பார்த்தேன் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சக்கர கட்டி. சில காட்சிகள் தவிர, எனக்கும் படம் ரொம்பவே பிடித்து இருந்தது.

   Delete
 3. // நம்மால் மறைக்க முடியல.// நம்மால் மறக்க முடியலன்னு சொல்ல வந்தீங்களா? ஆனா நம்மால் மறைக்க முடியல என்பதும் பொருத்தமா தான் இருக்கு தல :-) விகடன் கூட மதிப்பெண் வாரி வழங்கியுள்ளர்கள்... பட் இங்க எங்கயுமே படம் ஓடல.. திருட்டு டிவிடி ல தான் பார்க்கணும் போல

  ReplyDelete
  Replies
  1. கொரியன் படத்தோட தாக்கம் நிறைய தெரியுது, அதை மறைக்க முடியல என்பதை தான் அப்படி சொன்னேன் தல.. இன்னும் கொஞ்சம் கிளியரா சொல்லி இருக்கலாம். :)

   Delete
 4. இப்படம் பெயர் வாங்கும்...கல்லா கட்டாது என்று முதல் நாள் படம் பார்க்கும் போதே நினைத்தேன்.
  என் கணிப்பு பொய்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
  அது நடக்கவில்லை.

  கொரியன் படத்தை பார்த்து விடுகிறேன்.
  தகவலுக்கு நன்றி ராஜ்.

  ReplyDelete
  Replies
  1. கொரியன் படம் நல்ல படம் சார் . ஆனால் மூடர் கூடம் அதை விட சிறப்பாய் இருந்தது.

   Delete
 5. Good Review Thala :)

  Arrambam Trailer review Eppo? Lol

  ReplyDelete
  Replies
  1. வாங்க வருண். ட்ரைலர் ரிவியூ....!!!!! கொஞ்சம் யோசிச்சு எழுதலாம் தல.

   Delete
 6. நல்ல விமர்சனம்..இன்னும் பார்க்கலை..போகணும்..
  அதுக்குள்ள போயிடக்கூடாது தியேட்டரை விட்டு....

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜீவா. படம் பாருங்க, உங்க ரசனைக்கு ரொம்பவே பிடிக்கும்.

   Delete
 7. so far no negative remarks for this movie !!!

  appo partuudalam raj :))

  ReplyDelete
 8. ராஜ்,

  தமிழில் இதுக்கு முன்னர் செல்வா நடித்த (முகமூடியில் கூட "மாஸ்டராக நடிச்சவர்) கோல்மால் என்ற ஒரு படமும் வந்துள்ளது,ஆங்கிலத்தில் நிறைய இருக்கு, மூடர் கூடம் கய் ரிட்சியின் படங்களின் கலவையாக இருக்கு,LOCK, STOCK AND TWO SMOKING BARRELS , snatch ஆகியப்படங்களின் கலவையாக பல படங்கள் இந்தியில்,தமிழில் வந்திருக்கு.

  இப்போலாம் ஒரே படத்தில இருந்து சுடாம ,சிறந்த காட்சிகளை மட்டும் தேர்வு செய்து கலந்து கட்டி அடிச்சு தமிழில் புதுமைனு நல்லப்பேரு வாங்கிடுறாங்க. மூடர் கூடம் படத்தின் மேக்கிங் ஸ்டைல் ,நிறைய கேரக்டர் ,கொஞ்சம் முட்டாள் தனமாக ,ஆளுக்கு ஒரு கதை என்ற ஸ்டைலே கய் ரிட்சியின் படமாக்கல் பாணியே.

  # // டோரன்ட்ல டவுன்லோட் பண்ணி அந்த கொரியன் படத்தை பார்த்த யாருக்கும் தழுவல்/கதை திருட்டை பத்தி பேசுற யோக்கியதை இல்லை என்பது என்னுடைய உறுதியான எண்ணம்.//

  ஆனால் தனிப்பட்ட பயன்ப்பாட்டிற்கு செய்வதால் ,வணிகப்பலன் நமக்கு இல்லை, அதை வைத்து பணம் சம்பாதிப்பது என்பது " எக்ஸ்பிளாய்டேஷன்" எனவே டோரண்டில் படம் பார்ப்பதற்கும், அப்படி பார்த்துவிட்டு படம் எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கு.

  பீட்சா படமெல்லாம் சைலண்ட் ஹவுசின் மாறுபட்ட வடிவத்தின் பிரதி, நம்ம ஊருக்கு ஏத்தாப்போல காதல் , கொஞ்சம் காமெடினு சேர்த்துக்கிட்டாங்க, இப்போ பாடல்களை மட்டும் இல்லை படங்களையும் ரிமிக்ஸ் செய்துடுறாங்க :-))

  ReplyDelete
  Replies
  1. வாங்க வவ்வால். டோரண்டில் படம் பார்த்தா எப்படி நஷ்டம் இல்லைன்னு சொல்வீங்க ? படத்தை தயாரிச்சவனுக்கு நஷ்டம் தான், ஆனா அது ரொம்ப சின்ன லெவல் இருக்கலாம், ஆனா நஷ்டம் இல்லைன்னு சொல்லவே முடியாது. நெட் பிளிக்ஸில் இருக்கிற ஒரு படத்தை அதற்கான பணத்தை குடுக்காமல் டோரென்ட் மூலமா பார்க்கிறதும் என்னை பொருத்தவரைக்கும் தப்பு. நெட்டுல ப்ரீயா இருக்கு, நான் பார்க்கிறேன்னு சொன்னா அது எப்படிங்க சரி ஆகும் ? நெட்டுல அனாமத்தா கிடைக்கிற கதையை இயக்குனர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப மாத்தி தமிழுக்கு குடுகிறாங்க. எந்த படைப்பையும் அதற்கான பணத்தை குடுக்காமல் பார்பது தப்பு தான்.
   தமிழ் இயக்குனர்கள் அதே தப்பை கொஞ்சம் பெரிய லெவல்ல பண்ணுறாங்க. மூல கதைக்கான கிரெடிட் அல்லது பணத்தை குடுக்காமல் எடுக்கிறாங்க. முதல் டோரென்ட்ல படம் பார்க்கிற மக்கள் மாறட்டும், அப்புறமா இயக்குனர்களை மாத்துவோம் ..:):)
   //பீட்சா படமெல்லாம் சைலண்ட் ஹவுசின் மாறுபட்ட வடிவத்தின் பிரதி, நம்ம ஊருக்கு ஏத்தாப்போல காதல் , கொஞ்சம் காமெடினு சேர்த்துக்கிட்டாங்க,///
   திறமை இருக்கிற ஆளுங்க மூல கதையை மாத்தி நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி குடுத்து ஜெய்கிறாங்க.. :):)

   Delete
  2. இடுகைக்கு நன்றி.

   //டோரண்டில் படம் பார்த்தா எப்படி நஷ்டம் இல்லைன்னு சொல்வீங்க ? படத்தை தயாரிச்சவனுக்கு நஷ்டம் தான், ஆனா அது ரொம்ப சின்ன லெவல் இருக்கலாம், ஆனா நஷ்டம் இல்லைன்னு சொல்லவே முடியாது. //

   தல. You are so funny. நான் ரெண்டு படத்தையுமே இணையத்தில் தரவிறக்கித்தான் பார்த்தேன். டோரண்ட்டாய நமஹ! எங்கூர்ல மூடர் கூடமும் வெளியாகல, "Attack the gas station"-னும் வெளியாகல. வெளியீட்டாளர் இருவரும் எங்கூர்ல வெளியிடலைன்னா ஒன்னும் குடி முழுகிடாதன்னு நினைக்கையில் ஒன்னும் செய்வதற்கில்லை. ஆக என்னைப் பொருத்தவரை இது வள்ளுவப் பெருந்தகை சொன்ன 'யாதொன்றும் தீமை இலாத செயல்'.

   "Attack the gas station" பார்த்தபின் நவீன் மீதான மதிப்பு குறைந்துவிட்டது. ஏனென்றால், 30 முழத்துக்கு நன்றி சொன்னவர் Park Jeong-woo மற்றும் Kim Sang-jin இருவருக்கும் நன்றி சொல்லியிருந்தா மன்னித்திருப்பேன்.

   அவர் அடிவானத்தில் தோன்றிய விடிவெள்ளி என நினைத்திருந்தால் இவரும் இன்னொரு copycat எனும்போது சலிப்பே மேலிடுகிறது.

   Delete
 9. நானும் படம் பாத்திட்டேன்.. எனக்குப் பிடிச்சிருந்தது... ஆனால் எல்லாருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே....

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்கூல் பையன். கண்டிப்பா எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி தான் தெரியுது. :):)

   Delete
 10. ரொம்ப நாளைக்கப்பறம் படம் நல்ல இருக்குன்னு உங்க கிட்டயிருந்து பாசிடிவ் விமர்சனம் வந்திருக்கு :-). விகடனும் 50 மார்க் போட்டிருக்கு...

  எனக்கும் உங்களைப்போலத்தான். தழுவல் பத்தி கவலைக் கிடையாது... படம் நல்லாயிருக்கா அதுபோதும் விமர்சனமே படம் பார்க்க தூண்டுது...இந்த வாரம் பாத்திடவேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க Manimaran. நீங்களும் என்னையை போல் தான். என்னக்கும் நல்ல படங்கள் தான் தேவை. அத்தோட மூலத்தை ஆராய்ந்து ஆராய்ச்சி கட்டுரை எழுதுவதில் விருப்பம் கிடையாது. :):):)

   Delete
 11. படம் இன்னும் இங்கயே ரிலீஸ் ஆகலியே தல, அதுக்குள்ள எப்டி நீங்க பாத்தீங்க ? டாரண்டா..?!! :P :P :)

  ReplyDelete
  Replies
  1. ஆமா தல. இந்த படத்தையும் கொரியன் படத்தையும் டவுன்லோட் பண்ணி தான் பார்த்தேன்.

   Delete
  2. //டோரன்ட்ல டவுன்லோட் பண்ணி அந்த கொரியன் படத்தை பார்த்த யாருக்கும் தழுவல்/கதை திருட்டை பத்தி பேசுற யோக்கியதை இல்லை என்பது என்னுடைய உறுதியான எண்ணம்.

   App neengalum indha vimarsanam poda arugathai illathavar ..

   Delete
  3. வாங்க jsksathiya. எனக்கு கொரிய படமோ, ஈரானிய படமோ கவலை கிடையாது. நல்ல தமிழ் படங்கள் தான் தேவை. இது கொரிய படத்தின் தழுவல் என்றாலும் ரொம்ப நல்ல படம்.
   நான் இருப்பது யுஸ், இங்கு ரீலீஸ் ஆகும் எல்லா தமிழ் படங்களையும் $15 செலவு செய்து முதல் நாள் பார்த்து விடுவேன். ரீலீஸ் ஆகாத படங்களை டவுன்லோட் செய்து தான் பார்க்க முடியும். :):):)

   Delete
 12. padam romba nallrunthuthu..but ore oru varuththam thaan..ippdi patta padam tamil naatla romba naal ooda maattenkuthennu thaann...

  ReplyDelete
  Replies
  1. வாங்க jeyam. பாக்ஸ் ஆபிஸ் கலெக்க்ஷன் கூட சுமார் என்று தான் செய்தி படித்தேன். இது போன்ற படங்கள் நல்ல மார்க்கெட்டிங் திறமை உள்ள தயாரிப்பாளரிடம் மாட்ட வேண்டும். அப்பொழுது தான் வசூல் செய்யும். :)

   Delete
 13. உங்கள் தளம் - இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  இணைப்பு : http://blogintamil.blogspot.in/2014/02/blog-post.html

  ReplyDelete