Saturday, September 28, 2013

B.A Pass (2013) - டெல்லி சவிதா ஆண்ட்டி ???

'Delhi Noir' என்ற சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்ற The Railway Aunty என்கிற கதையை தழுவி எடுக்க பட்ட படம் தான் BA Pass. வேற்று மொழிகளில் மட்டுமே சாத்தியமான "உலக சினிமா" கதைகளை ஹிந்தியில் குடுக்க விளைந்து, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். நான் அறிந்தவரையில் இந்தியாவில் சிறுகதைகளை தழுவி எடுக்க பட்ட படங்கள் மிகவும் குறைவே. அப்படியே எடுக்க பட்டு இருந்தாலும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தை திரையில் கொண்டு வருவது மிகவும் கடினம். வாசிப்பு அனுபவம் தரும் சுகத்தை கமெர்ஷியல் திரைப்படங்களினால் குடுக்க முடியாது என்கிற என்னத்தை உடைத்த எறிந்தது BA Pass. சிறுகதையின் மூலம் கெடாமல், அதன் தாக்கத்தை கொஞ்சமும் குறைக்காமல், சரியாய் சொன்னால் அதன் வீரியத்தை கூட்டி திரையில் விருந்து படைத்தது இருக்கிறார் இயக்குனர் அஜய் பாஹ்ல்.


 டெல்லியில் நடைபெறும் கதையின் கதாநாயகன் முகேஷ். பெற்றோரை இழந்த முகேஷ் தன் படிப்பிருக்காக டெல்லி வந்து தன் அத்தை வீட்டில் தங்குகிறான். தன் இரண்டு தங்கைகளை ஹாஸ்டலில் தங்க வைத்து விட்டு அத்தை வீட்டில் அவர்கள் சொல்லும் எடுபுடி வேலைகளை செய்து தன் படிப்பையும் தொடர்கிறான். அந்த வீட்டிருக்கு வரும் சரிகா ஆண்ட்டியின் அறிமுகம் அவனுக்கு கிடைக்கபெறுகிறது. ஆப்பிள் கூடை வாங்க சரிகா வீட்டிருக்கு போகும்போது ஒரு பலவீனமான தருணத்தில் முத்தத்தில் ஆரம்பித்து உறவில் போய் முடிகிறது.

 அதன் பின்பு முகேஷ் சரிகா ஆண்ட்டி சொல்லும் வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறான். அந்த வேலை இந்தியாவிருக்கு அதிகம் பரிச்சியம் இல்லாத "ஜிகோலோ" வேலை. கிளியராக சொல்ல வேண்டுமென்றால் ஆண் விபச்சாரம். பணம் பெற்றுக்கொண்டு பெண்களின் தாம்பத்திய தேவைகளை பூர்த்தி செய்யும் வேலையை செய்ய ஆரம்பிக்கிறான். அந்த வேலை அவன் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது, எதில் போய் முடிகிறது என்பதை கொஞ்சமும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதார்த்தமாய் சொல்கிறார்கள். முடிவு பார்பவர்களை உலுக்கி எடுத்து விடும் என்பதில் மட்டும் எனக்கு சந்தேகமேயில்லை. 


முதலில் இது போன்ற கதையை தேர்வு செய்த இயக்குனர் பாஹ்ல்க்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கத்தி மீது நடப்பது போன்ற கதைக்களம். இம்மியளவு பிசகினாலும் இரண்டாம்தர B கிரேடு படத்தில் சேர்ந்து விடும். சரிகா ஆண்ட்டி சவிதா பாபியாய் மாறி விட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பே தராமல் தேவையான அளவு மட்டுமே கவர்ச்சியை காண்பித்து அட்டகாசமான உலக சினிமாவை குடுத்து இருக்கிறார் இயக்குனர். டெல்லியின் சமூக அவலங்கள் அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார். படம் நகர வாழ்கையில் பெருகி வரும் "கே" கலாச்சாரம், ஆண் எஸ்கார்ட்டை, நம்பிக்கை துரோகம் என்று பல விஷயங்களை தொடுகிறது. 
  
முகேஷாக நடித்த இளைஞரின் பெயர் சதாப் கமல். அட்டகாசமான நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார். முதல் பாதி முழுக்க இவரின் வாய்ஸ் ஓவரில் தான் படம் நகருகிறது. டெல்லியின் வேகதிருக்கு ஈடு குடுக்க முடியாமல் இவர் முதிலில் தடுமாறி, ஒரு கட்டத்தில் சரிகாவின் மாய வலையில் விழுந்து, பிறகு சொன்ன வேலைகள் வேண்டா வெறுப்பாய் செய்து, பிறகு அதே வேலையை ரசித்து செய்கிறார். இவர் செஸ் மற்றும் செக்ஸில் ஒரு சேர தேர்ச்சி பேரும் காட்சி கவிதை. சரிகாவின் ட்ரைனிங் மூலம் கன்றுகுட்டியில் இருந்து பொலி காளையாய் மாறுகிறார். விரக்தியின் உச்சியில் கேவாக மாறி நைட் அவுட் போய் விட்டு வந்து காலையில் நடக்க முடியாமல் நடந்து வரும் காட்சியில் நம்மால் பரிதாப படாமல் இருக்க முடியாது.
  

சரிகாவாக நடித்து இருப்பவர் "ஷில்பா சுக்லா". ஆம்பிளை முக தோற்றம் கொண்டவர் போல் எனக்கு தோன்றியது. முகம் மட்டுமே அப்படி, ஆனால் நடிப்பில் குறை சொல்ல முடியாத படி செய்து இருக்கிறார். கண்களில் ஒரு வித போதையுடன் தான் படம் முழுக்க வலம்வருகிறார். பின்னணி இசை பிரமாதம். துணை கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சரிகாவின் வீட்டில் இருக்கும் பாட்டி, முகேஷின் செஸ் பார்ட்னர், கணவன் மரண படுக்கையில் இருக்கும் போது முகேஷை தேடி வரும் ஒரு ஆண்ட்டி என் அணைத்து கதாபாத்திர தேர்வும் அருமை. ட்ரைலர் மற்றும் படத்தின் ஸ்டில்ஸ் பார்த்து விட்டு கில்மா படம் அல்லது சூப்பர் மேட்டர் படம் என்று நம்பி போனால் நீங்கள் ஏமாற மாட்டீர்கள். படத்தில் செக்ஸும் உள்ளது, அழுத்தமான கதையும் உள்ளது. ஆனால் செக்ஸ் தீனிக்க பட்டது இல்லை. நல்ல சினிமாவை பார்க்க விரும்புவர்கள் கண்டிப்பாய் பார்க்கலாம்.

The Railway Aunty சிறுகதையை தமிழில் படிக்க மதுரை மல்லி 
ஆங்கிலத்தில் படிக்க Delhi Noir

My Rating: 7.8/10.


8 comments:

  1. தல,
    டைட்டில பாத்ததும் ஒரு நிமிசம் மெரண்டுட்டேன்.. அப்பறம் தான் உள்ள படிச்சுப்பாத்தா இது ஒரு படம்னு தெரியுது..!! படத்தோட ஸ்டில்லுகளே சும்மா நின்னு வெளையாடுதே..!! அப்போ கண்டிப்பா பாத்திர வேண்டியதுதான்.. :) :)
    (ஒலகப்படம் பாக்கவைக்க என்னலாம் பண்ண வேண்டி இருக்கு - உங்க மைண்டு வாய்ஸ்.. :) :) )

    ReplyDelete
    Replies
    1. பாருங்க பாஸ்.. படம் வெறும் ஒன்ரை மணி நேரம் தான்'. கண்டிப்பாய் உங்களுக்கு பிடிக்கும்.

      Delete
  2. பார்க்க வேண்டி படம் தான்..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க பாஸ்.

      Delete
  3. பதிவின் தலைப்பும் எழுதியிருக்கும் விஷயமும் நேர்எதிராக இருப்பதாகத் தோன்றுகிறது. நேற்று தலைப்பை மட்டும் பார்த்து விட்டு, படம் நன்றாகத்தானே இருந்தது, பிறகு ஏன் நண்பர் சவிதா பாபியுடன் சம்பந்தப்படுத்தி எழுதியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது வாசித்தப்பிறகு தான் தெரிகிறது... :)

    ReplyDelete
    Replies
    1. படத்தையே அறிமுகம் உங்க "pfools" மூலமா தான் கிடைச்சது. என்ன பண்ணுறது தல, தினத்தந்தி மாதிரி தலைப்பு வச்சா தான் ஆளுங்க வராங்க. :):):) ஆனா உண்மையிலே ரொம்ப நல்ல படம். அறிமுகத்துக்கு நன்றி.

      Delete
  4. படம் பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்றேன்

    ReplyDelete
  5. திடீரென்று (எழுதிப் பல மாதம் ஆன) என் பதிவுக்கு 150 ஹிட்ஸ் இருப்பதைப் பார்த்ததும் ஒன்றுமே புரியவில்லை. பிறகு டாப் சோர்ஸ் பார்த்தபோது அதில் கேபிள் சங்கர் மற்றும் உங்கள் பதிவுகள் வழியாக என்று தெரிந்தது. கேபிள் பதிவில் லிங்க் எதுவும் இல்லை. பின்னூட்டத்தைப் பார்த்தபோதுதான் நீங்கள் அவர் பதிவிலும், உங்களது இந்தப் பதிவிலும் என் மொழிபெயர்ப்புக்கு லிங்க் தந்திருப்பது தெரிந்தது! நன்றி. (சாரு இந்தப் படம் பற்றி எழுதுவார் என்று எதிர்பார்த்தேன், அவர் எழுதவில்லை. ஒருவேளை அவர்தான் இப்போது எழுதியிருப்பாரோ என்றுதான் முதலில் நினைத்தேன்!)

    ReplyDelete