Wednesday, February 04, 2015

என்னை அறிந்தால் (2015) - எமோஷனல் த்ரில்லர்

 தன் காதல் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் படலத்தில் அஜித் எடுக்கும் பல அவதாரமே என்னை அறிந்தால்.  அஜித்தின் ரசிகர்களை நன்கு அறிந்து, அவர்களுக்கு அஜித்தை எப்படி வழங்க வேண்டுமோ அப்படி வழங்கி ஹாட்ரிக் வெற்றியை அஜித்துக்கு வழங்கி இருக்கிறார் கௌதம்மேனன். அஜித்தின் கேரியரில் என்னை அறிந்தால் மிக பெரிய திருப்புமுனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிங் ஆப் ஓபனிங் என்கிற பட்டதை மீண்டும் தக்க வைத்து உள்ளார் ஆசை நாயகன்.


 சத்யதேவ் (அஜித்) நேர்மையான் காவல் துறை அதிகாரி. அண்டர்கவரில் இருக்கிறார். இந்த பணியில் இருக்கும் போது விக்டர் (அருண் விஜய்) நண்பன் ஆகிறான். சந்தரபவசத்தில் சத்யதேவ் எடுக்கும் சில முயற்சிகளால் விக்டர் காயம் அடைகிறான். வழக்கமான கெளதம் படத்தில் வருவது போல், கடமை தவறாத காப் காதலில் விழுகிறார். வே.விளை போல் டைவர்ஸ் ஆகி பெண் குழந்தையுடன் வசிக்கும் ஹேமானிக்கா (திரிஷா) மீது காதல் கொள்கிறார். திருமணத்தின் போது ஹேமா கொல்ல பட, இந்த கொலைக்கான காரணத்தை தேவ் தேடி போகும் போது பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது வருகிறது. இறுதியில் ஹேமாவின் மரணத்திருக்கு தேவ் பழி வாங்கினாரா இல்லையா என்பதை விறுவிறுப்பாய் சொல்லி இருக்கிறார் கௌதம்மேனன்.அஜித்: வெள்ளை தலைமுடியுடன் கோட் அணிந்து கெக்கே பிக்கே என்று ஆடிய வீரம் படத்தையே ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்தார்கள். இதில் இளமையான ஸ்டைலிஷான அஜீத். தாடியுடன் கரடுமுரடான கெட்டப், தாடி இல்லாமல் கறுத்த தலைமுடி மீசையுடன் ஒரு அமுல்பேபி லுக், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் மீசையில்லாமல் ஒரு அதிரடி தோற்றம். ரசிகர்கள் வலிக்க வலிக்க விசிலடித்தே ஓயப்போகிறார்கள். ஸ்டைல் மட்டும் இல்லாமல் நல்ல தரமான நடிப்பையும் வழங்கி உள்ளார். படத்தின் பாதி பாரத்தை ஒத்தை ஆளாய் தாங்கி பிடித்து இருக்கிறார். கெளதம் போன்ற நல்ல தரமான டைரக்டருடன் அஜித் இணைவது அவரது ரசிகர்களுக்கு மிகவும் நல்லது. காக்க காக்க படத்தில் அஜித் தான் நடித்து இருக்க வேண்டியது, அதில் மிஸ் பண்ணியதை இப்பொழுது மொத்தமாய் பிடித்து இருக்கிறார்.

அருண் விஜய்: வில்லன் கதாபாத்திரம். பொதுவாக பிரபலமாக இருக்கும் வில்லன் நடிகரைத்தான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள். இதில், ஹீரோவாக நடித்துவரும் அருண் விஜய்யை வில்லனாக்கியிருக்கிறார் கௌதம். இந்தத் தேர்வே, படத்தில் வருவது வழக்கமான வில்லன் கதாபாத்திரம் இல்லை என்பதை உணர்த்துகிறது. அதற்கேற்ப சிக்ஸ்பேக் வைத்து நாயகனின் நண்பனாக வருகிறார் அருண் விஜய். அவர் ஏன், எப்படி எதிரியாகிறார்? இந்தக் கேள்விகள் உங்களை நிச்சயம் சீட் நுனியில் உட்கார வைக்கும்.திரிஷா: கெளதமின் படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் மிகவும் அழகாக செதுக்க பட்டு இருக்கும். ஹேமானிக்காவும் அதருக்கு விதிவிலக்கு அல்ல. பெண்களை எப்படி காட்சி படுத்த வேண்டும், என்பதில் கெளதம் மகா திறமைசாலி. சமீரா ரெட்டியை கூட மிக அழகாய் காட்டிய கெட்டிக்காரர் கெளதம், திரிஷாவை நன்றாக பயன்படுத்தி உள்ளார். அனுஷ்காவிற்க்கு பெரிய ரோல் இல்லை.

கெளதம்: அஜித்தின் கதாபாத்திரத்தை அறிந்து கொண்டு செம்மையாய் செதுக்கி இருக்கிறார் கௌதம். தனக்கென்று தனி ஸ்டைல் உடையவர். ஸ்டைலிஷான மேக்கிங் அவருக்கு கைவந்த கலை. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்கள் அந்த நடிகர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இல்லாமல் கௌதமின் கிரியேடிவிட்டியுடன் இருந்ததே அதற்கு சான்று. என்னை அறிந்தால் படத்திலும் அந்த முத்திரைதான் மற்ற அஜீத் படங்களிலிருந்து அதனை வேறுபடுத்தி காட்டி இருக்கிறது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா படத்தின் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது என்பதில் கௌதமுக்கு உதவியிருக்கிறார்.கௌதம், ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணி. மின்னலேயில் அறிமுகமான இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இசை பங்களிப்பை ஆற்றியுள்ளது. அவர்கள் பிரிந்துபோனது துரதிர்ஷ்டம். இனி ஒருபோதும் இணைய மாட்டார்கள் என்று நினைத்தவர்களை என்னை அறிந்தால் ஒன்றிணைத்துள்ளது. நான்கு டியூன்களை வைத்து இன்னும் எத்தனை வருஷங்கள் தான் ஒப்பு எத்துவாரோ. ஆனால் இந்த முறை அதிசியமாய் பின்னணி இசை நன்றாக பொருந்தி இருக்கிறது.

என்னை அறிந்தால் - எமோஷனல் த்ரில்லர்

My Rating : 8.5


10 comments:

 1. ஆக.. படம் ஏமாற்றாது என்று சொல்கிறீர்கள்... நல்லது.. இன்று இரவுதான் படம் பார்க்கப் போகிறேன்... பார்த்துவிட்டு எழுத வேண்டும்..

  ReplyDelete
 2. சூப்பர் தல... இதை படிச்சிருந்தா என்னோட விமர்சனம் எழுதியே இருக்க மாட்டேன்... :-)

  ReplyDelete
 3. வரும் ஞாயிறு செல்கிறோம்... நன்றி ராஜ்...

  ReplyDelete
 4. நல்ல விமர்சனம். ஆனால் இந்த படத்தில் கௌதம் பழைய மாவை வைத்து புது இட்லியை வாத்துருக்கிறார். த்ரிஷா அஜித்தின் காதலை மட்டும் காட்டியிருந்தால் ஒரு அருமையான காதல் கதையாக வந்திருக்க கூடும் என்பது என் கருத்து. அஜித் தன் பங்கிற்கு அழகாக செய்திருக்கிறார் அவர் அழுகின்ற காட்சிகள் தாமரை இலை நீர்போல் மனதில் ஒட்டவில்லை. கௌதம் படத்தின் வில்லன் எப்போதும் கத்திக்கொண்டே இருப்பது போர் அடிக்கிறது.

  ஆனால் மகள் தந்தை உறவினை மிகவும் அழகாக சித்தரித்திருந்தது எனக்கு பிடித்தது. போலீஸ்காரனின் அன்றாட வாழ்கையும் நம்முடைய வாழ்க்கைபோல் இருக்கும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். அஜித் படங்களின் இது சற்றே புதிதாக இருப்பது ஒரு மகிழ்ச்சியை தந்தாலும் கௌதம் ஏதாவது புதிதாக தந்திருப்பாராயின் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்பது என் கருத்து.

  எனது வலைப்பூ: http://orukozhiyinkooval.blogspot.in/

  ReplyDelete
 5. After study a few of the blog posts on your website now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark website list and will be checking back soon. Pls check out my web site as well and let me know what you think.
  Funny Bloggers

  ReplyDelete
 6. நல்ல விமர்சனம். தங்கள் பகிர்வுக்கு நன்றி

  latha

  ReplyDelete