Sunday, January 08, 2012

A Fistful Of Dollars -(1964) செர்ஜியோ லியோனியின் டாலர்ஸ் ட்ரையாலஜி பாகம் -2

போன பதிவுல For a Few Dollars More அப்படிங்கற வெஸ்டர்ன் படத்தை பத்தி பார்த்தோம். For a Few Dollars More “டாலர்ஸ் ட்ரையாலஜி”-ல (Dollars Triology- A Fistful of dollars, Few dollars more, Good bad and ugly) வந்த ரெண்டாவது படம். டாலர்ஸ் ட்ரையாலஜி”-ல வந்த முத படம் “A Fistful Of Dollars”. இன்னைக்கு இந்த படத்தை பத்தி நம்ப பார்போம். படத்தோட டைரக்டர் செர்ஜியோ லியோனி (Sergio Leone). இவரு தான் “டாலர்ஸ் ட்ரையாலஜி”-ல வந்த முனு படத்தையும் எடுத்தவர். முனு படத்திலும் ஹீரோ கிளென்ட் ஈஸ்ட் வூட்(Client East Wood). வெஸ்டர்ன் படங்கள் எடுக்கிறதுல்ல செர்ஜியோவை மிஞ்ச ஆளு இல்லைன்னு சொல்லலாம்.இவரு டாலர்ஸ் ட்ரையாலஜி எடுக்கறதுக்கு முன்னாடி எத்தனையோ வெஸ்டர்ன் கெள்-பாய் படங்கள் வந்து இருந்தாலும்,A Fistful Of Dollars படம் தான் வெஸ்டர்ன் படங்களின் முன்னோடி அப்படின்னு சொல்லலாம். அப்படி என்ன தான் பெருசா படம் எடுத்துட்டார்ன்னு இப்போ நம்ப பார்போம்.
ஜப்பான்ல அகிரா குரசோவா அப்படின்னு ரொம்ப ரொம்ப பெரிய டைரக்டர் இருந்தார். அவரு சாமுராய்கள் எனப்படும் ஜப்பானிய போர் வீரர்களை பற்றிய படங்களை தொடர்ச்சியாக எடுத்து தள்ளிட்டு இருந்தார். அவரு படங்கள் எல்லாமே டாப் உலக சினிமா லிஸ்ட்ல கண்டிப்பா இருக்கும். அகிராவின் மிக முக்கிய படங்கள்னா அது " ரோஷோமான்" (Rashomon– 1950), “செவென் சாமுராய்" (Seven Samurai -1954) , “யோஜிம்போ” (Yojimbo – 1961), சஞ்சுரோ (Sanjuro- 1962) தான். இன்னும் நிறைய காவியங்களை எடுத்து தள்ளி இருக்கிறார், ஆனா அவரு சாமுராய்களை மைய படுத்தி எடுத்த முக்கிய படம்னா அது இந்த நாலு படம் தான். "பாய்ஸ்" படத்துல பரத் ஜெனிலியாகிட்ட சீன் போடுறதுக்கு “குரசோவா, கோடார்ட் படங்களாம் பார்த்து இருக்கீங்களா ??” அப்பிடின்னு கேட்பார்.. ரொம்ப நாளா அது சே குவாரோன்னு நான் நினைச்சுகிட்டு இருந்தேன். என்னடா சுஜாதா சம்பந்தமே இல்லாம சே குவாரோ பத்தி சொல்லுராருன்னு நினைச்சுடேன். கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அதுவும் இணையத்தின் அறிமுகத்தின் அப்புறம் தான் அது அகிரா குரசோவா, ஜப்பானின் மிக பெரிய ஜாம்பவான்னு தெரிந்தது. குரசோவாவின் படங்கள் எல்லாம் பெரிய ஹிட்டு ஆனதுனாலே ஹாலிவுட்காரன் குரசோவா டைப் படங்களை அவங்க ஊருல எடுக்கனும்னு ஆசை பட்டு எடுத்த படங்கள் தான் வெஸ்டர்ன் கெள்-பாய் படங்கள், முக்கியமா டாலர்ஸ் ட்ரையாலஜி.
ஹோட்டல்காரன் & ஈஸ்ட் வூட் 
இப்போ திரும்பவும் செர்ஜியோ லியோனி. அகிராவின் “யோஜிம்போ” (Yojimbo – 1961) படத்தின் இன்ஸ்பிரேஷன் தான் A Fistful Of Dollars. இன்ஸ்பிரேஷன் அப்படின்னு சொல்லறதை விட திரைக்கதை காப்பின்னு சொல்லலாம். செர்ஜியோவும், நம்ப ஊரு டைரக்டர் மாதிரி வழக்கம் போல கிரெடிட்ல அகிராவிற்க்கு நன்றின்னு போடல. A Fistful Of Dollars ஹிட்டு ஆகாட்டி அகிரா மன்னிச்சு விட்டு இருபார், ஆனா படம் பெரிய ஹிட்டு ஆனதுனாலே கேஸ் போட்டு $100,000 அபராதமும், படத்தின் வசூலில் 15% வாங்கிட்டார். செர்ஜியோ A Fistful Of Dollars படத்தை எடுத்தது பெரிய கதை. ரொம்ப கம்மி பட்ஜெட்டில் படத்தில் நடித்த நடிகர்களுக்கு காஸ்ட்யூம் கூட வாங்கி குடுக்க முடியாத நிலைமையில் படத்தை எடுத்தார் செர்ஜியோ. ஸ்பெயினில் அஞ்சு ஆறு மர வீடு செட் போட்டு, ரொம்பவே சிக்கனமான படமா இந்த படத்தை எடுத்தார் செர்ஜியோ. அதுவும் இல்லாமல் செர்ஜியோ முதல இந்த படத்தை இத்தாலிய மொழியில தான் எடுத்தார். படத்தின் வெற்றிக்கு பிறகு இதை இங்க்லீஷ்ல டப் பண்ணினார். அதனால் இந்த படத்தை இங்க்லீஷ்ல பார்க்கும போது நமக்கு ஏதோ விஜய் டிவியில டப்பிங் படம் பார்க்குற பீல் வரும். அப்புறம் முக்கியம்மா இந்த படம் தான் ஹாலிவுட்க்கு ஈஸ்ட் வூட் என்ற மாமேதையை அறிமுக படுத்திய படம் இது.
கிளைமாக்ஸ் டுயல் (duel) சண்டை
சுருக்க சொல்லனும்னா இந்த படம் தமிழ்ல வந்த “சேது” மாதிரி. எப்படி பாலாவுக்கும், விக்ரமுக்கும் பெரிய பிரேக் குடுதிச்சோ, அதே போல செர்ஜியோவுக்கும் ஈஸ்ட் வூடிக்கும் இப்படம் ஒரு திருப்புமுனை என்றே கூறலாம். அகிராவின் யோஜிம்போவுக்கும் செர்ஜியோவின் A Fistful Of Dollars-க்கும் என்ன என்ன ஒற்றுமை இருக்குனு பார்போம். யோஜிம்போவில் ‘சமுராய்’ என்றால் A Fistful Of Dollars-யில் ‘கெளபாய்’. அங்கே சாமுராய் வாள், இங்கே துப்பாக்கிச் சண்டை. கதை கூட ஒன்று தான். இப்போ A Fistful Of Dollars படத்தின் கதையை மட்டும் பார்போம்.
நாடோடியாக அலைந்து திரியும் கெளபாய் ஈஸ்ட் வூட். படத்தில் அவருக்கு பெயர் இருக்காது. அவரு குதிரை எந்த பக்கம் போகுதோ அந்த ஊருக்கு அவர் போவாரு. அப்படி வர ஊரு தான் சான் மிகுவேல் (San Miguel). அந்த ஊருல ரெண்டு கேங், ரெண்டு கும்பலும் கொள்ளைகாரர்கள் மற்றும் கடத்தல்காரர்கள். யாருமே நல்லவங்க கிடையாது. ரெண்டு கேங் ஊரை ரொம்ப கொடுமை படுத்துறாங்க. ஊரு என்றால் அது அந்த அஞ்சு மர வீடு தான். அந்த கொடுமை எல்லாம் பார்த்த ஈஸ்ட் வூட் இரண்டு கூட்டத்தையும் அழிக்கப்போவதாக சொல்லி அதே ஊருல ஒரு ஹோட்டல்ல தங்குறார். ஈஸ்ட் வூட் கூறுவதைக் கேட்டு முதலில் அவனை அவநம்பிக்கையுடன் பார்க்கும் ஹோட்டல்காரன், பின்பு அவனுக்கு உதவத் தொடங்குகிறார். அந்த கொள்ளை கூட்டத்திலேயே ஒருவனாகச்சேர்ந்து, அவர்களின் நம்பிக்கைக்கு உகந்தவனாக மாறி பின்பு அவர்களை அழிப்பதுதான் கதை. போக்கிரி படத்துல விஜய் பண்ணுற மாதிரின்னு நீங்க நெனச்ச அது ரொம்ப தப்பு. இந்த படத்துல ஈஸ்ட் வூட் பண்ணுறது “வேற..வேற..” சும்மா காட்டு..காட்டுன்னு காட்டுவாரு. மிகவும் விறுவிறுப்பான படம் தவறாமல் பாருங்க.
வில்லன் (Gian Maria) வித் Winchester கன்
படத்துல வில்லன் கதாபாத்திரம் கியான் மரியா (Gian Maria). இவரு தான் “டாலர்ஸ் ட்ரையாலஜி”-ல வந்த ரெண்டு படத்திலும் வில்லன்.

வில்லன் ஒரு மெக்ஸிகன் பழமொழி கூறுவார். “Winchester முன் Pistol வைத்திருப்பவன் இறந்தவனுக்கு சமம்” (வில்லன் Winchester பயன்படுத்துபவர், கதாநாயகன் Pistol பயன்படுத்துபவர்). Winchester என்பது ஒரு வகையான சக்திவாய்ந்த துப்பாக்கி. இறுதிகாட்சியில் ஈஸ்ட் வூட் இந்த பழமொழியை நினைவுபடுத்தி வில்லனுடன் டுயல் (duel) சண்டை போடுவார்.

படத்தில் நிறைய பஞ்ச் டயலாக் இருக்கும். எதுவும் நம்மை எரிச்சல் படுத்தாமல் நாம் ரசிக்கும் படி இருக்கும். ஈஸ்ட் வூட் பேசும் எல்லா வசனம்மும் பஞ்ச் டயலாக் போல தான் இருக்கும்.

டிஸ்கி:
டாலர்ஸ் ட்ரையாலஜி”-ல வந்த ரெண்டு படத்தை மட்டும் தான் இப்போ வரைக்கும் நாம் எழுதி இருகிறேன்.. இன்னும் ஒரு படம் பாக்கி இருக்கு. அது “The Good Bad and Ugly” என்ற மாபெரும் திரைக்காவியம். அடுத்து அந்த படத்துடன் உங்களை சந்திக்கிறேன். 

My Rating: 8.3/10......


15 comments:

 1. டாலர்ஸ் ட்ரைலொஜியை பத்தி எழுத எடுத்துக் கொண்டதற்கு சல்யூட். இன்ட்ரஸ்டிங்கா எழுதுறீங்க. பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 2. Word verification இல்லாம ஆக்கிருங்க பாஸ். புண்ணியமாப் போகும். புது interfaceல முடியாது. பழசுல தான் செய்யணும்.

  ReplyDelete
 3. @ ஹாலிவுட்ரசிகன் : நன்றி பாஸ்...
  \\Word verification இல்லாம ஆக்கிருங்க பாஸ்\\
  Word verification நான் வைக்க வில்லை...நான் கமெண்ட் போட்ட Word verification ஒன்னும் வரல பாஸ்....

  ReplyDelete
 4. நான் நினைக்கிறேன் ப்ளாக் ஓனருக்கு வெரிஃபிகேஷன் இல்லை. எனக்கு வருது.

  ReplyDelete
 5. அருமையான விமர்சனம்..உலகின் தலைச்சிறந்த ஒரு திரைப்பட தொடரை பாகங்களாக பிரித்து ஒவ்வொரு படத்துக்கும் தனி தனி விமர்சனங்கள் என்று கலக்குகிறீர்கள்..அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்..நன்றி.

  << செர்ஜியோவும், நம்ப ஊரு டைரக்டர் மாதிரி வழக்கம் போல கிரெடிட்ல அகிராவிற்க்கு நன்றின்னு போடல.>>
  இது எப்பவுமே இருக்குற ஒன்னுதான் நண்பரே..ஆனால், "ரோஷோமான்" மூலம் எப்படி அகிரா என்ற மேதை நமக்கு கிடைத்தாரோ அதே மாதிரி "A Fistful Of Dollars" இல்லையெனில் செர்ஜியோ லியோனி என்ற இன்னொரு மேதை கிடைத்திருப்பாரா என்பது சந்தேகம்தான்..அதோடு, லியோனியின் மற்ற திரைக்காவியங்களும் நமது கண்களுக்கு எட்டாமலும் போகிருக்கலாம்..
  பாருங்க... சுட்டது, இன்ஸ்பிரஷனுக்கு எல்லாம் எவ்வளவு புகழ் பேருன்னு??

  நன்றி..தொடரட்டும் தங்கள் பணி/

  ReplyDelete
 6. Good Movie..I have watched this movie..one of the best from EastWood.

  ReplyDelete
 7. @ஹாலிவுட்ரசிகன்
  //நான் நினைக்கிறேன் ப்ளாக் ஓனருக்கு வெரிஃபிகேஷன் இல்லை. எனக்கு வருது.//

  பாஸ், இப்போ "Word Verification" எடுத்துட்டேன்..

  ReplyDelete
 8. @Kumaran ..
  உண்மை தான் ...A Fistful Of Dollars படம் இல்லாட்டி EastWood மற்றும் செர்ஜியோ லியோனி கிடைத்திருக்கமாட்டார்கள்...நன்றி நண்பரே

  ReplyDelete
 9. கலக்கல் ராஜ்.
  உண்மையிலே நான் அடுத்தது Good,Bad & Ugly தான் எதிர்பார்த்தேன், நீங்க அதோட முதல் பக்கத்தை பதிவிடிங்க!!!.
  சிகிரமே கடைசி பக்கத்தை எதிர்பார்கிறேன்.

  கிளின்ட் ஈஸ்த்வூட்'இன் அதிக படங்கள் பார்த்துள்ளேன், ஆன அவர் சிரிக்கிற மாதிரி ஒரு காட்சி கூட இல்ல நினைக்கிறன்...... இல்ல ஒரு வேளை நான் கவனிக்கலையோ....... அப்படி எதுனா காட்சி இருந்தால் சொல்லுங்க.

  ReplyDelete
 10. கருத்துக்கு நன்றி அருண்,
  எனக்கும் அவர் சிரிக்கிற மாதிரி காட்சிகள் ஒன்னுமே ஞாபகம் வரலை..எல்லா படத்திலும் ஒரு மாதிரி சிடு சிடுன்னு தன் இருக்கும்...
  அப்புறம் அடுத்த படம் கண்டிப்பா Good,Bad & Ugly தான்.

  ReplyDelete
 11. ஏன் பாஸ் எவனே நடித்த படத்திற்கு நீங்க விமர்சனம், குறிப்பி எழுதுறீங்க?
  உங்க ப்ளாக்கில வேற ஏதாச்சும் பயனுள்ள விடயங்கள் எழுதலாமில்லே!

  ReplyDelete
 12. ஹலோ ராஜ்,

  உங்களது சினிமா விமர்சனம் அனைத்தும் நன்றாக உள்ளது.

  good,bad,ugly என்ற படத்தில் பாட்சா படத்தின் மியூசிக் இருக்கும். நான் பலமுறை இரண்டு படங்களையும் பார்த்துள்ளேன்.

  கண்ட கண்ட நாய்களின் பதிவுகளில் எல்லாம் நீங்கள் பதில் கூறிக்கொண்டு இருக்கவேண்டாமே.

  உங்கள் பதிவுகளை முன்னரே படித்திருந்தாலும் இப்போதுதான் முதன்முறையாக மறுமொழியிடுகின்றேன்.

  ReplyDelete
 13. Bravo Raj. Nice Blog. Thanks for Sharing...

  ReplyDelete
 14. why don' t you write a critic about few clint eastwood films

  ReplyDelete