Friday, August 09, 2013

தலைவா (2013) - சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!!

தலைவா பல தடைகளை (!!) தாண்டி தமிழ்நாட்டுல ரீலீஸ் ஆகாம வெளிநாட்டில் ரீலீஸ் ஆகி இருக்கிறது. ஒரு படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்ப இப்ப படக்குழுவினர் எத்தனையோ புது புது ஐடியாவுல ஸ்டன்ட் அடிச்சு பார்த்து இருக்கேன், சமிபத்தில் தங்க மீன்கள் ராம் கூட புது விதமா "படம் ரீலீஸ் பண்ண காசு இல்லைங்கிற" மாதிரி டீசர் வெளியீட்டு இருந்தார், ஏதோ இப்ப தான் அவருக்கு படம் எடுக்க காசு தேவை என்கிற ரகசியம் தெரிஞ்ச மாதிரி. ஆனா அது கூட நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பற்றிய ஆர்வத்தை உண்டு பண்ணியது. ஆனா தலைவா பட குழுவினர் அடிச்ச ஸ்டன்ட் பழைய எம்.ஜி.யார் காலத்து "தியேட்டர்ல பாம் வைப்போம்" டெக்னிக், அதை பார்த்தவாது நாங்க கொஞ்சம் உஷார் ஆகி இருக்கனும், ஆனா விதி யாரை விட்டுச்சு. பப்ளிசிட்டி ஸ்டன்ட் மட்டும் பழைய எம்.ஜி.யார் காலத்து டெக்னிக் இல்ல, படமும் அரத பழசான கதையை கொண்டு வெளி வந்து இருக்கு. நாங்களா வான்டட்டா போய் வண்டியில ஏறுனது எங்க தப்பு தான். 


நான் பெரிய விஜய் பேன்னாக இல்லாட்டியும், விஜய்யோட எல்லா படத்தையும் முத நாள் பாத்திருவேன், கடந்த அஞ்சு வருஷமா ரீலீஸ் ஆனா எல்லா விஜய் படத்தையும் முத நாள் பார்க்கிற பாக்கியம் கிடைச்சு இருக்கு. துப்பாக்கி மட்டும் மிஸ் ஆகிருச்சு, அதுக்கு காரணம் அப்ப நான் சொந்த கிராமத்துல இருந்தேன், படத்துக்கு தாறுமாறான கூட்டம். எங்க ஊருல ஹவுஸ் புல் போர்டு மாட்டுன வெகு சில படங்களில் துப்பாக்கியும் ஒன்னும். வில்லு, வேட்டைக்காரன், சுறான்னு விஜய் மொக்கை மொக்கையா படம் குடுத்துகிட்டு இருந்தப்பவும் நான் விடாம விஜய் மேல நம்பிக்கை வச்சு படத்துக்கு போய்கிட்டே இருந்தேன். கடைசியா காவலன், நண்பன், துப்பாக்கின்னு நல்ல படங்கள் குடுக்க ஆரம்பிச்ச விஜய் மறுபடியும் பேக் டூ ஸ்குயர் ஒன் மாதிரி, அவர் அப்பாவோட அரசியல் பேராசையில மோசமான மொக்கை படத்தை "தலைவா" மூலமா குடுத்து இருக்கார். நான் இது வரை பார்த்த விஜய் படங்களிலே "தமிழன்" என்கிற காவியத்தை தான் டாப் வொர்ஸ்ட் லிஸ்ட்ல வச்சு இருந்தேன், இப்ப அந்த இடத்தை அன்ன போஸ்ட்ல "தலைவா" பிடிச்சு இருக்கு. வாழ்த்துக்கள் விஜய்.

 இன்னைக்கு கூட சாண்டியாகோவுல "தலைவா" ரீலீஸ் ஆகுமா இல்லையா என்கிற சந்தேகம் இருந்தது, கடைசி நேரத்துல தான் படம் ரீலீஸ் என்கிற அறிவிப்பு தியேட்டர்ல இருந்து வந்தது. எங்க கம்பெனி தமிழ் மக்கள் மொத்த கூட்டமும் தியேட்டர்ல தான் இருந்தது, இத்தனைக்கும் நாளைக்கு ஆபீஸ் வேற. விஜய்க்கு இங்க இருக்கிற ரசிகர் கூட்டம் உண்மையிலே பெரிய ஆச்சிரியமா விஷயம் தான். அவங்களை மனசுல வச்சுகிட்டாவது விஜய் இது மாதிரியான படங்களை தவிர்ப்பது நல்லது. 


படத்தோட கதையை கொஞ்சம் சினிமா ஞானம் உள்ளவங்க ட்ரைலர் வச்சே சொல்லிருவாங்க. விஜய் அப்பா அண்ணா (சத்யராஜ்) மும்பையில வாழுற ஏழைகளின் காப்பாளன், விடிவெள்ளி, கலியுக கர்ணன், ரொம்ப குழம்பாதீங்க சினிமா பாஷையில பெரிய டான். அவரோட பையன் தான் விஷ்வா (விஜய்). அப்பாவோட பிஸினெஸ் பத்தி தெரியாம ஆஸ்திரேலியாவுல வாழுறார். அங்க டான்ஸ் குரூப் வச்சு நடத்திகிட்டு ஜாலியா ப்ரிண்ட்ஸ் கூட சந்தோஷமா இருக்கிறார். தமிழ் பெண்னான் அமலாபாலை லவ்வி, தன்னோட கல்யாணத்தை பத்தி பேச இந்தியா வரார். வந்த எடத்துல அவர் கண்ணு முன்னாலே "அண்ணாவை" வழக்கம் போல் சமூக விரோதிகள் கொன்று விடுகிறார்கள். வழக்கம் போல் விஜய் விரோதிகளை அழித்து மும்பை தமிழர்களை காப்ற்றி, விஷ்வாவில் இருந்து எப்படி விஷ்வா "பாய்" ஆகிறார் என்பதை இழு இழு என்று ஜவ்வு போல் இழுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் "விஜய்".

இளைய தளபதி விஜய் அட்டகாசமாய் எல்லாம் நடிக்கல, தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செஞ்சு இருக்கார். அவருக்கு நல்லா வரது டான்ஸ் மட்டும் தான். செமையா டான்ஸ் ஆடி இருக்கார். உணர்ச்சி பூர்வமான் இடத்துல இவர் பேசுற நிறைய வசனம் சிரிப்பை தான் வரவழைக்குது, டிவி சீரியல கூட வர லாயக்கு இல்லாத வசனங்கள். "தம்பி நல்லா படிச்சா பரீட்சையில் நல்ல மார்க் எடுக்கலாம்" டைப் வசனங்கள். இந்த மாதிரி மொக்கை வசங்களை விஜய் என்ன தான் எமோஷனலா பேசினாலும் அது நம்ம பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. வசனம் எழுதுன ஆளுக்கு கையிலே ரெண்டு போடு போடணும்.


இளைய தளபதி விஜய் ஏன் எல்லா படத்திலும் ஒரே மாதிரியான கெட் அப்ல வராரு, கெட் அப் சேன்ஜ் பண்ணுறதே இல்லைன்னு கேட்கிற ஆளுகளுக்கு கிளைமாக்ஸ் காட்சியில ஒரு கெட் அப் போட்டுக்கிட்டு வராரு பாருங்க. சுறா சிங் கெட் அப் தோத்தது. தியேட்டரே விழுந்து விழுந்து சிரிச்சது. படத்தோட பெஸ்ட் காமெடி சீன் அது தான். சுறாவுக்கு முன் வந்த விஜய் படங்க மாதிரி பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி நம்மளை வதைக்கிறது இந்த படத்துல இல்லாதது பெரிய ஆறுதல்.படத்தோட கதையை ஓகே பண்ணுனது எஸ்.ஏன்னு படிச்சேன். தளபதி ஒரு அஞ்சு வருஷம் அவங்க அப்பாவை ஊரை விட்டு தள்ளி வச்சுறது நல்லது. சனியை கூடவே வச்சுகிறது ரொம்ப ரொம்ப ஆபத்து. 

படத்தோட கதாநாயகி அமலா பால். நடிப்பை வெளிபடுத்த பெரிய வாய்ப்பெல்லாம் இல்லை. வழக்கமான் தமிழ் பட ஹீரோயின் வேலையை சரியா செஞ்சு இருக்காங்க. நிறைய காட்சியில மேக் அப் இல்லாம வந்து மரண பயத்தை உண்டு பண்ணுறாங்க. இடைவேளைக்கு முன்னாடி வர ட்விஸ்டுக்கு பயன்படுத்த பட்டு இருக்காங்க. மற்ற படி  பெருசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல. சத்யராஜ் போன்ற நல்ல நடிகரை வேஸ்ட் செஞ்சு இருக்காங்க. இவர் பேசுற வசனங்கள் கொட்டாவியை தான் வர வைக்குது. ஏதோ ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மாதிரி வந்துட்டு போறார். 

படத்தை முதல் பாதியில் அப்புறம் இரண்டாம் பாதியில பாதிக்கு மேல வந்து படத்தையும் நம்மளையும் காப்பாதிறது சந்தானம் மட்டும் தான். இயக்குனர் விஜய்க்கு இந்த படத்திலும் சந்தானம் தான் கை குடுத்து இருக்கார். ஒரு டபிள் மீனிங் வசனம் தவிர சந்தானம் ரொம்பவே அடைக்கி வாசித்து இருக்கார். ஒரு காட்சியில் "சாம்  ஆண்டர்சன்" வேற வராரு, சாம் வர காட்சியை கொஞ்சம் சுவாரிசியமா குடுத்து இருக்கலாம்.


படத்துல பின்னணி இசை ரொம்பவே கொடூரமாய் இருந்தது. விஜய் பாடும் "வாங்கன்னா" பாட்டு தவிர எந்த பாட்டுமே மனதில் பதியவில்லை. "தலைவா தலைவா" பாட்டு ஒரு மாஸ் பாட்டை எப்படியெல்லாம் படம் ஆக்க கூடாது என்பத்ருக்கு நல்ல எடுத்துகாட்டு.

 "பாட்ஷா+நாயகன் = தலைவா", இது தான் நம்ம படத்துக்கு பார்முலான்னு சொல்லி தான் இயக்குனர் விஜய் தளபதியை ஏமாத்தி இருப்பார்ன்னு நினைக்கிறன். டைரக்டரோட சுடுற திறமை ஊர் அறிஞ்சது தான், தனக்கு என்ன வருமோ அதை சரியா செஞ்சா வெற்றி நிச்சியம், ஊர் சொல்லுறதுகாக நம்மளை மாத்திக்கிட்டு நமக்கு தெரியாதை வராததை செஞ்சா பல்பு தான் கிடைக்கும். இயக்குனர் விஜய் பேசமா சர்க்கார் இல்லாட்டி காட் பாதர் படத்தை சுட்டு எடுத்து இருக்கலாம், சொந்தமா சீன் யோசிச்சு எடுத்தா இப்படி தான் மண்ணை கவ்வ வேண்டியது வரும். அடுத்த படத்தையாவது உருபடியா சுட்டு எடுங்க விஜய் சார்.

இளைய தளபதி விஜய்க்கு ஒரு வேண்டுகோள், உங்க அப்பா பேச்சை கேட்டு நடிக்காம நல்ல இயக்குனர் மற்றும் நல்ல கதைகளில் நடிங்க, இல்லாட்டி சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!! நாங்க பாவம்.

My Rating: 5.5/10.


27 comments:

 1. அப்ப நான் கிரேட் எஸ்கேப்பா, ஐ ஜாலி ஜாலி. விமர்சனம் சூப்பர் ராஜ்.

  ReplyDelete
  Replies
  1. ஆனா மூனா, எல்லாம் சரி. இவ்வளவுக்கு அப்புறம் இந்த படத்த பார்த்துட்டு பதிவு எதுவும் உங்க பக்கத்துல போட்டீங்க, கொண்டே புடுவேன்.. ஆமா...

   Delete
  2. செந்தில், இருந்தாலும் நீங்க பார்த்திட்டு உங்க ஸ்டைல ஒரு பதிவு போடுங்க, எனக்கு பிடிக்காம போனது உங்களுக்கு பிடிச்சு இருக்கலாம். :):)

   Delete
 2. புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிச்சாம்... அக்தை பார்த்து அணிலும் சூடு போட்டுகிச்சாம் ........................முதுகு பழுத்து மூணு கொடு விழுந்தது தான் மிச்சம் ..........

  ReplyDelete
  Replies
  1. வாங்க செல்வின். நீங்க சொல்லுற "முனு கோடு" ராமர் அணிலுக்கு போட்ட கோட்டடை ஞாபக படுத்துது.. :):)

   Delete
 3. தலைவா படத்தை தமிழ்நாட்டில் வெளியிட வேண்டும்...என்ற கருத்தாக்கத்தை நான் ஆதரிக்கிறேன்.
  படத்தை வெளியிடாமல் ஆக்குவதற்கு ‘யாரோ’ விஸ்வரூப வேலை பார்த்து உள்ளார்கள்.
  எனவே தலைவா பட வெளியீட்டுக்கு என் ஆதரவு.

  [பட டிரைலரை பார்த்தே கணித்தேன்.நாயகன் + தேவர்மகன்+ இயக்குனர் தெறமை = மொக்கை]

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார், நீங்க படத்தை பார்த்தாலும் அதை பத்தி கண்டிப்பா விமர்சனம் பண்ண மாட்டீங்க, உங்க சத்தியம் எனக்கு ஞாபகம் இருக்கு. படத்துக்கு தடை எதிர்பாராது தான். "வேந்தர் மூவீஸின்" வளர்ச்சியை தடை போட கூட யாராவது இப்படி செஞ்சு இருக்கலாம். இங்க வேந்தர் மூவீஸ் பேரே வரல.

   Delete
 4. ஹா..ஹா.. அப்பவே சொன்னேனே கேட்டீங்களா... நல்லவேளை என் பிளாக்கில கமென்ட் மாடரேசன் வச்சேன்... அசிங்க அசிங்கமா திட்டி பல விஜய் பேன்ஸ் கமென்ட் போட்டிருந்தாங்க... யாம் பெற்ற இன்பம் இன்னும் சில நாட்களில் அவர்களும் பெறட்டும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க Manimaran...
   உங்க பதிவை படிச்ச அப்புறமும் நாங்க போனதுக்கு காரணம் இது தான். ஒரு படத்துல கவுண்டமணி வீட்டுக்கு ஒரு பிச்சைகாரன் பிச்சை கேட்டு வருவான், கவுண்டர் வீட்டு அம்மா அவன் கிட்ட பிச்சை இல்லைன்னு சொல்லி திருப்பி அனுப்பிடும், இவர் அவனை பார்த்து, விட்டுக்கு குப்பிட்டு வந்து பொண்டாடியை பார்த்து சவுண்ட் விடுவார், நீ என்ன பிச்சை இல்லைன்னு சொல்லுறது, இப்ப நான் சொல்லுறேன், "பிச்சை இல்லை" வெளிய போப்பான்னு சொல்லுவாரு. அது மாதிரி தான் பாஸ்..நாங்க பார்த்து ஜட்ஜ் பண்ணுனா தான் எங்களுக்கு திருப்தி. :):):):)
   அது போக எங்களுக்கு இங்க இருக்கிற ஒரே என்டர்டையிமென்ட தமிழ் படங்கள் தான். நிறைய தமிழ் மக்களை சந்திக்கிற ஒரு வாய்ப்பு அங்க கிடைக்கும். அதுனால எந்த படம் வந்தாலும் போயிருவோம்.

   எனக்கு அசிங்கமான் கமெண்ட்ஸ் இது வரைக்கும் வரல, அனானி கமெண்ட் ஆப்சன் இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம். :):):)

   Delete
 5. நல்ல வேளை படம் இங்க ரிலீஸ் ஆகலை... என் காசைக் காப்பாத்தினதுக்கு தேங்க்ஸ்...

  ReplyDelete
  Replies
  1. அப்படி எல்லாம் சொல்லாதீங்க பாஸ். ஒரு வேலை உங்களுக்கு பிடிச்சு இருக்காலம், என்னோட ரசனை வேறு மாதிரியானது. ஊரே கழுவி ஊத்துன பில்லா-2 எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்து. :):):)

   Delete
 6. என்ன இப்படிப் போட்டு கவுத்தீட்டீங்க, ராஜ்! :(

  சிங்கப்பூர்லலாம் பாத்துட்டு வந்து படம் நல்லாயிருக்குணு சொல்லிக்கிட்டு இருந்தாக!

  நம்ம கிரி என்ன எழுதுறாருனு பார்ப்போம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வருண்... கிரி கண்டிப்பா கழுவி கழுவி ஊத்துவார் பாருங்க. நீங்க "einthusan"ல பார்த்திட்டு சொல்லுங்க. :):)

   Delete
 7. கூடங்குளம் உதயகுமாற்ல இருந்து கிட்டத்தட்ட எல்லா தமிழ்நாட்டு போராளிகலையும் நினைவுபடுத்திவிட்டார் விஜய்

  ReplyDelete
  Replies
  1. வாங்க வருண். அவரும் அடுத்த கட்டத்துக்கு போகணும்ல. எத்தனை நாளைக்கு தான் "தையல் மெஷின், இஸ்திரி பெட்டின்னு" ஓட்டுறது.
   படத்தோட ஆரம்பத்துல நிறைய புரட்சியாளர்கள் பேரை போடுவாங்க. அதுல பிரபாகரன் பேரை போட்டு இருக்கலாம்.

   Delete
 8. இப்போ தான் மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. எங்க துப்பாக்கி மாதிரி ஹிட் ஆகிடுமோனு கொஞ்சம் பயம்மா இருந்தது. இப்போ ஆல் க்ளியர்!!!

  இதுல அந்த "அம்மா" தேவை இல்லாம மூக்கை நுழச்சி தேவை இல்லாம ஹிட் ஆக்காம இருந்தா சரி :-)

  ReplyDelete
  Replies
  1. பாஸ், துப்பாக்கி எனக்கு பிடிச்ச படம், இன்டர்வெல் பிளாக்ல எனக்கு டென்ஷன் ஏறி வேர்த்து கொட்டிருச்சு. விஜய் படங்களிலே ஒன் ஆப் தி பெஸ்ட்னா அது துப்பாக்கி தான். இந்த படத்தோட இயக்குனர் தான் மையின் கல்ப்ரிட். விஜய் இதுலையும் டைரக்டர் சொன்னதை கேட்டு நடிச்சு இருக்கார்.

   Delete
  2. I too liked thuppaki. How on earth people giving chances to this director vijay? From day one whatever he made is a pure copy of something else. No individuality at all.

   Delete
 9. //இளைய தளபதி விஜய்க்கு ஒரு வேண்டுகோள், உங்க அப்பா பேச்சை கேட்டு நடிக்காம நல்ல இயக்குனர் மற்றும் நல்ல கதைகளில் நடிங்க, இல்லாட்டி சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!! நாங்க பாவம்.//


  உண்மை உண்மை

  ReplyDelete
  Replies
  1. வாங்க பிரேம். அந்த உண்மையை விஜய் உணர வேண்டும்.

   Delete
 10. இந்த படத்தோட இயக்குனர் இவரு தான்னு தெரின்சதுமே படம் மொக்கைன்னு தெரியும்

  ReplyDelete
 11. RAJ - YOU SHOULD IMMEDIATELY CONSULT UR DOCTOR AND GET BED IN KILPACK MENTAL HOSPITAL...WT A POOR SICK FELLOW U ARE...

  ReplyDelete
  Replies
  1. முடிஞ்சா நீ அட்மிட் ஆகி இருக்கிற பெட் பக்கத்துல எனக்கும் ஒன்னு புக் பண்ணுபா.

   Delete
 12. ட்ரைலர் பார்த்த போதே படம் மொக்கையாய் இருக்கும் என்று நினைத்தேன்.அந்த இயக்குனர் விஜய் --விஜய் படம் எடுக்க ஆள் கிடையாது.அவர் கிளாஸ் டைரெக்டர்.மெதுவாக நகரும் தாண்டவம்,தெய்வ திருமகள் போன்ற படங்கள் தான் அவர் ஸ்டைல்.விஜய் இந்த படம் தொடங்கிய போதே ஆஹா துப்பாக்கி பெரிய ஹிட்,திரும்பவும் மொக்கையான படமா என்று யோசித்தேன்.சரி ஜில்லாவுக்கு அடுத்து திரும்பவும் முருகதாசே காப்பாத்துவார் .
  இருந்தாலும் படம் பார்க்கத்தான் போகிறேன்.(ஏன்னா நான் தளபதி பேன்.)உங்களின் சிங்கம் 2,பில்லா 2 போன்ற படங்கள் நான் மாறு பட்டேன்.

  ReplyDelete
 13. தல,

  கொஞ்ச நாளா ஊர்ல இல்ல.. அதான் கொஞ்சம் லேட்டு..!!
  அப்புறம் தல, உங்க விமர்சனம் பூராவும் ரசிச்சேன்.. ஒரே ஒரு விஷயத்த தவிர..
  //நிறைய காட்சியில மேக் அப் இல்லாம வந்து மரண பயத்தை உண்டு பண்ணுறாங்க//
  இதை நா வன்மையா கண்டிக்கிறேன் பாஸ்.. என்னதான் வசதிக்கு இல்லாட்டியும், அசதிக்காச்சும் யூஸ் பண்ணிக்கலாம்ங்கற நல்ல எண்ணம் உங்க மனசுல இல்லாம இப்டி வார்த்தைய வுட்டுடீங்க.. இத நா அகில உலக நடிகையர்களின் ரசிகர்கள் சங்கம் சார்பா எதிர்க்கிறேன்..!! :) :)

  கடைசியா, நண்பன், துப்பாக்கி தான் தியேட்டர்ல பாத்த விஜய் படங்கள்.. உண்மைய சொல்லப்போனா துப்பாக்கியே லைட்டா எனக்கு போரடிச்சுது. காஜல் வர்ற சீன்கள்லாம் தேவையே இல்ல.. அத தூக்கியிருந்தா இன்னும் ஜூப்பரா இருந்துருக்கும்..!!

  இந்தப்படம் ட்ரைலர் வந்தப்பவே கத எப்டினு தெரிஞ்சுருச்சு.. அப்பவே முடிவு பண்ணியாச்சுல்லா போகப்படாதுனு..!! உங்களுக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள் (எவ்ளோ டாலர் வேஸ்ட் பண்ணீங்க ?)

  ReplyDelete
 14. அப்போ நீங்க படத்தை முழுசா பார்த்துட்டீங்களா?

  நாங்கெல்லாம் விஜய் அறிமுகமாகுற பாட்டு முடிஞ்சு காட்சி தொடங்கி, 5 நிமிசத்துல CD யை எஜக்ட் பண்ணிட்டோம்.

  ReplyDelete