Thursday, August 22, 2013

ஆதலால் காதல் செய்வீர் (2013)- படம் பார்த்து யாரும் திருந்த வேண்டாம் !!

தமிழ் சினிமாவில் எத்தனயோ வகையான காதலை காட்டியாகி விட்டது, இனி காட்டுவதருக்கு காதலே இல்லை என்கிற நிலையில் தான் சுசீந்திரின் "ஆதலால் காதல் செய்வீர்" படம் வெளி வந்து உள்ளது. இதில் காட்டி இருப்பது சிட்டி வாழ்க்கையின் யதார்த்த காதல். கொஞ்சம் கூட சினிமா தனம் இல்லாமல், 20 வயதில் வரும் காதலில் என்ன என்ன பிரச்சினைகள் வரும் என்பதை இந்த அளவுக்கு எந்த படமும் எடுத்து சொன்னதாய் எனக்கு ஞாபகம் இல்லை. மன பக்குவம் இல்லாத காதலர்களின் விளையாட்டு காதலால் எந்த மாதிரியான் விளைவுகள் இந்த சமுகத்தில் ஏற்படுகிறது என்பதை சொல்லும் படம் தான் "ஆதலால் காதல் செய்வீர்".


கல்லூரியில் படிக்கும் நாயகன் கார்த்திக் (சந்தோஷ் - புதுமுகம்) தன்னுடன் நண்பியாக பழகும் ஸ்வேதாவிடம் (மனீஷா யாதவ்) ப்ரோபோஸ் செய்கிறார், இதயம் முரளி மாதிரி கிளைமாக்ஸ் வரை காத்திருக்காமல் படம் ஆரம்பித்த 10 நிமிடங்களில் தன் காதலை சொல்லி விடுகிறார். முதலில் மறுக்கும் ஸ்வேதா பிறகு காதலை ஏற்றுகொள்கிறார். மகாபலிபுரம் அவுட்டிங் செல்லும் இருவரும் பலவீனமான ஒரு வேலையில் எல்லை மீறி விடுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் காதல் என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்தது என்பதை திரையில் காண்பது நல்லது.

படத்தின் கதாநாயன் சந்தோஷ், இவர் தான் கதாநாயகன் என்று படம் ஆரம்பித்த பத்து நிமிடங்கள் கழித்து தான் தெரிகிறது. அது வரை கதாநாயகியிடம் முதல் காட்சியில் ப்ரொபோஸ் செய்யும் ஒரு பையனை தான் ஹீரோ என்று எண்ணி இருந்தேன். இவர் நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரி தான் தெரிகிறார். நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்து உள்ளார். ஒரு சாயலில் பதிவர் "பிலாசபி" மாதிரி தெரிந்தார், எனக்கு மட்டும் தான் அப்படி தெரிந்ததா, இல்லை மற்றவர்களுக்கும் அப்படி தான் தோன்றியதா என்று தெரியவில்லை. 

ஹீரோயின் மனீஷா யாதவ், வழக்கு என் படத்தில் நடித்தவர். படத்தில் பெஸ்ட் பெர்பார்மென்ஸ் இவருடையது தான். டீன் ஏஜ் பெண்கள் வீட்டில் பேசும் பொய்களை அன்யாசமாய் பேசுகிறார். தான் கர்பமானவுடன் இவர் காட்டும் பயம் கலந்த முகபாவனைகைகள் நம்மையும் பத பதைக்க வைக்கிறது. முதல் பாதியில் தன் காதலை வீட்டில் மறைக்கவும் பிற பாதியில் தன் கர்பத்தை மறைக்க இவர் படும் பாடு ஒவொரு டீன் பெண்ணிற்கும் பாடம். மகாபலிபுரம் அவுட்டிங் காட்சியில் கூட விரசம் இல்லாமல் காமத்தை வெளி படுத்தி இருந்தார்.


மனிஷாவின் பெற்றோர்ராக ஜெயப்பிரகாஷ் மற்றும் துளசி. இருவரும் அசத்தலாய் நடித்து இருக்கிறார்கள். அதிலும் அம்மா துளசி மற்றும் மனிஷாயிடையே நடக்கும் உரையாடல்கள் ரொம்பவே எதார்த்தமாய் இருந்தது. சிட்டியில் வாழும் அம்மா மற்றும் டீன் ஏஜ் பெண்யிடையே இருக்கும் பந்தத்தை மிக நன்றாக காட்டி இருக்கிறார் இயக்குனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீது எந்த அளவு நம்பிக்கை வைக்கிறார்கள், அவர்கள் வைத்த நம்பிக்கையை பிள்ளைகள் மோசம் செய்ததும் எந்த அளவு உடைந்து போய் விடுகிறார்கள் என்பதை துளசி மற்றும் ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரம் முலம் நம் கண் முன்னே வந்து நிறுத்துகிறார் இயக்குனர்.

படத்தின் உண்மையான் கதாநாயன் இயக்குனர் சுசீந்திரன் தான். பக்கம் பக்கமாய் அட்வைஸ் என்கிற பேரில் வசனம் பேச வைக்காமல் காட்சிகள் முலமே பிரச்சனைகளின் விரியத்தை நமக்கு உணர்த்துகிறார். துள்ளுவதோ இளமை கூட கிட்ட தட்ட இதே தீம்மை கொண்ட படம் தான். ஆனால் செக்ஸ், கவர்ச்சி, ரெயின் டான்ஸ் என்று மேட்டர் படம் போல் எடுத்து இருந்தார் செல்வா. ஆனால் சுசீந்திரன் வசனங்களில் கூட கண்ணியத்தை கடை பிடித்து இருக்கிறார். சிட்டியில் படிக்கும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் காதலை எப்படி பார்கிறார்கள் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார். தான் சொல்ல வந்ததை கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாமல் தெளிவாய் சொல்லி இருக்கிறார்.


இசை "யுவன்", நீண்ட நாட்கள் கழித்து யுவன் ஸ்டைல் துள்ளல் இசை. செல்வராகவன் படத்திருக்கு போடுவது போல் இசை அமைத்து உள்ளார். பின்னணி இசை பிரமாதம். மனிஷா தன் கர்பத்தை டெஸ்ட் செய்யும் காட்சியில் வரும் பின்னணி இசை பழைய யுவனை ஞாபகம் படுத்துகிறது. அதே போல் கிளைமாக்ஸ்  காட்சியில் அந்த குழந்தைப் பாடலின் மூலம் மனதை வருடிச்செல்கிறார்.

கொஞ்சம் நாட்களுக்கு முன்பு Trust (2010) என்கிற ஹாலிவுட் படம் பார்க்க நேர்ந்தது, அந்த படத்தின் தாக்கம் மற்றும் கிளைமாக்ஸ் மறைய எனக்கு இரண்டு நாட்கள் பிடித்தது. அது மாதிரியான படங்கள் தமிழில் வராதா என்கிற எனது ஏக்கத்தை இந்த படம் முலம் போக்கி இருக்கிறார் சுசீந்திரன். மிக மிக அழுத்தமான கிளைமாக்ஸ், கண்டிப்பாய் அதன் தாக்கம் ஒரு நாளாவது இருக்கும். பரிதாபம் மற்றும் கோபம் ஒரு சேர எனக்கு ஏற்பட்டது, "உங்க 2 நிமிஷ சந்தோஷத்துக்கு ஏண்டா ஒரு குழந்தையோட எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குறீங்க" என்று இந்த படத்தின் ஜோடியை கேட்க தோன்றியது. சாரி கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.  படத்தை பார்த்து யாரும் திருந்துவார்கள் என்று நான் எண்ணவில்லை, ஆனால் ஒரு நிமிடமாவது படிக்கிற வயதில் எல்லை மீற தான் வேண்டுமா என்று யோசிப்பார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றி.

ஆதலால் காதல் செய்வீர் - படம் பார்த்து யாரும் திருந்த வேண்டாம்.

My Rating: 8.3/10.


12 comments:

 1. திருந்துவதற்கு வழியில்லை... தானே.....!

  பதிவர் திருவிழாவில் சந்திப்போம் தானே...?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தனபாலன், நான் இப்பொழுது வசிப்பது அமெரிக்காவில், அதனால் பதிவர் சந்திப்பிருக்கு வர முடியாத சூழல். வீடியோஸ் மற்றும் போடோஸ் முலம் தான் இந்த முறை பதிவர் சந்திப்பை பார்க்க போகிறேன். :(:(

   Delete
 2. நானும் பார்த்தேன். எனக்கு இப்படத்தில் பெரிய ஈர்ப்பு இல்லை ராஜ்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சிவா. தமிழ் சினிமாவையே பொறட்டி போட்ட படம் கிடையாது, ஆனாலும் சமிபத்தில் நான் பார்த்த நல்ல படங்களில் இதுவும் ஒன்று.

   Delete
 3. தல,

  100% உங்க விமர்சனத்த வழிமொழியறேன்.

  ஒரு நல்ல படம் வந்தா அந்தப்படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் போடறதுக்குனே ஒருசில கும்பல் இருக்கு தல.. இப்போ இந்தப்படத்த "சென்டிமெண்டல் ஃபூல்ஸ்"க்கு தான் நல்ல படம்னு அந்த கும்பல் உளறிட்டு இருக்கு.. என்னத்த சொல்ல..???!!!

  //கர்பத்தை டேஸ்ட் செய்யும் காட்சியில்//
  ஹா.. தல ஒரு எழுத்து மிஸ்டேக்ல அர்த்தமே மாறுது பாருங்க..!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தல,
   நைட் ஒட்கார்ந்து டைப் பன்னுரதுனால் நிறைய எழுத்து பிழைகள், சுட்டி காட்டியதருக்கு நன்றி. அடுத்தவங்க ரசனையை பத்தி நம்ம கவலை பட கூடாது தல. இதே படம் காலேஜ் படிக்கிற பசங்களுக்கு பிடிக்காது, அதே பையன் வேலைக்கு போய் சமூகத்தை பார்க்க ஆரம்பிச்ச உடனே அவனுக்கு இத்தோட விரியம் தெரியும்.

   Delete
 4. இந்த படத்தின் கிளைமேக்ஸ் உலகசினிமா தரத்தில் உள்ளது.
  இதற்காகவே சுசீந்திரனை பாராட்டியே ஆக வேண்டும்.

  நிச்சயம் இந்தப்படம்... காதலுக்கும்...இனக்கவர்ச்சிக்கும்...உள்ள வேறுபாட்டை
  எடுத்துக்காட்டி இளம் பெண்களிடையே எச்சரிக்கை செய்யும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார்,
   படத்தோட கிளைமாக்ஸ் ரொம்பவே டச்சிங்காக இருந்தது. எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. வழக்கு என்க்கு அப்புறம் தமிழில் வந்த ஒரு நல்ல படைப்பு.

   Delete
 5. தல சுசீந்திரன் ராஜாபாட்டையில் விட்டதை பிடித்து விட்டார் போல.. எல்லாரும் இந்தப் படம் நல்லா இருக்குன்னு சொல்றதப் பார்த்தா எனக்கும் பார்க்கணும் போல இருக்கு... நல்ல தரமான விமர்சனம் தல...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சீனு, படம் முடிஞ்சா பாருங்க, ரொம்ப நல்ல படைப்பு.

   Delete
 6. அங்க இந்த படம் வந்தாச்சா? நான் படம் நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டு பார்க்கலாம் என்று நினைத்த நேரத்தில் நான் எப்பவும் பார்க்கும் அரங்கில் இந்த படத்தை எடுத்துவிட்டு தலைவா போட்டுவிட்டார்கள்.சரி ஓரிரு நாளில் காட்சிகள் குறைத்து மீண்டும் வரும் என்று நினைத்தேன் ஆனால் தேசிங்கு ராஜா போட்டு விட்டார்கள். இந்த படம் நல்லா இருந்தது என்று கேள்விபட்டேன்.ஆனால் சரியான collection இல்லை என்று கேள்விபட்டேன் ராஜ்.இனி டௌன்லோட் பண்ணிதான் பார்க்கணும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க விஜய், இங்க இந்த மாதிரி சின்ன பட்ஜெட் படம் ரீலீஸ் ஆகாது. படத்தோட நல்ல ரிவியூ பார்த்திட்டு, படத்தை நெட்டுல தான் பார்த்தேன், ரொம்ப நல்ல படமா இருந்தனாலே பதிவா போட்டேன். கண்டிப்பா பாருங்க. பட் உங்க டேஸ்ட்க்கு படம் ஏத்த மாதிரி இருக்காது. :):):)

   Delete