Monday, February 24, 2014

பிரம்மன் (2014) - போதும் சசி, இத்தோட நிறுத்திருங்க !!

சினிமாவின்  மீது தீராத காதலில் வாழும் ஒருவன், தன் சிறு வயது லட்சியத்தின் விளைவாக பழைய தியேட்டர் ஒன்றை லீஸுக்கு எடுத்து படங்களை ஒட்டி வருகிறான். தன் தியேட்டர் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து எப்படி அதனை எப்படி மீட்கிறான் என்பது தான் பிரம்மன் கதை சுருக்கம். 

90 களில் பி.வாசு தாலி செண்டிமெண்டை மையமாக வைத்து படங்களை எடுத்து தள்ளினார். அதில் முதன்மையானது "சின்ன தம்பி". தாலியின் அனாடமியை தமிழ் மக்களுக்கு புரிய வைத்த புரட்சி படம். சின்ன தம்பியில் ஆரம்பித்து பத்தினி வரை தாலி மையபடுத்தி காவியங்களை படைத்தார் வாசு. திராவிட கழக போர் வாளாக, அடுத்து தி.மு.க தலைவியாக குஷ்பு தற்போது வளர்ந்து இருபதருக்கு முக்கிய காரணம் வாசுவின் தாலி செண்டிமெண்ட் படங்கள் தான் என்றால் அது மிகையாகாது.

தாலியின் காப்பிரைட்ஸ் எப்படி வாசு குத்தகைக்கு எடுத்து வைத்து இருந்தாரோ, அதே போல் நட்பு செண்டிமெண்டை சசி குமார் மொத்தமாக வாங்கி வைத்து இருக்கிறார். அவர் நினைப்பும் சரி தான். 90 களில் தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் பெருன்பான்மையானவர்கள் தாய்குலங்கள். தற்போது காசு செலவு செய்து தியேட்டருக்கு வருபவர்கள் அனைவருக்கு இளைஞர்களே. அவர்களை கவர நட்பு செண்டிமெண்டடை செலக்ட் செய்தது  ஓகே தான். ஆனால்  எதை பரிமாறினாலும் அளவோடும் சுவையோடும் பரிமாற  வேண்டும், ஆனால்  அதுவே ஓவர் டோஸ் ஆகி விட்டால், கண்டிப்பாய் நம் மக்கள் துப்பி விடுவார்கள். அப்படி பட்ட ஓவர் டோஸ் படம் தான் பிரம்மன்.


படத்தின் முதல் காட்சியில் இயக்குனருக்கு சினிமாவின் மீது இருக்கும் பிரியம் நமக்கு புரிந்து விடுகிறது. இரண்டு சிறுவர்கள் தங்கள் ஊரில் இருக்கும் தியேட்டரில் இருந்து ரீல் பெட்டியைக் திருடி கொண்டு போய் நண்பர்களுக்குப் படம் காட்டும் காட்சி நம்மை நிமிர்ந்து உட்கார செய்து விடும். அந்த இரண்டு சிறுவர்களின் ஒருவன் சிவா (சசிகுமார்) வளர்ந்து மற்றொரு நண்பனுடன் (சந்தானம்) சேர்ந்து அதே ஊரில் உள்ள மாடர்ன் தியேட்டரை லீஸுக்கு எடுத்து நடத்துகிறான். தியேட்டர் பிஸினெஸ் சரியாக போகாத காரனத்தினால உதாவாக்கரை, தண்டசோறு என்று வீட்டில் உள்ளவர்களால் அன்போடு அழைக்க படுகிறார். இன்ட்ரோ முடிஞ்சு பேரு வாங்கியாச்சு, அடுத்து என்ன லவ் போர்ஷன் தானே. வழக்கம் போல் ஹீரோயின் வருகிறார், பார்க்கிறார் காதலில் விழுகிறார். படு திராபையான காதல் போர்ஷன். 

லவ் போர்ஷன் முடிஞ்சு போச்சு, அடுத்து என்ன பிரச்னை தானே.. சீக்கிரம் என்ன பிரச்சனையின்னு சொல்லுங்கபான்னு நீங்க கேட்கிறது புரியுது. ஒரு பிரச்சினை மட்டும் வந்தா அதை ஈசியா சமாளிச்சு ஜெய்ச்சி காட்டிடுவார் நம்ம ஹீரோ. அதனால் ரெண்டு பெரிய பிரச்னை. தியேட்டர் தொடர்ந்து நடத்த 5 லட்சம் பணம் தேவை படுகிறது. காதலிலும் இரு வீட்டார் எதிர்ப்பின் முலம் பிரச்னை வர. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு தேடி சென்னை புறப்படுகிறார். வந்தோரை வாழ வைக்கும் சென்னை, சசியை வாழ வைத்ததா இல்லையா என்பது தான் மீதி கதை.


ஒரு வெற்றிகரமான இயக்குநர், நடிகர் என்கிற அந்தஸ்தை சசி சும்மா அடைந்து விடவில்லை. சசியின் இந்த வெற்றிக்கு பின்பு அவரின் உழைப்பு, மற்றும் அர்ப்பணிப்பு ஒளிந்து இருக்கிறது. யாருடைய பின் புலமும் இல்லாமல் வளர்ந்து சசி, இனி மேல் கதை தேர்விலும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. 

அவரின் இந்த கதாபாத்திரம் ஏனோ மனதில் ஒட்டாமல் சசி முகம் போலவே இறுக்கமாக இருக்கிறது. முதல் பாதில் ஒரு திரையரங்கை நடத்தவே கஷ்டப்படும் சசி இரண்டாம் பாதியில் சென்னை சென்று ஒரு திரைபடத்தை இயக்கும் அளவுக்கு போய் மெர்சல் ஆகுகிறார். சசி இயக்குனர் ஆகும் காட்சிகள் இவர்கள் முதல் காட்சியில் ஓட்டும் சன் டிவி சீரியல்களை ஞாபக படுத்துகிறது. 

படத்தை வழக்கம் போல் காப்பாற்றுவது நம்ம சந்தானம் தான். மனிதர் ஒன்-லைனர் காமெடி முலம் கைதட்டல் அள்ளுகிறார். முதல் பாதியில் சந்தானம் காப்ற்றினால், இரண்டாம் பாதியில் சூரி காமெடி என்கிற பெயரில் ஏதோ ஏதோ பேசுகிறார். சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது. கதாநாயகி லாவண்யா பார்க்க அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் நன்றாக ஆடவும் செய்கிறார். நடிப்பில் இன்னும் தேறவேண்டும்.


இசை தேவிஸ்ரீ. பாடல்கள் எதுவுமே மனதில் தங்கவில்லை. பின்னணி இசை அதோ கதி தான். இயக்குனர் சாக்ரடீஸ் கமலிடம் திரை பாடம் கற்றவர். கமலின் பள்ளியில் இருந்து வந்த யாரும் இது வரை ஜெயித்தது இல்லை, அந்த ராசி இதிலும் தொடர்கிரறது. சாக்ரடீஸ் வித்தியாசமான பொழுதுபோக்கு படத்தை தர முயற்சித்திருக்கிறார். இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சசி இந்த படத்துடன் நட்பு சென்டிமென்ட்டுக்கு முழுக்கு போட்டால் நலம்.

பிரம்மன் - போதும் சசி, இத்தோட நிறுத்திருங்க !!
My Rating: 6.5/10.


16 comments:

 1. சரியா சொன்னீங்க..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆவி...விமர்சனம் படிக்காம படத்துக்கு போறதுனால இப்படி போய் மாட்டிக்க வேண்டியது வருது.

   Delete
 2. why blood same blood .... பாரபட்சம் பார்க்காம உங்களையும் விட்டுவைக்கலை போல பிரம்மன் மீ டூ பாவம்

  ReplyDelete
  Replies
  1. சசி மேல நம்பிக்கை வச்சு போனேனே தல..

   Delete
 3. //நட்பு செண்டிமெண்டை சசி குமார் மொத்தமாக வாங்கி வைத்து இருக்கிறார்// கரெக்டா சொன்னீங்க.. :)
  எப்படியும் இந்தப் படம் பார்க்கறதில்லைனு தான் இருந்தேன். இப்போ கன்ஃபார்ம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல...ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவுலகம் வந்து இருக்கீங்க...அடிக்கடி பதிவு எழுதுங்க... :):)

   டிவில ரொம்ப சிக்கிரமே போடுவாங்க ...அப்ப ப்ரீயா இருந்தா பாருங்க..

   Delete
 4. நல்ல விமர்சனம் நண்பா..வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க குமரன்...நீங்களும் ரொம்ப நாளைக்கு அப்புறம் தலையை காமிச்சு இருக்கீங்க...அடிக்கடி பதிவுலகம் பக்கம் வாங்க...பதிவு எழுதுங்க..

   Delete
 5. ////திராவிட கழக போர் வாளாக, அடுத்து தி.மு.க தலைவியாக குஷ்பு/////

  நல்லா குடுக்குறாங்க டீடைல்லு...

  சூரி எதோ தன்ன பெரிய காமெடி சூப்பர் ஸ்டார்ன்னு நெனவ்ஹிகின்னு, இனிமேல் சந்தானம் கூட எல்லாம் சேர்ந்து நடிக்க மாட்டேன்னு சொல்லிடாராமாம்.. ஆங்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பா...சந்தானம் எத்தனை படத்தை தான் தனி ஆளவே காப்பாத்துவார். அவர் வர காட்சிகள் மட்டும் சுவரிசியம்மா' இருந்திச்சு...சூரி சூர மொக்கை...

   Delete
 6. ராஜ்,

  பிரம்ம முகூர்த்தம்னா ரொம்ப நல்ல நேரம்னு சொல்வாங்க,ஆனால் பி(ப)ரமனுக்கு கெட்ட நேரம் போல அவ்வ்!

  //யாருடைய பின் புலமும் இல்லாமல் வளர்ந்து சசி, இனி மேல் கதை தேர்விலும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. //

  சேது படத்தை தயாரிச்சது ,சசிக்குமாரின் மாமாவாம், அவர் அப்பா விநியோகம், ஃபைனான்ஸ் என செய்தார்னு பேட்டிக்கொடுத்தாரே.

  ஏர்க்காடு மாண்ட்ஃபோர்ட் ரெசிடென்சியல் ஸ்கூலில் படிச்ச வசதியான ஆளு, அப்போ அவருக்கு மியூசிக் டீச்சராக இருந்தது ஜேம்ஸ் வசந்தன்,அப்பவே படம் தயாரிச்சா நீங்க தான் இசைனு சொல்லி வச்சாராம்,அதே போல சுப்ரமணியபுரம் எடுத்தப்போ ஜேம்ஸ் வசந்தனை இசை அமைக்க வச்சார்னும் பேட்டிகளில் படித்துள்ளேன்.

  # ஆமாம் படத்துக்கு பிரம்மன்னு ஏன் பேர் வச்சாங்க? ஏற்கனவே ஈசன்னு ஒரு படம் எடுத்தாச்சுன்னா,அப்போ அடுத்தப்படம் நாராயணா வா? அவ்வ்!

  #ஹி...ஹி ஹீரோயின் படத்த பெருசா போடுங்கப்பா இருக்கா இல்லையானே தெரியலை ,ஐ மீன் லட்சணமா இருக்கானு சொல்ல வந்தேன்!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வவ்வால்... நீங்க ஒரு தமிழ் சினிமா டேட்டா பேஸ்....விஜய், சூர்யா, கார்த்தி மாதிரி இல்லாம வந்தாரேன்னு சொன்னேன்.. படம் விநியோகம் பண்ணுறவங்க ரொம்ப பெரிய ஆட்களா இருக்க மாட்டாங்கன்னு நான் நினைக்கிறன்..படத்தோட Producer னா பெரிய ஆள்...

   ஜேம்ஸ் வசந்தன் நியூஸ் எனக்கு புதுசு....விஜய் டிவி அவார்ட்ஸ் சுப்ரமணியபுரம் படத்துக்கு கிடைச்ச போது, மொத்த சசி டீம்ல எல்லோரும் மேடை ஏறுனாங்க..ஆனா அதுல ஜேம்ஸ் வசந்தன் மட்டும் மிஸ்ஸிங்.. ஏதோ மனஸ்தாபம்ன்னு நானா நினைச்சுகிட்டேன்..
   இருக்கிறதுலே பெரிய படமா (1028p) போட்டு இருக்கேன் ...அப்ப கூட உங்களுக்கு தெரியலையா... :-)

   Delete
 7. இயக்குனர் சசிகுமார், இயக்குனர் சசிகுமாராகவே இருந்திருக்கலாம்.. மேலும் இப்படி ஒரு பேஷன் லுக்கில் பார்க்க சகிக்கவில்லை.. படம் பார்க்கும் உத்தேசமும் இல்ல தல

  ReplyDelete
 8. சுந்தர பாண்டியனிலெ நட்பின் டோஸ் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது ... இதிலும் தொடர்கிறது போல ... அவருக்கு இது சரி வராது போலையே தல, பரமனாவே இருந்திருக்கலாம் ...

  ReplyDelete
 9. அண்ணா,

  இன்னிக்கு தான் படம் பாத்தேன்.. காமெடி மட்டும் இல்லண்ணா இது ஒரு வேஸ்ட் படம் தான்.. !!

  //நட்பு செண்டிமெண்டை சசி குமார் மொத்தமாக வாங்கி வைத்து இருக்கிறார்//
  ஹா..ஹா.. கரெக்டா சொன்னீங்க.. இந்தப்படத்துல ஓவராவே நெஞ்சை நக்குறார்.. ஆனா நமக்கு தான் சகிக்கலை..!!

  30 வருஷத்துக்கு முன்னாடி வரவேண்டிய படம்.. இப்பத்தான் வந்திருக்குது..அவ்வ்.. :(

  ReplyDelete
 10. கமலே இப்பதான் அடுத்தவன் காசிலே டைரக்ஷன் கத்துக்கொள்கிறார். இதுல அவரோட சிஷ்யர் வேறயா?

  சசி அவருக்கு எந்த கேரக்டர் சூட் ஆகுமோ அதில் நடிக்கலாம். தாடி வேற எடுக்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்.

  ReplyDelete