Sunday, June 23, 2013

ராஞ்ஜனா (2013) - தலைவலி இலவசம் !!

தமிழ்நாட்டில் இருந்து தனுஷிருக்கு முன்பு வரை பல தமிழ் நடிகர்கள், தமிழ் டைரக்டர்ஸ் பாலிவுட் சென்று தங்கள் முத்திரையை பதிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள், அனைவருக்கும் கிடைத்தது என்னவோ தோல்வி தான். கமல், ரஜினி, சூர்யா என்று இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். தமிழில் அழியா காவியங்களை குடுத்து வந்த மணிரத்தினம் தனது "ரத்தினதன்மையை" இழந்தது அவரது ஹிந்தி என்ட்ரிக்கு பிறகு தான் என்று நம்மால் நிச்சியமாக கூற முடியும். ஹிந்தி ஆடியன்சையும் கவர வேண்டும் தமிழ் ஆடியன்சையும் கவர வேண்டும் என்று அவர் எடுத்த சமீபத்திய கொத்து பரோட்டா திரைப்படங்களே அதருக்கு சாட்சி. பாலிவுட் தன் இரு கரங்களையும் கூப்பி வரவேற்று ஏற்று கொண்ட ஒரே தமிழர் ஏ.ஆர் ரஹ்மான் மட்டும் தான். 

தற்போதிய டிரென்ட் படி ஹிந்தி ஆடியன்சை பொறுத்த வரை ஹீரோ என்பவருக்கு வெள்ளை தோலு, கிளீன் ஷேவ் மூஞ்சி, சிக்ஸ் பேக்ஸ் போன்றவை நிச்சியமாக இருக்க வேண்டும், பேசிக் குவாலிட்டிஸ் என்று சொல்லலாம். யார் வேண்டுமென்றாலும் ஹீரோ ஆகலாம் என்பது ஹிந்தி சினிமா உலகில் நடக்காத காரியம். ஆனால் இதில் எந்த குவாலிட்டிசும் இல்லாத ஒரு தமிழ் நடிகரால் ஹிந்தி படத்தில் என்ட்ரி குடுக்க முடியும் என்றால் அது "கொலைவெறி" புகழ் தனுஷால் மட்டுமே முடியும். கொலைவெறி புகழ் மற்றும் அவருக்கு நன்றாக வரும் சைக்கோ நடிப்பை மட்டுமே வைத்து பாலிவுட்டில் சாதித்து விடலாம் என்ற தனுஷின் ஆசைக்கு பதில் சொல்லும் படம் தான் "ராஞ்ஜனா".


ராஞ்ஜனா படம் யுஸ்ஸில், அதுவும் நான் வசிக்கும் சாண்டியாகோ நகரில் ரீலீஸ் ஆகி உள்ளது என்றால் அதருக்கு காரணம் படத்தின் இசைஅமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மட்டுமே. இங்கு ரஹ்மானின் அணைத்து படங்களுக்கு ரீலீஸ் ஆகும் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டை சேர்ந்த தனுஷ் நடித்த படம், மற்றும் ரஹ்மான் இசை எங்களை தியேட்டருக்கு அழைத்து சென்றன. 

படத்தின் மீது எனக்கு பெரிய அளவு எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. சும்மா ரெண்டு மணி நேரம் கடத்தினால் போது என்கிற மனநிலையில் தான் சென்றேன். ஆனால் ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இரண்டு மணி நேரம் எனக்கு இருண்ட அறையில் இருபது மணி நேரம் கட்டி வைத்தது போல் கொடூரமாய் நகர்ந்து போனது. கடைசிக்கு கடுமையான தலைவலியுடன் தான் திரும்பி வந்தோம்.

படத்தின் கதை அரத பழசான காதல் கதை தான். அதில் புதுமையை புகுத்துகிறேன் என்று நம்மை வாட்டி வதைக்கிறார்கள். தனுஷ் வாரனாசியில் செட்டில் ஆனா தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஐயர் பையன். ஆறு வயதிலே முஸ்லிம் செல்வந்தரின் ஐந்து வயது மகளான் சோனம் கபூரை லவ்ஸ் செய்கிறார்.அதுவும் பார்த்தவுடனே. அவரது தெய்வீக காதல் வளர்ந்து விருச்சம் ஆகிறது. பத்தாவது படிக்கும் போது தனது மணி கட்டை அறுத்து (!!) சோனம் கபூரின் இதையத்தில் இடம் பிடிக்கிறார். 


சோனம் வீட்டில் விஷயம் தெரியவர அவரை ஊர் விட்டு ஊர் கடத்துகிறார்கள். எட்டு வருடம் கழித்து சோனம் திரும்பி வந்தால், தனுஷை பார்த்து "நீ யார், உன்னையை எங்கோ பார்த்த மாதிரியே இருக்கே" என்று கேட்கிறார். சின்ன வயசுல வந்தது பப்பி லவ், அதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்க கூடாது என்று கிளாஸ் எடுக்கிறார். தனுஷுடன் சேர்ந்து பாம்பே படத்தை போல் அருமையான ஹிந்து முஸ்லிம் காதல் கதையை சொல்லுவார்கள் என்கிற ஆர்வமாய் இருந்த நம் மீதும் சேர்ந்தே இடி விழுகிறது. நொந்து போன தனுஷ் மீண்டும் மணி கட்டை அறுத்து கொள்கிறார். படத்தில் எத்தனை பேர் எத்தனை முறை மணி கட்டை அறுக்கிறார்கள் என்கிற போட்டியே வைக்கலாம். எண்ணுவது கஷ்டம்.

சோனம் டெல்லியில் படிக்கும் போது புரட்சி புயல் அகரம் (அபய் தியோல்) விரும்பிய கதையை நமக்கும் தனுஷுக்கும் சேர்த்து சொல்கிறார். ஷாஜகான் விஜய் போல் எங்கள் காதலை நீ தான் சேர்த்து வைக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார். அதருக்கு தனுஷ் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை திரணி இருந்தால் (!!) தியேட்டரில் இந்த படம் அம்பிகாவதி என்கிற பெயரில் தமிழில் வரும் போது போய் பார்த்து கொள்ளுங்கள். படத்தின் முதல் பாதி தனுஷிருக்கு மிகவும் பரிச்சியமான ரோல், அதாங்க ஸ்டுடென்ட் ரோல். தாடி மீசையை எடுத்து எண்ணை வைத்து படிய சீவி, லூஸ் ஷர்ட் போட்டு பல்லு தெரியாமல் சிரித்தால் ஸ்டுடென்ட் கேரக்டர் ரெடி. 

3 படத்தில் நாம் பார்த்த அந்த ஸ்டுடென்டுக்கும் இதருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டாம் பாதியில் காலேஜ் புரட்சி படையை வழி நடத்தி புரட்சி செய்யும் வேலை. "வேட்டையாடு விளையாடு" படத்தின் லொள்ளு சபா வெர்ஷனில் பேசியே கழுத்து அறுத்து கொல்லுவார்கள் இளாவும், அமுதனும். அதே போல் இதில் தனுஷ் பேசியே புரட்சீசீ செய்கிறார். யப்பா முடியல சாமி. தனுஷ் கதாபாத்திரம் தான் படத்திலே மிகவும் குழப்பமானது, எந்த காட்சியில் எப்படி ரீயாக்ட் செய்வார், என்ன முடிவு எடுப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. 


சோனம் கபூர் அழகாக வருகிறார், அளவாக நடிக்கிறார். தில்லி யுனிவெர்சிட்டியில் அபய் தியோல் மீது இவருக்கு காதல் அரும்பும் காட்சிகளில் மிகவும் க்யூட் எக்ஸ்ப்ரஷன்ஸ் வெளிப்படுத்தி இருப்பார். அபய் தியோல் வினவு ஸ்டைலில் பத்து பேரை வைத்து கொண்டு கருப்பு சட்டை மாட்டி கொண்டு மாணவர் புரட்சி செய்கிறார். நெம்ப கஷ்டம்..!! படத்தில் அவர் செய்த ஒரே நல்ல காரியம் சோனம் கபூருக்கு காலேஜ் சீட் வாங்கி தருவது தான். மற்ற படி ஒன்றுமே செய்யாமல் எலெக்ஷனில் நின்று ஆல்மோஸ்ட் டெல்லி சி.எம் ஆகி விட்டது போல் பில்ட் ஆப் மட்டும் குடுக்கிறார். மாணவர் புரட்சி எபிசோடுகள் பாதாளத்தில் இருந்த படத்தை அதள பாதாளத்தில் தள்ளி விடுகின்றன. 

படத்தில் உருபடியான பார்ட் என்று சொன்னால் அது இசை மற்றும் ஒளிப்பதிவு. நட்டி என்கிற நடராஜன் தான் ஒளிப்பதிவு, வாரணாசி ஹோலி பண்டிகை காட்சிகளில் இவரின் கேமரா விளையாடி உள்ளது. தனுஷ் சோனம் சிறு வயது காதல் எபிசோடில் ரஹ்மான் பின்னணி இசையில் அட்டகாச படுத்தி இருப்பார். குடுத்த காசுக்கு பாட்டு மட்டும் தான் கேட்க்கும் படி உள்ளது. படத்தின் ஒரே ஆறுதல் பாரின் பாட்டு இல்லை, தனுஷ் சட்டையை கழட்டி இடுப்பில் கட்டி சண்டை போடவில்லை என்பது தான். தனுஷின் ஹிந்தி என்ட்ரி தமிழு சினிமாவுக்கு நல்லது தான், இவரை பார்த்து சிம்புவும் சில காலம் மும்பையில் குடி ஏறுவார். தனுஷ் இதே போன்ற படங்களில் நடிங்க, தமிழ் பக்கமே வந்துராதீங்க.

ராஞ்ஜனா (2013) - தலைவலி இலவசம் !!
My Rating: 5.6/10......


26 comments:

 1. ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமாவது ஆறுதல் தந்தாரே... அந்த மட்டும் நிம்மதி ராஜ்! நான் படம் பாக்கறதா இல்ல...! இருபது வருஷம் பழைய கதை எனக்கெதுக்கு? அந்த வயசுலயே நிறையப் பாத்து ரசிச்சு முடிச்சாச்சே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார். பழைய கதையவாது நல்லா ரசிக்கிற மாதிரி குடுத்து இருக்கலாம் சார். :)

   Delete
 2. படம் ஹிந்தின்னு தெரிஞ்சிருந்தாலும் டவுன்லோடு பண்ணி பார்க்க ஆரம்பிச்சேன்.. ஒண்ணுமே புரியல்ல. அம்பிகாவதி வரட்டும்னு நிறுத்திட்டேன் :)

  நெறையப்பேரு படம் சூப்பர், ஹிட் என்று சொல்லுறாங்களே ??

  ReplyDelete
  Replies
  1. வாங்க மதுரன், சில பேர் நல்லா இருக்குன்னு சொல்லுறது எனக்கும் ஆச்சிரியம் தான், ஒவொருதருக்கும் ரசனை மாறும்ன்னு நினைக்கிறன், எனக்கு படம் படு மொக்கையா இருந்தது. முதல் பாதியாவது ஓகே, இரண்டவாது பாதி உட்க்காரவே முடியல. ரொம்பவே கஷ்டப்பட்டு பார்த்தோம். அம்பிகாவதி வந்தா பார்த்திட்டு சொல்லுங்க, உங்க டேஸ்டடும் என்னோட ரசனையும் ஒண்ணான்னு :):)

   Delete
 3. பாட்டு கூட பரவாயில்லை...

  இலவசம் வேண்டாம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் சார்.

   Delete
 4. தலைவலியா? அம்பிகாபதிக்கு நான் ஆப்சென்ட்.. :(

  ReplyDelete
  Replies
  1. ஜி, அம்பிகாவதி போய் பாருங்க. ரசனைகள் மாற வாய்ப்பு இருக்கு.

   Delete
 5. படம் பார்த்து நொந்தவர்களில் நானும் ஒருவன். அங்கே தனுஷ் குறைந்தது ஒரு ஹிட் ஆவது தருவார் என நம்புகிறேன். லெட்ஸ் ஸீ.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சிவா..தனுஷிருக்கு இருக்கும் திறமைக்கு காண்டிப்பா ஹிந்தியில் பெரிய அளவில் சாதிப்பார், நல்ல கதைகளில் நடித்தால்.

   Delete
 6. சாண்டியேகோ -லியா? எப்பங்க? கண்டிப்பா பாக்கனும்னு இருந்தனே?

  ReplyDelete
  Replies
  1. வாங்க சரண்..
   Mission Valley ல இருக்கிற AMC தியேட்டர்ல போட்டு இருக்காங்க பாஸ்.
   http://www.amctheatres.com/movie-theatres/amc-mission-valley-20
   தியேட்டர்ல பார்க்கிற அளவு படம் அவ்வளவு வொர்த் இல்ல பாஸ்.. :):)

   Delete
 7. ராஜ்,

  நேர்மையா படத்தின் தரத்தை சொல்லிட்டீங்க!

  இந்த பால்யகால காதல்,அப்புறம் காதலியின் காதலுக்கு உழைப்பது என்ற கதை இந்திய சினிமாவில் சுமார் 2 லட்சம் தடவையாவது படமா எடுத்திருப்பாங்க :-))

  ஆனாலும் விடாம படம் எடுக்கிறானுங்க, தனுசு இந்திப்படம்,சோனம் கபூர்,ரெஹ்மான்னு பேரக்கேட்டதும்,கதையே கேட்காம மண்டய ஆட்டி இருப்பார்னு நினைக்கிறேன் :-))

  ReplyDelete
  Replies
  1. வாங்க வவ்வால், ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கீங்க. படம் எனக்கு பிடிக்கல. கமல் தவிர்த்து உங்களுக்கும் எனக்கும் ஒத்த ரசனை தான். :):)

   Delete
 8. அப்போ படம் நல்லா இல்லையா? ஹிந்திகாரங்க ஆஹா ஓஹோன்னு சொல்லி எழுதிருக்காங்களே, அதுல ஏதும் உள்குத்து இருக்குமோ??

  // தனுஷ் இதே போன்ற படங்களில் நடிங்க, தமிழ் பக்கமே வந்துரா // இத நீங்க சிம்புவுக்கு சொல்லிருந்தீங்கன்னா நான் லைக் பண்ணிருப்பேன்..

  ReplyDelete
  Replies
  1. தல, தனுஷ் ஹிந்தி போனா, பின்னாடியே சிம்புவும் போவார், அதுவும் தமிழுக்கு நல்லது தான்.
   சைட்ல வர ரீவியூ எல்லாம் என்னை பொறுத்த வரைக்கும் பேக் தான் தல. நேர்மையா இருக்காதுன்னு நான் நம்புறேன். வாய்ப்பு கிடைச்சா பார்த்துட்டு சொல்லுங்க..

   Delete
 9. எப்படி இந்த படத்திற்கு போய் சிக்கி கொண்டீர்கள்? ஏதாவது ஆங்கில படம் பார்த்திருக்கலாமே ராஜ்.
  நீங்கள் சொல்வதை பார்த்தால் டிவியில் போட்டால் கூட எஸ் ஆகிவிடனும் போல.
  இந்த படத்திற்கா தனுஷ் கதை என்னை கவர்ந்ததால் ஹிந்தியில் நடிக்கிறேன் என்று சொல்லிவந்தார்.நான் கூட கொஞ்சம் புதுசா இருக்குமோ என்று யோசித்தேன்.இந்த இயக்குனர் tanu weds manu என்று ஹிட் படம் தந்தவர்.
  ஆனால் ஹிந்தி மீடியாக்கள் படத்தை புகழ்கின்றன.என்ன மாயமோ .ரஜினி வேலையோ?

  ReplyDelete
  Replies
  1. இந்த படம் மட்டும் தான் இங்க ரீலீஸ் ஆகி இருந்தது விஜய், வீக் எண்டை கடத்த போய் மாட்டிகிட்டேன். ரஜினி வேலை எல்லாம் இருக்காது ஜி.

   Delete
 10. தல,

  என்ன திடீர்னு இப்டி சொல்லிட்டீங்க..? பேசிக்கா நாவொரு தனுஷ் ஃபேன். இப்டி தலயில கல்ல தூக்கிப் போட்டுட்டீங்களே.. :( :(
  இந்தப்படம் மாப்பிள்ளை, வேங்கை வரிசைல சேந்துருமோ..? இல்ல கொஞ்சமாச்சும் பரவாலயா ?

  ReplyDelete
  Replies
  1. தல, போன வருஷம் ரீலீஸ் ஆனா தமிழ் படத்துல எனக்கு பிடிச்ச படம் 3 தான். இத சொன்னா என்னையை ஒரு மாதிரி பார்கிறாங்க. தனுஷ் ரொம்ப ரொம்ப நல்ல நடிகர் தான், ஆனா ஒரே மாதிரி கதாபாத்திரங்கள் பண்ணுனா பார்க்கிற நமக்கு பொறுமை போயிரும். படம் பாருங்க, பார்த்திட்டு வந்து சொல்லுங்க. :)

   Delete
 11. நல்லவேளை ராஜ் காப்பாதிடீங்க.
  உண்மையில் Sify Review பாத்துட்டு போலாம்னு இருந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கிருஷ்ணா, என்னோட நண்பர்களும் சில சைட்ல வந்த பாசிடிவ் ரீவியூவை படிச்சிட்டு தான் படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணுனாங்க. ஆனா எங்க எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யல.

   Delete
 12. Raj, Most of things that you told in review are correct. But the reason Dhanush was chosen for this role, is based on his role in 3 and Aadukalam. So I didn't expect him to be presented in a totally different way. This is a hindi movie and the taste of the audience differs. The movie is doing well in Box office. In fact because of the good reviews, the movie started picking up after Saturday. But the second half was too much off track and confusing except for few instances of solid acting by both Dhanush and Sonam. This is a solid debut for Dhanush in Hindi. For me, Music, Cinematography and performances of the all actors especially Dhanush, Sonam, Mohammad Zeeshan Ayyub and Swara Bhaskar was brilliant. Abhay is crisp in his role but a little too old for a college student. Dialogues at few instances were smart and convincing, the subtitles don't do justice most of the time. For a bollywood romance, it exudes a lot of freshness owing to Dhanush with his unconventional looks as a lead actor.

  ReplyDelete
 13. படத்த பத்தி ஆஹா ஓஹோ ன்னாக புஸ்ஸா

  ReplyDelete
  Replies
  1. ஆமா தல, படம் மொக்கை தான்.

   Delete
 14. அந்த இரண்டாவது ஹீரோயின் பத்தி சொல்லவே இல்லையே. . ஹிஹிஹி. .

  ReplyDelete