Friday, July 05, 2013

சிங்கம்-II (2013)- பர பர பட்டாசு !!

இன்று அமெரிக்க சுதந்திர தினம் என்பதால் இங்கு அணைத்து அலுவல்களும் விடுமுறை. அதனால் என்றுமே வெள்ளிக்கிழமை ரீலீஸ் ஆகும் படங்கள் இன்று விடுமுறை என்பதால் இன்றே அதாவது வியாழன்று ரீலீஸ் ஆனது. அதில் சிங்கம்-II படம்மும் ஒன்று. ஊரே அமெரிக்க சுதந்திரத்தை கொண்டாடி கொண்டு இருக்க நாங்கள் மட்டும் சிங்கம்-II ஓடும் திரைஅரங்குக்கு சென்றோம். சிங்கம்-II படத்தின் முதல் டீசர் மட்டும் பார்த்து விட்டு விழுந்து புரண்டு சிரித்தேன். அந்த சமயத்தில் தான் சூது கவ்வும், நேரம் போன்ற நல்ல தமிழ் படங்கள் வந்து கொண்டு இருந்தன. ரசிகர்களின் ரசனை சூது கவ்வும் போன்ற படங்களினால் மாறி கொண்டு வரும் வேலையில் எப்படி தான் இப்படி தைரியமா "ஆ...ஊன்னு கத்திகிட்டே பஞ்ச் டயலாக் பேசி படம் எடுக்கிறாங்களோ என்று ஹரி மீது ஆச்சிரியம் வந்தது.

அது போக சூர்யாவின் கடைசி ரெண்டு மொக்கை படங்களினால் ஏகத்துக்கும் நொந்து போய் இருந்த காரணத்தினால் சிங்கம்-II மேல் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் ஏற்படாமல் போனது. ஹரி எல்லாம் என்னத்த படத்தை எடுத்து கிழித்து விடுவார் என்கிற எண்ணத்திலே தியேட்டர் சென்று அமர்ந்தேன். ஆனால் என்னுடைய என்னத்தை தவிடுபொடியாக்கி அட்டகாசமான பர பர அக்ஷன் படத்தை வழங்கி உள்ளார் ஹரி. படம் கிட்ட தட்ட ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடுது, ஆனால் நேரம் போனதே தெரியவில்லை.


சிங்கம் முதல் பாகத்தில் முடிந்த கதை அப்படியே இதில் தொடர்கிறது. வழக்கமான தமிழ் படத்திற்கே உண்டான பார்முலா படி சூர்யா அஞ்சலி  குத்து பாடலுடன்  படம் தொடங்குகிறது. துரைசிங்கம் (சூர்யா) தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு துத்துக்குடி டவுனில் ஒரு பள்ளியில் NCC மாஸ்டராக வேலை செய்கிறார். அவ்வபோது அந்த ஊரில் நடக்கும் கடத்தல்களை பற்றி உளவு வேலை வேறு செய்கிறார். 

அதே பள்ளியில் +2 படிக்கும் மாணவி திவ்யா (ஹன்சிகா). அந்த ஊரில் பெரிய புள்ளியான "பாய்" வெளிநாட்டில் இருந்து வரும் போதை மருந்தை கடல் வழியாக இந்தியாவிற்குள் கடத்துகிறான். அதருக்கு உடந்தை ஹன்சிகவின் சித்தப்பா தங்கராஜ் (ரஹ்மான்). இவர்களுக்கு ஊரில் உள்ள அணைத்து போலீசும் உடந்தை. போதை மருந்தை சப்ளை செய்யும் இன்டர்நேஷனல் கிரிமினல் டேனி. அண்டர் கவர் போலீஸ் ஆக இருக்கும் துரைசிங்கம் உள்துறை அமைச்சருக்கு மட்டும் அவப்போது ரிப்போர்ட் அனுப்புகிறார். 


ஒரு கட்டத்தில் பெண் கடத்தல் பிரச்சனையில் துத்துக்குடியில் இரண்டு பிரிவினரிடையே ஜாதி கலவரம் ஏற்படும் நிலைமை வருகிறது. அந்த நேரத்தில் மீண்டும் சார்ஜ் எடுத்து DSP வேலையில் சேருகிறார் துரைசிங்கம். பெண் கடத்தல் எபிசோடு தான் படத்தின் உண்மையான் ஆரம்பம். ஹரியின் அக்மார்க் பர பர காட்சிகளால் நாம் நிமிர்ந்து உட்கார்வோம், அதில் இருந்து நம்மை யோசிக்கவே விடமால் படம் வேகம் எடுக்கும். வேறு ஒரு கட்டத்தில் டேனியை யார் என்றே தெரியாமல் துரைசிங்கம் அரெஸ்ட் செய்யும் நிலைமை ஏற்படும், பிறகு டேனி யார் என்று தெரிய வரும் பொழுது அவன் தப்பித்து இருப்பான். தப்பித்த டேனியை மீண்டும் துரைசிங்கம் பிடித்தாரா இல்லையா என்பதை ஓவர் டோஸ் அக்ஷன் காட்சிகள் முலம் சொல்லி  முடித்து இருக்கிறார்கள்.

படத்தின் பெரிய பலமே சூர்யா தான். மனிதர் சில காட்சிகளில் ஓவராக கத்தி பேசினாலும் அது எரிச்சலை வர வளைப்பது இல்லை. தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து உள்ளார். இரண்டு தொடர் தோல்விகளுக்கு இந்த படத்தின் முலம் முற்றுபுள்ளி வைத்து உள்ளார். அதி புத்திசாலி போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் சூர்யா. இவர் அனுஷ்காவுடன் பேசும் காட்சிகள் தவிர்த்து அனைத்திலும் நிறுத்தாமல் முச்சு விடமால் பேசுகிறார். நிறைய வசங்கள் நானாக அர்த்தம் புரிந்து கொண்டேன். டயலாக் டெலிவரி அவ்வளவு  பாஸ்ட். அக்குஸ்ட் இப்ப அந்த டவர் சிக்னல்ல இருக்கான், இப்ப இந்த டவர்ருக்கு மூவ் ஆகிட்டான், இன்னும் பத்து நிமிசத்துல ஸ்பாட்க்கு வந்துருவான், போன்ற ட்ரேட்மார்க் ஹரி வசனங்களை படம் முழுக்க நிரம்பி வழிகிறது. 

ரொமான்ஸ் காட்சிகளில் அளவான நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார், முதல் பாகத்தில் இருந்த சூர்யா அனுஷ்கா கெமிஸ்ட்ரி இதில் சுத்தமாய் மிஸ்ஸிங். என்ன எந்த வசனம் பேசும் போதும் பல்லை கடித்து கொண்டு பேசுவதை தவிர்த்து இருக்கலாம் சூர்யா. அது போக முதல் பாகத்தில் கோப பட வேண்டிய நேரத்தில் முறைத்து பார்க்கும் அதே தப்பை இதிலும் தொடர்ந்து இருக்கிறார். முதல் பாகம் போலவே படத்தின் லாஜிக் மிஸ்டேக்சை பற்றி யோசிக்கவே விடாமல் படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணம் செய்து முடிந்து விடும்.


பிரதான கதாபாத்திரம் சூர்யா தவிர்த்து படத்தில் நிறைய துணை கதாபாத்திரங்கள் வருகிறது. படத்தின் மார்க்கெட் வேல்யுவிற்கு மற்றும் காமெடிக்கு சந்தானத்தை பயன்படுத்தி உள்ளார்கள். ஹரியின் எந்த படத்திலும் காமெடி வொர்க் அவுட் ஆனது இல்லை, இதிலும் அந்த ரெகார்ட் வெற்றிகரமாக தொடர்ந்து உள்ளது. காமெடி காட்சிகள் அனைத்தும் மொக்கை ரகம். விவேக்கிருக்கு சுட்டு போட்டாலும் காமெடி வரது என்பது மறுபடியும் நிருபணம் ஆகி உள்ளது. ஹன்சிகாவிற்க்கு படத்தில் பெரிய ரோல் இல்ல, துரைசிங்கத்தை ஒன் சைடு லவ் பண்ணும் கேரக்டர். வில்லன் டேனி சரியான தேர்வு. நல்ல முகபாவம் காட்டி நடித்து உள்ளார். ரஹ்மான் மற்றும் பாய்யாக வரும் முகேஷ் ரிஷி தங்கள் கதாபாத்திரங்கள் உணர்ந்து நடித்து உள்ளார்கள்.

படத்தில் கேமராமேன் பிரியனின் உழைப்பு பாராட்டுக்குரியது. படத்தில் நிறைய ஹெலிகாப்டர் ஷாட்ஸ் உண்டு, எல்லாமே அட்டகாசமாய் காட்சி படுத்த பட்டு உள்ளது. படத்தில் பின்னணி இசை பெரிய லெட் டவுன் என்றே நான் சொல்லுவேன். பரபரப்பான காட்சிகளின் டெம்போவை குறைப்பது போல் இருந்தது பின்னணி இசை. பாடல்கள் தியேட்டரில் கேட்க்கும் படி இருந்தன. சாதாரண கதையை தனது திரைக்கதை முலம் மெருகேற்றி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் ஹரி. 

சிங்கம்-II - பர பர பட்டாசு !!
My Rating: 8.0/10......


15 comments:

 1. ஆஹா...இண்ணைக்கே படம் பாக்கணும் போல இருக்கே !
  திங்கள்கிழமை போலாம்னு இருந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. சார் பக்கா மசாலா படம், உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியல. போய் பார்த்திட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

   Delete
 2. நல்ல விமர்சனம்... இந்த ஞாயிறு பர பர...!

  ReplyDelete
  Replies
  1. போய் பாருங்க தனபாலன், பார்த்திட்டு உங்க பார்வையை சொல்லுங்க.

   Delete
 3. ட்ரெயிலர்ல கடுப்பேத்தினாலும் படம் நல்லாயிருக்கு போல... மொக்கையா இருக்கும் என்று நினைச்சு போகல்ல.... பாத்திரவேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி மதுரன். உங்க விமர்சனம் படித்தேன். படம் சுமார் போல் தான் நீங்கள் எழுதி உள்ளீர்கள்.

   Delete
 4. ஹரி படம் வழக்கமாகவே நல்ல டைம் பாஸாக இருக்கும், கதையை எதிர்பார்க்காமல், திரைகதையை எதிர்பார்த்தால் ஹரி எப்போதுமே டாப் தான், அடுத்த வாரம் பார்க்க வேண்டும்..

  இப்போது தான் கவனித்தேன் தல, பரிசுப் போட்டி விளம்பரத்துக்கு நன்னி :-)

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல.. படம் பார்த்திட்டு கருத்து சொல்லுங்க. நமக்குள்ள நன்றி எல்லாம் எதுக்கு தல. போட்டி நிறைய பேரை சென்றடைய வேண்டியது தான் முக்கியம்.

   Delete
  2. நிச்சயமாய் தல... பதிவுலகில் இத்தனை பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் நிச்சயமாய் நம்ப வில்லை, அதை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் நீங்கள்... அதனால் வந்த நன்றி அது....

   Delete
 5. மறுபடியும் தமிழ் சினிமாவ மசாலாகுள்ள அமுக்கியடியே ஹரி இனி எல்ல பயலுகளும் பந்தாடுவானுங்களே ஐயோ பாவம் பைடேர்ஸ்

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பா. எல்லா கலவையும் கலந்த உணவு தானே சினிமா. அதில் மசாலவும் இருப்பதில் தப்பில்லையே :):)

   Delete
 6. எனக்கு ரொம்ப பிடித்தது.....

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் உங்களுக்கும் ஒரே ரசனை ஜீவா. :):)

   Delete
 7. தல,

  எனக்கு படம் ஆவரேஜா தான் தெரிஞ்சது. உண்மையிலேயே, படத்தோட க்ளைமாக்ஸ்ல சூர்யா ஆப்பிரிக்கா கெளம்பிப்போகும் போது வெகுவாக போரடித்தது. பழைய ஹரி படங்கள் அளவுக்கு இல்லனு தான் சொல்லுவேன். பழைய படங்கள்ல வசனங்கள் தான் பலமே. இதுல அதுவே பலவீனமாயிப்போச்சு. அதுபோக படத்துல 3 வில்லன் இருந்தும் ஒரு பரபரப்பே வரல. பிரகாஷ்ராஜ் ஒத்த ஆளா இருந்து மிரட்டுன அளவுக்கு இதுல இல்ல. அப்பறம் ஹன்சிகா பாத்திரத்தோட முடிவு முன்னாடியே யூகிக்க முடியுதுங்கறதால அதுவும் கொஞ்சம் போரடிச்சது.

  //முதல் பாகத்தில் இருந்த சூர்யா அனுஷ்கா கெமிஸ்ட்ரி இதில் சுத்தமாய் மிஸ்ஸிங்//
  நூறு சதவீதம் வழிமொழிகிறேன்.

  படத்துல எனக்கு பிடிச்ச சீன்கள், சூர்யா போலிஸா பதவி ஏத்துகிட்டு கலவரத்த அடக்குற சீன், வில்லன்கள் போலிஸ் ஸ்டேஷன தீ வச்சு எரிக்கற சீன். ரொம்ப போரடிச்ச சீன்கள், ஸ்கூல்ல தேசியகீதம் பாடிட்டு இருக்கறப்ப கலாட்டா பண்ற ரவுடிகிட்ட பக்கம் பக்கமா வசனம் பேசற சீன், தன்னோட வீட்டுக்கு வர்ற அடியாட்கள ஒத்த ஆளா இருந்து சண்டை போட்டு வாங்கல்லேனு கூப்புடற சீன், ஹன்சிகா வர்ற சீன்கள், சந்தானத்தோட சீன்கள்.

  மொத்தத்துல சிங்கம்-1 கூட கம்பேர் பண்ணா இது கொஞ்சம் ஆவரேஜ் தான் தல.
  கதையில இன்னும் கொஞ்சம் கான்சன்ட்ரேட் பண்ணிருந்தா சரவெடியா இருந்திருக்கும்.

  ReplyDelete
 8. முதல் பாதி பரவா இல்லை ஆனால் பின் பாதி இழுவை ராஜ் உங்களுக்கு எப்படி பிடித்தது என்று தெரியவில்லை.

  சற்று கத்தல் வேறு ஓவர் தான்.

  ReplyDelete