Sunday, July 07, 2013

Lila Says - (2004) பிரெஞ்ச் படம்- Erotic But Not Vulgar !

Lila Says (2004) பிரெஞ்சு மொழி படம். 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இன்டர்நேஷனல் பெஸ்ட் செல்லிங் பிரெஞ்சு நாவலான "Lila dit ça" (Lila Says) தழுவி எடுக்க பட்ட திரைப்படம். இந்த நாவலை பற்றி சுவாரிசியம் ஒன்று உள்ளது, அதாவது இன்று வரை இந்த நாவலை எழுதியவர் யார் என்று தெரியாது. 1996 ஆம் வருடம் பிரான்ஸின் இருக்கும் ஒரு முக்கிய பதிப்பகம் முன்பு இரண்டு டைரி குறிப்புகள் கிடந்தன. அவைகளை புரட்டி பார்த்த பதிப்பக ஊழியருக்கு பெரிய அதிர்ச்சி. சிமோ என்கிற 19 வயது வாலிபனின் தனது சொந்த காதல் அனுபவங்களை படிபவர்களின் மனதை உருகும் விதமாக விவரித்து இருந்தான். படித்து முடித்த பிறகு அவர் கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் வந்தது. இதை கண்டிப்பாய் நாவல் வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்து அதை முடித்தும் காட்டினார்.

எழுதியவர் பெயர் என்று ஒன்றும் இல்லாமல் வெளி வந்த இந்த நாவல், எவ்வளவோ கலாச்சார அணுகுண்டுகளை அல்வா சாப்பிடுவது போல் ஜீரணிக்கும் பிரெஞ்ச் குடி மக்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் குடுத்தது. அதன் அமோக விற்பனை, மற்றும் வரவேற்பைப் புரிந்து கொண்ட அமெரிக்காவின் ஸ்க்ரிப்னர் பதிப்பகம் நாவலை ஆங்கிலத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியிட்டது. ஜியாத் டோரி(Ziad Doueiri) இந்த நாவலின் திரை வடிவத்தில் 2004 ஆம் ஆண்டு பிரெஞ்ச் மொழியில் தீட்டினார்.


வாய்ஸ் ஓவரில் சிமோ தனது அனுபவங்களை டைரியில் பதிந்து கொண்டிருக்கும் காட்சி தான் படத்தின் முதல் காட்சி. எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பத்திலே எழுத ஆரம்பிக்கிறான். நேற்றைய லிலாவின் சந்திப்பை பற்றி நமக்கு விவரிக்கிறான். லிலா திரையில் தோன்றுகிறாள். அவள் பேசும் வசங்கள் கீழே வருமாறு.

      “  என் முடி எப்படி இருக்கு? சூப்பரா இல்ல ?
          என் கண்ணப் பாரு. ப்ளூ கலர் ஸ்படிகம் போல் இல்ல ?
          என் உடல் பால் போல் வெள்ளை கலர்ல இருக்குதானே ?
          எங்க அத்தை சொல்வாங்க. நான் ஒரு தேவதை.
          சரி. இப்போ
           DO YOU WANT SEE MY PUSSY? "

சிமோவுடன் சேர்ந்து நாமும் ஷாக் ஆகும் போது திரையில் படத்தின் பெயர் "LILA SAYS" என்று வரும். நிற்க, இது மாதிரியான முதல் காட்சியை பார்த்தவுடன் இதை கில்மா பட லிஸ்டில் சேர்த்து விடாதீர்கள். லிலா சொல்லுவது தான் ஆபாசமாய் இருக்கும். செயலில் புனிதத்தன்மை இருக்கும். 

சிமோ 19 வயது நிரம்பிய அரேபிய முஸ்லிம் வாலிபன். பிரான்ஸில் இருக்கும் சிறு ஊரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பில் அவன் அம்மாவுடன் வசித்து வருகிறான். வேலை எதுவும் இல்லாத காரணத்தினால் மற்ற முன்று முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியாய் பொழுதை கழித்து வருகிறான். சிமோவின் உற்ற நண்பன் மௌலாத் (Mouloud). இவர்கள் நால்வரும் சேர்ந்து சிறு சிறு திருட்டு காரியங்களில் தங்கள் பிழைப்பை ஓட்டுகிறார்கள். அந்த குடியிருபிருக்கு தன் வயதான அத்தையுடன் வருகிறாள் 16 வயதே நிரம்பிய கத்தோலிக்க அழகு தேவதை "லிலா". சிமோ யாரிடமும் அதிகம் பேசாத, ஆனால் கூர்ந்து கவனிக்க கூடிய, தன் மனதிற்குள் பேசும் சுபாவம் உடையவன். 


கதை மட்டுமே எழுத தெரிந்த சிமோவிருக்கு அவனது பிரெஞ்ச் டீச்சர் பாரிஸில் இருக்கும் ஒரு எழுத்தாளர் பள்ளியில் இடம் வாங்கி தருவதாய் சொல்ல்கிறார். ஆனால் அந்த பள்ளியில் சேர சொந்த அனுபவ கட்டுரை ஒன்றை சிமோ எழுத வேண்டும் என்று வேறு சொல்கிறார். சிமோவின் நண்பர்கள் எழுத்தாளர் பள்ளி எல்லாம் வேளைக்கு ஆகாது, நீ அங்கு எல்லாம் போகதே என்று அட்வைஸ் செய்கிறார்கள். சிமோவின் வாழ்கை இப்படியாக செல்கிறது,

தன் நண்பர்கள் பட்டாளத்துடன் அமர்ந்து இருக்கும் ஒரு மாலை வேளையில் லிலா தன் சைக்கிளின் பின்னால் உயரமான செடிக் கன்றுடன் அவள் அவர்களைக் கடக்கிறாள். அவளை பார்க்கும் சிமோவின் நண்பர்கள் அனைவரும் அவளை காதலிக்க தொடங்குகிறார்கள். மௌலாத் ஒரு படி மேலே போய் அவளை கற்பனையில் கல்யாணம் செய்து குழந்தை வரை சென்று விடுகிறான். சிமோ மட்டும் எதுவும் பேசாமல் இருக்கிறான். லிலா திரும்பும் போது கடைசியாய் சிமோவை மட்டும் பார்த்து  புன்னகையை வீசி விட்டு நகர்கிறாள். சிமோ எதிர் கொள்ளும் முதல் ஆடம் டீசிங் !!

அந்த ஒரு நொடி புன்னகை சிமோவின் இதய துடிப்பையே நிறுத்தி விட்டதாய் பிறகு அவனது டைரி குறிப்பில் குறிப்பிடுக்கிறான். அதன் பிறகு சிமோவும் லிலாவும் சந்திக்கும் காட்சி மேலே சொன்ன முதல் காட்சி. அந்த காட்சி முடிவில் லிலா தான் சொன்னதை செய்தும் காட்டுவாள். ஊஞ்சலில் ஆடியபடி லிலா தான் சொன்னதை சிமோவிடம் காட்டும் காட்சி துளியும் ஆபாசம், கவர்ச்சி இல்லாத அழகிய கவிதை. அதன் பிறகு லிலாவும் சிமோவும் சந்திக்கும் காட்சிகளில் லிலா மட்டும் தான் பேசுகிறாள். தன் செக்ஷுவல் பண்டசி , செக்ஷுவல் கனவுகள் பற்றி  கூசாமல் பேசுகிறாள். தொடர்ந்த சந்திப்புகளில் அவள் சொல்லும் கலர் கலர் செக்ஸ் அனுபவக் கதைகளை, கனவுகளைக் கேட்கிறான் சிமோ. சில நேரங்களில் தவறாக எண்ணும் அளவுக்கு அவளது கதைகள், வார்த்தைகள் ஆபாசமாக நீள்கின்றன. இருந்தாலும் அவளது கதைகளையும் மீறி சிமோவிருக்கு அவள் மீது காதல் வருகிறது. 


தனது காதலை அவளிடம் சொல்ல பல சந்தர்பங்கள் கிடைத்த போதும் ஏதோ ஒன்று சிமோவை தடுக்கிறது. அது லிலாவின் பேச்சு தான் காரணம் என்று நம்மால் ஊகிக்க முடியும். இப்படியாக நகரும் கதையில் மௌலாத்திருக்கு லிலாவின் மேல காமம் வெறி வந்து விடுகிறது, அவளை அடைய முயற்சிகள் எடுக்கிறான். ஆனால் லிலா மௌலாத்தை துளியும் சட்டை செய்யாமல் நகர்ந்து சென்று விடுகிறாள். இறுதியில் சிமோ-லிலா சொல்ல படாத காதல் என்னவானது, மௌலாத்தின் காம வெறி எதில் போய் முடிந்தது என்ற முடிச்சுகளை இயக்குனர் கனத்த மனதுடன் திரையில் அவிழ்த்து இருப்பார். 

படத்தின் இயக்குனர் ஜியாத் டோரி க்வென்டின் டரான்டினோ பள்ளியில் படித்தவர். க்வென்டினிடம் கேமரா மேன் ஆக பணி புரிந்தவர். அதனாலே என்னமோ படத்தில் நிறைய காட்சிகளை வசனங்கள் முலமே நகர்த்தி சென்றிருப்பார். லிலா பேசும்  வசனங்கள் சொல்லும் கதைகள் எதுவுமே நமக்கு அருவெருப்பை ஏற்படுத்தாது. லிலாவாக நடித்த தேவதையின் பெயர் Vahina Giocante.இந்த தேவதையை தவிர இந்த படத்தில் வேறு யார் பேசி இருந்தாலும் இந்த படம் போர்ன் மூவி லிஸ்டில் சேர்ந்து இருக்கும். ஆனால் அது போன்ற என்னத்தை துளியும் நமக்கு ஏற்படாதவாறு லிலா பார்த்து கொள்கிறாள். சிமோ கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நபர் "Mohammed Khouas". இவர் சிமோ வேடத்துக்கு அட்டகாசமாய் பொருந்தி இருப்பார். அவ்வபோது மனதிற்குள் பேசும் பாணி கதைக்கு அருமையாய் பொருந்தி வரும். கிளைமாக்ஸ் காட்சியில் இவரின் நடிப்பு பிரமாதமாய் இருக்கும். 

படத்தின் ட்ரைலர் :படத்தில்  சிமோ லிலாவை மோட்டார் பைக்கில் முன்னால் வைத்து கொண்டு பயணம் செய்யும் காட்சி அழகான கவிதை. அந்த காட்சியில் வரும் பின்னணி இசை மனதை விட்டு அகல வெகு நேரம் ஆகும் என்பது உறுதி. சிமோ மட்டும் லிலா ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்து மௌலாத் மற்றும் நண்பர்களுடன் பேசும் காட்சி கிட்ட தட்ட முன்று நிமிடம் ஒரே ஷட்டில் படமாக்கி இருப்பார் இயக்குனர் ஜியாத் டோரி. நல்ல திரைப்படங்களை விரும்பும் அனைவரும் இந்த படத்தை தவற விட கூடாது.

Lila Says - Erotic But Not Vulgar ! 

My Rating: 7.9/10.


10 comments:

 1. https://www.youtube.com/watch?v=1Z1Sq5_tgQo

  மிக அருமையான விமர்சனம்... படம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியது...
  முழுப்படமும் பார்ப்பதற்கான இணைய முகவரிதான் மேலே உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. நானும் அந்த லிங்க் பார்த்தேன். ரஷியன் மொழியில சப் டைட்டில் இருந்த காரணத்தினால் பகிர வில்லை. ஆங்கில மொழியில் சப் டைட்டில் உள்ள வீடியோ கிடைக்கவில்லை. :(:(

   Delete
  2. நானும் எங்கே போனீன், ரஷ்யன் மொழியில் போட்டு அலுப்பெற்றுகின்றார்கள், அது டிஸ்டர்ப் ஆக இருந்ததால், ரஷ்யர்கள் மட்டும் அதனை பார்த்து ரசித்துக் கொள்ளட்டும் என்று வந்துவிட்டேன். ஆனாலும், இந்தப் படத்தை தேடிப் பிடித்து பார்க்க வேண்டும்.

   Delete
  3. கண்டிப்பாய் பாருங்க நண்பா..,ஆனா ரொம்ப மெதுவாய் நகரும். அது ஓகே என்றால் நிச்சியம் பாருங்கள்..

   Delete
 2. தல,

  அருமையான விமர்சனம். ரத்தின சுருக்கமா சொல்லிட்டீங்க..(நான் என்னிக்குதான் கத்துக்கப்போறேனோ..!!??)

  டைட்டானிக் கேத் வின்ஸ்லட் நிறைய எரோட்டிக் படங்கள்ல நடிச்சுருக்கறதா கேள்விப்பட்டிருக்கேன். அந்தப் படங்கள பத்தியும் கொஞ்சம் எழுதுங்க தல.. :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல, எனக்கு ஹாலிவுட் படங்களை விட இந்த மாதிரி பிரெஞ்சு படங்களை தான் ரொம்பவே பிடிக்கும். கேத் வின்ஸ்லட் விட சல்மா ஹயேக் நிறைய சாப்ட் எரோடிக் படங்கள் பண்ணி இருப்பாங்க. என்னோட favourite அவங்க தான். :):)

   Delete
 3. //அதனாலே என்னமோ படத்தில் நிறைய காட்சிகளை வசனங்கள் முலமே நகர்த்தி சென்றிருப்பார்//

  தல, இந்த மாதிரி படத்துக்கு வசனமா முக்கியம்.. படத்த பாருங்க தல.. :) :)

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் தல.. ஆனா இந்த படத்தோட வசனங்கள் அல்டிமேட்டா இருக்கும். லிலா காமம் பற்றி பேசுற காட்சிகள் எல்லாமே ஏஒன் ரகம்.

   Delete
 4. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன்..

   Delete