The Dark Knight வெளி வந்து சரியாய் நாளு வருடம் கழித்து வெளி வந்து உள்ளது "The Dark Knight Rises". TDKR அளவுக்கு வேற எந்த படத்துக்கும் இவ்வளவு எதிர்பார்ப்பு இருந்து நான் பார்த்தது இல்லை. உலகமே பட ரிலீஸ்சை நாள் கணக்கில் எண்ணி பிறகு மணி கணக்கில் எண்ணி கொண்டு இருந்து. வானுயர்ந்த எதிர்பார்ப்பு. பேட்மேன் மேல் இருந்த எதிர்பார்ப்பை விட எனக்கு நோலன் மற்றும் வில்லன் பேன் (Bane) மேல் தான் எதிர்பார்ப்பு அதிகம். Bane மேல் எதிர்பார்ப்பு வர காரணம் ஜோக்கர். நோலன் உருவாக்கிய அதி அற்புத கதாபாத்திரம் ஜோக்கர். The Dark Knight படத்தில் அதகளம் பண்ணி இருப்பார். நோலன் இவ்வளவு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார...???? கண்டிப்பாய், உங்கள் எதிர்பார்ப்பையும் மீறி பூர்த்தி செய்து உள்ளார் நோலன். அவர் என்றுமே ஏமாற்றியது இல்லை. இந்த முறையும் பேட்மேன் ரசிகர்களை மட்டும் அல்லாது நோலன் ரசிகர்களையும் திருப்தி படுத்தி உள்ளார்.
.jpg)
கோத்தம் நகரை ஆழிக்க புறப்பட்டு வந்து இருக்கும் Bane மற்றும் அவனது படையை பேட்மேன் தடுத்து நிறுத்துவது தான் படத்தின் கதை என்று ஒரு வரியில் சொல்லி விட முடியாது. TDKR பார்பதற்கு காமிக்ஸ் படித்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் கண்டிப்பாய் பேட்மேன் திரைபடங்கள் முதல் ரெண்டு பாகம் பார்த்து இருக்க வேண்டியது அவசியம். பேட்மேன் முதல் பாகமான Batman Begins படத்தில் ப்ரூஸ் வேனை (Bruce Wayne) பேட்மேன் ஆக மாற்றிய League of Shadows என்ற ஒரு குழுவை பற்றி நோலன் சொல்லி இருப்பார். அடுத்து வந்த Dark Knight படத்தில் லீக் ஆப் ஷடோவ்ஸ் பற்றி ஒரு வார்த்தை கூட வராது. ஆனால் TDK படத்தில் ஹார்வி டென்ட் (Harvy Dent) என்ற டிஸ்டிரிக்ட் அட்டர்னி (DA) என்ற கதாபாத்திரம் பண்ணும் கொலைகளுக்காண பழியை பேட்மேன் ஏற்று கொள்ளவது போல் படத்தை முடித்து இருப்பார். இந்த இரண்டு விஷயங்களையும் (League of Shadows & ஹார்வி டென்டின் கொலைகளையும்) மேலும் சில முதல் ரெண்டு பாக முடிச்சுக்கலையும் நோலன் இந்த படத்தில் மிக அருமையாக அவிழ்த்து இருக்கிறார்.
TDK படத்தில் ஜோக்கரின் அறிமுகம் அந்த கதாபாத்திரத்தின் புத்திசாலி தனத்தை நமக்கு எடுத்து காட்டும். TDKR படத்தின் வில்லன் Bane, மிக மிக பலசாலி, ஸோ, அவனது அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் ?? சும்மா அட்டகாசமாய் இருக்க வேண்டாமா..??? நோலன் இந்த காட்சியில் பின்னி இருப்பார். நோலன் Bane-னின் அறிமுக காட்சியை அவனது பலத்தை நிரூபிப்பது போல் வைத்து இருப்பார். வானத்தில் பறந்து கொண்டு இருக்கும் ஒரு ஏரோ-பிலேன்னை Bane தகர்ப்பது போன்ற ஒரு காட்சி. தியேட்டரே கதறி விட்டது. நான் பார்த்தது வெறும் 70mm ஸ்கிரின் தியேட்டரில், அதுவே அட்டகாசமாய் இருந்தது, IMAX யில் பார்த்தால் இன்னும் பிரமாதமாய் இருந்தது இருக்கும்.அடுத்த வாரம் தான் IMAX பெரிய ஸ்க்ரீனில் பார்க்க போகிறேன்.
![]() |
| Bane Flight Scene |
Bane ஆக நடித்து இருப்பவர் டாம் ஹார்டி (Tom Hardy). இவரது நடிப்பை ஜோக்கர் அளவுக்கு கம்பேர் செய்வது சரி இல்லை என்று நான் நினைக்கிறன். Bane தனது முகத்தை முக்காவாசி மாஸ்க் போட்டு மறைத்து இருப்பார். வெறும் கண்கள் அவரது நெற்றி, மற்றும் தோள்பட்டை மட்டுமே வைத்து ஜோக்கர் அளவுக்கு பெர்பார்மன்ஸ் குடுப்பது சத்தியமே இல்லை. ஆனாலும் ஹார்டி Bane ஆக மிகவும் சிறப்பான நடிப்பை வெளி படுத்தி இருப்பார். அவரது குரல் வித்தியாசமாய் இருக்கும் .ஜோக்கர் அளவுக்கு இல்லை என்றாலும் Bane மேல் எனக்கு பயம் வர தான் செய்தன. Baneனை வில்லன் என்பதை விட தீவிரவாதி என்றால் சரியாக இருக்கும். அவன் செய்யும் செயல் எல்லாமே தேர்ந்த பயங்கரவாதி போல் தான் இருக்கும். பேட்மேன்க்கு உடல் ரீதியான சவால் ஏற்படுத்தி இருப்பார் Bane.
Catwomen ஆக நடித்த அன்னே ஹாத்வே (Anne Hathaway). அன்னேயிடம் இருந்தது இப்படி பட்ட பெர்பார்மன்ஸ் நான் சத்தியமா எதிர்பார்க்க வில்லை.படத்தில் இரண்டாவது பெஸ்ட் பெர்பார்மன்ஸ். நளினமான நடிப்பு ஆகட்டும், ஆக்சன் காட்சி ஆகட்டும், அன்னே அற்புதமாய் பண்ணி இருக்காங்க. சூப்பர் ஹீரோயின் CatWomen னை அப்படியே நாம் கண் முன்னே கொண்டு வந்து இருப்பார் அன்னே. அன்னே பேட்மேன் வாகனமான பைக் (Batpod) ஓட்டும் ஒரு காட்சி செமயாய் இருக்கும். படத்தில் அன்னே கதாபாத்திரத்தை கொண்டு நோலன் பல ட்விஸ்ட் வைத்து இருப்பார். அதை சொல்லி படத்தின் சுவாரிசியத்தை குறைக்க விரும்ப வில்லை.
![]() |
| Catwomen with BatPod |
அடுத்து படத்தின் பெஸ்ட் பெர்பார்மர் மைக்கேல் கைன் (Michael Caine). இவர் பேட்மேனின் நலம் விரும்பி ஆல்ஃபிரட். இவரும் பேட்மேனும் பேசும் சில வசனங்கள் எனக்கு கண்ணீர் வர வழைத்து விட்டன. ஒரு சூப்பர் ஹீரோ/ ஆக்சன் படத்தில் இப்படி பட்ட உணர்ச்சி மிக்க காட்சிகள் வைக்க நோலனாலே மட்டுமே முடியும். God Father II, The Shawshank Redemption படத்தில் வரும் சில உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு ஈடான காட்சிகள் ஆல்ஃபிரட் மற்றும் பேட்மேன் பேசும் காட்சிகள். மொத்தமே நான்கு ஐந்து காட்சிகள் தான் ஆல்ஃபிரட் வருவார். ஆனால் அதில் ஆஸ்கார்க்கு போதுமான நடிப்பை வெளி படுத்தி இருப்பார். Hats Off கைன்.
![]() |
| Caine |
கடைசியாக பேட்மேன் ஆக நடித்து இருக்கும் கிறிஸ்டியன் பேல். முதல் ரெண்டு பேட்மேன் படங்களை விட இந்த படத்தில் தான் பேல் தனது நடிப்பு முத்திரையை மிகவும் அழுத்தமாக பதித்து உள்ளார். ப்ரூஸ் வேனே (Bruce Wayne) ஆக 8 வருடங்கள் ஓய்வு எடுத்து கொண்டு இருப்பவரை Bane மற்றும் CatWomen இருவரும் சேர்ந்து மீண்டும் பேட்மேன் சூட் போட வைத்து விடுவார்கள். படத்தில் முதல் தடவையாக பேட்மேன் சூட் போட்டு கொண்டு பேல் பைக் (Batpod) ஓட்டும் அந்த காட்சிக்கு தியேட்டரே ஆரவாரம் செய்தது. Batpod யில் இருந்தது பறக்கும் வாகனமான BatWing க்கு பேட்மேன் மாறும் அந்த காட்சியை பார்த்த எனக்கு ஏ.ஸி குளிரிலும் வேர்த்து விட்டது. அப்படி பட்ட அட்டகாசமான காட்சி அது. மிகவும் அற்புதமாய் எடுத்து இருப்பார் நோலன். Bane மற்றும் பேட் மேன் சண்டை போடும் காட்சி இன்னும் நன்றாக எடுத்து இருக்கலாம்.
படத்தில் நிறைய நோலன் ட்விஸ்ட் இருக்கிறது. படத்தின் முடிவு அல்லது சஸ்பென்சை பார்வையாளர்கள் யூகிக்க நோலன் படத்தின் நடுவில் சில கேரக்டர் முலம் கொஞ்சம் ஹின்ட் தருவார். The Prestige படத்தில் கட்டர் (Caine) சொல்லும் ஒரு வசனம் முலமாக படத்தின் கிளைமாக்ஸ் பற்றி நோலன் ஒரு ஹின்ட் குடுத்து இருப்பார். அதே போல் இந்த படத்திலும் நிறைய ஹின்ட் குடுத்து இருப்பார் நோலன். The Child, Auto Pilot, மற்றும் ஆல்ஃபிரட் பேசும் சில வசனங்கள் முலமாக நீங்கள் கிளைமாக்சை ஓர் அளவு யூகிக்கலாம்.
முக்கியமாக பின்னணி இசை, Hans Zimmer மிகவும் அருமையான இசையை வழங்கி உள்ளார். பேட் மேன் Bane யிடம் அடி வாங்கி மறுபடியும் ரீ-என்ட்ரி ஆகும் காட்சியில் மனுஷன் பின்னி இருப்பார். கேமராமேன் Wally Pfister, இவர் தான் நோலனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர், ஸ்டாக் மார்க்கெட் பைக் சேஸிங் காட்சிகள், மற்றும் கிளைமாக்ஸ் BatWing சேசிங் காட்சிகளை மிகவும் தந்துருபமாய் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பார். Bane கோத்தம் நகரை வெடிக்க வைக்கும் காட்சி, ரொம்பவும் ரியல்ஸ்டிக் ஆக படம் ஆக்கி இருப்பார் Pfister.
![]() |
| Bat-Wing |
படம் மொத்தம் 165 நிமிடங்கள், ஒரு இடத்தில கூட ஏன் ஒரு வினாடி கூட எனக்கு போர் அடிக்க வில்லை. ஐயோ அதுக்குள்ளே முடிந்து விட்டதே என்று தான் இருந்து. படத்தில் சில பல குறைகள், லாஜிக் மிஸ்டேக் இருக்க தான் செய்தன, ஆனால் படத்தின் பிரம்மாண்டத்தின் முன்பு அதை எல்லாம் நீங்கள் மறந்து போவீர்கள். படத்தை அட்டகாசமாய் முடித்து இருப்பார் நோலன். படம் முடிந்த உடன் தியேட்டரே எழுந்து நின்று கை தட்டடியது. பெரிய வருத்தம் என்ன வென்றால் இனி மேல் பேட் மேன் படங்களை நோலன் இயக்க மாட்டார், பேட் மேன் ஆக பேல்லும் நடிக்க மாட்டார் என்பது உறுதி ஆகி உள்ளது. இனி மேல் வர போகும் பேட் மேன் படங்களை WB வேறு டைரக்டர் கொண்டு எடுக்க வேண்டியது தான். ஆனால் அவர்களால் நோலன் தொட்ட உச்சத்தை தொட முடியுமா என்பது சந்தேகமே !!!!!!
The Dark Knight Rises - EPIC CONCLUSION
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் படத்தின் மிட் நைட் பிரிமியர் ஷோ ஒன்றில் புகுந்த ஒரு சைகோ கொலைகாரன் படம் பார்த்து கொண்டு இருந்த 12 அப்பாவி பொது மக்களை சுட்டு கொன்று உள்ளன். 24 வயது நிரம்பிய அந்த சைகோவின் பெயர் ஹோம்ஸ். அவனை அரெஸ்ட் செய்த கொலராடோ போலீஸ்யிடம் தான் தான் ஜோக்கர் என்றும் உளறி உள்ளன். இந்த மாதிரி பைத்தியக்கார்களுக்கு அமெரிக்காவில் பஞ்சமே இருக்காது. அனைவரையும் இந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
My Rating: 9.2/10......
My Rating: 9.2/10......



















