Friday, December 16, 2011

க்வென்டினின் மாஸ்டர் பீஸ் -Inglourious Basterds (2009)

இன்னைக்கு நான் உங்களுக்கு அறிமுக படுத்த போகும் படம் Inglourious Basterds. படம் வெளி வந்த ஆண்டு 2009. படத்தோட டைரக்டர் என்னோட ஆல் டைம் பேவரைட் க்வென்டின் டரென்டினோ (Quentin Tarantino). எனக்கு பிடிச்ச டாப் 5 படங்களில் இவரு படம் 2 இருக்கும், அது Pulp Fiction & Kill Bill. க்வென்டினின் கதை சொல்லும் பாணி மிகவும் வித்தியாசமானது, இவரின் அனேக படங்களில் நான்-லீனியர் பாணி கையாள பட்டு இருக்கும். சரி நான்-லீனியர்னா என்ன? நம்ப ஒரு நாவல் வாங்குறோம், எப்படி படிப்போம்? முதல் அத்தியாத்தில் இருந்து கடைசி அத்தியாயம் வரைக்கும் படிச்சா அது லீனியர் (Linear) வகை. அதே நாவலை கடைசி அத்தியாயத்தின் சில பத்திகளை, எடுத்தவுடன் படித்து விட்டு மீண்டும் முதல் அத்தியாயத்திலிருந்து படிக்கத் துவங்கி, நடுவில் நான்காவது அத்தியாயத்தை மூன்றாவதாகவும், மூன்றாவதை நான்காவதாகவும் படித்து விட்டு, மீண்டும் கடைசி அத்தியாயத்தை முழுமையாகப் படித்து முடித்தால் அதுதான் நான்-லீனியர் (Non-Linear). க்வென்டின் நான்-லீனியர் ஆக கதை சொல்லுவதில் வல்லவர். அவரின் அனேக படங்கள் நான்-லீனியர் வகையை சேர்ந்தவை. ஒரு நல்ல நாவல்னா எப்படி படிச்சாலும் புரியணும். அதே போல தான் நல்ல திரைகதை-ஆசிரியர் எழுதிய திரைக்கதையும் நமக்கு புரியணும். க்வென்டின் ஒரு நல்ல திரைகதை-ஆசிரியர். ஆனால் Inglourious Basterds படத்தை சற்று மறுபடத்தி லீனியர் வகையில் எடுத்திருப்பார். படம் நேர் கோட்டில் போகும்.

க்வென்டினின் படங்களுக்கு என்று சில விதிமுறைகள் இருக்கும். படத்தில் கதை சொல்லும் பாணியை நாவலில் வருவது போல் அத்தியாயம் (Chapter) வரியாக பிரித்து இருப்பார். நீநீநீநீண்ட மற்றும் கூர்மையான வசனங்கள், அளவை மீறிய வன்முறை, மெல்லிய நகைச்சுவை, நான்-லீனியர் பாணி போன்றவை க்வென்டினின் படங்களில் தவறாமல் இடம் பெறுபவை. ஆனால் இந்த படம் அவரின் மற்ற படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும். ஏன் என்றல் இந்த படத்தில் க்வென்டினின் லீனியர் பாணியில், அதாவது நேர் கோட்டில் கதை சொல்லி இருப்பார். திரைக்கதையில் ஒரு ஐந்து நிமிடம் கூட தொய்வு இல்லாமல் படம் செல்கிறது. படத்தில் ஒரு முக்கியமான் கதாபாத்திரத்தில் அமெரிக்க உளவாளியாக ப்ராட் பிட் (Brad Pitt) நடித்து இருப்பார். மற்றும் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஜெர்மன் ராணுவ அதிகாரியாக க்ரிஸ்டஃப் வால்ட்ஸ் (Christoph Waltz) நடித்து இருப்பார். இப்படத்தில் நடித்ததற்காக க்ரிஸ்டஃப் வால்ட்ஸ்க்கு 2010 ஆம் ஆண்டு சிறந்து துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது வழங்க பட்டது. சரி இப்போது இந்த படத்தின் கதை என்னவென்று பார்போம்.
Chapter-1: Once Upon a Time in Nazi-Occupied France: 
இரண்டாம் உலக போர் நடக்கும் காலகட்டத்தில் “Once Upon a Time in Nazi-Occupied France” என்ற வரிகளுடன் படம் ஆரம்பிக்கும். வால்ட்ஸ் (Waltz) ஒரு பிரெஞ்சு விவசாயின் வீட்டுக்கு வந்து, அவனது வீட்டில் யூதர்கள் யாரையாவது ஒளிந்து கொண்டு இருக்கிறார்களா என்று விசாரணை செய்வார். அந்த விசாரணை, சுமார் 7 நிமிடங்கள் நடக்கும். க்வென்டின் ஸ்டைல் நீண்ட உரையாடல்கள், சும்மா அதகளமாய் இருக்கும், விசாரணையின் முடிவில் அந்த விவசாயி தன் வீட்டில் ஒரு யூத குடும்பம் ஒளிந்து இருப்பதை ஒத்துகொள்வார். வால்ட்ஸ் (Waltz) சிறிதும் இரக்கம் இல்லாமல் அந்த மொத்த குடும்பத்தை சுட்டு கொன்று விடுவார். அந்த குடும்பத்தில் இருந்து ஒரு பெண் மட்டும் தப்பி ஓடி விடுவார். பெண்ணின் பெயர் ஷோசான்னா (Shosanna). நிற்க....
Chapter-2: Inglourious Basterds: 
இந்த அத்தியாயத்தில் அமெரிக்கன் உளவாளி ப்ராட் பிட் (Brad Pitt) தனது Inglourious Basterds படைகளுடன் அறிமுகம் ஆவார். இந்த படை படையின் முக்கிய குறிக்கோள் ஜெர்மன் நாட்டில் இருக்கும் ஜெர்மன் படை வீரர்கள் மனதில் அச்சத்தை விதைப்பது. அதற்காக இந்த படை கையில் அகப்படும் ஜெர்மன் வீரர்களின் கபாலத்தைக் கொய்வது, அவர்களை மிகவும் கொடுரமான முறையில் கொலை செய்வது போன்ற நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். இதில் ப்ராட் பிட் (Brad Pitt) பேசும் அசென்ட், மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த ரெண்டு அத்தியாயத்தில் முடிவில் வால்ட்ஸ் (Waltz) மற்றும் ப்ராட் பிட் (Brad Pitt) இரு வேறு துருவங்கள் என்று நாம் உணர்ந்து விடுவோம்....
Chapter-3: German Night In Paris: 
இப்பொழுது முதல் அத்தியாயத்தில் வால்ட்ஸ்யிடம் (Waltz) இருந்து தப்பித்த யூத பெண் ஷோசான்னா (Shosanna), பாரிஸ் நகரத்தில் ஒரு சினிமா தியேட்டர்ரை நிர்வகித்து வருவார். இரவு கட்சிக்கு தயார் ஆகி கொண்டிருக்கும் போது அங்கு வரும் ஒரு ஜெர்மன் ராணுவ வீரன் ஷோசான்னாவை (Shosanna), முதல் பார்வையிலே காதலிக்க ஆரம்பத்து விடுவார். ஜெர்மன் ராணுவ வீரனின் பெயர் பெட்ரிக் (Fredrick Zoller). இவர் ஜெர்மனியின் பெருமையை எடுத்து விளக்கும் Nation's Pride என்ற போர் திரைபடத்தில் கதாநாயகனாக நடித்து இருப்பார். அந்த திரைபடத்தின் முதல் காட்சி பாரிஸ் இருக்கும் ஒரு பெரிய திரைஅரங்கில் வெளியிட பட இருக்கும். பெட்ரிக்கு ஷோசான்னாவின் மேல் இருக்கும் காதலால் தன் கனவு திரைபடத்தை ஷோசான்னாவின் திரைஅரங்கிலே முதல் காட்சியை வெளியிட முடிவு செய்து விடுவான். அதற்கான அனுமதியையும் ஜெர்மன் உயர் அதிகாரியிடம் பெற்று விடுவான். அந்த உயர் அதிகாரி வேறு யாரும் இல்ல, நம்ப முத அத்தியாயத்தில் பார்த்த வால்ட்ஸ் (Waltz) தான்.
Chapter- 4 & 5: Operation KINO & Revange of the Gaint Face:
அந்த திரைபடத்தை பார்பதற்கு ஜெர்மனியின் மிக முக்கிய புள்ளிகள், உயர் ராணுவ அதிகாரிகள் முதல், ஹிட்லர் வரை அனைவரும் பாரிஸ் உள்ள ஷோசான்னாவின் தியேட்டர்க்கு வர இருப்பார்கள். ஹிட்லரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு வால்ட்ஸ்யிடம் (Waltz) தர பட்டு இருக்கும். ஷோசான்னாவிற்கு தன் குடும்பத்தை கொன்ற ஜெர்மானியர்களை கொல்ல அருமையான் சந்தர்ப்பம்.... ப்ராட் பிட்னின் (Brad Pitt) Inglourious Basterds படையும் ஹிட்லரை கொல்ல நல்ல சந்தர்ப்பம் பார்த்து கொண்டு இருப்பார்கள்... ஹிட்லர் பாரிஸில் ஒரு தியேட்டர்க்கு வருவது தெரிந்ததும், மொத்த தியேட்டர்ரை வெடி குண்டு முலம் தகர்க்க திட்டம் தீட்டி விடுவார்கள்... அந்த திட்டத்தின் பெயர் “ஆபரேஷன் கினோ” (Operation Kino).

ஷோசான்னா தியேட்டர்ரை மொத்தம்மாக தீயிட்டு எரித்து விட திட்டம் தீட்டி இருப்பாள்... இதற்கு இடையே வால்ட்ஸ் (Waltz) Basterds படையின் திட்டத்தை கண்டு பிடித்து விடுவார்..
வால்ட்ஸ் (Waltz) Basterds படையின் சதியை முறியடித்தாரா..?? ஷோசான்னா ஜெர்மனியார்களை பழி வாங்கினாளா..?? Basterds என்ன ஆனார்கள்…..?? போன்ற பல கேள்விகளுக்கு க்வென்டின் தனது பாணியில் பதில் சொல்லி இருப்பார். வேகமான நகரும் திரைக்கதையை விரும்பும் அனைவரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்....

படத்தின் கடைசி இரண்டு அத்தியாயங்கள் தான் படத்தின் பலமே. அடுத்து என்ன, அடுத்து என்ன என்று உங்களின் டெம்போவை ஏற்றி விடும். 

ப்ராட் பிட் (Brad Pitt) , இது தான் என் “மாஸ்டர் பீஸ்” என்று படம் முடிந்தும் சொல்லுவார். உண்மையில் அவருக்கு இது “மாஸ்டர் பீஸ்” தான்.

வால்ட்ஸ் (Waltz) சும்மா வாழ்ந்து இருப்பார். இரண்டு இடத்தில் இரு வேறு ஆட்களை விசாரணை செய்வார். பார்க்கும் நமக்கே பயமாக இருக்கும்.. அந்த இரண்டு காட்சிக்கு மட்டுமே அவருக்கு ஆஸ்கார் குடுக்கலாம். சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை 2010 ஆம் ஆண்டு பெற்றார் வால்ட்ஸ்.

My Rating: 8.2/10......


4 comments:

  1. விமர்சனம் மிக நன்று..நான் லீனியர் பற்றியெல்லாம் ரொம்ப சூப்பரா எழுதியிருக்கீங்க.
    நல்ல எழுத்து நடையோடு கூடிய அனைவரும் எளிதான முறையில் புரிந்துக்கொள்ளும்படி ஒவ்வொரு பதிவையும் தருகிறீர்கள்.
    குவண்டின் பற்றி நிறைய கேள்விபட்டிருந்தாலும் ஒரு சில படங்களையே பார்த்திருக்கிறேன்.நல்ல இயக்குனர்.நன்றி மற்றும் பாராட்டுகள் பல..

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்.
    குவண்டின் படங்களின் திரைக்கதை மிகவும் நேர்த்தியாக அற்புதமாக இருக்கும். ஹாலிவுட் திரைப்டங்களின் பொதுவான விதிகளை உடைத் தெரிந்து தன்னுடைய கலக்கல் ஸ்டைலில் காட்சிகளை அமைப்பர். இவருடைய திரைப்படங்களில் Reservoirs Dogs எனக்கு மிகவும் பிடித்தது. இவருடைய படங்களை பற்றி பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருக்கலாம் சிறந்த இயகனரும் கூட.

    ReplyDelete
  3. கடந்த வருடம் வந்த படங்களில் இப்படம் என்னை மிகவும் கவர்ந்தது.
    வயலன்சில்... பொயட்டிக் இருக்கும்.
    டொரண்டினோவின் முத்திரை அதுதான்.

    ReplyDelete
  4. @ Kumaran , @ Arun @ உலக சினிமா ரசிகன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...குவண்டின் ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குனர்..

    ReplyDelete