எனக்குள்ள ரொம்ப நாளாவே ஒரு ஆசை. ஆசைன்னு சொல்லறதை விட பேரசைன்னு கூட சொல்லலாம்.அது என்னன்னா நாமளும் தமிழில் ப்ளாக் எழுதணும் அப்படின்னு. ஆனாலும் ஒரு பயம், ப்ளாக் எழுத தமிழ் இலக்கியம் எல்லாம் தெரியணும்னு சொல்லுவாங்களே... நமக்கு தமிழே எழுத வரதே இதுல இலக்கியத்துக்கு எங்க போறதுன்னு. அனாலும் அசை யாரை விட்டுச்சு. ரொம்ப யோசிச்சு இலக்கியம் அதிகம்மா தேவை படாத ஒரு விஷயத்தை கைல எடுத்தேன். அது தான் "சினிமா சினிமா". ப்ளாக்கு தலைப்பும் அதே தான்.
அதுனால சினிமாவை பத்தி மட்டும் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். சினிமான்னு முடிவு பண்ணியாச்சு, சரி எந்த மாதிரி படங்களை பத்தி எழுதறது அப்படின்னு யோசிச்சு பார்த்தப்ப எனக்கு தோணினது ஹாலிவுட் படங்கள்தான். என்னா தமிழ் படங்கள அலசி காயப்போட பல பிளாக்கர்ஸ் இருகாங்க. ஹாலிவுட் படங்களை பற்றி எழுத கொஞ்ச பேர் தான் இருகாங்க, அதனால்தான் நான் ஹாலிவுட் படங்களை எழுதலாம் என்று முடிவு செய்தேன். அதனால் இங்க வெறும் ஆங்கிலம் திரைப்படம் மட்டும் தான் கிடைக்கும். அதுக்காக நீங்க என்ன பீட்டர் அப்படின்னு நெனச்சுக்க வேண்டாம். மிகச்சிறந்த கதைகள்/கருத்துக்கள் உள்ள படங்கள், வித்தியாசமான திரைக்கதை உள்ள படங்களைப் பற்றி எனக்கு தெரிந்ததை, நான் படித்ததை, உங்களுடன் (ப்ளாக் ரீடர்ஸ்) பகிர வேண்டும் என்பதே இந்த வலைப்பூவின் நோக்கம்.
இப்போ எனக்குப் பிடித்த திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு தான் இந்த பதிவு. இதில் இருக்கும் படங்கள் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்த/பார்த்த திரைபடங்கள் தான். என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களை மட்டுமே இங்கு தொகுத்து உள்ளேன். இந்த படங்களை பற்றி விரிவாக எழுதும் எண்ணம் வேறு உள்ளது.
God Father -Trilogy:
இந்த படத்தை பற்றி நிறைய பேர் அக்கு வேறா பிரிசுட்டாங்க இருந்தாலும் ஹாலிவுட் படங்கள பத்தி எழுதுறேன் சொல்ற நான் இந்த படத்த பத்தி சொல்லியே ஆகனும். இந்த படம் மாபியா கும்பல்குளே நடக்கும் போர் பற்றியது.இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை, எல்லோரும் அந்த அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பார்கள். இந்த படம் ஒரு டான்னின் வாழ்க்கைய அருகில் இருந்து பார்ப்பது போன்ற ஒரு உணர்வை தரும். மொத்தம் முன்று பாகங்கள் இந்த படம் வெளி வந்து உள்ளது.
இயக்குனர்: Francis Ford Coppola
Pulp Fiction:
இந்த படம் ஒரு Non-Linear வகையானது. அதாவது ஒரு சூப்பர் திரில்லர் நாவல் படிப்பதை போன்ற ஒரு அனுபவத்தை உங்களுக்கு தரும். நாவலில் வருவதுபோல் படத்தை அத்தியாயம் (Chapter) வரியாக பிரித்து இருப்பார்கள். படத்தில் நான்கு கிளை கதைகள் , இந்த நான்கு கதைகளும்... ஒன்னுக்கொன்னு முட்டிக்கொண்டோ.. இல்லை பின்னிக்கொண்டோ இருக்கும். ஆனா..கடைசி வரை ஒட்டவே ஒட்டாது. படம் முடிந்த பிறகு நீங்கள் ரொம்ப நேரம் படத்தை பற்றி யோசித்து கொண்டு இருப்பேர்கள்.
இயக்குனர்: Quentin Tarantino
Memento:
நீங்க எத்தனை படம் வேணும்னாலும் பார்த்திருக்கலாம்... ஆனா ஒரு 3-D படம் பார்க்கிற மாதிரி வருமா? அது ஒரு தனி அனுபவம்... புதுமையான அனுபவம்... சொன்னாலோ, படிச்சாலோ புரியாது... அனுபவிக்கணும்... அதே மாதிரிதான் மெமெண்டோவும்... புதுமையான குழப்ப அனுபவம். இந்த படம் 20 நிமிடங்கள்வரை ஒன்றுமே புரியாது. 20 நிமிடங்களுக்கு பிறகுதான் இது எப்படி பட்ட படம் என்று தெரியும். அதனால் இதை நீங்கள மறுபடியும் முதலில் இருந்து பார்ப்பேர்கள். குறைந்தபட்சம் 4~5 முறை பார்த்தல் தான் இதில் உள்ள புதிர்கள் ஓர் அளவுக்குவது புரியும்.
இயக்குனர்: Christopher Nolan
The Shawshank Redemption:
இந்த படத்தை நான் எத்தனை தடவை பார்த்தேன் என்று எனக்கு நினைவில் இல்லை. எந்த ஒரு விளிம்பு நிலையிலும் மனிதன் நம்பிக்கயை மட்டும் இழக்க கூடாது என்பதை விளக்கும் படம் இது. மிகவும் மெதுவாக போகும் படம். கட்டை வண்டியில் பயணம் செய்வதை போன்று இருக்கும், ஆனால் இந்த பயணம் ஒரு மறக்கவே முடியாத அனுபவமாக நிச்சியம் இருக்கும். 21/2 மணி நீங்கள் பொறுமையாக பயணம் செய்ய வேண்டும். இது ஒரு சிறந்த பீல் குட் (Feel Good) படம். இந்த படத்தின் பலமே இதன் வசனங்கள் தான்.
இயக்குனர்: Frank Darabont
Kill Bill -Duology:
இது ஒரு சாதாரண பழி வாங்கல் திரைப்படம். படத்தின் கதாநாயகி (Uma Thurman) தனது காதலனை & கருவில் இருக்கும் குழந்தையை கொன்ற 4 பேரை கொல்வது தான் கதை. இந்த கதைக்கு மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து இருப்பர் இயக்குனர். இதுவும் நமக்கு ஒரு நாவலை படிப்பது போன்ற ஒரு உணர்வை தரும். படம் மொத்தம் 3 மணி நேரம். அதை 1 ½ மணி நேரமாக பிரித்து Kill Bill - Vol-1 & Kill Bill – Vol-2 ஆக வெளியிட பட்டது. கவனிக்க Part -1 & Part -2 ஆக இல்லை.
இயக்குனர்: Quentin Tarantino
மேலே உள்ள படங்கள் என்னக்கு மிக மிக பிடித்த திரைபடங்கள். இது தவிர நான் பார்த்த/ரசித்த/என்னை பாதித்த படங்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதே இந்த ப்ளாக்கின் நோக்கம். மிண்டும் சந்திப்போம்.
மேலே உள்ளது அனைத்தும், நல்ல திரைப்படங்கள் தான்.
ReplyDeleteஉங்கள் பதிவுகளில் நல்ல திரைப்படங்கள் விமர்சனங்கள் எதிர்பார்கிறேன்.
நன்றி Prakash,
ReplyDeleteகண்டிப்பாக உங்களுக்கு எனக்கு தெரிந்த நல்ல திரைப்படங்களை அறிமுக படுத்துவேன்.
நீங்கள் குறிப்பிட்ட எல்லா படங்களும் அருமையானவை என்பதில் சந்தேகமே இல்லை..நல்ல பதிவு..நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteThe Great Escape...கூட ஒரு குழுவாக செயல் படுவார்கள் தப்பிப்பார்கள் என்பது முன்னாடியே படம் பார்பவர்கர்களுக்கு தெரிந்து இருக்கும்....பட் The Shawshank Redemption அப்படி அல்ல andy எண்ணைதை விவரிக்கும் முறை , morgan freeman குரலில் அப்படியே நம்மை அந்த சிறையில் ஒரு நபராகவே தோன்ற செய்யும்....red சிறையை விட்டு வெளியே வந்து andy இன் box இருக்கும் இடத்தில பணம் இருக்கும் கவர் எடுத்தவுடன் சுற்றிலும் ஆச்சரியம் மற்றும் பயம் கலந்த பார்வை பார்பார்....அவளவு இயல்பான நடிப்பு வெகு சிலரிடமே உள்ளது....andy இன் கடிதத்தில் ஒரு வரி வரும் என்றும் feel good எண்ண செய்யும் அந்த வரிகள் மிகவும் அருமை...என்னை மிகவும் கவர்ந்த வரிகள் அவை Remember, Red. Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies. I will be hoping that this letter finds you, and finds you well. Your friend, Andy Dufresne....
ReplyDeleteForrest Gump...is also another feel good movie
ReplyDelete@ Niko,
ReplyDeleteஅருமையான மற்றும் உண்மையான வரிகள்...The Shawshank Redemption படத்தை நீங்க நல்லா அனுபவித்து பார்த்து உள்ளீர்கள்.......சூப்பர்பப் Feel good movie... நான் இன்னும் The Great Escape பார்க்கவில்லை......டவுன்லோட் செய்து இருக்கிறேன்....கண்டிப்பாய் பார்க்க வேண்டும்.....
Forrest Gump கூட மிக சிறந்த படம்.....Forrest Gump & Shawshank ஒரே ஆண்டு வெளி வந்ததாக நினைவு....Forrest Gump மிக பெரிய வெற்றி அடைந்ததால் Shawshank நிறைய பேரை சென்ற அடையாமல் போய் விட்டது.....ஆனால் ரெண்டுமே சிறப்பான Feel good Movie..
The Shawshank Redemption , Kill Bill -Duo logy ரெண்டு தான் பார்த்து இருக்கிறேன் ரெண்டுமே செம படங்கள்
ReplyDelete