Saturday, October 29, 2011

கேள்வியை தேடும் தேர்வு - EXAM (2009)

இந்த பதிவு முலமாக நான் உங்களுக்கு அறிமுகபடுத்த போகும் படம் “EXAM”. படம் வெளி வந்த ஆண்டு 2009. இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் வகையைச் சார்ந்தது. இந்த படத்தின் தனி சிறப்பு என்னவென்றால், இதில் மொத்தமே 10 கதாபாத்திரங்கள் தான். படம் முழுவதும் ஒரே ஒரு சின்ன அறையில் படமாக்க பட்டு இருக்கும். கேமரா அந்த ஒரு அறைய விட்டு வெளிய போகாது.

இந்திய சினிமாக்களில் ஒரே காட்சியை ஒவ்வொரு ஊரில் எடுப்பார்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு நாட்டுக்கு பறந்து போவர்கள். டைரக்டர்களிடம் "ஏன் சார் இப்படி சம்பந்தம் இல்லாமல் ஒவ்வொரு பாட்டுக்கும் வெளிநாட்டுக்கு போய், ஹீரோவா தெருவுல ஆட விடுறேங்கனு" கேளுங்க. அதுக்கு அவரு சொல்லுவாரு " உள்ளூர் ரசிகர்கள் எல்லாராலும் வெளிநாடு எல்லாம் போக முடியாது, அதனால் அவங்க ஆசையை பூர்த்தி செய்யற மாதிரி நாங்க வெளிநாட்டுக்கு போய் அங்க பாட்டு பாடி, அவனுக்கு வெளிநாட்ட சுத்தி காமிக்றோம்" அப்படின்னு ஒரு பெரிய விளக்கம் குடுப்பாரு. சரி விடுங்க நமக்கும் அந்த மாதிரி கலர்புல்லாக இருந்தா பிடிக்கும். அப்புறம் நம்ப ஊரு டைரக்டர்ஸ் எல்லாம் எப்ப தான் வெளிநாடு எல்லாம் போறது.

ஆனா இந்த படத்தில் ஓரே ஒரு அறை தான். படம் முடியும் வரை அதே அறை தான். நம்ப இப்போ EXAM படத்தை பற்றி பார்ப்போம். நம்ப எல்லோரும் கண்டிப்பா பரீட்சை எழுதி இருப்போம். இந்த படமும் ஒரு பரீட்சையை பற்றியது. 80 நிமிடங்கள் நடக்கும் ஒரு பரீட்சை தான் இந்த படம்.
ஒரு ஊருல, அது என்ன ஒரு ஊரு, அமெரிக்காவுல ஒரு பெரிய கம்பெனி (Organization), சும்மா பேஸ்புக், கூகிள் மாதிரின்னு வச்சுகாங்க. அந்த கம்பெனியின் CEO கிட்ட கரியதரசி (Secretary) வேலை. அந்த வேலையில் சேருவதற்குகாண கடைசி கட்ட தேர்வுக்கு மொத்தம் 8 பேர் தேர்வு ஆகி இருப்பாங்க. அப்புறம் அந்த தேர்வை நடத்துபவர் (Invigilator), ஒரு காவலாளி துப்பாக்கியுடன். (8+1+1)மொத்தம் 10 கதாபாத்திரங்கள். பரீட்சை ரூமுக்கு 8 Candidates வருவார்கள்.

படம் இங்கே ஆரம்பிக்கும். அனைவர்க்கும் ஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு பேப்பர், ஒரு பென்சில் குடுக்க பட்டு இருக்கும். தேர்வு நடத்துபவர் மொத்தம் 3 விதிமுறைகளை சொல்லுவார்.
  • யாரும் என்னிடமோ (Invigilator), அல்லது காவலாளியிடமோ பேச கூடாது.
  • யாரும் அந்த பேப்பரில் எழுதவோ, அல்லது அந்த பேப்பரை சேத படுத்தவோ கூடாது.
  • யாரும் அந்த அறையை விட்டு வெளியேற கூடாது.
இந்த முன்று விதிமுறையை மீறுவோர் தேர்வில் இருந்து வெளியேற்றபடுவார்கள். இதை சொல்லி விட்டு தேர்வை நடத்துபவர் (Invigilator), அந்த அறையை விட்டு வெளியேறி விடுவார். தேர்வு ஆரம்பம் ஆகும். தேர்வு நேரம் 80 நிமிடங்கள். முதலில் ஒரு பெண், அந்த பேப்பரில் எழுதுவாள், உடனே அவளை அங்கு இருக்கும் காவலாளி அந்த பெண்ணை தகுதி நீக்கம் செய்து வெளியேற்றி விடுவான், ஒரு Candidate அவுட், மீதி இருப்பது 7 பேர். படம் இங்கு இருந்து வேகம் எடுக்கும். நன்றாக யோசித்து பார்த்தல், தேர்வை நடத்துபவர் (Invigilator) தேர்வுக்கான கேள்வியை சொல்லி இருக்க மாட்டார்.

மீதி 7 பேரும் சேர்ந்து கேள்வியை கண்டு பிடித்து பிறகு விடையை கண்டு பிடிக்க வேண்டும். நாமும் அவர்களுடன் சேர்ந்து கேள்வியை தேட ஆரம்பிப்போம். 7 பேரும் அவர்கள் உள்ளயே பெயர் வைத்து கொள்ளவார்கள். மொத்தம் 4 ஆண்கள், மற்றும் 3 பெண்கள்.
அவர்கள் பெயர்கள் மற்றும் அவர்கள் குணாதிசயங்கள் கிழே குடுத்து உள்ளேன்
  1. வைட்(White) = இவரு ஒரு அமெரிக்கன். இவருக்கு பேரு White என்னா இவரு வெள்ளையா இருப்பார். இவருக்கு அடுத்தவர்கள் பற்றிய கவலை கிடையாது. சுயநலவாதி.
  2. ப்ளக் (Black) = இவரும் ஒரு அமெரிக்கன். இவருக்கு பேரு black என்னா இவரு கருப்பா இருப்பார். அடுத்தவங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
  3. ப்ரௌன் (Brown) = இவரு ஏசியன் (Asian), இவருக்கு பேரு Brown என்னா இவரு பிரௌனா இருப்பார். இவரு முதலில் தான் ஒரு கம்ப்ளீர் (Gambler) என்று சொல்லுவார். பிறகு ராணுவத்தில் இருந்ததாக சொல்லுவார். 
  4. டெப் (Deaf) = இவரு பேசவே மாட்டாரு. அதனால இவரு பேரு டெப் (Deaf).
  5. ப்ளொண்டு (Blonde) = இவங்க ரொம்ப அழகா இருப்பாங்க, அதனால் Blonde. அடுத்தவங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவங்க.
  6. ப்ருநெட்(Brunette) = இவங்க முடி பிரவுன் (Brown) கலரில் இருக்கும். அதனால் இவங்க ப்ருநெட்.
  7. டார்க் (Dark) = இவங்க டார்க். இவங்க கேரக்டர் கொஞ்சம் குழப்பம் ஆனது. 
இதில் ஒவொருவரும் எப்படி எல்லாம் வெளியேற்ற பட்டனர், என்பதை மிகவும் சுவாரசியம் சொல்லி இருப்பர் இயக்குனர். கடைசியில் யார் அந்த கேள்வி/விடையை கண்டு பிடித்து அந்த வேலையை கை பற்றுகிறார் என்பதே மீதி கதை. 

பலம்:

  • ஒரே ஒரு அறையில் முழு படத்தையும் எடுத்து இருப்பார்கள். இருந்தாலும், பார்க்கும் நமக்கு அலுப்பு ஏற்படாதவாறு படம் ஆக்க பட்டு இருக்கும்.
  • கடைசி வரை அந்த கேள்வி/விடையை நம்மால் யூகிக்க முடியாது. அந்த சஸ்பென்ஸ் கடைசி காட்சி வரை காப்பாற்ற பட்டு இருக்கும்.
  • படத்தில் அனைவரும் தங்கள் நடிப்பை தேவையான அளவு வெளி படுத்தி இருப்பார்கள். 
  • படம் முழுவதும் பின்னணி இசை படத்தின் வேகத்தை குறைக்காமல், நாம் காதை சேதபடுதாமல், மெல்ல தவழ்ந்து ஓடும்.
பலவீனம்:

  • படத்தில் பலவீனம் என்று சொல்லும் அளவு பெரிய குறை ஒன்றும் கிடையாது. வழக்கமான எல்லா ஹாலிவுட் படங்களில் வருவது போல், இதிலும் உலகத்திற்கு ஆபத்து, அதை இந்த கம்பெனியின் C.E.O வால் தான் அதை காப்பாற்ற முடியும் என்பதை போல் கதை அமைத்து இருப்பார்கள். அந்த ஒரு பகுதி மட்டும் கொஞ்சம் மொக்கை. 
My Rating: 8.0/10 .


10 comments:

  1. விமர்சனம் அருமை. ஆரம்பமே அசத்தல் திரைப்படம்.
    இந்த ஸ்டைல் நல்ல இருக்கு, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஏற்கனவே இப்படத்தின் விமர்சனம் பதிவுலகில் பாபு அவர்கள் மார்ச் 11 வெளியிட்டு இருக்கிறார்கள் .
    http://abdulkadher.blogspot.com/search/label/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8Dஒருவாட்டி போய் பார்க்கலாம்.

    ReplyDelete
  3. நன்றி மழைதூறல்,
    இபொழுது தான் பதிவுலகில் பாபுவின் இடுகையை படித்தேன்....நல்ல வலைப்பூ...பதிவை அறிமுக படுத்தியதற்கு நன்றி...
    பிறகு வருகைக்கும் நன்றி..

    ReplyDelete
  4. Hi raj, its a good review.. :-) congrats..

    Thanks for read my review too..

    ReplyDelete
  5. http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_29.html
    வணக்கம் நண்பரே உங்களது பதிவு ஒன்றை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம் நன்றி.நேரம் கிடைக்கும்போது பார்த்துச் செல்லவும்
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_29.html

    ReplyDelete
  6. நான் வெகு நாட்களாக பார்க்க நினைத்துக் கொண்டிருக்கும் படம். கிடைத்தால் உடனே பார்த்துவிடுவேன். இந்தப் படத்தின் விமர்சனம் எளிதாகக் கிடைகிறது. படம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது.

    உங்கள் பார்வையில் விமர்சனம் இன்னும் தெளிவாக உள்ளது.

    ReplyDelete
  7. //படத்தில் பலவீனம் என்று சொல்லும் அளவு பெரிய குறை ஒன்றும் கிடையாது. வழக்கமான எல்லா ஹாலிவுட் படங்களில் வருவது போல், இதிலும் உலகத்திற்கு ஆபத்து, அதை இந்த கம்பெனியின் C.E.O வால் தான் அதை காப்பாற்ற முடியும் என்பதை போல் கதை அமைத்து இருப்பார்கள். அந்த ஒரு பகுதி மட்டும் கொஞ்சம் மொக்கை.
    //


    உண்மை தான் நண்பா. படம் எனக்கும் பிடிதிருந்த்தது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனு...

      Delete
  8. நானும் பார்த்தேன் நண்பா நான் பதிவுலகம் வரு முன் இதே உன்னுடைய விமர்சனம் பார்த்து தான் டவுன்லோட் பண்ணி பார்த்தேன்.. இப்போது தான் தெரியும் இது உன்னுடிய விமர்சனம் என்று

    ReplyDelete