Saturday, November 05, 2011

மர்ம முடிச்சு - பிரெஞ்சு படம்- Les Diaboliques (1955)

இந்த பதிவு முலமாக நான் உங்களுக்கு அறிமுக படுத்த போகும் படம் Diabolique. படம் வெளிவந்த ஆண்டு 1955. இது ஒரு பிளாக் அன்ட் ஒயிட் திரைப்படம் அதுவும் இல்லாமல் இது பிரெஞ்சு மொழி படம். என்னடா நமக்கு பிரெஞ்சு எல்லாம் தெரியாதே, படம் புரியாமான்னு சந்தேகமே வேண்டாம் சப்-டைட்டில் சேர்த்து பார்த்தா படம் கண்டிப்பா புரியும். இந்த படம் சஸ்பென்ஸ்/த்ரில்லர் வகையை சேர்ந்தது.

இந்த படம் ஒரு பிரெஞ்சு நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்டு இருக்கும்.நமக்கு நாவலை (அதுவும் ஃப்ரென்ச்) விமர்சனம் செய்யும் அளவுக்கு தகுதி இல்லாதனால், நேரடியாக படத்தை பத்தி பார்போம். படம் கொஞ்சம் மெதுவாக போகும். ஆனா ரொம்ப நல்ல சஸ்பென்ஸ் கதை, அதை இயக்குனர் அப்படியே படமா எடுத்து இருப்பாரு.
கதை ரொம்ப சாதாரணமானது. கதையை விளக்குவது ரொம்ப சுலபம். பிரான்சில் ஒரு சின்ன கிராமத்தில், ஒரு ஸ்கூல் (School) இருக்கு. அந்த ஸ்கூல்ல ஹாஸ்டல் வேற இருக்கு. நிறைய பசங்க அங்க படிக்கிறாங்க. ஸ்கூல்ல மொத்தம் 4 ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் நம்ப கதைக்கு ரொம்ப தேவையான ஆளு. அவருக்கு 2 பொண்டாட்டி, தப்பு தப்பு ஒரு மனைவி, ஒரு துணைவி.

நம்ப ஊருலத்தான் ரெண்டு பொண்டாட்டி இருந்த அதுல ஒன்னு பேரு மனைவி, இன்னொன்னு பேரு துணைவி ஆச்சே, அதுனால தான் அப்படி சொன்னனே !!!!! சரி இப்போ கதைக்கு வருவோம். தலைமை ஆசிரியரின் மனைவி மற்றும் துணைவி ரெண்டு பேருமே அதே ஸ்கூல்ல ஆசிரியர்களாக வேலை பார்ப்பாங்க. இவங்களை தவிர இன்னும் ரெண்டு ஆசிரியர்கள் அதே ஸ்கூல்ல வேலை பார்கிறாங்க.
தலைமை ஆசிரியர் பேரு மைக்கேல். மனைவி பேரு கிறிஸ்டியானா . துணைவி பேரு நிக்கோல். மைக்கேல் ரொம்ப மோசமானவர். ஹாஸ்டல்ல பசங்களுக்கு சாப்பாடு சரியா போடாமல் அவங்களை ரொம்ப கொடுமை படுத்துறாரு.

அவரு மனைவி மற்றும் துணைவி ரெண்டு போரையும் மதிக்கவே மாட்டார். மனைவி (கிறிஸ்டியானா) .ரொம்ப சின்ன வயசு பொண்ணு. கடவுள் நம்பிக்கை உள்ளவங்க. ரொம்ப பயந்த சுபாவம் உடையவங்க. மைக்கேல் அவரைத்தான் ரொம்ப ரொம்ப கொடுமை படுத்துவார். துணைவி (நிக்கோல்) கொஞ்சம் தைரியமானவ... இருந்தாலும், அப்பப்போ மைக்கேல் அவளையும் கொடுமைப்படுத்தறான். நிக்கோல் & கிறிஸ்டியானா ரெண்டு பேரும் தினமும் மைக்கேல் கிட்ட திட்டு வாங்கறதுனால, அவன் மேல கடுப்புல இருக்காங்க... மைக்கேலிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று ரொம்ப தீவரமா யோசிக்கறாங்க. கடைசியில் மைக்கேலை கொலை செய்வது என்று முடிவு எடுக்குறாங்க. மனைவி (கிறிஸ்டியானா) ரொம்ப பயபடுறாங்க. துணைவி (நிக்கோல்) தான் ரொம்ப தைரியசாலி ஆச்சே, அதனால் அவங்க தான் எல்லா ப்ளானும் பண்ணுறாங்க. மனைவி ரொம்ப பயந்தாலும், அதுக்கு உடன்படறா.
ஸ்கூல்க்கு சம்மர் லீவு வருது. மைக்கேலை கொல்றதுக்கு ப்ளான் ரெடி. மனைவியும் துணைவியும் சேர்ந்து வெளியூர் போன மாதிரி எல்லார்கிட்டேயும் காட்டிகிட்டு, மைக்கேலை பாத்ரூம் தொட்டியில அழுத்தி கொலை பண்ணிட்டு, பள்ளிக்கூட நீச்சல் குளத்துல டெட்பாடியை போட்டுடறாங்க.

எல்லோரும் மைக்கேல் காணாம் போய்ட்டுடாருனு நெனச்சுக்கவாங்க. இப்போ ஸ்கூல் நம்ப மனைவி கண்ட்ரோல்க்கு வந்துருச்சு. ரெண்டு மூன்று நாளுக்கு அப்புறம் மனைவியும் துணைவியும் சேர்ந்து அந்த நீச்சல் குளத்தை தூர் வாற முடிவு செஞ்சு, ஒரு ஆளை வைச்சு குளத்துல உள்ள தண்ணியை எல்லாம் வெளிய எடுத்து போடுவாங்க. தண்ணி எல்லாம் காலி ஆனதுக்கு அப்புறம் பார்த்தா அங்க டெட்பாடியைக் காணோம். அங்க இருந்து டென்ஷன் ஆரம்பம் ஆகும். அடுத்த நாளு பார்த்தா மைக்கேல் சாகும் போது போட்டுருந்த கோட்-சூட் அவங்களுக்கு பார்சல்ல வருது. டெம்போ ஏறும்.....
ஸ்கூல்ல படிக்கற பையன் ஒருத்தன், ஹெட்மாஸ்டர் மைக்கேலை இப்பதான் பார்த்தேன்னு அடிச்சு சத்தியம் பண்ணறான். நமக்கோ டென்ஷன் ஏறும். ரெண்டுநாள் கழிச்சு, நிர்வாணமான நிலையில டெட்பாடி ஒரு ஆத்தங்கரையில ஒதுங்கி இருக்குன்னு நியூஸ் பேப்பர்ல ஒரு நியூஸ் வருது. மனைவி பயந்து போய் போலீஸ் ஸ்டேஷன் போய் பார்த்தா அது மைகேல் இல்லை. அங்க இருக்குற ஒரு வயசான போலீஸ்காரர் தானாகவே வந்து நான் மைக்கேலை கண்டுபிடிச்சு தரேன்னு அவரும் ஆட்டத்துல சேர்ந்துப்பார். மோர் டென்ஷன்........

அடுத்த நாள் ஸ்கூல்ல குரூப் போட்டோ எடுப்பாங்க, அந்த போட்டோவுல பார்த்த மைக்கேல் முஞ்சி மாதிரியே ஒரு முஞ்சி தெரியும். மறுபடியும் டெம்போ ஏறும். மைக்கேல் ஆவியா வந்துட்டார்னு துணைவி (நிக்கோல்) ரொம்ப பயந்துபோய் ஊரை விட்டே ஓடி போயிருவாங்க. அன்னைக்கி நைட் தான் திக் திக் கிளைமாக்ஸ்.........நான் அந்த கிளைமாக்ஸ் பார்த்து ரொம்ப பயந்துட்டேன் . இந்த படத்தோட கிளைமாக்ஸ் எங்க தேடினாலும் கிடைக்காது. அது தெரியணும்னா படத்த டவுன்லோட் செஞ்சு பாருங்க.


பலம்:

  • கதையை ரொம்ப நேர்த்தியாக சொல்லி இருப்பாங்க. கிளைமாக்ஸ் நம்மால யூகிக்க முடியாத படி படமாக்க பட்டு இருக்கும்.
  • ஹாலிவுட் த்ரில்லர் படங்கள்ல இருக்கற பயமுறுத்தற இசை, எக்குத்தப்பான கேமிரா கோணம் இதுல இல்லை. ஆனாலும் நம்ப பயப்படுவோம்.
  • எல்லோரும் ரொம்ப நல்லா நடிச்சு இருப்பாங்க.

பலவீனம்:

  • படம் கொஞ்சம் மெதுவாக போகும். அதுவும் மைக்கேலை கொலை செய்ற வரைக்கும் தான்.
நீங்க இந்த படத்தை பார்க்காம விட்டுட்டா, சினிமா உலகின் முக்கியமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை மிஸ் பண்ணுன மாதிரி ஆகிரும்... மிஸ் பண்ணாதீங்க.

My Rating: 8.5/10 ......


5 comments:

  1. நல்ல விமர்சனம்.மேலும், சிறந்த படங்களை பற்றி எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி Kumaran

    ReplyDelete
  3. விமர்சனம் அருமை.

    ReplyDelete
  4. Dear Sir,
    Daily I watch your blogs its wonderful review compare to others. Many day I search for this film, but am unable to see this movie. Kindly tell where is this cd available in chennai or give download link. Now onwards, any film you will review kindly mention the download link ,it s very useful for us.

    ReplyDelete
  5. Bonus za pierwszy depozyt, a także wiele innych świetnych ofert i promocji! Bet-at-home game

    ReplyDelete