Sunday, December 18, 2011

Mission Impossible-4 - Ghost Protocol (2011) - ஐமாக்ஸ் அற்புதம்

இந்த பதிவுல நம்ப பார்க்க போற படம் “MISSION IMPOSIBLE-4 GHOST PROTOCOL”. படம் போன வாரம் தாங்க ரிலீஸ் ஆச்சு. நான் ஏன் இந்த படத்துக்கு போனேன், படம் என்னக்கு என்ன மாதிரியான அனுபவத்தை குடுத்திச்சு போன்ற விசயங்களை இந்த பதிவுல பார்போம். படத்துல வெறும் ஆக்க்ஷன், ஆக்க்ஷன் மட்டும் தான்.உங்களுக்கு ஆக்க்ஷன் படங்களை பிடிக்குமா.. நீங்க கண்டிப்பா மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படம் MI-4. MISSION IMPOSIBLE சீரிஸ்ல இந்த படம் நான்காவது பாகமாக வெளிவந்து உள்ளது. இதுக்கு முன்னாடி வந்த முன்று படத்துல நான் முன்றாவது பாகத்தை மட்டும் தான் பார்த்து உள்ளேன் , முதல் ரெண்டு பாகத்தை நான் பார்க்க வில்லை. எனக்கு MI-3 படம் ரொம்ப பிடிச்சிருந்தது. ச்சே MI-1 & MI-2 படத்தை மிஸ் பண்ணிடோம்ன்னு தோணிச்சு. நான் ஏன் MI-1 & MI-2 படத்தை பார்கையிலனா, சின்ன வயசுல என்னக்கு “TOM CRUISEயை” பிடிக்கவே பிடிக்காது. என்னோட சின்ன வயசுன்னா அது “1993 முதல் 2003” வரைக்கும் தான். அதற்கான் காரணத்தை உங்களுக்கு சொல்லறேன், கேளுங்க...
அந்த கால கட்டத்தில் (1993-2003) தான் எனக்கு இங்கிலீஷ் படங்களோட அறிமுகம் கிடைத்தது.அப்போ ஹாலிவுட்காரன் அன்னகோண்டா பாம்பு, டைனோசர், கொடூர குரங்கு, ராட்சஸ பல்லி, வெறி கொண்ட வௌவால், வேற்று கிரகத்து பூச்சி, எகிப்து மம்மி, கியூபாவில் போய் அமெரிக்க அதிகாரிகளை மீட்கும் ரேம்போ, போன்ற வஸ்துக்களை வச்சு தான் படம் எடுத்துகிட்டு இருந்தான். உண்மைய சொல்லனும்னா இந்த மாதிரி படங்கள் தான் தமிழ் நாட்டுல ரிலீஸ் ஆகும். இது போக நம்ப ஜெட்லி மற்றும் ஜாக்கி சான் நடிச்ச...!!!! சைனிஸ் படத்தை இங்கிலீஷ்ல டப் பண்ணி விடுவாங்க...என்னக்கு இந்த சைனிஸ் ஆக்க்ஷன் படங்கள், மற்றும் மேலே சொன்ன பாம்பு, பல்லி வஸ்துக்கள் இருக்குற படங்கள் தான் எனக்கு பிடிக்கும். 
அந்த கால கட்டத்தில ஜெட்லிக்கும் ஜாக்கி சான்க்கும் சண்டை வச்ச யாரு ஜெயிப்பாங்கன்னு நானும் என்னோட நண்பனும் சண்டை போட்டுக்குவோம்..இப்படி பட்ட சினிமா அறிவு இருக்குற எனக்கு “TOM CRUISE யை” பிடிக்காம போனதுல்ல பெரிய ஆச்சிரியமே கிடையாது. என்ன பொறுத்த வரைக்கும் “TOM CRUISEக்கு” பறந்து பறந்து சண்டை எல்லாம் போட தெரியாது, அதனால அவரு படத்துக்கு போய் காசை வேஸ்ட் பண்ண கூடாது அப்படிங்கற முடிவுல நான் ரொம்ப உறுதியா இருந்தேன். அதனாலயே ஏனோ MI-1 & MI-2 படத்தை நான் பார்க்கவில்லை. 

இப்போ என்னோட ஹாலிவுட் சினிமா அறிவை பத்தி உங்களுக்கு கொஞ்சம் ஐடியா கிடைசிருக்கும். சரி அத விடுங்க, இப்போ எனக்கு ஹாலிவுட் சினிமாவை பத்தி கொஞ்சம் அறிவு இருக்கு…ரொம்ப கொஞ்சம் தான். அதனால MI-4 பற்றிய அறிவிப்பு வந்தவுடனே இந்த படத்தை பாத்திட முடிவு செஞ்சுட்டுடேன். அதுவும் IMAXல தான் பார்கிறதுன்னு. சரி இப்போ படத்தோட கதையும், என்னோட அனுபவத்தையும் இப்போ பார்போம். 


ரஷ்யாவின் முக்கிய நகரமான கிரெம்ளின் (Kermlin) சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடிக்கிறது. இந்த சதியை செய்தது யு.ஸ் அரசாங்கத்தின் அமைப்பான IMF என்று ரஷ்யா நம்புகிறது. இரு நாட்டுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதன் ஹண்ட்க்கு (டாம் குரூஸ்) ரஷ்யா குண்டுவெடிப்பிற்கு காரணமான சதிகாரனை கண்டுபிடிக்கும் பொறுப்பு தர படுகிறது சதிகாரனை கண்டுபிடித்து அவன் ஏற்படுத்த போகும் ஆபத்தையும் தடுக்க வேண்டும். இது தான் மிஷ்ன் கோஸ்ட் ப்ரோடோகால் (Ghost Protocol). இந்த மிஷ்ன்க்கு அமெரிக்க அரசாங்கத்தின் எந்த உதவியும் கிடைக்காது, ஏதன் ஹண்ட் மற்றும் முன்று பேர் தான் மொத்த டீம். நான்கு பேர் சேர்ந்து எப்படி வில்லனின் சதியை முறியடித்து அமெரிக்காவை எப்படி காப்பாற்றினார்கள் !!!!! என்பது தான் மிஷ்ன் இம்பாசிபல் (Mission Impossible).
படத்தின் ஆரம்ப காட்சியே அட்டகாசமாய் இருக்கும். அமெரிக்க உளவாளி மாடியில் இருந்து குதிப்பது போன்று ஒரு காட்சி.

அந்த கிரெம்ளின் குண்டுவெடிப்பு, நீங்கள் எதிர்பாராத நேரத்தில் நடக்கும். கண்டிப்பாய் உங்களை உலுக்கி விடும். மிகவும் அற்புதமாய் காட்சிபடுத்த பட்டு இருக்கும்.

துபாயில் உலகிலே மிக உயரமான கட்டிடத்தில் டாம் குரூஸ் ஏறும் காட்சி IMAX கேமராவை கொண்டு படமாக்க பட்டு இருக்கும். IMAXயில் பார்த்தால் அந்த காட்சி வாவ்......சூப்பர் அனுபவம் !!!
அடுத்து அந்த பாலைவன புயலில் நடக்கும் சேஸிங் காட்சிகள், மங்கலான வெளிச்சத்தில் பர பரவென்று நடக்கும் கார் சேஸிங் .... அருமை. !!!!

கில்லர் ஆக (Assassin) வரும் அந்த வில்லி...கண்களாலேயே வில்லத்தனம் செய்யும் காட்சிகள் யப்பா..நல்ல தேர்வு.

படத்தின் டைரக்டர் Brad Bird , இவர் பிக்ஸார் நிறுவனத்திற்காக Ratatouille and The Incredibles போன்ற அனிமேஷன் படங்களை இயக்கி உள்ளார். அனிமேஷன் படங்களை இயக்கிய தன் அனுபவத்தை கொண்டு சிறந்த ஆக்சன் படத்தை கொடுத்துள்ளார்.

படத்தில் இந்திய நடிகர் அணில் கபூர் வேறு உள்ளார். பெரிய வேலை இல்லை. அது போக வில்லன் ஏவுகணை செலுத்துவதற்கு சன் டிவியில் நெட்வொர்க்கை உபயோகிப்பது போன்று காட்சி வைத்து இருப்பார்கள்.

படத்தை IMAX ஸ்கிரீனில் பார்த்தால், அந்த அனுபவம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாய் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் IMAXயில் பாருங்கள்.

My Rating: 7.9/10......


15 comments:

 1. உங்க விமர்சனம் அருமை...படத்த விட உங்களோட விமர்சனம் அருமை...

  ReplyDelete
 2. கலக்கிடிங்க சகோத..
  தங்களது சினிமா அனுபவத்தை சுவைபட எழுதி ரசிக்கவைக்கிறீர்கள்.
  நன்றி மற்றும் பாராட்டுகள்.

  ReplyDelete
 3. @ கோவை நேரம்..
  தவறாமல் இப்படத்தை பாருங்கள்....கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்...

  ReplyDelete
 4. @ Kumaran
  நன்றி Kumaran....
  அங்கே எப்படி மலேசியாவில் IMAX தியேட்டர் உள்ளதா.... வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக IMAXயில் பாருங்கள்...

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 6. @@ ராஜ் சொன்னது…
  @ Kumaran
  நன்றி Kumaran....
  அங்கே எப்படி மலேசியாவில் IMAX தியேட்டர் உள்ளதா.... வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக IMAXயில் பாருங்கள்...

  IMAX தியேட்டர்தானே உண்டு சகோத..
  ஆனால் KL தலைநகரில்தான் இருக்கிறது..நான் வசிப்பது பேராவில்.இங்கிருந்து அங்க போகுறதுக்கே ஏறக்குறைய 3 மணி நேரம் பிடிக்கும்..
  பேசாம, டைம் இருந்தா இங்க எங்கயாவது பார்க்க வேண்டியதுதான்..நன்றி.

  ReplyDelete
 7. @arunambur0
  நன்றி அருண்..

  ReplyDelete
 8. எங்க ஊருல படம் இன்னும் ரிலீஸ் இல்லங்க, நாளை தான் ரிலீஸ். ரொம்ப எதிர் பார்த்துன்னு இருக்கற படம் எப்படியும் பாத்துவிடுவேன்.
  அன்னைக்கு கொஞ்சம் பிஸி அதான் கமெண்ட் கூட போடா முடியாம..., வரவை மட்டும் போடு விட்டுச் சென்றேன்.

  ReplyDelete
 9. விமர்சனம் அருமை ராஜ். இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது உங்கள் பதிவு. பகிர்தலுக்கு நன்றி.

  ReplyDelete
 10. நன்றி சமுத்ரா & N.H.பிரசாத்

  ReplyDelete
 11. நமக்கெல்லாம் ஊர்ல தியேட்டர் இல்ல. DVDRIP or BLURAY RIP வந்தா நம்ம மானிட்டர் தான் ஐமேக்ஸ் அனுபவம் தரணும்.

  நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 12. இந்தப் படத்தை நான் தவற விட்டுவிட்டேன், திருட்டு டிவிடியிலவது பார்த்தாக வேண்டும். காரணம் உங்கள் விமர்சனம் தான்

  ReplyDelete
 13. படம் செம விறு விறு

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete